இலங்கையில் 414 ஆக உயர்வடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 46 பேருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 368 ஆக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

ஜப்பானை புரட்டி போட காத்திருக்கும் மிகப் பெரிய சுனாமி : 90 அடி உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கை!!

மிகப் பெரிய சுனாமி..

ஐப்பானில் விரைவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று ஐப்பான் நாட்டு அரசின் ஆய்வுக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. ஐப்பான் நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள், சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொண்டதாக, பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆப் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஜப்பானின் வடக்குப் பகுதியில் சுனாமி ஏற்படுவது உறுதி. 9 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில், 30 மீற்றர் உயரத்திற்கு சுனாமி ஏற்படும். பசுபிக் கடற்கரையை ஒட்டி இந்த பாதிப்பு உணரப்படும்.

கடந்த ஏப்ரல் 18-ஆம் திகதி டோக்கியோவுக்கு தென் பகுதியில், பசுபிக் கடலில் இருக்கும் அகாஸ்வாரா தீவுக்கு தெற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பெரிய அளவில் எங்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இனி ஏற்பட இருக்கும் நிலநடுக்கம் ஜப்பான் டிரஞ்ச் பகுதியில் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் வடக்கு அமெரிக்கா, பசிபிக், யுரேசியன், பிலிப்பைன்ஸ் கண்டங்கள் ஒரே இடத்தில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன.

யுரேசியன் கண்டத்தின் மீது தெற்கு ஜப்பான் உள்ளது. இதனால், ஜப்பான் எப்போதும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது. ஜப்பான் டிரஞ்ச் பகுதிதான் எப்போதும், நிலநடுக்கத்தின் மையமாக இருக்கிறது. 2011 மார்ச் 11-ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு மட்டும் 15,000-பேர் உயிரிழந்தனர்.

இந்தக் குழுவின் ஆய்வின்படி, ஷிஷிமா டிரஞ்ச் பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் சுனாமி ஏற்படலாம். அப்போது கடல் அலை 90 அடி உயரத்திற்கு உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் நிலநடுக்கம் வரும்போது, மக்களை வெளியேற்றுவது மிகவும் கடினம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணித்தது போல் நிலநடுக்கம் ஏற்பட்டால், புகுஷிமா ஒன்றாம் எண் அணு உலை முழுக்க மூழ்கிவிடும் என்று குறிப்பிட்டுள்ளனர். 2011-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போதும், இந்த உலை மிகவும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு கொரோனா இல்லை வீட்டுக்கு போகலாம் : தொற்று இருப்பவரை தவறுதலாக அனுப்பிய மருத்துவர்கள்!!

தவறுதலாக..

கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகித்த இருவருக்கு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடந்த நிலையில் இருவருக்கும் ஒரே பெயர் இருந்தால் ஏற்பட்ட குழப்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம், காட்டூரி மருத்துவக் கல்லூரியில் சிலர் கொரோனா மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்படுள்ளனர்.

இங்கு ஒரே பெயரில் இருவர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், பெயர் குழப்பத்தால் மற்றொருவரை டிஸ்சார்ஜ் செய்வதற்குப் பதில், தொற்று உள்ளவரிடம் சென்ற மருத்துவக் குழுவினர் உங்களுக்கு கொரோனா இல்லை என கூறி டிஸ்சார்ஜ் செய்து விட்டனர்.

மேலும், அரசு அறிவித்தபடி, அவருக்கு ரூ.2000 பணமும் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அதன் பின்னர், நடந்த தவறை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, தாடேபல்லியில் இருந்த கொரோனா தொற்று நபரை அவரது வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை கூறி, மீண்டும் மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், அந்த நபர் மருத்துவமனைக்கு வரமாட்டேன் என அடம் பிடித்தார்.

அதன் பின்னர், நடந்த விவரங்களை பொலிசாருக்கு தெரிவித்த மருத்துவர்கள், அவர்களின் உதவியோடு தொற்று நபரை ஆம்புலன்ஸில் ஏற்றி தற்போது என்.ஆர்.ஐ மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால், தொற்று இருப்பவரின் வீட்டில் உள்ள மேலும் 4 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் பெரும் குழப்பத்தால், தொற்று உள்ள நபரிடம் அந்த ஒரு நாள் யார் யார் தொடர்பு கொண்டனர் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குண்டூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சடலத்தை துணியில் சுற்றி சைக்கிளில் எடுத்துச் சென்ற நபர் : கொரோனாவால் நடக்கும் துயரம்!!

கொரோனாவால்..

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பசியின் கொ டுமையால் இறந்தவரின் உடலை தன்னார்வலர் ஒருவர் சைக்கிளில் எடுத்து செல்லும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால், சாதரண மக்கள் சாப்பாடடிற்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் சாப்பாடு இல்லாமல் உயிரிழக்கும் நிலைகளும், ஒரு சிலர் குப்பைகளில் கிடக்கும் பொருட்களை எடுத்து சாப்பிடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமாரெட்டி மாவட்டத்தில் இருக்கும் ரயில் நிலையத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து தனியாக வசித்து வந்தவர் மஹா ராஜூ வெங்கடராஜூ.

