அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல அனுமதி!!

வெளியே செல்ல..

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டுமாயினும் சில விதிகளை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திங்கட் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 1 அல்லது 2 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர். செவ்வாய்க் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 3 அல்லது 4 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

புதன் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 5 அல்லது 6 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர். வியாழக் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 7 அல்லது 8 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

செவ்வாய்க் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 9 அல்லது 0 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே இவ்வாறு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அருகாமையில் உள்ள கடைகளில் தேவையான பொருட்களை முடிந்தளவு சீக்கிரம் கொள்வனவு செய்து வீடு திரும்ப வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கொரோன வைரஸ் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையில் சற்று முன்னர் 12 வயது சிறுவன் உட்பட மேலும் 20 பேருக்கு கொரோனா!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கனவே 420 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களுள் ஏழு நோயாளிகள் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் மேலும் கூறுகையில், 12 வயது குழந்தைக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெலிசறை கடற்படை முகாமில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் நான்கு கடற்படை வீரர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்ததாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் ஒருவர் மொனராகல பகுதியிலும் இனங்காணப்பட்டுள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 116 பேர் குணமடைந்ததோடு 7பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் அபாய வலயங்களாக கருதப்பட்ட மாவட்டங்களிலும் 27ம் திகதி முதல் தளர்த்தப்படும் என அறிவித்த நிலையில் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பீதி : தந்தையின் இறுதி சடங்கை செய்ய மறுத்த மகன்!!

கொரோனா பீதி..

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக ப லியான தந்தையை தகனம் செய்ய மகன் முன்வராத சம்பவம் நடந்தேறியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் வருவாய்துறையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்தார்.

இதனையடுத்து அதிகாரியின் உடலை மனைவி மற்றும் மகன் சந்தீப்பிடம் அதிகாரிகள் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் தாய் மற்றும் மகன் இருவரும் கொரோனா தொற்றால் பலியானவர்களுக்கு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தங்களுக்கு முழுமையாக தெரியாது என கூறி மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் தகனம் செய்ய அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அப்பகுதி தாசில்தார் குலாப் சிங் பாகேல் நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் இறுதிசடங்குகளை செய்தார்.

முன்னதாக ஊழியர்களுக்கு பிபிஇ உடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அதிகாரியின் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக சந்தீப் கூறுகையில், சொந்த ஊரான சுஜல்பூருக்கு தந்தையின் உடலை எடுத்துச் செல்ல நான் விரும்பினேன்,

ஆனால் சில பாதுகாப்பு காரணங்களால் என்னை அனுமதிக்கவில்லை. மேலும் எங்களது குடும்பத்தினருக்கு கொரோனா மாதிரி சோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம் என கூறினார்.

4 வ யது சி றுவனை உ யிருடன் சா ப்பிட்ட ப ன்றிகள்!!

கு ழந்தையை..

இந்தியாவில் நா ன்கு வ யது கு ழந்தையை கா ட்டுப் ப ன்றிகள் உ யிருடன் சா ப்பி ட்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது. ஹைதராபாத்தில் உ ள்ள சைதாபாத்திலே இ ச் ச ம்பவம் அ ரங்கேறி யுள்ளது. ஹர்ஷவர்தன் எ ன்ற நா ன்கு வ யது கு ழந்தையே இ வ்வாறு ப ன்றிகளுக்கு இ ரையாகி உ ள்ளார்.

சி றுவன் சிங்காரேனி கால னியில் உ ள்ள த னது இ ல்லத்திலிருந்து வி ளையாட மா லை 4 ம ணியளவில் வெ ளியே செ ன்றபோ து, ​​கா ட்டுப் ப ன்றிகள் அ வனை இ ழுத்துச் செ ன்று உ டல் பா கங்களை சா ப்பிட்டுள் ளது.

கு ழந்தை யின் ச டலத்தைக் க ண்டுபி டித்த உ டனேயே அ க்கம்பக் கத்தினர் சைதாபாத் கா வல் நி லையத்தைத் தொ டர்பு கொ ண்டனர். பொ லிசார் வ ந்தபி ன் பா திக்கப்பட் டவரின் பெ ற்றோர் ச ம்பவ இ டத்திற்கு வ ந்து உ டலை அ டையாளம் கா ட்டினர்.

ஹர்ஷவர்தன் வி ரைவில் ம ருத்துவமனைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்டார், அ ங்கு சி றுவன் இ றந்துவிட் டதாக ம ருத்துவர்கள் அ றிவித்தனர்.

