நாட்டை முழுமையாக முடக்கவில்லை என்றால் பாரிய ஆபத்து : சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!!

சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை..

தற்போதுள்ள நிலையில் நாட்டை மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றால் கோவிட் தொற்றினால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளுக்கு நாடு முகம் கொடுக்க நேரிடும் ஆபத்துக்கள் உள்ளதாக சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸின் புதிய மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு கடுமையான ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலைமையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களால் எதிர்பார்க்க முடியாதளவு நாட்டை மூடி விட நேரிடும்.

வெளியிடப்படும் கோவிட் தொற்றாளர்களின் தரவுகளில் உண்மையான தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது. PCR முடிவுகள் தாமதமாகவே கிடைக்கின்றது.

உரிய நேரத்தில் PCR முடிவுகள் கிடைத்தால் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் 75 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர் எண்ணிக்கை : நேற்று 801 பேர் அடையாளம்!!

கோவிட்-19 வைரஸ்..

இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்றும் 801 பேருக்குக் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை75 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது. கடந்த கடந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையில் நாட்டில் மூவாயிரம் வரையிலான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்ததுடன் 13 பேரே தொற்றால் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியாகொட மீன் சந்தைக் கொத்தணிகளைத் தொடர்ந்து நாளாந்தம் தொற்றுக்கு உள்ளான 500 இற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு வருவதுடன், நாளாந்தம் மரணங்களும் பதிவாகி வருகின்றன.

இதேவேளை, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 865 பேர் இன்று குணமடைந்துள்ளனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கோவிட்-19 தொற்றிலிருந்து இதுவரை 68 ஆயிரத்து 696 பேர் குணமடைந்துள்ளதுடன், 6 ஆயிரத்து 568 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

எந்தவொரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கோவிட் வைரஸ்..

கோவிட் வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ந்து நான்காவது வாரமாக கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவல், உலக அளவில் குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 2-வது வாரமாக கொரோனா உயிர்ப்பலி எண்ணிக்கையும் சரிந்துள்ளது.

பல நாடுகளிலும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதனாலேயே இது குறைகின்றது என்று தோன்றுகிறது. இதற்காக நாம் ஊக்கம் அடையலாம். ஆனால் இதில் மன நிறைவு கொள்வது என்பது அந்த வைரசைப் போலவே ஆபத்தானது.

தற்போது கட்டுப்பாடுகளை எந்த நாடுகளும் தளர்த்தும் தருணம் எந்த நாட்டுக்கும் வரவில்லை. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது. அதே போன்று எந்த தனிநபரும் கோவிட் கால பாதுகாப்பு அம்சங்களை குறைப்பதற்கான தருணமும் இது அல்ல.

தடுப்பூசிகள் தயாரிப்பு தொடங்கி உள்ள நிலையில் நேர்ந்துள்ள ஒவ்வொரு உயிரிழப்பும் மிகுந்த சோகத்துக்குரியதுதான்.

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி ஆராய வுஹான் நகருக்கு சமீபத்தில் உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றது. அவர்கள் கண்டறிந்துள்ளவை குறித்து அடுத்த வாரம் அறிக்கை வெளியிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் வீடொன்றில் நடந்த விருந்து : பலருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

இரத்தினபுரியில் வீடொன்றில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் நடந்த விருந்து காரணமாக எட்டுப் பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பாரிய அளவிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைக்கு அமைய இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரதேச சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் செயற்படுமாறு பெல்மடுல்ல பிரதேச மக்களிடம் கேட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் பெல்மடுல்ல பிரிவில் 18 கோவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் சோகத்தில் எடுத்த விபரீத முடிவு!!

கவுர்..

இந்தியாவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 22 வயது இளம்பெண் தன்னை தானே க.ழு.த்.தை நெ.ரி.த்.து.க் கொண்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டரை சேர்ந்தவர் ஜெய்மீத் கவுர் (22).
இவர் நேற்று தனது தந்தை வீட்டில் தன்னுடைய க.ழு.த்.தை தானே நெ.ரி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

இது குறித்து கவுரின் தந்தை பிக்ரமித் கூறுகையில், கவுருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கணவரை பிரிந்த அவர் எங்களுடன் தான் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி வீட்டிலிருந்து என் மகள் கவுர் திடீரென மா.யமானார். பின்னர் நேற்று வீட்டுக்கு வந்த அவர் நேராக தனது அறைக்குள் சென்று,

த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார் என வே.தனையுடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இ.றந்த சோகத்தில், 2 பி.ஞ்சு கு.ழந்தைகளுடன் க.ணவன் எடுத்த வி.பரீத முடிவு!!