ஊரடங்கு உத்தரவால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் வேலை கிடைக்காமல் திண்டாடிய வெங்கடராஜூ, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் பசிக்கொடுமையால் இருந்தவர் சாலையோரத்தில் படுத்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பொலிசார் உடனடியாக சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தனியார் வாகனம் மூலம் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பொலிசார் எடுத்த முயற்சிக்கும் கொரோனா அச்சம் காரணமாக பலன் கிடைக்கவில்லை.

இதனால் வேறு வழி இல்லாமல் ரயில்களில் அநாதையாக மரணம் அடைந்த நபர்களின் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்யும் ராஜூ என்பவரின் உதவியை பொலிசார் நாடினர்.

இதையடுத்து அவர் வெங்கடராஜூவின் சடலத்தை ஒரு துணியில் சுற்றி சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஈனப்பிறவிகள்… டிரெண்டாகும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு!!

ராஜ்கிரணின் பதிவு..

தமிழகத்தில் கொரோனாவால் பா திக்கப்பட்டு உ யிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து க ற்களை கொ ண்டு அ டித்த ச ம்பவம் தொ டர்பில் தனது க ண்டனத்தை பதிவுசெய்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

அவரது பேஸ்புக் பக்கத்தில், எவ்வளவு கீ ழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது,மிகுந்த வே  தனையும், மன உ ளைச்சலும் ஏற்படுகிறது.

தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர்,யாரைப்பற்றியும் க வலைப்படாமல், “தான் படித்தது மக்களை கா ப்பாற்றுவதற்கே” என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப்பொறுப்புணர்வோடு, தம் உ யிரையும் ப ணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான், என்றால்,

இஸ்லாமியனாகப்பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பா திக்கப்பட்டு இ றந்த ஒரு மாற்றுத்திறனாளிச் சி றுவனின் உ டலை, பு தைக்க விட மாட்டோம் என்று அ டாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கே வலப்பட்டு நிற்கும்.

இதைப்போன்ற கொ டுமைகளுக்கு, கடு மையான எ திர் ந டவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்..” என்று குறிப்பிட்டுள்ளார். ராஜ்கிரணின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அவமதித்த மக்கள் : மனைவி வெளியிட்ட உருக வைக்கும் வீடியோ!!

கொரோனாவால்..

கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த மருத்துவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சென்னையை சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றபோது, அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி மோசமாக நடந்து கொண்டனர். பின் அவரது உடல், வேறொரு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவரின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என் கணவரின் இறுதி ஆசை. அதன்படி அவரது உடலை எங்கள் முறைப்படி கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும். நான் என் இரு பிள்ளைகளுடன் விதவையாக நிக்கிறேன், எனக்கு இந்த உதவி மட்டும் செய்யுங்கள்”. என்று கண்ணீருடன் கேட்டுள்ளார்.

முன்னதாக மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்ததால், உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாகனங்கள், மற்றும் பணியாளர்கள் மீது வ ன்முறை நடத்தப்பட்டது. இதனால், தமிழக மருத்துவர்கள் சங்கம், காவல் துறை மற்றும் அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்ததுடன், 20பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், மருத்துவரின் மனைவி இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.

3 நாட்கள் தொடர் நடை பயணம் : வீடு வந்தடைய ஒரு மணிநேரத்திற்கு முன் 12 வயது சிறுமிக்கு எற்பட்ட பரிதாப நிலை!!

12 வயது சிறுமிக்கு..

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், 12வயது சி றுமி சொந்த ஊருக்கு 3நாட்கள் தொடர்ந்து நடந்து சென்ற நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த 14ஆம் திகதி தளர்த்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மே 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதனை அடுத்து பலரும் சொந்த ஊர்கள் நோக்கி மீண்டும் படையெடுக்கு துவங்கினர்.

இந்நிலையில், சதீஷ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் பகுதியை சேர்ந்த 12 வயது சி றுமி ஒருவர், தெலுங்கான மாநிலத்தில் உள்ள மிளகாய் விவசாய பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தனது சொந்த ஊருக்கு திரும்ப அங்குள் பணியாளர்களுடன் புறப்பட்டுள்ளார். 3நாட்கள் சரியான உணவு உறக்கம் இன்றி 150 கிலோமீற்றர் நடந்துள்ளனர்.

வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 14 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் போது அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு ம யங்கி வி ழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள், அவருக்கும் நீரிழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அதில், எதிர்மறை முடிவுகளே வந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

அந்த குடும்பத்தினருக்கு 1லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது போன்று, பல மாநிலங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களை நோக்கி கூட்டம் கூட்டமாக திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்!!

ஊரடங்கு சட்டம்

இன்று இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களையும் அலவத்துகொடை,

வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று 8 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கே தளர்த்தப்படவுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தெளிவாக தெரியும் சிவனொளிபாத மலை!!

