தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் போது இளைஞருக்கு ஏற்பட்ட வி பரீதம்!!

தேங்காய் பறிக்கும் போது..

குருநாகல், இப்பாகமுவ பகுதியில், நேற்றையதினம் மின்சாரம் பாய்ந்து இளைஞரொருவர் உ யிரிழந்து ள்ளார். மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஏறாவூர் மக்காமடி ஆதம்லெப்பை குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் 19 வயதுடைய தாவூத் சலீம் முஹம்மது றிபான் என்ற இளைஞரே சம்பவத்தில் ப லியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் இளநீர் விற்கும் தொழிலை மேற்கொண்டுவருவதாகவும், இதற்காக அவர் இளநீர் உற்பத்தியாகும் குருநாகல் போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தானே மரத்தில் ஏறி இளநீர்க் குலைகளைப் பறித்து வந்து விற்பனை செய்துவருவதாகவும்,

இதற்காக தென்னை மரத்தில் ஏறியபோதே அவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து ப லியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் பாய்ந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அவர் வழியிலேயே உ யிரிழந்து ள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்த வரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் ஏறாவூருக்கு எடுத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம்பற்றி மேலதிக வி சாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சவுதியில் கொரோனாவினால் 28 இலங்கையர்கள் ம ரணம்!!

சவுதியில்..

சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் உ யிரிழந்து ள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

கடந்த நான்கு மாதங்களில் இந்த ம ரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றனர். உ யிரிழந்தவர்களின் சடலங்கள் அந்த நாட்டினதும், சர்வதேசத்தின் சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,287 ஆக அதிகரித்துள்ளதுடன் 185 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 3,088 ஆக உயர்வடைந்துள்ளது.

 

ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை : முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்!!

இருளில்..

அண்மையில் இலங்கை முழுவதும் ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்சார கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற திட்டம் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள முழுமையான மின் தடையை தடுக்க முடியாதென அவர் அறிவித்துள்ளார். மின்சார சபையின் பிரதி பொது மேலாளர் சுஜீவ அபயவிக்ரம இது தொடர்பில் கடிதம் மூலம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளார்.

மின்சார சபை கட்டமைப்பு உரிய முறையில் திட்டமிட்டிருந்தால் சிறு தவறு ஏற்பட்டாலும் கட்டமைப்பு முழுமையான செயலிழக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தை சரிப்படுத்தவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் நாடு இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

கோர சம்பவத்திலிருந்து தெய்வாதீனமாக உ யிர் த ப்பிய நபர்கள் : பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட தகவல்!!

கண்டி – பூவெலிகட..

கட்டிடம் இடிந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து கொண்டிருந்தது. என் மீதும் விழுந்தது. நானும் எனது மாமியும் ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டோம் என கண்டி – பூவெலிகட பகுதியில் நேற்று காலை இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதன்போது ஏற்பட்ட சத்தத்தில் எழுந்து பார்க்கும் போது எனது சித்தப்பா மற்றும் அவரது மனைவி உறங்கிக்கொண்டிருந்த எமது வீட்டின் ஒரு பகுதியின் மீதே குறித்த கட்டிடம் விழுந்திருந்ததுடன் நாமிருந்த அறை பக்கமும் கட்டிடத்தின் சிறு பகுதிகள் சிதறி கிடந்தன.

கட்டிடம் இடிந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து கொண்டிருந்தது. என் மீதும் விழுந்தது. நானும் எனது மாமியும் ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டோம்.

மற்றைய அறையில் எனது சித்தப்பாவும் சித்தியும் அவர்களது ஒன்றரை மாத குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது தொலைபேசிக்கு அழைத்த போதும் தொலைபேசி இயங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறித்த அனர்த்தத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றுமொரு தாய் குறிப்பிடுகையில், அதிகாலை 5 மணியளவில் பாரிய சத்தமொன்று கேட்டதைத் தொடர்ந்து ஜன்னல் வழியாகவே பார்த்தோம்.

நாம் பார்க்கும் போது கட்டிடம் முழுமையாக இடிந்திருந்தது. நாம் கூச்சலிட்ட போதும் அருகில் வசித்தவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை. 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்ததன் பின்னர் பொலிஸார் உடனடியாக வந்து எம் இருவரையும் மீட்டனர்.

எனினும் மற்றைய அறையிலேயே குழந்தையுடன் அதன் தாய் தந்தை உறங்கிக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிற்கு இடமாற்றம்!!

தம்மிக்க பிரியந்த..

