வவுனியாவில் சிறுமிகள் மூவர் மீது பா லியல் வ ன்புணர்வு : இரு தந்தைகள் உட்பட மூவர் கைது!!

சி றுமிகள் மூவர் மீது..

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வ ன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சி றுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த உறவினர் ஒருவர் பா லியல் வ ன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சி றுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சி றுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை சி றுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிசில் நேற்று மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வ ன்புணர்வு கு ற்றச்சாட்டின் கீழ் உறவினரான 30 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சி றுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து அவருடைய தந்தை பா லியல் வ ன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சி றுமியின் தாயார் செட்டிக்குளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வ ன்புணர்வு கு ற்றச்சாட்டில் குறித்த சி றுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், மாங்குளம் பகுதியில் 17 வயது யுவதி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையையடுத்து குறித்த சி றுமியின் தந்தையான 39 வயது நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யு வதி மற்றும் இரு சி றுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப் ப ரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் ஜே.கே சந்திப்பும் சமாதானத்தின் கதையும்!!

எழுத்தாளர் ஜே.கே..

புலம்பெயர் எழுத்தாளர் ஜே.கே அவர்களின் கந்தசாமியும் கலக்சியும், என் கொல்லைப்புறத்துக் காதலிகள், சமாதானத்தின் கதைகள் இந்த மூன்று இலக்கிய படைப்புக்களும் எந்த வகையிலான விடயங்களை தெரிவிக்கின்றன என்ற கலந்துரையாடலும் அனுபவ பகிர்வும் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மண்டபத்தில் இன்று (15.02.2020) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது எழுத்தாளர் ஜே.கே அவர்களின் படைப்புக்கள் தொடர்பான விளக்கம் மற்றும் சந்தேகங்கள் மேலும் பல விடயங்கள் தொடர்பாக நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் வினாக்கள் எழுப்பப்பட்டதுடன் அதற்கு ஜே.கே பதில் வழங்கியிருந்தார்.

இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் , பேச்சாளர்கள், சமூக ஆர்வளர்கள், அரசியல் சார்ந்த செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தின் பொதுப் பிரச்சனைகள் தொடர்பில் வடக்கு ஆளுனருடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கலந்துரையாடல்!!

வடக்கு ஆளுனருடன்..

வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சால்ஸ் அவர்களுக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கத்திற்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் நேற்று (14.02.2020) நடைபெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் நிலவும் முக்கியமான மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.ஓமந்தை பெரிய விளாத்திக்குளம் புகையிரத கடவை :  வவுனியா யாழ்ப்பாணத்திற்கான புகையிரத வீதி புனரமைப்பின்போது மூடப்பட்ட ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் பிரதான வீதி மக்கள் பாவனைக்காக மீளதிறந்துவைக்கப்படல் வேண்டும்.

2.சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்குதல் :  நீண்டகாலமாக நியமனங்கள் வழங்கப்படாதுள்ள சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படல் வேண்டும், இதில் ஏற்கனவே மாகாண சபை இயங்கிய காலத்தில் நேர்முகத்தேர்வு செய்யப்பட்டு மத்திய சுகாதார அமைச்சு மற்றும் திறைசேரியின் முகாமைத்துவ சேவை பிரிவினால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்

3.பேராறு குடிநீர்த்திட்டத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மாற்றுக்காணிகளுக்கான காணி உறுதி இதுவரை வழங்கப்படவில்லை, புனரமைக்கப்பட்ட குளங்களுக்கான நீர்வரத்தை உறுதி செய்தல்

4.வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தால் நகரில் காணப்படும் பழைய பேருந்து நிலையம் இயங்காதுள்ளது. எனவே உள்ளுர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் தரித்துநின்று பயணத்தை மேற்கொள்ள வழிசெய்யப்படல் வேண்டும்.

5.செட்டிகுளம் அருவித்தோட்டத்தில் நீர்ப்பாசனவசதியுடன் கூடிய உரிமை கோரப்படாத வயற்காணிகளை அப்பகுதியில் வசிக்கும் காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.

