அடிக்கடி தீப்பிடித்து எரியும் குழந்தை ..பெற்றோரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை!!

fire_baby

தமிழ்நாடு திண்டிவனம் அருகே பிறந்து 2 மாதமே ஆன கைக்குழந்தை ஒன்று அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் குழந்தையின் பெற்றோர்களை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கியுள்ளனர் கிராமத்தினர்.

குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டி.பரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன்(வயது 26). இவர் கடந்த 2010ம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள சிமெண்டு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்த போது அங்கு வேலை பார்த்த மயிலம் அருகே நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி(23) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கர்ணனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் 2 பேரும் டி.பரங்கிணியில் வசித்து வந்தனர். ராஜேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்த உடன் அவர்களது திருமணத்தை ராஜேஸ்வரியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.

அழகான ஆண்குழந்தை இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமுற்ற ராஜேஸ்வரி பிரசவத்துக்காக நெடிமோழியனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகுல் என பெயர் வைத்தனர்.

தீயில் எரிந்த குழந்தை குழந்தை பிறந்த 8வது நாளில் நடுவீட்டில் குழந்தை ராகுல் தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் உடலை ராஜேஸ்வரி துணி போட்டு மூடியிருந்தார். சிறிதுநேரத்தில் அந்த துணி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அந்த துணியை அகற்றிவிட்டு கைக்குழந்தையுடன் வெளியே ஓடிவந்தார்.

சிறிது நேரத்தில் அந்த குழந்தை படுத்திருந்த குடிசை வீடும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி தீ விபத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நெடிமோழியனூர் கிராமத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது.

இதில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதற்கான காரணம் தெரியாமல் கிராம மக்கள் பீதியடைந்தனர். இதையொட்டிதொடர்ந்து 2 மாதங்கள் தீயணைப்பு படையினர் அங்கேயே முகாமிட்டிருந்தனர். அதன்பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அத்தகைய தீ விபத்து சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நெடிமோழியனூரில் ராஜேஸ்வரியின் கைக்குழந்தையின் உடல் திடீரென தீப்பற்றி எரிந்து காயமேற்பட்டது. இதனையடுத்து 15 நாட்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு குணமடைந்தவுடன் ராஜேஸ்வரி தனது குழந்தையை கணவர் ஊரான டி.பரங்கிணி கிராமத்திற்கு கொண்டு சென்றார்.

அன்று மாலை 4 மணிக்கு அந்த குழந்தை அணிந்திருந்த சட்டை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனை தொடர்ந்து அந்த குழந்தையின் தலையும் தீப்பிடித்து எரிந்தது. இது பில்லி சூனியத்தின் வேலையாக இருக்குமோ என கருதி ராஜேஸ்வரி தனது கைக்குழந்தையை புதுச்சேரியில் உள்ள இந்து கோவில்கள், மசூதி, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு கொண்டு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

பின்னர் அபிஷேகபாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த சில மணி நேரத்தில் மீண்டும் அந்த குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த குழந்தையை வீட்டை விட்டு வெளியே எடுத்து வந்தவுடன், வீடும் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் டி.பரங்கிணியில் உள்ள மாமியார் துளசி வீட்டிற்கு ராஜேஸ்வரி கைக்குழந்தையுடன் சென்றார். அங்கேயும் குழந்தையின் உடலில் திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் பக்கத்து வீடுகளிலும் தீப்பற்றியது.

எனவே அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த குழந்தையை இங்கேயே வைத்திருந்தால் நெடிமோழியனூரில் வீடுகள் தீப்பிடித்து எரிந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதை போல, டி.பரங்கிணியிலும் வீடுகள் தீப்பிடித்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் எனவே குழந்தையை வேறு எங்காவது கொண்டு சென்றுவிடுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். உடனே அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் கைக்குழந்தையான ராகுலும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். மருத்துவ பரிசோதனை குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். குழந்தையின் உடல் எரிவதற்கு என்ன காரணம் என கண்டறியாமல், குழந்தையையும், அதன் தாயையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

2மாத கைக்குழந்தையின் உடலில் திடீர், திடீரென தீப்பிடித்து எரியவதற்கான காரணம் என்ன அந்த கைக்குழந்தையை எந்த ஊருக்கு கொண்டு சென்றாலும் தீப்பிடித்து எரிவதற்கான காரணம் என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

உயிருக்கு ஆபத்து என்ற போதும் மீசையை வெட்டாது அடம்பிடிக்கும் அதிசய நபர்!!

afridi

பாகிஸ்தானில் வாழும் ஒரு நபர் உயிருக்கு ஆபத்து வந்த வேளையிலும் தனது மீசையை வெட்டாமல் அதனை தொடர்ந்து வளர்த்து வருகிறார்.
பெஷாவரில் வசித்து வருபவர் முகமது கான் அப்ரிடி 48 வயதான இவர் உணவை விட முக்கியமானதாக கருதுவது அவரது மீசையை.

