வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் மக்கள் 9 ஆவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்!!

ஸ்ரீநகர் மக்கள்..

வவுனியா, பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9 ஆம் திகதி சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களது போராட்டம் இன்றுடன் 9வது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி, உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. மைதானம் இன்மை,வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல வருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர், அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் எமது விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.

தற்போது போ.ராட்டத்தை முன்னெடுத்து எட்டு நாட்கள் கடக்கின்ற நிலையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் கூட தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறியவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோர் மாத்திரமே வருகை தந்து தமது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட நிலையில் தேர்தல் காலங்களில் வருகை தரும் வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று அவர்கள் கு.ற்றம் சுமத்துகின்றனர்.

யாழ். தென்மராட்சி ஆசிரியைக்கு கொரோனா : வடக்கில் நேற்று 5 பேருக்குத் தொற்று உறுதி!!

கொரோனா..

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் பூநகரியில் பணியாற்றும் யாழ். தென்மராட்சி, தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 376 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் இருவருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பஸ்ஸில் பயணித்தவர்களிடம் கேரதீவில் வைத்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர். மற்றையவர் தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை. இவர் பூநகரியில் பணியாற்றும் நிலையில் பஸ்ஸில் பயணித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 414 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 3 பேருக்குக் கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் கிளிநொச்சி – கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அத்துடன் இவர்கள் கரைச்சியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்களாவர்” – என்றார்.

வவுனியாவில் பட்டப்பகலில் 9 இலட்சம் ரூபாய் கொள்ளை!!

புளியங்குளம் பகுதியில்..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்றையதினம் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொ.ள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

நேற்றையதினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப் பணத்துடன் நபர் ஒருவர் சென்றபொழுது அவரை புளியங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியில் வழிமறித்த குழுவினர் அ.ச்சுறுத்தி அவரிடமிருந்த 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொ.ள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பா.திக்கப்பட்ட நபரால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா இளைஞனுக்கு வெளிநாட்டிலிருந்து பத்தாயிரம் கோடி பணம்? : 6 பேர் கைது!!

பத்தாயிரம் கோடி விவகாரம்..

பத்தாயிரம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக் கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிடப்பட்டுள்ளதாகவும்,

அதனை வெளியில் எடுப்பதற்கு உதவிசெய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் 6 ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிவந்துள்ளார். இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிகணக்கில் ஒரு இலட்சம்கோடி மதிப்பிலான இலங்கைரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது.

எனினும் பணம் எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றயதினம் குறித்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்புசெல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளனர்.

குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்ட த. பொலிசார் அந்த குழுவினரை கைது செய்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் குறித்த இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை வசிப்பிடமாக கொண்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தால் அவரை கடத்ததிச்செல்லும் நோக்குடன் அந்த குழு வந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பிறந்து எட்டு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் : நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில், பிறந்து எட்டு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற சம்பவம் மனதை பதைபதைக்கச் செய்துள்ளது. தஞ்சாவூர் என்னும் இடத்தில், புவனேஸ்வரி (26) என்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

தனது வீட்டுக்குள் திடீரென கூட்டமாக நுழைந்த குரங்குகள், தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் தூக்கிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார் புவனேஸ்வரி.

அவற்றில் ஒரு குழந்தை ஒரு வீட்டின் கூரையில் உ.யிருடன் க.ண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ள நிலையில், பொலிசாருக்கு தகவலளிக்கப்பட,

அவர்கள் அருகிலுள்ள அகழி ஒன்றில் ச.டலமாகக் கிடந்த மற்றொரு குழந்தையைக் கண்டெடுத்துள்ளனர். ஆனால், வன இலாகா அதிகாரிகள் புவனேஸ்வரியின் கு.ற்றச்சாட்டை ச.ந்தேகிக்கிறார்கள்.

காரணம், பொதுவாக குழந்தைகளை குரங்குகள் பிடுங்கிச் சென்றால், குழந்தைகளின் உ.டலில் கீ.றல்கள் காணப்படும், கை கால்கள், மூட்டுக்களிலிருந்து விலகியிருக்கும்.

ஆனால், இந்த குழந்தைகள் உடலில் அப்படி எந்த கா.யங்களும் இல்லை. ஆகவே, நடந்தது என்ன என்பதை அறிவதற்காக பொலிசார் வி.சாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

காதலர் தினத்தன்று தந்தையால் சிறுமிக்கு நடந்த விபரீதம் : பதில் கிடைக்காத கேள்விகளுடன் தவிக்கும் தாய்!!

