கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது கடுமையாக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை கட்டுப்படுத்த பொது மக்களின் அர்ப்பணிப்பு அத்தியாவசியம் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு நேற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டின் கொரோனா பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையால் நாங்கள் தயங்க போவதில்லை. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர், சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் காரணமாக வீடுகளில் வைபவங்களை நடத்த அனுமதி கோரி, சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலங்களுக்கு வர வேண்டாம். இலங்கையில் தற்போது வரையறைக்கு உட்பட்டே திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த முடியும்.
இந்த நிலையில் இன்றைய தினம் முதல் நாங்கள் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக வடமாகாண பலநோக்கு கூட்டுறவுச் சங்களுக்கு சௌபாக்கியா கடன் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13.02.2021) நடைபெற்ற நிகழ்வில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களிடம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன,
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோர் இணைந்து குறித்த கடன் திட்டத்திற்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
வடமாகாணத்தில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை உத்தரவாத விலையில் பெற்று அதனை களஞ்சியப்படுத்தி மீண்டும் மக்களுக்கு உத்தரவாத விலையில் அரிசியினை வழங்கும் முகமாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டை ஊக்குவிக்க,
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக வடமாகாணத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கே இலகு முறையில் செலுத்தும் வகையில் சௌபாக்கியா கடன் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், பலநோக்கு கூட்டுறுவுச் சங்கங்களை வினைத்திறன் மிக்கதாகவும், இலாபமீட்டும் நிறுவனங்களாகவும் மாற்றுவதுடன் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிலையங்களாக மாற்றியமைப்பது தொடர்பில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது பலநோக்கு கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுடன் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் அமைச்சர்களுடன் கூட்டுறவு திணைக்கள உயர் அதிகாரிகள், வடமாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர், வடமாகாண பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் வர்த்த நிலையம் ஒன்றில் பணியாற்றுபவருக்கு நேற்றைய தினம் (12.02) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இன்று (13.02) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று மாலை வெளியாகிய பீசீஆர் முடிவுகளில் வவுனியா பொலிசார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மேலும் 4 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்புடத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாவட்ட உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று(13.02.2021) காலை மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேனவினால் குறித்த சந்தை திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களிற்கு நியாயமான விலை கிடைக்காமையினாலும், நுகர்வோர்களிற்கு சரியான விலையில் பொருட்கள் கிடைக்காமையினையும் கருத்தில் கொண்டு வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிற்கு சேவை வழங்கும் நோக்குடன் குறித்த உழவர்சந்தை திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தமது கமநல கேந்திர நிலையங்களினூடாக தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பதுடன், வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வதற்கான ஒழுங்குகளும் இதனூடாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார், மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன்,
மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளத்தினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்ற தமிழ் பெண், அங்கு வேலை செய்த இடத்தில் அ.டிமையாக நடத்தப்பட்டுள்ளார் என்ற அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2007 முதல் 2015-ஆம் ஆண்டு வரை ஒரு பெண்ணை அ.டிமையாக வைத்திருந்ததாக கு.ற்றம் சாட்டப்பட்டுள்ளது, அப்பெண் தற்போது ஆ.பத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்மணி இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்தவர், 60 வயது மதிக்கத்தக்கவராக இருக்கும் அவர் தற்போது நீரிழிவு நோயால் பா.திக்கப்பட்டுள்ளார்.
வெறும் 40 கிலோ எடை மட்டுமே இருக்கிறார். கடந்த 2007-ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியா சென்ற அவர், அங்கு தம்பதியினரின் மூன்று குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், அவர்களின் விட்டு வேலைக்காகவும் சென்றுள்ளார்.
முதலில் அவர் ஆறு மாத சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அதன் பின் அவரின் விசா மற்றும் பாஸ்போர்ட் கடந்த 2011-ஆம் ஆண்டு காலாவதியாகியுள்ளது.
ஆரம்பத்தில் அந்த குடும்பத்திற்கு வேலைக்கு சேர்ந்தவர், அதன் பின் அ.டிமை போல் நடத்தப்பட்டுள்ளார். அவரை யாருடனும் குறித்த தம்பதியினர் பேசவிடாமல் வைத்துள்ளனர்.
