கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

தாம் பயன்படுத்தும் செல்போன்கள் செல்லுப்படியான அனுமதிப் பத்திரத்தை கொண்டு விற்பனை முகவரால் இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, கைத்தொலைபேசிகளை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் IMEI என்ற தட்டச்சு செய்து, 15 இலக்கங்களை கொண்ட தமது கைத்தொலைபேசிகளில் இருக்கும் IMEI இலக்கத்தை 1909 என்ற இலக்கத்திற்கு குறுஞ் செய்தியில் அனுப்புமாறும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய பின்னர், அந்த கைத்தொலைபேசி சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது பதிவு செய்யப்படாததா என்ற பதில் செய்தி அனுப்பி வைக்கப்படும்.

பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசிகள் இருக்குமாயின் அது குறித்து தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கமும் குறுஞ்செய்தியில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசிகளை எதிர்காலத்தில் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா-2020

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (திங்கட்கிழமை) இடம்பெறுகிறது.

நல்லூரானின் பெருந்திருவிழா கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே திருவிழா இடம்பெற்று வந்தது.மேலும் 25 நாட்கள் நடைபெற்று வரும் குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 13ஆம் திகதி கைலாச வாகனமும் மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும் நேற்று சப்பரதத் திருவிழாவும் இடம்பெற்றது.

இந்த நிலையில், இன்று தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்று வருகிறது.இதனையடுத்து, நாளை தினம் 18 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த திருவிழாவில் பங்குகொள்வதற்காக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் அதிகளவானோர் வருகை தருகின்றமை வழமை.

ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பங்கேற்பு இருக்காது என்றே கூறப்படுகின்றது.இதேநேரம் தற்போது கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்தில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன். பக்கத்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர் உற்சவத்துக்குப் பெருமளவில் மக்கள் வருவதைத் தவிர்த்து வீட்டில் இருந்து முருகக் கடவுளைத் தரிசியுங்கள் என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 383 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு : 256 பட்டதாரிகள் நிராகரிப்பு!!

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று ஓரிரு வாரங்களில் 50000 பட்டதாரிகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தார்.

இத் திட்டம் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

நிறுத்தி வைக்கபட்டிருந்த குறித்த தொழில் வாய்ப்பு திட்டத்தின் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் 383 பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்கு தெரிவாகியுள்ளதுடன் 256 பட்டதாரிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா வடக்கில் 32 பட்டதாரிகளும் , வவுனியா தெற்கில் 20 பட்டதாரிகளும் வெங்கல செட்டிக்குளம் பிரிவில் 28 பட்டதாரிகளும் வவுனியா நகரில் 303 பட்டதாரிகளும் மொத்தமாக 383 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளனர். மேலும் 19பட்டதாரிகளின் விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன

வவுனியா தெற்கு: https://drive.google.com/file/d/19ITSYsxaF9rKBujksx26Usj3WP42xcpI/view?fbclid=IwAR2uT3CH_aYAgb9JxElBQYkslwlatmBDwVbhBqaG-mDuUhdTajRaRI-elc8

வவுனியா: https://drive.google.com/file/d/1nmIUbYzEN0YkIXkjd4_tqUasMEEstaa4/view?fbclid=IwAR2vyDLzQIhFkt-tMimc6HeIkeuOQXZH5vhiOObeRJkRddwNBV1oK4gW51E

வவுனியா வடக்கு: https://drive.google.com/file/d/1-kgKnFUYJ92TRItus_BwdeM98hzqE0Wl/view?fbclid=IwAR1FLWt6GsBWtmqMjdXNgXzZE9LmSwHMIJFGprNlGrpgojYMAD-WUaKZI_8

நிலுவையில் உள்ள பட்டியல்: https://drive.google.com/file/d/1obC5_y3oUbq_BfXJbmIOaWJRvBl1YbLa/view?fbclid=IwAR3QPr5pbFwHBVBHMYVTKmr2SJEneXxlDQhCKYnvu8dCKf9v0cJNCC5CiaY

நிராகரிக்கப்பட்ட பட்டியல்: https://drive.google.com/file/d/1i8OWTu7Yoa0dROVtbPdyekOwhFMG1O6M/view?fbclid=IwAR2cvSigdj3L3XW1eYEu668vdab-Q8KDRV4oPCD1_iyb5vgwTvTXp01A8T8

 

வவுனியா நகரில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : மூவர் காயம்!!

