வர்த்தக சங்கத்தினால்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் அவர்களிடையே சமூக இடைவெளியினை பேணுவதில் சிக்கல் நேர்ந்துள்ளமையினால்,

வைத்தியசாலையின் சில பகுதிகளில் தற்காலிக கூடாரம் அமைத்து நோயாளிகளிடையே சமூக இடைவெளியினை பேண உதவி செய்யுமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கே.நந்தகுமார் வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் கோரிக்கையினை விடுத்திருந்தார்.

வைத்தியசாலை பணிப்பாளரின் கோரிக்கமைவாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா வர்த்த சங்கத்தின் அனுசரனையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் நான்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வவுனியா வெளிநோயாளர் பிரிவுக்கு முன்பாக , வவுனியா வைத்தியசாலை வாயில் அருகில் , திடீர் விபத்துப்பிரிவுக்கு முன்பாக இக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக வவுனியா வர்த்தக சங்கள் பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு செயற்றிடங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















