6. கல்லாறு பகுதியில் 1970 களில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட மேட்டுக்காணிகளை இடம்பெயர்விற்கு பின்னர் தற்போது மீள்குடியேறும் மக்கள் துப்பரவு செய்யும்போது வனவளத்துறையினரால் இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனை கவனத்தில் எடுத்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

7.கல்மடு பூம்புகார் மற்றும் ஓமந்தை புதியவேலர்சின்னக்குளம் பகுதிகளில் கமநலஅபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட குளங்களுக்கு கீழாக பயிர்ச்செய்கை மேற்கொள்ள வனவளத்திணைக்களம் அனுமதிக்கவேண்டும்.

8.இராசேந்திரங்குளம் ஆலயப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படல் வேண்டும்

9.வன்னி மாவட்ட பாடசாலைகளில் நிலவும் குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிவரத்தி செய்யப்படல்வேண்டும்

ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றதுஇமேற்படி கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் உறுதியளித்தாக முன்னாள் அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் த ற்கொ லைகளைத் தடுக்க கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பு உதயம்!!

கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பு உதயம்

வடக்கில் யு த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் த ற்கொ லைகள் அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் த ற்கொ லைகளை தடுக்கும் முயற்சியுடனும் ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ம ன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை முடிவு எடுப்பவர்களை கா ப்பாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது ம ன அ ழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக

எவ்வித ஊதியமும் இன்றி அவர்களுக்காக சேவையாற்ற தயராகவுள்ள கை கொடுக்கும் நண்பர்கள் அமைப்பின் வவுனியா மாவட்ட தொண்டர்களுக்கான பயிற்சி பாசாறை வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலய மண்டபத்தில் இன்று (15.02.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

இதன் போது தொண்டர் ஊழியர்களுக்கு த ற்கொ லைகள் ஏன் இடம்பெறுகின்ற அதற்காக தீர்வினை எவ்வாறு வழங்குவது, அவர்களுடன் எவ்வாறு அனுகுவது தொடர்பாக சமூக ஆர்வலர் நித்தியானந்தன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட யாழ்.இந்திய துணைத்தூதரக குழுவினர் : பல விடயங்களுக்கு தீர்வு!!

யாழ்.இந்திய துணைத்தூதரக குழு

வடமாகாண மக்களுக்கு ஆலோசணை சேவை வழங்கும் செயற்றிடத்தில் கீழ் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக குழுவினர் இன்றையதினம் (15.02.2020) வவுனியாவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (15.02.2020)  காலை 9 மணி தொடக்கம் மதியம் 12.30 வரை இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூரகத்தின் அபிவிருத்தி, விசா, கடவுச்சீட்டு போன்றவற்றின் பிரதம அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரின் உதவி அதிகாரி சுரேஸ்குமார் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு இந்தியன் விசா பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்,

கல்வி புலமைப்பரிசில், வவுனியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளின் பிரச்சனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பாக வருகை தந்திருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.

மாதவிடாய் காலத்தில் தனியாக இருக்கவேண்டும் : 68 கல்லூரி மாணவிகளுக்கு நடந்த கொ டுமை!!

கல்லூரி மாணவிகளுக்கு..

கல்லூரி மாணவிகள் 68 பேரின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை சோ தனை செய்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். கல்லூரியின் விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி வருகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக ஒதுக்குவதும் அவர்களுக்கு தனியாக சமைப்பதும் இங்கு வழக்கம். இதில் 68 மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவிலுக்கும், சமையலறைக்கும் சென்றதாகக் கூறி, விடுதி முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் பெண் ஊழியர்கள் மாணவிகளின் ஆடைகளை களைய வைத்து சோ தனையிட்டனர்.

இதோடு அவர்களின் உள்ளாடைகளையும் சோ தனை செய்ய முயன்றுள்ளனர். இதையடுத்து அ திர்ச்சியடைந்த மாணவிகள் இது குறித்து புகார் அளித்தனர். புகாரையடுத்து தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை வி சாரணைக்கு எடுத்துள்ளது.