சுமார் எட்டு ஆண்டுகளாக இந்த கொ.டு.மை நடந்துள்ளது. அந்த இந்திய பெண், சிறுநீர், கழிவுகள் கிடந்த ஒரு அறையில் அ.டிமைப் போன்று இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த வழக்கு வி.சாரணை கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இதன் வழக்கு வி.சாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு மாநில அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால், வழக்கு தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த தம்பதியினர் இந்த கு.ற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளனர். அந்த பெண்ணை நாங்கள் நன்றாகவே கவனித்து வந்ததாக கூறியுள்ளனர்.
வழக்கின் தொடர் வி.சாரணையின் போதே அந்த தமிழ் பெண் எப்படி க.ண்டுபிடிக்கப்பட்டார்? இப்போது எப்படி தெரிந்தது என்பது குறித்த முழு விபரம் தெரியவரும்.
தம்பதியினர் இடம் இருந்து மீ.ட்கப்பட்டுள்ள தமிழ் பெண்ணின் பெயர், புகைப்படம் குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை, பா.துகாப்பு காரணங்களுக்காக அ.டிமைப்படுத்தியதாக கூறப்படும், தம்பதியினரின் பெயரும் வெளியிடப்படவில்லை.
ஏழை ஆட்டோ ஓட்டுனரின் மகள் ஒருவர் மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ள நிலையில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் சிங். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் மகள் மன்யா சிங் தான் தற்போது மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் ஹரியானாவை சேர்ந்த மனிகா முதலிடம் பிடித்துள்ளார். தன்னுடைய வெற்றி குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மன்யா சிங், தான் வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து பட்ட கஷ்டத்துக்கும், உழைப்புக்கும் தற்போது பலன் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
பல இரவுகள் தூக்கமின்றி, உணவின்றி இருந்ததாகவும், புத்தக்கங்கள், ஆடைகள் வாங்கக்கூட பணம் இல்லாத நிலை இருந்ததாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீடுகளில் பாத்திரம் கழுவியும், கால் செண்டரில் வேலை செய்தும் கல்வி பயின்று வந்த மன்யா சிங்,
விடாமுயற்சியால் மிஸ் இந்தியாவின் ரன்னர் அப் – ஆக தேர்வாகி சாதித்துள்ளார். அழகி போட்டிகளை பொறுத்தவரை தனக்கு முன் உதாரணமாக நடிகை பிரியங்கா சோப்ரா இருந்தார் என மன்யா கூறியுள்ளார்.
இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 39 வயதான பெண் த.ற்.கொ.லை செ.ய்.த சம்பவத்தில் தி.டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகமாதாபாத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல். இவருக்கும் ஹர்ஷா பட்டேல் (39) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.
இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் வீட்டு வாசலில் வி.ஷ.ம் கு.டித்து ஹர்ஷா த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து பொலிசார் அங்கு வந்து ச.டலத்தை கை.ப்பற்றினார்கள். உ.யிரிழந்த ஹர்ஷாவின் வலது தொடையில் தனது கடைசி வாக்குமூலத்தை அவர் எழுதிருந்தார் என பொலிசார் கூறினர்.
அதன்படி கணவர், மாமனார், மாமியார் தான் தனது த.ற்.கொ.லை.க்.கு கா.ரணம் என எழுதிருக்கிறார். இதோடு நீண்ட கடிதம் ஒன்றையும் ஹர்ஷா எழுதி வைத்திருக்கிறார்.
அதில், மருத்துவரான கணவர் ஹிதேந்திரா தினமும் தனக்கு ம.யக்க மருந்து கொடுத்து அரை ம.யக்கத்தில் வைத்து சீ.ரழித்ததோடு மிகவும் மோ.சமாக நடந்து கொண்டார் என எழுதப்பட்டுள்ளது.
