ம னித த லையை எடுத்துச் சென்று அ டுப்பில் போ ட்டு சு ட் டு சா ப்பி ட்ட இ ளைஞன் : க தி க லங்க வை த்த ச ம்பவம்!!

இ ளைஞன்..

ஆந்திராவில் ம னிதனின் த லையை அ டுப்பில் போ ட் டு சு ட் டு சா ப்பிட்ட சை க்கோ இ ளைஞனின் செ யல் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வ சிக்கும் சுப்ரமணியம் எ ன்பவரின் வீ ட்டின் அ ருகே கோ ணி ப்பை ஒ ன்றில் ம னி த த லை இ ருப்பதைக் க ண்டு அ வர் அ திர்ச்சியடை ந்துள்ளார்.

அ தன் பி ன் அ ந்த கோ ணிப் பையை அ ருகில் பா ழடைந்த வீ ட்டில் வ சிக்கும், ராஜு(20) எ ன்ற இ ளைஞன் அ ந்த சா க்குப் பை யை எ டுத்து செ ன்றுள்ளார். இ தையடுத்து அ வரை பி ன் தொ டர்ந்து செ ன்று பா ர்த்த போ து, வீ ட்டினுள் அ ந்த இ ளைஞனும், பெ ண் ஒ ருவரும் ம னித த லையை சு ட் டு சா ப்பிட்டு ள்ளனர்.

இ தைக் க ண்டு அ தி ர்ச் சி யடைந்த சுப்ரமணியம் அ ளித்த பு காரி ன் பே ரில் பொ லிசார் அ ப்பகு திக்கு வி ரைந்து வ ந்து ராஜு ம ற்றும் அ வருடன் வ சித்து வ ந்த பெ ண் ஒ ருவரையும் கை து செ ய்து, வி சாரணை மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.

மே லும் கை து செ ய்யப்பட்ட இ ளைஞன் போ தை க் கு அ டி மை யானவர் எ ன்பதும், அ ங்கிருக்கும் இ ர யி ல் நி லையத்தின் ஆ ள் ந டமாட் டம் இ ல்லாத ஒ துக்குபுற த்தில் கி டைப்பதை எ ல்லாம் தி ண்பதை வ ழக்கமாக கொ ண்டிருந்து ள்ளான்.

இ தைக் க ண்ட அ ப் ப குதி ம க்கள் க டும் பீ தியில், பொ லிசில் பு கார் கொ டுத்துள் ளனர். ஆ னால் அ ப்போ து பொ லிசிடம் இ ருந்து த ப் பி ய இ ந்த ந பர் இ ப்போது சி க் கி யு ள் ளதாக த கவல்கள் தெ ரிவிக்கி ன்றன.

வீடற்ற 14000 பேருக்கு 4 மாதங்களில் வீடு : புதிய அரசாங்கம் அறிவிப்பு!!

வீடுகள்..

உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அற்கமைய வீடுகள் அற்ற 14000 பேருக்கு 4 மாதங்களில் வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக, கிராமிய வீடு மற்றும் நிர்மாணிப்பு மற்றும் கட்டட பொருள் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இந்தக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வீடமைப்பு திட்டம் தடைப்பட்டுள்ளது. அதன் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்மாணிப்பு துறையில் ஈடுபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை முழுவதும் மின்சார தடை : 8 மணித்தியாலத்தில் 100 கோடி ரூபாய் நட்டம்!!

மின்சார தடை..

கெரவலப்பிட்டிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் 8 மணி நேர மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு 100 கோடி ரூபாயை விடவும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 12.45 மணி முதல் சில பகுதிகளில் நள்ளிரவு வரை இந்த மின்சார தடை ஏற்பட்டது. பொதுவாக நாள் ஒன்றுக்கு 1.8 மில்லியன் மின்சார யுனிட்களும் இரவில் 2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார யுனிட்கள் நாடு முழுவதும் வழங்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார வழங்கும் காலத்தில் மின்சார யுனிட் ஒன்றிற்கு 125 ரூபாய் பொருளாதார நட்டம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார தடையால் நீர் தடையும் நேற்று ஏற்பட்டது.