தினமும் அவரது மீசையை பராமரிக்க சுமார் அரை மணி நேரம் செலவழிக்கும் அப்ரிடி தனது உயிருக்கு ஆபத்து வந்த வேளையில் கூட இந்த மீசையை வெட்ட மறுத்துவிட்டார்.

சுமார் 30 இன்ச் நீளம் (76 செ.மீ) இருக்கும் அப்ரிடியின் மீசையினால் அவரின் உயிருக்கு 2009 ஆம் ஆண்டு ஆபத்து வந்தது. அப்ரிடியின் மீசையை வெட்ட சொன்ன ஒரு தீவிரவாத இயக்கத்தினர், அவர் மறுத்ததை அடுத்து அப்ரிடியை கடத்தி சென்று ஒரு மாதக்காலம் ஒரு குகையில் அடைத்து வைத்துள்ளனர்.

பிறகு மீசையை வெட்டிவிடுவதாக அப்ரிடி வாக்களித்ததை அடுத்து அவர்கள் அவரை விடுவித்தனர், அவர்களிடமிருந்து தப்பித்த அப்ரிடி தொடர்ந்து மீசையை வளர்த்து வருகிறார். தனது மீசையை குறித்து பேசிய அப்ரிடி, எனது மீசையை நான் என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். இந்த மீசையால் என்னை நிறைய பேர் மதிக்கிறார்கள்.

இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னால் உணவு சாப்பிடாமல் கூட இருக்க முடியும் ஆனால் எனது மீசை இல்லாமல் இருக்க முடியாது எனக் கூறினார். அப்ரிடி அவரது மீசையை பராமரிப்பதற்கு மாதம் தோறும் அவருக்கு 150 டொலர் செலவாகிறதாம்.

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்..!

arrest1முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கர்ப்பிணியாக்கிய சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

அயல் வீட்டில் வசித்து வரும் சந்தேக நபர், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி வயிறு பெருத்திருப்பதை அவதானித்த தாய், சிறுமியிடம் காரணத்தை கேட்ட போது, அயல் வீட்டை சேர்ந்த நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் தாய் முறைப்பாடு செய்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி 08 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் வீடொன்றில் கொள்ளையிட்ட இருவருக்கு 6 வருட கடூழியச் சிறைத் தண்டனை..!

vavuniyaமுல்லைத்தீவு தேராங்கண்டல் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இருவருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் 6 வருட கடூழியச் சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 16 ஆம் திகதி குற்றவாளிகள் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கும் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை என்ற கணக்கில் ஆறு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களை முறைப்பாட்டாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சண்டையை நிறுத்த வேண்டும்..!

vavuniyaபுனித ரமலான் மாத நிறைவையொட்டி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விடுமுறை கால சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. அதன்பின்னர் அதிபர் ஹமீது கர்சாய் பேசியதாவது:-

தலிபான் இயக்கத்தினர் ஆயுதங்களை போட்டுவிட்டு அமைதியான வழியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அப்பாவி பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். பிரிவினைவாதத்துக்கு எதிரான போரில், தியாகம் செய்த ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தின்போது சாலையோர குண்டுவெடிப்புகளில் ஏராளமான ஆப்கான் மக்கள் தங்கய் உயிரை இழந்துள்ளனர். இந்த வன்முறை முடிவுக்கு வரவேண்டும். தலிபான்கள், கத்தாரில் அலுவலகம் திறந்ததற்கு பதிலாக ஆப்கானிஸ்தானில் ஒரு அலுவலகம் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகள் வாபஸ் பெற்ற நிலையில், தலிபான்கள் மீண்டும் தங்கள் பிராந்தியத்தை பிடிக்க சண்டையை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி மறுப்பு – ஏமாற்றத்துடன் விஜய், சந்திரசேகர்..!

vavuniyaவிஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் 9ம் திகதி திரைக்கு வரும் நிலையில், அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதால் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தலைவா படத்தை திரையிட அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமா? என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், மேலும், போலீஸார் தங்கள் தரப்பில் இத்தனை திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் புதன்கிழமை மாலை அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், ‘’நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் இப்பிரச்சனையில் தலையிட்டு தமிழக அரசிடம் பேசினால் நல்ல தீர்வு கிடைக்கும். விஜய்யும், சந்திரசேகரும் பேசி நல்ல முடிவை தரும் பட்சத்தில், அரசு தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுத் தரும் பட்சத்தில் படத்தை வெளியிட எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை’’என்று அபிராமி ராமநாதன் தெரிவித்திருந்தார்.