விபத்து..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட சந்தியில் (16.08.2020) இரவு 9.00 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா ஹோரவப்பொத்தானை வீதியூடாக மாவட்ட செயலக பக்கம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன்,

கண்டி வீதியூடாக வைத்தியசாலை வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட சந்தியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியும் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிலின் சாரதி வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனவும் முச்சக்கரவண்டியின் சாரதி வேகமாக வாகனத்தினை செலுத்தியமையினால் கட்டுப்பாட்டினை இழந்தமையினாலும் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கென்ரர் வாகனம் தடம்புரண்டு விபத்து!!

விபத்து..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கன்ரர் ரக வாகனம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியதில் அதன் சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், வவுனியாவிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற குறித்த கென்ரர் வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது,

சாரதியின் தூக்க கலக்கத்தில் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியைவிட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

க ணவனை கொ லை செ ய் து வி ட் டு கா தலனுடன்… ம னைவி போ ட்ட ப ய ங் க ர தி ட்டம்!!

கா தலனுடன்…

த மிழகத்தில் கா தலனு க்காக க ணவனை கொ லை செ ய்ய நி னைத்த ம னை வியின் செ யல் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது. கன்னியாகுமரி மா வட் டம் நா கர்கோவி ல் வெ ட்டூர்ணிம டம் ப குதியை சே ர்ந் தவர் கணேஷ். இ வருக்கு காய்த்ரி எ ன்ற ம னைவி உ ள்ளார்.

கணேஷ் வீ டியோகிரா பராக வே லை செ ய்து வ ருகிறா ர். இ ந்நி லையில் க டந்த வா ர ம் வீ ட்டில் தூ ங்கிக் கொ ண்டி ருந்த கணேஷ் தி டீரெ ன்று கீ ழே வி ழுந்துவி ட்டதால், த லையில் ப லமாக அ டிபட்டு ர த் த ம் கொ ட்டி வி ட் ட தா க கூ றி கு டும்பத்தி னரிடம் க த றி அ ழுதுள் ளார்.

இ தனால் உ றவினர்கள், அக்க ம்பக்க த்தினர் கணேஷை உ டனடியாக மீ ட்டு ஒ ரு த னியார் ம ருத்துவம னையில் அ னுமதி த்தனர். ஆ னால் கணேஷுக்கு நி னைவு தி ரும்பவே யில்லை.

அ வருக்கு அ று வை சி கிச்சை செ ய்யப்ப ட்டு, தீ விர சி கிச்சை பி ரிவில் அ னுமதிக்க ப்பட்டு சி கிச்சை பெ ற்று வ ந்தார். கணேஷ் த ற்போது வ ரை ஆ பத்தான நி லையில் ம ருத்துவம னையில் சி கிச்சை பெ ற்று வ ருகி றார்.

இ ந் நி லையில், இ து கு றித்து உ றவி னர்கள் கா வல் நி லையத் தில் பு கார் கொ டுக்க, பொ லிசார் இ ந்த ச ம்பவம் தொ டர்பாக வி சாரணை மே ற்கொண் டனர்.

அ ப் போ து க ட்டிலில் இ ருந்து கீ ழே வி ழுந்தா ல் எ ப்படி இ வ்வளவு பெ ரிய கா யம் ஏ ற்பட்டும், யா ரோ ப ய ங் க ர மா க ம ண் டையில் அ டித் தி ரு ப்பது போ ன்று தெ ரிவதாக பொ லிசாருக்கு ச ந்தேக ம் வ லுத்து ள்ளது.

அ துமட் டுமின் றி கணேஷின் உ யி ர் நா டி ந சுக் கப்ப ட்டு, அ வரது வி லா எ லும்பு மு றிந்து ள்ளது. இ தையடுத்து பொ லிசார் காயத்ரி யிடம் வி சாரணையை தீ விரப்படு த்திய போ து, தி டுக்கி டும் த கவல் வெ ளியாகியு ள்ளது.

