கேள்விக்குறியாகியுள்ள வட்சனின் கிரிக்கெட் எதிர்காலம்..!!

Shane Watson

டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ள வாட்சனின் துடுப்பாட்டம் மீண்டும் சரிவு கண்டதையடுத்து அவர் அணியில் இருந்து கழற்றிவிடப் படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்குப் பதிலாக அதிரடி தொடக்க வீரர் டேவிட் வானரை மீண்டும் பணியில் இறக்கலாம் என்று ஆஸி அணி நிர்வாகம், பயிற்சியாளர் டேரன் லீ மேனும் கருதுகின்றனர்.

வட்சன் தொடர்ந்து எல்.பி அல்லது வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழப்பது என்ற நிலையில் இருந்து வருகிறார். அவுஸ்திரேலியா போன்ற அணிகளில் அதுவும் கிளார்க், லீமேன் போன்ற கண்டிப்பான நபர்களின் மேற்பார்வையில் தொடர்வது வட்சனுக்குக் கடினம்.

இன்னொரு முறை எல்.பி-யோ அல்லது ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தாலோ அணியிலிருந்து வெளியேற வேண்டியதுதான் என்பதை அவர்கள் திட்டவட்டமாக துடுப்பாட்ட வீரர்களிடம் கூறும் கலாசாரம் அங்கு உள்ளது.

வட்சனின் இந்த ஆஷஸ் தொடர் ஓட்ட எண்ணிக்கை 46, 30, 20, 19 தான். சரியும் அவரது கிரிக்கெட் வாழ்வின் பிரதிபலிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் நடுவரிசையில் வட்சனை களமிறக்கலாமா என்ற யோசனையும் இருந்து வருகிறதாம். அப்படி இல்லாது வெளியேற்றப்பட்டால் வட்சன் மீண்டும் அணியில் இடம்பிடிக்க கடுமையாக பாடுபடவேண்டும் என்பது உறுதி.

தயாரான கோச்சடையான் டிரைலர்..(வீடியோ இணைப்பு)

Rajini Kochadaiyaan First Look Postersசெளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டிரெய்லர் ரெடியாகியுள்ளது. கோச்சடையான் எப்போது ரிலீஸாகும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. டிரெய்லர் கூட தயாராகிவிட்டதாம்.
அவதார் படம் போலவே இந்தப் படத்திலும் விஷுவல் எபக்ட் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டதாம்.

படத்தின் பின்னணி இசையை லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை ரஜினியின் பிறந்தநாளுக்கு கோச்சடையான் வெளிவரலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட திட்டம் எதுவும் தற்போது இல்லையாம்.

நண்பனின் மகள் மணக்க மறுத்ததால் அவர் மீது அசிட் ஊற்றிய 50 வயது கொடூரன்!!

acid

இந்திய உத்தர பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த நண்பனின் மகள் மீது அசிட் வீசியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு நரைன் ஷிவ்புரி(50).

மில் கொலனியில் வசிக்கும் அவருக்கு மறைந்த தனது நண்பரின் 24 வயது மகளை திருமணம் செய்துகொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. மகள் வயதில் உள்ள பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

அப்பாவின் நண்பர் இப்படி தன்னிடம் கேட்டதால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரை மணக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு அப்பெண் மீது நேற்று அசிட் ஊற்றினார்.

அவர் அசிட் ஊற்றியபோது அப்பெண் நல்லவேளையாக விலகிவிட்டதால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பிரான்சில் 500 ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட பாரிஸ் கோபுரம்..!

vavuniyaபிரான்சில் 500 ஆண்டுகளாக மூடிவைக்கப்பட்டுள்ள வரலாற்று பாரிஸ் கோபுரமானது சுற்றுலாப்பயணிகளுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியினால் செயிண்ட் ஜாக்ஸ் டி லா போச்செரி (Saint-Jacques-de-la-Boucherie) கோபுரமானது தாக்கப்பட்டது. இதனால் இந்த கோபுரத்தினை பாதுகாக்கும் பொருட்டு பொலிசரால் மூடப்பட்டது.

இந்த கோபுரமானது 62 மீற்றர் உயரமும் மற்றும் 300 படிக்கட்டுகள் கொண்டு பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரமானது பாரிஸ் நகரத்தின் நடுவே அமையப்பெற்றது.

