உங்கள் உடல் எடையை 10 கிலோ வரை குறைக்க வேண்டுமா? இந்த அற்புத பானத்தை குடியுங்கள்!!

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இன்றும் பலர் அதற்காக எத்தனை வழிகளில் முயற்சி செய்து கொண்டு தான் வருகின்றனர். எவ்வளவோ டயட் மற்றும் நேரத்தை செலவழித்து கடின உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையினை குறைக்க கஷ்டப்படுவதுண்டு.

அதற்கு நேரம் செலவேயில்லாமல் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளமால் உடல் எடையினை இலகுவழியில் குறைக்க முடியும். அந்தவகையில் சமையலுக்கு பயன்படும் நீள கத்திரிக்காய் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை உடல் எடையை குறைக்க முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை : நீள ஊதா நிறக்கத்திரிக்காய் – 1,  எலுமிச்சை சாறு – 1,  நீர்- 4 கப். தயாரிக்கும் முறை :  முதலில் கத்திரிக்காயை வாங்கி சுத்தமாக கழுவ வேண்டும். சமையல் சோடா கலந்த நீரில் அலசினால் அதிலிருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள் அழித்துவிடும். அதன் பின் இந்த கத்திரிக்காயை சிறு சிறு சதுர சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் தோலை எடுக்காமல் வெட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் ஒரு ஜாரில் வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு அதில் இந்த கொதித்த நீரை உடனே ஊற்றி மூடி முழுவதும் ஆறும் வரை அப்படியே வைத்திருங்கள். பின்னர் ஆறியவுடன் அந்த நீரில் ஃப்ரெஷான எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சில்லென்று ஆனவுடன் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதனால் உடல் எடை குறைக்க விரும்புவர்கள் வாரம் 3 நாட்கள் விடாமல் குறைத்தால் அற்புத பலன்கள் கிடைக்கும்.

கத்திரிக்காய் அதிக சத்துக்களை கொண்டது. கொழுப்பை வேகமாக கரைத்திடக் கூடியது. தினமும் இந்த நீரை குடித்து வந்தால் அதிகபடியான கொழுப்பு கரைந்து உடல் இளைக்க ஆரம்பிக்கும். ஏனைய நன்மைகள் : இந்த நீரில் விட்டமின் ஈ அதிகம் இருக்கிறது. செல் சிதைவை தடுக்கும். இதய நலனை பாதுகாக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டும். இது நீர்ப்புத்தன்மை மற்றும் யைடூரிடிக் பண்பு அதிகம் பெற்றது. திசுக்களில் தங்கியிருக்கும் நீரை வெளியேற்றி மூட்டு இணைப்புகளில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காக்கின்றது.

இந்த நீர் மினரல்களான பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்றவற்றை உடலுக்கு அளிக்கின்றது. இதனால் நரம்பு மண்டலம் பலம் பெறுகிறது. மூளைக்கும் அதிக ஆற்றலை வழங்குகிறது.

பித்த நீர் சுரப்பை இந்த கத்திரிக்காய் நீர் தூண்டுவதால், உணவுக் குடல் மற்றும் இரைப்பையில் உருவாகும் கொழுப்பு செல்களை உடைத்து முழுவதும் கிரகிக்க உதவுகிறது. கத்திரிக்காயில் மிக அதிக நார்ச்சத்து உள்ளிதால் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல்களில் உருவாகும் நல்ல பாக்டீரியக்கள் வளர்ச்சியை தூண்டுகிறது.

மேலும் மலச்சிக்கலை குணப்படுத்தும். ரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் இந்த கத்திரிக்காய் நீரை மருந்தாக சாப்பிடலாம். இது ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த நீரை எடுத்துக் கொண்டால் மனத் தளர்ச்சியை போக்கும். நரம்புகளை ஆசுவாசப்படுத்தி நன்மைகளை அளித்திடும்.

விமர்சித்த பிரபலத்துக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமானின் மகள்!!

ஏ.ஆர்.ரகுமானின் மகள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர். அவரது மகள் கதீஜா ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தன் முகம் முழுவதும் புர்கா மூலம் மறைத்துக்கொண்டு பங்கேற்றார்.

