5 வயது மகளின் புத்திசாலித்தனத்தால் உ யிர் காப்பாற்றப்பட்டேன் : தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு!!

தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு..

வலிப்பு நோயால் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் இருந்த தந்தையை 5 வயது சிறுமி சமயோசிதமாக செயல்பட்டு கா ப்பாற்றிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

லண்டனில் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருபவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட தமிழர் சாம் சூரியகுமார்.
தற்போது 34 வயதாகும் சூரியகுமாருக்கு அவரது மூளையில் புற்றுநோய் தொடர்பான கட்டி இருப்பது கடந்த பெப்ரவரியில் கண்டறியப்பட்டது.

அப்போதிலிருந்தே குடியிருப்பிலேயே ஓய்வில் இருந்து வருகிறார் சூரியகுமார். இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் இவருக்கு திடீரென்று வலிப்பு நோய் வந்துள்ளது.

மருத்துவராக பணியாற்றும் அவரது மனைவி சிந்துவும் அன்று வேலைக்குச் சென்ற நிலையில், சமயோசிதமாக செயற்பட்ட சூரியகுமாரின் 5 வயது மகள் அவானா சாமுவேல், தமது தந்தைக்கு மருத்துவ உதவி கிடைக்க உதவியுள்ளார்.

சம்பவத்தின் போது சிறுமி அவானா சாமுவேல், தனது மூன்று வயது தங்கை ஆர்யாவையும் அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள அறைக்கு சென்று மருத்துவமனையில் இருக்கும் தாயார் சிந்துவுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.

பின்னர் அவசர மருத்துவ உதவிக் குழுவினருக்கும் அழைத்து உதவி கோரியுள்ளார். அவர்கள் அளித்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, தந்தையை பா துகாப்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

தமது மகள்களின் சமயோசித செயற்பாடே தான் இப்போது உ யிருடன் இருக்க காரணம் என சூரியகுமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறுமி அவானா சாமுவேலுக்கு அவரது பாடசாலையில் இருந்து துணிச்சலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நேரத்தில் 21 வாகனங்கள் மோதி விபத்து : வெளியான காரணம்!!

21 வாகனங்கள் மோதி விபத்து..

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் பிரதான சாலை ஒன்றில் 21 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தொடர் வாகன விபத்துக்கு காரணம் மூடுபனி என்பது தெரிய வந்துள்ளது.

திங்களன்று பகல் நடந்த இந்த சாலை விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளது.  ஷார்ஜா மாகாணத்தில் இருந்து Umm Al Quwain நோக்கி எமிரேட்ஸ் சாலையில் பயணமான வாகனங்களே விபத்தில் சிக்கியுள்ளன.

உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிய வந்ததும், மருத்துவ குழுவினருடன் ஆம்புலன்ஸ் சேவை விரைந்ததாகவும், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஷார்ஜா மாகாண பொலிசார் களமிறங்கி வாகன நெரிசல் ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொண்டதுடன், விபத்தில் சிக்கிய வாகனங்களையும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி, சாரதிகள் கவனமுடன் வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும், சாலை தெளிவாக தெரியாமல் போனால் வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு காத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

நள்ளிரவில் நடந்த ப யங்கரம் : இரவோடு இரவாக வெளியேறிய உரிமையாளர் : பரிதாபமாக உ யிரிழந்த இளம் குடும்பம்!!

நள்ளிரவில்..

கண்டியில் மூவர் உ யிரிழக்க காரணமாக இருந்த வீட்டின் முதலாவது உரிமையாளர் முன்னாள் நிலமே என தெரியவந்துள்ளது. தற்போதைய உரிமையாளராக அனுர லெவ்கே என்பவரே நிலமேயாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரே குறித்த உரிமையாளர் தனது குடும்பத்தினரையும் நாயையும் கா ப்பாற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. எனினும் உரிமையாளர் கருத்து வெளியிடும் போது,

நாங்கள் டீ.வி பார்த்துவிட்டு தூங்க சென்றோம். அப்போது நேரம் அதிகாலை ஒரு மணியாகும். அதிகாலை திடீரென பாரிய சத்தம் ஒன்று கேட்டது.

