யாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவ தை : ராக்கிங்கில் ஈடுபட்ட கலைப்பீட மாணவன் அ திகாரிக்கு மி ரட்டல்!!

யாழ். பல்கலையில்..

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பா லியல் ப கிடிவ தை விவகாரம் அடங்கும் முன்னரே மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

ப கிடிவ தை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் த வறான முடிவு எடுத்து உ யிரிழக்க மு யற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் கா ப்பாற்றப்பட்டான்.

ப கிடிவ தையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரி, மாணவனால் மி ரட்டப்பட்ட தையடுத்து அவர் பதவி வி லகல் கடிதத்தை யாழ். பல்கலையின் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் கையளித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமாணவனை, மூத்த மாணவர்கள் ப கிடிவ தைக்கு உ ட்படுத்தியுள்ளனர். இதனால் ம னமுடைந்த புதுமுக மாணவன் தான் உ யிரிழக்கப் போவதாக சக மா ணவர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியுள்ளார். சக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

ப கிடிவ தையில் ஈடுபட்ட மாணவன் விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார். விசாரணையின் போது, புறொக்டரை (பிரதான முறைப்பாட்டு அதிகாரி) மி ரட்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனின் அ தட்டலையடுத்து தான் பதவியிலிருந்து விலகுவதாக, புறொக்டர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு நேற்றுமுன்தினம் மாலையே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை, மி ரட்டிய மாணவனை அழைத்து, புறொக்டரிடம் மன்னிப்புக் கோருமாறு தகுதி வாய்ந்த அதிகாரி கோரினார்.

மாணவன் மன்னிப்புக் கோரியதையடுத்து, புறொக்டர் தனது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுள்ளார். மாணவனுக்கு எந்தவொரு த ண்டனையும் விதிக்கப்படவில்லை.

-தமிழ்வின்-

வவுனியாவில் புதையல் தோண்டிய இருவருக்கு நேர்ந்த கதி!!

புதையல் தோண்டிய..

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் புதையல் தோண்டினர் என்ற கு ற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் போராளி உட்பட இரண்டு பேரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

நேற்று மாலை கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் புதையல் தோண்டுவதற்கு தயாராக இருந்த இரண்டு பேரை கைதுசெய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார், அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் ஆயுதங்கள் உள்ளிட்ட பூசணிக்காய் போன்றவற்றையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யபட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 கிலோ தங்கம் யாழ். கடற் பகுதியில் மீட்பு!!

யாழ். கடற் பகுதியில்

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ்ப்பாண, மாதகல் கடல் பிரதேசத்தில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

க டத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே இந்த தங்கம் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீ ட்கப்பட்ட தங்கத்தின் நிறை 14.35 கிலோகிராம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யார் என்ற விடயத்தை கடற்படையினர் இன்னும் வெளியிடவில்லை.

காதலர் தினத்தன்று மனைவியின் இதயத்தை தானமாக கொடுத்த கணவர்!!

காதலர் தினத்தன்று..

பிப்ரவரி 14. காதலர்களிற்கு மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த கவுதமராஜிற்கு மறக்க முடியாத சோகத்தினை ஏற்படுத்தியநாளாக அமைந்து விட்டது கடந்த 2019, பிப்ரவரி 14.

பெங்களூருவில் இன்ஜினீயராக பணியாற்றி வரும் கவுதமராஜிற்கும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கோகிலாவிற்கும், 2018 மே மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணமான பின்னர் காதலிக்கத் தொடங்கிய இந்த தம்பதியின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியின் அர்த்தமாக கோகிலா கர்ப்பமானார். கோகிலா ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதை நினைத்து இருவரும் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி அவர்கள் வாழ்வில் நீடிக்கவில்லை.

ஏனெனில் கர்ப்ப காலத்தில் திடீரென கோகிலாவின் உடல் எடை குறையத் தொடங்கிய நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் எடைக் குறைவு கோகிலாவின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து , வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்தவருடம் பெப்ரவரி 4 ஆம் திகதி கோகிலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர க ண்காணிப்பில் இருந்த கோகிலாவுக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவக் குழுவினர், 7 ஆம் திகதி உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

கோகிலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. எனினும் குழந்தையின் எடை இரண்டு கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் குழந்தையும் மருத்துவர்கள் க ண்காணிப்பில் வைக்கப்பட்டது.