இது பற்றி சிலர் விமர்சித்ததால் அப்போதே அவர் அதற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் தற்போது வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்திருந்தார்.

“எனக்கு ரகுமான் இசை பிடிக்கும். ஆனால் அவரது மகளை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது” என அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கதிஜா இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார்.

“ஒருவருடம் தான் ஆகிறது. தற்போது மீண்டும் இப்படி பேச்சு வருகிறது. நாட்டில் பல்வேறு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒரு பெண் அணியும் உடை பற்றி தான் பலரும் கவலை படுகிறார்கள்.

ஒவ்வொருமுறை இப்படி பேச்சுகள் வரும்போது எனக்குள் கோப தீ எரிய ஆரம்பிக்கிறது. பல விஷயங்களை பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த ஒரு வருடமாக என்னுடைய மற்றொரு பரிமாணத்தை நான் கண்டுள்ளேன்.”

“நான் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளை எண்ணி வருத்தப்படப்போவதில்லை. நான் மகிழ்ச்சியாக செய்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். My work will speak, God willing.. வேறுதுவும் சொல்ல விரும்பவில்லை.” “உண்மையான Feminism என்றால் என்ன என googleல் தேடுங்கள்” என கூறி கதிஜா அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் கஞ்சா கருப்புவின் வாழ்க்கையில் விளையாடிய நபர் : மனைவி வேதனை!!

நடிகர் கஞ்சா கருப்பு

தமிழ் திரையுலகின் காமெடி நடிகரான கஞ்சா கருப்புவின் மனைவி, தனது வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் குறித்து பகிர்ந்துள்ளார். 5 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் கஞ்சா கருப்பு, தனது ஊரில் மற்ற பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பள்ளியை கட்டிக்கொடுத்தார்.

அவருக்கு டாக்டர் பெண் தான் வேணும் என்பது ஆசை, ஏனெனில் அவருடைய அப்பா உடல்நிலை சரியில்லாமல், மருத்துவர் கவனிப்பு இல்லாமல் இருந்ததால் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தார்.

இப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து நல்லபடியாக சென்றுகொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் மூலம் புயல் வீச ஆரம்பித்தது. படம் தயாரித்தார். படம் பண்ண தெரியாத ஒருத்தரை வைத்து படம் தயாரித்து நஷ்டத்தில் விழுந்தார். அதிலிருந்து மீண்டு வருவதற்கே சில காலம் தேவைப்பட்டது.

இடையில சில வருடம் அவருக்கு நல்ல ரோல் கிடைக்கல. அதனால, வந்து விசாரிக்கக்கூட ஆட்கள். இப்போ நடிக்கக்கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க. நிம்மதியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

என் ஆர்த்தியால் அழகாகும் வீடு : காதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் உருக்கம்!!

சிவகார்த்திகேயன் உருக்கம்

வெற்றியடைவது முக்கியமல்ல. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் பெரும் சவால் என்று கூறுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தோள் கொடுப்பவரே உற்ற துணை. என் அம்மா எனக்குத் தந்த மிகப் பெரிய பரிசு ஆர்த்தி. எத்தனை வருடங்கள் கழித்துக் கேட்டாலும் இது மாறாது.

என் தாய்மாமாவின் மகள்தான் ஆர்த்தி என்றாலும் இருவரும் அவ்வளவாகப் பேசிக்கொண்டதில்லை. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, “மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன்பா” என்று சொன்னார் அம்மா. திருமணமாகும் போது எனக்குப் பெரிய வசதி இல்லை. ஆனால், ஆர்த்தி வசதியான குடும்பத்துப் பெண். அப்போதும் சரி, இப்போதும் சரி அவர் எதையுமே வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.

எனக்கு இதெல்லாம் வாங்கிக் கொடுங்க எனக் கேட்டதே கிடையாது. எங்களுக்குத் திருமணமாகும்போது ஆர்த்திக்கு 21 வயது. பொறியியல் படித்திருந்தார். ரொம்ப சீக்கிரமே திருமணம் செய்து கொண்டுவிட்டோமோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

ஆராதனா பிறந்த நாளை எங்கள் இருவராலும் மறக்க முடியாது. என்ன குழந்தை பிறந்தாலும் சந்தோஷம் என அவர் நினைத்தார். பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள்.

எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக்கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி மேடம், குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி. இப்போ நாமதான் போன் செய்து அவர்களுடைய வேலையை கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. நீண்ட நாட்கள் படப்பிடிப்பு என்றால் இடைப்பட்ட நேரத்தில் பேசிக்கொள்வோம். ஆராதனாவிடம் பேச வேண்டுமே, இல்லையென்றால் மேடம் கோபித்துக்கொள்வார்.

என் நண்பர்கள் குழுவில் எனக்குத்தான் முதலில் திருமணமானது. திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுப்பார் ஆர்த்தி. மட்டன், சிக்கன் என எதைச் சமைத்தாலும் பிரமாதமாக இருக்கும். சமையலில் புதிதாக ட்ரை பண்ணுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எல்லாம் சினிமா பாணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான். வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன்.

என்னைப் பார்த்ததும் பயந்து அழுதுவிட்டார். அவர் அழ ஆரம்பித்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அன்றைக்கு வந்திருந்த நண்பர்களும் என்னப்பா ஆச்சு என்று பதறிக் கேட்க, அதிலிருந்து அவரை சர்ப்ரைஸ் செய்வதை நிறுத்திவிட்டேன். என்ன நடந்தாலும் அப்படியே சொல்லிவிடுவேன்.

திரையுலகில் நுழைந்தவுடன் ஆரம்பத்தில் சிறிய வதந்தியில்கூடச் சிக்கவில்லை. ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளேன் என்ற பெரிய வதந்தியில்தான் சிக்கினேன். அப்போது அவர் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்ததால் ரொம்ப வருந்தினேன், பயந்தேன்.

இந்த நேரத்தில் இந்த வதந்திச் செய்தியைப் படித்தால் என்ன நினைப்பார் என்று நினைத்து அதை அவரிடமிருந்து மறைத்தேன். அடுத்த நாள் அவராகவே, “என்னங்க இப்படியொரு செய்தி வந்துருக்கு?” என்று ரொம்ப யதார்த்தமாகக் கேட்டார்.

அப்போதுதான் எதையுமே நேரடியாக எதிர்கொள்ளக்கூடிய பெண் அவர் என்பது புரிந்தது. “சினிமாத் துறையில் இருந்தால் இதெல்லாம் வரும் என்று தெரியும், பார்த்துக்கொள்ளலாம்” என்று எனக்கு ஆறுதல் சொன்னார்.

அவரது பேச்சுக்குப் பிறகு எனக்குப் பொறுப்பு அதிகமானதுபோல் உணர்ந்தேன். திரைத்துறையில் நுழைந்திருந்த நேரத்தில் இப்படி அவர் சொன்னது ஒரே நேரத்தில் அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

எது உண்மை, எது பொய் என்று புரிந்துகொள்ளக்கூடிய மனைவி நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்தேன். எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்திதான் கவனித்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால்கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை.

இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறாரே என்று ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் எனக்குக் கொடுத்த பரிசாக நினைத்து, அதை வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டியிருக்கிறேன். நாம் வரியைச் சரியாகக் கட்ட வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.

 ஆனால், வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே அனைத்தையும் சரிபார்த்து, சரியாக வரியைச் செலுத்தி ‘தங்கச் சான்றிதழ்’ பெற்றுக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல. வீட்டு விஷயங்களைப் பொறுத்தவரைக்கும் ஆர்த்திதான் எல்லாமே. அவர்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துகொண்டிருக்கிறார்.

வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்திதான் காரணம். வீட்டை எப்போதுமே ஜாலியாகவே வைத்திருப்பார். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது என்னிடம் கேட்டுக்கொள்வார்.

படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றால் ஒரு மாதம் வீட்டுக்கு வர முடியாததுதான் சிரமம். முன்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு ஓடிக்கொண்டிருப்பேன். ஒரு மாதம் வேலை செய்துவிட்டு, ஒரு வாரம்கூட வீட்டில் இருந்தது கிடையாது. அப்போதெல்லாம் அதைப் புரிந்து நடந்துகொண்டார்.

என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை. மனைவியையும் மகளையும் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் நானே அவர்களை வெளியூர்களுக்கு வரவழைத்துவிடுவேன். மற்றபடி நான் வீட்டிலிருந்தால் அவருக்குப் போதும்.