மேலும் பொலிசார் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி முதற்கட்டமாக கல்லூரி முதல்வர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளிடம் இவ்வளவு மோ சமாக நடந்து கொண்ட அனைவர் மீதும் க டுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் பலரும் கொந்தளித்துள்ளனர்.

வேறொரு பெண்ணுடன் சுற்றிய கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி : அதன் பின் நடந்த சம்பவம்!!

கணவனை..

இந்தியாவில், காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடிய கணவனை மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் ரோஜா, சாக்லெட், பரிசுப் பொருட்கள் என்று தங்கள் அன்பை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பீகாரில் காதலியுடன், காதலர் தினத்தை கொண்டாடிய கணவனை, மனைவி கையும் களவுமாக பி டித்துள்ளார்.

நேற்று காலை தலைநகர் பாட்னாவில் உள்ள பைலே சாலையில், தனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் கணவனை வி ரட்டி சென்று மனைவி பிடித்ததால், காதலி மற்றும் மனைவி இருவருக்குமிடையே சிக்கி த வித்துள்ளார். அப்போது மனைவி ஆ க்ரோசமாக ச ண்டை போட்டதால், அருகில் இருந்த பொலிசார் இதைக் கண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது மனைவி பொலிசாரிடம், மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு திருமணம் ஆனது. 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். பின்னர் அவர் தன்னை மாற்றிக்கொண்டார் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, காதலர் தினம் என்பதால் தனது காதலியை வெளியே அழைத்துச் சென்றதாக கூற, இவர்களின் ச ண்டை தீர்ந்தபாடில்லை.

பொலிசார் உடனடியாக மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். கணவர், மனைவி இருவரும் சமாதானப் போக்கிற்கு வரவில்லை என்றால், மனைவியின் புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.

என் இரு மகன்களையும் நாட்டிற்காக கொடுத்துவிட்டேன் : பேரனையும் நாட்டிற்காக அனுப்புவேன் : உருக வைத்த வயதான தாயார்!!!

பேரனையும் நாட்டிற்காகவே பணி செய்ய அனுப்புவதாக புல்வாமா சம்பவத்தில் உ யிரிழந்த இரா ணுவ வீரரின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து ஜம்முகாஷ்மீருக்கு 2000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, புல்வாமா என்ற இடத்தில் வ ன்முறை நடத்தப்பட்டது.

இதில், துணை இராணுவ படையினர் 40பேர் கொ ல்லப்பட்டனர். அதில், தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன் என்ற துணை இராணுவ வீரரும் உ யிரிழந்தார். இதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனை அடுத்து புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு சிவந்திரனின் தாய் மற்றும் மனைவி பேட்டியளித்துள்ளனர்.

தாயார் அளித்துள்ள பேட்டியில் “எனது மகன் விடுமுறைக்கு வரும்போது வீட்டிலேயே இருப்பான். அவன் வீட்டில் இருப்பதே எனக்குப் பெரிய நிம்மதியாக இருக்கும்.

எனது இரு மகன்களையும் நாட்டிற்காக கொடுத்துவிட்டேன். அதனால் இப்போது கொள்ளி வைக்க கூட ஆள் இல்லை. இருப்பினும் எனது பேரனை நன்றாக படிக்க வைத்து நாட்டிற்கு சேவை செய்ய அனுப்புவேன்” என்றார்.

சிவசந்திரனின் மனைவி காந்திமதி பேசியதாவது “எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் அப்பா எங்கே என்று கேட்கும் போது நான் கடவுளிடம் சென்றுவிட்டார் என்று சொல்வேன்.

ஆனால் அவனோ எனது கணவரின் கல்லறையை பார்க்கும் போது எல்லாம் அப்பா இங்கே தான் இருக்கிறார் என்று கூறுவான். எனது கணவருக்கு அவனை ஐ.பி.எஸ் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஆகவே அவனை ஐ.பி.எஸ் படிக்க வைத்து இராணுவத்திற்கு பணிபுரிய அனுப்புவேன்” என்று கூறியுள்ளார்.

