உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா எனப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அ ழுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய வார இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸின விலை 1589 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. வைரஸ் தொற்று மேலும் நீடித்தால் தங்கத்தின் விலை 1600 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என உலக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் மாத்திரமின்றி பெல்லேடியம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி போன்ற பிற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும் பாரியளவு அதிகரித்துள்ளது. வெள்ளை தங்கத்திற்கு மாற்று பொருளான பெல்லேடியம் ஒரு அவுன்ஸின் விலை நூற்றுக்கு 4 வீதம் அதிகரித்துள்ளது. அதன் விலை 2417 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (16.02.2020) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மறவன்புலவு சச்சினாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் நாங்கள் சென்று நாங்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களை தெரிவு செய்தோம் எங்களுடைய பகுதியில் ஒர் பிரச்சனையுள்ளது வாருங்கள் எமக்கு தீர்வினை பெற்றுத்தாருங்கள் என தெரிவித்தோம்.
அதற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் என்ன பிரச்சனை என வினாவினார். எங்களது பகுதியில் ஒர் பிள்ளையார் ஆலயம் உள்ளது அதற்கு முன்பாக அந்தோனியார் சிலையினை வைக்கின்றனர், விவேகானந்தர் சிலையினை உடைக்கின்றனர் என தெரிவித்தோம்.
இதன் போது அந்த பாராளுமன்ற உறுப்பினர் வேப்ப மரத்தினையும் மா மரத்தினையும் கல்லையும் மண்ணையும் வணங்கும் உங்களுக்கு இது எல்லாம் தேவையா என கேள்வி கேட்டார் சைவ மக்களின் வாக்குகளை பெற்று தெரிவான ஓர் நாடாளுமன்ற உறுப்பினர்.
திருக்கேதீஸ்வர வளைவு பிரச்சனையில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரையில் குரல் கொடுக்கவில்லை. இது சைவர்களுடைய மனத்தினை புன்படுத்திய ஓர் நிகழ்ச்சி.
அவர்கள் நாடாளுமன்றத்தில் கதைத்துள்ளனரா? அல்லது பொதுமக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனரா? வன்னியில் தெரிவான எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் திருக்கேதீஸ்வர வளைவினை பற்றி பேசியது கிடையாது. ஆனால் வளைவினை உடைத்தவர்களுக்கு பா துகாப்பு வழங்கியுள்ளனர்.
யார் வாக்குகளில் அவர்கள் தெரிவானவர்கள்? யார் அவர்களை தெரிவு செய்தனர்? சைவ மக்கள் தெரிவு செய்தனர் சைவ மக்களிடம் வாக்கு கேட்டனர். வாக்களித்தார்கள் இது போல சைவ சமயத்தினை இல்லாமல் செய்யும் நிறைய விடயங்கள் வடக்கில் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
லண்டனில் குடியிருப்பு ஒன்றில் குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைவு செய்யப்பட்டிருந்த பெண்களின் ச டலம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை துவங்கியுள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள கேனிங் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைவு செய்யப்பட்டிருந்த இரு பெண்களின் ச டலம் மீட்கப்பட்து.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 35 வயது ஜாஹித் யூனஸ் மீது கொ லை வழக்குப் பதியப்பட்டு வி சாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
3 பிள்ளைகளின் தாயாரான மிஹ்ரிகன் முஸ்தபா மற்றும் ஹென்றிட் சுக்ஸ்(34) ஆகிய இருவரையுமே ஜாஹித் யூனஸ் கொ லை செய்து குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைவு செய்திருந்தார்.
பிரேத ப ரிசோதனையில் அவர்கள் இருவரும் கொ டூரமாக அ டிக்கப்பட்டு, அந்த கா யங்களால் ம ரணமடைந்துள்ளது தெரியவந்தது. ஹங்கேரிய நாட்டவரான ஹென்றிட் சுக்ஸ் நிலையான முகவரி ஏதுமின்றி பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் தங்கி வந்துள்ளார்.
கடைசியாக அவர் தொடர்பில் 2016 ஆம் ஆண்டில் இருந்து எந்த தகவலும் இல்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேப்போன்று சைப்ரஸ் நாட்டவரான மிஹ்ரிகன் முஸ்தபா 2018 மே மாதத்தில் இருந்தே மா யமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வந்த பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் ஜாஹித் யூனஸ் குடியிருப்பில் சோ தனை மேற்கொண்டனர்.