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதாவை சந்தித்து விளக்கம் அளிக்கவும் அவரது ஆதரவைக் கேட்கவும் நடிகர் விஜய், அவரது தந்தை சந்திரசேகருடன் சென்றதாகத் தெரிகிறது.

கொடநாட்டில் தங்கியுள்ள ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கொடநாட்டுக்கு முன்னர் உள்ள கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது.

போட்டியில் விஷால் – கார்த்தி படங்கள்!!

visal

விஷாலின் மதகஜராஜா படமும் கார்த்தியின் பிரியாணி படமும் அடுத்த மாதம் 6ம் திகதி ஒரே நாளில் திரைக்கு வருகின்றன. இவ்விரு படங்களும் போட்டியிடும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் வருகிறது.

மதகஜராஜா படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

இந்த படம் முன்பே வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மரணம் அடைந்ததால் சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினைகள் முடிந்து திரைக்கு வருகிறது.

பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன், ராம்கி, நிதின்சத்யா, மதுமிதா போன்றோரும் உள்ளனர். காமெடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடி படமாக தயாராகியுள்ளது.

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!(படங்கள்)

சுற்றுலா என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் இடம் என்றால் கடற்கரை தான். அதிலும் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக இருந்தால் அப்போது தேர்ந்தெடுக்கும் நகரங்களில் நிச்சயம் கடற்கரை இருப்பது போன்ற சுற்றுலா நகரங்களைத் தான் தேர்ந்தெடுப்போம்.

ஏனெனில் கடற்கரை உள்ள நகரங்களில் நேரம் போவதே தெரியாது. மேலும் அங்கு மிகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும். அந்த வகையில் உலகில் ஒருசில கடற்கரை நகரங்கள் சிறந்தது என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் அந்த நகரங்கள் இரவில் பார்க்கும் போது மிகவும் அழகாகவும், அனைவரையும் கவரும் வகையிலும், அங்கு கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை போன்றவை சிறந்ததாகவும் இருக்கும்.

எனவே நீங்கள் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு அதிலும் கடற்கரை நகரங்களுக்கு செல்ல விரும்பினால் அத்தகையவர்களுக்காக உலகில் உள்ள சிறந்த 10 கடற்கரை நகரங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, சுற்றுலாவிற்கு எங்கு செல்லலாம் என்று முடிவெடுங்கள்.

மியாமி, ஃப்ளோரிடா
உலகிலேயே மியாமி நகரம் தான் கடற்கரை நகரங்களுள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும். இது ஒரு சிறந்த சுற்றுலா நகரங்களுள் முக்கியமானதும் கூட.

1

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்
துபாயில் கடற்கரை மட்டுமின்றி, அழகிய கட்டிடக்கலையும் உடையது. இங்குள்ள கடற்கரையின் முன்பு பல்வேறு அழகான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. அதில் பூர்ஜ் அல் அராப் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. மேலும் அது ஒரு உருவகச் சின்னமாக உள்ளது.

2

பார்சிலோனா, ஸ்பெயின்
பார்சிலோனா மத்தியதரைக் கடலின் விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் இங்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் 2.5 மைல் தூரம் வெள்ளை நிற மணல் உள்ளது. இதுவும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரங்களுள் சிறந்தாக கருதப்படுகிறது.

3

ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மிகவும் பிரபலமான ஒரு கடற்கரை நகரங்களுள் ஒன்று. இங்கு வரலாற்று இராணுவக் கோட்டைகள், போர்த்துகீசிய வடிவமுள்ள உல்லாச நடைபாதைகள், உணவகங்கள், அழகான இரவு விடுதிகள் போன்றவை அமைந்து, இந்த நகரத்திற்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.

4

கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
கடந்த பத்தாண்டு காலமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சிறந்த கடற்கரை நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஐரோப்பிய நேர்த்தியுடன் அனைத்தும் அமைந்திருப்பதால், இது ஒரு சிறந்த கடற்கரை நகரமாக உள்ளது.

