யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்து நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸினால் (கொவாட்19) பாதிக்கப்பட்ட சீனாவின் யுஹான் மாகாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் 33 பேரும் இன்று மருத்துவக் க ண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த முதலாம் திகதி சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட சிறப்பு க ண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இவர்களிடம் கொரோனாவைஸ் தொற்று இல்லை என்ற உறுதிப்பாடு கிடைத்துள்ளமையை அடுத்தே அவர்கள் தியத்தலாவ முகாமில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர்கள் அக்குரேகொடயில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைக்கு அருகில் காதலர் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் கடும் எ திர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாநகர சபைக்கு எ திராக மக்கள் தங்கள் எ திர்ப்பை வெளியிட்டுள்ளனர். பாடசாலைக்கு அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த கடைகள் திக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து காதலர் தினத்திற்காக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மாணவர்களை பா திக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கடைத் தொகுதிகளுக்கு, மாநகர சபைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் மக்கள் எ திர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்த கடைகளில் மாணவர்கள் காதலர் தின பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஆரம்பித்ததனை தொடர்ந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு இது தொடர்பில் மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும் அந்த கடைகைளை அகற்றுவதற்கு யாழ். மாநாகர சபை நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள் கோ பமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொவருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விமான நிலைய குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த போதே இவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வவுனியா முருகனூர் பகுதியில் இன்று (14.02.2020) காலை 10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் கணவர் படுகாயமடைந்ததுடன் மனைவி ப லியாகியுள்ளார்.
விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
முருகனூர் பகுதியிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் கணவன் (சாரதி) மற்றும் மனைவி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முருகனூர் பகுதியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இவ் விபத்தில் மனைவி உ யிரிழந்ததுடன் கணவன் படுகாயமடைந்த நிலையில் 1990 அவரச அன்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
குறித்த விபத்தில் வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த தர்சினி வயது 25 என்ற பெண்ணே உ யிரிழந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களிற்கு முன்னரே திருமணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.
வவுனியா குடியிருப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று (14.02.2020) காலை பெ ண்ணின் ச டலமொன்றினை பொ லிஸார் மீ ட்டெடுத்துள்ளனர்.
ஆலய வளாகத்திற்கு அருகே பெ ண்ணின் ச டலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கினங்க சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் பெ ண்ணின் ச டலத்தினை மீ ட்டெடுத்துள்ளனர்.
அத்துடன் த டயவியல் பொ லிஸார் மற்றும் நீதவான் பார்வைக்காக ச டலம் காணப்படும் இடத்தினை சுற்றி பொலிஸ் பா துகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குடியிருப்பு – பூந்தோட்டம் வீதிக்கான குளக்கட்டு வீதி போக்குவரத்துத்துக்கு பொலிஸார் தற்காலிக தடை விதித்துள்ளனர்.
மேலும் உயி ரிழந்த பெண் வவுனியா நகரில் யாகசம் பெறும் பெண் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானியா தலைநகர் லண்டனிலிருந்து துருக்கி ப யணித்த வி மானத்தில் ர களையில் ஈ டுபட்ட பெ ண்ணுக்கு இ ரண்டு ஆ ண்டுகள் சி றை த ண்டனை வி தித்து செல்ம்ஸ்ஃபோர்டு நீ திமன்றம் தீ ர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆ ண்டு ஜூன் மாதம் லண்டனிலிருந்து துருக்கி ப யணித்த ஜெ ட் ஸ் டார் நி றுவனத்திற்கு சொந்தமான வி மானத்திலே இச்ச ம்பவம் ந டந்துள்ளது. வி மானம் பு றப்பட்ட நி லையில் ம துபோ தையில் ப யணித்த பிரித்தானியாவைச் சேர்ந்த 26 வ யதான சோலி ஹைன்ஸ் என்ற பெ ண், பை லட் அ றைக்குள் நு ழைய மு யன்றுள்ளார்.
பி ன்னர், ப யணிகளை நோ க்கி ‘நான் உ ங்கள் அ னைவ ரையும் கொ ல்ல போ கிறேன்’ என மி ரட் டல் வி டுத்து ந டுவா னில் வி மானத்தின் க தவை தி றக்க மு யன்றுள்ளார். எ னினும், வி மானக் கு ழுவினர் அ வரை த டுத்து க ட்டுப்படுத்தி யுள்ளனர். பி ன்னர், வி மானத்தின் அ வசர வ ழி க தவை தி றக்க மு யன்றுள்ளார். த டுக்க சென்ற கு ழுவினரையும் ச ரமாரி யாக அ டித்துள்ளார்.
