யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை மணியளவில் வன்முறை கும்பல் வாள்கள் சகிதம் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன்போது வீட்டில் இருந்த தளபாடங்களை அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் வாள் வெட்டுக்குழு அங்கிருந்து வெளியேறிச் சென்றபின்னரே தாமதமாக வந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலக பாரம்பரிய தளமான சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீகிரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய யுவதி நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட யுவதி அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி, தனது நண்பர்களுடன் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது இந்தச் செயலைச் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிலாபத்தில், சிறுமியான தனது காதலிக்கு கருக்கலைப்பு செய்யும் சட்டவிரோத மருந்தினை கொடுத்ததாக கூறப்படும் இனைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம்-வெல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞராகும். 15 வயதுடைய சிறுமி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருந்தொன்றை பயன்படுத்தியமையினால் சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிலாபம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபரான சிறுமியின் காதலன் கைது செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய் சுமார் 03 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், சகோதரியுடன் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அந்தப் பகுதியிலுள்ள இளைஞனுடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு காரணமாக கர்ப்பம் அடைந்தமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியை பாலியல் ரீதியான தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு, கர்ப்பத்தை சட்டவிரோதமாக கலைத்த குற்றச்சாட்டில் சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது. அதன்படி, இன்றையதினம்(15) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,101,491 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 38,860 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 310,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 34,010 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) 272,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.2000 நினைவு நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 29 அன்று ரூ. 2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது.
இந்நிலையில், புதிய நாணயத்தாளை சுமூகமாக ஏற்றுக்கொள்வதற்கும் விநியோகிப்பதற்கும் வசதியாக, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் தங்கள் பணத்தை கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
செயல்முறையின் வேகத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும்.
அளவுத்திருத்த செயல்முறை முடிந்ததும், புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகளிலும் தடையின்றி கிடைக்கப்பெறும் என்று மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (13) காலாமானார் .
திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர், மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமூகத்தாலும் நல்ல மனிதராக பார்க்கப்படுகிறார்.
தனது வைத்தியத் திறமையினால் நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நடிகர் விமல் நடித்த ‘களவாணி’ படத்தை மிஞ்சும் வகையில் சேசிங்க் நடந்த நிலையில், தனது காதலிக்கு காருக்குள் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார் என்ஜினீயர் ஒருவர்.
தனது கண் முன்னே மகளுக்கு காருக்குள் வைத்து காதலன் தாலிக் கட்டியதைப் பார்த்து ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் அஜய் (26).
இவருடைய உறவினரான நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தண்டபாணியின் மகளும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவியுமான நந்தினியும் (21) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காதலனைத் திருமணம் செய்துக் கொள்வதில் நந்தினி உறுதியுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டனர். திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நந்தினி. நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்தில் நாமக்கல் வந்து இறங்கியுள்ளார்.
அங்கே ஏற்கனவே திட்டமிட்டபடி, நாமக்கல் சேலம் சாலை சந்திப்பில் காதலன் அஜய் மற்றும் அவரது உறவினர்கள் யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் காரில் காத்திருந்த நிலையில், அவர்களின் காரில் நந்தினி ஏறி உள்ளார்.
இதனிடையே கல்லூரியில் இருந்து பேருந்து நிலையம் வந்த மகளை அழைத்து செல்ல அங்கு வந்த அவரது தந்தை தண்டபாணி தனது கண் எதிரிலேயே மகள் காதலனுடன் காரில் ஏறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
மகள் காதலனுடன் காரில் ஏறுவதைக் கண்டு, அஜய் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உறவினர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரவழைத்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது காருக்குள் சென்ற அஜய் தான் கையில் வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே மோதிரமும் மாற்றி கொண்டனர்.
காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த தண்டபாணி மற்றும் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் காரில் இருந்த அஜய் உள்ளிட்டோரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் பொதுமக்களின் உதவியோடு, அஜய், நந்தினி உள்ளிட்ட 5 பேரை மீட்டு நாமக்கல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அஜய்யை காதலித்து வந்த நிலையில், தான் சுய விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாக நந்தினி தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பினரையும் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ.
சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன் தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் கூலி வேலை செய்து வசித்து வந்தார்.
இதில் மூத்த மகள் யோகஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா, தனது மகள் யோகஸ்ரீயிடம் செல்போன் மற்றும் ரூ.500ஐ கொடுத்து, வைத்திருக்கும்படி கூறினார். அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறப்புக்கு சென்றுவிட்டார்.
பிரியா வீட்டுக்கு திரும்பி வந்து மகளிடம் பணத்தையும், செல்போனையும் கேட்டார். அப்போது யோகஸ்ரீ சரியான பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர் தனது மகளை கண்டித்துவிட்டு வெளியே சென்றார்.
அப்போது யோகஸ்ரீ வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
வெளியே சென்றிருந்த பிரியா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே யோகஸ்ரீ உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ . சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன் தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் கூலி வேலை செய்து வசித்து வந்தார்.
இதில் மூத்த மகள் யோகஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா, தனது மகள் யோகஸ்ரீயிடம் செல்போன் மற்றும் ரூ.500ஐ கொடுத்து, வைத்திருக்கும்படி கூறினார். அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறப்புக்கு சென்றுவிட்டார்.
பிரியா வீட்டுக்கு திரும்பி வந்து மகளிடம் பணத்தையும், செல்போனையும் கேட்டார். அப்போது யோகஸ்ரீ சரியான பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர் தனது மகளை கண்டித்துவிட்டு வெளியே சென்றார்.
