எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க எதிர்ப்பு : வித்யாபாலன் நீக்கம்!!

vidhya_balan

கர்நாடக இசைப் பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படமாகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிறு வயது வாழ்க்கை முதல் கர்நாடக சங்கீத பாடகியாக சாதனை நிகழ்த்தியது வரை அனைத்து விவரங்களும் இப்படத்தில் இடம் பெறுகிறது.

இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க வித்யாபாலன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை வித்யா தேடி வாங்கி படிக்க ஆரம்பித்தார். அவர் போன்று நடிக்க பயிற்சியும் எடுத்தார். இந்த நிலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க வித்யாபலனுக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது.

த டேட்டி பிக்சர் படத்தில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் ஆபாசமாக நடித்துள்ளார். அவருடைய ஆபாச பட சுவரொட்டிகள் நகரமெங்கும் ஒட்டப்பட்டு இமேஜை கெடுப்பதாக அமைந்தது.

எனவே எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க வித்யாபாலன் தகுதியில்லாதவர் என்று எதிர்பாளர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்தில் இருந்து வித்யாபாலன் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் வேறு நடிகை தேர்வு நடக்கிறது.

யாழ்.தேவியின் வவுனியா- கிளிநோச்சி பரீட்சார்த்த பயணம் வெற்றி!!

vavuniya

வடக்கிற்கான ரயில் தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர் வரை வந்தடைந்தது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கெனவே இரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக இரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடை பெறுகின்றன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

tamilnadu cricket association

சென்னை சேப்பாக்கம் மைதானம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை பொலீஸூக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான மைதானத்தில் புதிய பார்வையாளர் அரங்குகள் கட்டப்பட்டன. ஆனால் இந்த புதிய அரங்குகள் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அரசுக்குத் தெரிவித்து வெவ்வேறு துறைகளிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றிருக்கிறது.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உயிருடன் விளையாடி இருக்கிறது என்று ஜபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலர் மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர பொலீஸிடம் 2011ம் ஆண்டு புகார் மனு தாம் அளித்ததாகவும் அதன் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வாசுகி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள்..!!

astrology

ஓகஸ்ட் மாதத்திற்குரிய உங்களது இராசிபலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின்மேல் கிளிக் செய்யுங்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க எளிய வழி!!

facebook-friends-hide

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது. இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்கள் தான் என்று கூறலாம். இனி இந்த கவலை உங்களுக்கு எப்பவும் வேண்டாம் உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க இதோ எளிய வழி இருக்கிறது. பெரும்பாலும் இந்த வழி யாருக்கும் தெரிவதில்லை இதே அந்த வழி..

முதலில் உங்கள் கணக்கில் உள்ள privacy settings க்கு போங்கள்
பிறகு Edit க்கு போகவும்

தற்போது only me என்ற ஒப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இனி அன்னியர்கள் யாரும் உங்களுக்கு பிரெண்ட் ரிக்வஸ்ட் அனுப்ப முடியாது.

பின்பு அதில் strict filtering என்ற ஒப்ஷனை கிளிக் செய்யவும் இதன் மூலம் அன்னியர்களிடம் இருந்து வரும் புதிய செய்திகள் தடுக்கப்படும்.

மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா : ஜோன் அபிரகாம் விளக்கம்!!

john-abraham

ஜோன் அபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகின்றது. இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் வற்புறுத்தி உள்ளன.

இந்த நிலையில் மெட்ராஸ் கபே படத்தின் தமிழ் ரெய்லரை வெளியிடுவதற்காக ஜோன் அபிரகாம் நேற்று மாலை சென்னை சத்யம் தியேட்டருக்கு வந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க தியேட்டரை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ரெய்லரை ரிலீஸ் செய்துவிட்டு ஜோன் அபிரகாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து ஜான் அபிரகாம் கூறியதாவது..

மெட்ராஸ் கபே படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை. இலங்கையில் 1980 மற்றும் 90களில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து படம் எடுத்துள்ளோம். அதை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ எந்த கருத்தையும் சொல்லவில்லை. நடுநிலையாக கருத்தை பதிவு செய்துள்ளோம்.

படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பது சரியல்ல. எதிர்ப்பாளர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட தயார். இப்பத்தில் நாயகியாக நர்சிஸ் பக்ரி நடித்துள்ளார். சூஜித் சர்க்கார் இயக்கியுள்ளார். கற்பனை கலந்த படமாக தயாராகியுள்ளது. இலங்கை, லண்டன், தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தவறாக வெளியாகும் கருத்துக்கள்: ஊடகங்கள் மீது டிராவிட் அதிருப்தி!!

dravid

ஐ.பி.எல் சூதாட்டத்துக்குப் பின், கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்தினால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக டிராவிட் வருத்தம் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் அணித்தலைவராக உள்ளார். இத்தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக, டிராவிட் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்டனர்.

