வவுனியாவில் வடமாகாணத்தினுள் கட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் : மாகாணங்களுக்கிடையில் தடை!!

பேரூந்து சேவைகள்..

வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவை இடம்பெறுவதுடன் மாகாணங்கிடையிலான பேரூந்து சேவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியன தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக உள்ளுர் சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதுடன் வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்கு 10க்குட்ட பேரூந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளன. மேலும் மாகாணக்கிடையிலான சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா பேரூந்து நிலையம் மக்களின் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1083 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 12 பேர் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்றுள்ளவர்கள் 12 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 10 பேர் பட்டித்தோட்டம் பகுதியில் கட்டிட வேளையில் ஈடுபட்ட போது தொற்று உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

ஏனைய இரண்டு பேரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்பு உள்ளவர்கள். இவர்களில் 11 பேர் இரணவில சிகிச்சை நிலையத்திற்கும், ஒருவர் கந்தக்காடு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 9 பேர் தமது சிகிச்சைகளை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 1083 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் 767 பீ.சி.ஆர் பரிசோதனைகள் யாழ் . போதனா வைத்தியசாலையிலும், 316 பீ.சி.ஆர். பரிசோதனைகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த பரிசோதனைகளின் போதே குறித்த 12 பேரும் கொரோனா தெற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

தற்போது தொற்று உடையவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற அடிப்படையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் இருந்து இங்கு வந்து தங்கி இருந்த நிலையில் 173 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தொற்றுள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்த 33 பேருக்கு பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் கொழும்பில் தொற்று உள்ளவர் என அடையாளம் காணப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், முசலி பகுதியில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து வந்து தங்கி இருந்தவர்களுக்கும் நாளை பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதோடு மாந்தை மேற்கு மூன்றாம் பிட்டி பகுதியிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் 22 வது கொரோனா மரணம் : 27 வயது இளைஞன் உயிரிழப்பு!!

கொரோனா மரணம்..

இலங்கையில் 22ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.

பாணந்துறையை சேர்ந்த 27 வயதான இளைஞன் த ற் கொ லை செ ய் து கொ ண்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

த ற் கொ லை கா ரணமாக அவர் உ யிரிழந்த போதும், அவரது உடலில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் போ தை ப் பொ ரு ளு க் கு அ டிமையானவர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

கணவனுக்கு தெரியாமல் வேறொரு நபரை 2 ஆம் திருமணம் செய்த மனைவி : பின்னர் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் குழந்தைகளை தவிக்க விட்டு தாய் ஒருவர் காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல்(44). இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆஷா திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆஷாவிற்கு அங்கு, இன்டீரியர் டெக்க்டரேட்டராக வேலை செய்து வரும் அபிஷேக் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் ஆஷா திடீரென்று வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட, குமரவேல் அங்கு சென்று ஆஷாவை அடிக்கடி பார்த்து நட்பை வளர்த்து வந்துள்ளார்.

இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில், நெருங்கி பழகும் அளவிற்கு மாற, இருவரும் உடனே திருமணம் செய்து கொண்டுள்ளனர். அபிஷேக் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஆஷாவுடன் நெருங்கி பழகி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால், இவர்களின் திருமணம் விவகாரம் குமரவேலுக்கு தெரியாமலே இருந்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த 2-ஆம் திகதி பணிக்கு சென்ற ஆஷாவை காணவில்லை.. இதனால் பதறிப்போன குமரவேல் மனைவியை காணோம் என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ஆஷாவை தேட ஆரமபித்தனர்.

3

அப்போதுதான் அபிஷேக் ஆஷாவை கல்யாணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதில் மனைவி உயிருடன் இருக்கும்போதே அபிஷேக்கும், கணவனிடம் விவாகரத்து பெறாமலேயே ஆஷாவும் இந்த கல்யாணத்தை செய்து கொண்டுள்ளனர்.

மனைவியை மீட்டுத்தர கோரி குமரவேல் காவல்நிலையத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால் அபிஷேக் ஒரு பொலிஸ்காரரின் மகன் என்பதால் இந்த விவகாரத்தில் பொலிசார் சற்று மெத்தனமாக இருப்பதாகவும் குமரவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்னொரு பக்கம் ஆஷாவை சந்தித்து தன்னுடன் வாழ வருமாறு குமரவேல் கூப்பிட்டுள்ளார். ஆனால், ஆஷாவோ, என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார், என்னை விட அவருக்கு வயது அதிகம், அதை சொல்லாமல் என்னை திருமணம் செய்து கொண்டார்.