சேவை தேவை காரணமாக 27 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போ தைப்பொ ருள் பணியகத்தின் பொறுப்பான உப பொலிஸ்மா அதிபர் உட்பட 11 உப பொலிஸ்மா அதிபர்கள், 11 பொலிஸ் அத்தியட்சகர்கள்,

இரு பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உப பொலிஸ் அத்தியேட்சகர் ஒருவருமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய தம்மிக்க பிரியந்தவிற்கும் இன்றையதினம் (20.09.2020) களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் 2020 ஜனவரி மாதம் 3ம் திகதி வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையினை பொறுப்பேற்ற தம்மிக்க பிரியந்த வவுனியா, மன்னார் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு இரு புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு!!

புதிய உறுப்பினர்கள்..

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியாவின் இரு உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரசபையின் இறம்பைக்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்ரூபன் நீல் சாந்த தலைமையிலான வன்னி மக்கள் காப்பகம் அணியில் இணைந்து செயற்படும் நிலையில் அவர் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது வெலற்றிடத்திற்கு அப் பகுதியைச் சேர்ந்த பே.கிறிஸ்தோபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சாஸ்திரிகூழாங்குளம் வட்டார உறுப்பினராக வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட ப.சத்தியநாதன் பதவி விலகிய நிலையில், அருடைய இடத்திற்கு கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பெ.இராமகிருஸ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் இலங்கை தமிரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

வவுனியாவில் மௌன அலைகள் நூல் வெளியீட்டு விழா!!

நூல் வெளியீட்டு விழா..

வவுனியாவில் மௌன அலைகள் நூல் வெளியீட்டு விழா இன்று (20.09.2020) மதியம் 3 மணியளவில் இடம்பெற்றது.

நோர்வே விஜேந்திரன் எழுத்தாக்கத்தில் உருவான இந்நூல் வெளியீடு விழா ஜனனம் நம்பிக்கை மையத்தின் ஏற்பாட்டில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க காலாசார மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயசந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல் பிரதியை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழரவி சிவகுமாரன், வைத்தியர் மதிதரன், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரவீந்திரன், கலைஞர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுகம்!!

வவுனியாவில் ஏழு தசாப்பதங்களுக்கு மேலாக இயங்கிவரும்  வவுனியா  சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 2020 ஆம் ஆண்டில் தமக்கென இணையத்தளமொன்றை உருவாக்கி அதன் மூலம் தமது செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆவணப்படுத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பயனாக 1952ம் ஆண்டில்  வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒர் இந்துமதம் சார்ந்த அமைப்பான சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்  தனது வரலாற்றில் புதிய அத்தியாயமாக சங்க நிர்வாக அமைப்பினரின் பெரும் முயற்சியின் பயனாக www.vavuniyaymha.org என்னும் இணையதளம் ஒன்றினை உருவாக்கி அதன் அறிமுக நிகழ்வினை கடந்த 20.09.2020 அன்று  நடாத்தியிருந்தது.

மேற்படி நிகழ்வு  சங்கத்தின் உபதலைவர் செல்லத்துரை சபாநாதன் தலைமையில் இடம்பெற்றதுடன் மங்கல விளக்கேற்றல்,தேவார பாராயணத்துடன்  ஆரம்பமான நிகழ்வில்  வரவேற்புரையினைத்  தொடந்து சுத்தானந்த முன்பள்ளி மாணவர்களின்  வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

தொடர்ந்து  முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கணபதி சித்தர் மு.க.கந்தசாமிக் குருக்கள் தமது ஆசியுரையை நிகழ்த்தி  இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவஸ்ரீ.மு.க.கந்தகணேஷ தாஸகுருக்கள் அவரகளால் விருந்தினருரை நிகழ்த்தப்பட்டது.

அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரியும் தவராசா கஜேந்திரன்(வலயக் கல்வி அலுவலகம்- வவுனியா வடக்கு)அவர்களால்  வடிவமைக்கபட்ட சங்கத்தின்  இணையத் தளத்திற்கான அறிமுகவுரையை சு.ஜெயச்சந்திரன் (ஆசிரியர்வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர்-புளியங்குளம்) நிகழ்த்தியிருந்தார்.

 

 

திருமணமான 10 நாளில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் பணம், நகைகள், உடைகளை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது கணவனை அ திர்ச்சியில் ஆழ்த்தியது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ரோஷினி என்ற அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சில நபர்கள் மூலம் ரோஷினியை பற்றி தெரிந்து கொண்ட நிலையிலேயே இந்த திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மணப்பெண் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு 70 ஆயிரம் ரொக்கம், நகைகள் மற்றும் துணிகளை திலீப் கொடுத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை தூங்கி எழுந்த போது ரோஷினி கா ணாமல் போனதை கண்டு திலீப் அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிலிருந்த பணம் மற்றும் லட்சக்கணக்கில் மதிப்பிலான நகைகளும் காணாமல் போனது.

இது குறித்து திலீப் பொலிசில் புகார் கொடுத்தார், விசாரணையில் ரோஷினி பணம், நகைகளுடன் சொந்த ஊருக்கு த ப்பியோ டியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டது.