இ ந்த ச ம்பவத்திற்கு மு ன்னர், அக்கம்ப க்கத்தில் வ சிப்பவர்கள் இ ப்ப குதியில் ஆ க்கிரமி ப்பு கா ட்டு ப ன்றிகள் கு றித்து உ ள்ளூர் அ திகாரிகளிடம் ப லமு றை பு கார் செ ய்திருந்தனர், ஆ னால் எந்த ந டவடிக்கையும் எ டுக்கப்படவி ல்லை.

உ ள்ளூர் பாலாலா ஹ க்குலா ச ங்கம் மா நில ம னித உ ரிமைகள் ஆ ணையத்தில் அ திகாரப்பூ ர்வ ம னு ஒ ன்றை தா க் க ல் செ ய்துள்ளனர், அ தில், கு ழந்தையின் ம ரணத்தில் ஐதராபாத் மா நகராட்சி அ திகாரிகள் த ங்கள் பொ றுப்புக்காக கு ற்ற வ ழக்கு ப திவு செ ய்ய வே ண்டும்  என்று கோ ரினார்.

கொழும்பு உட்பட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு!!

ஊரடங்கு சட்டம்..

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று மாலை வெளியிட்ட விசேட அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களுக்குமான ஊரடங்கு சட்டம் மே மாதம் 4ம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும்.

மே மாதம் முதலாம் திகதி வரை காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மணிக்கு அமுல்ப்படுத்தப்படும்.

கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறையினர் 4 ஆம் திகதிக்கு பின்னர் செயற்படக் கூடிய வகையில் சட்டங்கள் தளர்த்தப்படவுள்ளன. தனியார் துறையினர் காலை 10 மணிக்கு தமது வேலைகளுக்கு செல்ல முடியும் என ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமான ஊடரங்கு சட்டம் நீக்கப்படுவதாக இன்று பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடும்ப மானம் மரியாதைக்காக 2 ம கள்களை நான் தான் கொ லை செய்தேன் : அதிரவைத்த தாயின் வாக்குமூலம்!!

குடும்ப மானம் மரியாதைக்காக..

தமிழகத்தில் குடும்ப மான மரியாதைக்காக ம களை கொ லை செய்த தா ய், பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்தசமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி கனகராஜ்.

இவருக்கு சாந்தமீனா (40) என்ற மனைவியும், லோகநாதன் (15) என்ற மகன், கோகிலா(13), லலிதா(11) என இரு மகள்கள் உள்ளனர். தனது கணவர் சகோதர்களுடன் கூட்டுக் குடும்பமாக சாந்தமீனா வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் திங்கட்கிழமை சாந்தமீனா வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவருடைய ம கள்கள் இருவரும் ம யக்கமடைந்ததாகக் கூறி வீட்டில் இருந்த உறவினர்கள், மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, சிறுமிகள் இருவரும் பல் துலக்க, எலி மருந்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியதாக மருத்துவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சி றுமிகள் இருவரும் வெள்ளிக்கிழமை ஒன்றன் பின் ஒன்றாகச் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தனர். இதனையடுத்து சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி மூலம் மணப்பாறை காவல்நிலையத்தில் சாந்தமீனா சரணடைந்தார்.

அப்போது அவர் பொலிசாரிடம் அளித்து வாக்குமூலத்தில், திருச்சிக்கும் மணப்பாறைக்கும் இடையே உள்ள சமூத்திரம் என்கிற கிராமத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் தனது கணவனும் கொ டூர நோயினால் இ றந்து விட தனது கணவரின் சகோதர்கள் 3 பேர் அடுத்தது வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கணவனின் சகோதரர்களில் ஒருவரான ரவிசந்திரன் என்பர் ஆட்டோ டிரைவர். அவர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது கா ணாமல் போனது. அதனை எனது மகள்கள்தான் எடுத்தனர்.

இதில் கடந்த வாரத்தில் தன் மகள்கள் பணம் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதிர்ச்சியடைந்த நான் அவற்றால் தனது குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் 6- ஆவது, 8- ஆவது படிக்கும் மகள்களுக்கு ஞாயிறு மாலை குளிர்பானத்தில் எலி மருந்தைக் கலந்து கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி அளித்த புகாரின்பேரில் மணப்பாறை சாந்தமீனாவைக் கைது செய்து இந்தக் கொ லைக்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

பள்ளி மாணவிகள் முதல் பெண் மருத்துவர் வரை : 100 பெண்களை சீ ரழித்த இளைஞன்!!

100 பெண்களை..

தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் முதல் பெ ண் மருத்துவர் வரை என சுமார் 100 பெண்களை ஏ மாற்றி சீ ரழித்ததுடன், ஆ பாச வீடியோக்களை வைத்து மி ரட்டி பணம் ப றித்து வந்த இ ளைஞரை பொலிசார் அ திரடியாக கை து செய்துள்ளனர்.