எனக்கு அபிஷேக் தான் முக்கியம், அவருடன் தான் வாழுவேன். குழந்தைகளை கொண்டு வந்து என்னிடம் தந்துவிட்டு போகட்டும். அல்லது நீதிமன்றத்திற்கு சென்று நான் குழந்தைகளை பெற்று கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

காதலன், அப்பாவுடன் சேர்ந்து கணவர், மச்சினன், மாமனார் என அனைவரையும் போ ட்டுத் த ள்ளிய பெண்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரின் குடும்ப சொ த்திற்கு ஆசைப்பட்ட மனைவி, அப்பாவுடன் சேர்ந்து கணவர், மாமனார் மற்றும் கணவரின் தம்பி ஆகியோரை கொ லை செ ய் து ள் ள ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி(70). இவர் மறைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவி ஆவார். 70 வயதாகும் பத்மினிக்கு செந்தில், ராஜு என, 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே படப்பையில் வசித்து வந்தனர்.

ஆனால், சொத்து சம்பந்தம் காரணமாக இவர்கள் இருவருக்கும் அ டிக்கடி பி ரச்சனை ஏற்பட்டு வந்தது, பத்மினிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. செந்தில்குமார் பில்டிங் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.

இவருக்கும் இவரது தம்பி ராஜ்குமாருக்கும் சுப்பராயன் அப்போது சொத்துக்களை பாகம் பிரித்து தந்துள்ளார். இதில், ராஜ்குமாருக்கு கொஞ்சம் கூடுதலாக சொத்துக்களை தந்துவிட்டார்.

இதனால் செந்தில்குமாரும் அவரது மனைவி மேனகாவும் இதை அறிந்து அ திர்ச்சி அடைந்தனர். அதன் பின் தன்னுடைய கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் என்பவருடன் சேர்ந்து சொந்த தம்பியையே அண்ணன் ராஜ்குமார் கொ லை செ ய் தா ர்.

இதற்கு மேனகாதான் மூளையாக இருந்துள்ளார். இ ந்த கொ லை வ ழக்கில் செந்தில்குமார் சி றைக்கு சென்றுவிட, இந்த சமயத்தில் மேனகாவுக்கு கார் டிரைவருடன் நெ ருக்கம் ஏற்பட்டுள்ளது.

த ண்டனை முடிந்து வெளியே வந்த செந்தில்குமார், மேகனாவின் செயலை கண்டு அ திரந்து போனார். க ள்ளக் கா தலுக்கு கணவன் த டையாக வந்ததால், கணவனையும் கார் டிரைவருடன் சேர்ந்து கொ லை செ ய் ய பி ளா ன் செ ய்தார்.

அதன்படி கடந்து 2018-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செந்தில்குமாரை ஏமாற்றி செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி அருகில் உள்ள பசுமலை தாங்கல் என்ற இடத்துக்கு வரவழைத்து கொ லை செ ய் து, அ ங்கேயே பு தைத்தனர்.

ஆனால் மாமனார் இருக்கும்வரை சொத்து கிடைக்காது என்று புருஷனை கொ ன் ற பிறகுதான் தெரிந்தது. அதனால், மாமனாரையும் கொ ல் ல மு டிவு செ ய்தார் மேனகா.

அதன்படி, காதலன் மற்றும் தன்னுடைய அப்பா அருணுடன் சேர்ந்து மாமனாரையும் கொ ன் று பு தை த் தா ர். இ ந்த கொ லை செ ய் த பிறகுதான் தெரிந்தது, மாமியார்தான் பத்மினியை க ட த் தி னா ல் சொத்து கிடைக்கும் என்று நினைத்து, கடந்த 2018-ல் அவரை க ட த் தி செ ன்றார்.

ஆனால் சிசிடிவி கமெரா உதவியுடன் அயனாவரம் பொலிசார் நடவடிக்கை எடுத்து பத்மினியை மீ ட் ட ன ர். அப்போதுதான், பத்மினி தனது மகன் கா ணவில்லை என்று நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மணிமங்கலம் பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை செய்து வந்தனர்.

அப்போதுதான் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணா பொலிசாரிடம் சி க் கி னா ர். கொ லை க ளை மேனகாவுடன் சேர்ந்து செ ய் த தை ஒப்புக் கொண்டதுடன், பு தைக்க ப்பட்ட செந்தில்குமாரின் ச டலம் தோ ண்டி எ டுக்கப்ப ட்டது.