மேலும் ரோஷினியின் உறவினர்களான கலாபாய், ஷிட்டால் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டியில் இன்று 5 மாடிக் கட்டடம் இடிந்தமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!!

5 மாடிக் கட்டடம்..

கண்டி பூவெலிகட பிரதேசத்தில் இன்று (20.09) அதிகாலை 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கும் இதற்கு முன்னர் கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு ஒரு காரணமாக இருக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் கல்வித்துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடந்த கோர சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மண் அடுக்குகள் சரிந்து சென்றுள்ளமை சம்பவ இடத்தை பார்வையிடும் போது தெளிவாகியுள்ளது. அந்த நிலப்பகுதியில் உள்ள பாறை அடுக்குகளில் இருக்கும் மண் அடுக்குள் தளர்ந்து போயுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் தற்போது பெய்துவரும் கனமழையால் அதிகளவான தண்ணீர் மண் அடுக்குகளில் சேர்ந்து, மண் அடுக்குள் சரிந்துள்ளதை காணமுடிக்கின்றது.

எனினும் புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டு கட்டடத்தின் அடித்தளத்தை கற்பாறையுடன் பொறியலாளர்கள் இணைந்து நிர்மாணித்திருந்தால், இப்படியான விபத்துக்கள் ஏற்படாது. இப்படியான ஆய்வுகளை மேற்கொள்ளாது 10 வருடங்களுக்கு முன்னர் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம்.

மலைகளில் வீடுகளை நிர்மாணிக்கும் போது புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டு புவியியலாளர்களின் பரிந்துரைகளை பெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும். இப்படியான பரிந்துரைகளை வழங்கும் செயற்பாடுகள் 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கவில்லை.

தற்போது கட்டாயம் இப்படியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பேராசிரியர் அத்துல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ம னைவியின் வீ ட்டில் பி ள்ளைகளை கா ணச் செ ன்ற க ணவன் : மா மனாரால் நே ர்ந்த து யரம்!!

கேரள மாநி லத்தில்..

இந்தியாவின் கேரள மாநி லத்தில் கு டும்ப த க ரா று க் கு இ டையே ம ருமக னை மா மனாரே கொ லை செ ய் த ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. கு றித்த வ ழக்கு தொ டர்பில் நிக்கோலாஸ் எ ன்பவரை பொ லிசார் கை து செ ய்துள் ளனர்.

பி ள்ளைகளை கா ண வே ண்டும் எ னக் கூ றி, மா மனாரின் வீ ட்டுக்கு செ ன்று த க ரா றி ல் ஈ டுபட்ட 33 வ யதான லிஜின் எ ன்பவரே கொ லை செ ய் ய ப் ப ட் டு ள் ளா ர்.

இ ர வு 9.30 ம ணிய ளவில் லிஜின் த ன து ம னைவி யின் த ந்தையா லையே வெ ட் டி கொ லை செ ய் ய ப் ப ட் டு ள் ளா ர். இ தனைய டுத்து இ ர த் த வெ ள் ள த் தி ல் ச ரி ந் த லிஜினை மீ ட் டு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்ற போ தும், வ ழியி லேயே அ வ ர் ம ர ண ம டை ந் த தா க கூ றப்படுகி றது.

தொ டர்ந்து அ தே இ ர வி ல் பொலிசார் லிஜினின் மா மனார் நிக்கோலாஸ் எ ன்பவரை கை து செ ய்துள் ளனர். மா மனார் ம ருமகன் இ டையே மு ன்னரும் ப ல மு றை வா க்குவா தம் ஏ ற்பட்டு வ ந்துள் ளதாக கூ றப்படுகி றது.

கு டும்பத்தில் ஏ ற்பட்ட பி ர ச் ச னை கா ரணமாக லிஜினின் ம னைவியும் பி ள்ளை களும் க டந்த சி ல மா தங்களாக நிக்கோலாஸின் கு டியிரு ப்பில் த ங்கி வ ந்துள் ளனர்.

இ ந்த நி லையிலேயே லிஜின் த ன து பி ள்ளைகளை கா ண வே ண்டும் எ னக் கூ றி இ ர வு அ ந்த கு டியிருப்புக்கு செ ன்று ள்ளார். ஆ னால் வீ ட்டு க்கு வெ ளியே வ ந்த நிக்கோலாஸ் அ தற்கு ம றுப்பு தெ ரிவிக் கவே, இ ருவரு க்கும் வா க் கு வா த ம் ஏ ற்பட்டு ள்ளது.

ஒ ரு க ட்டத்தில் ஆ த் தி ரம டை ந் த நிக்கோலாஸ் ம ருமக னை ம றை த் து வை த்தி ரு ந் த க த் தி யா ல் கு த் தி யு ள் ளா ர் , லிஜின் ச ம்பவயிடத் திலேயே சு ரு ண் டு வி ழுந்து ள்ளார்.

