இலங்கையில் தீவிரமடையும் கொரோனா : 1000 சடலங்களை பொதிசெய்யும் உறைகளை கோரும் அரசாங்கம்!!

தீவிரமடையும் கொரோனா..

கொரோனா வைரஸால் இறக்கும் உடல்களை அகற்றுவதற்காக ஆயிரம் பாதுகாப்பான உறைகள் வழங்குமாறு செஞ்சிலுவை சங்கத்தை கேட்டு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை இலங்கை அனுப்பியுள்ளது.

அமைச்சின் மேலதிக செயலாளர் (சுகாதார சேவைகள்) டொக்டர் சுனில் டி அல்விஸ் கையெழுத்துடன் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைத்தள்ங்களில் முதலில் வெளிவந்த இக் கடிதம் தொடர்பில் விசாரித்தபோது அத்தகைய கடிதம் அனுப்பப்பட்டதாக மேலதிக செயலாளர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

இருப்பினும் இலங்கையில் கொரோனா அ ச்சுறு த்தல் தீவிரமாக இல்லை என்றும் செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கைக்கமைய இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

தேவைப்பட்டால் பயன்படுத்த, நாட்டில் பாதுகாப்பான உறைகள் இல்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னர் வலியுறுத்திய பின்னர், இதுபோன்ற 1,000 உறைகளை வழங்க முடியுமென செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இருப்பினும், செஞ்சிலுவைச் சங்க நிர்வாக நடைமுறைகளின்படி எழுத்துமூலம் கோரிக்கை விடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், கொரோனாவால் தகனம் செய்யப்படும் உடல்களுக்கு மாத்திரமன்றி மீண்டும் தோண்டக்கூடிய சந்தேகம் உள்ள சடலங்களை அடக்கம் செய்யவும் இவை பயன்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் இவை எதற்காக கொள்வனவு செய்யப்படுகின்றது? இலங்கையில் 1000 மரணங்கள் நிகழப்போகின்றதா? என கேள்விகள் எழுப்படுகின்றது. இதனால் மக்கள் அ ச்சத்தில் உறைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்று கொண்டிருந்தவர் திடீர் மரணம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தேசிய நாழிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனைப்பந்தி – நாவலர் வீதியில் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் இன்று மாாலை திடீரென்று வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்.

ஓட்டுமடத்தைச் சேர்ந்த 68 வயதான தம்பு வாமதேவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உறவினர் வீடொன்றுக்குச் சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

1990 அம்பியூலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டு, அங்கு அம்பியூலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் : சற்று முன்னர் வெளியான தகவல்!!

ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

விடுமுறை பெற்றுள்ள முப்படையினர் முகாம்களுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்தது.

எனினும் இந்த நடவடிக்கை காரணமாக நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வீசா இன்றி தவிக்கும் இலங்கையர்கள்!!

இலங்கையர்கள்..

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சுமார் 27 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்புவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

இதில் 17 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள், 6 ஆயிரம் பேர் மாணவர்கள், 3000 பேர் குறுகிய கால வீசாக்களில் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் என இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோன வைரஸ் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் உள்ளவர்களை முன்னுரிமை கொடுத்து நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை செயலர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலைய வசதிகளும் கருத்திற் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குவைத்தில் அனுமதியின்றி தங்கியிருப்போருக்கான பொது மன்னிப்பு அவகாசத்தை நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ரவிநாத் ஆரியசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளரும் ஆபத்தான நிலையில் இல்லை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எந்தவொரு நோயாளியும் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஐ.டி.எச் தொற்று நோயியல் வைத்தியசாலையில் அதிகளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக முல்லேரியா, இரணவில, வெலிகந்த, காத்தான்குடி ஆகிய வைத்தியசாலைகளில் கொரோனா நோய் தொற்றுக்கு இலக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

யாழ்.ஏழாலையில் எ ரிந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் – ஏழாலையில் எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏழாலை, மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மித்த பகுதியிலிருந்து குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தரகர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனக்குத் தானே எ ரியூட்டி த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதியில் மக்கள் வெளியில் செல்வது எப்படி? பொலிஸார் விளக்கம்!!

வெளியில் செல்வது எப்படி?

