வானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை : பார்வையிட முண்டியடிக்கும் மக்கள்!!

சிலாபம் – ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த மீன் வலை கிழே விழும் போது அடை மழை பெய்துள்ளது. 250 அடி நீளமும் 300 கிலோ கிராம் நிறையும் கொண்ட இந்த வலை வானில் இருந்து விழும் காட்சியை பலரும் அவதானித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை முதலில் பார்த்தவர், இந்த மீன் வலை வானில் இருந்து சிலாபம் நோக்கி வருவதை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் வலையை கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், நகர சபையின் பாதுகாவலர் அதற்கு இடமளிக்காமல் சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

இந்த வலையின் சிறப்பு என்னவென்றால், முடிச்சுகள் இல்லாதது மற்றும் கிழிந்தவுடன் மீண்டும் தைக்க இயலாது என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இது இலங்கை மீனவர்கள் பயன்படுத்தாத வலை என நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

நைலோன் நூலினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வலை சீனா, தாய்வான் அல்லது இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதனை பார்ப்பதற்காக பாரியளவிலான மக்கள் அவ்விடத்தில் கூடியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மூன்று அமைச்சுக்கள் இணைந்து கூட்டாக தயாரித்த திட்டம் ஒன்று அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுற்றுலா, சுகாதார மற்றும் விமான சேவைகள் ஆகிய 3 அமைச்சுகளும் திட்டத்தை தயாரிக்க ஆதரவு வழங்கியுள்ளன.

சுற்றுலாத்துறை உட்பட கொரோனா வைரஸ் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஆராய்ந்த பின்னர் சுற்றுலா அமைச்சு தலைமையில் இந்த வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்காக சுகாதார மற்றும் விமான சேவை அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 – 50 வரையிலான குழுக்களுக்கு நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர் படிப்படியாக சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் உள்ளவாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மூன்று மாதங்கள் வரை நாட்டில் தங்கியிருக்கு விரும்பும் சுற்றுலா பயணிகள் மற்றும் வயதானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் 18 வயது யுவதியொருவர் கைது!!

கைது..

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் ஹெ ரோ யி ன் போ தை ப் பொ ரு ளு ட ன் 18 வயது யுவதியொருவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ம து வ ரி த் திணைக்கள அதிகாரிகளினால் 185 மில்லி கிராம் ஹே ரோ யி ன் போ தை ப் பொ ரு ளு ட ன் குறித்த யுவதி கை து செய்யப்பட்டுள்ளார்.

ம து வ ரி த் திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து யாழ், கொழும்புத்துறை பகுதியில் ஹெ ரோ யி னை ம றைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதி விபத்தில் ஒருவர் ப லி : மூவர் படுகாயம்!!

வீதி விபத்தில்..

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ப லியானதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் இரு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நேரெதிரே மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் சித்தாண்டி திருநாவுக்கரசு வீதியை சேர்ந்த 22 வயதுடைய நாகராசா சதீஸ் என்பவரே ப லியாகியுள்ளார்.

மேலும், மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய எஸ்.சுபேந்திரன், 18 வயதுடைய மகேஸ்வரன் தவசீலன் மற்றும் கருணாகரன் தனுசன் ஆகியோர் காயமடைந்த நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சட்டத்தை மீறும் வாகன ஓட்டுநர்களை புகைப்படம் எடுக்கும் பொலிஸார்!!

புகைப்படம் எடுக்கும் பொலிஸார்..

மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் வாகன ஓட்டுநர்களை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான காவல்துறையினர் வெவ்வேறு இடங்களில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை மேல் மாகாணத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் ஓட்டுநர்களின் புகைப்படங்கள் வார இறுதி நாட்களில் விழிப்புணர்வு திட்டத்திற்கு வரவழைக்கப்படும்போது அவர்களுக்குக் காண்பிக்கப்படும்.

இதனால் ஓட்டுநர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து அவற்றை சரிசெய்ய முடியும் என்று தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்குகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவோ அல்லது நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவோ நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு வீதி சட்டம் குறித்து கல்வி கற்பிக்கவும், சுய புரிதல் மூலம் அவர்களை ஒழுங்குபடுத்தவும் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்து ஒரு நாள் கூட நீடிக்காத சந்தோஷம் : இளம் பெண்ணுக்கு நே ர்ந்த க தி!!

இளம் பெண்ணுக்கு..