5

மும்பை, இந்தியா
மஹாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையும் ஒரு சிறந்த கடற்கரை நகரங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் அங்கு பல்வேறு கடற்கரைகளுடன், மேற்கத்திய கடற்கரையும் இணைந்துள்ளது. அதில் தாதர் சௌபதி, ஜூஹூ கடற்கரை, வெர்ஸோரா கடற்கரை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

6

லொஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் பொழுதுபோக்கு நிறைந்த நகரங்களுள் முக்கியமானவை. இங்குள்ள சான்டா மோனிகா கடற்கரையில் பல ஹொலிவுட் படப்பிடிப்புக்கள் எடுக்கப்படும். மேலும் இங்கு பல கேளிக்கை பூங்கா சவாரிகள், மீன் அதிசயங்கள் மற்றும் உணவுத் திருவிழா போன்ற பல உள்ளதால், இது ஒரு சிறந்த பொழுதுபோக்குடன் கூடிய கடற்கரை நகரமாக உள்ளது.

7

சிட்னி, அவுஸ்ரேலியா
சிட்னி, தென்கிழக்கு கடற்கரையில் இருக்கும் டாஸ்மான் கடலில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகராகும். இந்த பல்வேறு சர்வதேச விளையாட்டுக்கள் நிகழும். இத்தகைய சிட்னியும் உலகிலேயே மிகவும் சிறந்த மற்றும் அழகான கடற்கரை நகரங்களுள் ஒன்றாகும்.

8

வெனிஸ், இத்தாலி
வடகிழக்கு இத்தாலியில் 118 சிறு தீவுகளால் அமைந்துள்ள வெனிஸ் நகரமும் ஒரு அழகான கடற்கரை நகரமாகும். மேலும் இந்த நகரம் அழகு, கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் கடற்கரையால் இன்னும் புகழ்பெற்றதாக உள்ளது.

9

நைஸ், பிரான்ஸ்
மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள நைஸ் நகரம், இரண்டாவது பெரிய பிரஞ்சு கடற்கரை நகரமாகும். மேலும் இந்த பிரஞ்சு நகரம், பாரிஸுக்கு அடுத்த இரண்டாவது புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகும். இங்குள்ள கடற்கரையானது மிகவும் அழகாவும், சுத்தமாகவும் இருப்பதோடு, இதன் அழகு அங்கு செல்வோரை அங்கேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணத்தை தரும் அளவில் இருக்கும்.

10

இணைய விளம்பரங்கள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பது எப்படி??

add

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற விளம்பரங்களை கிளிக் செய்வதினூடாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இணையத்தளங்களை பயன்படுத்தும்போது, தேவையற்ற விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பது சிறந்ததாகும்.
இதற்கு Anvi Ad Blocker எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

Anvisoft நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது இணைய இணைப்பு உள்ள வேளைகளின் கணனிகளை பாதுகாப்பதற்கு மிகவும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.

தரவிறக்க இங்கே கிளிக் செய்க..

குடிவெறியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் பனேசர் அடாவடி!!

panesar

குடிவெறியில் இரவு நேர விடுதில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து அடாவடியில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொன்டி பனேசருக்கு பொலிஸார் அபராதம் விதித்தனர்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய வம்சாவளி வீரரான இவர் 48 டெஸ்டில் 164 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டிக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

இவர் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள இரவு நேர கிளப்புக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். குடிவெறியில் அங்கிருந்த பெண்களுக்கு தொல்லை தர உடனடியாக கிளப்பை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த கோபத்தில் கிளப்பின் மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டு ஓடினார். இவரை துரத்திய காவலர்கள் அருகிலுள்ள “பீட்சா நிலையத்தில்” வைத்து பிடித்து மீண்டும் கிளப்புக்கு இழுத்து வந்தனர். பின் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவருக்கு ரூ. 8500 அபராதம் விதிக்கப்பட்டது. பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

பிரைட்டன் பகுதியில் உள்ள கிளப் அருகில் அதிகாலை 4.13 மணி அளவில், போதையில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டதால் பனேசருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.

போதையில் ரகளையில் ஈடுபட்டதற்காக பனேசர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். பனேசர் பொலிஸில் சிக்குவது இது முதன் முறையல்ல. கடந்த 2011ல் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த பொலிஸார் வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தனர்.

