நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே சமயம் புலமைப்பரிசில் பரீட்சையும் ஓகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்களும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் 338,000 விண்ணப்பங்களும் தமக்கு இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார்.
எனவே திட்டமிட்டபடி குறித்த பரிட்சைகளை நடத்த அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தங்கம் மீதான முதலீடுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது.
அண்மைய நாட்களாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1451 டொலர் முதல் 1747 டொலர் வரையில் உயர்வடைந்தது. தற்போது 1800 டொலர் என்ற வரம்பில் இருக்கின்றது.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் தங்கத்தில் விலையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் வலை 1500 டொலர் என்ற வரம்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், 3,051,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 210,714 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் நேற்று மட்டும் 65 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் பதிவாக அதிக எண்ணிக்கையாகும்.
நேற்று முன்தினம் 63 கொரோனா நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்நிலையில், இரு நாட்களில் 128 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இது வரையில் 588 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 455 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், 3,073,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 211,768 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்க நகைகள் அடகு வைக்கப்படும் போது அனுமதி பெற்ற வங்கிகளினால் அறவீடு செய்யப்படும் வட்டி வீதத்தை குறைக்குமாறு இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
தற்பொழுது வங்கிகளினால் தங்க நகை அடகு வைக்கப்படும் போது 12 முதல் 17.5 வீத ஆண்டு வட்டி வரையில் அறவீடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு வட்டி வீதத்தை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, உடன் அமுலுக்கு வரும் வகையில் வங்கிகளில் தங்க நகை அடகு வைக்கப்படும் போது அதிகபட்சமாக, 12 வீத ஆண்டு வட்டியை அறவீடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தங்க நகை அடகு வைக்கப்பட்டாலும் ஏற்கனவே அடகு வைக்கப்பட்டு அவற்றை மீள புதுப்பிக்கும் போதும் இந்த புதிய வட்டி வீதம் அமுலாகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஏனைய நிதி நிறுவனங்களும் தங்க நகை அடகு முற்பணம் வழங்கும் போது குறைந்தளவு வட்டியை அறவீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மே மாதம் 20ம் திகதிக்குள் பல்வேறு நாடுகளில் இருந்து கட்டுப்படுத்திவிட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் (எஸ்.யு.டி.டி) இதனை தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு சேகரித்த தகவல்களை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகம் எளிதில் பாதிக்ககூடிய தொற்று நோய் மாதிரிகளை பகுப்பாய்வு செய்துள்ளது.
அதாவது பல்வேறு நாடுகளை சேர்ந்த சந்தேகத்திற்கிடமான, பாதிக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான நோயாளரிகளின் மாதிரிகள் குறித்த தகவல்களை சேகரித்து ஆராய்ந்து தெரிவித்துள்ளது.
கொரோனா பல்வேறு நாடுகளில் திருப்பங்கள் நிகழ்த்திய திகதிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதன் பின்னர் இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரவுள்ளதாக எஸ்.யு.டி.டி தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியர்கள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை 931 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 15 பேர் மட்டுமே சிங்கபூரை சேர்ந்தவர்கள். ஏனைய அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் பணிக்காக வந்த இந்தியர்களே அவர்கள். சிங்கப்பூரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 50 வீதமானர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது.
சமூக விலகலை கடைப்பிடிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட அடையாள அட்டை நடைமுறை இன்று முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்தான மாவட்டங்களை தவிர்த்து இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களிலுள்ள மக்கள் வெளியே செல்லும் போது அடையாள அட்டை நடைமுறை அமுலாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கூலி வேலை செய்யும் நபர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், ஹோட்டல்களில் சமைப்பவர்கள், தச்சு, மின்சார வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு இந்த அடையாள அட்டை நடைமுறை அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக நிலையங்கள் உட்பட இடங்களுக்கு செல்பவர்களுக்கு மாத்திரமே இந்த அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலாகும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அத்தியாவசியமற்ற காரணத்திற்காக அடையாள இலக்கத்தை பயன்படுத்தி தடையை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்படை சிப்பாய்களினால் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா தொற்றாளிகள் பதிவானமை ஓர் புதிய திருப்பு முனையை உருவாக்கியுள்ளது எனவும் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் ஆபத்து குறைவு என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தற்பொழுது நோயாளிகள் பதிவாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பானது என கருதப்பட பகுதிகளில் தற்பொழுது பாதுகாப்பு நிலைமை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் முழு கிராமத்திற்குமே உரம் விநியோகம் செய்துள்ளார் எனவும் அவரது தந்தை விவசாய திணைக்கள அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த சிப்பாய் சுமார் 400 பேருடன் தொடர்பு கொண்டிருந்தார் என டொக்டர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான படைவீரர் ஒருவர் 200 பேருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களை அடையாளம் காண்பதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜாஎல சுதுவெவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட போ தைப் பொருள் அடிமைக்குள்ளான கொரோனா நோயாளியினால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளி கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அன்றைய தினம் இரவு பமுனுகம பொலிஸ் பிரிவில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் போ தைப் பொருளுக்கு அடிமையாகிய ஒருவராகும்.