கனடாவில்..

கனடாவில் இந்திய வம்சாவளியினரான சி.றுமி ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்தன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், தந்தையே அவரை சு.ட்.டு.க் கொ.ன்.றா.ர்.

நேற்று ரியா ராஜ்குமார் என்ற அந்த குட்டி தேவதையின் பிறந்தநாள் என்னும் நிலையில் தன் செல்ல மகளை நினைவுகூரும் அவளது தாயான பிரியா ராம்தின், இன்றும் பதில் கிடைக்காத சில கேள்விகளுடன் போ.ரா.டி வருவதாக க.ண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி, காதலர் தினம் மட்டுமல்ல, ரியாவுக்கும் அவளது தாய் பிரியாவுக்கும் அன்றுதான் பிறந்தநாள். தந்தையுடன் மகளை அனுப்பிவைத்துவிட்டு மகள் வருவாள் என காத்திருக்கும்போது, ரியாவின் தந்தையான ரூபேஷ் ராஜ்குமாரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உன்னால் இனி ரியாவை பார்க்கவேமுடியாது என்கிறார் ராஜ்குமார்.

ப.தறிப்போன பிரியா, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க, நான் அனுபவிக்கும் வ.லியையும் வே.தனையையும் நீ இனி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கப்போகிறாய், நானும் ரியாவும் என் தந்தையிடம் போகிறோம் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை ராஜ்குமார் துண்டிக்க,

தி.கைத்து நின்ற பிரியாவை ராஜ்குமாரின் தந்தை இ.றந்துபோன நினைவு சுரீரென தா.க்.க, பிள்ளையை அவர் கொ.லை செ.ய்.ய.ப்போகிறார் என்பது புரியவே, உடனே காரில் ஏறி பொலிஸ் நிலையம் செல்கிறார் பிரியா.

பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட பொலிசார் ராஜ்குமார் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கே அவர்கள் பார்த்தது ரியாவின் உ.யிரற்ற உ.டலைத்தான். ராஜ்குமாரின் தொலைபேசி அழைப்பு வந்தது மாலை 5.30 மணிக்கு, ஆனால் பொலிசார் ஆம்பர் எ.ச்சரிக்கை விடுக்கும்போது மணி இரவு 11.00.

நள்ளிரவுக்குப் பின்தான் பொலிசார் ராஜ்குமாரைக் க.ண்டுபிடிக்கிறார்கள், ரியாவை சு.ட்.டு.க் கொ.ன்.று.வி.ட்.டு தன்னைத்தான் சு.ட்.டு.க்.கொ.ண்.டு த.ற்.கொ.லை.க்.கு முயன்றதால் அவரது உ.ட.லி.லு.ம் ப.டு.கா.ய.ங்.க.ளு.ட.ன் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் சில நாட்களுக்குள் உ.யிரிழக்கிறார்.

மகளையும் இ.ழந்து, மகளைக் கொ.ன்றவனும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமலே இ.றந்துபோக, து.க்கமும் கோ.பமுமாக கு.ழம்பிப்போய் நிற்கிறார் பிரியா. பிரியாவின் கேள்விகள் சிலவற்றிற்கு இன்றும் பதிலில்லை.

தன் மகள் காணாமல் போன உடன் ஏன் ஆம்பர் எ.ச்சரிக்கை விடுக்கப்படவில்லை, பொலிசார் ஏன் அவரது வீட்டுக்கதவை உ.டைத்துக்கொண்டு உள்ளே செல்லவில்லை, அவர் ஏன் மகளை கொ.லை செ.ய்.தா.ர், மருத்துவமனையில் இருக்கும்போது பொலிசாரிடம் ஏதாவது கூறினாரா என பல கேள்விகளுக்கு இன்றுவரை பதிலில்லை.

ஏற்கனவே ராஜ்குமார் பிரியாவை தா.க்.கி.யி.ரு.க்.கி.றா.ர், ஆனாலும் அவர் குழந்தையை சந்திக்க பிரியா அனுமதி மறுத்ததேயில்லை, அப்படியிருந்தும் பெற்ற மகளை கொ.ன்.றிருக்கிறார் அவர்.

இப்படிப்பட்டவர்களை திருத்திவிடமுடியும் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது முடியாது என்கிறார் பிரியா. அவர் கைகளில் மகளின் புகைப்படம், முகத்தில் ஆறாத துக்கம்.

பதிவுத் திருமணம் செய்த 24 வயது இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம்!!

