8 வயதில் 80 வயதுக்கான முதுமையுடன் இருந்த அபூர்வ சிறுமிக்கு நேர்ந்த கதி!!

அபூர்வ சிறுமி

உக்ரைனில் 8 வயது சிறுமி மரபணு நோயால் 80 வயதான முதுமையுடன் காணப்பட்ட நிலையில் ம ரணமடைந்துள்ளார். உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது.

உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள புரோஜீரியா என்ற மரபணு நோயால் குழந்தை அன்னா பாதிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக அன்னா 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும் 7 கிலோ எடை கொண்ட அவள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் அந்த சிறுமியின் உடல் உள் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்தன. மருத்துவர்கள் கடுமையாக போ ராடியும் பலன் அளிக்காததால் சிறுமி அன்னா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கண்ணீருடன் அவரின் தாய் இவானா கூறுகையில், என் மகளை நல்ல உடல் நலத்துடன் இருக்க வைக்க, எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் எங்களை விட்டு அவள் சென்றுவிட்டாள் என கூறியுள்ளார்.

இந்திய இளைஞனிடம் மனதை பறிகொடுத்த இலங்கைப் பெண் : முதலாமாண்டு திருமண நாள் கொண்டாட்டம்!!

இந்திய இளைஞனிடம்..

இலங்கையை சேர்ந்த பெண்ணும், இந்திய இளைஞரும் டுவிட்டர் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த் பிரகாஷ் (27). இவர் கடந்த 2015-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்ட ஒரு டுவீட்டை லைக் செய்தார். அதே டுவீட்டை இலங்கையை சேர்ந்த ஹன்சினி எதிர்சின்கே (26) என்ற பெண்ணும் லைக் செய்தார்.

பின்னர் ஹன்சினி டுவிட்டர் பக்கத்தில் அவருடன் கோவிந்த் நட்பு பாராட்டிய நிலையில் அது காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகள் கழித்து 2017ல் ஹன்சினி இந்தியாவுக்கு வந்த நிலையில் முதல்முறையாக பிரகாஷை சந்தித்தார்.

இந்நிலையில் இரு குடும்பத்தார் சம்மதத்துடன் பிரகாஷ் – ஹன்சினி திருமணம் கடந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. இந்த சூழலில் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் தங்கள் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடினார்கள்.

இதையடுத்து டுவிட்டரில் எங்களை இணைத்த நல் உள்ளங்களுக்கு நன்றி என புகைப்படங்களுடன் இருவரும் பதிவிட்டுள்ளனர்.

எனது விவகாரத்துக்கு காரணம் நடிகர் தனுஷா? அமலாபால் அதிரடி பதில்!!

அமலாபால்

நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தனுஷ் தனது படத்தில் அமலாபாலை நடிக்க வைத்ததால் திருமணம் முறிந்ததாக வதந்திகள் பரவியது.

இது குறித்து நடிகை அமலாபாலிடம் தனியார் நிகழ்ச்சியின் பேட்டி ஒன்றில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை அமலாபால்,

எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது வந்து கேட்கிறீர்கள். எனது விவாகரத்து சர்ச்சை தேவை இல்லாதது. அது எனது சொந்த விஷயம். விவாகரத்து வாங்கிய முடிவு முழுக்க என்னுடையதுதான்.

அதற்கு வேறு யாரும் பொறுப்போ காரணமோ இல்லை. வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தனுஷ் எனது நலம் விரும்பி. இந்த விஷயத்தில் வேறு எதையும் என்னிடம் கேட்காதீர்கள். இதை விட அதிகமாக பேசவும் நான் விரும்பவில்லை என பதிலளித்துள்ளார்.

200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலத்த காயம்!!

முச்சக்கரவண்டி விபத்து

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

தலவாக்கலை ட்ரூப் தோட்ட பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று இரவு தலவாக்கலை – ட்ரூப் பிரதான வீதியில் ட்ரூப் பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு க டத்தப்பட்ட 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!!

2 கோடி மதிப்பிலான தங்கம்

இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர்களான மன்னார் பகுதியை சேர்ந்த லூவாஸ் அலோசியஸ், அந்தோனி சுகந், சகாய வினிஸ்ரோ ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்திய விசைபடகில் இருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த லட்சுமணன், தியோனியஸ், சர்வேஸ்வரன் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது, கைது செய்யப்பட்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் விசாரணையில், இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்க கட்டிகளை க டத்தி வந்து தங்களிடம் கொடுக்கும் போது கடற்படை ஹெலிகொப்டர் வந்ததால் தாங்கள் விசைபடகுடன் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து ஒன்று சுமார் 100 கிராம் வீதம், 3 .5 கிலோ நிறையுடைய 35 தங்க கட்டிகளை தலைமன்னாரில் இருந்து க டத்தி வந்ததாகவும் கடற்படை கைது செய்ததால் தங்கத்தை படகில் மறைத்து வைத்திருப்பதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