அ தி ல், காயத்ரிக்கும் யாசின் எ ன்ற ந பருடன் ப ழக்கம் ஏ ற்பட்டு ள்ளது. இ ருவரும் நெ ருங்கி ப ழகும் அ ளவிற்கு இ ருந்து வ ந்துள்ள னர். இ தற்கு க ணவர் கணேஷ் மு ட்டுக்க ட்டை யாக இ ருப்பதால், அ வரை தீ ர்த் துக்க ட்ட காயத்ரி மு டிவு செ ய்துள் ளார்.

அ தன் ப டி, க ணவனை கொ லை செ ய்வத ற்காக கூ லிப்ப டைக்கு 2 ல ட்சம் ரூ பாய் கொ டுத்து ள்ளார். ச ம்பவத்த ன்று கணேஷ் தூ ங்கியதும், யாசினுக்கு த கவல் கொ டுத்து வ ரவழை த்தும் உ ள்ளார்.

அ தன் பி றகு கூ லிப்ப டையுடன் வ ந்த யா சி ன், கணேஷை அ டி த் து ள் ள ன ர். வே று ஒ ரு பெ ண்ணுடன் உ றவு இ ருப்பதுபோ ல சி த்தரிக்கவே, உ யி ர் நா டியை ந சுக் கி வி ட்டு செ ன்றுள் ளனர்.

க ணவன் எ ப்படியும் இ றந்துவி டுவார் எ ன்று நி னைக்க இ றுதியில் பொ லிசாரின் வி சாரணையில் சி க் கி க் கொ ண்ட னர். இ தில் விஜயகுமார், கருணாகரன், எ ன்ற 2 பே ரை பொ லிசார் கை து செ ய்துள்ளதா கவும், கா தலனான யாசின் த லைம றைவாகிவி ட்டதால் பொ லிசார் அ வரை தே டிவருவதா கவும் தெ ரிவிக்கப்பட்டு ள்ளது.

2000 டன் பொருளுடன் கடலில் மூ ழ்கிய ச ரக்கு கப்பல்! 13 மாலுமிகள் கா ணவில்லை!!

கப்பல்…

வங்காள விரிகுடாவில் சனிக்கிழமை வங்க தேசத்தின் ஹதியா அருகே ச ரக்கு கப்பல் ஒன்று கடலில் மூ ழ்கிய ச ம்பவம் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எம்.வி. அக்தர் பானு’ என்ற கப்பலில் இருந்த 13 மாலுமிகள் கா ணவில்லை என்று வங்க தேச ஊடகம் செ ய்தி வெளியிட்டுள்ளது.

2000 டன் கோதுமையை ஏற்றிச் சென்ற க ப்பல் வங்க தேசத்தின் படேங்கா கடல் கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள ஹதியா அருகே மூ ழ்கியது.

கடலோர கா வ ல்ப டை மற்றும் கடற்படை ஆகியவை தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

கடலோர கா வ ல்ப டையின் மக்கள் தொடர்பு பிரிவு, இப்பகுதியில் கா லநிலை மோ சமாக உள் ள காரணத்தினால் தங்கள் குழு அந்த இடத்தை அடைய முடிவில்லை என்று கூறினார்.

ச ர்க்கரையை ஏற்றிச் சென்ற மற்றொரு கப்பல் சனிக்கிழமையன்று அதே நேரத்தில் பாஷஞ்சர் அருகே மூ ழ்கி யதாகக் கூறப்படுகிறது, aஆனால் அதன் குழு உறுப்பினர்கள் மீ ட்கப்பட்டுள்ளனர்.

 

முழு அரச சேவையிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய..

ஒட்மொத்த அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை திட்டமிடல் சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு பொருத்தமான வகையில் தொழிலாளர் செயலணி ஒன்றை முகாமைத்துவம் செய்ய வேண்டும் என பசில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கான திட்டங்களை வகுக்கும் நோக்கில் தொழிலாளர் செயணி காணப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மட்டுமல்லாமல், ஒரு விரிவான அபிவிருத்தி செயற்பாட்டிற்காக அரச நிறுவனங்களை இணைக்கும் தரவு சேகரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!!

தங்கத்தின் விலையில்..

உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.45 சதவீதம் அல்லது சுமார் 90 டொலர் சரிந்து வார இறுதியில் 1,950 டொலராக பதிவாகியுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதான தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும் போது இதுவும் அதிகரிப்பாகும். கொரோனா வைரஸ் நெருக்கடியினால் தங்கத்திற்கு ஏற்பட்ட கிராக்கி காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன் காரணமாக இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலையில் ஒரு இலட்சத்திற்கும் மேலும் 22 கரட் தங்கத்தின் விலை 96 ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை : ஏழு பேர் கைது!!

கண்டியில்..

கண்டியில் 14 வ யது சி றுமியை பா லியல் து ஷ்பிரயோக த்திற்கு உ ட்படுத்திய 7 சந்தேக நபர்களை கண்டி – பூஜாபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரும் கடந்த ஆறு மாதங்களில் குறித்த சி றுமியை பல முறை து ஷ்பிரயோ கத்திற்கு உ ட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

29 வயதான சந்தேகநபர் ஒருவர் ஆரம்பத்தில் குறித்த சி றுமிக்கு தொலைபேசி ஒன்றை பரிசளித்து தொடர்பு கொண்டதாகவும், பின்னர் தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் தேடப்பட்டு வரும் நிலையில், பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வட மாகாணம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!!

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு..

வவுனியா உட்பட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஆடையகங்கள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறந்த நிலையில் வைத்திருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் சார்லஸ், பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து ஊழியர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலையங்களை திறந்து வைத்திருப்பதன் மூலம், வட மாகாணத்தின் இயல்புநிலை பராமரிக்கப்பட்டு வருவதனை தெளிவுப்படுத்துவதற்கும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கே.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் போக்குவரத்து சேவைக்கும் பயணிகளின் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தற்போது அதிகமான பேருந்து சேவைகள் இரவு 8 மணியளவில் நிறுத்தப்படும் நிலைமையில், இரவு நேரத்தில் சேவையை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் இலங்கையில் சிகரெட் விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி!!

கொரோனா தொற்றால்..

கொவிட் – 19 தொற்றால் இலங்கையில் சிகரெட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2020 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இலங்கை புகையிலை நிறுவனத்தின், நடவடிக்கைகள் மற்றும் தேசிய நுகர்வோரின் தனிப்பட்ட பொருளாதாரங்கள் ஆகியவை கொவிட் – 19 தொற்றின் தாக்கத்தால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முடக்கப்பட்டிருந்த வணிக நடவடிக்கைகள் மே மாதம் நடுப்பகுதியில் இருந்து படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, நிறுவனத்தின் வருவாய் ஹலால் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் மற்றும் பிற வரிகள் உள்ளடங்கலாக ரூபாய் 24.1 பில்லியன் ஆக கிடைக்கபெற்றது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் வருமானம் 33% ஆக குறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான நிறுவனத்தின் இலாபம் ரூபாய் 3.1 பில்லியனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 34% குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலிஸ் நிலையத்தில் வாய்ப்பேச்சின் மூலம் து ன்புறு த்தல் : விளம்பரங்களில் நடிக்கும் பெண் முறைப்பாடு!!

மது குலதுங்க..

இலங்கையின் உள்ளூர் விளம்பரங்களில் தோன்றும் பெண் ஒருவர் காவல்துறை நிலையத்தில் வைத்து வாய்ப்பேச்சின் மூலம் து ன்புறுத் தப்பட்டதாக முறையிட்டுள்ளார்.

எனினும் எந்த காவல்துறை என்பதை அவர் குறிப்பிடவில்லை. மது குலதுங்க என்ற இந்தப்பெண் தமது பேஸ்புக் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

தாம் பெண் காவல்துறையினரின் பிரசன்னம் இல்லாமல் ஆண் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர் அதுவே ஒரு தமது உரிமையை மீறியச்செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12ம் திகதியன்று தமது வீட்டுக்கு வந்த காவல்துறையினர் எவ்வித ஆணைகளும் இன்றி தம்மை வி சாரணைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு தம்மை வாய்ப்பேச்சினால் நிந்தித்ததாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஏன் எதற்காக தாம் அழைத்துச்செல்லப்பட்டேன் என்ற விடயத்தை இன்னும் தாம் அறிவில்லை என்றும் மது குலதுங்க தெரிவித்துள்ளார்

தாம் இது தொடர்பில் 118 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முறையிட்டபோதும் அதன்மூலம் பதிலளித்தவர்கள் தமது நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று தம்மிடம் கூறியதாக மது குலதுங்க தெரிவித்துள்ளார்.