குழந்தையை வெளியே எடுத்த பின்னரும் கோகிலா சுயநினைவின்றி இருந்ததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இந்த நிலையில் தான் கோகிலா குடும்பத்தினர் மற்றும் கவுதம்ராஜ் தலையில் இடியாய் வந்து விழுந்தது மருத்துவர்கள் சொன்ன தகவல்.

பிப்ரவரி 14ம் தேதி கோகிலாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. செய்வதறியாது கவுதமராஜ் மற்றும் குடும்பத்தினர் க தறி அ ழுதனர். எனினும் மனைவியின் இந்த நிலையை நினைத்து துக்கத்திலும் துணிவான ஒரு முடிவை எடுத்தார் கவுதமராஜ்.

எப்போதுமே நம்மால் முடிந்தவற்றை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என அடிக்கடி கணவரிடம் கூறிவந்துள்ளார் கோகிலா. இதனால் காதல் மனைவியின் விருப்பம் போலவே அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தார் கவுதமராஜ்.

கோகிலா யாருக்குமே கஷ்டம் கொடுக்க நினைத்ததில்லை, நம்மால் முடிந்த 1 ரூபாயோ 2 ரூபாயோ கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வா, இன்னைக்கு அவள் உடல் முழுவதையுமே தானமாக கொடுத்திருக்கிறாள்.

இதயம், கணையம், நுரையீரல், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டுள்ளது. ”என்னைப் பொறுத்தவரையில் கோகிலா இ றக்கவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

காதலர் தினமான இன்று எனக்கு அவளின் இதயத்தில் வாழத் தகுதி இல்லை கோகிலாவின் இதயம் வேறு எங்கேயோ துடித்துக் கொண்டிருக்கிறது.” என்று க ண்ணீர் வடிக்கிறார் கவுதமராஜ்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்..

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு வழங்கும் ஆதரவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்களின் பிள்ளைகளின் செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணிகளை தேடி தரும் தரப்பாக வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களை கருத வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேச முன்னேற்ற நிலமைகள் தொடர்பாக ஆராய்வு!!

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

புதிய ஆண்டுக்கான முதலாவது வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும்,

அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வீட்டுத்திட்டம், மணல் அகழ்வு, வீதி புனரமைப்பு, காணி உறுதிப் பத்திரம் வழங்கல், நெற்கொள்வனவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் பிரேம்,

வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸார் உட்பட கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் கிராமத்திற்கு தகவல் உரிமை : RTI நடமாடும் சேவை!!

RTI நடமாடும் சேவை

வெகுசன ஊடகத்துறை அமைச்சு மற்றும் பெப்ரல் ( AFRIEL) இளைஞர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவை கருத்தரங்கு வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (14.02.2020) காலை நடைபெற்றது.

கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவையின் மூலமாக தகவல் சட்டம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தல் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கல் என்பன இடம்பெற்றன.

அத்துடன் தகவல் கோரும் படிவம் பூரணப்படுத்துதல் மற்றும் பொது நிறுவனங்களை உறுதியாக அடையாளம் காண்பது தொடர்பில் பிரசைகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது.

ஏப்ரியல் இளைஞர் வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரவீந்திர டீ சில்வா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , ஊடக அமைச்சின் உதவி செயலாளர் எம்.பி பண்டார மற்றும் ஊடக அமைப்பின் உயர் அதிகாரிகள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன்,

ஏப்ரியல் இளைஞர் வலையமைப்பின் ஊழியர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காதல் திருமணம் : ஒற்றை மகளுக்காக ஆண் வேடமிடும் இளம் தாயார் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

நெகிழ வைக்கும் சம்பவம்

காதலித்து திருமணம் செய்து கொண்டவர் கர்ப்பிணியாக கைவிட்ட நிலையில், இளம் தாயார் ஒருவர் தமது மகளுக்காக நாள் தோறும் ஆண் வேடமிட்டு வருகிறார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் பரபரப்பான தெரு ஒன்றில் ஆண் வேடத்தில் கடை ஒன்றை நடத்தி வருகிறார் 41 வயதான ஃபர்ஹீன் இஷ்தியாக்.

காதலித்து கரம்பிடித்த கணவர் கைவிட்ட நிலையில், தமது 9 வயது மகளின் எதிர்காலம் கருதி, இஸ்தியாக் ஆண் வேடமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கராச்சி நகரை சேர்ந்தவர் தற்போது 41 வயதாகும் ஃபர்ஹீன் இஷ்தியாக். கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோரின் எ திர்ப்பையும் மீறி வேறு பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து கரம்பிடித்துள்ளார்.

