ம னைவியை க த்தியால் கு த்திக் கொ லை செ ய்த க ணவன்!!

ம னைவியை..

க த்தியால் கு த்தி ம னைவியை கொ லை செ ய்த க ணவனை ஹெம்மாத்தகமை பொ லிஸார் இ ன்று கா லை கை து செ ய்துள் ளனர் மாவனெல்ல – ஹெம்மாத்தகமை, ஏரமினிகம்மான கிராம சேவகர் பிரிவில் மொலிகமுவை பி ரதேசத்தில் பெ ண்ணொ ருவர் கொ லை செ ய்யப்பட்டு ள்ளதாக பொலிஸாருக்கு கி டைத்த த கவல் ஒன்றை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் ச ந்தேக ந பரை கை து செய்துள்ளனர்.

 சம்பவத்தில் 41 வ யதான கே.சுஜானி சங்கீதா எ ன்ற பெ ண்ணே கொ லை செ ய்யப்பட்டுள்ளார். கு டும்ப த கராறு காரணமாக இ ந்த ச ம்பவம் ந டந்துள்ளதாகவும், ஏ ற்கனவே கு டும்ப த கராறு தொடர்பில் இந்த ச ந்தேக ந பரை பொ லிஸார் ப லமுறை எ ச்சரித்து வ ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொ லை செ ய்யப்பட்ட பெ ண்ணின் ச டலம் ம ரண விசாரணைகளுக்காக ஹெம்மாத்தகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ச ம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது?

கொரோனா வைரஸ்..

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பில் தேசிய புலனாய்வுத்துறையினரின் தரவுகளை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் சனிக்கிழமையன்று ஊகடங்களுக்கு இந்த கட்டுப்பாட்டுத் திட்டம் தொடர்பில் தேசிய புலனாய்வுத்துறையினர் விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த வார அமைச்சரவை கூட்டத்தின் போது தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் தமது உறுப்பினர்கள் இந்த கட்டுப்பாட்டுத்திட்டத்தை முன்னெடுத்தமை குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளித்தார்.

இதனையடுத்தே இந்த தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ஊடகங்களுக்கு இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விளக்கமளிக்கவுள்ளனர் என்று பந்துல குணவர்த்தன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்க துரித நடவடிக்கை!!

கடவுச்சீட்டு..

இலங்கை மக்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்க ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அமைச்சர்  தா க் க ல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவது துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் ஒருவரால் முழுமையாக லொக்டவுன் செய்யப்பட்ட பிரதேசம்!!

லொக்டவுன்..

குருணாகல் நிக்கவரெட்டிய பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவு பிரதேசத்தில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் கணவர் சிப்பாயாக செயற்படுகின்ற நிலையில் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பெண் பிரதேசத்தின் பலருடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கணவர் ஊடாக அவருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்றியதாக இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.

விடுமுறைக்கு வந்த கணவருடன் இந்த பெண் பிரதேசத்தின் பல வீடுகள் மற்றும் பொது இடங்களுக்கு சென்றமையினால் குறித்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தட்டுள்ளது.

கொரோனா எதிர்க்கும் தடுப்பூசி மருந்து : இலங்கை அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

தடுப்பூசி மருந்து..

Bacillus Calmette–Guérin (BCG) vaccine என்ற தடுப்பு ஊசி மருந்து வழங்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்த மக்களுக்கு கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

BCG ஊசி மருந்தை போட்டுக்கொண்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் சுவாசிப்பதில் உருவாகும் சிரமத்தை எதிர்கொள்ள சிறந்த எதிர்ப்பு சக்தி இருக்கின்றது என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

சிகரட் வகைகள் விற்பனை செய்வதனை தடை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

சிகரட்..

சிகரட் வகைகள் விற்பனை செய்வதனை தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் புகையிலை பொருள் உற்பத்திகளுக்கு எதிரான அமைப்பு மற்றும் சுகாதாரத் தரப்பினர் இணைந்து கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்தக் காலச் சூழ்நிலையில் புகையிலை உற்பத்திகளை விற்பனை செய்வதனை தடை செய்வது குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸினால் அதிகளவு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக புகையிலை பொருள் உற்பத்திகளுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் மகேஸ் ராஜசூரிய தெரிவித்துள்ளார்.

புகை பிடிக்கும் போது விரல்கள் உதடு என்பன அடிக்கடி தொடுகையுறுவதனால் இந்த வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் வெகு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகைப்பிடிப்பவர்களுக்கு பொதுவாகவே சுவாசப் பிரச்சினைகள் அதிகளவில் காணப்படலாம் எனவும் கொரோனா தொற்றினால் நிலைமை மோசமடையலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளி பயன்படுத்திய சிகரட்டை பலர் புகைத்த காரணமாக அவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்ட சம்பவமொன்று அண்மையில் பதிவாகியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகைப்பொருள் பாவனையற்ற ஓர் தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு கிரமமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போலி பதிவுகளை இடும் பயனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முகநூல் நிறுவனம்!!

முகநூல் நிறுவனம்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் போலித் தகவல்களை பதிவிடும் முகநூல் பயனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.