தி ருட்டு சம்பவம் ஒன்றிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் சில நோய் நிலைமையில் காணப்பட்டமையினால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இந்த தனது அருகில் இருப்பவர்கள் குறித்து சிந்திக்கவில்லை. அவர் போ தைப் பொருளுக்கு அடிமையாகியமையினால் அவற்றினை குறித்து சிந்திக்கவில்லை.
எனினும் இறுதியில், தென்கொரியாவின் 31வது பெண் நோயாளி போன்றாகிவிட்டார். குறித்த பெண் தனக்கு கொரோனா நோய் தொற்றியிருந்த நிலையில் 9000 பேர் பங்குபற்றி தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டர். அவர்களில் 3000 பேர் இந்த நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
இந்த நிலைமையும் அவ்வாறு தான் உள்ளது. இந்த நோயாளி கைது செய்யப்பட்ட பின்னர் 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
முழு கிராமத்தையே முடக்க நேரிட்டது. இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தங்கள் கடமையை சரியாக செய்துள்ளனர். எனினும் 206வது நோயாளியினால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனோ தொற்றுக்குள்ளான வவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்திருந்த 75பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்றிருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் சுகாதார பிரிவு மற்றும் பொலிசாரால் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிற்கான சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் நேற்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களிற்கு குறித்த நபர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் இன்று (28.04.2020) காலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00மணி வரை 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையிலும் வீதியோரங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை காண்காணிக்கும் நடவடிக்கையில் இன்று காலை பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டிருந்தனர்.
கொரனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் வீதியோரங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து இருப்பதுடன் மரக்கறிகள் சுகாதார முறையில் விற்பனை செய்யப்படுகின்றதா என்பவற்றினை காண்காணித்தனர்.
இதன் போது முகக்கவசம் அணியாது வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டதுடன் அவர்களுக்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை செய்தனர்.
யாழ். மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளியில் செல்ல முடியும் என்று அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இன்றையதினம் தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடரங்கு சட்ட தளர்வின்போது பொதுமக்கள் பின்னபற்ற வேண்டிய நடவடிக்கை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் இன்று ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இயங்கு நிலைக்கு வருகிறது. அத்தியாவசியமற்ற சேவையில் ஈடுபடுபவர்கள் தமது சேவைகளை இடைநிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
அரச அலுவலங்களில் பணிபுரிபவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் சுழல்ச்சி முறையில் தமது பணிகளை தொடர பணிக்கப்பட்டுள்ளது. அனாவசியமாக வீதிக்கு மக்கள் வருவது, தேவையற்ற போக்குவரத்தில் ஈடுபடுவதை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசியமாக சேவைகளை அல்லது தொழில்களின் ஈடுபவர்களை தவிர ஏனைய அனைவரும் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவுத் தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியில்வர முடியும்.
அதுவும் அடையாள அட்டை இலங்கங்களின்படியே வெளியில் செல்ல முடியும். குறிப்பாக 1 அல்லது 2 இலக்கத்தை தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கமாக கொண்டவர்கள் திங்கட்கிழமையும், 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் செவ்வாய்கிழமையிலும், 5 அல்லது 6 இலக்கத்தை கொண்டவர்கள் புதன்கிழமையிலும், 7 அல்லது 8 இலக்கத்தை கொண்டவர்கள் வியாழக்கிழமையிலும், 9 அல்லது 0 இலக்கத்தை உடையவர்கள் வெள்ளிக்கிழமையிலும் வெளியில் செல்ல முடியும்.