கூடிய விரைவிலேயே இஷ்தியாக் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கர்ப்பிணியான இஸ்தியாக்கை விட்டு, அந்த நபர் திடீரென்று ஒரு நாள் மா யமாகியுள்ளார்.

இந்த சம்பவங்களால் மொத்தமாக உடைந்து போன இஷ்தியாக் அரசு மருத்துவமனை ஒன்றில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம் பிள்ளை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, தாம் இறந்தால் தமது பிள்ளையை தனது பெற்றோரிடம் ஒப்படைக்கவே மருத்துவர்களிடம் தெரிவித்ததாக கூறும் இஷ்தியாக்,

இந்த காலகட்டங்களில் எப்போதும், தமது குடும்பத்தாரால் எந்த உதவியும் தமக்கு கிடைக்கவில்லை என்றார்.

குழந்தை ஸஹ்ரா பிறந்த பின்னர், தமது கசப்பான அனுபவங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மகளுக்காக வாழ முடிவு செய்துள்ளார் இஷ்தியாக்.

இதனையடுத்து தமது பெற்றோரை நாடிய அவர், தம்மை மகளாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், ஆனால் உங்கள் பேரக்குழந்தையை கைவிட்டு விட வேண்டாம் என வாதிட்டுள்ளார்.

இஷ்தியாக்கின் நிலை கண்டு பரிதாபமடைந்த அவர்கள் ஸஹ்ராவுக்கு நான்கு வயதாகும் வரை கவனித்துக் கொண்டுள்ளனர்.

இந்த நேரத்தில், இஷ்தியாக் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் தனது மகளுடன் தங்க நிரந்தர தீர்வையும் திட்டமிட்டார். இதனையடுத்து லாகூர் நகரில் பரபரப்பான அனார்கலி பஜாரில் கடை ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆனால் பெண் ஒருவரால் அந்த பஜாரில் தனித்து இயங்க முடியாது என்ற சூழல் உருவானதாக கூறும் இஷ்தியாக்,

இறுதியில் ஆண் வேடமிட்டு அங்குள்ள ஆண்களை சமாளிக்க முடிவு செய்துள்ளார். பஜாரில் தமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே தாம் பெண் என அடையாளம் தெரியும் என கூறும் இஷ்தியாக், பொதுவாக வேறு எவரும் தம்மை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்கிறார்.

தொடர்ந்து படிப்படியாக நிதி திரட்டிய இஷ்தியாக் தற்போது அனார்கலி பஜாரில் சொந்தமாக கடை ஒன்றை திறந்துள்ளார்.
மட்டுமின்றி தமக்கிருக்கும் கடன்களை சமாளிக்க காலை வேளைகளில் பெண்களுக்கான சாரதியாகவும் இஷ்தியாக் செயல்பட்டு வருகிறார்.

எங்களால் உ யிர் த ப்பியிருக்கவே முடியாது : மொத்த குடும்பத்திற்கும் ஹீரோவான 5 வயது சிறுவன்!!

5 வயது சிறுவன்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தீயில் சி க்கிய குடியிருப்பில் இருந்து 5 வயது சிறுவன் செல்ல நாய் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கா ப்பாற்றி அந்தப் பகுதியின் ஹீரோவாக மாறியுள்ளான்.

ஜார்ஜியா மாகாணத்தின் பார்தோ கவுண்டியில் ஞாயிறன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென்று அந்த குடியிருப்பில் தீ கொழுந்துவிட்டு எ ரிந்துள்ளது. உறக்கத்தில் இருந்த 5 வயது சிறுவன் பார்வையில் இது விழுந்துள்ளது.

உடனடியாக அந்தச் சிறுவன், தமது அறையில் தூக்கத்தில் இருந்த 2 வயது தங்கையுடனும் செல்ல நாயுடனும் ஜன்னல் வழியாக கு தித்து த ப்பியுள்ளான். தொடர்ந்து தமது மாமா தூங்கும் அறைக்கு சென்று அவரை எழுப்பியுள்ளான். அவர் எழுந்து மொத்த குடும்பத்தையும் கா ப்பாற்றியுள்ளார்.

