இலங்கையில் அனைத்து வாகனங்களின் விலைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

வாகனங்களின் விலை..

இலங்கையில் அனைத்து வாகனங்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அனைத்து வாகனங்களின் விலைகளும் 10 முதல் 15 சதவீதமாக அதிகரித்துள்ளன. ஜப்பான் யென் மற்றும் அமெரிக்க டொலருக்கும் நிகரான ரூபாவின் பெறுமதி சரிவடைந்துள்ளமையே வாகனங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பிற்கு காரணம்.

இதன் காரணமாக இதுவரை சொகுசு வரிக்கு உட்படாத ஆயிரம் குதிரை வலுவுக்கு குறைவான இயந்திரத்தை கொண்ட வாகனங்களும் அந்த வரிக்கு உட்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? அமெரிக்கா வெளியிட்ட தகவல்!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது மரபணு மாற்றமாகவோ இல்லை என்று அமெரிக்க தேசியப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வைரஸின் தோற்றம் குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக அமெரிக்காவின் தேசியப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ், விலங்குகளின் தொடர்பிலிருந்து தொடங்கப்பட்டதா அல்லது ஆய்வுக்கூட விபத்தில் இருந்து ஆரம்பித்ததா? என்று தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க தேசியப்புலனாய்வுத்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆய்வுக்கூடம் ஒன்றில் இருந்தே கொரோனா வைரஸ் வெளிவந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஏற்கனவே ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே தேசியப்புலனாய்வு பிரிவினரின் கருத்து வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த வைரஸினால் இதுவரை இரண்டு லட்சம் பேர் வரை காவு கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இருந்து டுபாய் நாட்டுக்கு பப்பாசி ஏற்றுமதி!!

பப்பாசி ஏற்றுமதி..

வவுனியாவில் உள்ள பழச் செய்கையாளர்களிடம் கொள்வனவு செய்யப்பட்ட பப்பாசிகளை டுபாய் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை ஆரம்பி வைக்கப்பட்டது.

வவுனியா, பம்பைமடு கமநல அபிவிருத்திணைக்களப் பிரிவில் இந் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மாவட்ட கடநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன கலந்து கொண்டு ஏற்றுமதிக்கான விற்பனையை ஆரம்பித்து வைத்தார்.

ஒரு கிலோ பப்பாசி 20 ரூபாய் படி கொள்வனவு செய்யப்பட்டு டுபாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழச் செய்கையாளர்களுக்கான சந்தை வாய்ப்பு வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,  வவுனியா மாவட்டத்தில் மேலதிகமாக மரக்கறிகள் மற்றும் பழங்கள் தேவையான அளவு காணப்பட்டன.

இவற்றினை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை காணப்பட்ட போதும், தற்போது வரை 50க்கு மேற்பட்ட நபர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அவற்றை கொண்டு சென்று விற்பனை செய்ய உரிய அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தங்களது மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்பட்டால் அவர்களை தொடர்பு கொண்டு விற்பனை செய்ய முடியும். அதன் ஒரு கட்டமா துபாய் நாட்டுக்கு பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழச் செய்ரகயாளர்கள் நன்மைகளைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள் : கைவிடாது தொடரும் எஸ்.தர்மலிங்கம்!!

மட்பாண்ட பாத்திரங்கள்..
அறிக்கையிடல் – பாஸ்கரன் கதீஸன்

என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான். அவனது வீடுகள் மண்ணால் அமைக்கப்பட்டிருந்தது. அவர்களது தேவைகளுக்காக மட்பாண்பாண்டங்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தன.

பானை, சட்டி, சிட்டி, அரிக்கன் சட்டி, முட்டி, உண்டியல் என பலவகை மட்பாண்ட பாத்திரங்கள் மனிதனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் மட்பாண்ட உற்பத்தியும் தொழில் நுட்பத்துடன் கூடியதாக பரம்பரை பரம்பரையாக வளர்ச்சியடைந்து வந்திருந்தது. ஆனால் இன்று மட்பாண்ட உற்பத்திகளின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.

நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களது வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அலுமினியம் மற்றும் சில்வர் பாத்திரங்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தும் நாகரிக மனிதனாக இன்றைய மக்கள் மாறியுள்ளனர். இதன் காரணமாக மட்பாண்ட உற்பத்திகளின் விற்பனை இன்று குறைவடைந்து சென்றுள்ளது.

மட்பாண்ட உற்பத்திகளின் விற்பனை வீழ்ச்சியால் அதனை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்ட பலர் போதிய வருமானம் இன்றி இன்று வேறு வேலைகளில் ஆர்வம் காட்டி வருவதனால் இத் தொழில் பரம்பரை அழிவடைந்து வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழில் இடம்பெறும் 10 முயற்சியாளர்கள் இருந்த போதும் இன்று இரண்டு இடத்தில் மட்டுமே உற்பத்தி நடைபெறுகின்றது. அவையும் அடுத்த பரம்பரைக்கு செல்லும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் அவர்களது பிள்ளைகள் வேறு தொழில்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

வவுனியா கோவிற்குளம் பகுதியில் மட்பாண்டத் தொழிலில் ஈடுபடும் எஸ்.தர்மலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

மட்பாண்டத் தொழில் என்பது எமது பரம்பரைத் தொழில். எனது தாய், தந்தையர் அதனை செய்தே எம்மை ஆளாக்கினர். இன்று நானும் இத் தொழில் மூலமே எனது குடும்பத்தைப் பார்த்து வருகின்றேன். ஆனாலும் சந்தையில் தற்போது மட்பாண்ட உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடைந்து இருக்கின்றது.

தென்பகுதியில் சிங்கள மக்கள் மட்பாண்டங்களை அதிகமாக பயன்படுத்துகின்ற போதும் எமது வடக்கு மக்கள் நாகரீக வாழ்க்கையால் மட்பாண்ட பாத்திரங்களை கைவிட்டுச் சென்று நோய்களை தாமே தேடிப் பெறுகின்றனர்.

அண்மைக் காலமாக மக்களுக்கு அவர்களது உணவுப் பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நோய்கள் ஏற்பட்டு வருவதனால் மட்பாண்ட பாத்திரங்களை சிலர் மீண்டும் நாடி வருவதாகவும் தெரிவித்தார்.

பாரம்பரிய மட்பாண்ட பாத்திரங்களின் பாவனை நவீன உலகில் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதனை தடுத்து, குறைந்த செலவில் மேற்கொள்ளக் கூடிய இத்தகைய உற்பத்திகளை பாதுகாத்து, ஆரோக்கியமான வாழ்வு வாழ உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மட்பாண்டத்தை நேசிக்கும் மக்களின் அவாவாக இருக்கிறது.

பளை மத்தியக்கல்லூரி மாணவனை காணவில்லை : பொலிஸார் விசாரணை!!

R.அனோச்..

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி பாடசாலையில் கல்வி கற்று வந்த முள்ளியடி பகுதியை சேர்ந்த R.அனோச் எனும் மாணவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை. இது குறித்து கடந்த 28ம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் பளை மத்திய கல்லூரியில் கடந்த வருடம் 2019 ஆண்டு சாதாரணதர கல்வி பரீடசை எழுதி முடிவுக்காக காத்திருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனுடைய பெற்றோர்கள் கடந்த ஒரு சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் தேடி பயன் எதுவும் இன்றி பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவிற்கு விற்பனை செய்யும் சாத்தியம்!!

பெற்றோல்..

ஒரு லீற்றர் பெற்றோலை 75 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். தெற்கின் சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள காரணத்தினால் இலங்கையில் அனைத்து செலவுகளையும் ஈடு செய்ததன் பின்னர் ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவிற்கும், ஒரு லீற்றர் டீசல் 52 ரூபாவிற்கும் விற்பனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலச சந்தையில் எரிபொருளுக்கான விலைகளை நிர்ணயம் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருளானது ஒரு பெரல் 37 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கான விலை குறைப்பு ஏன் மக்களுக்கு சென்றடையவில்லை என அரசாங்கத்திடம் கோரிய போது அந்த விலை குறைப்பு நிவாரணத்தை பருப்பு, செமன் போன்ற பொருட்களுக்கு வழங்கி வருவதாக பதில் கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்பொழுது பருப்பு மற்றும் செமன் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு!!

