மனிதர்களை கடித்தால் வாழ்நாள் சிறை : நாய்களுக்கு புதிய தண்டனை!!

இந்தியாவில் தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை கடித்தால் நாய்களுக்கு வாழ்நாள் சிறை விக்கப்படும் என உத்தர பிரதேச அரசு நூதனமான தண்டனையை அறிவித்துள்ளது .

நாடு முழுவதும் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும், ரேபிஸ் மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

இதனால் நாய்களை காப்பகத்தில் அடைக்க இடப்பட்ட உத்தரவிற்கும் நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மாநிலங்களில் அந்த நடைமுறை செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் நாய்க்கடி சம்பவங்கள் குறித்து உத்தர பிரதேச அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தெரு நாய் ஒன்று எந்த தூண்டுதலும் இன்றி மனிதர்களை கடித்தால், முதல்முறை கடிக்கும்போது 10 நாட்கள் காப்பகத்தில் அடைக்கப்படும்.

அதற்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு விடுவிக்கப்படும். அதற்கு பிறகு வெளியே செல்லும் நாய் மீண்டும் யாரையாவது கடித்தால் அது ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல நாய் வளர்க்க லைசென்ஸ் பெறுபவர்கள் அதை கடைசி வரை கைவிடாமல் வளர்ப்பதற்கான பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்திர பிரதேச அரசின் இந்த விநோத தண்டனை பேசுபொருளாகியுள்ளது.

பேஸ்புக் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண் : இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!!

இந்தியாவில் காதலனை சந்திக்க 600 கிலோ மீட்டர் பயணம் செய்த பெண் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவை சேர்ந்த 37 வயது அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாரி என்ற பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் பார்மர் நகரில் வசித்து வரும் மனா ராம்(Manaram) என்ற பள்ளி ஆசிரியருடன் கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் நண்பராக அறிமுகமாகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனா ராமிடம் தெரிவித்துள்ளார், ஆனால் மனா ராம் தனது முதல் திருமண விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி மறுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 10ம் திகதி முகேஷ் குமாரி தனது ஆல்டோ காரில் சுமார் 600 கிலோ மீட்டர் பயணம் செய்து மனா ராமின் கிராமத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் அவரது உறவை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் காதலன் மனா ராம் கடும் கோபம் அடைந்துள்ளார், அத்துடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்திய நிலையில் திருமணம் குறித்து பிறகு பேசலாம் என முகேஷிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் தனியாக இருக்கும் நேரத்தில் இரும்புத் தடியால் முகேஷின் தாக்கி மனா ராம் கொலை செய்துள்ளார். மேலும் முகேஷை காரில் அமர வைத்து விபத்து போல உருவாக்க காரை சாலையில் இருந்து உருட்டி விட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்த பொலிஸார், முகேஷ் இறந்த போது இருவரின் செல்போன்களும் ஒரே இடத்தில் இருந்ததை கண்டுபிடித்து மனா ராமிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில் மனா ராம் குற்றத்தை ஒப்புக்கொண்ட தோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்திற்கு தயாரான பெண்ணிற்கு அதிகாலையில் நேர்ந்த பெரும் சோகம்!!

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பெண் , டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறிக்கு பின்னால் பயணித்த வேன் இன்று (16) அதிகாலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மூன்று குழந்தைகள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும், டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு அழைத்து வருவதற்காக தவலமயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

உறக்கத்தில் அரச ஊழியரான பெண் மரணம் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!!

மாத்தளை, தம்புள்ளை, பிரதேசத்தில் தூக்கத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படும் ஒரு பிள்ளையின் தாயின் பிரேத பரிசோதனையில், அவரது மரணம் ஒரு கொலை என்று தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க வந்த இறந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் 34 வயதானவர். அவர் ஒரு பிள்ளையின் தாயார், அவர் தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் மேலாண்மை சேவை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 13 ஆம் திகதி தம்புள்ள, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் ஒரு பெண் தூக்கத்தில் இறந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தனது மனைவி தேர்வுக்காக படித்துவிட்டு மாலை 4.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை எழுப்புமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது கணவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரவில் தனது மனைவியை எழுப்பச் சென்றதாகவும், ஆனால் அவள் எழுந்திருக்காததால், அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்து 1990 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் அப்பெண்ணின் கணவன் கூறியிருந்தார்.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஜெர்மனி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடாவ விகாரைக்கு அருகே கடற்கரையில் நடந்து சென்ற ஜெர்மனி பெண்ணை அழைத்து சென்று தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஜெர்மனி பெண்ணுக்கு நண்டுகளைக் காட்ட கடற்கரையில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் கடற்றொழிலாளர் ஒருவர் தங்காலை பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர் தங்காலை, பள்ளிக்குடாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுயடைவராகும். துஷ்பிரயோகத்திற்குள்ளான ஜெர்மன் பெண் மற்றும் சிலர் கடந்த சில நாட்களாக சினிமோதராவின் நகுலுகமுவவில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் தங்கியுள்ளனர்.