இதோடு மாமனார், மாமியார் தன்னிடம் தங்கம் மற்றும் பணத்தை வ.ரதட்சணையாக கேட்டு தொ.ல்.லை செ.ய்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் ஆதாரமாக வைத்து பொலிசார் ஹிதேந்திரா, அவர் பெற்றோர் மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மென்பொறியாளரான இளம் பெண் திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் உ.யிரை மா.ய்த்துக் கொண்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை அ.திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி பகுதியை சேர்ந்தவர்கள் பிந்து(25) மற்றும் பானு சாய் தம்பதி. மென் பொறியாளர்களான இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் திருமணம் முடிந்துள்ளது.
பிந்து பெங்களூருவிலும், பானு சாய் ஐதராபாத் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு என்பதால் குடியிருப்பில் இருந்தபடியே பணியாற்ற மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை அனுமதித்துள்ள நிலையில்,
பானு சாய் மற்றும் பிந்து தம்பதி ஒன்றாக முடிவு செய்து, பெங்களூருவில் தங்கி, தங்கள் பணியை தொடர திட்டமிட்டனர். இந்த நிலையிலேயே பிந்து செவ்வாய்க்கிழமை காலை இ.றந்து கி.டந்தார் என்ற தகவல் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
தகவல் அறிந்த பொலிசார், சம்பவயிடத்திற்கு சென்று, உ.டலை கை.ப்பற்றியதுடன், முன்னெடுத்த முதற்கட்ட வி.சாரணையில். பானு சாயின் பெற்றோர்கள் அளித்த நெ.ருக்கடியே பிந்து த.ற்.கொ.லை செ.ய்ய காரணம் என தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் குடியிருப்பு ஒன்றை குத்தகைக்கு எடுக்கவும், அதற்கு தேவையான பணத்தை பிந்துவின் பெற்றோரிடம் இருந்து திரட்ட பானு சாயின் பெற்றோர்கள் க.ட்டாயப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவர்கள் க.ட்டாயப்படுத்தவே, பிந்து தி.டீரென்று த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தங்களது மகளை பானு சாயின் குடும்பத்தினர் அ.டி.த்.தே கொ.ன்.ற.தா.க பிந்துவின் பெற்றோர்கள் கு.ற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருமணத்தின் போது பணம் கடன் வாங்கியே, பானு சாய் குடும்பத்தினர் கேட்டதாக 200 கிராம் அளவுக்கு தங்கம் அளித்ததாகவும், தற்போது மேலும் பணம் கேட்டு தொ.ல்.லை அளித்து வந்ததாகவும்,
பிந்துவை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி பின்னர் அவர்கள் துப்பட்டாவால் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.றி.ரு.க்.க.லா.ம் என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் வ.ழக்கு பதிந்துள்ள திருப்பதி பொலிசார், மேலதிக வி.சாரணைக்கு பின்னரே, உண்மை காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்கு கடலின் கடுமையான கொந்தளிப்பு மற்றும் கடலரிப்பு காரணமாக மீனவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் மிகப்பெரும் அ.ச்சுறுத்தல் நிலவிவருகிறது.
ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பின்னர் அப்பிரதேசத்தை அண்டிய சகல பிரதேசங்களும் கடலரிப்புக்கு வெகுவாக பாதித்து வருகிறது. இன்று (12.02.2021) மாலை 6.00 மணியளவில் நிந்தவூர் கடலில் மீன்பிடிக்கச்சென்று கரைதிரும்பிய மீன்பிடி படகொன்று கடலலைக்கு தாங்கிப்பிடிக்க முடியாமல் கடலில் மூழ்கியது.
அப்பிரதேசத்தில் குழுமியிருந்த மக்களினால் சிறிய கா.யங்களுடன் அதனில் இருந்த மீனவர்கள் கரை சேர்க்கப்பட்டதுடன், மீன்பிடி படகும் சேதங்கள் இல்லாமல் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இந்த சம்பவம் கரையோரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கம்பளையில் பா.டசாலை மா.ணவர்களை தா.க்.கி பணம் கொ.ள்ளையடிக்கும் கு.ம்பம் தொடர்பில் பெற்றோர் அ.ச்சம் வெளியிட்டுள்ளனர்.
கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பா.டசாலை மா.ணவர்களை கொ.டூ.ர.மா.க தா.க்.கி, இ.ந்தக் கு.ம்பல் ப.ணம் ப.றிப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
9 பேர் கொண்ட இந்த கு.ழுவில் உள்ள அனைவரும் 19 – 20 வயதிற்குட்பட்டவர்களாகும். அவர்கள் காதுகளில் தோடு அணிந்து தலைமுடிகளுக்கு நிறம் பூசி திரைப்படங்களில் வரும் ர.வுடி கு.ம்பல் போன்று செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கு.ழுவினால் கம்பளை குருந்துவத்தை பாடசாலை மா.ணவர்கள் இருவர் மீ.து கொ.டூ.ர தா.க்.கு.த.ல் மேற்கொண்டு பணம் கேட்டுள்ளனர். எனினும் மாணவர்கள் பணம் கொடுக்காமல் பேருந்திற்குள் ஏறியுள்ளனர்.
பேருந்திற்கு பு.குந்து மாணவர்களை மீண்டும் மிக மோ.சமாக தா.க்.கி.யு.ள்.ள.ன.ர். இது தொடர்பில் கம்பளை பொலிஸாரிடம் மு.றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புஸ்ஸலாவை பிரதேசத்தை சேர்ந்த இந்த மா.ணவர்களிடம் 20 ரூபாய் பணம் கேட்கப்பட்டுள்ளது. எனினும் மா.ணவர்களிடம் 20 ரூபாய் இல்லை என கூறியமையினால் தா.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.ன.ர்.
பின்னர் பேருந்திற்குள் நு.ழைந்து கொ.டூ.ர.மா.க தா.க்.கி.ய.மை.யி.னா.ல் பொலிஸாரிடம் மு.றைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கு.ம்பலினால் மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபின் தொற்றுக்கு உள்ள சிலர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, அவிசாவளை, பியகமை, வவுனியா ஆகிய பிரதேசங்களில் பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் திரிபின் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா வைரஸின் திரிபு அதிகளவில் பரவக் கூடியது என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் – பட்டா ரக வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றிக்கெய்தகுளம் பிரதான வீதியில் இன்று (12.02.2021) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பன்றிக்கெய்தகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிலில் இருவர் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மோட்டார் சைக்கலின் பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் ஓமந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது.
19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களின் விபரங்கள்..
கொத்மலை நீர்த்தேக்கத்தில் மி.தந்த பா.டசாலை மா.ணவியின் ச.டலம் மீ.ட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த மா.ணவியின் ச.டலம் மீ.ட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீ.ட்கப்பட்ட ச.டலம் 16 வயதுடைய பா.டசாலை மா.ணவியுனுடையதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பா.டசாலை மா.ணவி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் வகுப்பு மா.ணவி என தெரியவந்துள்ளது.
இன்றைய தினம் காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவி கொத்மலை நீர்த்தேகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் இருந்து கீழே கு.திப்பதனை பிரதேச மக்கள் அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயுடன் ஏற்பட்ட ம.னவருத்தம் காரணமாக மா.ணவி இவ்வாறு நீரில் கு.தித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக ம.ரண வி.சாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
வவுனியாவில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 11 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா – சி ஜீ ஆர் பூங்கா வீதியில் உள்ள 32 வயதான சௌந்தராஜா விஜயகுமார் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் கடந்த மாதம் 30 ஆம் திகதி பகல் 2.30 மணியளவில் தனது பழக் கடையலிருந்து வீடு திரும்புவதாக கூறி, அங்கிருந்து வெளியேறி சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டுகேட்டபோது அங்கும் அவர் இல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றால் தமக்கோ அல்லது வவுனியா பொலிசாருக்கோ தெரியப்படுத்துமாறு அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று ஏ9 வீதி பனிக்கன்குளம் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை (12.02) இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, திருகோணமலையில் இருந்து யாழப்பாணம் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மாங்குளம், பனிக்கன்குளம் ஏ9 வீதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதன்போது குறித்த பாரவூர்தியில் பயணித்த அதன் நடத்துனர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.