படகில் ரகசிய அறையில் பதுக்கி வைத்து இருந்த தங்கத்தை ப றிமுதல் செய்த ராமேஸ்வரம் பொலிஸார் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பறிமுதல் செய்ப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவிகளுக்கு பா லியல் ராக்கிங் கொடுத்தவர்களுக்கு பொலிஸ் பா துகாப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பா லியல் ரீதியான ராக்கிங் கொ டுமையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மாணவர்களின் வீடுகளுக்குப் பொலிஸ் பா துகாப்பு வழங்குவது தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி வளாகத்தின் புதுமுக மாணவிகளுக்கு அலைபேசி ஊடாக பா லியல் து ன்புறுத்தல் விடுத்ததாக இரண்டாம் வருட மாணவர்கள் மீது கு ற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பில் 10 பேர் கொண்ட விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது. அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக இரண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழத்துக்குள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த மாணவனின் வீடு மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாதோர் அ டித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து மாணவனின் பெற்றோர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். தமது மகனுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டுள்ளது.

ப கிடிவ தையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு பொலிஸ் பா துகாப்பு வழங்கக் கோரவேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு கடந்த வாரம் இரண்டு தடவைகள் கிளிநொச்சிக்குச் சென்று மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதன்போது, கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை இல்லை, மலசலகூடம் ஒழுங்காக இல்லை என்று மாணவர்கள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்துள்ளதுடன், ப கிடிவ தை தொடர்பான விசாரணையை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

கிளிநொச்சி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ப கிடிவ தைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனுடன் தொடர்புடைய மாணவி, பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் என்றும், அவருக்கு எதிராக வகுப்புத் தடை விதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டபோதும் தொழில்நுட்பப் பீடத்தின் உயர்மட்டத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.

ஆபிரிக்க வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து!!

வெட்டுக்கிளிகள்

ஆபிரிக்காவில் உள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து இருப்பதால், கமத் தொழிலாளர்கள் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என கமத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளி தொடர்பான விபரங்கள் மற்றும் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விதம் குறித்து இன்று முதல் கமத்தொழிலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும்,

வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக திணைக்களத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளரான உதவி கமத்தொழில் பணிப்பாளர் சனத் எம். பண்டார தெரிவித்துள்ளார்.

கூட்டமாக இந்த வெட்டுக்கிளிகள் திரியும். அவை மரங்களில் உள்ள பட்டைகள், பயிர்களை பெருமளவில் அழிக்கும்.

ஆபிரிக்காவில் இருக்கும் வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், காற்றின் ஊடாக இலங்கைக்கு வரும் ஆபத்து இருக்கின்றது.

கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் காணப்பட்டால், உடனடியாக அது குறித்து பிரதேசத்தில் உள்ள கமத்தொழில் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் சனத் எம். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

யாழிலிருந்து சென்ற லொறிக்கு நேர்ந்த கதி!!

லொறிக்கு நேர்ந்த கதி

யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி பயணித்த லொறி ஒன்று புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ள புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் காதலர் தின இரவு விருந்து : 200 பல்கலைக்கழக மா ணவர்கள் சி க்கினர்!!

காதலர் தின இ ரவு வி ருந்து

காதலர் தினத்தை முன்னிட்டு கண்டியில் உள்ள பிரபல வி டுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பே ஸ்புக் வி ருந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளவிருந்த 200 பல்கலைக்கழக மா ணவர்கள் கை து செய்யப்பட்டு, அவர்களில் 18 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் வி டுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (16.02) காலை ம துவரி திணைக்கள அதிகாரிகளின் வி சேட சோ தனை நடவடிக்கையின் போதே மேற்படி பல்கலைக்கழக மா ணவர்கள் கை து செய்யப்பட்டனர்.

இவர்களில் 18 ந பர்களிடமிருந்து போ தைப்பொருள் கைப்ப ற்றப்பட்டதையடுத்தே அவர்கள் அனைவரும் தொடர்ந்து கா வல் நிலையத்தில் த டுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 18 பேரிடமிருந்து ஹெ ரோயின், க ஞ்சா, ஐஸ் ர க போ தைப்பொருள் மற்றும் வேறு சில போ தைப் பொருட்களையும் காவல்துறையினர் ப றிமுதல் செய்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதைப் படியுங்கள்!!

கட்டாயம் இதைப் படியுங்கள்

ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது.

நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில் நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும். இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 40 லட்சம் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் இயற்கையான சுழற்சி ஆகும்.

முக்கியமாக மெலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.

இந்த மெலோட்டலின் ஹார்மோனை செயற்கையாக எந்த மாத்திரை சாப்பிட்டும் சுரக்க வைக்க முடியாது. தற்போது இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பார்ப்பவர்கள், தூங்காமல் தொலைக்காட்சி அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.

இந்த மெலோட்டலின் ஹார்மோன் சுரக்காமல் இருப்பதால் உண்டாகும் பாதிப்பு இளம்வயதினருக்கு உடனடியாக தெரிந்து விடாது. ஆனால், உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும்.

முதலில் செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே இரவு தூக்கம் மிக மிக முக்கியமானதாகும்.