பொதுவாகவே எந்த மாதிரியான கதைகளில் நடித்துவருகிறேன், நடிக்கப்போகிறேன் என்பதை அவருடன் விவாதிப்பேன். படப்பிடிப்புக்கும் அவர் வருவதால் வேலையில் உள்ள ப்ளஸ், மைனஸைத் தெரிந்துவைத்துள்ளார்.

வவுனியாவில் ரெலோவின் 50வது ஆண்டு கூட்டத்தில் குழப்பம் : ஓருவர் வைத்தியசாலையில்!!

ரெலோவின் 50வது ஆண்டு கூட்டத்தில்

வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 50 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட கு ழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 50 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது மண்டப வாயிலுக்கு வந்த சில இளைஞர்கள் ரெலோவின் கொடியை இறக்க முற்பட்டதாகவும் இதனையடுத்து ரெலோ உறுப்பினர்களுக்கும் இடையில் த ர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது அங்கு வந்த இளைஞர்கள் ரெலோவின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகனுடைய படத்தை ஏன் முன்னால் காட்சிப்படுத்தவில்லை எனவும்,

யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தில் இரு இளைஞர்களை புளொட் அமைப்பினர் சு ட்டுக் கொ ன்றிருந்தனர். தற்போது புளொட் தலைவர் சித்தார்த்தனை கூப்பிட்டு விழா செய்கிறீர்களா என த ர்க்கம் விளைவித்தனர். அங்கு ரெலோ உறுப்பினர்களும் குழுமியதால் ப தற்றம் ஏற்பட்டது.

அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிசாரின் துணையுடன் நிலமையை கட்டுப்படுத்தியதுடன், ரெலோ உறுப்பினர் ஓருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ரெலோவால் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்ற போது அங்கு நின்ற அரச அதிகாரி ஒருவர் மாவை சேனாதிராஜாவைப் பார்த்து இவர் ஏன் இங்கு வந்தவர். யார் இவரை கூப்பிட்டது என சத்தம் எழுப்பிய நிலையில் ஏற்பாட்டாளர்கள் சமரசப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் : மாணவர்கள் மகிழ்ச்சி!!

முதலாம் தவணைப் பரீட்சை

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்கு வசதியாக முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கிறது.

முதலாவது தவணையின் போது விளையாட்டுப் போட்டிகளில் பாடசாலைகள் கூடுதல் கவனத்தை செலுத்துவதை கண்டறிந்த பிறகு இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆராய்ந்திருக்கிறார்கள்.

இதனால் முதலாம் தவணைப் பரீட்சைகளுக்கு தங்களை தயார் செய்வதில் மாணவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நேரமே இருக்கிறது.

எனவே இந்தப் பரீட்சைகளை நடத்துவது நடைமுறைச் சாத்தியமானதல்ல என்று அதிகாரிகள் முடிவெடுத்திருப்பதாக தெரியவருகிறது. இந்தக் கலந்துரையாடல்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு பெற்றோர் குழுவும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.


கல்வி அமைச்சின் அதிகாரிகள் எடுத்த முடிவின் பிரகாரம் அடுத்த வருடத்தில் இருந்து பத்தாம் வகுப்புக்கு கீழ்ப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது.

பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்விக்கு பாடசாலைகளில் கூடுதலான நேரம் செலவிடப்படுவதால் விளையாட்டுக்கள் மற்றும் ஏனைய புறக்கிருத்திய நடவடிக்கைகளுக்கு குறைந்தளவு நேரமே செலவிடப்படுகிறது என்று மக்களிடம் இருந்து முறைப்பாடுகள் வந்ததன் விளைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் , மாணவர்கள் பெருமளவு தனியார் வகுப்புக்களில் செலவிடுவதாகவும் தெரியவருகிறது.

தந்தை இறந்த அதேநாளில் உயிரிழந்த மகன் : அதிர்ச்சி கொடுத்த இத்தாலிய கால்பந்து வீரர்!!

தந்தை இறந்த அதேநாளில்..