இந்த நிலையிலேயே அவரது குடியிருப்பில் இருந்து குளிசாதனப்பெட்டிக்குள் மறைவு செய்யப்பட்டிருந்த ச டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மூன்றாண்டுகளாக அவர் அந்த ச டலங்களை அவரது குடியிருப்புக்குள் மறைவு செய்திருந்ததும் அம்பலமானது.
மெக்சிகோவில் இளம்பெண் ஒருவரைக் கு த்திக் கொ ன்று, தோ லுரித்து, உ டல் பா கங்களை து ண்டு து ண்டாக வெ ட்டி சா க்கடையில் வீசினார் அந்த பெண்ணின் கணவர். அந்த ப யங்கர புகைப்படங்களை பத்திரிகை ஒன்று வெளியிட்டது.
பெண்களுக்கு இந்த நாட்டில் இவ்வளவுதான் பா துகாப்பா என கேள்வி எழுப்பிய பெண்கள், தங்கள் எ திர்ப்பை தெரிவிக்கும் வகையில் போ லி இரத்தத்தை அதிபர் மாளிகையில் தெளித்ததுடன் கோஷமும் இட்டனர்.
அத்துடன் சிவப்பு வண்ணத்தால், எங்கள் வாயை அடைக்க விடமாட்டோம் என்றும் எழுதினர் அந்த பெண்கள். Ingrid Escamilla (25) என்ற அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட Erik Francisco Robledo (46) என்னும் அவரது கணவரே இந்த கோ ரச் செயலைச் செய்துள்ளார்.
மெக்சிகோ அதிபரான Andres Manuel Lopez Obrador, அதிபர் மாளிகைக்குள் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த நிலையில், அவரது மாளிகையின் வாசலில் கூடிய பெண்கள் வ ன்மு றையை தடுக்க ஆவன செய்யுமாறு அதிபருக்கெதிராக குரலெழுப்பினர்.
Ingrid என்ற அந்தப் பெண் கொ ல்லப்பட்டு, தோ லுரிக்கப்பட்டு து ண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்டிருந்த படங்களை வெளியிட்டிருந்த பத்திரிகை அலுவலகம் முன்பும் பெண்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரிகை அலுவலகத்துக்கு சொந்தமான ஒரு ட்ரக் தீவைத்து எ ரிக்கப்பட்டது. அத்துடன் சிலர் பேருந்து நிலைய க ண்ணாடிகளை உ டைத்ததையடுத்து பொலிசார் பெப்பர் ஸ்பிரே அடித்து கூட்டத்தைக் கலைக்கவேண்டியதாயிற்று.
கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக வௌவாலிடமிருந்து தான் முதலில் பரவியிருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1500க்கும் அதிகமானோர் உ யிரிழந்துள்ளனர். இந்த உ யிர்கொ ல்லி வைரஸால் 67000 பேர் பா திக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று தெரியவந்தது.
சீனாவின் வுகான் நகரில் கடல் உயிரினங்கள் மொத்த விற்பனை சந்தையிலிருந்துதான் இந்த வைரஸ் தொற்று பரவியது. சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் தொற்று பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என கூறினார்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸானது வௌவாலிடமிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கவே பெரும்பாலான வாய்ப்பிருப்பதாக சீனாவின் அறிவியல் மற்றும் தொழிநுட்ப அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும் எறும்புண்ணி மூலமாகவும் கொரோனா பரவுகிறதா என ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவில் 13 வ யது மா ணவியை 10 வ யது சி றுவன் க ர்ப்பமாக்கிய ச ம்பவம் ப ரபரப்பாக பேசப்பட்ட நிலையில், குறித்த சி றுமி தற்போது நா ன் பா லியல் ப லாத்காரம் செ ய்யப்பட்டேன் என்ற அ திர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
ரஷ்யாவின் Zheleznogorsk-ஐ சேர்ந்தவன் Ivan. 10 வ யது சிறுவன் ஆன, இ வன் 13 வ யது சி றுமியான Darya தன்னுடைய கா தலி எனவும், அவர் க ர்ப்பமானதற்கு நா ன் தான் காரணம் என்று கூறி அ திர்ச்சியடைய வைத்தான்.
இது குறித்து அவர்கள் நேரடியாகவே தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி கொடுத்ததால், இவர்கள் தான் உள்ளூர் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறினர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் இவர்களின் பு கைப்படம் வைரலானது.
ஆனால் ம ருத்துவர்களோ Ivan நிச்சயமாக த ந்தையாக இருக்க மு டியாது. அவன் இன்னும் சி றுவன் தான் என்று அ டித்து கூறினர்.