சமீபத்தில் கவுன்டி போட்டியின் போது களத்தில் மோசமாக நடந்து கொண்டதால், சசக்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

வவுனியா, கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட மூவர் கைது!!

vavuniya

கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்டதாக கூறப்படும் ஒருவரும் அவற்றை வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், தும்ரியபொல வீதி கிளிநொச்சி பிரதேசத்தில் போலி 1000 ரூபாய் நாணயத் தாள்களுடன் ஒருவர் கைதானார். நேற்றையதினம் கைதான இவர் வசமிருந்து 28 போலி 1000 ரூபா நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதேசத்தில் 20 போலி 1000 ரூபா நாணயத் தாள்களுடன் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதில் வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிடுபவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதானார்.

மேலும் நாணயத் தாள்கள் அச்சிட பயன்படுத்தப்பட்ட கொன்கோட் வகை தாள்கள் 15, கனிணி மற்றும் அச்சுப்பொறி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?

meditate

நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம்.
உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பவல்லது.

மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில், அதனை ஒரு இடத்தில் நிலையாக வைத்திருப்பதென்பது மிக கடினம். இருப்பினும் அது முடியாத காரியமல்ல. மனதின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்துக் கொள்ள சிறந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சுற்றுச்சூழல்
எந்த சூழலில் அமர்ந்து பணிபுரிகிறோமோ அது மனதை ஒருமுகப்படுத்துவதில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. மனதிற்கு இதமான மற்றும் வசதியான சூழ்நிலையில் பணிபுரியும் போது பணியில் மிகவும் அதிகமாகக் கவனத்தைச் செலுத்த முடியும்.

எண்ணங்கள்
மனதை ஒருமுகப்படுத்துதலின் இரகசியம் என்னவென்றால் சாதாரண எண்ணங்களால் மனதை குழப்பமால் பார்த்துக் கொள்வது தான். பணிக்கு சற்றும் தொடர்பில்லாத நினைவுகள் எழுந்தால் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு கவனம் முழுவதையும், பணியில் மட்டும் செலுத்தவும்.

நேரம்
செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். மிகவும் அவசரமான வேலை சாதாரணமான வேலை என்று முக்கியத்துவத்தைப் பொறுத்து நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவும். குறிப்பாக நேரத்தினை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதே பணியில் முழுக் கவனத்தையும் செலுத்த உதவும். இப்படிச் செய்து கொண்டால் சிறுசிறு நிகழ்ச்சிகளால் கூட கவனத்தைத் திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

எதிர்மறை எண்ணங்கள்
எப்போதும் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையே என்று சொல்லக்கூடாது. அதனால் மனம் நம்பிக்கை இழந்து எதிர்மறையாக நினைக்கத் தொடங்கும். அதன் பின் மனதை வற்புறுத்தி பணிபுரியத் தொடங்கும் போது அது ஒத்துழைக்காமல் போகும். எனவே எப்போதும் என்னால் முடியும் என்றே நினைக்க வேண்டும்.

பல பணிகள்
ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டால் நம்மால் எந்த ஒரு பணியிலும் மனதைத் தீவிரமாகச் செலுத்த முடியாமல் போய்விடும். எனவே ஒவ்வொரு பணியாக முழுமனதுடன் செய்து முடித்து அதன்பின் அடுத்த பணிக்கு செல்ல வேண்டும். இதனால் அனைத்து பணிகளும் அழகாக முடிந்திருக்கும்.

சத்தம்
நம்மை சுற்றி சத்தமாக இருந்தால் பணியில் கவனத்தைச் செலுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். உதாரணமாக, கையடக்கத் தொலைபேசி சத்தமெழுப்பினால் அவற்றை நோக்கி கவனிக்க வைத்துவிடும். அது கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டே இருக்கும். இறுதியில் செய்ய வேண்டிய பணிகள் தடைப்பட்டிருக்கும். முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் போது கையடக்கத்தொலைபேசிகளை நிறுத்தி வைக்கவும்.

உணவும் உடற்பயிற்சியும்
மனதை ஒருமுகப்படுத்துவதில் சரிவிகித உணவுக்கும் உடற்பயிற்சிகளுக்கும் நல்லதொரு பங்குண்டு. தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு இல்லையென்றால் அது மயக்கத்தையும் சோம்பலையும் ஏற்படுத்தும். விட்டமின் ‘ஈ’ அடங்கிய பருப்பு வகைளையும் பழங்களையும் அதிகம் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தினமும் சில உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

புரிந்து கொளுங்கள்
செய்யும் பணியை பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதில் இறங்கினால் மனதினை அதில் முழுமையாகச் செலுத்த முடியாது. அது குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே, முதலில் செய்ய வேண்டிய பணியினைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். செய்யும் பணி கடினமாக இருந்தால் நமது மனம் எளிதான பணிகளை நாடத் தொடங்கிவிடும். எனவே பணிகளை செய்யத் தொடங்கும் முன்னதாக, அப்பணிகளைப் பற்றிய ஒரு எளிமையான அடிப்படைக் கட்டமைப்பினையும் செயல் திட்டத்தினையும், வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

