இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு மேலதிகமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களிடம் அறிவித்துள்ளது.
அந்த நோயின் பரவலை குறைப்பதற்காக உரிய துறையினர் வேலைத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா, டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் ஆகிய 3 நோய் தொற்றினதும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளது.
எனினும் அவை இலங்கை வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்தை நோக்கி செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தினமும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் 200 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதனை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் தற்போது தினமும் 30 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சோதனைகளை அதிகரிப்பதன் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணத்திலும் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சமூகரீதியான சோதனைகளை முன்னெடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதால் நாடு முழுவதும் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மாத்திரமே சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டொரு தினங்களில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பரிசோதனைகள் ஆரம்பமாகவுள்ளமை
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை வெளியிட்டுள்ளார். இதன்படி, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின், கர்ப்பிணிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
காய்ச்சல், இரத்தம் வெளியேறல், கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் பிரச்சினை, வலிப்பு, பார்வை குறைபாடு, மார்பு, வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைவு, உடல் வீக்கம் உள்ளிட்ட, ஏனைய அறிகுறிகள் இருப்பின், கர்ப்பிணிகள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வைத்தியசாலைகளில் சன நெரிசலைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கிளினிக் செல்ல வேண்டுமாயின், கர்ப்பிணிகள் அது குறித்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் 31 பேரில் 21 பேர் கடற்படை சிப்பாய்கள் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அவர்களில் 13 பேர் வெலிசர கடற்படை முகாமிலும் 8 பேர் விடுமுறைக்கு வீடு சென்றிருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக நேற்றைய தினம் உறுதியாகியதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இராணுவத்தினர் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான வெலிசர கடற்படை முகாமின் கடற்படை சிப்பாய்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் 230 ஆக அதிகரித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்
சமகாலத்தில் Ransomware என்ற சைபர் தாக்கத்திற்கு இலங்கையர்கள் முகங்கொடுப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், விசேடமாக இளைஞர்கள் பலர் இந்த நாட்களில் பல்வேறு கணினி விளையாட்டுகள் மற்றும் அதற்கான Crackகளை பல்வேறு இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ள செல்லும் போது Ransomware சைபர் தாக்கத்திற்கு சிக்க நேரிட்டுள்ளது.
Ransomware மூலம் கணினியில் உள்ள பெறுமதியான தரவுகள் வெளியே பெற முடியாத வகையில் Encrypt முறை செய்யப்படுகின்றது. தரவுகளை மீண்டும் பெற முடியாத வகையில் Decrypt செய்யப்பட்டு அதனை மீள பெற வேண்டும் என்றால் கப்பமாக பணம் செலுத்த வேண்டும் என குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் குழு கோரிக்கை முன்வைக்கிறது.
இந்த சைபர் தாக்கத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு கணினிகளில் விளையாட்டுகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது உத்தியோகபூர்வ இணையத்தளங்களை மாத்திரம் பயன்படுத்துங்கள் என இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்வதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கொழும்பு 14, நாகலகம் வீதி, கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64ம் தோட்டம், கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11 குணசிங்கபுர, வாழைத்தோட்டம் பகுதிகள், பம்பலபிட்டி – பிரிஷ்டா பிளேஸ், மருதானையின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை,
கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60ம் தோட்டம், ஹெவலொக் லேன், ஒருகொடவத்த – மஜீத் பிளேஸ், மீத்தோட்டமுல்லை – வெடுகொடவத்தை, பெரேரா மாவத்தை பகுதிகள், வெல்லம்பிட்டி – வெலேவத்தை, மஹபுத்துகமுவ – நவாரவத்தை, மிரிஹானை – விமலவத்த வீதி,
தெஹிவளை – றப்பர் தோட்ட வீதி, அருணாலோக்க மாவத்தை, பிலியந்தலை பகுதியின் கிராமோதய மாவத்தை, பண்னிபிட்டிய – பலனவத்த ஆகிய 21 இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதிகளான நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60ம் தோட்டம் ஆகிய பகுதிகளில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிகளைச் சேர்ந்த 134 பேர் கொரோனா தொற்று குறித்த விஷேட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மட்டக்களப்பு – புனானை தனிமைப்படுத்தல் முகாமுக்கு இன்று அனுப்பப்பட்டனர்.
நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையில் ஏற்கனவே முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், புதிதாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் அயல் வீட்டுபெண் ஒருவரும், குறித்த வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்த இரட்டை பிள்ளைகளில் ஒருவருக்கும் இந்த தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இந்த நால்வருடன் சேர்த்து கொழும்பில் புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், கொழும்பு 7 , சுதந்திர சதுக்கம் , 60ம் தோட்டத்தில் கண்டறியப்பட்ட தொற்றாளர். ஏற்கனவே பண்டாரநாயக்க மாவத்தைக்கு சென்று திரும்பி அங்கு மறைந்திருந்த நபரின் அயல் வீட்டை சேர்ந்தவர் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
அத்துடன் ஹெவலொக் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் மாநகர சபையில் சேவையாற்றும் ஊழியர் எனவும், அவர் ஏற்கனவே பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரான லொறி சாரதியுடன் ஒன்றாக கடமையாற்றியவர் எனவும் விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
இந்நிலையில், கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனைகள் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு – தோட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. இன்று இரவு 12 பேர் புதிதாக தொற்றாளிகளாக கண்டறிப்பட்டனர்.
இதனையடுத்தே 611 என்ற எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாளாந்த நடத்தப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே இந்த தொற்றாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
நேற்று மாத்திரம் இலங்கையில் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனைடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை விரைவில் தளர்த்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். மதத்தலைவர்கள் சிலருடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி விஹாரையின் மாநாயக்கர் இத்தாபானே தம்மாலங்கார தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர்.
வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் குறித்து இந்த மதத் தலைவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
நோய்த் தொற்று பரவுகையை விரைவில் கட்டுப்பாட்டுக் கொண்டு வர முடியும் எனவும், பின்னர் ஊரடங்குச் சட்டத்தை விரைவில் தளர்த்தலாம் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் ம னித ப டுகொ லைகளை மட்டும் நோக்கமாக கொண்டது அல்லது எனவும் அதனை விடவும் வேறும் நோக்கங்களைக் கொண்டது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதிக செலவுடைய தேர்தல் பிரச்சாரங்களை வரையறுத்து புதிய தேர்தல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் தான் வளர்த்து வந்த ஆட்டை விற்று முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கொரோனா வைரசை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக கேரளா முதல்வர் பினராஜி விஜயன் அறிவித்துள்ள நிலையில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கஷ்டப்படும் சூழலில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சுபைதா என்ற பெண் முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்துள்ளார்.
தினந்தோறும் செய்திகளை பார்த்து வந்த சுபைதாவுக்கு தானும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இருப்பினும் ஊரடங்கு உத்தரவால் சுபைதா டீக்கடையையும் திறக்கவில்லை, கணவரும் இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் தான் வளர்த்த ஆட்டை ரூ 12,000க்கு விற்று, அதிலிருந்து கடை வாடகை, மின்சார பில்கள் தவிர ரூ5510 ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் சுபைதா ஒப்படைத்தார்.
தன்னுடைய குடும்பமே கஷ்டப்படும் சூழலில் சுபைதாவின் இந்த உதவியை கேரள முதல்வர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியாவிற்கு வருகை தந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வவுனியாவில் மேலும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா, மகாகச்சகொடி பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த கடற்படை வீரருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த கடற்படை வீரர் சென்ற இடங்கள் சுகாதார துறையினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் சென்ற வர்த்தக நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள், தனியார் நிறுவனங்கள் என்பவற்றில் சம்பவ தினம் கடமையாற்றியவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டை சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைவாக இன்றும் வவுனியா நகரையண்டிய பகுதிகள் உட்பட்ட 30 பேரினது வீடுகள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
அந்த வகையில், முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த, உயிரிழை அமைப்பின் பயனாளிகளான இரு மாற்றுத்திறனாளி மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
முள்ளியவளை,தண்ணீரூற்ற மேற்கு பகுதியைச் சேர்ந்த கெங்காதரன் பவதாரணி கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்த நிலையில்,
அப்போதிலிருந்து சக்கரநாற்காலியில் வாழந்து வருகின்றார். குறித்த மாணவி நடந்து முடிந்த சாதாரண தரப் பரீட்சையில் 8 ஏ மற்றும் பி சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
மேலும், முள்ளியவளை, நாவலர் வீதி – முதலாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் விதுர்சிகா கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதி காயமடைந்த நிலையில் சக்கரநாற்காலியிலேயே இதுவரை நாளும் வாழ்ந்து வருகின்றார்.