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி(26). சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ முடித்துள்ள இவர், கோழிக்கடை உரிமையாளர் என்று கூறப்படுகிறது. இவர் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்த போது, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாக இருக்கும் அளவிற்கு வந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறி, காசி அந்த பெண் மருத்துவரிடம் நெருக்கமாக இருந்து வந்துள்ளான். அப்போது செல்போனில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துள்ளான்.

இதையடுத்து கல்லூரி படிப்பு முடிந்ததும், நாகர்கோவில் வந்த காசி, அந்த பெண் மருத்துவரிடம் பணம் கேட்டுள்ளான். பணம் தரவில்லையென்றால், நெ ருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மி ரட்டியுள்ளான்.

இதனால் அ திர்ச்சியடைந்த அப் பெ ண் அ வன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். அப்படி 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.

கையில் பணம் கிடைத்தவுடன், காசி அதிகமாக தொ ல்லை செய்ய ஆரம்பித்துள்ளான். ஒரு கட்டத்தில் காசியின் தொ ந்தரவு அதிகரிக்கவே, குறித்த பெண் மருத்துவர் பணம் தருவதை நிறுத்திவிட்டார்.

இதனால் ஆ த்திரம் அடைந்த காசி, அவரின் புகைப்படங்களை ஆ பாசமாக சித்தரித்து, நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் என சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவந்துள்ளான்.

இதைக் கண்டு மேலும், அ திர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர், இதற்கும் மேல் விட்டால் ஆகாது என்று கூறி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் செய்தார். அதன் பின் காசியை கைது செய்த பொலிசார் தொடர் விசாரணை நடத்து வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட காசி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. அந்த கோழிக்கறி கடையை வைத்து நடத்தி வந்தது காசியின் அப்பாதானாம், படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறார்.

மாலை நேரத்தில் கடை மூடிய பிறகு, சமூகவலைத்தளங்களில் காசி மூழ்கிவிடுவானாம். தன்னுடைய அழகான புகைப்படங்கள், ஜிம் பாடி புகைப்படங்கள், கூலிங் க்ளாஸ் போன்று ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் என பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளான்.

அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வாராம். இந்த கருத்துகக்ள பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர். லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர். அந்த பெண்களின் செல்போன் எண்ணை வாங்கி தனியாக அழைத்து பேசி, நெருக்கம் காட்டி, அந்த வீடியோவையும் எடுத்து வைத்து கொண்டு ப ணம் ப றித்துள்ளார்.

காசியின் செல்போன் உட்பட அவரது பல ஹார்ட்டிஸ்குகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு பொலிசார் அ திர்ச்சியடைந்துள்ளனர். காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். இதில் பள்ளி மாணவிகளை கூட காசி விட்டுவைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே முழு தகவல்கள் தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

புதுப்பெ ண்ணுக்கு க ணவனால் ந டந்த வி பரீதம்!!

பு துப்பெ ண்..

தமிழகத்தில் தூ க்கில் பி ணமாக தொ ங்கிய பு துப்பெ ண் வி வகார த்தில் அ திரடி தி ருப்பமாக அ வர் க ணவரே அ டித்து கொ ன்று தூ க்கில் தொ ங்கவி ட்டு ள்ளது அ ம்பலமாகியு ள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்வாய் கண்டிகை கி ராமத்தில் வ சித்து வ ந்தவர் கார்த்திக். இ வருக்கும் அ தே ப குதியை சே ர்ந்த சுனிதா எ ன்பவருக்கும் 7 மா தத்துக்கு மு ன்பு தி ருமணம் ந டந்தது.

இ ந்த நி லையில் நே ற்று மு ன்தினம் இ ரவு சுனிதா வீ ட்டில் பி ணமாக தொ ங்கினார். இ தனால் கார்த்திக் கு டும்பத்தினர், உ டனடியாக சுனிதா வீ ட்டுக்கு போ ன் செ ய்து, சுனிதா தூ க்கு போ ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டதாக த கவல் சொ ன்னார்கள்.

இ தை கே ட்டு அ திர்ந்த பெ ற்றோர், கார்த்திக் வீ ட்டுக்கு செ ன்று பா ர்த்தனர். அ ங்கு சுனிதாவின் உ டல் தூ க்கு க யிறிலிருந்து இ றக்கப்ப ட்டு, த ரையில் கி டத்தப்பட் டிருந்தது. அப்போ துதான் ம களின் த லையில் ர த்த கா யம் இ ருப்பதை க ண்டனர்.