அப்போது யோகஸ்ரீ வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
வெளியே சென்றிருந்த பிரியா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே யோகஸ்ரீ உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி க் ஒன்றுக்கு முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸின் முன்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது. மூதூர் சிறாஜியா நகர் பகுதியிலுள்ள வீட்டிலே இந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
முருங்கை அறுவடையில் பாம்மைப் போன்றதான விசித்திரமான ராட்சத முருங்கைக்காய் ஒன்று காய்த்து அறுவடை செய்யப்பட்டுள்ளது.
முருங்கைக் காயானது சுமார் ஆறு அடி நீளமுடையதாகக் காணப்படுகின்றது என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பாம்மைப் போன்ற வடிவில் 6 அடி நீளத்தில் அறுவடை செய்யப்பட்ட முருங்கைக்காயை அந்தப் பகுதியிலுள்ள பார்வையிட்டு வருகின்றனர்.
இந்தியாவின் ஹைதராபாத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குக்கரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் மாநிலத்தின் சைபராபாத் ஸ்வான் லேக் அபார்ட்மெண்ட்டில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 50 வயது ரேணு அகர்வால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரேணு அகர்வால் , வீட்டில் கைகள் மற்றும் கால் கட்டப்பட்ட நிலையில், பிரஷர் குக்கரால் அடித்து தாக்கப்பட்டுள்ளார். ரேணுவின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது கணவரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை அவரது வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் அரங்கேற்றி இருப்பதாக பொலிஸார் நம்புகின்றனர். பெண்ணை கொலை செய்ததுடன் வீட்டில் இருந்த 40 கிராம் தங்கம், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் தப்பியோடியவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு, வைரக் கிரீடம் மற்றும் தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
இதன் மதிப்பு, இந்திய ரூபாயில் 80 லட்சத்துக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. இசை ஞானம் எனக்கு மூகாம்பிகை அம்மன் அளித்த வரம்.
இசை மட்டுமின்றி, இந்த வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்தும் அம்மன் எனக்கு அளித்த பரிசே இளையராஜா, என கூறினார். மூகாம்பிகை அம்மனை, தான் கடந்த 50 ஆண்டுகளாக வழிபட்டு வருவதாக இளையராஜா தெரிவித்தார்.
அவர் இசையமைத்த பல பாடல்கள், அம்மனின் அருளால் உருவாகியவை என்றும், ஒவ்வொரு முறையும் இசையமைக்க அமரும்போது, அம்மன் தனக்குத் துணையாக இருப்பதாக உணருவதாகவும் கூறினார்.
இந்த வைர கிரீடமும், தங்க வாளும், தான் அம்மனுக்குச் செலுத்தும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இந்த காணிக்கை, மூகாம்பிகை கோவிலின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
மொனராகலை, கோவிந்துபுர பகுதியில் பிரிந்து சென்ற காதலியை சுடச் சென்ற காதலன், வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
காதலியின் முகத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயது பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் மொனராகலை நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணி புரிகிறார். அவர் வேறொரு இளைஞனுடன் உறவில் இருப்பதாக முன்னாள் காதலனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் கோபமடைந்த முன்னாள் காதலன், குறித்த பெண் வீட்டிலிருந்து தொழிற்சாலைக்கு செல்லும் போது கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவரது முகத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த நிலையில் பொலிஸார் அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(12) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்று காலை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தவேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.
2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை அட்டவணையை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக்கான முதல் கட்டம், 01.01.2026 வியாழக்கிழமை முதல் 13.02.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். முதலாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை, 14.02.2026 முதல் 02.03.2026 வரை வழங்கப்படும்.
மூன்று தவணைகள்
முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் 03.03.2026 செவ்வாய்க்கிழமை முதல் 10.04.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். முதல் தவணையின் இரண்டாம் கட்டத்திற்கான விடுமுறை, 11.04.2026 முதல் 19.04.2026 வரை வழங்கப்படும்.
இதனையடுத்து, இரண்டாம் தவணை பருவம் 2026.04.20 திங்கட்கிழமை முதல் 24.07.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். அத்துடன், மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் 27.07.2026 திங்கட்கிழமை முதல் 07.08.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
மூன்றாம் தவணை பருவத்தின் முதல் கட்டத்திற்கான விடுமுறை 08.08.2026 முதல் 06.09.2026 வரை வழங்கப்படும். மூன்றாம் தவணை பருவத்தின் இரண்டாம் கட்டம் 07.09.2026 திங்கட்கிழமை முதல் 04.12.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
முஸ்லிம் பாடசாலைகள்
மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதல் கட்டம், 01.01.2026 வியாழக்கிழமை முதல் 13.02.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
முதலாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை, 14.02.2026 முதல் 22.03.2026 வரை வழங்கப்படும். முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், 23.03.2023 திங்கட்கிழமை முதல் 10.04.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
முதல் தவணையின் இரண்டாம் கட்டத்திற்கான விடுமுறை, 11.04.2026 முதல் 19.04.2026 வரை வழங்கப்படும். முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டம், 20.04.2026 முதல் 30.04.2026 வரை இடம்பெறும்.
இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம், 04.05.2025 திங்கட்கிழமை முதல் 26.05.2026 செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும். இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், 01.06.2026 திங்கட்கிழமை முதல் 31.07.2026 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும்.
மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம், 03.08.2026 திங்கட்கிழமை முதல் 02.09.2026 வரை நடைபெறும். மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், 07.09.2026 திங்கட்கிழமை முதல் 04.12.2026 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும்.
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னைநீராவி பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.