இளம் பெண்..

நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த 24 வயது இளம்பெண், சென்னையில் உள்ள திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவில்,

” நாமக்கல்லில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் போது, எனக்கும் – உடன் பயின்று வந்த கவுதம் (வயது 24) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

நாங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், எங்களது பெற்றோருக்கு தெரியாமலேயே திருப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணமும் செய்துகொண்டோம்.

இதன்பின்னர், வேலை விஷயமாக சென்னைக்கு வந்த சமயத்தில், முகப்பேர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்தோம்.

இதற்குள்ளாகவே, 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் பணத்தை பெற்றுக்கொண்டு ஊருக்கு சென்ற கவுதம், சென்னை திரும்பவில்லை. அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அ.திர்ச்சியடைந்த நான், முகநூல் வாயிலாக அவரின் நண்பரை தேடி, நாமக்கல்லில் இருக்கும் கவுதமின் குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.

முதலில் எங்களின் திருமணத்திற்கு ம.றுப்பு தெரிவித்தவர்கள், வ.ர.தட்சணையாக 50 சவரன் நகைகள் மற்றும் ரூ.10 இலட்சம் ரொக்கம் கொடுத்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.

பதிவு திருமணம் செய்துவிட்டு என்னை ஏ.மாற்றிச்சென்ற கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பிறந்தநாள் கொண்டாட்டம் : மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியா..

இரண்டே வார்த்தைகளில் கடிதம் எழுதி வைத்து விட்டு, பா.டசாலை மா.ணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவத்தின் அ.திர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் குடும்பத்தினரும், நண்பர்களும்.

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகள், 12ம் வகுப்பு படித்து வரும் நெஹ்யா என்பவரே த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டவர்.

வெள்ளிக்கிழமை நண்பர்களை குடியிருப்புக்கு அழைத்து, தமது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடிய நெஹ்யா, அதன் பின்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளது சக மாணவர்களை மொத்தமாக உ.லுக்கியுள்ளது.

பொதுவாக, பகல் 7 மணிக்கு முன்னரே கண்விழித்து, அறையில் இருந்து வெளியே வரும் நெஹ்யா, சம்பவத்தன்று 9 மணி தாண்டியும் வெளியே வராதது கண்டு ப.யந்து போன தந்தை ஜோசப், கதவில் தட்டி கூப்பிட்டுள்ளார்.

ஆனால் கதவு திறக்க தாமதமானதும், ச.ந்தேகம் கொண்ட அவர், அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் நபருடன் இணைந்து கதவை உ.டைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். உள்ளே இருந்து கதவு பூ.ட்டப்பட்ட நிலையில், மா.ணவி நெஹ்யா ச.டலமாக கி.டந்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து மொத்தமாக ப.ரிசோதனை மேற்கொண்டுள்ளனர். நெஹ்யாவின் ம.ர்ம ம.ரணம் பொலிசாரை தி.ணறடித்திருந்தாலும், தொடர் வி.சாரணையில், அது த.ற்.கொ.லை எ.ன்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

மட்டுமின்றி, மிக சிலரே இப்படியான த.ற்.கொ.லை மு.டிவை எடுப்பதாகவும், நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதேப்போன்று கேரள மாநிலத்தில் மூவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளதும், பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

சி.க்கிய கடிதம் ஒன்றில், நான் போகிறேன் என்பது மட்டுமே எழுதப்பட்டிருந்ததும், இதை ஒரு விசித்திர வழக்காக விசாரிக்க பொலிசாரை தூ.ண்டியுள்ளது.

சம்பவம் நடந்த இரவு குடியிருப்பில், தந்தையும் சகோதரியும் மட்டுமே இருந்துள்ளனர். தாயார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வகுப்பறை தேர்வில் மூன்று பாடங்களுக்கு மதிப்பெண் குறைந்து போனது, நெஹ்யாவை மனதளவில் பா.தித்திருக்கலாம் எனவும்,

அதனால் ஏற்பட்ட ம.னக்குழப்பமே த.ற்.கொ.லை.க்.கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிசார் நம்புகின்றனர். மட்டுமின்றி, இரண்டே வார்த்தைகளில் எழுதப்பட்ட கடிதம் தொடர்பில், அவரது மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தவும் பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

பயணிகளுடன் கால்வாய்க்குள் விழுந்து மூழ்கிய பேருந்து : 32 பேர் பலி : இந்தியாவில் நடந்த கோர சம்பவம்!!

மத்திய பிரதேசத்தில்..