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், காதலனை கரம் பி டிப்பத ற்காக வங்கதேசத்திற்கு எ ல்லை தா ண்டி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தின் Kamrup மாவட்டத்தில் இருக்கும் Taparpathar கிராமத்தை சேர்ந்தவர் Anjuma Begum.

இவர் வங்கதேசத்தில் இருக்கும் தன்னுடைய காதலனை கரம்பி டிப்பதற்காக எ ல்லை தா ண்டி ச ட்டவி ரோதமாக உள்ளே நு ழைந்ததால், பொலிசார் அவரை கை து செய்துள்ளனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வங்கதேச பொலிசாரால் தே டப்ப ட்டு வ ந்த Sattar (27) என்ற ந பர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அஸ்ஸாமின் Kamrup-விற்கு த ப் பி வந்துள்ளார்.

அசாமில் சில ஆண்டுகள் கழித்த இவர், அதன் பின் வங்கதேசத்திற்கு திரும்பியுள்ளார். அதன் பின் அந்த நபர் பஹ்ரைனுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அசாமில் வந்து இருந்த காலத்தில் Anjuma Begum, இந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவன் நாடு திரும்பிய பின்னும் இவர்களின் காதல் சமூகவலைத்தளம் மூலம் தொடர்ந்துள்ளது.

இதை அறிந்த Anjuma Begum-வின் பெற்றோர், கா தலுக்கு எ திர் ப்பு தெரிவித்து, உள்ளூரில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் Anjuma Begum வீட்டில் இருந்து வெளியேறி, வங்கதேசத்திற்கு த ப் பி ச் செ ன்று அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்,

பி டி ப ட் டா ல் மிகப் பெரிய ஆ பத்தை சந்திப்போம் என்று தெரிந்தும், குறித்த பெண் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் பயணித்து, கடந்து செவ்வாய் கிழமை இளைஞனின் வீட்டை அடைந்தாக கூறப்படுகிறது. காதலனின் உறவினரின் உதவியால் Anjuma Begum அங்கு சென்றுள்ளார்.

அதன் பின் இவர்களுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ மூலம்(டிஜிட்டல் முறை திருமணம்) திருமணம் நடைபெற்றுள்ளது, இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, எவ்வாறாயினும், பயண ஆவணங்களை எடுத்துச் செல்லாமல் நாட்டிற்குள் நு ழைந்ததற்காக Anjuma Begum-ஐ பொலிசார் கை து செய்துள்ளனர், திருமணம் முடிந்த ஒருநாள் மட்டுமே இவர்கள் சந்தோஷம் நீடித்த நிலையில், தற்போது Anjuma Begum கா வலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் முதலில் எங்கு சந்தித்தனர்? எப்படி காதல் வளர்ந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை, இது குறித்து தகவல் தெரிவிக்க, Anjuma Begum-ன் பெற்றோரை அழைக்க முற்பட்ட போது, அவர்களின் போன் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்களிடம் கனவில் வந்ததாக சொல்லி மதபோதகர் செய்த அதிர்ச்சி செயல்!!

மதபோதகர்..

தமிழகத்தில் இளம் பெண்களிடம் ஆ பாச மாக பேசிய மதபோதகரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு முடியகம்பை பகுதியில் பெதஸ்தா சபை உள்ளது. இங்கு அசோக் ஸ்டீபன், 58, என்பவர், மத போதகராக இருந்து வந்துள்ளார்.

இவர், இந்த சபைக்கு, ஜெபிக்க வரும் பெண்களிடம், ஆ பா ச வார்த்தைகள் பேசியும், கையை பி டி த் து இழுத்தும் மா னபங்கபடு த்தியதாக தொடர்ந்து பு கார்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமின்றி, அசோக் ஸ்டீபன், இளம் பெண்களிடம் கனவில் வந்ததாகச் சொல்லி ஆ பா ச கதைகளை சொல்லும், ஆடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சில பெண்களை நீலகிரியின் பல இயற்கை சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று வீடியோக்கள் எடுத்ததும் தெரியவந்துள்ளது,

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பா திக்கப்பட்ட பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அசோக் ஸ்டீபன், கார் கண்ணாடியை உடைத்தும், பெண்ணின் கையை பிடித்து இ ழுத்தும், மி ர ட் ட ல் விடுத்துள்ளார்.

இவரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள், நீலகிரி தர்ம அமைப்பு செயலாளர் ராமமூர்த்தி என்பவரின் மூலமாக கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து பொலிசார், மத போதகர் அசோக் ஸ்டீபனை கை து செய்து, குன்னுார் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தி, குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.