சத்தம் எங்கிருந்து வந்ததென எங்களால் யோசிக்க முடியாமல் போனது. அப்போது தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் உள்ளவர்கள். டோர்ச் அடித்து எங்களை கூப்பிட்டார்கள்.

அத்துடன் கீழ் உள்ள கொன்கிரீட் உடைவது போன்று தெரிவதாக கூறினார்கள். இதன் போது தரை இழுப்படுவது போன்று உணர முடிந்தது. இதன் போது வெளியே வாருங்கள் என மகள் கூச்சலிட்டார். மகன் வீட்டில் இருந்து நாயை எடுத்துக் கொண்டார்.

நான் வெளியே செல்லும் போது வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நாயுடன், மகனும் மனைவியும் காரில் ஏரி சற்று தூரமாக சென்று நிறுத்தியிருந்தார்கள்.

நாங்கள் காருக்குள் சென்று சிறிது நேரத்தில் கட்டடம் உடைந்து விழுந்து விட்டது. ஏனையவர்களுக்கு தெளிவுப்படுத்த நேரம் போதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவர்கள் வீட்டில் இருந்து செல்லும் போது நேரம் ஒரு மணி எனவும் சம்பவம் 5 மணிக்கே இடம்பெற்றுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உரிமையாளர் நினைத்திருந்தால் இந்த மூன்று உ யிரையும் கா ப்பாற்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

 

அதாவுல்லாவால் புதிய சர்ச்சை : பாராளுமன்றில் இருந்து அவசரமாக வெளியேற்றம்!!

அதாவுல்லா..

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை, இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு பொருத்தமற்றது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அதாவுல்லா அணிந்திருப்பது அவரது தேசிய உடை என கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா பக்கம், நாடாளுமன்றத்தின் கெமராக்கள் திருப்பப்படவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இதன் போது பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், அதாவுல்லா, ஆப்கானிஸ்தான் உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் எதிர்கட்சியால் கடுமையாக விவாதிக்கப் பட்டதை அடுத்து பாராளுமன்றில் இருந்து அவசரமாக பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தனது ஆடை அலங்காரத்தின் விளைவால் அங்குள்ள ஊழியரால் வெளியேற்றப் பட்டார்.

15வருடம் அரசியல் அதிகாரத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவிற்கு தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

 

40 வயது குறைந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த 68 வயது திமுக நிர்வாகி!!

40 வயது குறைந்த பெண்ணை..

தமிழகத்தில் பேத்தி வயது பெண்ண காதலித்து திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் குறைந்த வயதுடைய பெண்ணை, அதிக வயது வித்தியாசம் கொண்ட ஆணும், அதிக வயதுடைய பெண்ணை, குறைந்த வயதுடைய ஆணும் திருமணம் செய்து கொள்வது வழக்கம்.

குறிப்பாக இந்தோனேஷியாவில் இது போன்ற திருமணங்கள் அதிகம் நடப்பதாக கூறப்படும். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 68 வயது மதிக்கத்த திமுக நிர்வாகி 28 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருவண்ணாமலை சாவல் பூண்டியை சேர்ந்தவர் மா.சுந்தரேசன்(68). இவர் பல ஆண்டுகளாக திமுகவில் நிர்வாகியாக இருக்கிறார். தற்போது திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார்.

சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராகவும் ஆறுமுறை பதவி வகித்திருக்கும் இவர் ஏ.வ.வேலுவின் தீவிர விசுவாசி சாவல் பூண்டி சங்கப்பலகை என்ற அமைப்பின் சார்பில் பேச்சாளர்களையும் உருவாகி வருகிறார் சுந்தரேசன்.

இந்நிலையில் தான் பட்டிமன்ற பேச்சாளராக திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயதான அபிதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அதன் பின் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கியுள்ளனர்.

மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சுந்தரேசன் திடீரென்று அவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மனைவி, மகள், மகன்கள் உள்ள நிலையில் தன்னை விட 40 வயது குறைவான பெண்ணை திருமணம் சுந்தேரசன் திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட அபிதாவுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

 

போக்குவரத்து வீதி ஒழுங்கு முறையில் அதிரடி மாற்றம் : நாளை முதல் அமுல்!!