இதையடுத்து தற்போது கு றித்த சி றுமி என் வ யிற்றில் வ ளரும் கு ழந்தைக்கு த ந்தை Ivan கிடையாது. நான் இ ளைஞன் ஒ ருவரால் க ட்டாபய ப்படுத்தி, பா லியல் ப லாத்காரத் திற்குள்ளாக்கப்பட்டேன் என்று உ ண்மையை உ டைத்துள்ளார்.
குறித்த சி றுமியை பா லியல் ப லாத்காரம் செய்தது 15 வ யது சி றுவன் எ னவும், அ வன் Siberia மாகாணத்தில் இருக்கும் Krasnoyarsk-வை சேர்ந்தவன் என்றும், தற்போது சி றுவன் வீ ட்டுச் சி றையில் அ டைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சி றுவனின் பெ ற்றோர், தங்கள் ம கன் இதற்கு நி ச்சயமாக கா ரணமாக இருக்கமாட்டான் என்று அப்போதே உறுதியாக கூறினர். ம ருத்துவர்கள் கூறுவதை நாங்கள் நம்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் புனே விமான நிலைய ஓடுதளத்தில் ஜீப் குறுக்கிட்டதால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்ட சம்பவம் ப ரபரப்பாக பேசப்படுகிறது.
புனே விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் எந்தியா விமானம் 180 பயணிகளுடன் புறப்பட்டது. குறித்த விமானம் வானில் பறப்பதற்கு ஆயத்தமாக ஓடுதளத்தில் சுமார் 222 கி.மீ.,வேகத்தில் ஓடத் துவங்கியது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஓடுதளத்தின் குறுக்கே ஜீப் ஒன்று வேகமாக வருவதை விமானி கவனித்துள்ளார்.
இதனால் பதறிபோன விமானி விமானம் ஜீப்பின் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக அவசர, அவரசமாக செயல்பட்டு விமானத்தை டேக் ஆப் செய்து பறக்க செய்துள்ளார். விமானியின் சாமர்த்திய செயல்பாடு காரணமாக, ஜீப்பின் மீது விமானம் மோதி ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மட்டுமின்றி விமான பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினர்.
குறித்த சம்பவம் காரணமாக விமானத்தின் முன் அடிப்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் விமானம் தொடர்ந்து பறந்து, காலை 10.15 மணியளவில் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அந்த ஏர் இந்தியா விமானம் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மட்டுமின்றி சேதமடைந்த விமானம் வானில் பறக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ச டலம் யாருடையது என்பதை கேரளா பொலிசார் வித்தியாசமான கோணத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கணவர் ஒருவர் அங்கிருக்கும் வடக்கன்சேரி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், வெளியே சென்ற எனது மனைவி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, இதனால் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த புகார் குறித்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வந்த போது, குரஞ்சேரி நெடுஞ்சாலை அருகே எ ரிக்கப்பட்ட ச டலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், ச டலத்தை கைப்பற்றியதோடு, அப்பகுதியில் இது குறித்து ஏதேனும் தடயம் கிடைக்குமா? என்று தேடியுள்ளனர். அப்போது அந்த சடலம் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 70 கி.மீற்றர் தொலைவில் தாலிச்சங்கிலி ஒன்று கிடப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பின் அந்த சங்கிலியில் இருந்த பி.ஐ.எஸ் முத்திரையால், குறித்த சங்கில் ஒட்டப்பாலம் அருகே உள்ள கடையில் வாங்கப்பட்டது என்பதை பொலிசார் ஆய்வுக்குட்படுத்தி தெரிந்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் எ ரிக்கப்பட்டு கிடந்த ச டலம் வடக்கன்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த கணவரின் மனைவி என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து உ டலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் குடும்பத்தாரிடம் தாலிச் சங்கிலியை ஒப்படைத்தனர். அவரின் மனைவி எப்படி உ யிரிழந்தார் என்பது குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் கொரோனா வைரஸால் பா திக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
உலகையே அ ச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது வரை 1500-க்கும் மேற்பட்டோர் உ யிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் 60,000-க்கும் மேற்பட்டோர் பா திக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் எளிதாக ஒருவரிடமிருந்து பரவுவதால், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் மருத்துவர்கள், தங்கள் உ யிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பா திப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின் இரண்டு பேர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனாவின் பா திப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் Alappuzha Medical College மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நபர் மருத்துவர் மற்றும் செவிலியர்களின் க ண்காணிப்பில் தனியாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இதில் நோயாளியை கவனிப்பதற்காக செவிலியர்களில் ஒருவரான Mridula என்பவர் இருந்தார். அவர் இந்த அனுபவம் குறித்து கூறுகையில், இந்த அனுபவத்தை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன் என்று கூறுவேன்.