இ தனிடையே த லை ம றை வா கா ம ல் கு டியிருப்பி லேயே இ ருந்த நிக்கோலாசை பொ லிசார் கை து செ ய்துள் ளனர்.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கும் திட்டம் முன்வைக்கப்படும் : கு.திலீபன் எம்.பி!!

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கும் ஒரு திட்டத்தினை முன்வைத்து அங்கிருந்தும் பேரூந்து சேவைகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியாவில் நிகழ்வோன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்த தெரிவித்த அவர்

புதிய பேரூந்து நிலையத்தில் பேரூந்துகள் சீராக செயற்பட ஒரு திட்டத்தினை முன்வைக்கும் போது பழைய பேரூந்து நிலையத்தில் இருந்தும் சேவைகள் இடம்பெற திட்டம் முன் வைக்கப்படும்.

அதற்கு தனியார் பேரூந்து உரிமையாளர்களின் ஒத்துழைப்பு தேவை. இரண்டு பேரூந்து நிலையத்திற்கும் சம்மதம் தேவையாகவே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவோம்.

அத்துடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயூரன் போ தைப்பொ ருள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஆனால் போ தைப்பொ ருளுக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தால் சிரிக்கும் அமைப்பு சிரிக்காத அமைப்பு என்று சில கட்சிகள் எனக்கு எதிராக செயற்படுகின்றனர்.

போலி முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது தவசிகுளத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டில் க ஞ் சா பாவனை என. என்னை எப்படி குறை கூறலாம் என திட்டம் போடுகின்றனர்.

ஆனால் நான் வலுவாக ஒரு திட்டத்தினை அவர்களுக்கு கொடுக்கப்போகின்றேன். நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன் வென்றுவிட்டேன். ஆனால் சிலர் 5 வருடங்களுக்கு பல தேர்தலில் போட்டியிட வேண்டியுள்ளது.

நீங்கள் செய்த திருகுதாளங்களை நான் வெளியில் விட்டால் அவர்களுக்கு இருப்பதும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். அதனை விரைவில் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை : பல இடங்களில் மின் தடை!!

காற்றுடன் கூடிய காலநிலை..

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கின்றது. கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்பம் நீடித்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து கடும் காற்று வீசி வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் காற்று தீவிரமாக வீசி வருகின்றது. இதன் காரணமாக பாரிய மரங்கள் முறிந்து விழுந்து விடுமோ என்ற அ ச்சத்துடனேயே மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

கடும் காற்று காரணமாக சில பகுதிகளில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்தின் அவலநிலை!!

மணிக்கூட்டுக் கோபுரம்…

வவுனியா மணிக்கூட்டு கோபுரம் ஆசியாவின் அதிசயமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளகின்றனர்.

குறிப்பாக காலை இலங்கை நேரப்படி 09.20 நிமிடமாக காணப்படும் போது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தின் நேரமானது இரு பக்கங்களில் 11.12 மற்றும் 12.10 நிமிடமாக ஆக காணப்படுகின்றது. மேலும் இரு பக்கங்களில் உள்ள மணிக்கூடுகள் இயங்கவில்லை.

நகரத்துக்கு மத்தியில் அதாவது பொதுச்சந்தை, வங்கிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிக்கு செல்லும் வீதியில் காணப்படுகின்ற இம்மணிக்கூட்டு கோபுரமே பிழையான நேரத்தை காட்டுவதாகும்.

பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் நகர சபையினர் ஏன் இவ்விடயத்தில் அக்கறையின்றி செயற்படுகின்றனர் எனவும் இது ஆசியாவின் அதிசயம் என்று கூட கேலி செய்யும் வகையில நகரசபை அசமந்தபோக்காகவுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் கிணற்றிலிருந்து வெ டிபொருட்கள் மீட்பு!!

கிணற்றிலிருந்து..

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில் கிணற்றில் இருந்து பெருமளவான வெ டிபொருட்களை புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றை அதன் உரிமையாளர் இன்று (20.09.2020) துப்புரவு செய்துள்ளார்.

இதன்போது கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில், புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை முதற்கட்டமாக மீட்டிருந்தனர்.

குறித்த கிணற்றில் மேலும் வெ டிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதி மன்றின் அனுமதியுடன் தே டுதல் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 60 பேருக்கு பீசிஆர் பரிசோதனை : முடிவுகள் வெளியாகின!!

பீசிஆர் பரிசோதனை..

வவுனியாவில் இருந்து வெளி மாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர்களின் பீசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

வவுனியாவில் இருந்து கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளிமாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர்கள் 60 பேருக்கு நேற்று பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கொவிட் – 19 குறித்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட குறித்த பரிசோதனையில் எவருக்கும் கொவிட் – 19 தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.