 

புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி!!

புகையிரதத்தில் மோதி..

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி நேற்று மாலை நபரொருவர் உ யிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எண்ணெய் ஏற்றும் புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உ யிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் தனது வேக கட்டுப்பாட்டை இழந்து கல்குடா புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பா துகாப்பு கடவையை உடைத்து கொண்டு புகையிரதத்தில் மோதுண்டுள்ளது.

இந்த விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதியான செபஸ்தியன் அருள்நாதன் (வயது 48) என்பவரே காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு!!

வர்த்தக நிலையங்கள்…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (16.08.2020) அதிகாலை குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வழமை போன்று நேற்றையதினம் (15.08) சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் வர்த்தக நிலையங்களை பூட்டி விட்டு அதன் உரிமையாளர்கள் சென்றிருந்தனர்.

இன்று காலை குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளமையினையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் பொலிஸ் காவல் அரணிலிருந்து 100 மீற்றர் தொலைவில் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள இறுவட்டு விற்பனை நிலையம் , சிகையலங்கார நிலையம் என்பனவும் காவல் அரணிலிருந்து குருமன்காடு வீதியில் 100மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வர்ணபூச்சு விற்பனை நிலையமும் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் பூட்டினை உடைந்து உள்நுழைந்த திருடர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்றுமுன்தினம் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில்,

அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித
புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 2020

(சார்வரி மீ ஆவணி 12ம் நாள் (28.08.2020) வெள்ளிக்கிழமை காலை 6.05 – 7.28)

சிவநேய செல்வர்களே!

 

இயற்கை எழில் சூழ்ந்து நீர்வளம், நிலவளம், கனிவளம், மலைவளம் என இயற்கை வளங்களும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஆசியா கண்டத்தின் இந்து சமுத்திரத்தின் முத்தென திகழ்கின்றதும் திருமூல நாயனாரால் சிவபூமி எனப் போற்றப்பட்டதும்,பஞ்ச ஈச்சரங்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் இலங்காபுரியில் ஆறாவதாகப் போற்றப்படுகின்ற வவுனியா – கோவில்குளம் எனும் திவ்ய சேத்திரத்தில் காசியில் இருந்து எழுந்தருளி அடியவர்களின் மனக்குறையினை அகற்றி இடர்களைந்து இன்னல்கள் தீர்த்து சித்திகள் அருளும் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நாற்திசைகளிலும், புதிதாக அமைக்கப்பட்ட அதிசுந்தர இராஜகோபுரங்களுக்கும் விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரையான மூர்த்திகளுக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் பெருமானுக்கும் நிகழும் சார்வரி வருடம் ஆவணி 12ம் நாள் (28.08.2020) வெள்ளிக்கிழமை மூலநட்சத்திரமும் தசமி திதியும் அமிர்த சித்தயோகமும் கூடிய காலை 6.05 மணிமுதல் 7.28 மணி வரையுள்ள சிங்க லக்கின சுபமுகூர்த்தவேளையில் வேத, ஆகம முறைப்படி பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நடைபெற இறைவன் திருவருள் கைகூடியுள்ளது.

எனவே சிவநேய செல்வர்கள் அனைவரும். கும்பாபிஷேக கிரியைகளையும், பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகத்தையும் கண்குளிர கண்டு இறை பணிபுரிந்து, தொண்டுகள் புரிந்து இம்மை பயன்களை பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