வீதி ஒழுங்கு முறை

பஸ் முன்னுரிமை பாதையை பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக போக்குவரத்து பஸ்கள், பாடசாலை போக்குவரத்து பஸ் மற்றும் வாகனங்கள் மாத்திரமே நாளைமுதல் பயன்படுத்த முடியும் என்ற பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு நாளை முதல் முன்னுரிமை பஸ் பாதையில் பயணிக்க முடியாது. அதனால் அவை வெளிப்புற பாதையை பயன்படுத்தலாம்.

இவ்வாறு காவல் துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மற்றுமொரு சட்டத்தை கடுமையாக அமுலாக்கும் அரசாங்கம்!!

போலிச் செய்தி..

போலிச் செய்தி வெளியிடுவது தொடர்பிலான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த சமகால அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. விசேடமாக இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்தி வெளியிடுவதனை காண முடிவதாகவும், இதனால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டிலுள்ள சட்டத்திட்டங்கள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பங்களின் கீழ் அதனை கண்காணிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

போலிச் செய்திகள் பதிவிடுவது தொடர்பிலான புதிய சட்டத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் செயலிகள் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

செயலிகள்..

இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் செயலிகள் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எ ச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தேசிய பா துகாப்புக்கு அ ச்சுறு த்தலாக கூடிய செயலிகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, ஆபத்து உள்ளதா என்ற விடயத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு, பா துகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தேசிய பா துகாப்பிற்கு அ ச்சுறு த்தல் ஏற்படுத்த கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் கணினி மற்றும் கையடக்க தொலைபேசி செயலிகள் தொடர்பில் உலகளவில் கடந்த நாட்களாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் பல்வேறு கையடக்க தொலைபேசி செயலிகளுக்கு தடை விதித்தது.

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சை ப ர் யு த் த ம் போன்ற செயற்பாடுகளுக்காக கையடக்க தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தரவுகளை பயன்படுத்த முடியும் என்பது தொழில்நுட்ப பிரிவின் நிலைப்பாடாகும்.

எனவே இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்து நாட்டின் பா துகாப்பிற்கு அ ச்சுறு த்தலாக கூடிய செயலிகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பா துகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியாவிற்கு விஜயம் செய்த இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் ஆலோசகர்!!

மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் ஆலோசகர்..

இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் பெண்கள் அணிக்கான ஆலோசகர் அப்சாலி திலகரத்தின இன்று (22.09.2020) வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வடக்கு மாகாணத்தில் கிராம மட்டத்தில் கிரிக்கட் விளையாட்டில் திறமையான விளையாட்டு வீராங்கனைகளை அடையாளம் கண்டு தேசிய மட்டத்தில் அவர்களுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக அப்சாலி திலகரத்தின வவுனியாவிற்கு வருகை தந்திருந்தார்.

வவுனியா இந்துக்கல்லூரிக்கு வருகை தந்த இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் பெண்கள் அணிக்கான ஆலோசகர் பாடசாலை அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் வரவேற்கப்பட்டிருந்தார்.

பாடசாலைக்கு வருகை தந்திருந்த அதிதிகள் மாணவர்களால் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

பாடசாலையின் மைதான சூழல் மற்றும் மாணவர்களின் திறமைகளை பரீட்சித்த இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் பெண்கள் அணிக்கான ஆலோசகர் வவுனியாவில் கோமரசங்குளம் அ.த.க.பாடசாலை, சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம், புதுக்குளம் வித்தியாலயம் மற்றும் ஒமந்தை மத்திய கல்லூரிக்கு விஜயங்களை மெற்கொண்டிருந்தார்.

கோவில்குளம் இந்துக் கல்லூரியில் வருடாந்தம் நடைபெறும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு ஒரு இலட்சம் ரூபா நிதி உதவியினை இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் பெண்கள் அணிக்கான ஆலோசகர் அப்சாலி திலகரத்தின வழங்கி வருவதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் வை.ரதீபன், மாகாண கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் வி.கங்காதரன், மாவட்ட பயிற்றுவிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் என்.வி.சுந்தராங்கன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா A9 வீதியில் நான்கு வாகனங்கள் மோதி விபத்து!!