சிறுவன் நோவா இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை என கண் க லங்கியுள்ளார் சிறுவனின் தாத்தா டேவிட் உட்ஸ். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர்,

சிறுவன் நோவா உள்ளிட்ட 4 குடும்ப உறுப்பினர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர். வெறும் 5 வயது சிறுவன், பயப்படாமல் தமது சகோதரியையும், செல்ல நாயையும் கா ப்பாற்றியதுடன், மொத்த குடும்பத்தையும் ஆபத்தில் இருந்து தப்ப வைத்துள்ளது,

தற்போது பார்தோ கவுண்டியில் பேசு பொருளாக மாறியுள்ளது. சிறுவன் நோவாவுக்கு அங்குள்ள தீயணைப்பு துறை ஆதரித்து விருது வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இதனிடையே உட்ஸ் குடும்பத்தாரின் குடியிருப்பு மொத்தமாக சேதமடைந்த சம்பவத்தில், பொதுமக்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு?

எரிபொருள் விலைகள்

அடுத்த மாதம் எரிபொருள் விலையில் மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

உலக சந்தையில் தற்போது எரிபொருட்களின் விலை குறைந்துள்ள நிலையிலேயே இலங்கையிலும் எரிபொருட்களின் விலை மீளாய்வு செய்யப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் செஹான்சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் இருந்தே எரிபொருளின் விலை உலக சந்தையில் குறைந்துள்ளது. இது நீடித்தால் அதன் நன்மையை பொதுமக்களுக்கு வழங்கமுடியும் என்று சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலக சந்தையில் எரிபொருட்கள் விலை உயர்வு பெற்றிருந்தபோதும் அரசாங்கம் விலையை அதிகரிக்காமல் அதே விலையிலேயே எரிபொருளை விநியோகித்து வந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாகவே தற்போது எரிபொருளின் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் ராஜாங்க அமைச்சர் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

யாழ்ப்பாணம் விமான நிலையம்..

யாழ்ப்பணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கான விமான பயணத்துக்காக அறவிடப்படும் வரிக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய வரிக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகாாிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமானப் பயணத்திற்காக பயணிகளிடம் அதிகளவு வரி அறவிடுவதாக துறைசார் அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்குப் பயணங்களை மேற்கொள்வோரிடம் விமான நிலைய வரியாக ஆறாயிரம் ரூபா அறவிடப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபா அறவிடப்படுகிறது.

இந்த செயற்பாடானது வடபகுதி மக்களுக்கு இழைக்கும் அநீதியானது என, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இணைவாக உள்ளக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், விமான பயண வரி தொகையை குறைக்கவும் அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

சீக்கிரம் வாங்கண்ணா : கெஞ்சி கெஞ்சி உ யிரைவி ட்ட இளைஞர்!!

இளைஞர்..

தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உ யிருக்கு போ ராடிய இ ளைஞர் ஒருவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து பேசும் ஓடியோ வெளியாகி ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், கீரை மண்டபம் பகுதியில் வசிக்கும் நடராஜ் என்பவரின் மகன் கணேஷ்குமார்.

கல்லூரி மாணவரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பச்சையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றிருக்கிறார். மாலை வரை கிரிக்கெட் விளையாடி முடித்ததும் தண்ணீர் குடித்த கணேஷ்குமாருக்கு மூ ச்சுத் தி ணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக இ றந்துவிட்டார்.

இவர் இறந்து நான்கு நாட்கள் ஆன நிலையில் கணேஷ்குமாரின் செல்போனை பரிசோதித்து பார்த்த போது கடைசியாக 108க்கு போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் கால் ரெக்கார்டை கேட்ட போது பெற்றோருக்கு அ திர்ச்சி காத்திருந்தது.

உ யிருக்கு போ ராடிய நேரத்தில் 108 அழைத்த கணேஷ்குமார், “நான் பச்சையப்பன் ஸ்கூல் கிட்ட இருக்கிறேண்ணா… மூச்சு முட்டுது கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா…“

`பக்கத்தில் இருக்கிறவங்க யாரிடமாவது கொடுங்க….” “யாருமே இல்லைண்ணா… கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா… முடியலண்ணா…” “சீக்கிரம்னா எங்கிருந்து வருவது…? நீங்க எங்க இருக்கீங்கன்னு தெளிவா சொல்லுங்க… ப யப்படாதீங்க… பக்கத்துல இருக்கறவங்க கிட்ட கொடுங்க…. பக்கத்துல யாருமே இருக்கமாட்டாங்களா?”

