வவுனியா ஓமந்தை காட்டில் அரியவகை விலங்கு கண்டுபிடிப்பு!!

அரியவகை விலங்கு..

வவுனியா, ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைக் காட்டுப் பகுதிக்கு கடந்த வாரம் சென்ற ஒருவர் Dasia halianus என்ற இலங்கைக்கே உரித்தான அரணை இனம் ஒன்றை மரத்தில் அவதானித்த நிலையில் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

இலங்கைக்கு மட்டுமே உரித்தான தாசியா ஹாலியானஸ் Dasia halianus எனும் உயிரியல் பெயருள்ள இந்த தனித்துவ அரணை இனம் வன்னிக் காடுகளில் இருந்து வந்துள்ள போதும், மிக அரிய வகை உயிரினமாகவே உள்ளது. பெரும்பாலும் மரங்களில் இவ் உயிரினம் வாழ்ந்து வருகின்றது.

நாட்டின் ஒரு அரியவகை உயிரினமாக இது இருப்பதானால் 1970 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இலங்கையின் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் இதன் படம் காணப்படுவதை அவதானிக்கலாம். தற்போது இந்த அரிய வகை அரணை இனத்தின் புகைப்படம் சமூக வலைத்தலத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த உயிரினம் அண்மையில் வவுனியா – ஓமந்தைக் காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த அரியவகை உயிரினம் முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலையிலும் காணப்படுவதாக கருதப்படுகின்றது.

எனினும் அங்கு காணப்பட்ட இதுபோன்ற உயிரினங்களை வகைப்பிரித்து ஆய்வு செய்த முடிவில் இது இலங்கைக்கு மட்டும் உரித்தானது என உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் 8 செ.மீ நீளமுடைய இந்த தனித்துவம் மிக்க உயிரினம் மற்றைய அனைத்து சகோதர இனங்களிடமிருந்தும் வேறுபட்டது.

உடலின் நடுப்பகுதியில் (22-24) குறைந்த எண்ணிக்கையிலான வரிசைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட முதுகெலும்பு வரிசை செதில்களும் உள்ளன. இந்த உயிரினம் பல்லேகம, தம்புல்ல, பொலன்னறுவ, பக்கமுன, ஹொரன, அனுராதபுரம், கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட மண்டலத்திலிருந்து அரிதாக அறியப்பட்டவை.

இந்த உயிரினம் அரிதாக காணப்பட்ட நிலையில் 1970 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2 ரூபாய் நாணயத்தாளில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்!!

விபத்து..

வவுனியா உமாமகேஸ்வரன் சந்தியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கடை ஒன்றிற்குள் புகுந்து மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியை நோக்கி கோவில்குளம் உமாமகேஸ்வரன் வீதியால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேரே இருந்த பலசரக்குக் கடை ஒன்றிற்குள் புகுந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சிறிய காயத்திற்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்தானது இன்று (02) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. குறித்த விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் சிறிய சேதத்திற்கு உள்ளானதுடன், வர்த்தக நிலையத்தின் பொருட்கள், கண்ணாடிகள் உடைந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு மோட்டார் வண்டியை செலுத்தியவர் ம து போ தை யி ல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த நபரை கைது செய்து,

விபத்து ஏற்படுத்திய மோட்டார் வண்டியையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் சென்று மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியான விசேட அறிவித்தல்!!

விசேட அறிவித்தல்..

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக 9ம் திகதி ஆரம்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக ஆரம்பித்தல் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது. பாடசாலை விடுமுறை இரண்டு வாரங்களுக்கு மேலும் நீடிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 

முதல் திருமண நாளை கொண்டாட தயாரான கணவன் : மனைவிக்காக காத்திருந்தவருக்கு வந்த அதிர்ச்சி செய்தி!!

அஞ்சு தேவ்..

இந்தியாவில் முதலாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சுதீஷ். இவருக்கும் அஞ்சு தேவ் (26) என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது.

அஞ்சு சில மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி திருமண நாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் சுதீஷ் செய்திருந்தார்.