விபத்து..

வவுனியா – கண்டி ஏ 9 வீதி பூஓயா இராணுவ சோதனை சாவடியில் நான்கு வாகனங்கள் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று (22.09.2020) காலை மதவாச்சி ஏ9 வீதி பூஓயா பாலம் அருகே நான்கு வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் மட்டுமே சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் வாகனங்கள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவை நோக்கி பயணிக்கும் வாகனங்களை புஓயா பாலம் அருகே காணப்படும் இராணுவ சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை மேற்கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

புஓயா பாலம் அருகே சோதனைக்காக தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி, கப்ரக வாகனம், ஹயஸ் வாகனம் மீது வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதால் கப்ரக வாகனத்துக்கும், ஹயஸ் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய கு ற்றச்சா ட்டில் வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து மதவாச்சி பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலைக்கு செல்லும் வீதியை மூடியதால் குழப்பம்!!

வீதியை மூடியதால்..

பாடசாலைக்கு செல்லும் மாற்றுவழி மூடப்பட்டமையால் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் கனிஷ்ட பாடசாலைக்கு பிள்ளைகளை கொண்டு செல்லும் பெற்றோர்கள் மாணவர்களை இறக்கிய பின்னர் மாற்று வழி மூலம் பாடசாலையிலிருந்து வெளியே செல்கிறார்கள்.

மாற்று வழியானது பாடசாலையின் மறுபுறம் உள்ள அரச விடுதிகளின் அருகாமையில் உள்ள நிலையில் இதனூடாக வாகனங்கள் பயணிப்பதால் தமக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவித்து அங்கு வசிக்கும் ஒருவர் வீதியின் பாதையை மூடி போக்குவரத்தை தடைசெய்துள்ளார்.

இதனால் பல மாணவர்கள் பெற்றோர்கள் பெரும் அசெளகரியத்திற்கு ஆளாகியதுடன், குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பெற்றோர்கள் வீதியினை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் குழப்பமான சூழல் காணப்பட்டிருந்தது. பின்னர் பெற்றோர்களது வேண்டுகோளிற்கிணங்க வீதி திறக்கப்பட்டது. பின்னர் நிலமை சுமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் பட நடிகை, அங்காடி தெரு புகழ் சிந்துவின் தற்போதைய பரிதாப நிலை!!

அங்காடி தெரு புகழ் சிந்து..

பிரபல திரைப்பட நடிகையான சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், அவருக்கு உதவி கேட்டு நடிகரான பிளாக் பாண்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து.
அதன் பின் டிவி தொடர்களிலும், படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில், இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இவர் மருத்துவ சிகிச்சைக்காக உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்.

இது தொடர்பாக அவரை பார்க்கச் சென்று நடிகர் பிளாக் பாண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேசியுள்ள சிந்து, வணக்கம். நான் நல்லாதான் இருந்தேன். கொரோனா காலத்துல நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்கேன். சினிமா பீல்ட்ல இருந்தவங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே பண்ணியிருக்கேன்.

கொரோனா பி ரச்னைக்கு முன்னாடியே எனக்கு இந்த பிரச்னை இருந்தது தெரியும். மருத்துவமனை போனோம். இப்ப கொரோனா நேரத்துல ஆபரேஷன் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க.

அதை அப்படியே விட்டதால இப்ப அதிகமாயிடுச்சு. எனக்கு என்ன பிரச்னைன்னா மார்பக புற்றுநோய். பிறகு கடன் வாங்கி ஆபரேஷன் பண்ணி, அதை நீக்கியாச்சு. ஆபரேஷனுக்கு பிறகுதான் கொடுமையா இருக்கு. ஒவ்வொரு ஊசியும் 9,500 ரூபாய், 5, 500 ரூபாய் என்று உள்ளது. ஏகப்பட்ட செலவு.