குறித்த மாணவி 6ஏ, பி மற்றும் 2 சி ஆகிய சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மேலும் இந்த மாணவிகளுக்கு உதவி புரிந்த Lebara Foundation (LBR Foundation) நிர்வாகிகளுக்கும் அதன் நிகழ்சித்திட்ட முகாமையாளருக்கும்,
கல்வி செயற்திட்ட உத்தியோகத்தருக்கும் மற்றும் உயிரிழை அமைப்பின் நிர்வாக சபையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன வி ரக்தி அடைந்த மா ணவி ஒ ருவர் தூ க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்து உ யிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது .
முல்லைத்தீவு – சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற சந்திரன் கம்சிகா என்ற 17 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் வெளியாகிய சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்த குறித்த மாணவிக்கு,
உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க கூடிய எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இன்று காலை சே லை ஒ ன்றினால் தூ க்கிட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார் .
குறித்த த ற்கொ லை ச ம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
தமிழகத்தில் மனைவி உ யிரிழந்த அ திர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட கணவன் 23 ஆண்டுக்குப் பின் கொரோனாவால் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்த அதிசயம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு சமூக அமைப்புகள் பராமரிப்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது.
அதிலும் தூத்துக்குடியில் `மனிதம் விதைப்போம், `ஆர்.சோயா அறக்கட்டளை’, `ஹெல்பிங் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை’ ஆகிய மூன்று சமூக அமைப்புகளும் இணைந்து, மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 60 மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்டு மாநகராட்சிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைத்து உணவு அளித்து பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.
இவர்களில் 60 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முடிவெட்டி, சேவிங் செய்வது போன்ற ஒரு புகைப்படம் வாட்ஸ்அப்களில் பரவியது. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அவரின் மகன், உறவினர்கள் மாநகராட்சி மண்டபத்துக்கு நேரில் வந்து பார்த்து உறுதி செய்தனர். 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தன் தந்தை வேல்முருகன்தான் என அடையாளம் கண்டு மகிழ்ச்சியில் நெகிழ்ந்தனர் அவரின் மகன்கள்.
இதுகுறித்து வேல்முருகனின் உறவினர்கள் கூறுகையில்,தூத்துக்குடியில் இரண்டாம் கேட் பகுதியிலதான் வேல்முருகனின் வீடு இருக்கு. கடந்த 1997-ம் ஆண்டு அவரின் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். மனைவி இறந்த சோகத்தில் சில மாதங்களில் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.
பின்னர் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி கால் போன போக்கில் போய் விடுவார். பிறகு, தெரிந்தவர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். ஒருநாள் காலையில் வீட்டை விட்டுப் போனவர் பல மாதமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாதங்கள் ஆண்டுகளையும் கடந்தது.
இந்த நிலையில்தான், வாட்ஸ் அப்பில் பரவிய புகைப்படம் மூலம் அவரை கண்டுபிடித்தோம், 23 ஆண்டுகள் கழித்து அவர் கிடைத்தது உண்மையில் அதிசயம் தான். எங்களை வேல்முருகனுக்கு அடையாளம் தெரியவில்லை என கூறியுள்ளனர்.