துர்நாற்றம் வீசுகிறது : சாப்பிட கூட முடியவில்லை : இலங்கை தமிழ்ப் பெண்கள் உருக்கமான கோரிக்கை!!

தமிழகத்தில் உள்ள முகாமில் வாழும் இலங்கை தமிழ்ப்பெண்கள் மற்றும் ஆண்கள் மாவட்ட துணை ஆட்சியரிடம் க ண்ணீருடன் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 74 தமிழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இந்த அகதிகள் முகாமுக்கு மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அவரிடம், கடந்த 6 ஆண்டுகளாக அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை, நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள் என்று கூறிவிட்டு இலங்கை தமிழர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அவர்கள் கூறுகையில், அகதிகள் முகாமில் பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும். கடந்த 3 மாதங்களாக துர்நாற்றம் வீசும் அரிசியை தருவதால் சாப்பாடு செய்து சாப்பிட முடியவில்லை. எனவே ரே‌‌ஷனில் தரமான அரிசி வழங்க வேண்டும்.

சுய தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்வதற்கு பெண்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத்தர வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும் என கோரினார்கள்

இதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீகாந்த் உறுதியளித்தார்.

2 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலனுடன் சேர்ந்து விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

2 நாட்களில் திருமணம்

காதலுக்கு வீட்டில் பலத்த எ திர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி, காதலர் தினத்தன்று த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த சச்சின் (21) மற்றும் சிந்து ஸ்ரீ (19) ஆகியோர் கல்லூரி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு வீட்டில் கடும் எ திர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் சிந்து ஸ்ரீயின் வீட்டில் வேறு ஒரு இளைஞருடன் நிச்சயிக்கப்பட்டு, பிப்ரவரி 16ம் திகதி அன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஹாரங்கி அணைப் பகுதிக்கு சென்று நீரில் கு தித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ளனர்.

அதற்கு முன்பாக சச்சின் தனது வீட்டிற்கு போன் செய்து, த ற்கொ லை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த சச்சின் குடும்பத்தினர் விரைந்து சென்று த ற்கொ லையை தடுக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள்ளாக இருவரும் இ றந்த நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உ டலையும் பி ரேத ப ரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

திருமணம் முடிந்த சில வினாடிகளில் தரையில் சரிந்து உ யிரிழந்த மணமகன்!!

திருமணம் முடிந்த சில வினாடிகளில்..

திருமணத்தின் போது மணமகன் திடீரென தரையில் சரிந்து விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதன்பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது கணேஷ் திடீரென ம யங்கி தரையில் வி ழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், மா ரடைப்பு காரணமாக அவர் உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் கூறுகையில், திருமண ஊர்வலம் தாமதமாக துவங்கியது.

DJ ஒலி அதிகமாக இருந்ததால் அசாதாரணமாக உணர்ந்த கணேஷ் மயங்கி விழுந்து உ யிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பெண்ணின் சாதனையை கொண்டாடும் சர்வதேசம் : வியக்க வைக்கும் பல திறமைகள்!!

ஜனா குமார்

வவுனியா பம்பைமடுவை பூர்வீகமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசித்துவரும் ஈழத்துப் பெண்ணான ஜனா குமார் என்பவர் சர்வதேச ரீதியில் பல பாடல்கள் மற்றும் நடன குழுக்குளுக்கும் இணை இயக்குனராகவும், இயக்குனராகவும் , நடன இயக்குனராகவும், திட்ட வடிவமைப்பளாரகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.

கடந்த சில காலமாக இவர் கலைகளில் பல சர்வதேச ரீதியில் பல விருதுகளையும் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த ரீதியில் 2020ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஜனா குமாரின் இணை இயக்கத்தில் திட்ட வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வெளியான பாடல் இந்திய இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலர் தினத்தில் காதலனுடன் சென்ற மாணவிக்கு நடந்த சோ கம்!!

