கொட்டகைகள் அடாத்தாக பிடுங்கி எறியப்பட்டதாக தெரிவித்து ஏ9 வீதியை மறித்து போராட்டம்!!

பளை கரந்தாய் பகுதியில்..

கிளிநொச்சி – பளை, கரந்தாய் பகுதியில் வசிக்கும் மக்களின் கொட்டகைகள் அடாத்தாக பிடுங்கி எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏ9 வீதியை மறித்து போ.ராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பளை கரந்தாய் கிராமத்தில் 1976ஆம் ஆண்டு மக்கள் குடியேறி இருந்தனர்.
அதன்பின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யு.த்தம் காரணமா பல்வேறு இடங்களுக்கு சென்ற மக்கள் போ.ர் நிறைவடைந்ததன் பின் 2010ஆம் ஆண்டு மீண்டும் கரந்தாய் கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

அவ்வாறு குடியேறி இருந்த மக்களை தென்னை பயிர்ச்செய்கை சபையினர் மக்கள் குடியேறி இருக்கும் காணி தமக்குரிய காணி என தெரிவித்து 2015 மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனை அடுத்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பயன் கிடைக்காத நிலையில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதன் பயனாக மக்களுடைய காணிகளை இருவாரங்களுக்குள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு கடந்த வருடம் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு பல தடவைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் மக்கள் குறித்த காணிகளுக்குள் கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக கொட்டில்களை அமைத்து வசித்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று அங்கு வந்த தென்னை பயிர்ச்செய்கை சபையினர் மற்றும் பளை பொலிஸார் மக்கள் கொட்டில் போட்டு குடியிருந்த வீடுகளை அடாத்தாக பிடுங்கி மக்களை தா.க்.கி.யு.ள்.ள.தா.க தெரியவருகிறது.

இதனையடுத்து சே.தமாக்கப்பட்ட கொட்டகைகள் மற்றும் தூக்கி வீசப்பட்ட வீட்டு பாத்திரங்கள் என்பவற்றை கிளிநொச்சி – கரந்தாய் ஏ9 வீதியில் போட்டு வீதியை மறித்து மக்கள் போ.ராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இப் போ.ராட்டம் காரணமாக ஏ9 வீதி சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் முடக்கப்பட்டு இருந்த நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பளை பொலிஸார் போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கலந்துரையாடலின்போது தென்னை பயிர்ச்செய்கை சபையினரால் சேதமாக்கப்பட்ட கொட்டகைகளை மீண்டும் போட்டு தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பளை பொலிஸார் வாக்குறுதி வழங்கியதை அடுத்து மக்கள் போ.ராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

பேஸ்புக் காதலால் நேர்ந்த விபரீதம்!!

பேஸ்புக் காதலால்..

இளம் யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக ஏமாற்றிய நபர் ஒருவர் அவரை அழைத்துச் செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையினால் 20 வயதுடைய யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி அழைத்து செல்ல முற்பட்டுள்ளார்.

அரநாயக்க பிரதேசத்தில் காதலர் தினத்தன்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த 20 வயதுடைய யுவதி கந்தளாய், அங்போபுர சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவரது காதலனாக போலி தகவல் வெளியிட்ட 52 வயதுடைய நபர் தனக்கு 20 வயதென காட்டிக்கொள்வதற்காக போலி புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளார்.

குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இரண்டும் மண் சரிவு ஒன்றில் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி இரவு அங்போபுர பேருந்து நிலையத்திற்கு வருவமாறு 52 வயதுடைய காதலன் அழைத்துள்ளார். குறித்த நபர் ஹெல்மட் மற்றும் முகக் கவசம் அணிந்த நிலையில் யுவதியை பார்ப்பதற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு தெரியாமல் காதலனுடன் செல்ல வந்த யுவதி, அங்கு உண்மை உருவத்தை பார்த்த போது தான் ஏமாற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.

உடனடியாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்த யுவதி தான் பேஸ்புகில் பார்த்து காதலித்த நபர் இவர் இல்லை எனவும், இவர் தனது தந்தையை விடவும் அதிக வயதுடையவர் எனவும், தன்னை ஏமாற்றி அழைத்து செல்ல முயற்சிப்பதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய காதலர் தினத்தன்று குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளதுடன் பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் அழைக்கப்பட்டு, இளம் பெண் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் வாகனம்!!

மோட்டார் வாகனம்..

கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்று இன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைக்கு சென்ற முதல் நாள் ஆறு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் உறவுகள்!!

சிவனேசன் வருண் பிரதீஷ்..

பதுளை நகரில் இன்றைய தினம் முதல் நாள் பாடசாலைக்கு சென்ற சிறுவன் வீதி விபத்தில் பரிதாபமாக உ.யிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சிவனேசன் வருண் பிரதீஷ் என்ற ஆறு வயதுடைய சிறுவனே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார். இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் தமது பாட்டியுடன் பதுளையில் உள்ள பாடசாலைக்கு தரம் 1 அனுமதி பெற்று சென்றுள்ளனர்.

இதன்போது லொறியொன்று மோதியதில் வருண் பிரதீஷ் என்ற சிறுவன் உ.யிரிழந்துள்ளார். பாட்டி ப.டுகாயமடைந்த நிலையில், மற்றைய சிறுவன் அதிஷ்டவசமாக த.ப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கை.து செய்துள்ளனர். உ.யிரிழந்த சிறுவனின் சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், லொறியின் சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பதுளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!!

பொலிஸ் அத்தியட்சகர்..

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று(15.02.2021) காலை விஜயம் மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா பொலிஸாரின் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மரம் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பரிசோதனை நடவடிக்கை பொலிஸாரின் அணிவகுப்புடன் ஆரம்பமாகியதுடன் பொலிஸாரின் உடையில் காணப்படும் குறைபாடுகள், வாகனங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள்,

பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் குறைபாடுகள், பொலிஸாரின் ஆவணங்கள் என்பவற்றினை கண்காணித்ததுடன் அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

அதன் பின்னர் சுற்றுப்புற சூழலினை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி-3) ஜெகத் வீரக்கோன் மற்றும் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப் குமார் உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் இரவு நேரத்தில் குளிக்கச் சென்று காணாமல்போன நபர் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாகேந்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம் நெல் அறுவடைக்காக வந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் (06ம் யூனிட் சிவிற் சென்ரர் வட்டக்கச்சி) என தெரியவருகிறது. நேற்றிரவு குளிக்கச் சென்ற குறித்த நபரை காணாததால் அவரை தேடிய போது,

அவர் கொண்டு சென்ற சாரம் மற்றும் சவர்க்காரம் என்பன கிணற்றின் அருகில் கிடப்பது அவதானிக்கப்பட்டு இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளின் போது கடற்படையின் உதவியுடன் குறித்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பரின் குடும்பத்துக்கு பணத்தை கொடுக்க சென்ற தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

உமா வாசுகி..

தமிழகத்தில் உ.யிரிழந்த நண்பரின் குடும்பத்தாருக்கு லட்சக்கணக்கிலான பணத்தை கொடுக்க சென்ற பெண் சாலை விபத்தில் உ.யிரிழந்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கத்தின் மனைவி உமா வாசுகி (44). இவர் மதுரை ஆயுதப்படை பொலிசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

இவரும், இவருடன் பணிபுரியும் ஏட்டு சித்திரைவேல் (46), திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பொலிஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சிங்ககோட்டையை சேர்ந்த வீரராகவன் (46),

கோவையில் சி.பி.சி.ஐ.டி. பொலிசாக பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஜான்சன் அமிர்தராஜூவின் மனைவி நிர்மலா ஜெரால்டு (44) மற்றும் பொலிஸ்காரர்கள் ராமர் (53), பூபதி (45), தனசேகரன் (42), அழகுவேல்வள்ளி (45), நாட்டராஜன் (46) ஆகிய 9 பேரும் கடந்த 1997-ம் ஆண்டு பொலிஸ் பணிக்கு தேர்வானவர்கள்.

மேலும் இவர்கள் நண்பர்கள் ஆவார்கள். இவர்களுடன் பொலிஸ் பணிக்கு தேர்வான கள்ளக்குறிச்சியை சேர்ந்தவரும், சின்னசேலம் பொலிஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவருமான ராஜ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இ.றந்தார்.

இதனால் 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பொலிசாரால் சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப்பில் “உதவும் கரங்கள்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட குழு மூலம் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட, போலீசாரிடம் மொத்தம் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

அந்த தொகையை ராஜ்குமாரின் குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக உமா வாசுகி, சித்திரைவேல், வீரராகவன், நிர்மலா ஜெரால்டு ஆகிய 4 பேர் ஒரு காரிலும், ராமர், பூபதி, தனசேகரன், அழகுவேல்வள்ளி, நாட்டராஜன் ஆகிய 5 பேர் மற்றொரு காரிலும் மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

4 பேர் வந்த காரை சித்திரைவேல் ஓட்டினார். அந்த கார் நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே வந்தது.