சென்னையில்..

செ.ன்னையில் ம.னைவி இ.ற.ந்.த சோ.கத்தை தா.ங்க மு.டியாத க.ணவன், த.ன.து இ.ரண்டு கு.ழ.ந்.தை.க.ளை.யு.ம் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஏசி மெக்கானிக் வினோத் (32), த னது ம னைவி கவிதா ம ற்றும் இ ரண்டு கு.ழந்தைகளான நவின் (3) மற்றும் பிரவீன் (1) ஆ கியோருடன் சென்னை கொருக்குப்பேட்டை, ஜீவா ந.கரில் உ ள்ள த னது சொ ந்த வீ ட்டில் வ சித்து வ.ந்தார்.

ஒ ரு மா தத்திற்கு மு ன்பு, வினோத்துடன் ச.ண்.டை போ.ட்டுக்கொண்டு கவிதா பொன்னேரியில் உ ள்ள த னது பெ ற்றோரின் வீ ட்டிற்கு செ ன்று, அ.ங்கேயே த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார் எ ன்று கூ றப்படுகிறது.

ம னைவி இ.ற.ந்.த.தா.ல் ம.னச்சோர்.வடைந்த வினோத், அ.த.ன் பி.ன்னர் ச.ரியாக வே.லைக்கு செ.ல்லவில்லை எ.ன்று கூ.றப்படுகிறது. இ.ந்த நி.லையில் அ.வர் க.டந்த வா.ரம் பொன்னேரியிலிருந்து கோருக்குப்பேட்டைக்கு த.ன.து கு.ழந்தைகளை அ.ழைத்து வ.ந்துள்ளார்.

ச.னிக்கிழமை கா.லை, வினோத் நீ.ண்ட நே.ர.ம் ஆ.கியும் வீ.ட்டை வி.ட்டு வெ.ளியே வ.ராததால், அ.க்கம்ப.க்கத்தினர் அ.வரது தா.ய்க்கு த.கவல் கொ.டுத்துள்ளனர்.

வினீத்தின் தா.யும் ச.கோதரரும் வி.ரைந்து செ.ன்று க.த.வை உ.டை.த்.து.ள்.ள.ன.ர். அ.ப்போது, உ.ள்ளே இ.ரண்டு கு.ழ.ந்.தை.க.ளு.ம் த.ரையில் ம.ய.க்.க.த்.தி.ல் கி.ட.ந்.த.தை.யு.ம், வினோத் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை.யு.ம் க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

கு.ழந்தைகள் ஸ்டான்லி ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ல்லப்பட்டனர், அ.ங்கு அ.வர்கள் இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க அ.றிவிக்கப்பட்டது. வி.ஷ.ம் அ.ல்லது க.ழு.த்.தை நெ.ரி.த்.த.த.ற்.கா.ன அ.றிகுறிகள் எ.துவும் இ.ல்லை, எ.னவே அ.வர்கள் த.லை.ய.ணை.க.ளா.ல் மு.க.த்.தி.ல் அ.ழு.த்.தி கொ.ல்.ல.ப்.ப.ட்.டி.ரு.க்.க.லா.ம் எ.ன்று போ.லீசார் ச.ந்தேகிக்கின்றனர்.

ம.ர.ண.த்.தி.ற்.கா.ன கா.ரணத்தை அ.றிய ச.ட.ல.ங்.க.ள் பி.ரே.த ப.ரிசோதனைக்கு அ.னுப்பப்பட்டன. ஆர்.கே.நகர் போ.லீசார் வ.ழக்குப் ப.திவு செ.ய்து மே.லும் வி.சாரணை ந.டந்து வ.ருகிறது.

இ.ந்தக் கு.டும்பம் அ.ப்பகுதியில் ந.ன்றாக வா.ழ்ந்துவந்த நி.லையில், க.விதாவின் த.ற்.கொ.லை ம.ற்றும் வினோத் த.ங்கள் கு.ழந்தைகளை கொ.ல்.ல மு.டி.வு செ.ய்ததும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதும் ம.ர்.ம.மா.க.வே உ.ள்ளது.