ஏனெனில் உலகில் தற்போதைய ப யங்கரமான நிலை என்ன என்பது எனக்கு தெரியும். ஆறு நாட்கள் குறித்த நோயாளியை கவனித்து வந்தோம். எங்கள் ஷிப்ட் நான்கு மணி நேரமாக ஒதுக்கப்பட்டது. குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் நான்கு மணி நேர ஷிப்ட் படி வேலை செய்தோம்.
நாங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை, மருத்துவமனையின் விடுதி, விடுதியை விட்டால் மருத்துவமனை என்றே இருந்தோம்.
இதில் என்னை தொடர்ந்து நான்கு மருத்துவர்கள், 12 பி.ஜி மருத்துவர்கள், ஒன்பது அறுவை சிகிச்சை நிபுணர்கள், எட்டு செவிலியர்கள், ஆறு செவிலியர் உதவியாளர்கள் மற்றும் ஒன்பது துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
ஒவ்வொரு நாளும் மருத்துவ குழுவினர் கூறி நிலைமை குறித்து அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் எனக்கு ப யம் இருந்தது.
வேலைக்கு சேர்ந்த ஐந்து மாதங்களிலே இப்படி ஒரு சூழல் என்பதால் கொஞ்சம் ப யம் இருந்தது. என் குடும்ப உறுப்பினர்களும் ப யந்தனர். நிபா வைரஸால் உ யிரிழந்த லினியும் என்னுடைய நினைவுக்கு வந்ததாக கூறினார்.
இந்த வேலைக்கு பின் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் சோ தனை செய்யும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் தன்னுடைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டதால் மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்தார்.
இந்த சிகிச்சைக்கு பின் அவர் கடந்த வெள்ளிக் கிழமை வீடு திரும்பினார். இது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வைரஸை எதிர்த்து போ ராடிய கூட்டு முயற்சி என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போது, லினி என்ற செவிலியர் குறித்த வைரஸால் பா திக்கப்பட்டு உ யிரிழந்தார். இதனால் இந்த சிகிச்சையின் போது லினி நினைவுக்கு வந்ததாக மிருதுலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 5000-க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்த பெண்ணின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், அவரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் சீதா. 32 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாய் இறந்துவிட, தந்தை கா ணாமல் போய்விட்டதால், இவர் பாட்டியான ராஜம்மாளுடன் வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக வீடு இருந்த போதிலும், 24 மணி நேரமும், சேலம், பெரமனுாரில் உள்ள டி.வி.எஸ்., சுடுகாட்டிலே தான் இருப்பார்.
இவர் அங்கு வரும் பிணங்களை அடக்கம் செய்து, வாழ்க்கையை ஓட்டி வருகிறார். தன்னுடைய, 12 வயதில் இந்த தொழிலுக்கு வந்த சீதா, தற்போது வரை, 5,000-க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அடக்கம் செய்துள்ளார்.
அது மட்டுமின்றி, உறவினர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட, 3,000-த்துக்கும் மேற்பட்ட பிணங்களையும் அடக்கம் செய்துள்ளார்.
பிணங்களை அடக்கம் செய்வதற்காக, உறவினர்கள் கொடுக்கும் தொகையை மட்டும் பெற்றுக் கொள்கிறார். நள்ளிரவு, 12 மணிக்கு அழைத்தாலும், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், சுடுகாட்டிற்கு வந்து, பிணத்தை அடக்கம் செய்கிறார்.
இது குறித்து சீதாவிடம் கேட்டால், அவர் பிணங்களை அடக்கம் செய்வது கடவுளுக்கு நாம் செய்யும் சேவை என்று கூறியுள்ளார். மேலும், எனக்கு எல்லமே பாட்டி ராஜம்மாள் தான். என் தந்தை, எனக்கு, 11 வயது இருக்கும் போது, என் தாயின் உடலில் தீ வைத்து மாயமாகிவிட்டார்.
தாயை ஒரு மாதம், மருத்துவமனையிலும், வீட்டிலும் பார்த்தேன். அவர் இறந்த நிலையில் அடக்கம் செய்ய முடியாமலும், அவருக்கு ஒரு பிடி மண்ணை கூட என்னால் போட முடியாததும், பெரும் ஏமாற்றத்தை தந்தது.
என்னை போல், உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை யாருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே, இந்த தொழிலுக்கு வந்துவிட்டேன். தாய்க்கு, என் தந்தை செய்த கொடுமை தான், திருமணத்தை நான் வெறுக்க காரணமாக அமைந்து விட்டது. பிணங்களை அடக்கம் செய்யும் போது, என் மனம் பதறுவது இல்லை.
