சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் சி றுமி ஒ ருவர் வ ன்புண ர்வுக்கு உட்படுத்தும் கா ணொளி தொடர்பில் பிரபல நடிகை பியூமி ஹன்சமலியிடம் வா க்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹன்சமாலி தொடர்ந்தும் இது தொடர்பான தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த கா ணொளி ச ம்பந்தமாக ந டத்தப்படும் வி சாரணைகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தேசிய சி றுவர் பா துகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சி றுமி வ ன்புணர் வுக்கு உ ட்படுத்திய சம்பவம் தொடர்பாக மாணிக்க கல் வியாபாரியான பிரியங்க புஷ்பகுமாரவுக்கு எ திராக கு ற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் வி சாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா, வீரபுரம் மாணிக்கவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்களும், மாணவர்களும் இன்று காலை இரண்டாவது தடவையாகவும் பிரதான வீதியில் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் கணக்கீடு, வர்த்தகம், இந்துநாகரீகம், கணிதம், தமிழ் மற்றும் கலை பாடங்களான சித்திரம், சங்கீதம் இரண்டாம் மொழி பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இங்கு 342 மாணவர்கள் கல்விகற்கும் நிலையில் 20 ஆசிரியர்களும் பகுதி நேரமாக இரண்டு ஆசிரியர்களுமே கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ஆரம்பப் பிரிவில் 105 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 3 ஆசிரியர்களே கல்வி கற்பித்து கொண்டிருக்கின்றனர்.
இப்பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மற்றும் உயர்தர மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி இப்பாடசாலை இயங்கி வருகின்றது.
பாடசாலை முன்பாக செட்டிகுளம், நேரியகுளம் வீதியில் மாணவர்களும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆ ர்ப்பாட்டக்காரர்கள் கிராமத்திற்கு ஒரு நீதி நகரத்திற்கு ஒரு நீதியா?, எமது பாடசாலை எமக்கு வேண்டும் ஆசிரியர்களை உடன் நியமி, கிராமத்தின் கல்வி வளம் கல்வியே, சமமான கல்வியை வழங்கு,
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், கிராமப்புற பாடசாலைகளுக்கும் உங்கள் கண்களை திருப்புங்கள், மாணவர்களின் கல்வியை நாசமாக்காதீர் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
இதன்போது, செட்டிகுளம் கோட்ட கல்விப் பணிப்பாளருக்கு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே தாம் இவ் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி, செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஆ ர்ப்பாட்டக்காரருடன் கலந்துரையாடினர்.
இதன்போது தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது.
நாடு முழுவதும் கல்விப் பொது சாதாரண தரம் சித்தியடையாத வறுமைக்கோட்டிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ் வேலைவாய்ப்புக்காக வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 3100 விண்ணப்பதாரிகளுக் நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் கிராம அலுவலர் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் கிராம அலுவலர் முன்னிலையில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுகின்றது. குறித்த நேர்முகத் தேர்வில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். நேர்முகத் தேர்வுகள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் கடிதங்களை அந்தந்த கிராம கிராம சேவகர்களிடம் பெற்று நற்சான்றிதழ் பத்திரத்துடன் கடித்தினையும், நேர்முகத்தேர்வுக்கு கொண்டு வருமாறு பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் வானின் பயணஞ் செய்த மூவர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி ஐஸ்கிரீம் வகைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த மூவரில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தை பெண் சாரதி ஒருவரே செலுத்தியுள்ளதாகவும், அவருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரச பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சைகளை ரத்து செய்வதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையில் பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் என்பவற்றில் பங்கேற்கின்றனர்
இந்த காலத்தில் அவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே முதலாம் ஆண்டு தவணைப் பரீட்சைகளை ரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இரண்டாம் தவணை மற்றும் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் முன்னரை போன்றே நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சில மின்சார நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதனால் இலங்கை மின்சார சபை சில பிரதேசங்களில் மின்சார விநியோகத்தடையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேற்குக்கரை மின்சார மையம், மாத்தறையில் உள்ள மின்சார மையம் மற்றும் துல்ஹிரிய மத்துவம, கொலன்னாவ மின்சார பரிவர்த்தனை நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் இதன் காரணமாக முழுமையாக மின்சார விநியோகம் தடைப்படவில்லை என்றும், நேரத்துக்கு நேரம் துண்டிக்கப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு உ ளவு பார்த்ததாக கு ற்றம் சாட்டப்பட்ட எட்டு சவுதி பி ரஜைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் முதற்கட்ட த ண்டனை விதித்தது. உ ளவு கு ற்றச்சாட்டில் சவுதி மாநில பா துகாப்பு நீதிமன்றம் ஒருவருக்கு ம ரண த ண்டனையும், ஏழு பேருக்கு சி றைத் த ண்டனையும் விதித்தது.