வேல்முருகனின் மூத்தமகன் ராமச்சந்திரன் பழக்கடை நடத்தி வருகிறார். இரண்டாவது மகன் திருமணம் செய்துகொள்ளாமல் கோயிலில் சேவை செய்து வருகிறார். வேல்முருகன் விரைவில் குணமடைந்து மீண்டும் எங்களுடன் சேர்ந்து வசிக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே வெளிநாட்டில் உள்ள தந்தை உடன் மகள் வீடியோ அழைப்பில் பேசிய நிலையில் செல்போன் வெ டித்து, இளம்பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ அழைப்பின் மூலம் பேசிக்கொண்டிருந்தார்.
செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அவர் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென ப லத்த ச ப்தத்துடன் செல்போன் வெ டிக்க, உ டைந்த பா கங்கள் ஆர்த்தியின் கண் மற்றும் காதுக்குள் சென்றன.
இதனால், வ லியில் அ லறித்துடித்த ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், பெ ண்களின் வா ழ்க்கையில் வி ளையாடி அ டுக்கடுக்கான பு கார்களில் சி க்கிய இ ளைஞனை பெ ற்றோர் அ வன் எ ங்கள் ம கன் இ ல்லை எ ன்று கைவி ட்டு விட்டதாக த கவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த பெ ண் ம ருத்துவருடன் நெ ருங்கி ப ழகிய காசி என்ற சுஜி பல லட்சம் ப ணத்தை ப றித்துவி ட்டு ஏ மாற்றியுள் ளான்.
இந்நிலையில், அந்த பெ ண் ம ருத்துவர் அளித்த பு காரின் பேரில் பொ லிசார் அ வனை கைது செய்து விசாரித்ததில், 100க்கும் மேற்பட்ட இ ளம் பெ ண்களின் வா ழ்க்கையில் காசி வி ளையாடியது தெரிய வந்துள்ளது.
இ தில், பா திக்கப்பட்ட பெ ண்கள் ப லர் பு கார் அ ளிக்க மு ன்வராததால் பொலிசார் அ தற்கு என்று தொடர்பு எண்ணையும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், பொ லிசார் காசியின் ந ண்பர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோ ணத்தில் வி சாரணை நட த்தி வ ருகின்றனர். மேலும், சுஜியின் பெ ற்றோர், பொ லிஸாரிடம் `எ ங்களுக்கும் அ வனுக்கும் இ னிமேல் எ ந்தவித ச ம்பந்தமும் இ ல்லை’ என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, காசியின் லேப்டாப்பைத் தே டி அ வரின் வீ ட்டில் பொலிசார் சோ தனை ந டத்தினர். அப்போது கோழிப்பண்ணையில் ம றைத்து வை க்கப்பட்டிருந்த லேப்டாப்பை ப றிமு தல் செய்தனர்.
அந்த லேப்டாப், மூ ன்று அ டுக்கு பா துகாப்பு போ டப்பட்டுள்ளது க ண்டறியப்பட்டுள்ளது. அதனால், சை பர் கி ரைம் பொ லிசாரின் உதவியுடன் காசியின் லேப்டாப்பை ஓப்பன் செய்ய முடிவு செய்துள்ளனர்.
காசியின் லேப்டாப்பில் உ ள்ள ர கசியம் வெ ளியானால் நிச்சயம் இந்த வ ழக்கில் பு திய தி ருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காசி சமூகவலைதள பக்கத்தில் 10க்கும் மேற்பட்ட க ணக்குகளை து வங்கி அ தன் மூ லம் பெ ண்களை ஏ மாற்றி வ ந்துள்ளான். இ து கு றித்து பொ லிசார் தீ விர வி சாரணை மே ற்கொண்டு வரு கின்றனர்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களில் 208 க டற்ப டையினர் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் 588 கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 277 நோ யாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 208 க டற்ப டை வீ ரர்களும் அடங்குகின்றனர்.
நோ ய் பா திப்பிற்கு உட்பட்ட க டற்ப டை வீ ரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என இரா ணுவ த ளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
க டற்ப டை வீ ரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோ திக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் எவரும் ஆ பத்தான நிலையில் இல்லை என ஐ.டீ.எச் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.