வீடில்லை… பிள்ளைகளின் சிகிச்சைக்கு பணமில்லை : இருதயத்தை விற்க தயாரான தாயார்!!

இருதயத்தை விற்க தயாரான தாயார்..

இந்திய மாநிலம் கேரளாவில் தமது பிள்ளைகளின் சிகிச்சைக்காக உடல் உறுப்புகள் அனைத்தையும் விற்க தாம் தயாரென தாயார் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரே தமது ஐந்து பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்த அ திர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.

மேலும் சொந்தமாக குடியிருப்பு இல்லாத நிலையில், தமது பிள்ளைகளுடன் அவர் தற்போது தெருவில் போ ராட்ட த்தில் ஈடுபட்டு வருகிறார். கணவர் கைவிட்டு சென்ற நிலையில்,

தமது ஐந்து பிள்ளைகளின் சிகிச்சைக்காக போ ரா டி வருவதாகவும், பிள்ளைகளின் சிகிச்சைக்காகவே குடியிருப்பையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், வாடகைக்கு குடியிருந்த நிலையில், தற்போது வாடகை செலுத்தவும் வசதி இல்லை என்கிறார் சாந்தி.

இதுவரை சிகிச்சைக்காக மட்டும் கடன் வாங்கியது 5 லட்சம் ரூபாய் என கூறும் சாந்தி, பொருளாதார ரீதியாக இதுவரை உதவியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தமது பிள்ளைகளுக்காக இருதயம் வரை விற்க தாம் தயாராக இருப்பதாக சாந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதமான நிலையில், அரசாங்க அதிகாரிகள் தலையிட்டு சாந்தியும் குடும்பத்தையும் பா துகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

மட்டுமின்றி, சாந்தியின் கோரிக்கையை ஆய்வு செய்து போதிய உதவி செய்யப்படும் என எம்.எல்.ஏ ஒருவர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறையில் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய இளம்பெண் : சுவற்றில் எழுதியிருந்த 3 வார்த்தைகள்!!

சரண்யா..

தமிழகத்தில் கல்லூரி மா ண வி த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் தொ டர்பாக வி சாரிக்க ப்பட்டு வ ருகிறது.

கூடலூரை அ டுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உ ட்பட்ட ப குதியில் உ ள்ளது பாடந்துரை கிரா மம். இ ங்கு வ சிப்பவர் சஜீவன். வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

இவரது மகள் சரண்யா (20). அரசுக்கல்லூரியில் இளநிலை பட்டம் 2ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி சரண்யா தனது தாயார் மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்தார்.

சரண்யா வழக்கம்போல் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூங்கச்சென்றார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

சந்தேகத்தின் பேரில் கதவை தட்டியபோதும் திறக்கவில்லை. க தவை உ டை த் து பார்த்தபோது அவர் தூ க் கி ல் ச டலமாக தொ ங்கி னார்.

சம்பவம் குறித்து தேவர்சோலை பொலிசார் வ ழக்குப் பதிந்து, மா ணவியின் உ டலை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மா ண வி த ற் கொ லை செ ய் த அ றையில் சோ த னை செ ய்தபோ து சு வற்றில் ஆங்கிலத்தில் ’சாரி டு ஆல்’ என எழுதி இருந்தது. அவரது ஸ்மார்ட் போன் திறக்க முடியாத நிலையில் லாக் செய்யப்பட்டிருந்தது. போலீசார் அதனை சை பர் கி ரைம் பிரிவுக்கு அனுப்பிவிட்டு விசாரித்து வருகின்றனர்.

 

வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்த மரங்கள்!!

கடும் காற்றினால்..

வவுனியா ஏ9 வீதி நீதிமன்றத்திற்கு அருகில் நின்ற பாரிய மரம் கடும் காற்று காரணமாக முறிந்து விழுந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

குறித்த முதிரைமரம் அடியோடு சரிந்து விழுந்ததில் மின்சார கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தின் பெயர் பதாதை சேதமடைந்துள்ளதுடன், அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பாதையும் தடைப்பட்டுள்ளது.

மேலும், நீர் விநியோகமும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்சார இணைப்புக்களை சீர்செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்ததுடன் தற்போது மாலை வேளைகளில் அதிக காற்றுடனான காலநிலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞரொருவர் ப லி!!

புகையிரதத்தில் மோதி..