ஈரானிய உ ளவுத்துறைக்கு ர கசிய த கவல்களை கசியவிட்டதாக நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ம ரண த ண்டனை வழங்கப்பட்டது.
கசிந்த ர கசிய த கவல்கள் சவுதி தேசிய பா துகாப்பை பா திக்கிறது மற்றும் இரண்டு வெளிநாட்டு தூதரகங்கள், அவற்றின் நுழைவாயில்கள், வெ ளியேறுதல் மற்றும் பா துகாப்பு இருப்பு போன்ற தகவல்களை உள்ளடக்கியது. எனினும், எந்த தூதரகங்கள் என்று குறிப்பிடப்படவில்லை.
கு ற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஈரானுக்கு சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களையும் பொருளாதாரத்தையும் பா திக்கும் தகவல்களை வழங்கினர். அவர்களின் சேவைகளுக்காக அவர்களுக்கு நிதி வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது என நீதிமன்ற வி சாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சிறைத் த ண்டனை வழங்கப்பட்ட அனைவருக்கும் உத்தியோகபூர்வ த ண்டனையைத் தொடர்ந்து 30 நாட்களில் த ண்டனைக்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.
தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஒரு தாயார், 21 வயதில் பிரித்தானியாவின் இளவயது பாட்டி என்று கருதப்படுகிறார். பிரித்தானியாவின் கிரேவ்ஸென்ட், கென்ட் பகுதியை சேர்ந்த 56 வயது மார்க் மற்றும் 21 வயது பெக்கா கீலி என்பவர்களே அந்த தம்பதி.
பெக்காவுக்கு 16 வயது இருக்கும்போது ஒரு இசை நிகழ்ச்சியில் பாடகர் மர்க்கை சந்தித்துள்ளார். மார்க்கின் முந்தைய திருமணத்தில் அவரது மூத்த குழந்தையை விட பெக்கா ஆறு வயது இளையவள் எனவும், மார்க்கின் இன்னொரு பிள்ளையின் அதே வயது பெக்காவுக்கு.
மார்க்குடனான நட்பு நாளடைவில் காதலாக மாறவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் சம வயது நபரை தேடிக் கொள்ள பலமுறை மார்க் பெக்காவுக்கு அறிவுரை கூறியதாகவும் அந்த அறிவுரைகளை அவர் செவிமடுக்கவில்லை என்றே பெக்கா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மார்க் மற்றும் பெக்கா தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தது.
56 வயது நபரை திருமணம் செய்து கொண்டதால் பலரும் பெக்காவை பாட்டி என்றே அழைப்பதாகவும், ஆனால் அதுகுறித்து தாம் கவலைப்படவில்லை எனவும் பெக்கா தெரிவித்துள்ளார்.