பால் மா..

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இவ்வாறு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐலண்ட், நெஸ்ட்லே மற்றும் பெலவத்த போன்ற பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 945 ரூபாவாகவும், 400 கிராமின் விலை 380 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பால் மா உற்பத்தி நிறுவனங்கள் நட்டத்தில் பால் மா உற்பத்தி செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் யார்? சுகாதார பணிப்பாளர் விளக்கம்!!

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.

“நேற்றைய தினம் மாத்திரம் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த 16 பேரில் 9 பேர் கடற்படையினர். அவர்கள் வெலிசர முகாம் மற்றும் வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.

அதற்கமைய கடற்படையினர் தொடர்ந்து கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர். எனினும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டமையே அதற்கு காரணமாகும்.

இதற்கு மேலதிகமாக தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அதே போல் கொழும்பு தாபரே மாவத்தையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் அவர் தாபர் மாவத்தையில் இல்லை. அதற்கு அருகில் உள்ள பிரதேசத்திலேயே உள்ளார். அதே போல் சுதுவெல்ல பிரதேசத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் நீண்ட காலமாக இருந்த 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறே நேற்றைய தினம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் முதலாவது கொரோனா நோயாளி மார்ச் மாதம் 30ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலி மாவட்டத்தில் 30 பேர் மரணம் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

காலி மாவட்டத்தில்..

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் காலி மாவட்டத்தில் மட்டும் 30 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி பொலிஸாரின் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களிற்குள் இந்த மரணங்கள் பதிவாகியிருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இதுபோன்று இரண்டு மரணங்களே பதிவாகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும், ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியதன் காரணமாக முறையான மருந்துகள் கிடைக்கும் வைத்தியசாலைகளின் இலவச மருத்துவ சேவைகளுக்காக செல்ல முடியாத நோயாளர்களே இவ்வாறு மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணித்தவர்களில் நீரிழிவுநோய், புற்றுநோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் ஆகிய பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தவர்களே திடீர் மரணத்தைத் தழுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் காலி, கராபிட்டி மற்றும் மஹா மோதர, கூட்டுறவு, தெற்கு மருத்துவமனைகள் மற்றும் ஏராளமான தனியார் மருத்துவ மையங்கள் உட்பட பல அரச வைத்தியசாலைகள் இருக்கின்றன.

எனினும், காலி பொலிஸ் நிலையத்தில் அதிகமான திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இலங்கையின் பிற பொலிஸ் பகுதிகளில் இதுபோன்ற மரணங்கள் ஏற்படாமல் தடுக்க அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காலி பொலிஸ் தலைமையக ஆய்வாளர் கபிலா ஜயம்பதி டி சில்வாவிடம் விசாரித்தபோது, ​​ காலிபொலிஸ் பிரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும், அதற்கான காரணத்தை கூற முடியாது என கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : கொரோனாவின் தீவிர தன்மை குறைந்து வருவதாக அறிவிப்பு!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருவதாக ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

வைரஸ் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு செல்லும் போது அதன் தீவிரம் குறைகிறது. இந்த நிலைமையை உலகம் முழுவதும் எம்மால் காண முடிகின்றது.

அண்மைய நாட்களாக நோய் தொற்றுக்குள்ளாகிய நிலையில் கண்டறியப்பட்டவர்களின் அறிகுறிகள் மிகக் குறைவாக காணப்பட்டது. சிலருக்கு தொண்டையில் சிறிய வலி மாத்திரமே காணப்பட்டுள்ளது.