பிரதிஷ்டா கிரியாகால நிகழ்வுகள்

ஆவணி 4ம் நாள் 20.08.2020 வியாழக்கிழமை காலை 9மணிக்கு

பிரதிஷ்டா குருமார்கள் ஆலயத்துக்கு அழைத்து வரப்படல். காலை 9.05 மணிக்கு மேல் 10 மணிக்குள் வரும் சுக்கிர ஹோரையில் பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேக கிரியாரம்பம் விநாயகர் வழிபாடு, பிரதிஷ்டா சங்கற்பம், வருண பூஜை, ஜபம், தேவப்ராமண, அநுஞ்ஞை , சுவாமிகள் அநுஞ்ஞை , தனபூஜை, திரவிய சுத்தி, திரவிய விபாகம், முகூர்த்தப் பத்திரிகா படனம், திரவிய சலார்ச்சனம். மாலை 5 மணி விநாயகர் வழிபாடு, யந்திர பூஜை, பேரீதாடனம்

ஆவணிம் 5ம் நாள் 21.08.2020 வெள்ளிக்கிழமை காலை 7மணி முதல்

வித்யா கணபதி வழிபாடு, வருண பூஜை, ஸ்ரீமஹா கணபதி வழிபாடு, தனாகர்ஷன லக்ஷ்மி ஹோமம், பிரம்மசாரி பூஜை, விநாயகர் அகவல் பாராயணம். மாலை 5 மணி முதல் சங்கடஹர கணபதி வழிபாடு, வருண பூஜை, யந்திர பூஜை, கிராமசாந்தி, பிரவேசபலி, அஷ்டபலி ஆவணிம்

6ம் நாள் 22.08.2020 சனிக்கிழமை காலை 7 மணி முதல்

பாலகணபதி வழிபாடு, வருண பூஜை, நவக்கிரக மகம், மூர்த்தி ஹோமம், கோளறு பதிகம் பாராயணம். மாலை 5மணி முதல் விநாயகர் வழிபாடு, வருண பூஜை, யந்திர பூஜை, திஷா ஹோமம், ரக்ஷோக்ன ஹோமம்.

ஆவணிம் 7ம் நாள் 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல்

விநாயகர் வழிபாடு, வருண பூஜை, யந்திர பூஜை பூர்த்தி, சம்ஹிதா மந்திர ஹோமம், சிவபுராண பாராயணம். மாலை 5மணி முதல் விநாயகர் வழிபாடு, வருண பூஜை, உத்தமபக்ஷ்மண்டூக பத வாஸ்து சாந்தி.

ஆவணி 8ம் நாள் 24.08.2020 திங்கட்கிழமை காலை 7 மணி முதல்

கணபதி வழிபாடு வருண பூஜை, கங்கா தேவி பிரதிஷ்டை, கோபூஜை, சூர்யாக்னி, சங்கிரணம். காலை 9.05 மணிமுதல் 9.45 மணிக்குள், தூபிஸ்தானம், சிற்பிகள் சம்பாவனை. மாலை 3 மணி முதல் கணபதி வழிபாடு, வருண பூஜை, பூமி பூஜை, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ஆச்சார்ய மூர்த்திபர்கள் ரஷ்சபந்தணம், நித்திய துவஜாரோகணம், பிரசன்னாபிஷேகம், பிரசன்ன பூஜை, கடஸ்தாபனம், கலாகர்ஷணம், அக்னி உத்பவம், நவாக்னி, பஞ்சாக்னி விபஜனம், பிரதான கும்பங்கள், மந்திரயாகசாலா பிரவேசம், ஹோமங்கள் பூர்ணாகுதி, தீபாராதனை, திருவருட்பிரசாதம் வழங்கல். மாலை 6.08 மணிமுதல் 8.02 மணிக்குள் தீபயந்திர, பிம்பஸ்தாபனம், அஷ்ஷபந்தனம்

ஆவணி 9ம் நாள் 25.08.2020 செவ்வாய்க்கிழமை காலை முதல் 27.08.2020 வியாழக்கிழமை காலை வரை

கணபதி வழிபாடு, வருண பூஜை, விஷேட சந்தி, பூதசுத்தி, தர்மத்துஜை பூஜை, யாகசாலா பிரவேசம், யாக பூஜை, பாவனாபிஷேகம், ஸ்தாலிபாகம், நவாக்னி, பஞ்சாக்னி பூஜை, திரவ்ய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, வேத, ஸ்தோத்திர திருமுறை பராயணம், தாளவாத்ய உபசாரங்கள், திருவருட் பிரசாதம் வழங்கல்.