இந்த உறவு தவறான முன்னுதாரணம் என நிறைய பேர் நினைத்தார்கள். பெக்காவின் சம வயதினரைக் கண்டுபிடிக்க நான் அவளிடம் பலமுறை சொன்னேன்,
ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தோம், அந்த மகிழ்ச்சியை தொலைத்து விடாமல் இருக்க முடிவு செய்தோம் என்கிறார் மார்க். மார்க்கின் முந்தைய திருமணத்தில் ஆரோன்(27), ஜேக்(21), லூக்கா(16), மற்றும் எம்மா(13) என நான்கு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய பணிப்பெண் ஒருவர் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை பொறுத்தமட்டில் விமானப் பணிப்பெண்களின் உடல் எடை 59.8(132lbs) என இருத்தல் வேண்டும். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக இதே நிறுவனத்தில் பணியாற்றிவரும் Ina Meliesa Hassim என்பவருக்கு சம்பவத்தன்று உடல் எடை 60.3 என பதிவாகியுள்ளது.
இந்த உடல் எடை அதிகரிப்பை ஒப்புக்கொள்ள மறுத்துள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
தமக்கு இழைக்கப்பட்டது அநீதி என வாதிட்ட மெலிசா ஹாசிம் தொழிலாளர்களுக்கான நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் மலேசிய நீதிமன்றம் இந்த வழக்கை வேலைவாய்ப்பின்மை சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
பயணிகளின் பா துகாப்பு கருதி விமான ஊழியர்களின் உடல் எடை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம் என்று மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
உலகின் முதன்மை விமான சேவை நிறுவனமாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2015 முதல் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விமானப் பணிப்பெண்களுக்கு விதித்துள்ளது.
மெலிசா ஹாசிம் விவகாரத்தில் அவரது உடல் எடையை குறைத்துக் கொள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அவருக்கு 18 மாதங்கங்கள் கால அவகாசம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் உரிய் பரிசோதனைகளில் மெலிசா ஹாசிம் தோல்வியுற்றதாக சுட்டிக்காட்டியுள்ள விமான சேவை நிறுவனம், அதன் பின்னரே அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
உடல் எடை தொடர்பான கடும்போக்கு அநியாயமானது என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் லுஃப்தான்சா போன்ற பிற நிறுவனங்களில் அவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை என்றும் ஹாசிமின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையில் சில பகுதிகளில் தொலைபேசி வசதிகள் இல்லாத போதிலும், அதற்காக கட்டணம் பட்டியல்கள் வருவதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
பல வருடங்களாக மாத்தறை – லக்கல ரணமுரே மற்றும் நாரஙகமுவ ஆகிய கிராமங்களில் தொலைபேசி வசதிகள் இல்லை.
இங்கு சுமார் 1000 குடும்பங்களுக்கு தொலைபேசி வசதிகள் இல்லாத நிலையில் தொலைபேசி கட்டண பட்டியல் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட தொலைபேசி கனவு இன்னமும் கனவாகவே உள்ளதாகவும், அது இன்னமும் நிறைவேறவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்னர் CDMA தொலைபேசிகள் வழங்கப்பட்ட போதும் அதற்கான சமிக்ஞை இல்லாமையினால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பயன்படுத்தாத தொலைபேசிகளுக்கு கட்டண பட்டியல் மாத்திரம் ஒவ்வொரு மாதமும் வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்த போதிலும் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அந்த நிறுவனங்களுக்கு எதிராக தாம் வழங்கு தாக்கல் செய்யவுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களால் அவசர நேரத்திலேனும் ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியாமல் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மு க்கியமாக இ ஸ்லாமிய இ ளைஞர் ஒ ருவரை சு ற்றி நி ன்று க லவரக் காரர்கள் அ டிக்கும் பு கைப் பட மும் வை ரல் ஆ கியுள்ளது. அ ந்த இ ளைஞர் த ன்னை வி ட்டுவி டுங்கள் என்று உ யிருக்கு கெ ஞ்சிய நே ரத்திலும் கூ ட அ வரை வி டாமல் தொ டர்ந்து அ டித்து இ ருக்கிறார்கள்.
