கொரோனாவால் அதிகளவான உயிர்ப்பலிக்கு காரணம் என்ன : பிரித்தானியாவிலிருந்து ஒரு மருத்துவர்!!

மல்கோத்ரா..

கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகளுக்கு காரணம் என்ன? என்பது பற்றி இங்கிலாந்து வாழ் இந்திய டாக்டர் விளக்கி உள்ளார். கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகள் உலகையே அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. இதுவரையில் ஏறத்தாழ 2 லட்சத்து 48 ஆயிரத்து 347 உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போ ர்க்க ளத்தில் முன்நின்று போ ராடுகிற என்.எச்.எஸ். அரசு பொது மருத்துவத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறவர்களுள் ஒருவரான டொக்டர் அசீம் மல்கோத்ரா. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இதய மருத்துவ நிபுணர் மட்டுமல்ல, பேராசிரியரும்கூட.

கொரோனா வைரஸ் ப லிக்கு மிக முக்கிய காரணம், மோசமான உணவுதான் என்பது டொக்டர் அசீம் மல்கோத்ராவின் கருத்தாக அமைந்துள்ளது. இதையொட்டி அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியின்போது கூறியதாவது..

கொரோனா வைரசால் ஏற்பட்டு வருகிற உயர்ப்பலிகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உடல் பருமனும், அளவு கடந்த எடையும் அறைக்குள் புகுந்த யானைபோல துவம்சம் செய்து விடும். இவைதான் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணியாக இருக்கின்றன.

இந்தப் பிரச்சினை முக்கியமாக கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதிலும் ஆசிய நாட்டவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்தியா குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நாடாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக டைப்-2 நீரிழிவு. உயர்ரத்த அழுத்தம், இதயநோய் ஆகிற மூன்றும் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிகப்படியான கொழுப்பால்தான் இது நேர்கிறது.

இப்போது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட 60 சதவீதத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிக எடை கொண்டவர்களாகவோ, உடல் பருமன் ஆனவர்களாகவோதான் இருக்கிறார்கள். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் 8 பேரில் ஒருவர் வளர்சிதை மாற்றத்தில் ஆரோக்கியமானவர்கள். அதாவது, இயல்பான ரத்த அழுத்தம் இருக்கும்.

ஆண் என்றால் இடுப்பு சுற்றளவு 102 செ.மீ., பெண் என்றால் 88 செ.மீ.க்கும் குறைவாக இருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்கள். ரத்த சர்க்கரையும் இயல்பான அளவு இருக்கும். நல்ல கொழுப்பு ஆரோக்கியமான அளவில் இருக்கும். இதை எல்லோரும் வசப்படுத்த முடியும். அதற்கு தேவை, சில வாரங்கள் உணவு முறையை மாற்றவேண்டியது மட்டும்தான்.

டைப்-2 நீரிழிவு நோய்க்கு பயன்படுத்துகிற மருந்துகள், ஆயுட்காலத்தை மேம்படுத்துதல் அல்லது இறப்பு அபாயத்தை குறைத்தல் ஆகியவற்றுக்கு மிக குறைந்த அளவுதான் பலன் அளிக்கின்றன. ஆனால் பெரும்பாலோருக்கு இது தெரிவதில்லை. மேலும், இந்த மருந்துகள் நிறைய பக்க விளைவுகளுடன் வருபவை ஆகும்.

மருந்துகளை விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. உடலை பொறுத்தமட்டில் அதன் ஆரோக்கியத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை வலியுறுத்தத்தான் இதை சொல்கிறேன்.

எனது சொந்த மருத்துவ அனுபவத்திலும், மருத்துவ புத்தகங்களை கற்றதின் அடிப்படையிலும் நான் கூற விரும்புவது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை விட்டுவிடுங்கள். இவை சர்க்கரை, ஸ்டார்ச், ஆரோக்கியம் இல்லாத எண்ணெய்கள், பிற சேர்க்கைகள், பிரிசர்வேடிவ் இரசாயனங்கள் சேர்க்கப்பட்டவை. இவை நல்லதல்ல.

ஆசிய நாட்டவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஆலோசனை, இந்த வகையான உணவுகளை விட்டு விடுங்கள். புத்தம் புதிதாக சமைத்து சாப்பிடுங்கள். இந்திய, இலங்கை உணவில் மற்றொரு பிரச்சினை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதுதான்.