இந்தியாவில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததால், 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 54 பயணிகளுடன் பயணித்த பேருந்து சித்தி பகுதியிலிருந்து சத்னாவுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை மீறி, போகும் வழியில் இருந்த கால்வாயில் திடீரென்று விழுந்தது.

இதனால் பயணிகளுட்ன பேருந்து கால்வாயில் மூழ்கியது, இது குறித்த தகவல் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 32 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், மீதமுள்ள 20-க்கும் மேற்பட்டோரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் முடக்க முடியாது : உதய கம்மன்பில!!

உதய கம்மன்பில..

நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதனைச் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டால் நாட்டை முடக்கக்கூடிய இயலுமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இலங்கை கடுமையான கடன் சுமையினால் சிக்குண்டுள்ளது, இந்த நிலையில் நாட்டை முடக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார இயலுமை கிடையாது. அதனைச் செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் முடக்கும் சாத்தியமில்லை” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக என்.எஸ்.செல்வரட்ணம் நியமனம்!!

என்.எஸ்.செல்வரட்ணம்.

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக என்.எஸ்.செல்வரட்ணம் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.பரீட் ஓய்வு பெற்று சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இ.ராஜ்மோகன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றிருந்தன.

அதனடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபராக செயற்பட்ட என்.எஸ்.செல்வரட்ணம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக தெரிவாகிய நிலையில் கடமைகளைப் பொறுப்பேறுள்ளார்.

இதேவேளை, கடந்த 8 மாதங்களாக பதில் கோட்டக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இ.ராஜ்மோகன் வவுனியா தெற்கு வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா – கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பம்!!

சொகுசு பஸ் சேவை..

வவுனியா – கொழும்புக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தையடுத்து வவுனியாவிற்கும், கொழும்புக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாடு மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில் போக்குவரத்து பயணிகளின் நன்மை கருதி வவுனியா – கொழும்புக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொகுசு பஸ்சில் பயணிப்பவர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், குறித்த குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை வவுனியாவில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கும், இரவு 11.30 மணிக்கும் கொழும்பு நோக்கியும், கொழும்பில் இருந்து தினமும் காலை 11 மணிக்கும், இரவு 9.30 மணிக்கும் வவுனியா நோக்கியும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம் : இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு!!

காதலர் தினத்தன்று..

காதலர் தினத்தன்று பிரபல ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 ம.து.பா.ன விருந்துகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. கொழும்பின் புறநகர் பகுதிகளான மொரட்டுவ, பொரலஸ்கமுவ மற்றும் உனவட்டு ஆகிய பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு வெளிநாட்டு ம.து.பா.ன.ம் 49300 மில்லி லீற்றரை கலால் அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். அதன் பெறுமதி 10 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக அனுமதி ஆரம்பத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விருந்தில் கலந்து கொண்ட காதலர்களுக்கு அதிக பெறுமதியிலான ம.து.பா.ன.ம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எனினும் எவ்வித அனுமதியுமின்றி இந்த விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது சுற்றிவளைக்கப்பட்ட சந்தேகநபர்கள் உனவட்டுன, அனுராதபுரம் மற்றும் நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள திரிபடைந்த கோவிட் 19 வைரஸ் : கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி!!

திரிபடைந்த கோவிட் 19 வைரஸ்..

கொழும்பில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்பாளர் ஒருவர், பிரித்தானியாவில் பரவி வரும் திரிபடைந்த கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதிய திரிபடைந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு நகரத்தில் கண்டறியப்பட்ட முதல் நபர் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் முதல் மற்றும் இரண்டாவது தொடர்புகளை அடையாளம் காண அதிகாரிகள் தொடர்புத் தடத்தைத் தொடங்கியுள்ள நிலையில், குறித்த நபர் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நோயாளியின் வீடு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பியகம, அவிசாவவை மற்றும் வவுனியா ஆகிய இடங்களிலிருந்தும் திரிபடைந்த கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிய மாறுபாடு பரவுவதால் எதிர்வரும் வாரங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் இரண்டு முகக்கவசங்களை  அணியுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய மாறுபாடு பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

கோவிட் தடுப்பூசி..

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தடுப்பூசி செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது அவர் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் படுகாயம்!!

நாவலப்பிட்டி..

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளாகி உள்ளார்.

நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி நேற்று மாலை ஹரங்கல – கொத்மலை நீர்த்தேக்க பிரதான வீதியின் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் ஹரங்கல பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.புத்திக்க (வயது 30) என தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.