கிளிநொச்சி – ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று (21.09.2020) காலை எட்டு மணியளவில் புகையிரத்தில் மோதி இளைஞரொருவர் உ யிரிழந்து ள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி புகையிரத்தில் மோதியே குறித்த இளைஞர் உ யிரிழந்து ள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உ யிரிழந்து ள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் ச டலம் புகையிரத ஊழியர்களால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

இலங்கையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என இலங்கை தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாத வகையில் மக்கள் நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். மக்கள் உரிய சுகாதார முறைகளுக்கு அமைய செயற்படவில்லை என்றால் வெகு விரைவில் நாட்டில் மிகவும் மோ சமான முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான சிரமங்களுக்குள்ளாகாமல் இருப்பதற்கு மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்சானி நியமனம்!!

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சியை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்தவரே பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சி.

இவர் 1997 இல் பொலிஸ் இன்ஸ்பெக்டராக சேவையில் சேர்ந்து, பின்னர் 2017ல் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார்.

பெண் பொலிஸ் அதிகாரியை பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பது இதுவே இலங்கையில் முதல் சந்தர்ப்பமாகும்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ம களை கா ணவில்லை : பொதுமக்களிடம் உதவிகோரும் தாய்!!

சரீப்தீன் ஜென்னத்து வீவீ..

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ என்பவர் கடந்த மூன்று வருடமாக கா ணாமல் போ ன நி லையில் பல்வேறு இடங்களில் தே டி யு ம்,

பொலிஸில் மு றைப்பாடு செய்தும் இதுவரை அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவரது தாயார் வெள்ளத்தம்பி கசீனா உம்மா (வயது 55) தெரிவித்துள்ளார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (வயது 23) என்பவர் கடந்த 2017.12.29ஆம் திகதி வீ ட்டில் இ ருந்து கா ணாமல் போ னதாக தாயார் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குறித்த பெண் 18 வயதில் திருமணம் செய்து கணவருடன் மூன்று மாதம் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் ச ண் டை ஏ ற்ப ட்டு க ணவன் வேறு திருமணம் செய்தமையால் பி ரிந்து எங்களுடன் வாழ்ந்து வந்தார். அதன் பிற்பாடு கடந்த 2017.12.29ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் விழித்து பார்க்கும் போது உ றங்கிக் கொ ண்டிருந்த ம க ளை கா ணவில்லை.

மகள் வீட்டில் இருந்து அவரது உடைகள் மற்றும் ஆபரணங்களை எடுக்காமல், தான் போட்டிருந்த ஆபரணங்களுடனும், கையடக்க தொலைபேசியுடனும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.

அதன்பிற்பாடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 2017.12.30ஆம் திகதி மு றைப்பாடு செ ய்ததுடன், இவரது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கினோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சென்று மு றைப்பாடு தொடர்பில் வி சாரித்தால் எங்களது ம க ளை தே டி க் கொ ண்டு தான் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர்.

ஆனால் இன்னும் எந்த பதிலும் இல்லை. எனவே கா ணாமல் போ ன எனது மகளை யாரேனும் கண்டால் 0758304796 என்ற எனது தொலைபேசி இலத்திற்கு அறியத்தருமாறு அனைவரையும் வேண்டுகின்றேன் என்று தாயார் வெள்ளத்தம்பி கசீனா உம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க கூட்டுத் திட்டம்!!

விமான நிலையம்..

கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மூன்று அமைச்சுக்கள் இணைந்து கூட்டாக தயாரித்த திட்டம் ஒன்று அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுற்றுலா, சுகாதார மற்றும் விமான சேவைகள் ஆகிய 3 அமைச்சுகளும் திட்டத்தை தயாரிக்க ஆதரவு வழங்கியுள்ளன.

சுற்றுலாத்துறை உட்பட கொரோனா வைரஸ் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஆராய்ந்த பின்னர் சுற்றுலா அமைச்சு தலைமையில் இந்த வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்காக சுகாதார மற்றும் விமான சேவை அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 – 50 வரையிலான குழுக்களுக்கு நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர் படிப்படியாக சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் உள்ளவாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மூன்று மாதங்கள் வரை நாட்டில் தங்கியிருக்கு விரும்பும் சுற்றுலா பயணிகள் மற்றும் வயதானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!!

தங்கம்..

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் சமகாலம் வரை தங்கத்தின் விலை நூற்றுக்கு 23 வீதம் வரை அதிகரித்துள்ளது. அது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1925 அமெரிக்கா டொலராக காணப்பட்டது.

இந்நிலையில் இந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தங்கத்தினை கொள்வனவு செய்ய காத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.