அம்மாவும், அப்பாவும் வேலைக்கு போனாங்க… திரும்பவேயில்லையே : கதறி அழும் சிறுமி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பட்டாசு ஆலை வெ.டி வி.பத்தில் பெற்றோரை இ.ழந்த சிறுமி மருத்துவமனையில் க.தறி அ.ழுத சம்பவம் அங்கிருந்தவர்களை க.டு.ம் சோ.கத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெ.டி வி.பத்தில் 19 பேர் உ.யிரிழந்த நிலையில், பலர் ப.டுகாயமடைந்தனர்.

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில், நடுசூரங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோரும் உ.யிரிழந்தனர்.

இவர்கள் இருவரும் பட்டாசு தொழிற்சாலையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர்.

இருவரும் தனித்தனி அறைகளில் வேலை செய்தனர். முதலில் வெ.டி வி.ப.த்.து ஏற்பட்ட அறையில் தான் செல்வி பணியாற்றியுள்ளார்.
வெ.டி வெ.டி.த்.த.வு.ட.ன் தனது மனைவி குறித்து ப.த.ற்.ற.ம.டை.ந்.த பாக்கியராஜ், ம.னைவி ப.ணியாற்றிய அ.றைக்கு ஓ.டியுள்ளார்.

அ.ப்போது அ.ந்த ப.குதியில் இ.ருந்த ம.ற்றொரு அ.றை ப.ய.ங்.க.ர ச.த்.த.து.ட.ன் வெ.டி.த்.து சி.த.றி.ய.து. இ.தி.ல் தூ.க்.கி வீ.ச.ப்.ப.ட்.ட பாக்கியராஜ், கா.ய.ம.டை.ந்.து உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.யு.ள்.ளா.ர். இ.தனிடையே செ.ல்வியும் உ.ட.ல் க.ரு.கி உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.னா.ர்.

இதையடுத்து பாக்கியராஜ் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது, சிகிச்சை பலனின்றி ப.ரிதாபமாக உ.யிரிழந்தார்.

இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு நந்தினி என்று பெயர் வைத்துள்ளனர். நந்தினி புதுசூரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளயில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய் தந்தை உ.யிரிழந்ததை கேள்விப்பட்ட சிறுமி அங்கு க.த.றி அ.ழு.த காட்சிகள் அங்கிருந்தோரை க.ண்கலங்க செய்தது. அவரது உறவினர்கள் எவ்வளவோ தேற்ற முயற்சித்தும் சிறுமி க.தறுவதை நிறுத்தவே இல்லை.

காலையில் வேலைக்கு சென்ற அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வரவேயில்லை என அந்த சிறுமி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தது பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு… 3 நாட்களாக வீடு திரும்பாத பாடசாலை ஆசிரியை!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவர் ம.ர்மமான முறையில் மா.யமான சம்பவம் குடும்பத்தாரை சோ.கத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் தற்போது மங்களகிரி பொலிசார் தீவிரமாக வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டூர் மாவட்டம் துல்லூரு மண்டலத்தில் உள்ள மண்டடம் ஜில்லா பரிஷத் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஜான்சி ராணி.

மங்களகிரி பகுதியில் அவரது கணவர் வீரஞ்சநேயுலு மற்றும் மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 11 ம் திகதி காலை வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார் ஜான்சி ராணி.

அன்று மதியம் வீரஞ்சநேயுலு தனது மனைவியுடன் மொபைலில் பேசியுள்ளார், மேலும் அன்று மாலை அவர் தமது குடியிருப்புக்கு திரும்பியதாகவும் வி.சாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆனால், ஜான்சி ராணி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலின் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள கடைக்கு அருகில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதாகவும்,

கடை உரிமையாளருக்கு பைக் சாவியைக் கொடுத்துவிட்டு, கணவர் வந்து வாகனத்தை எடுத்துக் கொள்வார் என்று கூறிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இரவும் அவர் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், அவரது மகன் தமது தாயார் தொடர்பில் பொலிசாரிடம் பு.கா.ர் அளித்துள்ளார்.