அ வர் ரத் தம் வ டிய த ரையில் அம ர்ந்து இ ருக்கிறார். அ வரை சு ற்றி ஹெ ல்மெட் மா ட்டிக்கொண்டு கை யில் த டிகளுடன் ப லர் அ டிக்க த யாராக இருக் கிறார்கள்.
இந்த பு கைப்ப டம்தான் டெல்லி க லவரத்தை அ ப்படியே எ டுத்துக்காட்டி இ ருக்கிறது. உ லகம் மு ழுக்க அ திர்வ லையை ஏ ற்படுத்திய இப்புகை ப்படங்களை பலர் ப கிர்ந்து வருகிறார்கள்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் கையில் பிரமாண்ட து ப்பாக்கி ஒன்றுடன் தோன்றினாள் 11 வயது சி றுமி ஒருத்தி.
Bailey Nielsen என்ற அந்த சிறுமி, Boiseஇலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் கு ண்டுகள் நிரப்பப்பட்ட AR-15 வகை துப்பாக்கியுடன் நின்றாள். முன் மொழியப்பட்டுள்ள ஒரு து ப்பாக்கி சட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அவள் வந்திருந்தாள்.
அத்துடன், தன்னால் ஒரு து ப்பாக்கியை பொறுப்பான முறையில் பயன்படுத்தமுடியும் என்பதைக் காட்டுவதற்காகவும் தான் வந்திருப்பதாக தன்னுடன் வந்திருந்த தனது தாத்தா மூலம் தெரிவித்தாள் அவள்.
Bailey தனக்கு 5 வயதாக இருக்கும்போதிலிருந்தே து ப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொண்டதாக அவளது தாத்தாவான Charles Nielsen தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்டுள்ள அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அந்த மாகாணத்துக்கு வருகை தரும் யார் வேண்டுமானாலும் நகர எல்லைக்குள் சட்டப்படி ஆ யுதங்கள் வைத்திருக்கலாம். அமெரிக்காவில் த ற்காப்புக்காக து ப்பாக்கி வைத்திருப்பதை பலரும் வரவேற்கின்றனர்.
Bailey வைத்திருந்த அந்த AR-15 வகை து ப்பாக்கி, அமெரிக்காவில் மிக பிரபலமான து ப்பாக்கி என்று அழைக்கப்படும் து ப்பாக்கி என்பதும், கூட்டங்கள் மீது து ப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் பயன்படுத்தும் து ப்பாக்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு மற்றும் எ திர்ப்பாளர்களால் ஏற்பட்ட க லவரத்தில் பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கச் சென்ற கைவினைக் கலைஞர் ஒருவர் ம ரணமடைந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் மற்றும் மஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு மற்றும் எ திர்ப்பாளர்களுக்கு இடையே மோ தல் ஏற்பட்டு பின்னர் அது பெரும் க லவரமாக வெ டித்துள்ளது.
இதில் ம ரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 75-கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் வ ன்மு றையால் வடக்கு டெல்லியில் ப தற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், ம ரணமடைந்த 10 பேரில் ஒருவரான முஹம்மது ஃபுர்கான் என்பவரின் விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
போ ராட்டம் தீ விரமடைந்துள்ள பகுதியான ஜாஃப்ராபாத் பாலத்துக்கு அருகில் உள்ள கர்தாம்பூரியில்தான் ஃபுர்கான் குடும்பத்துடன் தங்கி கைவினைப் பொருள்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தவர் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் க லவரத்தில் சி க்கி ம ரணமடைந்துள்ளார் என்கிறார் ஃபுர்கானின் சகோதரர் இம்ரான்.