அத்துடன் கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. எப்படியிருப்பினும் இது ஒரு திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என தான் நம்புவதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

 

வவுனியா மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!!

கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக நடைபெறாது இருந்த வவுனியா மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் சி.வரதராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில மாதங்களாக கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக மத்தியஸ்த சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பி ணக்குகள் தொடர்பான வி சாரணைகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

தற்போது சுமூகமான நிலைமை ஏற்பட்டு வரும் நிலையில் மீளவும் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மத்தியஸ்த சபை கூடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது நீதிமன்ற பிணக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் கொரோனா நிலவரம் : கொரோனா பரவல் தடுப்பு மையம் விடுத்துள்ள அறிவிப்பு!!

கொரோனா..

கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாத 68 இலங்கையர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு தேசிய மையம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டாரில் இருந்து 36 பேரும், சென்னையிலிருந்து 29 பேரும், ஜப்பானில் நரிதாவிலிருந்து மூன்று பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து ​​பி.சி.ஆர் சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனிமைப்படுத்தல் மையங்களில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை முடித்த 307 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, 30,585 பேர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்துவிட்டு இன்று தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 46 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இன்னும் 5333 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் நேற்று மொத்தம் 1080 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்படி, இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 85,118 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் மின் துண்டிப்பு : தலைப்பு செய்திகளாக வெளியிட்ட சர்வதேச ஊடகங்கள்!!

இலங்கை முழுவதும் மின் துண்டிப்பு..

இலங்கையில் நேற்றைய தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நீண்ட நேரத்திற்கு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.

மதியம் 12.30 மணியளவில் முழு நாட்டிற்கும் மின்சாரம் தடைப்பட்டது. இந்நிலையில், மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் முயற்சிகளுக்கு 7 முதல் 8 மணிநேரம் எடுத்தன.

மின் துண்டிப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நீர் வழங்கல் மற்றும் இணைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட மின் தடை குறித்து சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் தலைப்பு செய்திகளாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : விரைவில் நகர் முழுவதும் சிசிடிவி!!

விரைவில் நகர் முழுவதும் சிசிடிவி..

வவுனியா நகரில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் திருட்டு சம்பவம் தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வா அவர்களிடம் வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் விசேட கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்தில் வர்த்தகர் சங்கத்தினரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வாவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களை தடுப்பதற்கு பொலிஸார் ஒத்துழைப்புக்களை தரவேண்டும்.

குறிப்பாக இரவு நேரங்களில் நடமாடும் பொலிஸாரினை சேவையில் ஈடுபடுத்தி சந்தேகத்திற்கிடமாக செல்லும் வாகனங்களை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் அத்துடன் சிசிரிவி பொருத்தும் எமது செயற்பாட்டிற்கு ஒத்துழைப்புக்களையும் தருமாறு வர்த்தகர் சங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் இரவு நேரங்களில் நடமாடும் பொலிஸாரினை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்துவதாகவும் சிசிரிவி பொருத்தும் வர்த்தகர் சங்கத்தின் செயற்பாட்டிற்கு பூரண ஆதரவினை வழங்குவதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வா உத்தரவாதம் அளித்திருந்தார்.

வவுனியா நகரில் கடந்த 5 நாட்களுக்குள் மாத்திரம் நான்கு கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமையுடன் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு!!

கொரோனா..

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2990ஆக உயர்ந்துள்ளது. இன்று இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஓமானில் இருந்து வந்த இருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 5 பேர் என 7 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

இந்நிலையில் 213 பேர் கொரோனா தொற்றுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இன்று கொரோனா தொற்றில் இருந்து 6 பேர் குணமடைந்தனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2676ஆக அதிகரித்துள்ளது.

வீதி வி பத்தில் சி க்கி ம ர ணமடைந்த மாணவி : பொலிசாரிடம் சிக்கிய இரு மர்ம நபர்கள்!!

இந்தியா…

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு உ த வித்தொகை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்றுவந்த மா ணவி ம ர்ம மான முறையில் ம ரண மடை ந்த ச ம்ப வத்தில் இ ருவ ர் கை து செ ய்ய ப் ப ட் டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில் கவுதம் புத்த நகரில் வசிக்கும் 20 வயதான சுதிக்ஷா பாட்டி என்பவரே ஆகஸ்டு மாதம் 10 ஆம் திகதி சாலை வி ப த்தி ல் கொ ல் லப் ப ட்டார்.