இது குறித்து டிராவிட் கூறுகையில் ஐ.பி.எல் தொடர் சூதாட்டத்தினால் ஏற்பட்டுள்ள சூழல் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவாது. இதனால் கிரிக்கெட் வீரர்களின் மீது வைத்துள்ள மரியாதை, அன்பு, மதிப்பு ஆகியவை குறைந்துவிடும்.

இப்போட்டியின் மீது ரசிகர்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்கு வாரியம் அல்லது அரசு என்று யாராக இருந்தாலும் சரி பாகுபாடு பாராமல் உதவ வேண்டும் என்றார்.

தவறான கருத்து:

இந்த பேட்டி குறித்து டிராவிட் தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் தெரிவித்த கருத்துக்களை சில ஊடகங்கள் தவறான பொருள்பட வெளியிட்டது ஏமாற்றம் தருகிறது.

நான் குறிப்பிட்ட நம்பகத்தன்மை குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. எனது முழுமையான பேட்டி இன்று வெளியாகிறது. அதுவரை எல்லோரும் பொறுத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

எடையைக் குறைக்க இலகுவான 7 வழிகள்!!

weight

உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்
“அப்படித்தான் செய்கிறேன்” என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது.

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்
“நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடீத்தென்” என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4. தண்ணீர் தண்ணீர்
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5. உட்கொள்ளும் அளவு
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட மதியம் சற்று குறைவாகவும் இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. நான் குண்டு என்று யோசிப்பதை தவிர்க்கவும்
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.

இன்னும் என்ன தாமதம் உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்.

காதலியின் 2 மாத குழந்தையை இணையத்தில் 6,000 ரூபாவிற்கு விற்க முயன்றவர் கைது!!

online-header

அமெரிக்காவில் காதலியின் 2 மாத பெண் குழந்தையை இணையத்தில் 6,077 ரூபாவிற்கு விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்தவர் போல் மார்கெஸ்(22).

அவருக்கு ஒன்லைனில் பழக்கமானவர் கேட்டி டெவால்ஸ். போல் கர்ப்பமாக இருந்த கேட்டியுடன் சில முறை டேட்டிங் செய்துள்ளார். இந்நிலையில் கேட்டிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து கேட்டி குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டார். இதனால் கடுப்பான போல் இணையத்தில் குழந்தையை கேட்டியே விற்க விரும்புவது போன்று அதுவும் ரூ6,077க்கு விற்க விரும்புவதாக ஒரு விளம்பரத்தை கொடுத்தார்.

மேலும் தொடர்புக்கு கேட்டியின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். இந்த விளம்பரத்தை பார்த்து குழந்தையை வாங்க விரும்பிய ஒரு பெண் கேட்டியை தொடர்பு கொண்டபோது தான் அவருக்கு விஷயம் தெரிய வந்தது. இதையடுத்து அவர் இது குறித்து போல் மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் பாலை கைது செய்தனர்.

பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த 2 வயது குழந்தை மரணம்!!

logan

அமெரிக்காவில் பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த 2 வயது குழந்தை புற்றுநோயால் நேற்று மரணம் அடைந்தது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஷான் ஸ்டீவன்சன். அவரது காதலி கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ.

அவர்களுடைய குழந்தை லோகன் ஸ்டீவன்சன்(2). லோகன் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தான். அவனுக்கு பல முறை அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை. இந்நிலையில் கடந்த மாதம் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் லோகன் இன்னும் சில வாரங்களில் இறந்துவிடுவான் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அடுத்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த ஷான், கிறிஸ்டீன் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் லோகன் தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான்.

இந்நிலையில் லோகன் நேற்று இறந்துவிட்டான். இது குறித்து கிறிஸ்டீன் பேஸ்புக்கில் கூறுகையில், லோகன் என் கைகளில் இறுதி மூச்சை விட்டான். அவனுக்கு இனி வலி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கொன்ற கணவன்!!

Murder_title

ஒம்லெட் போட வெங்காயம் நறுக்க மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப் பட்டுள்ளான். வீட்டுச் சண்டை விபரீதத்தில் கொண்டு போய் விட்டதற்கு இச்சம்பவமே மிகப் பெரிய உதாரணம்.

புனே அருகில் உள்ள தஹெர்கான் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் 31 வயதாகும் சுபாஷ் குமார். இவருக்கு மணமாகி விட்டது. சம்பவத்தன்று, ஒம்லெட் கேட்டுள்ளார் சுபாஷ்.