வெளியில் செல்லும் போது தேசிய அடையாள அட்டை இலக்க முறைமை எவ்வாறு அமுலாகும் என்பது குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் வெளியே செல்லும் போது அடையாள அட்டை இலக்கங்களின் அடிப்படையில் செல்ல முடியும் என பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன விளக்கம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இந்த முறைமை அமுலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் ஏதேனும் மருத்துவ தேவைக்காக அல்லது மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு யாரேனும் வெளியே செல்ல வேண்டுமாயின் இந்த அடையாள அட்டை முறைமையில் விலக்கு அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையில் வெளியே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, திங்கட் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 1 அல்லது 2 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர். செவ்வாய்க் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 3 அல்லது 4 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

புதன் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 5 அல்லது 6 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர். வியாழக் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 7 அல்லது 8 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

வெள்ளிக் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 9 அல்லது 0 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே இவ்வாறு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அருகாமையில் உள்ள கடைகளில் தேவையான பொருட்களை முடிந்தளவு சீக்கிரம் கொள்வனவு செய்து வீடு திரும்ப வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை வரையறுப்பதற்காக இந்த தேசிய அடையாள அட்டை இலக்க முறைமை அறிமுகம் செய்யப்படுவதாக பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மான் இறைச்சியுடன் மூவர் கைது!!

மூவர் கைது..

வவுனியா – கூமாங்குளத்தில் மான் மற்றும் பண்டி இறைச்சியினை உடமையில் மறைத்து வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பிராந்திய போ தை தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய இன்றைய தினம்கூமாங்குளம் பகுதியில் சோ தனையை மேற்கொண்ட பொலிஸார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ காட்டுபன்றி மற்றும் 10 கிலோ மான் இறைச்சியை மீட்டுள்ளனர்.

அதனை உடமையில் மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டில் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முயற்சித்த போலி மருத்துவர் கைது!!

போலி மருத்துவர்..

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முயற்சித்த போலி மருத்துவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மருத்துவர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இவ்வாறு ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த ஒருவரை மாத்தறையில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராகம பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கடமையாற்றி வருவதாக குறித்த நபர் போலியான தகவல்களை வழங்கியுள்ளார்.

குறித்த நபர், மருத்துவர்கள் வாகனங்களில் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒன்றை பயன்படுத்தியிருந்தார் என பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் கொழும்பு, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களை போலியான தகவல்களை காண்பித்து கடந்து சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமாகியுள்ளனர். இதில் 54 ஆயிரம் பேர் அமெரிக்கர்கள்.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் இதனை காட்டுகின்றன. இந்த தரவுகளின்படி 29 லட்சம் பேர் கொரொனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் 2020 ஜனவரி 11ம் திகதி இந்த தொற்றினால் ஏற்பட்ட முதல் மரணம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் 210 நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது.

இதுவரை 5 நாடுகள் 20 ஆயிரம் உயிரிழப்புக்கள் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளன. இதில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸ் என்பன முக்கிய நாடுகளாக உள்ளன.

பிரித்தானியாவில் நேற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் நேற்று மாத்திரம் 369 மரண எண்ணிக்கை பதிவானது. அங்கு இதுவரை 22,614 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழில் இரவில் வீடொன்று சுற்றிவளைப்பு : இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை தனிமைப்படுத்த நடவடிக்கை!!

யாழில்..

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் இன்று இரவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினார்.

அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் பொலிஸார் விசாரணை நடத்தினர். அதன்போது அங்கிருந்தவர்கள் விசாரணைகளின் போது தொடர்ந்து முன்னுக்கு பின் முராண தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதனால் இன்றைய தினம் இருவரும் குறித்த வீட்டிலையே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 40 கொரோனா நோயாளிகள் தொடர்பான தகவல்!!

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் நேற்றைய தினம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 460 ஆகும்.

இந்த 40 பேரில் 10 பேர் கடற்கடை சிப்பாய்களாகும். இவர்கள் வெலிசர முகாமில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டனர். அத்துடன் வெலிசர முகாமில் இருந்து வீடு சென்ற வந்த 10 பேர் இதனுள் உள்ளடங்குகின்றனர்.