இந்த விவகாரத்தில் த ற் போ து க ண் காணிப் பு கமெராக்களில் ப திவா கி யுள்ள காட்சிகளின் அடிப்படையில் இ ரு வரை பொ லி சார் கை து செ ய் து ள் ளனர்.

கொரோனா ப ரவ லை அடுத்து அமெரிக்காவில் இருந்து கடந்த மாதம் ஊருக்கு திரும்பிய சுதிக்ஷா பாட்டி, ச ம் ப வத்தன்று தமது உறவினர் ஒருவருடன் பை க் கில் ப ய ணம் செ ய் துள் ளார்.

இந்த நிலையில் புலந்த்ஷாஹர் மா வட்டத்தில் வைத்து சாலை வி ப த் தில் சி க் கி சுதிக்ஷா பாட்டி ம ரண ம டை ந்தார். இந்த வி வ கார ம் தொடர்பில் கை து செ ய்ய ப் ப ட் டு ள்ள இருவரின் நோ க்க ம் என்ன என்பது தொடர்பில் தகவல்களை பொ லிசா ர் வெ ளி யி ட மறு த் துள்ளனர்.

சுதிக்ஷா பாட்டி பைக்கில் பயணப்பட்ட நிலையில், இருவர் அந்த பைக்கை பின் தொடர்ந்து தொ ல் லை கொடு த் ததா க வும், தங்களது ம க ள் இ ற க்க இதுவே கா ர ணம் என பெ ற்றோ ர் கு ற் ற ச் சாட் டை முன் வை த் திருந்தனர்.

ஆனால் நடந்த ச ம் ப வ த் தை திசை திருப்ப குடும்பத்தினர் முயல்வதாக பொ லி சார் தெரிவித்திருந்தனர். உ ற வின ரு டன் பைக்கில் செல்லவே இரு ம ர் ம ந பர் க ள் து ரத் தி ய தா கவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க முய ற் சிக்கவே விப த் தில் சி க்கி ய தாகவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் சு ட் டிக் கா ட் டியிருந்தார்.

ஆனால் பொ லி சா ர் குடும்பத்தினரின் கு ற் றச் சா ட் டுக ளையும் பு கா ர்க ளை யும் ஏ ற்க ம று த்து வருவதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை : குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரம் அனுமதி!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் முதல் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தவிர்த்து கொரோனா அ ச்சுறுத்தல் இல்லாத நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

எனினும் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் திகதி குறித்து இன்னமும் அரசாங்கம் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

விமான நிலையத்தை மீண்டும் திறப்பது மற்றும் எந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பது என்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

-தமிழ்வின்-

2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று : மூடி மறைத்த சீனா : தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து : அதிர்ச்சி ஆய்வு!!

கொரோனா வைரஸ்..

கொரோனா பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சமீப காலமாக உலகை அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டில் சீனாவின் ஜுனான் மாகாணத்தில் உள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணிபுரிந்த 6 பேர் வெளவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை முடித்த பின்னர் நிமோனியா போன்ற நோயால் பா திக்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று பேர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பிற அறிகுறிகளுடன் பின்னர் இ றந்தனர். அது மட்டுமின்றி தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதேபோல் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொண்ட இரு நிபுணர்கள், அது கொரோனா நோய்த்தொற்றின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கொரோனா பரவல் தொடர்பில் அதன் தோற்றம் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய அதில் உள்ள சான்றுகள் வழிவகுத்தன என குறிப்பிட்டுள்ளனர்.

2012-ல் நோய்த் தொற்றால் இ றந்த சுரங்கத் தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா பெருந்தொற்று போன்ற ஒற்றுமை இருப்பதை நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.