ஆனால் அவரது மனைவியோ ஒம்லெட்டிற்கு வெங்காயம் நறுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபத்தில் வெங்காயம் நறுக்கித் தர மறுத்த மனைவியை கொலை செய்து விட்டார் சுபாஷ்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுபாஷை கைது செய்தனர். அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அற்ப காரணாங்களுக்காக போடப் படும் குடும்ப சண்டைகள் சில நேரங்களில் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.

யூடியூப்பில் வெளியான அஜித்தின் ஆரம்பம் பட காட்சிகள்..(வீடியோ)

அஜித் நடித்து வரும் ஆரம்பம் படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.

பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும் அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆனால், என்னுடைய படக்குழு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் இந்த காட்சியை வெளியிடவில்லை என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். மேலும் இது பற்றி விசாரணை நடந்து வருகிறது என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி தரவரிசையில் குமார் சங்கக்கார முன்னேற்றம்!!

sangakara

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்தே குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கெதிரான 5 போட்டிகளில் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார 93 என்ற சராசரியில், 107.51 என்ற அடித்தாடும் வேகத்தில் 372 ஓட்டங்களைக் குவித்து அத்தொடரில் நாயகனாகத் தெரிவாகியிருந்தார்.

இத்தொடர் ஆரம்பிக்கும் போது 776 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் காணப்பட்ட குமார் சங்கக்கார, தனது கிரிக்கெட் வாழ்வில் பெற்ற அதிக புள்ளிகளான 829 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்பட்ட சுனில் நரைனோடு இணைந்து ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இலங்கையின் ரங்கன ஹேரத் 11ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கையின் திலகரட்ண டில்ஷான் 4ஆவது இடத்திலும், அஞ்சலோ மத்தியூஸ் 6ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர். முதலிடத்தில் ஷகிப் அல் ஹசன் காணப்படுகிறார்..

தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!

arrest1நடனப் பாடத்திற்காக இடம்பெற்ற பரீட்சையில் தங்கைக்காக அக்கா பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இவ்வாறு பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குறித்த யுவதியை எம்பிலிபிட்டி மொரகட்டிய மஹா வித்தியாலய பரீட்சை பரிசோதகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தங்கையின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்திற்கு மேல் தனது புகைப்படத்தை ஒட்டி குறித்த யுவதி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

குறித்த யுவதி பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பினை மேற்கொள்பவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி எம்பிலிபிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

vavuniyaஇலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 45000 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த ஆண்டில் எயிட்ஸ் நோய்த்தொற்று பரவிய குழந்தைகளின் எண்ணிக்கை 64 என சுகாதார அமைச்சின் பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியமை தொடர்பில் அறியாமலேயே பலர் இருக்கின்றனர்.

மருத்துவ பரிசோதனைகளின் மூலம் நோயாளியைக் கண்டு பிடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களை விடவும் இந்த ஆண்டில் அதிகளவான எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஹெலிகள் பறக்கத் தடைவிதித்தது ஜப்பான் அரசு..!

vavuniyaஜப்பானின் தென்புறத் தீவான ஒகினாவில் அமெரிக்காவின் ராணுவத் தளம் ஒன்று உள்ளது. அங்கிருந்த கடேனா விமான தளத்திலிருந்து 4 பேர் குழுவினருடன் நேற்று வானில் பறந்த எச்எச்-60 ரக மீட்புப்பணி ஹெலிகொப்டர் ஒன்று கேம்ப் ஹன்சன் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.

விபத்துக்கான காரணம் சரிவரத் தெரியாத நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் தப்பித்திருக்க வேண்டும் என்றும் அதில் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஜப்பானிய உள்துறை அமைச்சர் இட்ஸ்சுநோரி ஒனதேரா நேற்று தெரிவித்திருந்தார்.

ஆனால் 4 பேரில் ஒருவரைக் காணவில்லை என்று அமெரிக்க ராணுவத் தலைமையின் தகவல் அறிக்கை பின்னர் வெளியாகி இருந்தது. இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக ஜப்பான் அரசு இந்த விபத்துக்கான விசாரணையைத் துவக்கியுள்ளது. அதேபோல்,விபத்துக்கான காரணங்களை முற்றிலும் அறிந்து கொள்ளாமல் இத்தகைய ஹெலிகொப்டர்களை அமெரிக்க ராணுவம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்தினை அமெரிக்க ராணுவத் தலைமையகத்திற்கு தெரிவித்து விட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஒனதேரா இன்று கூறியுள்ளார்.