வி மானத்தை க டத்த ச திதி ட்டம் இரு ப்பதாக ச ந்தேகமடைந்த வி மானி, உடனே க ட்டுப்பாட்டு அ றைக்கு த கவல் அளித்துள்ளார். இதனையடுத்து, உடனே ஜெ ட் ஸ் டார் வி மானத்தை க ண்கா ணிக்க இ ரண்டு போ ர் வி மானங்கள் வி ரைந்துள்ளது.
இதனையடுத்து, வி மானத்தை திரு ப்பிய பை லட் மீ ண்டும் லண்டன் வி மான நி லையத்திலே த ரையி றக்கியுள்ளார். ர களையில் ஈடுபட்ட ஹைன்ஸை பொ லிசார் கை து செய்தனர். ப த்திரமாக வெ ளியேற்றப்பட்ட ப யணிகள் அனைவரும் மறுநாள் மற்றொரு வி மானம் மூலம் துருக்கிக்கு பயணித்துள்ளனர்.
சோலி ஹைன்ஸ் மீது வ ழக்குப்பதிவு செய்த பொ லிசார், செல்ம்ஸ்ஃபோர்டு நீதிமன்றத்தில் ஆ ஜர்ப்படுத்தியுள்ளனர். நீ திமன்ற வி சாரணையின் போது செ ய்த கு ற்றத்தை ஹைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், வி மானத்தில் ப யணிகளின் உ யிருக்கு அ ச்சு றுதல் ஏற்படும் வகையில் வ ன்மு றை யில் ஈடுபட்ட ஹைன்ஸிக்கு 2 ஆ ண்டுகள் சி றைத ண்டனை வி தித்து நீ திமன்றம் தீ ர்ப்பளித்தது.
குர்திஷ் ராணுவ ப டையினர் பயிற்சி முடித்து பட்டம் பெறும் பட்டமளிப்பு விழாவில், வீராங்கனைகள் உ யிருள்ள பா ம்புகளையும், முயல்களையும் ஆக்ரோஷமாக க டித்துக் கு தறும் படங்கள் வெளியாகியுள்ளன.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் பட்டம் பெற்றதும் தங்கள் தொப்பிகளை கழற்றி வீசுவது போல, Peshmerga என்னும் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த வீரர்களுக்கு இப்படி செய்வது பாரம்பரியமாம்.
2014இல் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக போ ராடியதில் இந்த பெண்களின் பங்கு முக்கிய இடம்பெற்றதாம். போ ரின்போது இந்த பெ ண்களை முன் வரிசையில் நிறுத்திவிடுவார்களாம். அவர்களைப் பார்த்ததும் ஐ.எஸ் தீ விரவாதிகள் க லவரமடைந்துவிடுவார்களாம்.
காரணம், ஒரு பெண்ணால் கொ ல்லப்பட்டால், சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற நம்பிக்கை நிலவுவதால்தான் அவர்கள் இந்த வீராங்கனைகளைக் கண்டால் ப தறி ஓ டுவார்களாம்.
பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார்.
“Meeting You” எனப்படும் ஒரு தென்கொரிய ஆவணப்படக்குழு, 2016ம் ஆண்டு கண்டறியப்படாத ஒரு இரத்த நோயால் உ யிரிழந்த 9 வயது சிறுமியை மீண்டும் அவருடைய தாய் சந்திக்கும் ஒரு உணர்வுபூர்வமான காட்சியை தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது.
அந்த படக்குழு கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி, 3 டி படத்தை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
நான்கு குழந்தைகளுக்கு தாயான ஜாங் ஜி-சங் ஒரு VR தொழில்நுட்பத்தின் மூலம், பச்சை திரைக்கு முன்னால் படமாக்கப்பட்ட தனது மகளின் முகத்தை மீண்டும் பார்த்து கண்ணீர் வடித்துள்ளார்.
தென் கொரியாவில் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் இந்த உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சியைப் பார்த்துள்ளனர். முன்வா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படம், து க்கமடைந்த உறவினர்களை இ ழந்த குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெகிழ்ச்சியான இந்த சம்பவத்துக்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்தாலும், இந்த நிகழ்ச்சி சில க வலையை எழுப்புகிறது என்று சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நெறிமுறை மருத்துவர் பிளே பிளே விட்பி கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த கணவர் தன் ம னைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்ற ச ந்தேகத்தால் கொ லை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் நாயர். இவருக்கு வித்தியா சந்திரன் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்த வித்தியா சந்திரனை, சந்திரசேகரன் திடீரென்று கொ லை செய்துவிட்டு அங்கிருந்து த ப்பினார்.