இந்த கொ லை க் கு உ தவியாக இருந்த ஹரிகிருஷ்ணன், அன்பு, உள்ளிட்ட 3 பேரையும் பொலிசார் கை து செய்தனர். இதில் மேனகாவின் அப்பா அருண் சிறையில் இருந்து வந்துவிட, ராஜேஷ்கண்ணா மீது கு ண்டர் ச ட்டம் பா ய்ந்து ள்ளது. ஆனால் எல்லா கொ லைகளு க்கும் கா ரணமான மேனகா த லை ம றை மா கி வி ட் ட தா ல், பொ லிசார் அவரை தீ விரமாக தே டி வ ருகின்றனர்.

 

15 வயதில் முதல் திருமணம் : 17 வயதில் இரண்டாம் திருமணம் செய்த சிறுமி : தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 15 வயதில் முதல் திருமணம் செய்து கொண்ட சி று மி, தற்போது 17 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தலைசுற்ற வைக்கும் ச ம்பவம் நடந்துள்ளது.

கோவையை சேர்ந்த 17 வயது சி றுமியை அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த உறவினர் ஒருவருக்கு கடந்த 2018 – ஆம் ஆண்டு தி ருமணம் செய்து வைத்துள்ளனர்.

சி றுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சி றுமிக்கு 25 வயது இளைஞர் சிவாவுடன் தொ டர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் சிறு மியின் க ணவருக்குத் தெரிந்து அவர் க ண்டித்து ள்ளார்.

இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்ட சி றுமி பெற்றோர் வீட்டுக்கு வந்த நிலையில் பிறகு மா ய மா னா ர். இதுகுறித்து சி றுமியின் பெற்றோர் கொடுத்த பு கா ரி ன் பேரில் காவல் துறையினர் அ வரை தே டி வ ந்தனர்.

இந்த நிலையில் சி றுமி திண்டுக்கல் மாவட்டம் மச்சூர் பகுதியில் இருப்பதை அறிந்த பொலிசார் சி றுமியை ப த்திரமாக மீ  ட்ட ன ர். சி றுமியை க ட த் தி ச் சென்ற சிவா, அவரை இரண்டாவது தி ருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இரண்டாவது தி ருமணம் செய்து கொண்ட சி றுமிக்கு தற்போது 17 வ ய து ஆகிறது.

இதனையடுத்து சி றுமிக்கு 15 வ யதில் தி ருமணம் செய்து வைத்த பெ ற்றோர் மற்றும் க ணவர் மீ து வ ழக்குப் பதியப்பட்டது. சி றுமியைக் க ட த் தி ச் செ ன்று இரண்டாவது தி ருமணம் செய்ததாக சிவாவை பொலிசார் கை து செய்துள்ளனர்.

 

அதீத கடவுள் பக்தி : நிறைவேறிய பல ஆண்டு கனவு : உயிரை கடவுளுக்கு காணிக்கையாக்கிய இளைஞன்!!

அதீத கடவுள் பக்தி..

தமிழகத்தில் வேலை கிடைத்தால் நேர்த்தி கடனாக உ யி ரை த ருவதாக வேண்டி, வங்கி மேலாளர் வேலை கிடைத்த 15 நாட்களில் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டது அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்தவர் நவீன் (32). இவருக்கு சிறு வயது முதலே கடவுள் பக்தி அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் என்ஜினியரிங் படித்து முடித்தபின்னர் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார்.

வங்கி தேர்வுகளும் எழுதிய நிலையில் அவருக்கு எந்த வேலையும் கிடைக்காத காரணத்தால், இறைவனிடம், வேண்டுதலாக தனக்கு வேலை கிடைத்தால் உ யி ரை காணிக்கையாக தந்து நேர்த்தி கடனை செலுத்துவதாக வேண்டியுள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக கிடைக்காத வேலை தற்போது கிடைத்துள்ளது. வங்கி உதவி மேலாளராக கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணி கிடைத்துள்ளது.

வேலைக்கு சேர்ந்து 15 நாட்களுக்கு பின் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தவர் அங்கிருந்து மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பரையும் பார்த்து பேசிவிட்டு அதன் பின் தனது சகோதரரிடம் தான் ஊருக்கு வந்துள்ளதாகவும் தொலைபேசியில் கூறியுள்ளார்.