இந் நிலையில், தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடையதாக மாறியிருப்பதாக மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு D614D என்று பெயரிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோ தனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போது சோ தனை கட்டத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது பாதிக்காது என மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா கடந்த வருட இறுதியில் ஆரம்பித்தது என எல்லோராலும் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஆரம்பித்தது எங்கே எப்போது என்ற மர்மம் இன்னுமும் நீடித்த வண்ணமே உள்ளது. இந்நிலையிலேயே இது 2012ம் ஆண்டு ஆரம்பித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் அ ச்சம் கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் ப லியானோர் எண்ணிக்கை 7.73 லட்சத்தைக் தாண்டி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18-கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸால் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.46-கோடியைத் தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம் : 3 மாகாணங்களுக்கு தொடரும் சிக்கல்!!

மின்சார விநியோகம்..

இலங்கை முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய பகுதிகளுக்கு வழமை நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது வரையில் வடக்கு, வட மத்திய, ஊவா மாகாணத்தில் மின்சாரம் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கெரவலபிட்டிய உப மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. அதனை வழமைக்கு திருப்புவதற்கு பல கட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

கொரோனா..

அண்மையில் ராஜாங்கன யாய 5 நவோத்யா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் கொரோனா தொற்றுக்குளளாகிய நிலையில் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த மாணவன் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் குணமடைந்த பின்னர் இரண்டாவது தடவையாக கொரோனா தொற்றியுள்ளதாக வைத்திய பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

இதனால் இந்த நோயாளியிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு கொரோனா தொற்றாதென்பதே வைத்தியர்களின் கருத்தாகும். இதனால் 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுமாறு கூறி அவரை வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு அனுப்பியதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மாணவனால் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த பாடசாலை இன்றைய தினம் மீளவும் திறக்குமாறு கல்வி அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நல்லூர் தேர்த்திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!!

நல்லூர் தேர்த்திருவிழாவில்..

நல்லூர் ஆலய வளாகத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா மிகச்சிறப்பாக இன்று இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்து கொண்ட 6 பேரே திருட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தாலிக்கொடியொன்றும், 6 தங்கச்சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரகள், திருகோணமலை, மட்டக்களப்பு, செங்கலடி, கல்லடி பகுதிகளை சேர்ந்தவர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 

வவுனியாவில் 7மணிநேரமாக தடைப்பட்ட மின்சாரம் வழமைக்கு திரும்பியது!!

மின்சாரம்..

கெரவலப்பிட்டியில் உள்ள மின்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்பட்டிருந்தது.

12.40 மணியளவில் தடைப்பட்ட இவ் மின்சார தடை இருமணி நேரத்தில் சீர் செய்யப்படும் என தெரிவித்திருந்த போதிலும் பின்னர் இரவு 8.00 மணிக்கு முன்னராக சீர் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியா மாவட்டம் உட்பட நாட்டின் சில பாகங்களில் இரவு 7.30 மணியளவில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.

திடீர் மின்சார தடை காரணமாக வங்கிகள் வர்த்தக நிலையங்கள் போன்றன பல மணிநேரமாக மின்பிறப்பாக்கியின் மூலம் இயங்கியிருந்தன.

 

வவுனியாவில் துவிச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயம் உரிமம் : ம டக்கிப் பி டித்த நகரசபையினர்!!

துவிச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயம் உரிமம்..

வவுனியா நகரசபை வளாகத்தில் இன்றையதினம் (17.08.2020) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணிவரை நகரசபையினரினால் துவிச்சக்கரவண்டிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

நூலக வீதி , பூங்கா வீதி , நகரசபை வீதியூடாக பயணித்த துவிச்சகரவண்டிகளை நகரசபையினர் வ ழிம றித்து துவிச்சரவண்டிகளுக்குக்காக உரிமத்தினை 15ரூபா கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

உரிமை பத்திரத்தில் துவிச்சக்கரவண்டியின் வகை , துவிச்சக்கரவண்டியின் அளவு , துவிச்சக்கரவண்டியின் இலக்கம் என்பன பதியப்பட்டதுடன் அதன் பின்னர் துவிச்சகரவண்டிகளின் பொருத்துமாறு இலக்கத்தகடும் வழங்கி வைக்கப்பட்டன.

குறிப்பாக இன்றையதினம் 50க்கு மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகளுக்கு உரிமம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.