இ தனால் ஆ த்திர ம் அ டைந்த அ வர்கள், உ டனடியாக பொ லிசில் ம கள் சா வில் ச ந்தேகம் இ ருப்பதாக பு கார் த ந்தனர். இ து வ ரதட்சணை பி ரச்சனைக்காக ஏ ற்பட்ட கொ லையாக இ ருக்கலாம் எ ன்றும் க ண்ணீருடன் தெ ரிவித்தனர்.

இ தையடுத்து பொ லிசார் சு னிதாவின் உ டலை கைப் பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அ னுப்பி வை த்தனர். பி ரேத ப ரிசோதனை மு டிவில் சுனிதாவின் ம ரணம் த ற்கொ லை இ ல்லை, கொ லை என தெ ரியவந்துள்ளது. இ தையடுத்து த லைம றைவாக இ ருந்த கார்த்திக்கை பொ லிசார் வ லைவீ சி தே டி கை து செ ய்தனர்.

வி சாரணையில், அ டிக்க டி வ ரதட்சணை கே ட்டு கார்த்திக் தொ ல்லை செ ய்தது வ ந்ததும், ச ம்பவத்தன்று இ ரவு 11.30 ம ணிக்கு இ தே பி ரச்ச னையை கார்த்திக் எ ழுப்பியதாகவும் தெ ரிகிறது.

த கராறு மு ற்றியதையடுத்து, ஆ வேசம் அ டைந்து கார்த்திக் சுனிதாவை அ டித்தே கொ ன்று, தூ க்கிலும் தொ ங்கவிட் டுள்ளார் எ ன்பது தெ ரியவந்துள்ளது. இ தையடுத்து பொ லிசார் கார்த்திக்கை கை து செ ய்துள்ளனர்.

பெ ண்ணை மி ரட்டி தனது சொந்த க ழிவுகளை சாப்பிட வைத்த கொ டூர இ ளைஞன் : அம்பலமான 23 நாள் கொடுமை!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி பெ ண் ஒருவரை தொடர்ந்து 23 நாட்கள் ப லாத்கா ரம் உள்ளிட்ட ப ல்வேறு சி த்திரவ தைகளுக்கு உ ள்ளாக்கியதாக கு ற்றம் சா ட்டப்பட்ட ஒ ருவர் ஆ யுள் த ண்டனையை எ திர்நோக்கி யுள்ளார்.

பிரிஸ்பேன் நகரில் வசித்துவரும் நிக்கோலஸ் ஜான் கிரில்லி என்பவரே பெ ண் ஒ ருவரை த மது கு டியிருப்பிலும் ஹொ ட்டல் ஒ ன்றிலும் அ டைத்து வை த்து க டும் சி த்திரவ தைக்கு உள் ளாக்கியவர். சட்ட காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத குறித்த பெ ண்ணை உ ளவியல் ரீ தியாகவும், உ டல் ரீ  தியாகவும் தற்போது கு ற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிரில்லி கொ டுமைப்படு த்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் சா வின் வி ளிம்பில் செ ன்ற கு றித்த பெ ண்ணை, கொ லை கு ற்றத்திற்கு ப யந்து, அவசர ம ருத்துவ உ தவிக்குழுவினருக்கு த கவல் அளித்துவிட்டு, கிரில்லி மா யமாகியுள்ளார்.

2017 ஜூன் மாதம் நடந்த இச்சம்பவத்தில், 8 நாட்கள் பொலிசாரின் க டுமையான போ ராட்ட த்திற்கு பின்னரே மா யமான கிரில்லி கை தானார். கிரில்லியிடம் சி க்கிய அந்த 23 நாட்களில் கு றித்த பெ ண் தினசரி ப லாத்காரத்திற்கு இ ரையாகி யுள்ளார்.

மட்டுமின்றி அ வரது உ டல்  மீது நெ ருப்பு வை த்து ர சித்துள்ளார் கிரில்லி. மட்டுமின்றி தூக் கத்தில் இ ருப்பவரின் பி றப்புறு ப்பில் கொ திக்கும் நீ ரையும் ஊ ற்றியதாக அவர் நீதி மன்றத்தில் தெ ரிவித்துள்ளார்.

மேலும் தனது சொ ந்த க ழிவுகளையே சா ப்பிட வை த்ததாகவும், எ ப்படி சா க வே ண்டும் என்ற முறையை தெரிவு செய்ய க ட்டாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று தகவல் அறிந்து கிரில்லியின் குடியிருப்புக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் முதலில், குறித்த பெ ண் இ றந்ததாகவே எ ண்ணியுள்ளனர்.

அவரது உ டம்பில் பல எ லும்புகள் உ டைந்த நி லையில் கா ணப்பட்டது. மேலும், தோ ல் சி தைவு உட்பட அ வரது மு கத்தில் ஆ ழமான கா யங்கள், மற்றும் அவ ரது உ டலில் 46% தீ க்கா யங்களும் இருந்தன.