பின்னர் பேருந்தில் நாகர்கோவில் வந்திறங்கி அங்கிருந்து புத்தேரி பகுதியில் உள்ள ர யிலில் பா ய் ந் து த ற் கொ லை செ ய் து ள் ளா ர். அதற்கு முன் அவர் தனது தாய், தந்தைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அதில் தான் பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத காரணத்தால் வேலை கிடைத்தால் காணிக்கையாக தனது உ யி ரை த ருவதாக இறைவனிடம் வேண்டுதல் வைத்ததாகவும்,

தற்போது நினைத்த வேலை கிடைத்திவிட்டதால் நேர்த்தி கடனை செலுத்தி இறைவனிடம் செல்வதாகவும் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து நவீனின் ச ட ல த் தை கை ப் ப ற் றி ய பொ லிசார் இது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றன.

மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை!!

கட்டுப்பாடுகள்..

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாகியுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு செயற்பாடாக மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் பொருள் விநியோகம் தவிர்ந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஏற்கனவே மேல் மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஊரங்குச்சட்டம் நவம்பர் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி இன்று மாலை அறிவித்தார்.

அத்துடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் முன்னர் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் நாளை முதல் மேற்கொள்ளப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

 

வவுனியா நெடுங்கேணியில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதி!!

நெடுங்கேணியில்..

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நெடுங்கேணி, ஒலுமடு, நைனாமடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை கடந்த 25 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

இதனடிப்படையில், கொரோனா தொற்றாளர்களுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்த நெடுங்கேணியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றையும, இரு உணவங்களையும், நைனாமடுவில் உள்ள ஒரு உணவகத்தையும்,

ஒரு பலசரக்கு விற்பனை நிலையத்தையும் தவிர, ஏனைய வர்த்தக நிலையங்களை நாளை (02.11.2020) காலை தொற்று நீக்கம் செய்த பின்னர் மதியத்திற்கு பின் திறக்குமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

பூட்டப்பட்டுள்ள 5 வர்த்தக நிலையத்திலும் கடமையில் இருந்தவர்களுக்கு இரண்டாம் கட்ட பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அதன் முடிவைப் பொறுத்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நெடுங்கேணியில் உள்ள ம து பா ன சா லை மற்றும் இரு கள்ளு தவறணைகளையும் தொடர்ந்தும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : “இலங்கையின் நலனில் இருந்து தான் முடிவுகளை எடுப்போம்”!!

வெளிநாடுகளுடனான தொடர்பின் போது எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை எடுப்போம் என கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா, மன்னார் வீதியில் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் உடன் இணைந்து அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகை அச்சுறுத்தும் கொரோனா இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தலைமைத்துவத்திலும், பிரமதர் மஹிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டலிலும் முதல் கட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.

அவர்கள் மீது இருந்த நம்பிக்கையாலும், பாதிப்புர்க்கள் குறைவாக இருந்தமையாலும் மக்கள் கவனயீனமாக இருந்து விட்டார்கள். இனி வரும் காலத்தில் இன்னும் கூடிய நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவை நிச்சயம் நாங்கள் கட்டுப்படுத்துவோம.

அதேநேரம் பாதிப்புக்குள்ளானவர்கள் அதில் இருந்து மீண்டு எழும் வகையிலும் நாம் பல திட்டங்களை முன்வைத்துள்ளோம்.
இதன்போது, அமெரிக்கா மற்றும் சீனா நாட்டு இராஜதந்திரிகள் இங்கு வந்து சென்றுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள். அதேபோல் எமது நாடும் எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை எடுப்போம்.

எங்களைப் போன்ற நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றன. எமது மக்களினதும், நாட்டினதும் நலன்களை முன்னிறுத்தியே உதவிகளைப் பெற்றுக் கொள்வோம்.

எமது நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் அல்லாது எமது நாட்டு நலன்களை முன்னிறுத்தி தனித்துவமாவே செயற்படுவர் எனத் தெரிவித்தார்.

வவுனியா புளியங்குளத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 15 பேருக்கும் சுய தனிமைப்படுத்தல்!!

புளியங்குளத்தில்..

வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 15 பேரும் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் – 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது வெளி மாவட்டவர்களுடன் இணைந்து வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் உள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதாக நேற்று (31.10) பூசகர் உள்ளிட்ட 15 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்களிடம் தனிமைப்படுத்தல் சட்ட மீறலின் கீழ் வாக்கு மூலத்தைப் பெற்ற பொலிசார் கடும் எச்சரிக்கையின் 15 பேரையும் விடுவித்தனர். அத்துடன் குறித்த 15 பேரையும் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில், கனகராயன்குளம் பகுதியில் இருவரும், வவுனியாவில் 8 பேரும், புளியங்குளத்தில் 5 பேரும் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரின் அலுவலகம் திறந்து வைப்பு!!