இலங்கைப் பெண்ணை நாடு க டத்த வேண்டாம் : சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு!!

இலங்கைப் பெண்..

இலங்கை பெண்ணொருவர் நாடு க டத்தப்படுவதற்கு சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண் இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், அவரின் இந்திய பிரஜாவுரிமைக்கான விண்ணப்பம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே தாம் நாடு க டத்தப்படலாம் என்ற அ ச்சத்தில் அந்த பெண் இருந்து வந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் அவரின் விண்ணப்பத்தை முன்னுரிமை முறையில் பரிசீலிக்குமாறு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார். இந்த மனுவை வீரன் மனோன்மணி என்ற பெண் 2018ஆம் ஆண்டு தா க்கல் செய்தார்.

2003ஆம் ஆண்டு இந்தியர் ஒருவரை மணம் புரிந்த இந்த பெண் இந்திய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அந்த விண்ணப்பத்திற்கு இது வரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே இதற்கிடையில் இந்திய அதிகாரிகள் தம்மை நாடு க டத்தி விடுவர் என்று அ ச்சம் ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குடும்பப் பெ ண் மீ து க த்திக் கு த்து!!

வவுனியாவில்..

வவுனியா – சாளம்பைகுளம் பகுதியில் க த்திக் கு த்துக்கு இ லக்காகிய கு டும்பப் பெ ண் கா யமடைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெ ண் நேற்று மாலை வீட்டில் இருந்த சமயம் அ வரது க ணவரின் உ றவினர் க த்தியால் அ வரை கு த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ப டுகா யமடைந்த பெ ண் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

ச ம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இ ரு பி ள்ளைகளின் தா யே ப டுகாயம டைந்துள்ளார். க த்திக் கு த்தை மேற்கொண்டவர் ம னநலம் பா திக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. ச ம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் பகுதியில் வீதி விபத்து : ஒருவர் ப லி, மற்றுமொருவர் வைத்தியசாலையில்!!

வீதி விபத்து

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ப லியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகரைப் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்துடன் மோட்டார்சைக்கிளொன்று மோதியதிலே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் பின் பக்கத்தில் அமர்ந்து சென்றவரே விபத்தில் ப லியாகியுள்ளதுடன், மற்றையவர் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகன விபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீல் என்பவரே உ யிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் பழைய கல்முனை வீதி கல்லடியைச் சேர்ந்த கி.லக்மன் (வயது 33) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு ஒன்றில் எரிபொருளுக்காக இலங்கை இளைஞன் செய்த மோசமான செயல்!!

இலங்கை இளைஞன்..

ஜப்பானில் மோ சடியான முறையில் எரிபொருள் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இலங்கையர் வேறு நபர்களுடன் இணைந்து இன்னொருவரின் கடன் அட்டையை பயன்படுத்தி மோ சடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

ஜப்பானின் இபாரகி பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் 40000 லீட்டர் எரிபொருள் மோ சடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளனர். இது தொடர்பில் டொக்கியோ பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த பிராந்தியத்தில் உள்ள 10 எரிபொருள் நிலையங்களில் 4 மில்லியன் யென்னிற்கு அதிகமான தொகை பெறுமதியிலான எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கையர் 20 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவில் தொழில் செய்ய விரும்புவோருக்கு முக்கிய தகவல்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிற் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதனால் அடுத்தாண்டு முதல் இந்த நடைமுறை அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக வெளியேறினாலும், மாற்றங்கள் கொண்டு வருவதற்கான காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நடைமுறையில் உள்ளது.

இதன்படி, அடுத்தாண்டு முதல், அனைத்து தொழிலாளர்களும் பிரித்தானியாவில் தொழில் செய்ய போதுமான புள்ளிகளைப் பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆங்கிலம் பேசவும், உறுதியான வேலை வாய்ப்பைக் கொண்டிருத்தல், சம்பளத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பா லியல் தொ ல்லை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மா ணவிகள் சிலருக்கு அலைபேசியில் பா லியல் தொ ல்லை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் மற்றும் தரவுகளை இணைப்பு வழங்குநரான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தொழிநுட்ப பீட நிர்வாகத்தால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் பொலிஸார் தா க்கல் செய்த கு ற்றச்செயல் தொடர்பான அறிக்கைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்பப்பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலர் ப கிடிவ தை என்ற போர்வையில் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பா லியல் தொ ல்லை ஏற்படுத்தினர் என்ற கு ற்றச்சாட்டு பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த விசாரணைக்கு மேலதிகமாக கு ற்றச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தொழிநுட்ப பீட நிர்வாகத்தால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அந்த முறைப்பாட்டில் கு ற்றச்செயல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் அலைபேசி இலக்கங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டில் கோரப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் – தரவுகளை அவற்றின் இணைப்பு வழங்குநர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் கு ற்றச்செயல் ஒன்று தொடர்பான அறிக்கையைத் தா க்கல் செய்தனர்.

அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் – தரவுகள் அறிக்கையை வழங்க கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ரி.சரவணபவராஜா, அலைபேசி இணைப்பு வழங்குநர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.