விபத்தில் உ யிரிழந்த தீவிரமான இந்திய ரசிகனுக்காக புகழ்பெற்ற இத்தாலிய கால்பந்து வீரரான பிரான்செஸ்கோ டோட்டி, தான் கையெழுத்திட்ட ஜெர்சி அனுப்பி வைத்துள்ளார். இத்தாலியில் வேலை செய்துவந்த இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர், தனது மனைவி மேரி உடன் 35 வருடங்களுக்கு முன்பாகவே ரோம் நகரில் குடியேறி வசித்து வந்துள்ளார்.

இவர்களுக்கு நிக்கோலாஸ் (21) என்கிற மகனும், ஸ்டீபனி என்கிற மகளும் இருந்தனர். வருடத்தில் சில சமயங்களில் மட்டும் ஜான்சன் கேரளாவிற்கு வந்து செல்வார். அந்த வகையில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கேரள பயணத்தின் போது அவர் கா லமானார்.

நிக்கோலஸ் ஒரு சிறு குழந்தையாக இருந்ததிலிருந்தே கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்பெற்ற இத்தாலிய கால்பந்து வீரரான பிரான்செஸ்கோவின் தீவிர ரசிகனாகவும் இருந்துள்ளார்.

இத்தாலியின் தேசிய அணியின் ஜூனியர் பள்ளியில் கால்பந்து பயிற்சி பெற பெற்றோர் அவரை அனுப்பி வைத்திருந்தனர். 5ம் வகுப்பு வரை அங்கு பயிற்சி பெற்றவர், அதன்பிறகு கேரளாவிற்கு திரும்பி 12ம் வகுப்பு வரை படித்து முடித்தார்.

விடுமுறை நேரத்தில் மட்டும் ரோம் சென்றுவந்த நிக்கோலாஸ், இடைநிலை பள்ளி கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டும் விளையாடி வந்துள்ளார். இந்தியாவில் அவர் படித்த பள்ளியின் ஆசிரியர்கள் கூறியதை கேட்டு, ஆரம்பத்தில் ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார்.

சில மாதங்கள் கழித்தே, தனது ஆசை முழுவதும் கால்பந்து மீது இருப்பதை புரிந்துகொண்டு, நெதர்லாந்தில் உள்ள கல்லூரிக்குச் சென்று விளையாட்டு மேலாண்மை படிப்பை தேர்வு செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் விடுமுறைக்காக ரோம் திரும்பிய போது, பிப்ரவரி 2ம் திகதி அன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் கோமாவில் இருந்த சமயத்தில், நிக்கோலாஸ் நண்பர்களும் அவரது சகோதரி ஸ்டீபனியும் கால்பந்து வீரர்களை குறிப்பாக பிரான்செஸ்கோ டோட்டியை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் 7 நாட்களாக கோமாவில் இருந்த நிக்கோலஸ், தனது தந்தை இ றந்த அதேநாளில் உ யிரிழந்துள்ளார். இதனை அறிந்த ஏ.எஸ். ரோமா கால்பந்து அணி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தது.

அதேசமயம் நிக்கோலஸிற்கு விளையாட்டு மீதான ஆர்வம், குறிப்பாக தன் மீதான அவரது அபிமானத்தைப் பற்றி அறிந்துகொண்ட பிரான்செஸ்கோ, ‘டோட்டி’ என்ற பெயருடன் 10ம் எண் பொறித்த ஜெர்சியில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளார்.

இறுதிசடங்கு நிகழ்வின் போது அவர் அனுப்பி வைத்திருந்த ஜெர்சியானது, நிக்கோலாஸின் சவப்பெட்டியின் மீது போர்த்தப்பட்டிருந்துள்ளது.

துணையைத் தேடி 14,000 கி.மீ அலைந்த ஓநாய் : இறுதியில் நடந்த சம்பவம்!!

ஓநாய்

தனக்குரிய துணையைத் தேடி சுமார் 2 ஆண்டு காலம் தனியாக அலைந்த பெண் ஓநாய் ஒன்று இறுதியில் இ றந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான ஓரிகன் மற்றும் கலிபோர்னியா எல்லைப் பகுதிக்குள் 4 வயதான இந்த ஓநாய் சுமார் 8,700 மைல்கள் அலைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகள் நீண்ட இந்த ஓநாயின் தேடுதலானது நாளுக்கு 21 கி.மீ தொலைவு வியாபித்துள்ளது.