இன்னும் கீமோ சிகிச்சை போகும் என்று மருத்துவர்கள் சொல்றாங்க. இப்ப மார்புல மட்டும் 5 சதவிதம் இருக்கு. அதுக்குப் பிறகு பைனல் கார்ட்ல வேற பாதிப்பு ஏற்பட்டிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.

நான் நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்கேன். என்னைச் சுத்தி ஒரு கும்பலே இருந்தது. எனக்கு கஷ்டம்னு மருத்துவமனையில் படுத்ததும் எல்லாருமே காணாம போயிட்டாங்க.

மனரீதியாகவும் பணரீதியாகவும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். மருத்துவச் செலவுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன். எனக்காக உதவி பண்ணுங்க.

நான் இதுல இருந்து மீண்டு வந்தால், நிறைய பேருக்கு உதவி பண்ணுவேன். என் கூட பழகினவங்களுக்கு என்னைப் பத்தி தெரியும். எனக்கு நடிகர் கார்த்தி, சாய் தினா, ஐசரி கணேஷ், ரோபோ சங்கர், சோனியா போஸ் வெங்கட், டேனியல், தீபா, சவுந்தர். இவங்கள்லாம் உதவி பண்ணியிருக்காங்க.

எனக்கு இன்னும் மருந்து மாத்திரைகளுக்குப் பண உதவி தேவைப்படுது. எனக்கு கண்டிப்பா உதவி பண்ணுங்க என்று கூறியுள்ளார்.

 

புதுப்பெண்ணுக்கு நேர்ந்த க தி : அ திர்ச்சியில் பெற்றோர்!!

இந்தியாவில்..

இந்தியாவில் புதுப்பெண் வீட்டில் ம ர்மமான மு றையில் இ ற ந் து கி டந்த ச ம்பவம் தொடர்பில் அவரின் பெற்றோர் அ திர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் புபனேஷ்வரை சேர்ந்தவர் ஜெமினி ஜெனா. இவருக்கும் வந்தனா என்ற இளம்பெண்ணுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் வந்தனா சில தினங்களுக்கு முன்னர் கணவர் வீட்டில் ம ர்மமான முறையில் இ றந்து கிடந்துள்ளார். இதையடுத்து வந்தனாவை அவர் கணவர் மற்றும் மாமியார், மாமனார் சேர்ந்து கொ லை செய்துவிட்டதாக பெற்றோர் புகார் கூறியுள்ளார்.

அவர்கள் கூறுகையில், திருமணமான புதிதில் இருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டு வந்தனாவை அவர் கணவர் குடும்பத்தார் கொ டுமைப்ப டுத்தி வந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் எங்கள் மாப்பிள்ளை ஜெமினி எங்களுக்கு போன் செய்து வந்தனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளோம் என கூறினார்.

ஆனால் வீட்டிலேயே அவரை கொ லை செ ய்துவி ட்டு தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கருதுகிறோம், வந்தனா க ழுத்தை நெ ரித்தத ற்கான் அடையாளங்கள் கூட உள்ளது என கூறியுள்ளனர்.

இதையடுத்து ஜெமினியை கைது செய்த பொலிசார் அவரிடம் தீ வி ர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் குழந்தை வேண்டும் : ம னைவியின் வ யிற்றை கி ழித்த கொ டூர க ணவன்!!

உத்தர பிரதேசத்தில்..

வயிற்றில் உள்ள கு ழந்தை என்ன பா லினம் என்பதை அறிய ம னைவியின் வ யிற்றை கி ழித்த கொ டூ ர ச ம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அ ரங்கேறி யுள்ளது

உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் இந்த கொ டூ ர ச ம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளுக்கு த ந்தையான பன்னலால் என்பவர்,

6 வதாக த னக்கு ஆ ண் கு ழந்தை வேண்டுமென்று நினைத்துள்ளார். மனைவியும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வ யிற்றை கி ழித்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கூ ரா ன ஆ யு த த் தா ல் கி ழித்ததில் 35 வ யதான அ வரது ம னைவி க டு மை யா க பா திக்கப்பட்டு ள்ளார் என தெரிய வந்துள்ளது.