உரிய நேரத்தில் அவரை மருத்துவ சி கிச்சைக்கு அ னுமதிக்க த வறி இ ருந்தால், அவர் இ றந்திருக்க கூடும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. கிரில்லி மீது தற்போது 54 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிரூபணமானால் கிரில்லி ஆ யுள் த ண்டனை அ னுபவிக்க கூடும்.

கைகளால் மண்ணை அள்ளி அவசரமாய் புதைத்தோம் : கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை வைத்து தவித்த நண்பர்!!

கொரோனாவால்..

தமிழகத்தின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55). இரு வாரங்களுக்கு முன்பு, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஏப்.19), ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சை பலனின்றி மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு இடுகாட்டுக்குக் கொண்டு சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர், கொரோனா தொற்றுக்குப் பயந்து மருத்துவர் உடலை அங்கு புதைக்கக் கூடாது எனக்கூறி, அங்கிருந்தவர்களை கல், க ட்டையால் அ டித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அ டித்ததில் அதன் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பணியாளருக்கும் ப லத்த கா யம் ஏற்பட்டது.அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர்.

பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

அப்போதும் பொலிசாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோரைத் பொலிசார் தேடி வருகின்றனர். மருத்துவர் சைமன் குறித்து பலரும் கூறுவது அவருடைய மனிதாபிமான பண்பைத்தான். ஆனால், அந்த மருத்துவருக்கே இறுதி மரியாதையைச் செலுத்த முடியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர்கள் மீது வ ன்முறை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவரின் உடல் அவரது மனைவி, மகன் கூட இல்லாமல் அவசர அவசரமாகப் புதைத்தது மருத்துவர் சைமனின் நண்பரும் மருத்துவருமான பிரதீப் தான். நேற்று என்ன நடந்தது என்ன என்பதை ‘இந்து தமிழ் திசை’யிடம் பகிர்ந்துகொண்டார் மருத்துவர் பிரதீப். மருத்துவர் சைமன் அன்பான இதயம் கொண்டவர். மிகவும் திறமையாக மருத்துவமனையை வழிநடத்தி வந்தார். மிகவும் நல்ல மனிதர்.

அவர் பரிசோதித்த நோயாளிகள் மூலம் அவருக்குக் கொரோனா வந்திருக்கக்கூடும். அவருக்கு கொரோனா இருப்பது தெரிந்த உடனேயே மருத்துவமனைக்கு சீல் வைத்துவிட்டோம். நேற்று அவர் இறந்த பிறகு ஆம்புலன்ஸில் அவரது உடலை ஏற்றிக்கொண்டு முதலில் டி.பி.சத்திரத்தில் உள்ள மாநகராட்சி கல்லறைக்குச் சென்றுகொண்டிருந்தோம்.

மருத்துவருக்கு நெருக்கமான நான் உட்பட 5 மருத்துவர்கள், அவரது மனைவி, மகன், சுகாதார ஆய்வாளர் என மொத்தம் 10 பேர் தான் இருந்திருப்போம். ஆனால், மருத்துவரின் உடலை அங்கு புதைக்கக்கூடாது என, டி.பி.சத்திரத்தில் மக்கள் போராட்டம் நடத்தியதால் வேறு இடத்தில் புதைக்கலாம் என, உடனிருந்த சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

அதன் பிறகு நாங்கள், காந்தி நகர் வேலங்காடு இடுகாட்டில் புதைப்பதற்குச் சென்றோம். அங்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்ட ஆரம்பித்தனர். சுகாதாரத்துறை விதிகளின்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை 12 அடி ஆழத்தில்தான் புதைக்க வேண்டும்.

குழி தோண்ட ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே அப்பகுதியைச் சேர்ந்த 60-70 பேர் கல், கட்டை உள்ளிட்டவற்றால் எங்கள் அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். தகாத வார்த்தைகளில் பேசி அங்கிருந்து கிளம்புமாறு மிரட்டினர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அவரது உதவியாளர், சுகாதார ஆய்வாளர், மருத்துவரின் மனைவி, மகன் என அவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை.

எல்லோரையும் பயங்கரமாகத் அ டிக்க ஆரம்பித்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அ டித்ததில் அதன் கண்ணாடி உடைந்தது. அதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்து அனைவரும் மருத்துவரின் உடலை அங்கேயே போட்டுவிட்டு ஓடினர். வேறு வழி தெரியவில்லை. எல்லோரும் பயந்துகொண்டு ஓடியபோது, நானும் அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளரின் உதவியுடன் மீண்டும் அவரது உடலை ஆம்புலன்ஸில் போட்டுக்கொண்டு கிளம்பினோம்.