முகநூல் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் செனுர அபேவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போலியான தகவல்களை பிரசூரிக்கின்றார் என பயனர் ஒருவரை முடக்குவதற்கு சட்ட ரீதியான உத்தரவு கிடைக்கப் பெற்றால் முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் போலியான செய்திகள் முகநூல் வழியாக பிரச்சாரம் செய்யப்படுவதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சில சமூக ஊடகங்களில் போலியானதும், உறுதிப்படுத்தப்படாததுமான செய்திகள் வெளியாவது குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான போலிச் செய்திகள், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு பல்வேறு புதிய தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பை இலக்கு வைத்து குரோத உணர்வைத் தூண்டும் பதிவுகளும் முகநூலில் பிரசூரிக்கப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

செய்தியின் உண்மைத் தன்மையை கண்டறியும் பொறிமுறைமையின் கீழ் இலங்கையில் பிரசூரமாகும் பதிவுகள் சரிபார்க்கப்படுவதாகவும் போலிச் செய்திகள் பிரசூரமாவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், போலிச் செய்தியொன்று நீக்கப்படுவதற்கான கால அவகாசம் சில நேரங்களில் மாறுபட்டதாக இருக்கும் எனவும் உண்மையான செய்தியா என்பதனை கண்டறிதல் சற்றே சிக்கல் மிகுந்த விடயம் என்பதனால் இந்த கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நூதன முறையில் மேற்கொள்ளப்படும் மோசடி : கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு எச்சரிக்கை!!

நூதன முறையில்..

இணையத் தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசியுள்ள அவர், இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் 2 வயது குழந்தைக்கு நடந்த சோகம்!!

குழந்தைக்கு..

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆ ண் கு ழந்தை, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம், நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

உ யிரிழந்து கு ழந்தையும் அதே வயதுடைய அயல் வீட்டுக் கு ழந்தையும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முற்றத்தில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் மேற்படி கு ழந்தை வி ழுந்துள்ளது.

கு ழந்தையின் அ ழுகை கு ரலைக் கேட்ட தாய் ஓடிவந்து பார்த்தபோது, கு ழந்தை நீ ருக்குள் கிடப்பதைக் கண்டெடுத்து, மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது, கு ழந்தை உ யிரிழந்துள்ளதாக, வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி சந்திரவதனா நிஸ்ரமானந்தராசா, சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா அ ச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நெகிழ வைத்த மனிதாபிமானம்!!

மனிதாபிமானம்..

பொது மக்கள் சுகாதார பாதுகாப்புகளை பின்பற்றுகின்றார்களா என்பதனை பரிசோதிப்பதற்கு பொலிஸார் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ள வருகின்றனர்.

இந்நிலையில் வெல்லவாய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுவன் ஒருவரை நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெல்லவாய பிரதேசத்தில் முக கவசமின்றி சைக்கிள் ஓட்டிச் சென்ற சிறுவனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதன் போது முக கவசம் இல்லாத சிறுவனிடம் ஏன் முக கவசம் அணியவில்லை என வினவியுள்ளார்.

அதற்கு சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதன் போது தன்னுடைய சொந்த பணத்தை வழங்கிய பொலிஸ் அதிகாரி தற்போதே முக கவசம் ஒன்றை கொள்வனவு செய்து வருமாறு கூறியுள்ளார்.

வேண்டும் என்றால் இரண்டு முகக் கவசங்களை கொள்வனவு செய்துக் கொள்ளுமாறு குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முகக் கவசம் பெற்றுக் கொண்ட சிறுவன் மிகுதி பணத்தை பொலிஸ் அதிகாரியிடம் வழங்கியுள்ளார். அதனையும் சிறுவனை வைத்துக் கொள்ளுமாறு கூறி அங்கிருந்து சிறுவனை அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் : பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

கொரோனா வைரஸ்..

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்குமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி எஸ்.சிறிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா நோயைத் தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் அதனை தடுக்கும் முகமாக ஆயுர்வேத திணைக்களம் பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒரு கட்டமாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பாரிய மருந்து வகைகளை விநியோகம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, நிலாவெளி மற்றும் கப்பல்துறை போன்ற வைத்தியசாலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் மருந்து வகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கபச்சுர குடிநீர், பிரண ஜீவனி, HERBAL FUMES போன்ற மருந்து வகைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இஞ்சி, வெள்ளைப்பூடு, கொத்தமல்லி, நெல்லி, சீந்தில் போன்றவற்றை நாளொன்றுக்கு 2 தடவைகள் குடிக்குமாறும் இலகுவான யோகாசனம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்!!

கொரோனா..

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரேனா நோயாளிகள் 30 பேரில் 22 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடற்படை சிப்பாய்கள் 20 பேர் வெலிசர கடற்படை முகாமிலும் ஏனைய அதிகாரிகள் இருவர் விடுமுறைக்கு சென்றவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய்களுடன் நெருக்கமாக செயற்பட்ட 7 பேர் எனவும் ஒருவர் குணசிங்கபுர பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நபர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிசர கடற்படை முகாமிற்கு வெளியே பதிவாகிய நோயாளிகள், பதுளை, தலாத்துஓய, ஹோகந்தர மொரொன்துடுவ மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது அமுலுக்கு வருகிறது.இருந்தாலும் இயன்றளவு விரைவில் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம்.