அப்போது காரின் முன்னால் நெல்லையில் இருந்து ஆவடி நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால், பின்னால் வந்த கார் பஸ் மீது ப.யங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் இடிபாடுகளுக்கிடையே சி.க்.கி ப.டுகாயமடைந்த உமா வாசுகி, சித்திரைவேல், வீரராகவன், நிர்மலா ஜெரால்டு ஆகியோர் உ.யிருக்கு போ.ராடினர்.

இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காரில் இடிபாடுகளுக்கிடையே சி.க்கியவர்களை மீ.ட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உமா வாசுகி பரிதாபமாக உ.யிரிழந்தார். சித்திரைவேல், வீரராகவன், நிர்மலா ஜெரால்டு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் டிரைவரான நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனை (41) பொலிசார் கைது செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் டெக்போல் (TeqBall) விளையாட்டு அறிமுகம்!!

டெக்போல்..

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டான டெக்போல் விளையாட்டு வவுனியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (15.02.2021) காலை வவுனியாவில் டெக்போல் விளையாட்டுக்கான சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், டெக்போல் சம்மேளனத்தின் வவுனியா இணைப்பாளர் அன்று அன்ஸலி ஆகியோர் முன்னிலையில் இந்த சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது.

சம்மேளனத்தின் தலைவராக வவுனியா நகரசபையின் தலைவர் தேசபந்து கேளதமன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை, செயலாளராக விமலசந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாளராக ராஜ்சங்கர் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை உபதலைவர்களாக பர்சூக், விந்துஜன், நிமலகேசன், சேகர் ஆகியோரும், உப செயலாளராக அமலன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகசபை உறுப்பினர்களாக டன்ஸ்டன், கலைத்தேவன், விநாயகமூர்த்தி, தர்மிகா, சற்சொரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலதிக அராசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் போசகராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், விளையாட்டுக் கழகங்களைச் சார்ந்தவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மேலதிக அராசாங்க அதிபர் திரேஸ்குமார் “இந்த புதிய விளையாட்டுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். இந்த நிர்வாகம் மாத்திரமன்றி மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் கல்வி திணைக்களம், பாடசாலை சார்ந்த விளையாட்டு துறை சார்ந்தவர்கள் பயிற்சிகளை வழங்கி நல்ல வீரர்களை உருவாக்க வேண்டும். அதற்காக அனைவரும் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தலைவராக தெரிவு செய்யப்பட்ட கெளதமன் உரையாற்றும் போது நகரசபையின் மேடையினை இப்போது இந்த விளையாட்டுக்கு வழங்குவதாகவும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் ஒரு இடத்தை டெக்போல் விளையாட்டுக்கு ஒதுக்கித் தருவதாகவும், அத்துடன் நகரசபையில் இந்த விளையாட்டுக்கு தேவையான வளங்களை பாவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பின்னர், இலங்கை டெக்போல் சம்மேளத்தினால், வவுனியா சம்மேளனத்திற்கு டெக்போல் விளையாட்டுக்கான மேசை கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கால் மேசைப்பந்து திட்ட முகாமையாளர் கோபிநாத், உபதலைவர் கேதீஸ்வரன்,

நிறைவேற்று உறுப்பினர் ரஞ்சித், ஆகியோர் கலந்து கொண்ட அதேவேளை வவுனியா சம்மேளனத்தை சேர்ந்தவர்களுடன், வவுனியா டெக்போல் இணைப்பாளர் அன்று அனஸ்லியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா சிறைச்சாலைகள் அத்தியட்சகர் பிரபாகரன் கலந்து கொண்டார்.

டெக்போல் விளையாட்டானது உலகக் கிண்ண போட்டிகளாக விளையாடப்பட்டு வருகிறது. ஆசிய கால் மேசைப்பந்து விளையாட்டு போட்டிகளில் இலங்கை அணியும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய விளையாட்டு போட்டிகளுக்குள்ளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று பாதுகாப்புப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

ஊடகவியலாளர்களுக்கு..