ஆசிரியர் மா.யமான விவகாரம் தொடர்பில் வி.சாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மட்டுமின்றி, கண்காணிப்பு கமெரா காட்சிகளையும் சேகரித்து வி.சாரணையை முடுக்கி விட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

21 வயது இளைஞனை மணக்க ஆசைப்பட்ட 32 வயது பெ.ண்ணுக்கு நே.ர்ந்த க.தி!!

இந்தியாவில்..

இந்தியாவில் தன்னை விட 11 வயது அதிகமான பெண் திருமணம் செய்து கொள்ள வ.ற்புறுத்தியதால் அவரை இளைஞர் கொ.லை செ.ய்.த ச.ம்பவத்தில் அ.தி.ர்.ச்.சி.த் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் சாகிப் கான். இவர் மனைவி ஹீனா (32). இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அதே வீட்டில் அவர்களுக்கு தெரிந்த நபரான சுமித் குமார் (21) என்பவரும் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஹீனாவுக்கும், சுமித்துக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து கணவரை தான் பிரிய விரும்புவதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் சுமித்தை ஹீனா வ.ற்புறுத்தி வந்தார்.

ஆனால் ஏற்கனவே திருமணமான மற்றும் தன்னை விட 11 வயது மூத்தவரான ஹீனாவை மணக்க முடியாது என சுமித் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக இருவருக்கும் ச.ண்.டை ஏ.ற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ஹீனாவை கொ.லை செ.ய்.ய சுமித் முடிவு செய்தார்.

இ.தற்காக த.ன.து ந.ண்பர்கள் அருண், அமீத், ரவி ஆ.கிய மூ.ன்று பே.ரை கூ.ட்.டு சே.ர்த்து கொ.ண்ட சுமித் அ.வர்களுக்கு 1 ல.ட்சம் ப.ணம் கொ.டுத்தார். மே.லும் ஹீனா வீ.ட்டில் நி.றைய ப.ணம், ந.கைகள் இ.ருப்பதாகவும் அ.வரை கொ.லை செ.ய்.த பி.ன்னர் அ.தை தி.ரு.ட.லா.ம் எ.னவும் ந.ண்பர்களிடம் கூ. றியிருக்கிறார்.

பின்னர் சுமித் க.த்.தி.யை வைத்து ஹீனா க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.தி.ரு.க்.கி.றா.ர். இதை தொடர்ந்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அனைவரும் த.ப்.பி.ன.ர்.

இந்த வ.ழக்கில் சி.க்.கா.ம.ல் இருக்க சுமித் மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.டந்த ஹீனாவை மருத்துவமனைக்கு தூ.க்கி சென்றார். அங்கு அவர் ஏற்கனவே இ.ற.ந்.து.வி.ட்.ட.தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மருத்துவமனைக்கு வந்த பொலிசார் சுமித்திடம் வி.சாரித்த போது ப.ய.த்.தி.ல் நடந்த அனைத்தையும் அவர் ஓப்பு கொண்டார். இதையடுத்து சுமித் மற்றும் அவரின் மூன்று நண்பர்களையும் பொலிசார் கை.து செய்தனர்.

நாடளாவிய ரீதியிலான முடக்கல் குறித்து இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள தகவல்!!

இராணுவத்தளபதி..

புதிய கோவிட் வைரஸ் பரவலை அடுத்து நாட்டில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் புதிய கோவிட் வைரஸ் பரவல், இலங்கையின் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் முடக்கலை மேற்கொள்ள தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய கோவிட் வைரஸ் பரவல் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பரவிய இந்த புதிய கோவிட் வைரஸ் தொற்று முதன்முதலாக இந்த ஆண்டிலேயே இலங்கைக்குள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் வைரஸ் தொற்று சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய இடங்களிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

பி.1.258 என்ற வர்க்கத்தைச் சேர்ந்த இந்த புதிய கோவிட் வைரஸ் அதிகப்பரவல் தன்மையை கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

-தமிழ்வின்-

நாட்டில் ஒன்றுக்கூடல் மற்றும் நிகழ்வுகளை நடத்த அனுமதி மறுப்பு!!

ஒன்றுக்கூடல்..