சிவனொளிபாத மலை

கொழும்பில் சில பிரதேசங்களில் இருந்து தற்போது சிவனொளிபாத மலையை காணக் கூடியதாக இருப்பதுடன் அந்த காட்சியை பலர் புகைப்படமாக பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பல தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்பதுடன் வாகன போக்குவரத்து குறைந்துள்ளதுடன் சுற்றாடல் மாசடைவதும் குறைந்துள்ளது.

இதனால், காற்றில் தூசி குறைந்து காற்றின் தரம் அதிகரித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. காற்றில் மாசு குறைந்துள்ளதால், சிவனொளிபாத மலையை கொழும்பில் இருந்து காண முடிந்துள்ளதாக பலர் கூறியுள்ளனர்.

கொழும்பில் பல பிரதேசங்களில் இருந்து அதிகாலை நேரத்தில் சிவனொளி பாத மலையை காணக் கூடியதாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் திடீர் மரணம்!!

திடீர் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து அழைத்துவரப்பட்ட கொரோனா சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் எம்.அ.நசார் என்ற நபர் காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய கடந்த 23 ஆம் அவருக்கு தொற்று ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந் நிலையில் நேற்று இரவு அவர் வைத்தியசாலையிலையே உயிரிழந்துள்ளார். இவரது குடும்பத்தினரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் கொரோனா சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாரடைப்பாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் மூன்று நாட்களின் பின்னர் உயிரிழப்பு!!

படுகாயமடைந்த இளைஞர்..

மட்டக்களப்பு – தாண்டவன்வெளி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் நேற்று உயிரிழந்துள்ளார். தாண்டவன்வெளி சந்தியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினை சேர்ந்த எஸ்.மதுசன் எனும் (25 வயது) இளைஞர் கவலைக்கிடமான முறையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் ம துபான போத்தல்களை கொண்டு சென்ற நிலையில் விபத்தினை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் முகக்கவசம் அணியாத மக்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் பொலிஸ்!!

முகக்கவசம்..

உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த முகக்கவசம், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்கிறார்கள்.

இலங்கையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பொரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் உத்தரவினை பொருட்படுத்தாது முகக்கவசம் அணியாது பயணிக்கின்றனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு பொலிஸ் பிரிவினர் இன்று (24.04.2020) வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முகக்கவசம் அணியாது செல்பவர்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்வர்களை எச்சரிப்பது மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தினை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு முகக்கவசத்தை வாங்கி அணிந்து வந்து வாகனத்தினை எடுத்துச்செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்தனர்.

பொலிஸாரின் இச் செயற்பாடு வவுனியா மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

பாடசாலைகள் மே 11இல் ஆரம்பமாவது சந்தேகம் : இராணுவத் தளபதி தெரிவிப்பு!!

பாடசாலைகள்..

“இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை உள்ளது.”

இவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பாடசாலைகளின் வகுப்பறைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

எனினும், பாடசாலைகளை மே மாதம் 11ஆம் திகதி மீள ஆரம்பிப்பதில் மாற்றம் எதையும் இதுவரை எடுக்கவில்லை என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கையில் ஆறு நாட்களுக்குள் 124 பேருக்கு கொரோனா!!

கொரோனா..

இலங்கையில் 6 நாட்களுக்குள் கொரோனா தொற்றுடைய 124 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 18 முதல் 23 ஆம் திகதி வரையான 6 நாட்களுக்குள் 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன், வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டத்திலும் ‘கொரோனா’ தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி முதல் நேற்று (23.04) இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 368 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று மாத்திரம் 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றாளர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 107 பேர் குணமடைந்துள்ளனர். 226 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 173 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

பொது போக்குவரத்து பயன்பாடு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

விசேட அறிவிப்பு..

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட மாவட்டங்களில் பொது போக்குவரத்து அந்தந்த மாவட்டங்களின் எல்லைக்குள் மட்டுமே இயக்க முடியும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளில் பொது போக்குவரத்து இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து அந்த மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்படும். பொது போக்குவரத்து சேவைகள் மாவட்டங்களுக்கு இடையே செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு கை சுத்திகரிப்பு பொருட்கள் வழங்கப்படும், அதே நேரத்தில் கை சுத்திகரிப்பு பொருட்கள் அனைத்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் கிடைக்கும். பொதுப் போக்குவரத்தில் தேவையற்ற பயணத்தைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கொரோனா பரவுவதை தடுக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் வழங்கிய வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும். பொது போக்குவரத்து சேவைகளை நடத்துபவர்களுக்கு முகக்கவசங்களும் கட்டாயமாகும்.

பேருந்துகளில் இருக்கைகள் zigzag வடிவத்தின் கீழ் இருக்கும், ஒவ்வொரு பயணத்திற்கும் பிறகு அனைத்து பேருந்துகளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என அவர் கூறினார்

வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது..

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போ தை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஈச்சங்குளம் காட்டுப்பகுதியை முற்றுகையிட்ட பொலிஸார் 35லீற்றர் கசிப்பினை கைப்பற்றியுள்ளதுடன், அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் 405000 மி.லீற்றல் கோடா மற்றும் பெரல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அதனை காச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா சுந்தரபுரம் பகுதியை சேர்ந்தநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கைது செய்யபட்டவர் இன்றய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.