சிலருக்கு நோய் உண்டா இல்லையா என்று கூட தெரியவில்லை. நோயின் தீவிரத்தன்மை படிப்படியாக குறைவடைந்தமையே இதற்கு காரணமாகும். எனவே அறிகுறிகளும் நோயும் படிப்படியாகக் குறையும்.

இந்த போக்கு அடுத்த மூன்று மாதங்களில் நாட்டை மீட்டு வழமைக்கு திரும்ப உதவும் என ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

மகனை கடைக்கு அனுப்பிய தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி..

இந்தியாவில் கொரோனா லாக்டவுனின் போது மகனை மளிகை சாமான்கள் வாங்க தாய் அனுப்பிய நிலையில், அவர் வீடு திரும்பிய போது மனைவியுடன் வந்தது தாயை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கசியாபாத்தை சேர்ந்தவர் குட்டு. 26 வயது இளைஞனான இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குட்டுவின் தாய் அவரை நேற்று மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பினார்.

ஆனால் குட்டு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது சவீதா என்ற இளம் பெண்ணை தன்னுடன் அழைத்து வந்து இவர் தான் என் மனைவி என தாயிடம் கூற அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் காவல் நிலையம் சென்ற குட்டுவின் தாய், என் மகனுக்கு நடந்த திருமணத்தை ஏற்று கொள்ள முடியாது என கூறி புகார் அளித்தார். பொலிசார் குட்டுவிடம் விசாரித்த போது அவர் கூறுகையில்,

எனக்கும் சவீதாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவிலில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்துக்கு சரியான சாட்சிகள் இல்லாததால் திருமண பதிவு சான்றிதழை அப்போது என்னால் வாங்க முடியவில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் சான்றிதழை வாங்க சென்ற போது லாக்டவுனால் எனக்கு கொடுக்கப்படவில்லை. இதனிடையில் என் மனைவி ஒரு வாடகை விடுதியில் தங்கியிருந்தார். ஆனால் அவரை திடீரென இடத்தை காலி செய்ய சொல்லிவிட்டனர். அதனால் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன் என கூறினார்.

இதனிடையில் தம்பதியை குட்டுவின் தாய் ஏற்று கொள்ளாத நிலையில் சவீதா தங்கியிருந்த வாடகை விடுதியிலேயே இருவரையும் தங்கவைக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல்!!

தர்மரத்தினம் சிவராம்..

ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு வவுனியா, தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்களினால் மெழுகுதிரி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது, வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத், தராக்கி சிவராம் தொடர்பான நினைவு சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புற்றநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தாயை காண வந்த மகன் : சிறிது நேரத்தில் நடந்த சோக சம்பவம்!!

சோக சம்பவம்..

புதுச்சேரியில் புற்றநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தாய் மகனின் முகத்தை பார்த்த சற்று நேரத்தில் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகே ஏனாம் பிராந்தியம் உள்ளது. இங்கு உள்ள பலர் பணிக்காக அருகாமையுள்ள பல நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஏனாம் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் ரேவு ஸ்ரீனு, தனது மனைவி லட்சுமியுடன் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

இவரது தாய் லட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அவரது உடல் மிகவும் மோசமடைந்துள்ளது.
அவரது உறவினர்கள் மகனுக்குத் தகவல் தந்தனர். பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லை. கார் வைத்து வர வசதியில்லை.

இச்சூழலில் தனது மனைவி லட்சுமியுடன் தனித்தனி சைக்கிள்களில் ரேவு ஸ்ரீனு ஏனாம் பிராந்தியத்திற்கு புறப்பட்டு வந்தார். வழியில் இத்தம்பதியை பொலிஸார் பல இடங்களில் தடுத்து நிறுத்தி விசாரித்த நிலையில், தனது தாய் புற்றுநோயால் மிகவும் பாதிப்பில் உள்ளதால் அவரை காண செல்வதாக கூறியவுடன், பொலிஸார் தேவையான உதவிகளை செய்துள்ளனர்.

வழியில் மக்களும் உதவிய நிலையில், 480 கிலோமீற்றர் தொலைவு பயணத்தைக் கடந்த 14-ம் திகதி தொடங்கி 17-ம் திகதி நள்ளிரவு முடித்து ஏனாம் வந்தடைந்தனர்.