அரச புலனாய்வுத் துறையினரின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரை பிடித்து வருகிறோம். ஏனெனில் தொற்றுக்குள்ளானவர்கள் பலர் அவர்களுடன் பழகியவர்கள் விபரங்களை மறைப்பதால் இப்படி நடக்கின்றன.

இயன்றளவில் நாங்கள் நிலைமைகளை கட்டுப்படுத்தி வருகிறோம். ஊரடங்கு சட்டத்தை நீடிக்கவே மக்கள் கோருகிறார்கள். நிலைமைகளை பார்த்து சரியான முடிவை அரசு எடுக்கும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற விசேட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இராணுவ தளபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

நேற்றைய தினம் பதிவாகிய நோயாளிகளுடன் இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 649ஆகும். 7 நாட்களில் 338 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 264 பேர் கடற்படை சிப்பாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இரு பி ள்ளைகள் கொ டூரமாக கொ லை : இலங்கை தமிழர் கைது!!

லண்டனில்..

கு டும்ப த கராறு கார ணமாக த னது இ ரு பி ள்ளைகளையும் கொ லை செ ய்த ச ம்பவம் தொ டர்பில், உ யிரிழந்த கு ழந்தை களின் தந் தை கை து செ ய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு ஊ டகங்கள் வெ ளியிட்டுள்ள செ ய்தியில் இ ந்த வி டயம் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கை து செ ய்யப்பட்டவர் பொ லிஸ் பா துகாப்பில் வை த்தியசாலையில் சி கிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டன் – Ilford ப குதியில் இந் த ச ம்பவம் இ டம்பெற்றிருந்தது. உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்ச ம்பவம் இ டம்பெற்றுள்ளதாக அந்நா ட்டு பொ லிஸார் கூ றியுள்ளனர்.

இதன்போது 19 மா த வ யதுடைய பவின்யா நித்தியாகுமார் ம ற்றும் மூ ன்று வ யதுடைய நிஜிஷ் நித்தியகுமார் ஆகியோர் கொ ல்லப்பட் டனர்.

பவின்யா ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்து விட்டதாகவும், நிஜிஷ் வை த்தியசாலைக்கு கொ ண்டு செல்ல ப்பட்ட சி றிது நே ரத்தில் உ யிரிழந்து விட்டதா கவும் அந்நா ட்டு பொ லிஸார் கூ றியுள்ளனர்.

இந் த கொ லை ச ம்பவத்தின் பி ரதான ச ந்தேகந பரான, கொ ல்லப்பட்ட கு ழந்தைகளின் த ந்தை நித்தியகுமார் த ற்கொ லைக்கு மு யற்சி செ ய்த நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.

இந்நி லையிலேயே, கு றித்த ந பர் கை து செ ய்யப்பட்டுள் ளதாகவும், அ வர் பொ லிஸ் பா துகாப்புடன் வைத்தி யசாலையில் சி கிச்சை பெ ற்று வ ருவதாக தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, கை து செ ய்யப்பட்ட வ டமராட்சிக் கி ழக்கு மாமுனையை சொ ந்த இ டமாகக் கொ ண்டவர் எ ன்பதும் கு றிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் திடீர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

ஊரடங்கு சட்டம்..

நாடாளவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று இரவு அரசாங்கம் திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் என்ன என பலராலும் வினவப்பட்டு வந்தது. எனினும் வெள்ளிக்கிழமை முதல் நீண்ட வார இறுதி விடுமுறை தினம் வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மே தினம் என்பதனாலும், மே தினம் என்பது அரச, வர்த்தக விடுமுறை தினம் என்பதனாலும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வாரமும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அபாயமுள்ள வலயமான மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் காலை 5 மணி முதல் இரண்டு வரை 8 மணி தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்!!

ஊரடங்கு சட்டம்..

நாளை (30.04.2020) முதல் நாடு முழுவது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4ம் திகதி காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகள் தவிர்ந்த ஏனையவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் வரையில் செல்லுபடியாகும் வகையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முன்னதாக ஊரடங்கு சட்ட அனுமதித்திரங்களை காவல்துறையினர் வழங்கியிருந்தனர்.

எனினும், தற்பொழுது இந்த அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மே மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 200 நோய்களை கண்டறியும் ரோபோ!!

ரோபோ..

இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி வழங்கும் ரோபோ இயந்திரம் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Nextbots என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இயந்திரத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான பமுதித்த பிரேமச்சந்திர வடிமைத்துள்ளார்.

இந்த ரோபோ இயந்திரத்தினால், 200 நோய்களை அடையாளம் காண முடியும் என்பதுடன் அதற்கான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க முடியும்.

சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பதிலளிக்கும் வகையில் இந்த ரோபோ இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ இயந்திரத்தை மேலும் முன்னேற்றி அவசரமான நேரங்களில் மருத்துவ ஊழியர்களில் உதவிக்காக பயன்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.