உடன் ஒரு மருத்துவரும், 2 வார்ட் பாய் பணியாளர்களும் இருந்தனர். அங்கு செல்வதற்குள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் பொலிஸ் பாதுகாப்புடன் உடலைப் புதைக்க முடிவெடுத்தோம்.

ஜேசிபி இயந்திரத்தை இயக்குவதற்கு யாரும் இல்லாததால், 6 அடி தோண்டியிருந்த குழியை மண்வெட்டியால் மீண்டும் சிறிது அடி தோண்டி, கைகளாலேயே மண்ணை அள்ளிப்போட்டோம்.

நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து எல்லாம் முடிய 3.30 மணி ஆனது” என தன் நெருங்கிய நண்பரின் உடலைத் தானே புதைத்ததன் வேதனையை கண்ணீருடன் கூறினார்.
மனிதநேயமிக்கவர் என பெயர் பெற்ற மருத்துவர் சைமனின் உடல் அவரது மனைவி, மகன் இல்லாமலேயே புதைக்கப்பட்டது.

சுகாதாரத்துறை விதிகளை முறையாகப் பின்பற்றியே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு நிகழ்த்தப்படுவதாகக் கூறும் மருத்துவர் பிரதீப், அவ்வாறுதான் மருத்துவர் சைமனின் உடலும் புதைக்கப்பட்டதாக கூறுகிறார்.

கொரோனாவால் இறந்தவரின் உடலில் சோடியம் ஹைப்போகுளோரைடு தெளிக்கப்பட்டு கிருமி நீக்கப்பட்டு, பாதுகாப்பான மூன்றடுக்கு பிளாஸ்டிக் பையில் உடலைப் போட்டுத்தான் அடக்கம் செய்வார்கள்.

அதிலிருந்து நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு பூஜ்ஜியம்தான். இறந்தவரின் மூக்கு, வாயை மூடிவிடுவோம். அவரது முகத்தைப் பார்க்கக் கூட முடியாது.

உடலைக் கையாள்பவர்கள் முதல் இடுகாடு அல்லது சுடுகாட்டுக்குச் செல்பவர் வரை எல்லோரும் பாதுகாப்பான உடைகள் அணிந்திருப்பர். சுகாதார ஆய்வாளரும் அந்த இடத்தில் இருப்பார்.

உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் கிருமிநாசினி தெளிக்கப்படும். விதிகளை முறையாகப் பின்பற்றாமல் இருந்தால்தான் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றார், பிரதீப்.

சுகாதாரத்துறை விதிகளின்படி, இறந்தவரின் உடலில் புனித நீர் தெளிப்பது, சார்ந்துள்ள மத புனித நூல்களை வாசிப்பது போன்றவற்றை நிகழ்த்தலாம்.

கடைசியாக இறந்தவரின் முகம் மட்டும் திறந்து காண்பிக்கப்படும். ஆனால், இறந்தவரைத் தொடுவதற்கு அனுமதி இல்லை. இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் முறையான சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு விதிமுறைகளை பின்பற்றி இறுதிச் சடங்கு செய்தால் அதன் மூலம் தொற்று பரவ வாய்ப்பில்லை என மருத்துவர் அமலோற்பவநாதன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், இறந்த ஒருவரால் தும்மவோ இருமவோ மூச்சு விடவோ முடியாது. எனவே ஒருவர் இறந்த அந்த தருணமே தொற்று பரவுவதற்கான அனைத்து வழிகளும் தடைபடுகிறது.

இறந்தவரின் தோலில் வைரஸ் தொற்று இருக்கக்கூடும், ஆனால், இறந்த ஒருவரைத் தொடாமல் இருக்கும் வரை தொற்று பரவுவதற்கான வாய்ப்பு பூஜ்ஜியம் தான்.

கொரோனாவால் இறந்தவரை புதைப்பதோ எரிப்பதோ முழுக்க பாதுகாப்பானது. 8 அடி குழியிலிருந்து எந்தவொரு வைரஸும் மேலேறி வராது. 4,000 சென்டிகிரேட் டிகிரி நெருப்பில் எந்தவொரு வைரஸும் வாழாது என தெரிவித்துள்ளார்.

தன் நெருங்கிய நண்பரின் உடலை தானே புதைத்த வேதனையிலிருந்து மீளாத மருத்துவர் பிரதீப் மருத்துவர்களை சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.

எங்களுக்கும் பயம் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. எங்களுடையதும் உயிர்தான், எங்களுக்கும் மரணம் வரும். மக்களுக்கு கொரோனா குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.