இக்கோபுரத்தின் உச்சியில் இருந்து நகரத்தை முழுமையாக காண முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு

நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணச்செல்கின்றனர். மேலும் பார்வையாளர்களின் அனுமதி சீட்டானது 6 யூரோவிற்கு விற்கப்படுகிறது,

ஆனால் இந்த நினைவுச் சின்னமானது செப்டம்பர் 15ம் திகதியுடன் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடுதளத்தில் மேய்ந்த மாட்டின் மீது மோதி நிலை குலைந்த பயணிகள் விமானம்..!

vavuniyaஇந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் ஜெட் ரக விமானம் நேற்று சுலவேசி தீவில் உள்ள கோரோன்டலா விமான நிலையத்தில் தரை இறங்கியது.

விமானத்தின் சக்கரம் ஓடுபாதையில் பதியும் வேளையில் அருகாமையில் உள்ள புல்வெளியில் மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகளில் ஒன்று ஓடுபாதையின் குறுக்கே ஓடிவந்தது.

நடக்கும் விபரீதத்தை விமானி உணர்ந்துக்கொள்ளும் முன்னர், விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் மாட்டின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதறிய மாடு பல அடி தூரம் தள்ளிப்போய் விழுந்தது.

மாட்டின் மீது மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய விமானம், ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் பாய்ந்தது.

இச்சம்பவத்தில் விமானத்தின் சிறிய பகுதிய சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 110பயணிகளும் பத்திரமாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஓடுபாதையின் குறுக்கே விபத்துக்குள்ளான விமானம் விழுந்து கிடந்ததால் அங்கிருந்து புறப்படும் இதர விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானி இதுதொடர்பாக கூறுகையில், ´மேலே இருந்து பார்க்கும் போது ஓடுதளத்தில் நாய்தான் மேய்கிறது என்று நினைத்தேன். விமானம் நெருங்கிய வேளையில்தான் அது மாடு என்று தெரிந்தது´ என்றார்.

என் மகள் மீது வைத்துள்ள பாசத்தால் அழுகிறேன் : இயக்குனர் சேரன்..!!

seran

மகள் பிடிவாதத்தால் இயக்குனர் சேரன் மனம் உடைந்து போய் இருக்கிறார். நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த போது சேரன் மனைவி செல்வராணியுடன் வந்து இருந்தார். மகள் தாமினியும் வந்து இருந்தார்.

தாமினி முகத்தை பார்க்கவும் பேசவும் சேரனிடம் ஆர்வம் பொங்கியது. ஆனால் தாமினி கண்டு கொள்ளவே இல்லை. முகத்தில் வருத்தம், சலனம் எதுவும் இன்றி இருந்தார். காதலன் சந்துருவை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

இரு வாரங்கள் தாமினி படித்த பள்ளிக் கூடத்தின் தாளாளர் வீட்டில் அவரை தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சேரனிடம் பேசிய போது ஒரு தந்தையின் வலிகளை உணர முடிந்தது. அவர் கூறியதாவது..

என்னை நிறைய பேர் போனில் அழைக்கிறார்கள். யாரிடமும் பேச முடிய வில்லை. பேசும் போது வேதனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இது எனக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட வேதனை.

இந்த பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு நான் ஹீரோ இல்லை என்று எனக்கு தெரியும். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க போராடும் ஒரு தந்தையாக என்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எந்த விதத்திலும் எனது சொந்த பலத்தை நான் பயன்படுத்தவில்லை. இந்த பிரச்சினையை சட்டத்தின் உதவியோடு நேர்மையாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த போது நான் அழுது விட்டேன். மகள் மீதுள்ள பாசத்தால் அழுகிறேன். திரையுலகில் எல்லோரும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள்.

இயக்குனர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் இதயம் காயப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திரையுலகினர் எனக்கு துணையாக இருப்பது வலிக்கு மருந்தாக உள்ளது.

என் மகள் மேல் எந்த தப்பும் இல்லை. அவளுக்கு இருபது வயதுதான் ஆகிறது. வாழ்க்கை பற்றி புரியாத வயது. இது கோபப்படுவதற்கான நேரம் அல்ல. அவளுக்கு நல்லது நடக்க போராடுகிறேன்.
இவ்வாறு சேரன் கூறினார்.

தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது – பொலீஸ் கைவிரிப்பு!!

thalaivaaa

தலைவா படத்தைத் திரையிட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். தியேட்டர்களுக்கு பாதுகாப்புத் தர முடியாது என உள்ளூர் பொலீஸ் தெரிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைவா படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பியுள்ளன. படத்தை வெளியிட முடியாது என்று சென்னை – செங்கை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தங்களால் பாதுகாப்பு தரமுடியாது என அந்தந்த மாவட்ட பொலீசார் திரையரங்க உரிமையாளர்களுக்கு வாய் மொழியாகக் கூறிவிட்டார்களாம்.

சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் தலைவா படம் வெளியாகவிருந்த திரையரங்க உரிமையாளர்கள், தங்களை நேரில் அழைத்து இந்த விஷயத்தைப் பொலீசார் கூறியதாகத் தெரிவித்தனர்.

சென்னையின் மிக முக்கியமான விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவமருமான அபிராமி ராமநாதனை நேரில் அழைத்த தென் சென்னையின் ஆளுங்கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஒருவர், இந்தப் படத்தை திரையிடுவது நல்லதாகப் படவில்லை. பாத்து இருந்துக்கங்க என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னேஸ்வரம் பத்திரகாளிக்கு இம்முறையும் பலி பூசை இடம்பெறாது..!

vavuniyaமுன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசையை இடைநிறுத்த கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த பலி பூசை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும் பலி பூசைக்கு எதிரான வழக்கு ஒன்றின் விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதால் பலிபூசையை இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆலய நிர்வாகிகள் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசை 2011ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவால் இடம்பெறவில்லை.

2012ம் ஆண்டு புத்தரின் புனித தாது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதால் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசை இடம்பெறவில்லை.

இந்நிலையில் இம்முறையும் பலி பூசை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலமொழியில் பாடங்கள்: விரக்தியில் பொறியியல் மாணவர் தற்கொலை..!

vavuniyaஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத விரக்தியில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். சவரத் தொழிலாளி. இவரது மகன் தமிழ் செல்வன் வயது-21. பாலிடெக்னிக்கில்“டிப்ளமோ” பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டி, கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அண்மையில் சேர்ந்தார். கல்லூரியில் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்வதில் தமிழ்செல்வனுக்குச் சிக்கலாக இருந்துள்ளது என்று தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர்,மதுக்கரை பகுதியில் தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது இந்தியா..!

indSLஇலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீன்பிடிக்கிறார்கள் என்று தமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது என்று பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை வெளியிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிப்பதால், தமது வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், இந்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் அழுத்தங்கள் அரசின் மீது அதிகரித்தாலேயே அவர்களை சிறைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.

எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்தார்.

இந்தியாவின் கவலைகள் கொழும்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை விரைவுபடுத்தி, விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் தான் இந்திய அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் பிரசாத் காரியவசம் கூறுகிறார்.

(BBC)

தலைவா திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடமுடியாது : சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி!!

talaiva

அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை – செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இந்தப் படம் வெளியாகிறது. நாளை மறுநாள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தலைவா இப்போது படம் வெளியாகுமா என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான். காரணம், அடுத்த முதலமைச்சர் என்ற இலக்கை முன்வைத்து விஜயும் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால் படத்துக்கு வரிவிலக்கு உள்பட எந்த சலுகையும் அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காத நிலை. இந்த சூழலில் படம் வரும 9ம் திகதி அதாவது நாளை உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்தார்.

அந்த செய்தி வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் படத்தின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் படத்தை வெளியிடுவதில்லை என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பேச ஆரம்பித்தனர். இந்த சூழலில் சென்னை – செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில் கூடியது.

அரசுக்கு எதிரான படமாகக் கருதப்படும் தலைவாவை வெளியிட அரசின் ஒத்துழைப்பு திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம். இந்த இரண்டும் உறுதி செய்யப்படாத நிலையில் தலைவா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்ற உண்மை புரிந்து, தமிழகமெங்கும் படத்தை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை திரையிடுவது குறித்து பரிசீலிப்போம், என அறிவித்துள்ளனர். இதனால் திரையுலகிலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பம் படப்பிடிப்பில் சண்டைபோட்ட நயன்தாரா–டாப்சி!!

aarambam

அஜீத், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ஆரம்பம். ஆர்யா, டாப்சி, ராணா போன்றோரும் நடிக்கின்றனர். விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் நயன்தாரா, டாப்சி இடையே போட்டி ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா அதிகம் சம்பளம் கேட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..