இந்த நிலையில் அஞ்சு தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் காரில் கணவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த லொறி மீது மோதியது.

இதில் அஞ்சு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற மூவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நேரம் போய் கொண்டே இருந்த நிலையில் மனைவி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையில் சுதீஷ் இருந்த போது அவருக்கு பொலிசார் போன் செய்தனர்.

போனில் அஞ்சு உயிரிழந்த செய்தியை சொன்ன போது சுதீஷ் அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து அஞ்சுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இ ரு ம கள்க ளைக் கொ ன் று இ ள ம் தா யா ர் எ டுத்த அ திர்ச்சி மு டிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவ ட்டத்தில் இ ரு ம கள்களைக் கொ ன் று தா யா ர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் 31 வயதான ரஞ்சித் குமார். மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசி(28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு அட்சயா (5)அனுசுயா (3) ஆகிய 2 பெ ண் கு ழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் ரஞ்சித் குமார் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு ம ரணமடைந்தார்.

இதனால் ராசி தனது கு ழந்களுடன் தனியே வசித்து வந்தார். க ணவர் இ றந்த து யரத்திலிருந்து மீள முடியாமல் ராசி ம னம் உ டைந்த நிலையில் சோ கத்துடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை ராசி தனது இரு கு ழந்தைகளுக்கும் தூ க்க மா த்திரை கொ டுத்து வி ட்டு தா னும் தூ க்க மா த்திரையை சாப்பிட்டார்.

மேலும் ராசி தனது உ டலில் ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொ ண்டார். அ வரது அ லறல் ச த்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டினர் சென்று பார்த்த போது ராசியும் அ வரது கு ழந்தைகளும் ச டலமாக கி டந்தது தெரிந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீ ட் டு ப ரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரை இழந்த பெண், தனது ம கள்கள் இ ருவரையும் கொ ன்றுவி ட்டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாமே பொய் : தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

பிரியதர்ஷினி..

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த்துக்கும், பிரியதர்ஷினிக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும்.

அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, மூன்றாவது முறை கேட்கையில் சம்மதமில்லை என்று கூறி, ஆனந்தின் கைகளை தடுத்தார்.

தான் விரும்பும் ஒருவர், ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று கூறிய அவர் அதுவரை பொறுங்கள் என கூறி, எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டார்.

இதை மறுத்து தடுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை தாக்க முற்பட்டனர். இவை ஒருபுறம் நடக்க மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த ஆனந்தோ, செய்வதறியாமல் சங்கடத்தில் தவித்தார்.

இந்நிலையில் மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், அவர் காதலனை தேடி சென்னை வந்தததாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், தான் எங்கும் செல்லவில்லை, தனது பெற்றோருடன் தான் இருப்பதாக அப்பெண் விளக்கம் அளித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததாகவும் அதனாலேயே பொய் கூறி திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 863 பேர் சுய தனிமைப்படுத்தலில்!!

863 பேர்..

வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கொவிட் 19 தாக்கம் மற்றும் தற்போதைய நிலமை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது,

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களுடன் வேலை செய்த மற்றும் தொடர்புகளை பேணியவர்கள்,

பிற மாவட்டங்களில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் சென்று வந்த இடங்களுக்கு சென்று வந்தோர் என 347 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா வடக்கில் 182 குடும்பங்களைச் சேர்ந்த 470 பேரும், செட்டிகுளம் பகுதியில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேரும், வவுனியாவில் 153 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேரும் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது : சுகாதார அமைச்சு!!

கொரோனா..

இலங்கையில் இரண்டாவது முறையாக பரவி வரும் கொரோனா வைரஸ் வகையானது மிக வேகமாக பரவக் கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த முறை கொரோனா வைரஸ் பரவிய போது கொரோனா தொற்றாளர் ஒருவரின் தும்மல் மற்றும் இருமலில் இருந்து வெளியே எச்சிலில் ஒரு லட்சம் வைரஸ் இருந்திருக்குமாயின்,

அது தற்போது மில்லியன், பில்லியன் எண்ணிக்கையாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறு நீரக நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகம் இருப்பதால், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால், 011-7966366 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் சுகாதார அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் : தகாத வார்த்தைகளால் திட்டிய நபர்!!