வெளிமாநிலத்தில் இருந்து ரேவு ஸ்ரீனு, லட்சுமி இருவரும் ஏனாம் வந்ததால் அவர்களை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர். அப்போது அவரது தாயின் உடல்நிலை மிக மோசமடைந்ததால் கடந்த 18-ம் திகதி தாயை பார்க்க மகனை அனுமதித்தனர். தனது மகனை பார்த்த சிறிது நேரத்திலேயே தாயின் உயிர் பிரிந்தது.

தாயாருக்கு இறுதிச்சடங்கை செய்த பின்பு அவர் தனது மனைவியுடன் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாமுக்குத் திரும்பியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எரிபொருள் இறக்குமதியை இலங்கை இடைநிறுத்தியுள்ள இலங்கை!!

எரிபொருள் இறக்குமதி..

எரிபொருட்களை இறக்குமதி செய்வதனை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தற்பொழுது கையிருப்பில் உள்ள எரிபொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு மாத காலத்திற்கு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

நாள் தோறும் எரிபொருள் பயன்பாடு காரணமாக ஏற்கனவே எரிபொருள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பின்னர், எரிபொருளுக்கு கிராக்கி இல்லாத காரணத்தினால் எரிபொருள் கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் பயன்பாடு 40 முதல் 50 வீதம் வரையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் பணிப்புரியும் ஐந்து பேருக்கு கொரோனா பரிசோதனை!!

கொரோனா பரிசோதனை..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கட்டுநாயக்க விமான படை முகாமை சேர்ந்த விமானப்படையின் இசைக்குழுவில் கடமையாற்றிய விமானப் படை அதிகாரியுடன் பழகியதாக கூறப்படும் தனியார் தொலைக்காட்சியில் தொழில் புரியும் ஐந்து பேருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஊழியர்களில் தொகுப்பாளர் ஒருவரும் அடங்குவதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி விமானப்படையின் இசைக்குழு நடத்திய இசை நிகழ்ச்சியை குறித்த தொலைக்காட்சி நிறுவனம் ஒளிப்பதிவு செய்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில், இரண்டு விமானப்படையினர், கடற்படையின் இசைக்குழுவை சேர்ந்த இருவர் மற்றும் பொலிஸ் இசைக்குழுவை சேர்ந்த சிலரும் இசை நிகழ்ச்சியில் பாடல்களை பாடியுள்ளனர்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள விமானப்படை அதிகாரி அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறுப் கெப்டன் துஷான் விஜேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஊடகவியலாளர்களும் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கொரோனா தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய உட்பட சில நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

-தமிழ்வின்-

ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்த கணவன் : கொரோனாவை எ திர்த்து போ ராட இளம் மனைவி செய்த செயல்!!

இளம் மனைவி செய்த செயல்..

இந்தியாவில் கணவர் நாட்டுக்காக உ யிரிழந்த ஒரு மாதத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு அவர் மனைவி ரூ 10,000 நன்கொடை அளித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா அ ச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

நாட்டில் அரசுக்கு நிதி சுமை ஏற்படாமல் இருக்கவும் கொரோனா நிவாரண நிதிக்காகவும் மக்கள் தங்களால் முடிந்த நிதியை நன்கொடையாக வழங்கலாம் என பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதன்படி பொதுமக்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் பஸ்தாரில் நடந்த நக்சல் வ ன்முறையில் CAF வீரர் ஒருவர் உ யிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இவரின் மனைவி ராதிகா சாஹு, தற்போது கொரோனாவை எ திர்த்துப் போ ராடுவதற்காக சத்தீஸ்கர் முதல்வரின் நிவாரண நிதிக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் கணவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால்தான் இதைச் செய்ய முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.

கணவர் இ றந்த ஒரு மாதத்தில் பெரும் மனக்கவலைக்கு இடையே ராதிகா நிதி கொடுத்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.