வன்னி பிராந்தியத்தில் கொரோனா அச்சத்தின் மத்தியிலும் சிறப்பாக கடமைகளை முன்னெடுத்து வரும் ஊடகவியலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தன்னளர்வற்ற சமூக சேவை அமைப்பினால் கொரோனா தொற்று பாதுகாப்புப் பொருட்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலமையில் இன்று (15.02.2021) மதியம் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் வன்னி பிராந்தியத்தினை பிரதிப்படுத்தும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊடக அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர்களுக்கான கொரோனா தொற்று பாதுகாப்புப் பொருட்களை அரசாங்க அதிபர் மற்றும் தன்னலமற்ற சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து வழங்கி வைத்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 4771 வறிய குடும்பங்கள் : பிரதேச செயலாளர்!!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் பதிவில் உள்ள 35875 குடும்பங்களில் 4771 வறிய குடும்பங்களாக காணப்படுவதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 கிராம சேவையாளர் பிரிவில் 35875 குடும்பங்கள் பதிவில் உள்ளதுடன் இவர்களில் பெண் தலமைத்துவ குடும்பம், விசேட தேவையுடையோர், விதவைகள் என 4771 குடும்பத்தினர் வறிய குடும்பத்தினர் பட்டியலில் உள்ளதாகவும்,

அதி கூடிய குடும்பங்கள் வசிக்கும் கிராம சேவையாளர் பிரிவுகளாக தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவு – 2478 , மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 2347, ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவு – 2125,

பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 1693 , ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 1460 , பட்டானிச்சிபுளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 1458 , காத்தார் சின்னகுளம் கிராம சேவையாளர் பிரிவு – 1422 , நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 1427 என்ற அடிப்படையில் பதிவில் காணப்படுவதுடன்,

அதி கூடிய பெண் தலைமைத்துவ குடும்பம், விசேட தேவையுடையோர், விதவைகள் பட்டியலில் அதிகூடியளவில் காணப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளாக தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவு – 430, மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 386,

நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 325, பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 301, கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 205, ஆசிக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 199 என்ற அடிப்படையில் செல்கின்றது எனவும்,

குறித்த கணக்கெடுப்புக்கள் 2019.12.31ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் இதுவரையிலான புதிய கணக்கெடுப்புக்கள் பதிவில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்!!

அறிவுறுத்தல்..

இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஆய்வின் பின்னர் எந்தளவு இந்த வைரஸ் பரவியுள்ளதென ஒரு முடிவிற்கு வர முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய கோவிட் வைரஸ் மாறுபாடு மிகவும் வேகமாக பரவ கூடும் என்பதனால் அதில் இருந்து தப்புவதற்கு இரண்டு முகக் கவசங்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பாகும்.

தற்போதும் மக்கள் இரண்டு முகக் கவசம் அணிவது நல்லது. அவ்வாறான முறையில் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து அதிகம் பா.துகாப்பு கிடைக்கும்.

பிரித்தானியாவில் தோற்றம் பெற்றுள்ள உருமாற்றம் பெற்ற கோவிட் வைரஸ், சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து முதல் முறையாக பரவிய கோவிட் வைரஸை விடவும் நூற்றுக்கு 56 – 75 வீதத்தில் வேகமாக மக்களுக்கு மத்தியில் பரவ கூடியதாகும் என அவர் மேலும் அதெரிவித்துள்ளார்.

இலங்கையை முழுமையாக முடக்குவது தொடர்பில் விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்!!

புதிய கோவிட் வைரஸ்..

இலங்கையில் ஆபத்தான புதிய கோவிட் வைரஸ் பரவுவது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் விசேட நிபுணர்களின் கருத்திற்கமையவே நாட்டை மூடுவது தொடர்பில் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிலைமைக்கு எப்படி முகம் கொடுப்பது என்பது தொடர்பில் தினமும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரித்தானிய மரபணு மாறிய வைரஸிற்கும் இந்த தடுப்பூசியே உதவும் என்பதே சுகாதார பிரிவின் கருத்தாகும்.

தொடர்ந்து இந்த வைரஸ் பிரச்சினையாக இருந்தால் நாங்கள் வேறு நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். தற்போது நாட்டை சாதாரண முறையில் நடத்தி செல்லும் நிலையில் நோயாளிகளை தனியாக வைக்க மாத்திரமே முடியும்.

நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்காக நாட்டை மூடி வைக்க முடியாது. விசேட நிபுணர்களின் தீர்மானத்திற்கமையவே நாங்கள் தீர்மானங்கள் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் பாரதீய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படும் : அமைச்சர் அமித் ஷா!!