26.08.2020 புதன்கிழமை காலை 8மணிமுதல் – 27.08.2020 வியாழக்கிழமை மாலை 3 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

ஆவணி 11ம் நாள் 27.08.2020 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல்

விநாயகர் வழிபாடு, வருண பூஜை, பஞ்சகவ்ய, பஞ்சாமிர்த பூஜை, சோடஷ கலச விம்பசுத்தி பூஜை, யாகசாலா பிரவேசம், யாக பூஜை, கர்ப்பக்கிரக துவார பூஜை, கௌதூக பந்தனம், பூர்வசந்தானம், நவாக்னி, பஞ்சாக்னி பூஜை, பச்சிம சந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை, வேத ஸ்தோத்திர திருமுறை பாராயணம், தாள வாத்திய உபசாரங்கள், நாட்டிய சமர்ப்பணம், திருவருட் பிரசாதம் வழங்கல்.

ஆவணி 12ம் நாள் 28.08.2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல்

விநாயகர் வழிபாடு, வருண பூஜை, பூத சுத்தி, யாகசாலா பிரவேசம், யாக பூஜை, நவாக்னி, பஞ்சாக்னி பூஜை, பூர்ணாகுதி சோடச உபசார சமர்ப்பணம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, பிரதட்சிண, நமஸ்காரம், சதுர்வேதபாராயணம், உபநிஷத் பாராயணம் சிவாகம சுலோக பாராயணம், திருமுறை பாராயணம், கீத வாத்ய நாதாஞ்சலி சமர்ப்பணம், ஆசீர்வாதம், பலிகள் தானாதிகள், சர்வ மங்கள. வாத்திய சகிதம் பிரதான கும்பங்கள் புறப்பாடு காலை 6.05 நிமிடத்தில் ஸ்தூபிகள் கும்பாபிஷேகம், தொடர்ந்து இராஜ கோபுரங்கள், கும்பாபிஷேகம், சுந்தர இராஜ கோபுர கபாட பூஜை, துவார புஸ்பாஞ்சலி, பிரதான கும்பம் மூலாலய பிரவேஷம், லஜாங்க ஆவாஹணம், ப்ராண பிரதிஷ்டை, காலை 7.28 மணிக்குள் வரும் சிங்கலக்ன சுபவேளையில் விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரையான மூர்த்திகளுக்கும், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகிலாண்டேசுவரர் சுவாமிக்கும் மஹா கும்பாபிஷேகம், மஹா கவிர் நிவேதனம், ஸ்திராகுதி, எஜமான் அபிஷேகம், தசமங்கள தர்சனம், திருக்கதவம் திறத்தல், கும்பாபிஷேக பல சமர்ப்பணம், சிவாச்சார்ய கௌரவம், மங்கள ஆசீர்வாதம், ஆசியுரைகள், மஹா அபிஷேகம், தீபாராதனை திருவருட் பிரசாதம் வழங்கல். மாலை 4 மணி முதல் சாயரட்சை பூஜை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமுகார்ச்சனை, UI சுவாமி திருவீதியுலா நடைபெறும்.

குருமார் விபரம்

??கும்பாபிஷேக அருளாசி வழங்கும் குருமணிகள்??

 

சிவஸ்ரீ கி.சதாசிவ குருக்கள்
ஆகம பிரவீணா சமஸ்கிருத பண்டிதர்
மட்டுவில் – வவுனியா

சிவஸ்ரீ கைலை வாமதேவ குருக்கள்
ஆதீன குருமணி,
ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் – நயினாதீவு

பிரம்மஸ்ரீ ச.பத்மநாப சர்மா
சிரேஷ்ட விரிவுரையாளர் – சமஸ்கிருதம்,
யாழ் பல்கலைக்கழகம்
முன்னேஸ்வரம் – நல்லூர்

சிவாகம சிரோமணி
சிவஸ்ரீ க.ச.சோமஸ்கந்த குருக்கள்
பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவில்

வேதாகம மாமணி
சிவஸ்ரீ சோ. இரவிசந்திர குருக்கள்
ஆதீன கர்த்தா – பிரதமகுரு திருமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில்

வேதாகம கிரியாதத்துவநிதி
சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக் குருக்கள்
நந்தாவில் நாகபூஷணி அம்மன் கோவில் இறம்பைக்குளம் வவுனியா.