தவறான நடத்தைக்கு உள்ளான பெண் தங்காலை, பள்ளிக்குடாவ விகாரை அருகே உள்ள கடற்கரையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

கடற்றொழிலாளர் கடற்கரையில் நடந்து சென்ற ஜெர்மன் பெண்ணை அணுகி, தான் ஒரு கடற்றொழிலாளர் எனவும் நண்டுகளைப் பார்க்க விரும்பினால், வருமாறு கடற்கரையில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று, அங்கு தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் அவரிடமிருந்து தப்பித்து 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் வேன் – லொறி மோதி விபத்து : ஒருவர் பலி, 7 பேர் காயம்!!

தெற்கு அதிவேக வீதியில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக வீதியில் களனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று சிறுவர்கள் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் எதிர்பார்க்கப்படுகின்ற BYD வாகனங்கள் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை!!

BYD ரக வாகனங்களின் இயந்திரத் திறன் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த சில வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

இலங்கை சுங்கத்தால் முன்னதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் இந்த நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், பின்னர் இறுதி ஆய்வுகள் நிலுவையில் இருந்த நிலையில் வங்கி உத்தரவாதங்களின் பேரில் குறித்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

குறித்த வாகனங்களை இறக்குமதி செய்த ஜோன் கீல்ஸ் CG ஒட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான நடவடிக்கைகளின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரால் அறிக்கை தொடர்பான விடயம் அறிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் விபத்து – 11 பேர் காயம்!!

இரத்தினபுரி – ஹொரணை வீதியில் எபிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியொன்றை துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம் : கதறும் குடும்பம்!!

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் எனவும் தெரியவந்துள்ளது.

நேற்று வழமை போல் நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 27 வயது தாய்!!

இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் 4 குழந்தைகளை சுமந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கர்ப்பிணி தாயிற்கு அறுவை சிகிச்சையில் 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை பிறந்து நலமுடன் உள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த அவரது கணவர் விகாஸ் ககுர்தியா, சஸ்வாத்தில் ஒரு கொத்தனார் வேலை செய்கிறார். அவர்களின் எளிமையான வீடு இப்போது ஏழு சிறிய தேவதைகளின் மகிழ்ச்சியான குழப்பம் மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது,

அதேவேளை 4 குழந்தைகளை பிரசவித்த காஜல் இதற்கு முன்பு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இருந்தது. இதனால் காஜலுக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதிலும், அரிதான நிகழ்வு என்றும், 10 லட்சத்தில் இருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற பிரசவம் பதிவாகிறது என்றும் டாக்டர்கள் தெரிவித்த்துள்ளனர்.

பஸ் – லொறி மோதி விபத்து : மூன்று பேர் காயம்!!

அநுராதபுரம்,நொச்சியாகம, பஹலமாரகஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (16.09) காலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 03 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அதிக சத்தத்துடன் வேகமாக பறந்த மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு!!

பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிசார் நேற்று (15.09.2025) நடவடிக்கை எடுத்தனர்.

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதி, பூங்கா வீதி என்பவற்றில் அதிக சத்தத்துடன் வேகமாக மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றை இளைஞர்கள் செலுத்தி வருவதுடன், அப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவோர், அப் பகுதியில் வசிப்போர், மாணவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் வவுனியா மாநகர சபையால் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டத்தையடுத்து பூங்கா வீதி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிள்களை செலுத்தியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

விபத்தில் பறிபோன யுவதியின் உயிர் : கதறியழும் உறவுகள்!!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தம்பிலுவில்லை சேர்ந்த 24 வயதுடைய சுந்தரலிங்கம் அர்ச்சனா என்ற யுவதி உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – பொத்துவில் தம்பிலுவில் பகுதியில் வீதியில் அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் திசை நோக்கிச் பயணித்த கார் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு, காரை ஓட்டிச் சென்ற சாரதி காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியில் காரை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து, திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்தார்.