“யாருமே இல்லைண்ணா…“ “பச்சையப்பாஸ் ஸ்கூல்… மூங்கில் மண்டபம்ணா..” “எங்கிருக்கிறது?“ “காஞ்சிபுரம்ணா… கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா…“

“பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட கொடுங்க“ “யாருமே இல்லைண்ணா…” “நீங்கதான் பக்கத்தில் யாராவது இருக்காங்கன்னு பார்க்கனும்… டக்குன்னு நடந்துபோய் யாரையாவது கால்பண்ணச் சொல்லுங்க…“ இப்படியாக முடிகிறது அந்த ஓடியோ.

சுமார் 16 நிமிடங்கள் போ ராடி உ யிரை விட்டிருக்கிறான் கணேஷ்குமார், ஒருவேளை 108 ஆம்புலன்ஸ் மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் தங்களது மக னின் உ யிரை கா ப்பாற்றி இருக்கலாம் என கதறுகின்றனர் அவனது பெற்றோர்.

இனிமேலும் இதுபோன்று அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் க ண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடிகை சபர்ணாவின் த ற்கொ லைக்கான காரணம் : 4 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட தோழி!!

நடிகை சபர்ணா

முன்னாள் பிரபல சீரியல் நடிகையின் த ற்கொ லைக்கான காரணத்தை அவரது தோழி 4 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளார்.

நடிகை சபர்ணா 2016ஆம் ஆண்டு வீட்டில் நி ர்வாண நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். முதலில், அவர் கொ லை செய்யப்பட்டதாக பல தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது த ற்கொ லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

அவர், திடீரென்று த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பொலிசார், அவரது த ற்கொ லைக்கான காரணங்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சீரியல் நடிகை உஷா எலிசபெத் சபர்ணாவின் த ற்கொ லை குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் “சபர்ணாவுக்கு நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தன்னிடம் கூறி வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் பல நாட்களாக மன உ ளைச்சலில் இருந்ததாகவும், ஆனால் பல முறை எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியும் அவர் த ற்கொ லை முடிவை எடுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். இது நடிகர்கள் வட்டாரத்தில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமான சபர்ணா, சீரியர்களில் வில்லியாகவும், சில திரைப்படங்களில், தோழியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறுவடை செய்யும் இயந்திரம் குடை சாய்ந்து விழுந்து விபத்து : சாரதி பலத்த காயம்!!

விபத்து.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடை சாய்ந்து விழுந்ததில் இயந்திரத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த அஸாம் முகம்மட் என்னும் வயதுடைய சாரதியாவார்.

வேளாண்மை அறுவடை செய்வதற்காக உழவு இயந்திரத்திலிருந்து இறக்குவதற்கு முயன்றபோதே குறித்த இயந்திரம் குடை சாய்ந்து விழுந்துள்ளதாகவும், இயந்திரம் தலை கீழாக விழுந்ததினாலே சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குடைசாய்ந்த இயந்திரத்தினை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் காதலர் தினத்தினை முன்னிட்டு நிலாவின் பாடல் வெளியீடு!!

பாடல் வெளியீடு

ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் எங்கிலும் காதலர் தினம் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன் நிலா என்பவர் பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த பாடல் வெளியீடு செய்யும் நிகழ்வு வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (14.02.2020) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த பாடலின் இறுவட்டினை பாடல் ஆசிரியர் நிலா வெளியிட்டு வைத்தார். குறித்த பாடல் நிலா மற்றும் நிரோசன் ஆகியோரின் குரலில் பிரதீபனின் காணொளி உருவாக்கத்தில் கார்த்திக் எடிட்டிங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியை மட்டுமே பயன்படுத்தி குறித்த பாடலுக்கான காணொளி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் அடையாளந்தெரியாத பெண் ஒருவரின் ச டலம் மீட்பு!!

பெண் ஒருவரின் ச டலம்..

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் அடையாளந்தெரியாத வயோதிப பெண் ஒருவரின் ச டலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்மடு கடற்கரை பகுதி மீனவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய 50 மற்றும் 60 வயதிற்கும் இடைப்பட்ட வயோதிப பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் ச டலம் வேறு பகுதியில் இருந்து கல்மடு கடற்கரைக்கு அலைகள் மூலம் கரையொதுங்கி இருக்கலாம் என்றும், சடலத்தை அடையாளம் காணும் பணியில் கல்குடா பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த் தெவித்துள்ளார்.

இதேவேளை, உ யிரிழந்தவரின் ச டலத்தினை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.