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு..

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரின் அலுவலகம் கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள இவ் அலுவலகத் திறப்பு விழா வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.

பௌத்த மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்ற இத் திறப்பு விழா நிகழ்வில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் வன்னிக்கான இணைப்பாளர் பாலித, முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால, மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,

பிரதேச செயலாளர்களான இ.பிரதாபன், க.சிவகரன், ந.கமலதாசன், ஜனக்க, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வா, வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, அரச அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் : தொடரும் மரணங்கள்!!

கொரோனா..

இலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் வெலிசர வைத்தியசாலையில் குறித்த மரணம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 40 வயதுடைய ஆண் எனவும் அவர் மஹர பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது. அதிக இரத்த அழுத்தம் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சினை காரணமாக கடந்த 23ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலாவது PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றாளர் இல்லை என தெரியவந்துள்ளது. எனினும் நேற்று உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல்கள் சற்று முன்னர் அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பம்!!

சுஷ்மிதா..

தமிழகத்தில், பிரசவ நேரத்தில் வலி அதிகமாக இருக்குமோ என்று எண்ணி 5 மாத கர்ப்பிணி பெண் மண்எண்ணெய் ஊற்றி த ற் கொ லை செ ய் து கொ ண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். கார்பெண்டர் வேலை செய்து பவரும் இவருக்கு சுஷ்மிதா என்ற மனைவி உள்ளார். சுஷ்மிதா தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பமான சமயத்தில் இருந்தே சுஷ்மிதாவுக்கு வயிற்று வலி அடிக்கடி வந்துள்ளது.

இதை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லவும், இந்த மாதிரி நேரததில் அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் பொறுத்து கொள்ளும்படியும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பிரசவ வலிக்கு பயந்துபோன சுஷ்மிதா, சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றார். பிறகு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார்.

உடல் முழுவதும் தீப்பிடித்து கொண்டு பற்றி எரிந்தது. வலி தாங்காமல் சுஷ்மிதா அலற, அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும ஓடிவந்தனர்.

நெருப்பில் வெந்து கொண்டிருந்த மகளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் மருத்துவர்கள் போராடியும் சுஷ்மிதாவை காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

4 ஆண்டு காதல் : காதலனின் முடிவால் பரிதாபமாக உயிரைவிட்ட இளம் பெண்!!

ஜாய்ஸ் பிரியா..

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், மனமுடைந்து த ற் கொ லை செ ய் து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்த தம்பதி பன்னீர்-மரியா. இவர்களுக்கு ஜாய்ஸ் பிரியா என்ற மகள் இருந்தார்.

ஜாய்பிரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வந்தார். இவரும் பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பரத், ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜாய்ஸ் பிரியா தனது வீட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த உமராபாத் பொலிசார் இ றந்தவரின் உ ட லை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனது மகளை 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் பரத் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஜாய்ஸ் பிரியாவின் தந்தை பன்னீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பொலிசார் தலைமறைவான பரத்தை தேடி வருகின்றனர்.

 

ஒருவர் தும்மினால் கொரோனா வைரஸ் துகள்கள் மில்லியன் கணக்கானவையாக பரவும் அபாயம்!!

கொரோனா வைரஸ்..

கொவிட்-19 வைரஸ் தொற்று நாடு முழுவதிலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நிபுணத்துவ மருத்துவர் சஞ்சீவ முணசிங்க தெரிவித்துள்ளார். கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகள் குறித்து விளக்கம் அளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் பரவிய வைரஸ் தொற்றின் போது ஒருவர் தும்மினால் நூற்றுக்கான வைரஸ் துகள்கள் பரவியிருந்தால் இம்முறை இந்த வைரஸ் துகள்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கானவையாக பரவும் அபாயம் உண்டு என தெரிவித்துள்ளார்.

ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீடுகளிலேயே இருப்பது மிகவும் உசிதமானது எனவும், இதன் மூலம் வைரஸ் தொற்று நாடு முழுவதிலும் பரவுவதனை தடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோய் அறிகுறிகள் காணப்பட்டால் கூடிய சீக்கிரம் வைத்தியசாலைக்கு அறிவித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனவும், அங்கும் இங்கும் செல்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.