ஆனால், திருமணம் செய்து, ஒரு மாதத்துக்குள் வரும் பெண்களின் உடல்களை பார்க்கும் போது, மனம் பதைக்கிறது. நான் வேண்டுவது எல்லாம், பெண்களை மதியுங்கள் மிதித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இவரை அப்பகுதி மக்கள் கல்லறை தோட்டத்தின் கன்னியாஸ்திரி என்று பாராட்டி வருகின்றனர். தற்போது இவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் நிதி மோ சடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சமூக ஊடக பயனர்களுக்கு, இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் நிதி மோ சடி தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையம் ஊடாக பணம் சம்பாதிக்கலாம் என்ற அடிப்படையில் மக்களின் ஈர்ப்பை பெற்று இவ்வாறான மோ சடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிதி மோ சடி மேற்கொள்பவர்கள், சமூக ஊடக பயனர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, வாக்குறுதியளித்த சேவையை வழங்காமல் ஏமாற்றுகின்றமை க ண்கானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலகு கடன் யோசனை முறை ஊடாக பயனர்களின் வங்கி தரவுகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இணையத்தளத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பல்வேறு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள உணவகங்களில் உளுந்து வடை, தோசை மற்றும் இட்லியின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டில் வளர்க்க கூடிய தானியங்கள் இறக்குமதி செய்வதனை நிறுத்தும் திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் மஞ்சள் மற்றும் உளுந்து இறக்குமதி செய்யப்படுகின்றமையினால் அவற்றின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நாட்டில் போதுமான உற்பத்தி மேற்கொள்ளாமையினால் தானியங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஒரு கிலோ உளுந்தின் விலை 700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அது மாத்திரம் மஞ்சள் ஒரு கிலோ கிராம் 650 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் தோசை, இட்லி மற்றும் உளுந்து வடையின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலைமைக்கமைய மஞ்சள் மற்றும் உளுந்திற்கான இறக்குமதி அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா சிவன் முதியோர் இல்லத்தை அரசாங்க அதிபர் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார்.
எதிர்வரும் 21ம் திகதி வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்பாக ஆலயத்தின் அறங்காவலர்களுடன் கலந்துரையாடிய அரசாங்க அதிபர் அதனைத்தொடர்ந்து சிவன் முதியோர் இல்லத்திற்கும் சென்றிருந்தார்.
முதியோர் இல்லத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, அங்குள்ள முதியவர்களின் வாழ்க்கை முறைகளை பார்வையிட்டதுடன், முதியவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதேவேளை அங்கு உணவு சமைக்கும் முறைகளை பார்வையிட்டிருந்ததுடன் முதியோர் இல்லத்தின் சுற்றுச்சூழலையும் பார்வையிட்டிருந்தார். இதன்போது வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரும் உடனிருந்தார்.
வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (15.02.2020) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்திதுறையில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் சந்திக்கு அண்மித்த போது முன்பாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மதிவண்ணன் சிவகுமாரி (40) என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்டபொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாட்டுக்கு பணியாளர்களாக செல்லும் இலங்கை பெண்களை வி பச்சார தொழிலில் ஈடுபடுத்தும் கு ம்பல் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை பெண்களை அல் – என் நகர முகவர் நிலையத்தில் பலவந்தமாக தடுத்து வைத்து வி பச்சார தொழிலுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 47இற்கும் அதிகமான பெண்கள் இன்னமும் அந்த முகவர் நிலையத்தில் தடுத்து வைத்து து ன்புறு த்தல்களுக்கு உள்ளாகுவதாக பா திக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
வீட்டு பணிப்பெண்களாக சென்று ஐக்கிய அரபு எமிரகத்தில் பல்வேறு சி த்திரவ தைக்குள்ளான நிலையில் நாடு திரும்பிய வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை முகவர்கள் சிலரினாலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வி சாரணைகளை மேற்கொள்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்று நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையினுள் நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் அதே நேரத்தில், நாங்கள் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான மீளாய்வு கூட்டம் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் குறிபபிட்டுள்ளார்.
விமான நிலையங்கள் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரசபையுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிற குறியீட்டு சுகாதார அறிவிப்பு படிவத்தை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான நிற குறியீட்டு படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் நடந்து செல்லும்போது இந்த நோய் தொற்று இருந்தால் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொரோனா தொற்றியிருப்பதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் சிகிசிக்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட சீன பெண் குணமடைந்து சீனாவுக்குப் புறப்படுவதற்குக் காத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.