இளம் பெண்..

கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது அந்த பெண்ணுக்கு ஊ கூச்சலிட்டு தகாத வார்த்தையால் திட்டி குழப்பம் ஏற்படுத்திய நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று இரவு அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அம்பியுலன்ஸ் வந்த சந்தர்ப்பத்தில், அயலவர் ஒருவர் “அவர் பெண் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் ஊ கூச்சலிட்டுள்ளார்.

இந்த நபர் இலங்கையின் சமாதான நீதவான்களில் ஒருவராகும் என குறிப்பிடப்படுகின்றது. இளம் பெண்ணை அழைத்து செல்ல வந்த ஏனைய அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தொற்றாளர்களை அவமதிக்க வேண்டாம். உயர் பதவியில் இருந்துக் கொண்டு இவ்வாறு செயற்படுவதென்பது அருவருக்கதக்க ஒரு விடயமாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

இலங்கையில் சமூக பரவல் நிலைமையில் கொரோனா : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் பரவல் தற்போது சமூக பரவல் நிலைமையில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை குறித்து அறிவிக்க வேண்டியது தமது சங்கம் அல்ல எனவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவே இதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலைமையில் நாடு மிகவும் பாரதூரமான ஆபத்தில் உள்ளது. மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கலாம்.

நாட்டில் வாழும் மூத்த பரம்பரையினருக்கு பெரிய ஆபத்து. இலங்கை தற்போது இத்தாலி எதிர்நோக்கிய நெருக்கடியான நிலைமைக்கு அருகில் உள்ளது. தொற்று நோய் அல்லாத நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

மண வாழ்க்கையை பல கனவுகளோடு தொடங்கிய புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த துயரம்!!

யன் – ப்ரியா..

இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்களூரை சேர்ந்தவர் ரயன் (26). இவருக்கும் ப்ரியா (26) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இருவருமே தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த தம்பதி ஒன்றாக பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அப்படி பணிமுடிந்து சில தினங்களுக்கு முன்னர் ரயன் மற்றும் ப்ரியா பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த லொறி பைக் மீது மோதியது.

இதில் ரயன் மற்றும் ப்ரியா ஆகிய இருவரும் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ப்ரியா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரயன் உயிரிழந்தார். தங்கள் மண வாழ்க்கையை பல்வேறு கனவுகளோடு தொடங்கிய ரயன் – ப்ரியா ஜோடி இளம்வயதில் உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தாரை பலத்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

வவுனியாவில் பக்கோ கனகரக வாகனம் மோதி விபத்து!!

விபத்து..

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் பக்கோ கனகரக வாகனமும் வான் ஒன்றும் இன்று (02.11.2020) மோதி விபத்துக்குள்ளானது.

திருகோணமலையில் இருந்து ஹொரவப்பொத்தான வீதிவழியாக யாழ்ப்பாணம் நோக்கி நோயாளி ஒருவரை ஏற்றிவந்த கயஸ் ரக வான்மீது கோவில்குளம் உமாமகேசுவரன் வீதியால் வந்த பக்கோ கனகரக வாகனம் உமாமகேசுவரன் சந்தியில் வானுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் கயஸ்ரக வான் கடும் சேதத்திற்குள்ளானதுடன் ஒருவர் சிறு காயத்திற்குள்ளானார். விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த ப ரிதாபம்!!

ஷோபனா…

தமிழகத்தில் திருமணமான 2 மா தத்தில் பு துப் பெ ண் த ற் கொ லை செ ய் து கொ ண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள குளிர்பிரதேசமான கொடைக்கானலை சேர்ந்தவர் கோபால்.

அவருடைய ம க ள் ஷோபனா (21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30ம் திகதி திருமணம் நடந்தது.