அதன் பின் சில மணி நேரங்களில் பொலிசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வி சாரணை துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நீதிமன்ற வி சாரணையின் போது, சந்திரசேகரன் நாயர் மனைவியை கொ லை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்ற ச ந்தேகத்தால் கொ லை செய்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக வித்யாவின் மேலாளரிடமிருந்து குறுந்தகவல் ஒன்று தனக்கு கிடைத்ததாக கூறியுள்ளார். இந்த வழக்கின் போது குறித்த மேலாளர் நீதிமன்றத்தில், வெளியே சென்ற வித்யா நீண்ட நேரமாகியும், திரும்பாத காரணத்தினால் அவருடைய மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டேன்.
ஆனால் அவருடைய போனில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லாத காரணத்தினால், அலுவலக டிரைவரிடம் வித்யாவைப் பற்றி கூறினேன். உடனே அவர் வித்யாவை தேடிய போது, கார் பார்க்கில் கீழே கா யங்களுடன் வி ழுந்து கி டந்ததைக் க ண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக நான் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, காய ங்களுடன் இ றந்து கி டந்ததைக் கண்டேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 2-ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பையில் இருந்த பிஸ்கட் மற்றும் கடலை போன்றவைகளை அதிகாரிகள் சோ தனை செய்த போது, அதன் உள்ளே சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணங்களை ம றைத்து வைத்திருந்தைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளனர்.
உலகில் பல்வேறு முறைகளில் க டத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக விலங்குகள், வெளிநாட்டு பணம், நகைகள் மற்றும் தங்கம் போன்றவைகளை நம்பமுடியாத அளவிற்கு மறைத்து வைத்து க டத்தல் கு ம்பல் க டத்திவிடுகிறது. இதன் காரணமாக விமான நிலையங்களில், அதிகாரிகள் பயணிகளிடம் தீ விரமாக சோ தனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருக்கும் Indira Gandhi சர்வதேச விமானநிலையத்தில் நேற்று துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் செல்லவிருந்த Murad Alam-ன் பையை அதிகாரிகள் சோ தனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவருடைய பையில் இருந்த கடலையை அதிகாரிகள் உடைத்து பார்த்த போது, உள்ளே வெளிநாட்டு பணங்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்தனர்.
இதனால் உள்ளே இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து பார்த்த போது, அதன் உள்ளேயும் வெளிநாட்டு பணங்கள் ம றைத்து வைக்கப்பட்டிருந்தது க ண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் முழுவதும் அவருடைய பையை சோதனை செய்த போது, சுமார் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணங்களை ப றிமுதல் செய்துள்ளனர்.
அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், குறித்த நபரிடம் அதிகாரிகள் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகள் ஒன்றாக நடித்ததில் இருந்து காதல் மலர்ந்து திருமணம் செய்துள்ளனர். அதில் காதல் ஜோடி என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போன்றவர்கள் தான். இதுப்போன்று பல பிரபலங்கள் நம் தமிழ் திரையுலகில் உள்ளனர். அந்தவகையில் அந்த பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றி தற்போது அதைப் பார்ப்போம்.
எம்.ஜி.ஆர் – ஜானகி : 1967 ஆம் ஆண்டு மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்த எம்.ஜி.ஆர் – ஜானகி தம்பதிகள் காதலித்து திருமணம் செய்தவர்கள். 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜானகி அவர்கள் தனியாகத் தான் இருந்தார். பின் 1988 ஆம் ஆண்டு, மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
சரண்யா மற்றும் பொன்வண்ணன் : பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த சரண்யா வில்லன் கதாப்பாரத்தில் நடித்த பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் புலிமான், பசும்பொன், கருத்தம்மா போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
ஸ்நேகா மற்றும் பிரசன்னா : ஸ்நேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் பல வருடங்களாக காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு, பிரியாணி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா : பல தென்னிந்திய மொழிகளில் நடிகையாக நடித்த பூர்ணிமா பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான பாக்யராஜை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் முந்தாணை முடிச்சு, டார்லிங் டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா மற்றும் ஜோதிகா : சூர்யா-ஜோதிகா ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் தான் சந்தித்தனர். முதல் படத்திலேயே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து 2006-இல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகள் காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன், உயிரிலே கலந்தது போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
ராதிகா மற்றும் சரத்குமார் : நடிகை ராதிகா, சரத்குமாரை மூன்றாவது கணவராக திருமணம் செய்துள்ளார் மற்றும் சரத்குமாருக்கு இவர் இரண்டாவது மனைவி. இவர்கள் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கணவன் மனைவியான இவர்கள் இருவரும் நம்ம அன்னாச்சி, சென்னையில் ஒரு நாள், நானே ராஜா நானே மந்திரி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
அஜித்குமார் மற்றும் ஷாலினி : அஜித் மற்றும் ஷாலினி பல வருடங்களாக காதலித்தனர் மற்றும் தங்கள் காதலை ரகசியமாக பல வருடங்களாக வைத்திருந்தனர். அமர்களம் திரைப்படத்தில் தான் காதல் மலர்ந்து இவர்கள் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
க்ரிஷ் மற்றும் சங்கீதா : க்ரிஷ் மற்றும் சங்கீதா 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பல வருடங்களாக காதலித்து வந்தனர். ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்த இவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்து, காதல் மலர ஆரம்பித்ததாம்.
ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா : வந்தனா மற்றும் ஸ்ரீகாந்த் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நம்பியார் என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.
குஷ்பு மற்றும் சுந்தர்.சி : நடிகை குஷ்பு, இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சுந்தர்.சி அவர்களை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்பு சுந்தர்.சி திரைப்படங்களில் நடித்ததில் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்து, காதல் மலர்ந்தது.
ஆர்யா மற்றும் சாயிஷா : கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தன்று தங்களின் திருமணத்தை நடிகர் ஆர்யா, சாயிஷா டுவிட்டர் மூலம் அறிவிப்பை வெளியிட்டு 2019 மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் காப்பான், கஜினிகாந்து போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
பிரபல திரைப்பட நடிகரான அஜித், தன்னுடைய மனைவி ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை 21 ஆண்டுகளாக பின்பற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதிலும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் திரையுலகில் காதல் திருமணத்திற்கு தலை சிறந்த உதாரணமாக இருக்கும் ஜோடிகளில் நடிகர் அஜித்-ஷாலினி இருக்கின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டு சரண் இயக்கத்தில் உருவாகி வந்த அமர்க்களம் படம் மூலம் இருவரும் அறிமுகமாகிக் கொண்டனர்.
அதன் பின் அந்த படத்திற்கான படப்பிடிப்பின் போது, ஷாலினிக்கு திடீரென்று காயம் ஏற்பட்டுவிட்டதால், அஜித் உடனே பல மருத்துவர்களை படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்துவிட்டார்.
ஏனெனில் அப்போது அஜித் சிறந்த பைக் ரேஸராக இருந்ததால், அவருக்கு மருத்துவர்கள் பலர் தெரிந்திருந்தனர். இதனால் தனக்கு தெரிந்த மருத்துவர்கள் அனைவரையும் அவர் அங்கு வர வைத்துவிட்டார்.
படப்பிடிப்பு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநிவாசா தியேட்டரில் நடந்து கொண்டிருந்ததால், இந்த விஷயம் எப்படியோ அப்பகுதி முழுக்கப் பரவிவிட்டது.
இந்த கருணையை பார்த்து தான் காதலை ஷாலினி உறுதி செய்ததாக பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார். இதை இயக்குநர் சரணே பலமுறை உறுதி செய்துள்ளார்.
திரையில் மட்டுமே காதல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், இது அப்போது ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது, காதலில் விழுந்த அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அன்று முதல் இன்று வரை இந்த ஜோடி திரை வட்டாரத்தையே தங்களின் வாழ்க்கை முறையால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.
இந்த ஜோடி காதல் வாழ்வில் 21 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில், அஜித், ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண்டில், ஒரு படத்திற்கு மேல் கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்றும் ஒரு மாதத்தில் குறைந்தது 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பேன் என்றும் அவர் தன் மனைவியிடம் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஏனெனில் குழந்தைகள் உடனும் மனைவியுடனுமே அதிக நேரங்களை அஜித் செலவழிக்க வேண்டும் என்பது ஷாலினியின் விருப்பமாக இருந்துள்ளது. அதனை அவர் தக்க தருணத்தில் கூறவே, வீட்டையும் மனைவியையும் அதிகம் நேசிக்கும் அஜித், அதற்கு உடனே சம்மதமும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தான், படப்பிடிப்புக்கு வரும்போது கூட சில நேரங்களில் மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து கொண்டே வர ஆரம்பித்துள்ளார்.