தள்ளிப் போடக்கூடாது
பணிகளைச் செய்வதை தள்ளிப் போட விரும்புகிறீர்களா? எப்போதுமே பணிகளைச் செய்வதைத் தள்ளிப் போட கூடாது. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதை முடித்துவிட்டு தான் இருக்கையை விட்டு எழுந்திருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறப்பான நேரம்
அனைவருக்கும் இருப்பது 24 மணிநேரம் தான் என்றாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் ஏதாவது ஒரு நேரத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். அப்படிப்பட்ட நேரத்தினைக் கண்டறிந்து கொண்டு மிகவும் சவாலான பணிகளை இந்த நேரத்தில் செய்து முடிக்கலாம்.

நேர்மறையான எண்ணுங்கள்
மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தால் என்னால் எனது மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யதால் உங்களை அறியாமலேயே ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாகும்.

தியானம்
தியானம் என்பது ஒரு சிகிச்சையல்ல. ஆனால் இதனைக் கற்றுக் கொண்டு முறையாகச் செய்து வந்தால் மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளலாம். மேலும் இதனால் ஏதோ ஒரு வேறுபாட்டினை உணரத் தொடங்குவதோடு மன ஒருமுகப்படுத்தும் திறன் மெல்ல வளர்வதையும் உணர்வோம்.

நிதானம்
ஒரு பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட அதில் அதிக நேரம் ஈடுபடுவதும் ஒரு காரணமாக அமையலாம். எனவே மனம் முழுவதையும் செலுத்தி போதுமான நேரம் எடுத்துக் கொண்டு, நிதானமாக அதனைச் செய்தால் அப்பணி சிறப்பாக நிறைவடையும்.

பழக்கப்படுத்தவும்
மனதை ஒருமுகப்படுத்துவதற்கு மூளையைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்குப் போதுமான பயிற்சி கொடுக்க வேண்டும். ஒரு பொருள் மீது சில விநாடிகளுக்கு மேல் கவனத்தைச் செலுத்த முடியவில்லை என்றாலும் கூட அதை தொடர்சியாக பயிற்சி செய்வதன் முலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.

காலக்கெடு
மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக்கும் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக் கொண்டால் முக்கியமில்லாத பணிகள் மறந்து போய் முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் பதிந்து அதனை முடிக்க வைத்துவிடும்.

தூக்கம்
நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவதை பாதிக்கும் காரணிகளாகும்.

சீரான முன்னேற்றம்
மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால் பணிகளில் சிறு சிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சிதறுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.

இதயமும் மனமும்
இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமுறையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடியும். பணியினை அனுபவித்து ஈடுபடுத்திக் கொண்டு ரசித்து செய்யும் போது மனம் உண்மையிலேயே அதில் முழுமையாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.

உலகின் குள்ளமான பெண்ணாக 22 வயது கல்லூரி மாணவி..!!

smallest woman

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம் 27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ஜோர்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜோர்டனுக்கு 20 வயது. பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால் பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன்பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம்.

இவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்சில் உள்ள கஸ்கசியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நடனம், சியர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்குகள். பிராட், கராத்தே, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, மஜிக் என்று பல விடயங்களில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். 28.5 அங்குல உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன்தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமான பெண்ணாகத் திகழ்ந்தார். அவரை முந்திவிட்டார் பிரிட்ஜெட்.

பூமியில் பிறந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்டர்ஸ்தான். அவரது உயரம் 24 அங்குலம். அவர் கடந்த 1895ம் ஆண்டு தனது 19ஆவது வயதில் நிமோனியாவால் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடரில் துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டி நூதன மோசடி?

selicon

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது “சிலிகன் டேப்” ஒட்டி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசடி செய்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட கௌரவம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடந்து வருகிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் சமநிலையில் நிறைவடைந்தது.

தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து அணி ஆஷஸ் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் ஆஷஸ் தொடர் மீது புதுவிதமான பிரச்சினை வெடித்துள்ளது. இந்த தொடரில் நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால், அதை எதிர்த்து முறையீடு செய்யும் முறை (டி.ஆர்.எஸ்.) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த தொழில்நுட்பம் ஒட்டுமொத்த சர்ச்சையின் உருவமாக கிளம்பி இருக்கிறது. டி.ஆர்.எஸ். என்பது நடுவர்களின் தவறான தீர்ப்புகளை சரி செய்வதற்கு தான். ஆனால் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், சில தவறான தீர்ப்புகள் ஆஷஸ் தொடரில் வழங்கப்பட்டது.