மக்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. எங்களுக்கு எதிராகத் திரும்புவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் கதவை அடைத்துக்கொண்டது போன்று நாங்களும் அடைத்துக்கொண்டால் என்னவாகும்? மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எங்களுக்குக் கைதட்டலோ விளக்கொளியோ தேவையில்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மக்களுக்கு விளக்கினாலே போதும்.

மருத்துவரை ஹீரோவாக்க வேண்டாம். சாதாரண மனிதர்களாக விட்டு விடுங்கள். கொரோனா மட்டுமல்ல ஹெச்ஐவி, காசநோய் உள்ளிட்ட நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போதும் அவர்கள் மூலம் எங்களுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், நாங்கள் அவர்களை ஒதுக்கவில்லையே?

பலரையும் காப்பாற்றிய மருத்துவரின் உடலுடன் சாலையில் நின்றது வேதனையாக இருந்தது. நிறைய மரணங்களைப் பார்த்திருக்கிறோம்.

மரணம் எங்களுக்குப் புதிதல்ல. ஆனால் யாரையும் புதைத்ததில்லை. முதல் முறையாகப் புதைத்திருக்கிறேன் எனக்கூறும் மருத்துவர் பிரதீப்பால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

மருத்துவர் பிரதீப் உடன் இருந்து உடலை அடக்கம் செய்வதில் உதவி செய்த மருத்துவர் பாக்யராஜ் என்பவரும் அந்தச் சம்பவத்திலிருந்து மீளவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக அவர் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களைக் கல்லையும் கட்டையையும் எடுத்துக்கொண்டு தாக்கினர்.

கிட்டத்தட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் இறந்த ஒரு மருத்துவருக்கு மக்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?

மருத்துவப் பணிக்கு வந்ததற்காக வெட்கம் கொள்கிறேன். இந்த வார்த்தைகளுக்காக என்னை மன்னிக்க வேண்டும். மருத்துவர் சைமன் மனிதத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். மக்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

– Thehindu

கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்கவில்லை : ராஜ நாகத்தை கொன்று வாழை இலையில் விருந்து தயார் செய்த இளைஞர்கள்!!

கொரோனா ஊரடங்கால்..

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை என கூறி மூன்று பேர் காட்டில் இருந்த ராஜ நாகத்தை கொன்று விருந்துக்கு தயாரான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வேட்டைக்காரர்கள் கும்பல் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. அதில் மூன்று பேர் தங்களின் தோள்கள் மீது 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை கொன்று வைத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், காட்டுக்குள் சென்று ராஜ நாகத்தை கொன்றோம்.

கொரோனா ஊரடங்கால் எங்களுக்கு உணவு மற்றும் இறைச்சிகள் கிடைக்கவில்லை. அதனால் தான் இப்படி செய்தோம் என கூறியவாறு நாகத்தை வாழை இலையின் மீது வைத்து விருந்துக்கு தயாராகிறோம் என கூறினர்.

ஆனால் மாநிலத்தில் உணவு பஞ்சம் இருப்பதாக கூறப்படுவதை அருணாச்சல பிரதேச அரசு மறுத்துள்ளது. போதுமான அளவு அரிசி உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளதாகவும், ஏழைகளுக்கு ரேஷன் மூலம் இலவசமாக கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையில் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ராஜ நாகத்தை கொன்றவர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

லண்டனில் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரபல தமிழ் மருத்துவர் விஷ்னா!!

தமிழ் மருத்துவர் விஷ்னா..

பிரித்தானியா பெர்மிங்ஹாம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான பிரபல ஆலோசகராக பணிபுரிந்து வந்த, விஷ்னா இராசையா கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். விஷ் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் விஷ்னாவுக்கு 48 வயது. விஷ்னா ஒரு மலேசியத் தமிழர் ஆவார்.

குழந்தைகளுக்கான சிறந்த வைத்திய நிபுணர் என்பதோடு பெர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளையில் பணிபுரிந்தார், அவர் பிராந்திய குழந்தை வலையமைப்பிற்கான முன்னணி மருத்துவர்ரும் ஆவார்.

அறக்கட்டளை அவரை ஒரு அற்புதமான மருத்துவர் என்று விவரித்து, அவர் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பராமரிப்பதில் ஆர்வமாக இருந்தார்.

குறைப்பிரசவ குழந்தைகளை கவனித்து அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற இவரின் இழப்பிற்கு வைத்தியசாலை நிர்வாகம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

எனது அப்பாவை இழந்து நாங்கள் தனிமை ஆகிவிட்டோம் என விஷ்னாவின் மகள் கெட்லி தெரிவித்துள்ளார். மேலும் அவரது மனைவி லிசா தெரிவிக்கையில் “விஷ் தனது வேலையை அளவுக்கதிகமாக நேசித்தார்: அவரைப் பொறுத்தவரை இது ஒரு வேலையை விட உயிர் என்றே சொல்லலாம்.