சத்தியம் செய்வது எளிது, ஆனால் அதை பின்பற்றுவது மிகவும் கடினம், ஆனால் அஜித் சத்தியம் செய்து கொடுத்து இத்தனை ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார் என்றால், இதை அவருடைய ரசிகர்களும் தங்கள் வாழ்க்கையில், குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உள்ளூர் பரீட்சைகளின்போது நிரலாக்கப்படாத (Non-Programmable) கணிப்புப்பொறிகளை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்படி இலங்கை கணக்கியல் சேவை தரம் மூன்று பரீட்சையின் நிதிக்கணக்கியல் ஒன்று வினாத்தாள் மற்றும் இரண்டு வினாத்தாள் ஆகியவற்றுக்கே கணிப்புப் பொறிகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித இதனை தெரிவித்துள்ளார். இதற்கு அமைய 2020ம் ஆண்டு பெப்ரவரி 16, 22 மற்றும் 23ம் திகதிகளில் நடைபெறவுள்ள பரீட்சைகளில் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பரீட்சைகளின்போது தொடர்புக்கொள்ளக்கூடிய இலத்திரனியல் கருவிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத்தின்(On-line) ஊடாக கோரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்னர் ராஜராஜ சோழன், தன், 25வது ஆட்சியாண்டில், கி.பி., 1003ல், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டத் துவங்கி, 1010ல், கட்டுமானத்தை நிறைவு செய்தார்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், முன்பு, ராஜராஜேஸ்வரர் கோவில் என்றே அழைக்கப்பட்டது. மராட்டியர் ஆட்சிக்கு பின், பிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படுகிறது.
கருங்கற்களால், 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த கோவில் கோபுரத்தில், கலச வடிவிலான மேற்கூரை, 80 டன்னில், ஒற்றை கல்லால் செய்யப்பட்டது. தமிழர் கட்டடக்கலைக்கு எடுத்துகாட்டாக விளக்குகிறது.
கடந்த, 1987ம் ஆண்டு, ‘யுனெஸ்கோ’ என்ற ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பாரம்பரியச் சின்னமாக, தஞ்சை பெரிய கோவில் அறிவிக்கப்பட்டது. இக்கோவிலை காண, உலகம் முழுவதில் இருந்தும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், உலக அதிசய பட்டியலில், எட்டாவது இடத்தில், இக்கோவிலை இடம் பெற செய்ய, தஞ்சையைச் சேர்ந்த பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் இணைந்து, ஒருங்கிணைப்பு குழுவை துவங்கி, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சர்வதேச அளவில் உள்ள தமிழர்களிடையே, கையெழுத்து இயக்கம் நடத்தவும், இக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, தொல்லியல்துறையின் கட்டுமான வல்லுனரும், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டு மான உறுப்பினருமான இராஜேந்திரன் கூறியதாவது,
பெரியகோவிலை, உலக அதிசய பட்டியலில் இடம் பெற வைக்கும் முயற்சியை, கும்பாபிஷேக தினத்தில் இருந்து துவங்கியுள்ளோம். இக்கோவில் கட்டுமானம் முதல், சிற்பங்கள் வரை, அனைத்தும் அதிசயமானது.
உலக அதிசயத்தில், தஞ்சை கோவில் இடம்பெற, தமிழகம் மட்டு மின்றி, சர்வதேச அளவில், தமிழர்கள் ஒருங்கிணைத்து, வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.
அதன்பின், உலக அதிசய குழுவை, கோவிலுக்கு அழைத்து வந்து பார்வையிட செய்வோம். உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரிய கோவில் இடம் பெரும் வரை, எங்கள் பணி ஓயாது” என அவர் கூறினார்.
வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தர்மலிங்கம் சுஜீவன் தலைமையில் செயற்பட்டு வரும் துயரம் பவுண்டேசன் தனது செயற்பாடாக வவுனியா அண்ணாநகர் அ.த.க பாடசாலையில் தமது கற்றல் நடவடிக்கைககளை தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கான உதவிகளை நேற்று (12.02.2020) வழங்கியிருந்தது.
தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும், 05மாணவர்களுக்கு புத்தகப் பைகளையும், புலமைப் பரிசில் மாணவர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவியயையும், பாடசாலைக்கு 1000 லீற்றர் கொள்ளளவுடைய தண்ணீர் தாங்கி ஒன்றையும் வழங்கியிருந்தது.
இந்நிழ்வில் வவுனியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் பங்குபற்றி இருந்ததோடு போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வொன்றையும் மாணவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.