கனடா, சுவிஸ் உட்பட 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு!!

அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட இலவச ஒன் அரைவல் விசா திட்டமானது இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் வகையில் இலவச ஒன் அரைவல் விசா திட்டம் கொண்டு வரப்பட்டது.

அவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இந்த சலுகையானது கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து 6 மாதங்கள் அமுலில் இருந்த இந்த சலுகைத்திட்டமானது இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கால நீடிப்பு அறிவிப்பானது குறித்த 48 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்

அவசியமற்ற வகையில் வெயில் நேரத்தின்போது வெளியில் அலைந்து திரியவேண்டாம் என்று பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். தேசிய கட்டட ஆராச்சி அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் மிக்க காலநிலையை சுட்டியே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தின்போது மனித உடலை நேரடியாக படும்படி நிற்கவேண்டாம். முடியுமான அளவில் நிழலில் நிற்கவேண்டும் என்று தேசிய கட்டட ஆராச்சி அமைப்பின் பணிப்பாளர் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்ட காலநிலை மாற்றமே இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கட்டுநாயக்கவில் 35.7 செல்சியஸ் வெப்பம் அளவிடப்பட்டது.

இதேவேளை பாடசாலை மாணவர்களையும் முற்பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3.30 வரை வெயிலில் வைத்திருக்கவேண்டாம் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவுரை வழங்கியுள்ளது.

பேருந்தில் அதிக சத்தத்துடன் ஒலித்த பாடல் : சாரதிக்கு 32500 ரூபா அபராதம்!!

சாரதிக்கு 32500 ரூபா அபராதம்

பேருந்தில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒலிபரப்பிய சாரதிக்கு காலி நீதிமன்றம் 32500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தில் தனியார் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த சாரதிக்கு அபராதம் விதிப்பதாக காலி நீதிமன்ற நீதிபதி பவித்ரா சன்ஜீவனி பத்திரனி உத்தரவிடடுள்ளார்.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்மாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்தமைக்காக 7500 ரூபாய் அபராதமும், காலாவதியான அனுமதி பத்திரத்தை வைத்திருந்தமைக்காக 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணி காட்டுப் பகுதியில் க ஞ்சா தோட்டம் மு ற்றுகை!!

க ஞ்சா தோட்டம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுப்  பகுதியில் க ஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அ திரடிப் படையினரால் இன்று மு ற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட க ஞ்சா செடிகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து சென்ற விசேட அதிரடிப் படையினரே குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் கைப்பற்றபட்ட க ஞ்சா செடிகளை போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

விபத்தில்..

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு (12.02.2020) இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியின் மையப் பகுதியில் காணப்படும் சீமெந்து கட்டுடன் மோட்டார் சைக்கிளொன்று வேகமாக சென்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் மோட்டார் சைக்கிளினை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா யோகச்சந்திரன் என்ற 35 வயதான குடும்பஸ்தரே உ யிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

எச்சரிக்கை

கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாத்திரமின்றி வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்த நிலைமையை உணரும் நபர்கள் பாதிப்புகள் ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை மேலும் 2 – 3 நாட்களுக்கு நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கொழும்பு வாழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூசு துகள்களின் அதிகரிப்பு காரணமாக இருமல், தடுமல், சளி போன்ற நோய் நிலைமைகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல் நிலைய வாசலிலேயே போ ராடும் சனம் ஷெட்டி : க தறி அ ழுத சோ கம்!!

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் அம்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல மொடல் தர்ஷனை காதலித்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தர்ஷன், சனம் ஷெட்டி தொடர்ந்து தொல்லை தருகின்றார் என காதலை முறித்துக்கொண்டார், இவர்களுக்குள் நிச்சயத்தார்த்தம் கூட நடந்து முடிந்துவிட்டது.

அப்படியிருக்கையில் இவர்கள் பி ரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது, இந்நிலையில் தர்ஷன் பெயில் இரண்டு முறை நீக்கப்பட்டுள்ளது.