குறிப்பாக டி.ஆர்.எஸ் இன் ஒரு அங்கமான “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் குறித்து பல்வேறு ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பந்து துடுப்பில் உரசியதா இல்லையா என்பதை துல்லியமான “இன்ப்ரா ரெட் கமரா” உதவியுடன் அறிவதற்கு “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் ஆஷஸ் 3வது டெஸ்டின் போது ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா, இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் மேத் பிரையரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததாக நடுவர் தீர்ப்பு வழங்கிய போது “ஹொட் ஸ்பொட்” முறையின்படி டி.வி. ரீப்ளேயில் பார்த்தனர்.

பந்து துடுப்பில் உரசியதற்கான ஆதாரம் எதுவும் தெரியவில்லை. ஆனால் பந்து துடுப்பை கடந்த போது ஏதோ சத்தம் மட்டும் வந்தது. பந்து துடுப்பில் உரசியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவரது ஆட்டமிழப்பு உறுதி செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதே போட்டியில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு வழங்கப்பட்ட பிடியிலும் “ஹொட் ஸ்பொட்” முறையில் பந்து துடுப்பில் பட்டதற்கான அடையாளம் தெரியவில்லை. இதனால் “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பத்தில் கோளாறு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறினார்.

இதற்கிடையே “ஹொட் ஸ்பொட்” தொழில் நுட்பத்தை குழப்புவதற்காக இந்த தொடரில் இரு அணியிலும் சில வீரர்கள் நூதன மோசடியை கையாண்டு இருப்பதாக இப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது துடுப்பில் பந்து உரசி செல்வதை தவிர்ப்பதற்காக வீரர்கள் சிலிகன் என்ற ஒரு வகை உலோக டேப்பை துடுப்பில் ஒட்டி பயன்படுத்தி வந்துள்ளனர். சிலிகன் டேப்பில் பந்து உரசும் போது அது துடுப்பில் பட்டதற்கான அடையாளத்தை மறைத்து விடும். சத்தமும் வராது. இவ்வாறு நடக்கும் போது “ஹொட் ஸ்பொட்” தொழில் நுட்பம் குழம்பி போய் விடும்.

இப்படி மோசடிகள் அரங்கேற்றப்பட்டதால் தான், இந்த தொடரின் போது “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் சில முக்கியமான முடிவுகளில் தனது தரத்தை இழந்து விட்டதாக ஆஸி. தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அந்த அலைவரிசை குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி இங்கிலாந்து முன்னாள் தலைவர் மைக்கேல் வோகன் கூறும் போது, வீரர்கள் தங்களின் துடுப்புகளில் சிலிகன் டேப்பை பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆஸி. தலைவர் மைக்கேல் கிளார்க் விசாரிக்க வேண்டிய நேரம் இது என்றார்.

மைக்கேல் கிளார்க்கிடம் இது பற்றி கேட்ட போது துடுப்பில் டேப் பயன்படுத்துவது குறித்து எனக்கு தெரியாது. எங்கள் அணியில் யாரும் இது போன்ற மோசடியில் ஈடுபடவில்லை என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்த மாதிரி விளையாடுவது ஆஸி. கிரிக்கெட்டின் கலாசாரம் கிடையாது என்றார்.

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் மீதுதான் மறைமுகமாக இந்த புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்துள்ள அவர் கூறும்போது, விக்கெட்டை இழப்பதற்கு நான் ஒரு போதும் பயந்தது கிடையாது. ஆட்டமிழப்பு என்றால் உடனே நடையை கட்டி விடுவேன். துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டியிருப்பதாக கூறுவது, எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

பந்து துடுப்பில் உரசுவதை மறைக்க நான் முயற்சிப்பதாக கூறுவது முட்டாள்தனமானது. முதல் இன்னிங்சின் போது எனது துடுப்பில் பந்து உரசியதை “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பத்தில் தெளிவாக தெரிந்ததை எண்ணி பார்க்க வேண்டும்’ என்றார்.

எனினும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் குற்றச்சாட்டை ஐ.சி.சி. மறுத்துள்ளது.