கைவினைக் கலைஞரான இம்ரான் இது தொடர்பாக செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நான் மதியம் 2.30 மணி அளவில் வீட்டுக்குச் செல்லும்போது ஃபுர்கான் வீட்டில் இருந்தார். பிறகு ஃபுர்கான் தன் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் எனக்கு போன் வந்தது. ஃபுர்கான் காலில் சு டப்பட்டு உ யிரிழந்துள்ளதாக சிலர் என்னிடம் கூறினர். முதலில் நான் அதை நம்பவில்லை. பிறகு ஃபுர்கானுக்கு நானே போன் செய்தேன். ஆனால், அவர் அதை எடுக்கவில்லை.
அப்போதுதான் நான் க வலைப்பட்டேன். மீண்டும் அடுத்தடுத்து போன் கால் எனக்கு வந்தது. மருத்துவமனையில் உன் சகோதரன் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்று அவர்கள் என்னிடம் கூறினர். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தேன். ஆனால், அங்கு என் சகோதரன் உ யிரிழந்த நிலையில் காணப்பட்டான். அவரைக் கா ப்பாற்றுமாறு மருத்துவர்களிடம் கெஞ்சினேன்.
அவரை வேறு ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கா ப்பாற்ற ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று அவர்களிடம் கேட்டேன். வாய்ப்பு இல்லை என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்களும் சின்னக் குழந்தைகள் என க ண்ணீர் வடித்துள்ளார்.
சென்னையில் மகளை நெஞ்சோடு அணைத்தபடி மூன்றாவது மாடியில் இருந்து கீழே கு தித்து மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் த ற்கொ லை செய்து கொண்டது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாதவரத்தை சேர்ந்தவர் திருப்பதி ரெட்டி (35). இவருடைய மனைவி சுனிதா. இவர்களுக்கு ஹரிஷ் (7) என்ற மகனும் ஹரிகா (5) என்ற மகளும் இருந்தனர்.
திருப்பதி ரெட்டி, பாரிமுனை தனியார் குடோனில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
அவர் சில காலமாக மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அதற்காக, மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திருப்பதி ரெட்டி வீட்டின், மூன்றாவது தளத்திற்கு மகள் ஹரிகாவுடன் சென்றார். மனைவியும், மகனும், இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டில் டிவி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ம களை துாக்கி, நெஞ்சோடு அணைத்துக் கொண்ட திருப்பதி ரெட்டி கீழே கு தித்தார். இதில் ப லத்த கா யம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தந்தை-மகள் இருவரும் பரிதாபமாக இ றந்தனர்.
இருவரின் உ டல்களை பார்த்து சுனிதா மற்றும் அவரது உறவினர்கள் க தறி அ ழுத காட்சி ப ரிதாபமாக இருந்தது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
முதற்கட்ட விசாரணையில், திருப்பதி ரெட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபயணம் சென்றார். ஆனால் பாதியிலேயே வீடு திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அவர், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதையடுத்தே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த தற் கொ லைக்கான முழு காரணம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியாவில் கடந்த (1984- 2020) 36 வருடகாலமாக வர்த்தக சமூகம் சார்பாக இயங்கி வருவதுடன் பல்வேறு சமூக சேவை செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் வவுனியா வர்த்தக சங்கத்திற்கு நகர மத்தியில் ஒரு பரப்பு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குறித்த தீர்மானம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (25.02.2020) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் பல வருட காலமாக சிறப்பான முறையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற வர்த்தகர் சங்கம் , தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் , முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம்,
போன்றவற்றின் செயற்பாடுகளை மேலும் சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு வவுனியா நகரப் பகுதியில் கட்டிடம் அமைப்பதற்கு ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒரு பரப்பு காணி வீதம் மூன்று பரப்பு காணி வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் போது குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த அமைப்பினருக்கு காணி வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
அதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் தர்மபால செனவிரத்தின மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன ஆகியோர் கோரிக்கையினை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு வவுனியா பிரதேச செயலாளருக்கு குறித்த அமைப்புக்களுக்கு காணி வழங்குமாறு பரிந்துரை செய்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இச் செயற்பாட்டினால் குறித்த அமைப்புக்களின் 3000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பயனடையவுள்ளனர்.