அவர் கவனித்துக்கொண்ட ஒவ்வொரு நோயாளியையும் குடும்பத்தினரையும் அவர் தனது சொந்தமாகக் கருதினார். இறுதியா அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் விஷ்னா நன்றி கூறினார் என மனைவி லிசா தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு Worcestershire Royal Hospital இல் சிகிச்சை பெற்று வந்தார் விஷ்னா. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

பெரும் அதிர்ஷ்டமாக சிக்கிய பெருமளவு திமிங்கலத்தின் அம்பர்!!

திமிங்கலத்தின் அம்பர்..

விலை மதிப்பீடு செய்யப்படாத 11 கிலோ கிராம் அம்பர் என்ற திமிலங்கிலத்தின் கழிவுடன் மீனவர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்பிட்டி கந்தகுளி கடற்கரையில் படகில் அம்பர் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீனவருடன் பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.

கடல் வாழ் பாலூட்டி விலங்கினமான திமிங்கிலத்தின் உடலில் உற்பத்தியாகும் அம்பர் என்ற இந்த திரவியத்தை வைத்திருப்பது வனம் மற்றும் கடல் ஜீவராசிகள் சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பர் தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ள கல்பிட்டி வனஜீவராசிகள் அலுவலகத்தின் சிரேஷ்ட மஞ்சுள குமார மொரதென்ன,

“அம்பர் திமிங்கிலத்தின் உணவு ஜீரணிக்கும் தொகுதிக்குள் உற்பத்தியாகின்றது. திமிங்கிலத்தின் உடலில் நீண்டகாலம் நடக்கும் இரசாயன மாற்றத்தின் பிரதிபலனாக அம்பர் உருவாகின்றது. இதனை திமிங்கிலம் வாந்தி அல்லது கழிவாக கடலுக்குள் வெளியேற்றுகிறது.

இது மிகவும் அபூர்வமான திரவியம் என்பதால் விலை மதிப்புக் கூடியது. வாசனை திரவியங்களை தயாரிக்க இதனை பயன்படுத்துகின்றனர்” எனக் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர் , அம்பருடன் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்காக வடமாகாணத்தில் புதிய வைத்தியசாலை!!

கொரோனா நோயாளிகளுக்காக..

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை ஒன்று வடக்கு மாகாணத்தில் நிறுவப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் மருத்துவருமான Dr த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களை இதுவரை நாங்கள் வெலிகந்த மற்றும் இரணவில போன்ற வைத்தியசாலைகளுக்கே அனுப்பிவருகின்றோம்.

எனவே வடமாகாணத்தில் குறித்த வைத்தியசாலையை அமைக்க மாகாண சுகாதார அமைச்சு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

இதன்படி வடக்கில் உள்ள ஒரு வைத்தியசாலையை தேர்வு செய்து அதனை கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா : 3 நாட்களில் 100 நோயாளிகள்!!

3 நாட்களில் 100 நோயாளிகள்..

இலங்கையில் இதுவரையில் 420 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா நோயாளர்க்ள அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இறுதியாக மூன்றே நாட்களில் 100 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் முதல் 100 நோயாளிகள் அடையாளம் காணுவதற்கு 58 நாட்கள் எடுத்துள்ளன.

அடுத்த 100 நோயாளிகளை அடையாளம் காணுவதற்கு 19 நாட்களாகியது. அடுத்த 100 நோயாளிகளை அடையாளம் காணுவதற்கு 8 நாட்களாயது. இந்நிலையில் இறுதி 100 நோயாளிகள் வெறும் மூன்று நாட்களில் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது இலங்கையில் கொரோனாவின் வீச்சு தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை 420 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 116 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் எப்போது நீக்கப்படும்? – பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்!!

ஊரடங்குச் சட்டம்..

இலங்கை முழுவதும் இன்றும் நாளையும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 4 மாவட்டங்கள் மற்றும் சில பொலிஸ் பிரிவை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

எனினும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்படுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்கி மக்கள் வாழ்க்கையை வழமைக்கு திரும்புவது எப்போது என பலர் கேள்வி எழுப்புகின்றார்கள். எனினும் ஒரு சிலர் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் செயற்படுவதனால் முழு நாட்டிற்கே ஆபத்தாகி விடும்.

பொது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தினை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிலர் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் செயற்பட்டமையினால் கடற்படை சிப்பாய்கள் உட்பட கொழும்பு 12 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-