ஐ.சி.சி பொது மேலாளர் ஜெப் அலார்டைசி ஆஸி. இங்கிலாந்து வீரர்கள், நடுவர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் டி.ஆர்.எஸ். முறையை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்தார். மற்றபடி எந்த வீரர்களிடம் விசாரணை நடத்தவில்லை. ஊடகத்தின் தகவல் தவறானது என்று ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சட்சன் கூறியுள்ளார்.

நடிகர் ஜெயப்பிரகாசுடன் இணைத்து அவதூறு பரப்புவதா : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்!!

laxmi

நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பசங்க படத்தில் ஜெயப்பிரகாஷ் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமானார். எதிர்நீச்சல், சென்னையில் ஒரு நாள், கழுகு, மங்காத்தா, மெரினா போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்திலும் வில்லனாக வந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்துள்ளார். சென்னையில் ஒரு நாள் படத்தில் ஜெயப்பிரகாசும், லட்சுமி ராமகிருஷ்ணனும் ஜோடியாக நடித்தனர்.

இந்த நிலையில் இருவரையும் இணைத்து இணைய தளத்தில் செய்தி வந்துள்ளது. இதற்கு பதில் அளித்து லட்சுமிராமகிருஷ்ணன் அவரது டுவிட்டரில் கூறி இருப்பதாவது..

ஜெய்பிரகாசும் நானும் இணைந்து வாழ்வதாக அவதூறு பரபரப்பட்டு உள்ளது. இது எனக்கு மனவேதனை அளிக்கிறது. இந்த வயதில் காதல் எனக்கு தேவையா, எனக்கு கணவர் இருக்கிறார். காதல் அவர்மேல்தான் வரும். இந்த அவதூறை பரப்பியவர் யார் என்பது தெரியும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய ரூபாவின் மதிப்பு குறைவடைந்து வருவதால் இலங்கையிலிருந்து சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரிப்பு!!

Gold

இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதால் இலங்கையைவிட இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தும் செயல்களும் அதிகரித்துள்ளன.

சுங்கத் தீர்வை கட்டளைச் சட்டத்தின் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான. தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கான பிரேரணையை சமர்பித்து பேசும் போதே அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று 40,000 ரூபா விலையில் குறைவடைந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டே உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையை நிலையாக தக்கவைத்துக் கொள்வதற்காக 5 வீத இறக்குமதி வரி அறவிடப்பட்டது.

இந்த 5 வீத இறக்குமதி வரிக்கு 100 வீத மேலதிக வரி இடப்படுகிறது. அதாவது தங்கத்துக்கு 2013 ஜூன் 21 ம் திகதி முதல் 10 வீத வரி அமுல்படுத்தப்படுகிறது. 2011ம் ஆண்டு உலக சந்தையில் வெகுவாக தங்கத்தின் விலை குறைந்தது. 2011ல் ஒரு ட்ரோய் அவுன்ஸ் தங்கம் 1900 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அது பின்னர் 1300 டொலராக குறைவடைந்தது.

இது 30 வீத குறைவாகும். எமது நாட்டின் உள்ளூர் சந்தையில் 15 வீதம் குறைவடைந்தது. இந்த நிலை காரணமாக 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தங்கம் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 136.2 மில்லியன் டொலர்கள் 2013 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஒப்பிடும் போது 200.3 மில்லியன் டொலர்களாக 50 வீத அதிகரிப்பு ஏற்பட்டது.

தங்கத்தின் விலை உலக சந்தையில் அதிகரித்தால் எமது இறக்குமதி செலவில் அதிகரிக்கவும் நேரடியாக வழிவகுக்கிறது. மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயமும் உள்ளது.
உலகில் அதிகளவு தங்கத்தை நுகரும் மக்கள் இருக்கும் நாடாக கருதப்படும் இந்தியாவில் அந்நாட்டு ரூபாவின் மதிப்பும் இப்போது வெகுவாக குறைந்து வருகிறது.

இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை இலங்கையைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இலங்கையிலிருந்து தங்கத்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.
தங்கம் இன்று மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

நிதி நிறுவனங்கள், வர்த்தக வங்கிகள் அடகு நிலையங்களில் மக்கள் தங்கத்தை அடகு வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 2013 ம் ஆண்டு மே மாதம் வரையில் 633 பில்லியன் ரூபாவுக்கு தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகளில் 590 பில்லியன் ரூபாவும், நிதி நிறுவனங்களில் 32 பில்லியன் ரூபாவும், அடகு நிலையங்களில் 11 மில்லியன் ரூபாவுமாக அடகு வைக்கப்பட்டுள்ளது.