இந்த அறிவுறுத்தல் மக்களுக்கு புதுமையாக இருக்கலாம். இருப்பினும் மக்களுடைய தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதனை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் உண்ணிப்பாக கண்காணிப்பார்கள்.
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அனுமதி பெற்றவர்களுக்கே மாவட்டங்களை தாண்டி போக்குவரத்தினை செய்வதற்கு இடமளிக்கப்படும்.
மேலும் மத வழிபாடுகளுக்காக மக்கள் கூடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தம்மையும், தமது குடும்பத்தையும், சமூகத்தையும் பாதுகாப்பது அவரவர் ஊடரங்கு உத்தரவை பின்பற்றுவதிலேயே தங்கியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர், உறவினர் போன்றவர்களின் பேஸ்புக் கணக்கிலிருந்து வரும் குறுந்தகவல் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
ஏதாவது ஒரு இணையத்தளத்தின் முகவரி ஒன்று நண்பரின் பேஸ்புக் கணக்கில் அனுப்படுகின்றது. அதனை அழுத்துமாறு (Click) கூறப்படுகின்றது.
நண்பரிடம் இருந்து வருகின்றது என்று நினைத்து அதனை அழுத்தினால் பயனாளரின் பேஸ்புக் கணக்கு ஹெக்கர்களின் கைகளுக்கு சென்று விடுவதாக கூறப்படுகின்றது.
அதன் பின்னர் பயனாளரின் பேஸ்புக் கணக்கிற்கு செல்லும் ஹெக்கர்கள் அதில் இருந்து நண்பர்களுக்கு அதே போன்ற இணைய முகவரி ஒன்று அனுப்பப்பட்டு தகவல்கள் திருடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கையில் பெருமளவு இலங்கை பயனாளர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நீதிமன்றத்திற்கு வருகை தருபவர்களுக்கு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதிவாளர் முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதிவாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அழைக்கப்படும் வழக்குகள் (Calling Cases) காலை 9.00 மணி தொடக்கம் 12.30 மணிவரையும் விளக்க வழக்குகள் (Trial Cases) நண்பகல் 1.00 மணி தொடக்கம் 3.00 மணிவரையும் இடம்பெறும் எனவும் அத்துடன் நீதிமன்றத்திற்கு வரும் சகலரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்,
நீதிமன்றத்திற்கு வருகின்ற அனைவரும் தங்களது கைகளை நன்றாக கழுவிய பின்னர் (உரிய ஏற்பாடுகள் நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது) நீதிமன்ற உத்தியோகத்தரின் அல்லது பொலிஸ் உத்தியோகத்தரின் அறிவுறுத்தலை பின்பற்றி ஒதுக்கப்பட்ட இடங்களில் உரிய இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.
மேலும் திறந்த நீதிமன்றத்தில் ஒரு தடவையில் 10 வழக்குகளுடன் தொடர்புடைய நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர், அழைக்கப்படுகின்ற 10 வழக்குடன் தொடர்புடைய நபர்கள் மாத்திரம் உரிய இடைவெளியினை பேணி திறந்த நீதிமன்றத்திற்குள் சென்று அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளை பேணி நடக்க வேண்டும்.
அத்துடன் நீங்கள் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் எக்காரணம் கொண்டும் தாமதிக்காது நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும். பொதுமக்கள் யாரும் சிற்றுண்டிச்சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் .
2020ம் ஆண்டு சித்திரை மாதம் 21ம் திகதி நீதிமன்ற கட்டளைப்படி இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதிக்கு வந்த கடற்படை வீரருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதினையடுத்து குறித்த கடற்படை வீரர் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார். இதனையடுத்து வவுனியா நகரில் இன்று (28.04.2020) காலை தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கு அமைவாக வவுனியா நகரிலிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன்,
வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா விசேட அ திரடிப்ப டையினர் ஆகியோர் இணைந்து வவுனியா நகரில் தொற்று நீக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் பாதசாரிகள் நடைபாதை, வர்த்தக நிலையங்களுக்கு முன் பகுதி போன்றன தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்பட்டதுடன் விசேட அ திரடிப்ப டையினர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் இணைந்து தொற்று நீக்கி ம ருந்து தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையிலும் வவுனியா நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் நகரில் குறைந்தளவு மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றது.
நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (28.04.2020) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.
வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதிக்கு வந்த கடற்படை வீரருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த கடற்படை வீரர் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார். இதனால் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவுள்ளனர்.
குறித்த கடற்படை வீரர் சென்ற இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவதற்காகவும் நகரை மருந்து தெளித்து சுத்திகரிப்பு செய்வதற்காகவும் சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைவாக இன்றையதினம் வர்த்தக நிலையங்களை பூட்டி கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு,
வவுனியா அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன நேற்றையதினம் (27.04) ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விடுத்த கோரிக்கைக்கமைவாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் நடமாட்டமும் குறைந்தளவில் காணப்படுகின்றது.
எனினும் வங்கிகள், சந்தைகள், மரக்கறி வியாபார நிலையங்கள், மருந்தகங்கள் திறந்துள்ளமையினால் மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
லண்டலில் கு டும்ப பி ரச்சனை கா ரணமாக சொ ந் த பி ள்ளைகள் இ ருவரை கொ லை செ ய்துவி ட்டு இலங்கை த மிழர் ஒ ருவர் த ற்கொ லைக்கு மு யன்ற ச ம்பவம் அ திர்வலை களை ஏ ற்படுத்தி யுள்ளது.
உள்ளூரில் நி தி என அ றியப்படும் நிதின்குமார் எ ன்பவரே த மது பி ள்ளைகள் இ ருவரையும் கூ ரான ஆ யுதத்தால் கொ லை செ ய்துவி ட்டு, தா மும் த ற்கொ லை க்கு மு யன்றவர்.
Ilford ப குதியில் உ ள்ள கு டியிருப்பில் இ ருந்து அ லறல் ச த்தத்து டன் வெ ளியேறிய நிதின்குமாரின் ம னைவி, எ னது பிள் ளைகள், யா ராவது வ ந்து கா ப்பாற்று ங்கள் எ ன சாலையில் உ தவி கோ ரியது அக்கம்ப க்கத்தி னரை பொ லிசாரை நா ட தூ ண்டியுள்ளது.
நிதின்குமார் த மது கு டியிருப்பின் அ ருகாமையில் அ மைந்துள்ள 54 வ யதான சண்முகத தேவதுரை எ ன்பவரது க டையிலேயே ப ணியாற்றி வ ந்துள்ளார். நிதின்குமார் தொ டர்பில் சண்முகத தேவதுரை தெ ரிவிக்கையில், நி தி ஒ ரு அ ற்புதமான ம னிதர், வி சுவாசமான தொ ழிலாளி.
அ வர் கா லை 9 ம ணிக்கு க டையைத் தி றந்தார், மி கவும் சா தாரணமாகவே வே லை செ ய்தார், அ வர் கு டியிருப்புக்கு பு றப்படுவதற்கு ச ற்று மு ன்பு எ னக்கு தே நீர் த யாரித்து த ந்தார்.
ஊ ரடங்கு நா ட்களில் வே லைக்கு செ ல்வது த மது ம னைவிக்கு பி டிக்கவில்லை எ ன்று நிதி கூ றி வ ந்ததாகவும் சண்முகத தேவதுரை கு றிப்பிட்டுள்ளார். குடு ம்ப பி ரச்சனை கா ரணமாகவே நிதின்குமார், இ ந்த கோ ர மு டிவை எ டுத்திருக்கலாம் எ ன தேவதுரை தெ ரிவித்துள்ளார்.
நிதின்குமாரின் ம கள் ச ம்பவயிடத்தி லேயே ம ரணமடை ந்ததாக கூ றப்படுகிறது. அ வரது ச கோதரர் ம ருத்துவமனையில் சி கிச்சை ப லனின்றி இ றந்ததாக தெ ரியவந்துள்ளது. நிதின்குமாரின் கு டியிருப்பில் இ ருந்து அ லறல் ச த்தம் கே ட்டதாக அப்ப குதி ம க்களில் ப லர் தெ ரிவித்துள்ளனர்.
இ ந்த ச ம்பவங்களுக்கு பி ன்னர் த ற்கொ லைக்கு மு யன்ற நிதின்குமார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு த ற்போது, ஆ பத்து க ட்டத்தை தா ண்டியுள்ள தாகவும், கு ணமடைந்து வ ருவதாகவும் ம ருத்துவமனை த ரப்பு த கவல் வெ ளியிட்டுள்ளது.