பிரதிஷ்டா பிரதம குருமணி “சாகித்ய சிரோமணி”, “சிவாகம பாஸ்கரன்”, “நயினை குருமணி”
சிவஸ்ரீ வை.மு. பரம முத்துக்குமாரசாமி குருக்கள் நயினை ஆதீன பிரதம குருமணி, ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்
நயினாதீவு – வடகோவை

ஆலய பிரதம குருமணி
“வேதாகம கிரியா கலாநிதி”, “சக்தி உபாசகர்”
சிவஸ்ரீ சதா சங்கரதாஸ் குருக்கள்
(கோவில்குளம்- புங்கிடுதீவு)
சிவஸ்ரீ ச.விவேந் குருக்கள்

??ஆலய குருமார்கள்??
பிரம்மஸ்ரீ அ சுந்தரராஜ சர்மா
பிரம்மஸ்ரீ ச. பாலமுரளி சர்மா
பிரம்மஸ்ரீ இராகுல சர்மா

மூர்த்திய குருமணிகள்
சிவஸ்ரீ. ப.மு. பாலகுமார குருக்கள் – நயினை – வடகோவை
சிவஸ்ரீ. ப.மு. குருபர குருக்கள் – வடகோவை
சிவஸ்ரீ.மு.ப சண்முகராஜக்குருக்கள் – வடகோவை
சிவஸ்ரீ. மு.ப குருநாத குருக்கள் – வடகோவை
சிவஸ்ரீ. மு.ப. பாலசுப்பிரமணியக்குருக்கள் – வடகோவை
சிவஸ்ரீ. வே சரண்ய புரீஸ்வர குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. ப கணேச ராஜகுருக்கள் – நல்லூர்
சிவஸ்ரீ. தி சக்திதர குருக்கள – வவுனியா
சிவஸ்ரீ. பா. கிருஷ்ணகுமார குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. நா. பிரபாகரக் குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. சி. சிவகுமாரக் குருக்கள் – கல்வியங்காடு
சிவஸ்ரீ. ந. கேசவன் குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. சோம கிரிதரக் குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. தி. குணாதரக் குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. உ. சிவகுமார குருக்கள் – வவுனியா
சிவஸ்ரீ. யோ. ஞானேஸ்வரக் குருக்கள் – வவுனியா

சாதகாசிரியர்கள்
சிவஸ்ரீ.ந. பிரசாந்த குருக்கள் – வட்டுக்கோட்டை
சிவஸ்ரீ. பால. கணேஸ்வரக் குருக்கள் – ஆதீன குருமணி, நயினாதீவு பிரம்மஸ்ரீ ச. கௌரிசங்கர சர்மா – வடகோவை
பிரம்மஸ்ரீ வெ. கஜராஜ சர்மா – வட்டுக்கோட்டை
பிரம்மஸ்ரீ கே. சுதாகரன் சர்மா – வவுனியா

யாகசம்ரக்ஷ்கர்
பிரம்மஸ்ரீ S. சுஜீவ சர்மா – காரைநகர்
பிரம்மஸ்ரீ இ. கோபிநாத சர்மா – கல்வியன்காடு
பிரம்மஸ்ரீ உமாபாலா சர்மா – கண்டி
பிரம்மஸ்ரீ பா. சதீஸ்வர சர்மா – வடகோவை
பிரம்மஸ்ரீ நிரோசன் சர்மா – உரும்பிராய்
பிரம்மஸ்ரீ ராகேஸ் சர்மா – கொழும்பு
பிரம்மஸ்ரீ ல. சோமநாத சர்மா – சித்தங்கேணி
பிரம்மஸ்ரீ N. சிந்துஜ சர்மா – சித்தங்கேணி
பிரம்மஸ்ரீ ஸ்ரீ. அம்பிகநாத சர்மா – உரும்பிராய்
பிரம்மஸ்ரீ சி. ஸ்ரீதர சர்மா – சுன்னாகம்

ஸ்வயம்பாகி
பிரம்மஸ்ரீ சிவா சர்மா – கதிர்காமம்
பிரம்மஸ்ரீ ஜனார்த்தன் சர்மா

தகவல்:

ஆலய அறங்காவலர்களும் கும்பாபிசேக குழுவினரும்