பாரதீய ஜனதா கட்சி..

இலங்கையில் பாரதீய ஜனதா கட்சியின் கிளையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற பொதுஜன மாநாடு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் அயல் நாடான இலங்கையில் பாரதீய ஜனதா கட்சியை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் நேபாளத்திலும் கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் இலங்கையில் கட்சியை ஆரம்பித்த பின்னர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியை சர்வதேச கட்சியாக மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

-தமிழ்வின்-

வவுனியாவில் ஒரு வருடத்தில் 1050 வர்த்தக நிலையங்கள் பரிசோதனை, 685 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!!

வவுனியா மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் கடந்த ஒரு வருடத்தில் 1050 வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 685 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது விலைக் குறிப்பினை அகற்றுதல், உருவழிக்கின்ற அல்லது விலை மாற்றம் போன்ற குற்றச்சாட்டில் 210 வர்த்தகர்களுக்கு எதிராகவும், குறிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு எதிராகவும்,

எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் பொறிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்தல் அல்லது களஞ்சியப்படுத்தல் போன்ற குற்றச்சாட்டில் 12 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும்,

பண்டங்கள் உடமையில் இல்லை என மறுத்த குற்றச்சாட்டில் ஒரு வர்த்தக நிலையத்திற்கு எதிராகவும், விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்தல், விற்பனைக்காக வைத்திருத்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்த தவறிய 98 வர்த்தக நிலையத்திற்கு எதிராகவும்,

வியாபார பொருட்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதிகபட்ச சில்லறை விலை அல்லது மொத்தவிலை காட்டப்படும் அறிவித்தல் சகல வியாபாரிகளினாலும் வியாபார தளத்தில் வெளிப்படையாக தோன்றும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் அதை தவறிய 118 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும்,

ஏமாற்றும் நடத்தையில் அல்லது பொய்யான திரித்துக் காட்டல்கள் நடவடிக்கையினை மேற்கொண்ட 228 வர்த்தகர்களுக்கு எதிராகவும் என 685 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சோதனை நடவடிக்கைகளுக்காக கடந்த ஒரு வருடத்தில் வாகன செலவு மாத்திரம் 7,33,025 ரூபா செலவாகியுள்ளதுடன் 13635 கிலோமீற்றர் தூரமும் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியாவில் உரிமை கோரப்படாமல் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்…

வவுனியா நகரின் பல பகுதிகளில் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே ஏழை விவசாயின் தலையில் மண் அள்ளிப்போடாதே போன்ற பல வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பறிக்காதே பறிக்காதே மன்னார் கோயில் மோட்டைக் காணியைப் பறிக்காதே, மன்னார் கூட்டத்தில் விவசாயிகள் காணி வேண்டாம் என்று பொய் சொன்னதாக பொய் சொல்ல வேண்டாம்,

மன்னார் அரசாங்க அதிகாரிகளே, மன்னார் காணியில் 35 வருடகாலமாக விவசாயம் செய்த கோயில் மோட்டை விவசாயிகளுக்கு காணிகளை வழங்குங்கள் போன்ற பல வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

எனினும் குறித்த சுவரொட்டிகள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுவதுடன் சுவரொட்டிகள் வவுனியா நகர், மன்னார் வீதி, நெளுக்குளம், புகையிரத நிலைய வீதி போன்றவற்றில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் போக்குவரத்து 20 நிமிடங்கள் ஸ்தம்பிதம்!!

புகையிரத நிலைய வீதியில்..

வவுனியா புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்து இன்று (15.02.2021) மதியம் 12.35 தொடக்கம் மதியம் 12.55 வரையிலான சுமார் 20 நிமிடங்களாக ஸ்தம்பிதம் அடைந்தமையினால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரு புகையிரதங்களின் நேரசூசி மாற்றமடைந்தமையினால் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் வரையும் புகையிரத நிலைய வீதியில் புகையிரத கடவைகள் மூடப்பட்டிருந்தன.

அதன் பின்னர் இரு புகையிரதங்களும் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னரே சென்றமையினால் வவுனியா புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

குறித்த போக்குவரத்து ஸ்தம்பிதத்தினால் சுமார் 1 1/2 கிலோமீற்றர் வரையில் வாகனங்கள் வரிசையில் காத்திருந்ததுடன் புகையிரத கடவை திறந்தவுடன் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் வாகனங்கள் சென்றமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.