இவையும் நல்லதல்ல, இவை குளுக்கோஸ், இன்சுலின் அளவை அதிகரித்து விடுகின்றன. இது டைப்-2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றில் நாளடைவில் கொண்டு போய் விட்டு விடும். குறிப்பாக அதிகளவில் மாவுசத்து, வெள்ளை அரிசி சாதத்தை குறிப்பிடலாம்.

எனவே காய்கறிகள், பழங்கள் அதிகளவில் சாப்பிடலாம். அசைவ உணவு பிரியர்கள் முட்டை, மீன் சாப்பிடலாம் என டொக்டர் அசீம் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காட்டுத்தீ போல் பரவும் : அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை!!

கொரோனா..

மனிதர்கள் சமூக இடைவெளியை கவனத்தில் கொள்ளாது கூட்டம் கூட்டமாக கூட ஆரம்பித்தால், கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவக் கூடும் என அமெரிக்காவின் தொற்று நோய் தொடர்பான நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் அந்தனி பௌசி எச்சரித்துள்ளார்.

இந்த வைரசுக்கு ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவும் விசேடமான இயலுமை இருப்பதுடன் வினைத்திறன் உள்ளது. காட்டுத்தீ போல் பரவும் மிகப் பெரிய இயலுமை இந்த வைரசுக்கு இருக்கின்றது என்பது எமக்கு தெரியும். இதனை பொதுவான மற்றும் தனிமையான சம்பவமாக கண்டுள்ளோம்.

மக்கள் அனைவரும் கூட்டம், கூட்டமாக நெருக்கமாக காணப்பட்டால் இந்த வைரஸ் வேகமாகவும் இலகுவாகவும் பரவும் என்பது தெளிவானது. இதுவரை பார்த்த வைரஸ்களை விட இது வேகமாக பரவக் கூடியது.

உங்களுக்கு ஏதேனும் ஒன்றை குறைத்துக்கொள்ள சந்தர்ப்பம் இருக்கும் போது, நீங்கள் அதனை கவனத்தில் கொள்ளாது பின்நோக்கி இழுக்க ஆரம்பித்தால் தொடர்ந்தும் வைரஸ் தொற்றிய நோயாளிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். மரணங்களை எதிர்பார்க்கலாம் எனவும் மருத்துவர் அந்தனி பௌசி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அமெரிக்காவில் முடக்கல் நடவடிக்கைகளை நீக்க கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ள சில மாநிலங்களில் பலர் சமூக இடைவெளி சட்டத்தை மீறி நடந்துக்கொள்கின்றனர் என்பதுடன் பலர் முக கவசங்களை கூட அணியாமல் இருப்பதை காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!!

கொரோனாவால் பலி..

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 755 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 197 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மூடப்பட்ட சலூன்களை திறக்க அனுமதி வழங்கிய அரசாங்கம்!!

சலூன்களை திறக்க அனுமதி..

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு கலை நிலையங்கள், முடி வெட்டும் நிலையங்களை பாதுகாப்பு முறையின் கீழ் திறப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கத்தினால் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அழகு கலை நிலையங்களை மீள திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அழகு கலை துறைக்கான சட்டத்திட்டங்களை முன்னெடுக்க வேறு எந்த துறையும் இல்லை என்பதனால் சுகாதார அமைச்சிற்கு மாத்திரமே அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தினசரி சேவையின் போது, சுகாதார அமைச்சின் ஆலோசனையின்படி, முடி வெட்டுதல் உள்ளிட்ட மிக அத்தியாவசிய சேவைகளை மட்டுமே மேற்கொள்வதற்கு வழங்க சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப போதுமான இடவசதியுடன் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அழகு நிலையம் சேவைகளை முறையாக பராமரிப்பது குறித்த அறிவுறுத்தல்களுடன் வழிகாட்டியை சமர்ப்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

-தமிழ்வின்-

பாடசாலைகளுக்கு நேர அட்டவணை : விசேட சந்திப்புகளில் கல்வியமைச்சின் செயலாளர்!!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா நாடளாவிய ரீதியில் அந்தந்த மாகாண கல்வி பணிப்பாளர்களுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நாளைய தினம் கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்தா கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது உள்ளிட்ட கள நிலவரங்கள் பற்றி விரிவாக இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.