தப்பியோடிய காரின் சாரதியை கைது செய்ய திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CIDயை மிரள விட்ட பாடசாலை மாணவன் : புது சைக்கிளுக்காக அரங்கேற்றப்பட்ட கடத்தல் நாடகம்!!

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரத்தினபுரி கஹதுடுவ பகுதியில் வைத்து 15 வயதுடைய சிறுவன் ஒருவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் புதிய சைக்கிளை பெறுவதற்காக மாணவனே போட்ட திட்டம் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது அவர் ஓட்டிச் சென்ற பழைய சைக்கிள், கஹதுடுவவில் உள்ள மினுவன்வில காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலையில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், ஜூலை 16 திகதி மாலை 4.00 மணியளவில் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால் சைக்கிளுடன் கடத்தப்பட்டு தப்பி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாணவனின் வாக்குமூலங்களின் அடிப்படையில், கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில் குறித்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​மாணவன் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் பாடசாலை நண்பர்கள் மூவரை பலமுறை விசாரித்ததில், மாணவன் தான் கடத்தப்பட்டதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்பதையும், பழைய சைக்கிளுக்கு பதிலாக புதிய சைக்கிளை வாங்கித் தருவதாக மட்டுமே கூறிக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாணவனிடம் விசாரணை நடத்திய போது தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் புதிய சைக்கிளை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தன் நண்பர்கள் அனைவரிடமும் புதிய சைக்கிள் இருப்பதாகவும் தந்தையிடமிருந்து புதிய சைக்கிளை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு செய்ததாகவும், நான் பொலிஸாரிடம் மாட்டடிக்கொள்வேன் என தெரிந்தே அதனை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காதலியை நடுரோட்டில் குத்திக் கொன்ற காதலன் எடுத்த விபரீத முடிவு!!

தனது செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலியை நடுரோட்டில் வழிமறித்து ஆத்திரம் தீர காதலன் கத்தியால் குத்திக் கொலைச் செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா கோகர்ணா அருகே பூஜாரிபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரக்‌ஷிதா(23).

இவர் மணிப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக் பூஜாரி.

இந்நிலையில் ரக்‌ஷிதாவும், கார்த்திக் பூஜாரியும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு ரக்‌ஷிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ரக்‌ஷிதா தனது காதலில் உறுதியாக இருந்தார்.

அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்திக்கிடம் வலியுறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதையடுத்து ரக்‌ஷிதாவுக்கும், கார்த்திக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனது பெற்றோரின் அறிவுரையை ரக்‌ஷிதா கேட்டார். அவர் கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்தினார்.

மேலும் அவர் செல்போன் எண்ணையும் தனது செல்போனில் ‘பிளாக்’ செய்தார். இதனால் கார்த்திக் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் நேற்று காலையில் ரக்‌ஷிதா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற கார்த்திக், பிரம்மாவர் புறநகர் பகுதியில் வைத்து வழிமறித்தார். மேலும் அவர் காதலை கைவிட்டது குறித்து ரக்‌ஷிதாவிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரக்‌ஷிதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரக்‌ஷிதா பலத்த கத்திக்குத்து காயம் அடைந்தார். இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடி வந்து ரக்‌ஷிதாவை மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள கே.எம்.சி. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரக்‌ஷிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பிரம்மாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வந்தனர். இந்த நிலையில் கார்த்திக், அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று இரவு பிணமாக மீட்கப்பட்டார்.

இதனை அறிந்த போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்த கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், போலீசுக்கு பயந்து கார்த்திக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பிரம்மாவர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள் : வயோதிபர் பலி!!

உப்புவெளி பொலிஸ் பிரிவில் திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் அனுராதபுரம் சந்திக்கு அருகில், 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.

இவ்வாறு இறந்தவர் சம்பூர் கிழக்கு, மூதூரில் வசித்து வந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.