வடகிழக்கு கலிபோர்னியாவில் பெப்ரவரி 5 ஆம் திகதி OR-54 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓநாய் இ றந்த நிலையில் மீட்கப்பட்டது. இதன் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவி ஒன்று கடந்த டிசம்பர் மாதம் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த ஓநாய் ம ரணமடைந்த உறுதியான காரணம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓநாய் ம ரணமடைந்ததற்கான காரணம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ச ட்டவிரோத வே ட்டையாடுதல் காரணமாக குறித்த இனத்திலான ஓநாய்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவை சந்தித்தது. ஓரிகன் மாகாணத்தின் 54-வது சாம்பல் நிற பெண் ஓநாய் என்பதாலையே OR-54 என ஆய்வாளர்கள் பெயரிட்டிருந்தனர்.

திருமணத்தின் போது அனைவரையும் வாய்பிளக்க வைத்த மணப்பெண் : இரு மாதத்தில் சடலமாக மீட்பு!!

வாய்பிளக்க வைத்த மணப்பெண்

இந்தியாவில் திருமணத்தின் போது அசத்தலாக நடனமாடி பெரியளவில் வைரலான புதுப்பெண் தூ க்கில் ச டலமாக தொங்கிய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தியை சேர்ந்தவர் மர்சி போரா. இளம் பெண்ணான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்வின் போது மணமேடையில் போரா அசத்தலாக நடனம் ஆடினார்.

இதை பார்த்து கணவரும் அங்கிருந்த உறவினர்களும் வாயை பிளந்தனர். இது தொடர்பான வீடியோ பெரியளவில் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் திருமணமான 2 மாதத்தில் சரியாக கடந்த 14ஆம் திகதி காதலர் தினத்தன்று கணவர் வீட்டில் ச டலமாக போரா தொ ங்கினார். இந்த சமயத்தில் போராவின் கணவர் மும்பையில் இருந்துள்ளார்.

இவ்வழக்கை பொலிசார் த ற்கொ லை வழக்காக பதிவு செய்துள்ளனர். இருந்த போதிலும் போரா ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக அவர் குடும்பத்தார் கூறியுள்ளதோடு, முறையான விசாரணை வேண்டும் என கோரியுள்ளனர்.

டிக்டாக்கில் பிரபலமான இளம் பெ ண்ணுக்கு நள்ளிரவில் நே ர்ந்த க தி!!

மதுரை சுகந்தி

டிக்டாக் செயலிக்கு அ டிமையாகி வாழ்க்கையை தொ லைக்கும் இளம் பெ ண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது தங்களுடைய ஊர் பெயரை கெ டுத்ததாக இரண்டு இளம் பெண்களை ஊரை விட்டு வெளியேற்றிய சம்பவம் நடந்துள்ளது. தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரை சுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிக பிரபலம்.

ரா ணுவத்தில் கணவர் வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி, க வர்ச்சிப் பாடல்களுக்கு டிக்டாக் வெளியிட்டு ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.

சமீபத்தில் கூட சுகந்திக்கு எதிராக இருபெண்கள் பொலிசில் புகார் அளித்தனர், இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் சுகந்திக்கு பி ரச்சனை எழ, அந்நபர் நாகலாபுரத்தில் இருக்கும் அனைத்து பெண்களையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இதனால் ஆ த்திரம் அடைந்த நாகலாபுரம் கிராம மக்கள் டிக்டாக்கில் டவுன் பஸ் போல வலம் வந்த சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரைவிட்டு து ரத்தி அ டிக்க பொ ங்கி எ ழுந்தனர்.

மேலும் அவர்கள் நிரந்தரமாக ஊருக்குள் வர த டை விதிக்க வேண்டும் என பழனிச்செட்டிப்பட்டி காவல் நி லையத்தை மு ற்றுகை யிட்டனர். இதனை தொடர்ந்து பொ லிசார் உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் சரிந்து அசைவற்றுக் கிடந்த இலங்கை வீராங்கனை : பயிற்சி ஆட்டத்தில் நேர்ந்த விபரீதம்!!