அஜித்குமார் கொடைக்கானலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதனால் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன்- மனைவி இடையே த க ரா று ஏ ற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ம னமு டைந்த ஷோபனா வி ஷ ம் கு டித்து ம ய ங் கி கி ட ந் தா ர்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீ ட் டு சி கிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷோபனாவை ப ரிசோ தித்த மருத்துவர்கள் அ வர் ஏ ற்கனவே இ றந்துவி ட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த ஷோபனாவின் தந்தை கோபால் அ தி ர் ச் சிய டை ந் தா ர், பின்னர் அ வ ர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இது தொடர்பில் பு கா ர் அளித்தார். அதன்பேரில் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை ந டத்தி வருகின்றனர்.

 

இலங்கையில் 90 வீத கொரோனா தொற்றாளர்களுக்கு அறிகுறிகள் இல்லை : அதிர்ச்சித் தகவல்!!

கொரோனா..

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் 90 வீதமானவர்கள் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் வகையை விடவும் தற்போதைய வைரஸ் வித்தியாசமானதாகும். இந்த வைரஸ் நினைப்பதனை விடவும் வேகமாக இன்னும் ஒருவருக்கு தொற்ற கூடிய வாய்ப்புகள் உள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செயற்படுத்திய காலத்தினுள் சில நோய் அறிகுறிகள் காணப்பட்டால், 0117966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்களில் இருந்து தவறிய பொது மக்கள் : ஜனாதிபதி குற்றச்சாட்டு!!

ஜனாதிபதி குற்றச்சாட்டு..

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நாடு தற்போதைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி பணிக்குழு உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கொரோனா வைரஸின் பரவலை அரசாங்கத்தால் மட்டுமே கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது என்றும், அந்த பொறுப்பில் இருந்து அவர்கள் தவறியுள்ளமையால் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, பலர் கொழும்பிலிருந்து காலி மற்றும் எல்ல போன்ற இடங்களுக்கு சென்றதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது மிகவும் பொறுப்பற்ற செயல் என்று கூறிய அவர் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை அரசாங்கத்தால் மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்போரை யாரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூடாது. இதன்போது அவர்களுக்கும் வைரஸ் பரவலாம். இதற்கு பதிலாக சுகாதார அதிகாரிகளை தொடர்புகொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

-தமிழ்வின்-

இளம்பெண்ணிடம் மயங்கி அவரின் இடத்துக்கு சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இளைஞனை..

இந்தியாவில் இளைஞனை ம யக்கி ஹொட்டலுக்கு வரவழைத்த இளம்பெண் தனது கும்பலுடன் சேர்ந்து அவரிடம் இருந்த பணம், செல்போன், காரை கொ ள்ளயடித்த சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

கேரளாவின் கொத்தமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் முவட்டுபுழா என்ற ஊரை சேர்ந்த இளைஞனிடம் பேசி அவரை ம யக்கி சில தினங்களுக்கு முன்னர் இரவு சொகுசு ஹொட்டலுக்கு வரவழைத்தார். அங்கு வந்த அந்த இளைஞனுக்கு அ திர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அங்கு முகமது யாசின், அஸ்வின், ஆசிப், ரிஸ்வான் என நான்கு பேர் இருந்தனர். பின்னர் இளம்பெண் ஆர்யா அந்த இளைஞனை க ட்டாயப்படுத்தி நி ர் வா ண மா க தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதையடுத்து புகைப்படத்தை வெளியில் கசியவிடாமல் இருக்க ரூபாய் மூன்றரை லட்சம் கேட்டு அனைவரும் மி ரட்டினர். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என இளைஞன் கூறிய நிலையில் அவரின் கார், மொபைல் போன், ஏடிஎம் கார்டை திருடிய கும்பல் அந்த இளைஞனையும் காரில் ஏற்றி கொண்டு இரவு முழுவதும் சாலையில் சுற்றி வந்தது.

அப்போது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 35,000 பணத்தை எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என இளைஞன் கூறிவிட்டு காரில் இருந்து கீழே இறங்கி தன்னை கா ப்பாற்றுமாறு க த்தியு ள்ளார்.

அவர் கு ரலை கேட்ட ரோந்து பணியில் இருந்த பொலிசார் அந்த கும்பலை சு ற்றிவ ளைத்து பி டித்தனர், மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.