கல்வியமைச்சின் செயலாளர் இதுவரை தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் கல்வி பணிப்பாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கருத்துகளை அறிந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாளை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து தொடர்ந்து வடக்கு, ஊவா மாகாணக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் மத்திய மாகாண கல்வி பணிப்பாளரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

சகல மாகாண கல்வி பணிப்பாளர்களையும் சந்தித்த பின்னர் ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும், பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணையை தயாரிக்கவிருப்பதாகவும் கல்வியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொதுவான பத்தாம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளை முதலில் ஆரம்பிப்பதெனவும், சிலவேளை மாகாணத்திற்கு மாகாணம் விசேட நிகழ்ச்சி நிரலின் படி பாடசாலைகள் திறக்கப்படலாமெனவும் தெரியவருகிறது.

-தமிழ்வின்-

கொரோனா வைரஸ் : உலகளவில் இரண்டு நிமிடங்களுக்கு மூவர் உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் இரண்டு நிமிடங்களுக்கு மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

தற்போது வரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும், 3,633,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 251,463 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் உலகளவில் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த எட்டு மணி நேர காலப்பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு உலகளவில் சுமார் 96 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதன்படி, இரண்டு நிமிடங்களுக்கு மூவர் என்ற ரீதியில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த எட்டு மணி நேரத்தில் உலகளவில் 8,906 பேர் நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு மணி நேரத்தில் 1113 பேர் நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 100வது இடத்தில் உள்ளது. இந்தியா 15வது இடத்திலும், அவுஸ்திரேலியா 47வது இடத்திலும், நியூசிலாந்து 81வது இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு வீட்டு திட்டம் : நாளை முதல் பணிகள் ஆரம்பம்!!

கொழும்பில்..

கொழும்பில் குடிசைக் குடியிருப்பில் வாழும் மக்களுக்காக சுமார் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நாளை முதல் இடம்பெறவுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இது குறித்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் முதல்கட்டமாக கொழும்பு – 14 சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, சிறிமுத்து உயன அருகில் 1000 வீடுகளை கொண்ட தொடர்மாடி கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

ஆசிய அபிவிருந்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இதற்காக 5,950 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. மூன்று வருடங்களுக்குள் இந்த திட்டத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த இலங்கை வைத்தியரின் அனுபவம்!!

இலங்கை வைத்தியரின் அனுபவம்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்த விசேட வைத்தியர் பிரியங்கர தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நேற்றைய தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் 19ஆம் திகதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வைத்தியர் தற்போது பூரண குணமடைந்து மீண்டும் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

“மார்ச் மாதம் 18ஆம் திகதி உறங்க செல்ல முன் பல் துலக்க சென்றேன். என்றுமே இல்லாத அளவு புதுவிதமான தொண்டை வலி ஒன்றை அன்று இரவு உணர்ந்தேன். மீண்டும் காலை எழுந்து பல் துலக்க செல்லும் போதும் மீண்டும் அதே வலியை உணர்ந்தேன்.

சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் தொண்டை வலிக்கும் இந்த வலிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதனால் 30 வருட நண்பரான வைத்தியர் ஒருவருக்கு அழைப்பேற்படுத்தி இதனை கூறினேன். நான் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என கூறினேன்.

எனக்கு பு கைப்பிடிக்கும் பழக்கம் இல்லாமையினால் சற்று அ ச்சமடைந்தேன். உடலில் சோர்வு தன்மையை உணர்ந்தேன். ஒரே நேரத்தில் நிறைய ஊசிகளை தொண்டையில் குத்துவதனை போன்ற வலி ஏற்பட்டது.

பின்னர் நானும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. வைத்தியர் என்ற ரீதியில் இதனை சாதாரண நோய் என்று உணர வேண்டும் என்பதனை மனதில் நினைத்துக் கொண்டேன்.

ஏனைய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட அதே மருந்து வகைகள் எனக்கும் வழங்கப்பட்டது. கஞ்சி நான் குடிக்கவில்லை. உப்பு நீரில் தொண்டையை கழுவினேன். ஆவி பிடித்தேன். ஆரம்பத்திலேயே சென்றமையால் சீக்கிரமாக குணமடைந்து வீடு திரும்பினேன்” என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு விசேட நன்றி தெரிவித்த மஹிந்த!!

நன்றி தெரிவித்த மஹிந்த..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட நன்றி தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட கட்சியின் உறுப்பினர்களுக்கு, பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைக்கப்பட்டு, புதிய யோசனைகள் இருப்பின் அதனை ஆராய்ந்து அவசியமான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்து பகிர்வதற்கே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உட்பட குழுவினருக்கு விசேட நன்றியை தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் கருத்துக்களை பகிர்வதற்கு இங்கு வந்தவர்கள் தொடர்பிலும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் வீடொன்று தீயில் எரிந்து நாசம்!!