இலங்கை வீராங்கனை

அவுஸ்திரேலியாவில் தென் ஆபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது தலையில் பந்து தா க்கி மைதானத்தில் சுருண்டு விழுந்து அசைவற்றுக் கிடந்த இலங்கை வீராங்கனை உடல்நலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையைில், அதன் ஒரு பகுதியாக தென் ஆபிரிக்க-இலங்கை மகளிர் அணி இன்று அடிலெய்ட் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இதில், தென் ஆபிரிக்க அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டில் தென் ஆபிரிக்காவுடனான போட்டியின் போது, பிடிக்க முயன்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

போட்டியின் போது 29 வயதான தென் ஆப்பரிக்கா வீராங்களை சோலி ட்ரையன் அ டித்த பந்து அருகே பீல்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அச்சினி குலசூரியா தலையில் தா க்கியது.

அடிபட்ட தரையில் சரிந்த குலசூரியா சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தார். இலங்கை வீராங்களைகள் உதவிக்கு விரைந்தனர்.

ஆம்புலன்ஸ் அதிகாரிகளால் சோ தனை செய்யப்பட்ட பின்னர், அவர் மைதானத்தில் இருந்து ஸ்டக்சரில் தூக்கிச் செல்லப்பட்டு மேலதிக சோ தனைகளுக்காக அருகிலுள்ள ராயல் அடிலெய்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர், ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது குலசூரியா உடல்நலம் குறித்த கேள்விக்கு இலங்கை அணி செய்தித் தொடர்பாளர் பதிலளித்ததாவது, பிற்பகலில் குலசூரியா மருத்துவமனையில் இருந்து திரும்பியதாக கூறினார்.

இதன் மூலம் வேகப்பந்து வீச்சாளர் அச்சினி குலசூரியாவும் க டுமையான காயம் ஏதும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேல் தளத்தில் 4 பேர் இறந்துகிடப்பது கூட தெரியாமல் அதே வீட்டில் வசித்து வந்த வயதான பெற்றோர்!!

வயதான பெற்றோர்

உத்திரபிரதேச மாநிலத்தில் வியாபாரி ஒருவர் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொ லை செய்துவிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்த 46 வயதான சேதன் துளசியன் என்கிற வியாபாரி, மனைவி ரிது துல்சியன் (42), மகன் ஹர்ஷ் (17) மற்றும் மகள் ஆர்ஷி (15) ஆகியோருடன் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்துள்ளார். அவருடைய பெற்றோர் கீழ் தளத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பொலிஸாருக்கு போன் செய்த சேதன், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கொ ன்றுவிட்டதாகவும், தற்போது தானும் த ற்கொ லை செய்துகொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.

இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த பொலிஸார், அவருடைய வீட்டிற்கு விரைந்து சென்று கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்த சேதன் துளசியனின் தந்தை, பொலிஸ் வந்திருப்பதை பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தி கைத்துள்ளார்.

சேதன் தங்கியிருக்கும் அறையை பற்றி கேட்டறிந்த பொலிஸார், மேல் தளத்திற்கு சென்றுபார்த்த போது, கதவு உள்தாழ்ப்பால் போடப்பட்டிருந்தது.

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, சேதன் ச டலமாக தூ க்கில் தொ ங்கியுள்ளார். அதற்கு அருகில் அவருடைய மனைவி இ றந்த நிலையிலும், படுக்கையில் அவருடைய மகனும், மகளும் இ றந்த நி லையில் கிடந்துள்ளனர்.

அதன்பிறகே வீட்டில் அசம்பாவிதம் நடந்திருப்பது சேதனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நான்கு பேரின் உ டல்களையும் மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சம்பவத்திற்கான காரணம் குறித்து வி சாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

திருடப்போன வீட்டில் வேறு ஒரு பொருளை கண்டதும் அங்கேயே தங்கிய திருடன் : விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி!!

திருடப்போன வீட்டில்..

மும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குத் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் மறுநாள் காலை போலீஸிடம் சி க்கியுள்ளார்.