ஆனால் துரிதமாக செயல்பட்ட கர்ப்பிணியின் குடும்பத்தினர் அவரை விரைவாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

கர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகா ரின் அடிப்படையில் பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கை து செ ய்துள்ளனர். அந்த பெண் 7 மாத கர்ப்பிணி என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 

பேச மறுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்த இளைஞர் : 17 வயது மாணவி எடுத்த வி பரீத முடிவு!!

சப்னா ஜீசஸ்..

தமிழகத்தில் காதல் தோல்வியால் 17 வ யது மா ணவி த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார். திருச்சி கே.கே.நகா் சுந்தா் நகா் 6ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த பால்சிங் மகள் சப்னா ஜீசஸ் (17).

இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த இரண்டு ஆண்களாக கே.கே.நகா் உடையான்பட்டி வேலவன் நகரைச் சோ்ந்த 19 வயது இலங்கை தமிழ் இளைஞனை காதலித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த மே மாதம் இவா் அளித்த புகா ரில் காதலன் போக்ஸோ சட்டத்தில் கை து செய்யப்பட்டு சி றையிலடைக்கப்பட்டாா். காதலன் ஜாமீனில் வெளியே வந்ததையறிந்த சப்னா ஜீசஸ் வாலிபரை தொடா்புக் கொண்டு பேசியுள்ளாா்.

ஆனால் இவரிடம் அந்த வாலிபா் பேச மறுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளாா். இதில் ம னமுடை ந்த சப்னா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் டாா். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

 

கல்லூரி மாணவிகளை குறிவைத்து நபர் செய்து வந்த மோசமான செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆ பா ச மா க பேசி கு ற் ற செயல்களில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கணேஷ் நகர் காவல்நிலையத்திற்கு பெண் ஒருவர், தனக்கு ம ர் ம நபர் ஒருவர் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொ ந்தரவு செய்து வருவதுடன், போனில் ஆ பா ச மாகப் பேசி வருகிறார்.

தன் ஆ சைக்கு இணங்க வேண்டும் என்றும், அப்படி இல்லையேன்றால், கொ லை செ ய் து வி டுவதாகவும் மி ர ட் டி வருவதாக புகார் கொடுத்தார்.
இதையடுத்து சைபர் கி ரை ம் பொலிசாரின் உதவியோடு, கணேஷ் நகர் பொலிசார் தனிப்படை அமைத்து வி சாரணை நடத்தினர்.

அதில், அழைப்பு வந்த செல்போன் நம்பர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) எனத் தெரியவந்ததுள்ளது.
காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து வி சாரணை செய்ததில் பல தி டுக்கி டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திகேயன் இதற்கு முன்பே, இதே எண்ணின் மூலம் கல்லூரி மாணவிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆ பா ச மா க ப் பேசி அவர்களை மி ரட்டியிரு ப்பதும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கார்த்திகேயன் மீது பெ ண் கொ டு மை த டுப்புச் ச ட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி றையிலடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், கார்த்திகேயன் பயன்படுத்திய போன் நம்பர் அவருடைய பெயரில் வாங்காமல் தன் நண்பரின் பெயரில் சிம் வாங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இவர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான பெண்களிடம் செல்போனில் ஆ பா ச மா க ப் பேசி அவர்களை தன் ஆசைக்கு இணங்குமாறு மி ரட்டியு ள்ளார்.

அப்படியில்லையென்றால், உன்னுடைய அ ந்தர ங்க விஷயங்களை வெளியில் விட்டுவிடுவேன் என்று கூறி மி ரட்டியிரு க்கிறார். அவர் பெரும்பாலும் கல்லூரி மாணவிகளிடம் தான் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இதுவரை பா திக்கப்பட்டவர்கள் யாரும் இவர் மேல் புகார் அளிக்காததால், இதையே தன் தொழிலாகவும் பின்பற்றி வந்துள்ளார். இப்போது ஒரு பெண் அளித்த பு காரின் பெயரில் தான் இவரை கையும் க ளவுமாகப் பிடித்துவிட்டோம். வேறுயாரும் இதுபோல் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் வி சாரணை மேற்கொண்டு வருவதாக கூறினர்.