காதலர் தினத்தில்..

தமிழகத்தில் பிறந்தநாளை கொண்டாட காதலர் தினத்தில் காதலனுடன் சென்ற 19 வயது மாணவி பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். சேலத்தை சேர்ந்தவர் ரவினாய்குமார். இவருடைய மனைவி துளசி. இவர்களது மகள் ஆர்த்தி (19).

இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஆர்த்தியும் அசோக் (25) என்பவரும் காதலித்து வந்தனர்.

நேற்று முன் தினம் காதலி ஆர்த்திக்கு பிறந்தநாள் என்பதால் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று அவரது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாட அசோக் முடிவு செய்தார்.

இதையடுத்து இருவரும் பைக்கில் வேகமாக பெங்களூரு நோக்கி சென்றனர். அப்போது திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அந்த சமயத்தில் பின்னால் வந்த டிப்பர் லொறியின் சக்கரத்தில் சிக்கி ஆர்த்தி து டிதுடித்து பரிதாபமாக இ றந்தார். இந்த விபத்தில் அசோக் லேசான காயங்களுடன் உ யிர் த ப்பினார்.

தனது கண் எதிரே காதலி ப லியானதை கண்டு அசோக் க தறி அ ழுதார். பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்த்தி உட லை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

விசாரணையில் சில வருடங்களுக்கு ஆர்த்தி தந்தை உ யிரிழந்த நிலையில் தாய் அரவணைப்பில் வளர்ந்த அவர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் 234 விமான சேவைகள் திடீர் நிறுத்தம் : இராணுவத்தினர் களத்தில்!!

பிரித்தானியாவில் 2..

பிரித்தானியாயின் பல பிரதேசங்களை தற்பொழுது கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக்கும் டெனிஸ் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வீதிப் போக்குவரத்துக்கள், மின் வினியோகம், விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. British Airways மற்றும் Easy Jet விமான நிறுவனங்கள் தமது நூற்றுக்கணக்கான சேவைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

குறிப்பாக Easy Jet விமான நிறுவனம் 234 விமான சேவைகளை இன்றைய தினம் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பல பிரதேசங்கள் மோசமான வெள்ள அபாயத்திற்கு உட்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Calderdale, West Yorkshire போன்ற பிராந்தியங்களில் மிக மோசமான வெள்ளப்பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் அங்கு ராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த புயல் தாக்கம் இன்றும் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

இணையங்களில் கசியும் பெண்களின் அந்தரங்கங்கள் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என பொலிஸார் இலங்கை மக்களை எச்சரித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் போது அடையாளம் தெரியாத நபர்களிடம் குறுந்தகவல் ஊடாக தொடர்பு ஏற்படுத்தி, தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மோ சடி நபர்களினால் குறுந்தகவல் ஊடாக தொடர்புக் கொள்ளும் நபர்களின் புகைப்படங்கள் பெறும் நடவடிக்கைகள் இந்த நாட்களில் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பெற்றுக் கொள்ளும் புகைப்படங்களை நி ர்வாண புகைப்படங்கள் இணைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் இவ்வாறான மோ சடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவ்வாறான நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸாரிடம் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் மர்மப்பொருள்? அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிப்பு!!

கனகராயன்குளம் பகுதியில்..

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பா துகாப்பு பலப்படுத்தப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் இன்று (15.02.2020) காலை மர்மப் பொருட்களை தோண்டும் பணிகள் இடம்பெற்றது.

நேற்று (14.02) காலையிலிருந்து காணியை சுற்றி பா துகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று (15.02) குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் பெக்கோ இயந்திரம் மூலம் தோண்டும் பணி இடம்பெற்றிருந்தது.

சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஒருவர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் பிக்கான், அலவாங்கு மற்றும் பூசைப்பொட்கள், பூசணிக்காய் போன்றவற்றையும் மீட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 10 அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் எதுவும் கிடைக்காததனால் பின்னர் மூடப்பட்டிருந்தது.