பிரித்தானியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டறியப்பட்டமையை அடுத்து ஒன்றுக்கூடல் மற்றும் நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

எனினும் திருமணம் மற்றும் மரண வீடுகளை தவிர்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. எனவே திருமணம் மற்றும் மரண வீடுகளை தவிர்ந்த ஏனைய நிகழ்வுகளுக்கு அனுமதிக்கோரி பொதுமக்கள் பொது சுகாதார அதிகாரிகள் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று சம்மேளனத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் திருமணம் மற்றும் மரண வீடுகளில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனத் தலைவர் எச்சரித்துள்ளார்.

புதிய கொரோனா காரணமாக இலங்கை முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை!!

புதிய கொரோனா..

புதிய மாறுபாடு காரணமாக கோவிட் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதையும் முடக்குவதற்கு எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கொரோனா தொற்றினை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் நாளை கூடும் போது இந்த பிரச்சினை தொடர்பில் விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் முழு நாட்டையும் முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்ககப்படவில்லை. எனினும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் நாளை இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தொற்று நோய் பிரிவு நிலைமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும்,

எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இளைஞர், யுவதிகளுக்கு..

இன்றைய தினம் கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு இணையத்தளம் ஊடாக பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெறுவது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறுந்தகவல் ஊடாகவும் இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் உங்கள் கையடக்க தொலைபேசி, வட்ஸ்அப், வைபர் பேஸ்புக் ஊடாக ஒரு தகவல் கிடைக்ககூடும்.

உங்களுக்கு உங்கள் காதலன் அல்லது காதலி பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டு அந்த குறுந்தகவல் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்கான பரிசு புகைப்படம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிக்கலாம். அதில் காதலன் அல்லது காதலிக்கு தொடர்புடைய புகைப்படங்களும் இருக்கலாம்.

அதற்காக ஒரு தொகை பணத்தை வைப்பிடுமாறு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை நம்பி பணம் வைப்பிட வேண்டாம் என இலங்கை இளைஞர் யுவதிகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் காதலர் தின ஒன்றுகூடல் மற்றும் நிகழ்வுகளுக்கு பொலிஸார் தடை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

காதலர் தின ஒன்றுகூடல்..

வவுனியா மாவட்டத்தில் காதலர் தின நிகழ்வுகள் மற்றும் காதலர்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அதனை மீறி செயற்படுவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக காதலர் தின நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் வவுனியா மாவட்டத்தில் விருந்தினர் விடுதிகள், பொது இடங்களில் போன்றவற்றில் காதலர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் காதலர் தின நிகழ்வுகளை நடாத்தும் விருந்தினர் விடுதிகள், பங்குபற்றுவர்கள் மற்றும் காதலர்கள் ஒன்று கூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

14ம் திகதி நாடு முழுவதும் காதலர் தினத்தை ஒட்டி சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், வெளியிலும் களியாட்ட நிகழ்வுகள் விருந்துபசாரங்கள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இவற்றை கண்காணிக்கவும், திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

பொலிஸ் புலனாய்வுப் பிரிவு களமிறக்கப்பட்டிருக்கின்றது. ஹோட்டல்கள் அல்லது விருந்தினர் மாளிகைகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்காக தங்கள் வளாகத்தை வழங்கியதாகக் கண்டறியப்பட்டால், அத்தகைய இடங்கள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

மேலும் பொதுக் கூட்டங்களைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அவை கொவிட் -19 தடுப்பு குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்க திட்டம்!!

கொரோனா தொற்றாளர்..

கோவிட்- 19 தொற்றாளர்கள் காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத கோவிட்- 19 தொற்றாளர்களை இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் பரவும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்கக் கூடாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

கோவிட்- 19 நோயாளிகளை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது என்பதால், சம்பந்தப்பட்ட சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் கோவிட்- 19 தொற்றாளர்கள் வீடுகளில் தங்க வைப்பட்டே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கையில் கொரோனா நிலவரம் : நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!!

கொரோனா..

சுகாதார சட்டங்களை சரியான முறையில் பின்பற்றி கோவிட் – 19 வைரஸ் பரவலை ஒழிக்க உதவுமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 ஒழிப்பு மற்றும் ஆரம்ப சுகாதார ராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

முககவசம் அணிதல் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதை வெகுவாக குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கோவிட் – 19 தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்படுவது நாட்டில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் சுகாதார சட்டங்களை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.