ஆரம்பம் படத்தில் நயன்தாராவுக்கும், டாப்சிக்கும் சம அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களுக்குள் ஈகோ ஏற்படவில்லை. இருவரும் சண்டை போட்டார்கள் என்பது வதந்திதான். பில்லா படத்தை போல் நயன்தாராவை இதிலும் கவர்ச்சியாக பார்க்கலாம். கவர்ச்சியாக நடிப்பதற்கு அவர் கூடுதல் சம்பளம் கேட்டதாக சொல்வதில் உண்மை இல்லை.

ஆரம்பம் படப்பிடிப்பில் ஆபத்தான சண்டை காட்சிகளில் அஜீத் டூப் போடாமல் நடித்தார். மூன்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது கால் இடறி முறிவு ஏற்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டாம் என்று தடுத்து விட்டார்.

மும்பை பின்னணி கொண்ட கதையாக இப்படம் தயாராகியுள்ளது. தாதாக்கள் படம் அல்ல. வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும். முக்கிய சமூக பிரச்சினையொன்றும் படத்தில் இருக்கும். சுமா ரங்கநாத் நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் பிரமாதமாக வந்துள்ளது. ஆரம்பம் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருந்ததால் தேர்வு செய்தோம் என்று அவர் கூறினார்.

T20 ஐ.சி.சி. தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை அணி..!!

CRICKET-TRI-IND-SRI

சர்வதேச கிரிக்கெட் சபையின் T20 தரப்படுத்தலில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவிற்கெதிரான நேற்றைய 3வதும், இறுதியுமான T20 சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை அணி தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருக்குமாயின் இலங்கை அணி 3வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டிருக்கும் என்பதோடு T20 சர்வதேசப் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த முதலாவது டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடு என்ற மோசமான சாதனைக்கும் சொந்தமாகியிருக்கும்.

எனினும் நேற்றைய போட்டியில் இலங்கை அணி திலகரட்ண டில்ஷான், திசார பெரேரா, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றிபெற்றதால் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் காரணமாக பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு வரும் வாய்ப்புக் கிடைக்காமல் போனதோடு அவ்வணி தொடர்ந்தும் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.

போட்டோஷொப் தில்லுமுல்லு!! (வீடியோ)

போட்டோஷோப்பை பயன்படுத்தி எப்படி எல்லாம் வினோதம் செய்கின்றார்கள் என நீங்களும் பாருங்கள்..

தலைவா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

thalaivaa

சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் வளாகம் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் “ஐநாக்ஸ்” என்ற பெயரில் 4 திரையரங்குகள் உள்ளன.
வணிக வளாகம் மற்றும் சினிமா திரையரங்குகள் உள்ளதால் இந்த வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

ஐநாக்ஸ் திரையரங்கில் எதிர்வரும் 9ம் திகதி விஜய் நடித்துள்ள தலைவா படம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த திரையரங்கிற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் திரையரங்கில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து மயிலாப்பூர் பொலிசில் திரையரங்க முகாமையாளர் விக்னேஷ் புகார் செய்தார்.

இதையடுத்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையில் பொலிசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் சோதித்து பார்த்தனர். இது தவிர தலைவா படம் திரையிடப்படும் மேலும் சில திரையரங்குகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சில திரையரங்குகளுக்கு தொலைபேசி மூலமும் சில திரையரங்குகளுக்கு காரில் வந்த சிலரும் மிரட்டல் விடுத்ததாக பொலிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 திரையரங்குகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைவா படத்துக்கு இன்று டிக்கெட் முன் பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வெடி குண்டு மிரட்டல் காரணமாக முன்பதிவு நடைபெறவில்லை. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த இரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

கடிநாய் வளர்த்தால் ஆயுள் தண்டனை : இங்கிலாந்தில் புதிய சட்டம்..!!

barking-police-dog

இங்கிலாந்தில் வருடம்தோறும் சுமார் 2 இலட்சம் மக்கள் நாய்கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிரிழக்கும் அபாயமும் நேர்கிறது. கடந்த ஆண்டுகளில் 16 பேர் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர்.

எனவே நாய்களை பொது இடங்களில் அலைய விடும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபரை வளர்ப்பு நாய் கடித்து காயப்படுத்தினால் அந்த நாயை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தை திருத்தி காயத்தை ஏற்படுத்திய நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும், உயிரிழப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்குவதை வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுக்கு மட்டும் இங்கிலாந்து அரசு ஆண்டுதோறும் 30 லட்சம் பவுண்டுகள் செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.