அடுக்கு மாடி குடியிருப்புக்கு திருட சென்ற திருடன் ஒருவன், அங்கேயே தூங்கியதால் மறுநாள் பொலிசாரிடம் சிக்கிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையில், உள்ள அடுக்குமாடிக் குடியிருந்த நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் வாங்கியுள்ளார். தனது சில பொருட்களை மட்டும் அங்கே வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காலை எழுந்த போது புது வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் சந்தேகமடைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

இதனையடுத்து, பொலிசாரிடம் புகார் தெரிவிக்க திருடனை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர், மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த சஞ்ஜீவ் என்பதும் திருடுவதற்காக சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அங்கிருந்த வெளிநாட்டு உயர்ரக ம துபானங்களைப் பார்த்து ம யங்கி அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் போ தையில் ம யங்கி அந்த வீட்டிலேயே தூங்கி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

காதலியுடன் காதலர் தினம் கொண்டாட சென்ற நபர் : மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய பரிதாபம்!!

காதலியுடன் காதலர் தினம் கொண்டாட சென்ற நபர்..

நேற்று முன்தினம் தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் செல்வதை அவதானித்த மனைவி, அவர்களை மடக்கி பிடித்து, நடுரோட்டில் கணவரை திட்டித் தீர்த்துள்ளார்.

பின்பு சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தியதில், திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

குழந்தைகள் பிறக்கும் வரை நன்றாக இருந்த கணவர் தற்போது இவ்வாறு மாறிவிட்டார் என்று மனைவி கண்ணீர் சிந்தியுள்ளார்.

ஆனால் கணவரோ மிகவும் அசால்ட்டாக காதலியை அழைத்துக்கொண்டு காதலர் தினத்தினை கொண்டாடுகின்றேன் என்று தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று சமாதானம் செய்தும் பலனில்லையாம்.

இதனால் மனைவி கொடுக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

இந்திய கடற்பரப்பில் இலங்கையர் மூவர் கைது!!

இந்திய கடற்பரப்பில்..

இந்திய கடற்பரப்பில் இலங்கையர் மூவர் நேற்று இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து க டத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து பா துகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இராமேஸ்வரம் அடுத்து உச்சிப்புளியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு சொந்தமான ரோந்து ஹெலிக்கொப்டர் நேற்று இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது

இந்திய கடற்பரப்பில் ச ந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய விசை படகுடன் நின்று கொண்டிருந்த இலங்கை படகை நோக்கி ஹெலிக்கொப்டர் தாழ்வாக சென்றதை கண்ட இந்திய படகு அங்கிருந்த த ப்பி சென்றுள்ளது.

ஆனால் இலங்கை படகு அங்கிருந்து த ப்ப முடியாமல் இந்திய கடற்படையிடம் சி க்கியுள்ளது. நடுக்கடலில் சி க்கியவர்களை இந்திய கடற்படை வீரர்கள் படகையும் அதில் இருந்த 3 பேரையும் தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு செல்லும்படி தெரிவித்தனர்.

ஆனால் படகில் இருந்தவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற போது இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிக்கொப்டரை தாழ்வாக செலுத்தி படகையும் அதிலிருந்த மூவரையும் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு கொண்டு வந்து விட்டனர்.

இதனையடுத்து அங்கு சென்ற தமிழக கடலோர காவல் குழு ஆய்வாளர் கனகராஜ் மற்றும் ராமேஸ்வரம் கடற்படை முகாம் கமென்டர் ஏ.கே தாஸ் படகில் இருந்த 3 பேரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பகுதியை சேர்ந்த லூவாஸ் அலோசியஸ், அந்தோனி சுகந், சகாய வினிஸ்ரோ என வி சாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர்கள் இலங்கையில் இருந்த மீன்பிடிக்க வந்து எல்லை தெரியாமல் இந்திய எல்லைக்குள் வந்தனரா? அல்லது இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை க டத்தி வந்தனரா? அல்லது நடுக்கடலில் தமிழக விசை படகில் இருந்து பீடி இலைகளை வாங்குவதற்காக வந்த போது இந்திய கடற்படையிடம் சி க்கினரா என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவு துறை அதிகாரிகள் தீவிரமான வி சாரணை நடத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி : இருவர் அவசர சிகிச்சை பிரிவில்!!

விபத்தில்..

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உ யிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிரிய ரக லொரியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை, நுனுகலை பகுதியைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரும் மற்றைய ஒருவரும் பலியாகியுள்ளனர்.

உ யிரிழந்தவர்களின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிரிய ரக லொரியின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.