மன்னாரில்..

மன்னார் – எமில் நகர் கிராம சேவகர் பிரிவிற்கு உற்பட்ட ஜிம்றோன் நகர் பகுதியில்உள்ள வீடொன்று இன்று முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

திடீரென தீப்பற்றியமையால் குறித்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன்,கற்கல் அடுக்கப்பட்டு ஓலையால் மேயப்பட்ட வீடு என்பதால் வீடு முழுவதும் வேகமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து அயலவர்கள் மற்றும் நகர சபையின் தண்ணீர் பவுசரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போதும் வீடு முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

கிராம சேவகர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்து நிலைமை தொடர்பான விடயங்களை பார்வையிட்டுள்ளனர். இக்குடும்பத்துக்கு உதவ விருப்புபவர்கள் 0772658949 தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியும்.

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று : அச்சத்தில் மக்கள்!!

கொரோனா தொற்று..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 266 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,836ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் புதிதாக 2,573 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார்துறையினருக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

எதிர்வரும் மே 11ஆம் திகதியில் இருந்து கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்துறையினர் தமது பணிகளை மீளஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பணிப்புரைகள் அனைத்து நிறுவன தலைமைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் நிறுவனங்களின் தலைமையாளர்கள் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைபிடிக்கவேண்டும்.

தனியார்துறையினர் மே 11ஆம் திகதியில் இருந்து தமது பணிகளை ஒவ்வொரு நாளும் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பணிகளுக்கு யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பது நிறுவனத் தலைமைகளின் பொறுப்பாகும்.

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும், தொடருந்துகளும் அரச மற்றும் தனியார்துறை பணியாளர்களை மாத்திரம் பணிகளுக்கு ஏற்றியிறக்கும் சேவைகளை மேற்கொள்ளும்.

அதேநேரம் அத்தியாவசிய தேவைகளுக்கான பொதுமக்களை தவிர்ந்த ஏனையோர் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முகமாக வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
வெளியில் செல்லும் பொதுமக்களும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே செல்லமுடியும்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இடங்களில் உள்ளவர்கள் மே 11ஆம் திகதி முதல் தமது தேசிய அடையாள அட்டைகளின் இறுதி இலக்க அடிப்படையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எனினும் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத இடங்களுக்கு இந்த தேசிய அடையாள அட்டை முறை அவசியமற்றது என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு அமுலில் இல்லாத இடங்களிலும் மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று திடீரென அதிகரித்த கொரோனா நோயாளர்கள் : கவலையில் சுகாதார அதிகாரிகள்!!

கொரோனா நோயாளர்கள்..

இலங்கையில் நேற்றைய தினம் 33 கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

“நேற்று பதிவாகிய 33 கொரோனா நோயாளர்களில் 31 பேர் விடுமுறைக்கு வீடு சென்ற மீளவும் அழைக்கப்பட்ட கடற்படையினராகும்.

நேற்று இரவு வரை நோயாளிகள் இல்லை என்பதனை குறித்து மகிழ்ச்சியாக இருந்தோம். எனினும் நாள் முடியும் போது 33 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ஆரம்பத்தில் மூவரே அடையாளம் காணப்பட்டனர். இறுதியில் 33 ஆக பதிவாகியது.

இந்த 33 பேரில் ஒருவர் கடற்படையினரின் குடும்பத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவனும், கடற்படையினருக்கு தொடர்புடைய 70 வயதுடைய பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
ஏனைய 31 பேர் கடற்படை சிப்பாய்களாகும். இவர்கள் விடுமுறைக்கு வீடு நோக்கி சென்றவர்களாகும்.

எனினும் இந்த அனைவரும் தற்போது தங்கள் வீடுகளில் இல்லை. குடும்ப உறுப்பினர்களுடன் அவர்கள் ஒரு இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பரவல் குறைவடைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 755 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 194 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

200க்கும் அதிகமான பெண்களை வலையில் வீழ்த்திய காசி : பொதுவெளியில் பதட்டமின்றி செய்த செயல்!!

காசி..

சென்னை பெண் மருத்துவர் உள்பட பல பெண்களிடம் மோசடி செய்த காசி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் தான் காசி.

சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை காட்டிய காசி, 10 ஆண்டுகளாக பொலிசில் சிக்கவில்லை. உள்ளூர் பெண்கள் தொடங்கி, வெளிமாநில பெண்கள் வரை மோ சடி செய்த காசியை, பொலிசார் வலையில் சிக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பல நேரங்களில் தோல்வியில் முடிந்துள்ளன.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் காசி குறித்து புகார் அளித்த நிலையில் பெரும் அழுத்தம் காரணமாக அவனை பொலிசார் கைது செய்தனர்.

காசி நாகர்கோவில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காசி நீதிமன்றத்துக்கு வந்த போது காவி வேட்டி மற்று நீல நிற சட்டை அணிந்திருந்ததோடு, முகத்தில் மாஸ்கும் அணிந்திருந்தான். அவனை புகைப்படம் எடுத்த போது எந்த பதட்டமும் இன்றி போட்டோகிராபரை பார்த்து காதல் சின்னத்தை காசி காட்டியுள்ளான்.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் பெரும் குற்றத்தை செய்துவிட்டு முகத்தை கூட மூடாமல் பயமின்றி காதல் சின்னத்தை சிரித்தபடி போஸ் கொடுத்த காசியை இணையதள பயன்பாட்டார்கள் திட்டி வருகின்றனர்.

நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற இளம்பெண் திடீரென பேசும் திறனை இழந்தது எப்படி? அதிர்ச்சியடைய வைத்த அந்த காட்சி!!

இளம்பெண்..

கேரளாவில் இளம் பெண் நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற போது முக்காடு போட்ட மர்ம உருவத்தை பார்த்த நிலையில் அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்துள்ளார்.

கோழிக்கோட்டை சேர்ந்தவர் அஞ்சு ஷோபிஷ் (27). இவர் அங்குள்ள Chethukadavu Rajiv Gandhi காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் அஞ்சு தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் வீட்டு கழிப்பறையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் சொட்டும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று அஞ்சு பார்த்தார்.

அப்போது பக்கத்தில் இருந்த கல்லூரி சுவர் அருகில் தலையில் முக்காடு போட்டபடி கருப்பு நிறத்தில் நபர் ஒருவர் நின்றிருந்ததோடு அஞ்சுவையே முறைத்து பார்த்துள்ளான்.

பின்னர் அங்கிருந்து அவன் சென்றுள்ளார், அவனை நள்ளிரவில் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன அஞ்சு பேசும் திறனை இழந்துள்ளார்.

இது போன்ற கருப்பு மனிதன் அந்த பகுதியில் அடிக்கடி நடமாடுவது தெரியவந்துள்ளது. தற்போது அஞ்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் கூறுகையில், அஞ்சு தற்காலிகமாக தான் பேசும் திறனை இழந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவரை அதிர்ச்சியில் இருந்து மீட்க முயன்று வருகிறோம் என கூறியுள்ளார்.

இதனிடையில் கருப்பு மனிதன் என அந்த பகுதி மக்களால் அழைக்கப்படும் நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

ஒரு கையில் குழந்தையுடன் 265 கி.மீற்றர் நடந்து செல்லும் பெண் : கொரோனாவால் பரிதாபம்!!

கொரோனாவால் பரிதாபம்..

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையில், பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கைகளில் சுமந்த படி சுமார் 265 கி.மீற்றர் நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை வேதனையடைய வைக்கிறது.

உலகையே அ ச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோயின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதன் படி இந்தியாவில் வரும் 17-ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயங்கினாலும் அதில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் ஏழை எளிய மக்கள் கடந்த பல வாரங்களாக வேலையின்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் போது அவ்வளவு கட்டணத்தை எப்படி செலுத்த முடியும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து அலகாபாத் வரை சுமார் 265கி.மீற்றர் ஒரு கையில் குழந்தையுடனும் இன்னொரு கையில் சூட்கேசுடன் ஒரு பெண் நடந்தே சென்று கொண்டிருக்கும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பக்கம் சென்றவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, சூரத்திலிருந்து அகமதாபாத்திற்கு சிறப்பு இரயில்கள் செல்கின்றன. ஆனால் கட்டணம் அதிகமாக இருப்பதால் தன்னிடம் இரயிலில் செல்ல பணம் இல்லை என்பதால்குழந்தையுடன் நடந்து செல்வதாக கூறியுள்ளார்,

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல கட்டணம் இல்லா இரயில்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.