அந்த 10 பேரின் குடும்பங்களில் இருவரும் உள்ளடங்குகின்றனர். இதற்கு மேலதிகமாக இராணுவ பெண் அதிகாரி ஒருவர் (அவர் கடற்படை அதிகாரியை திருமணம் செய்துள்ளார்) உட்பட மூன்று இராணுவத்தினர் உள்ளடங்குகின்றார்.

இதற்கு மேலதிகமாக பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 10 பேரும் அவர்களுக்குள் உள்ளடங்குகின்றனர்.

புத்தளத்தில் இருந்து கட்டுகெலியாவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்த மூவரும், ஓமான் விமான நிலையத்தில் சிக்கியிருந்த நிலையில் அழைத்து வரப்பட்டவர்களில் மூவரும், மாலைத்தீவில் இருந்து இலங்கை வந்த ஒருவரும் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றார்கள்” என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 5 நாளில் குணமடைந்த கொரோனா நோயாளி!!

கொரோனா நோயாளி..

பிலியந்தலை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மீன் வியாபாரி 5 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

33 வயதுடைய இந்த நபர் கெரோனா தொற்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் இருவருக்கு அருகில் நெருக்கமாக செயற்பட்டவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.

குறித்த மீன் வியாபாரி 5 நாட்களில் குணமடைந்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த நபர் 5 நாட்களில் வீடு திரும்பியவுடன் அவரது வீட்டு அயலவர்கள் மத்தியில் கொரோனா அச்ச நிலை இல்லாமல் போயுள்ளது.

எனினும் அது தொடர்பில் எப்போதும் அவதானத்துடனேயே செயற்பட வேண்டும் என பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி மூடைகள் : திருப்பி அனுப்பிய இராணுவம்!!

அரிசி மூடைகள்..

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவை மீறி வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட அரிசி மூடைகளை இராணுவத்தினர் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றுக்கு சொந்தமான அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்ற பாரவூர்த்தியை புத்தளம் சாளியவேவ பகுதியில் வைத்து சோதனை செய்த இராணுவத்தினர் முறையான அனுமதி பெறப்படாது அரிசி கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்து அப் பாரவூர்தியை வவுனியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு அரிசி கொண்டு செல்வதற்கு அரச அதிபரால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி செய்த செயல் : ட்ரோன் கமெராவை கண்டவுடன் அலறி அடித்து ஓடும் காட்சி!!

இளம் ஜோடி..

தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், இளம் ஜோடி ஒன்று தனியாக சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதே போன்று இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.

இந்நிலையில் அங்கிருக்கும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மக்கள் இந்த ஊரடங்கு விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை. இதனால் அங்கிருக்கும் பொலிசார் ட்ரோன் கமெரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

அப்படி வழக்கமாக பொலிசார் ட்ரோன் கமெரா மூலம் க  ண்காணிப்பு சோதனை நடத்திய போது, காதல் ஜோடி ஒன்று காட்டுக்குள் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களை ட்ரோன் கமெரா மூலமாக பொலிசார் கண்டுபிடித்தனர். இதைப் பார்த்த அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று : புதிய அறிகுறி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

கொரோனா வைரஸ் தொற்று..

பாதம் மற்றும் பாதங்களில் உள்ள விரல்கள் ஊதா அல்லது நீல நிறமாக மாறி கடுமையான வலி ஏற்படுமாயின் அதுவும் கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான நோய் அறிகுறி என அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் தொற்று நோய்கள் தொடர்பான பிரிவின் தலைவர் மருத்துவர் ஏவின் லோடென்பேக் தெரிவித்துள்ளார்.

வேறு நோய் அறிகுறிகள் தென்படாத சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதங்கள் மற்றும் பாத விரல்களில் குறத்த அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகள் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சில நோயாளிகளின் பாதங்கள் மற்றும் கால் விரல்களில் ஏற்படும் வலி 7 முதல் 10 நாட்கள் வரை இருக்கும் என்பதுடன் பெரும்பாலானவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் வரை நோயின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தவிர சுவை மற்றும் வாசனையை அறியும் திறன் இல்லாமல் போவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றியமைக்கான அறிகுறி என இத்தாலி ஆய்வாளர்கள் கடந்த மார்ச் மாதம் கண்டறிந்தனர் எனவும் மருத்துவர் ஏவின் லோடென்பேக் குறிப்பிட்டுள்ளார்.