இதனால் தர்ஷன் அ ழுதுக்கொண்டே காவல்நிலையத்தை விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
மேலும், தற்போது தர்ஷன் தொடர்பிலேயே இல்லையாம், எங்கு இருக்கின்றார் என்றும் தெரியவில்லையாம்.

அதுமட்டுமின்றி சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு போலிஸார் இன்னும் FIR போடாமல் இருப்பது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்த, தற்போது சனம் காவல்நிலைய வாசலிலேயே நின்று வருகின்றாராம்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு வந்தால்…. ஆவாக் குழுவின் மி ரட்டல்!!

ஆவாக் குழு

ப கிடிவ தை கு ற்றசாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டை தாமே அ டித்து சேதப்படுத்தியதாக ஆவா குழு, தமது முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.

ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றிரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் அங்கிருந்த உடமைகளை அ டித்து உ டைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் “தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும்.

அனைத்து செயற்பாடுகளுக்கும் எ திராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெ ண்களுக்கு எ திராக ரா க்கிங் மேற்கொள்ளும் நபருக்கு உரிய த ண்டனை வழங்கப்பட்டது.

ரா க்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வே தனை ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற த ண்டனை தொடரும் இனிவரும் காலங்களில் என பதிவிட்டுள்ளனர்.

மனைவிக்காக தன் உ யிரையே தியாகம் செய்ய தயாரான கணவன் : மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

தியாகம் செய்ய தயாரான கணவன்..

ஐக்கிய அமீரகத்தில் தீ வி பத்தில் சி க்கி உ யிருக்கு போ ராடும் தம்பதியினரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த அனில் நினன் (32 என்பவர்), தனது மனைவி நீனு உடன் ஐக்கிய அமீரகத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று அவர்களுடைய வீட்டின் மின்சாரப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் படுக்கையறையில் இருந்த அனில், மனைவியின் அ லறல் ச த்தம் கே ட்டு ஓ டிவந்துள்ளார்.

மனைவியை கா ப்பாற்ற முயன்றபோது தீ பி ழம்புகள் முழுவதும் அவர் மீது பா ய்ந்துள்ளது. இதில் ப லத்த கா யமடைந்த அனில் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவனையில் உ யிருக்கு போ ராடுவதாகவும்,

அவருடைய மனைவி 10 சதவீத தீக்கா யங்களுடன் நல்ல நிலையில் இருப்பதாகவும் நெருக்கமான உறவினரான ஜூலை, பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதித்தவர்களுடன் சிக்கி கொண்டு பீ தியில் இருக்கும் தமிழர் : கா ப்பாற்றுமாறு க லங்கும் மனைவி!!

தமிழர்..

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் ஜப்பான் கப்பலில் தவிக்கும் தனது கணவரை மீ ட்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த பெ ண் க ண்ணீர் ம ல்க கோரியுள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த “டைமண்ட் பிரின்சஸ்”என்ற சொகுசு கப்பலில் அன்பழகன் பணிபுரிந்து வருகிறார்.

ஒவ்வொரு நாடாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் இந்த கப்பலில் 3 ஆயிரத்து 500 பயணிகளில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பா திப்பு இருப்பதாக கூறி ஜப்பானில் உள்ள யகோகாமா துறைமுகத்தில் கடலிலேயே அந்த கப்பல் நிறுத்தப்பட்டது.

கடந்த 8 நாட்களாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாரையும் கப்பலில் இருந்து வெளியே அனுமதிக்கவில்லை. மருத்துவக் குழுவினர் கப்பலுக்குள் சென்று கொரோனா வைரஸ் பா தித்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்பழகன் கப்பலில் இருந்தபடியே தனது மனைவி மற்றும் குடும்பத்தினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு வீடியோ அனுப்பினார்.

நாங்கள் 6 தமிழர்கள் கப்பலில் மாட்டி கொண்டோம் தாய்லாந்துக்கு கப்பல் சென்றபோது அங்கிருந்து பயணித்த ஒரு முதியவர் மூலம் கொரோனா வைரஸ் மற்ற கப்பல் பயணிகளுக்கும் பரவியது. இதுவரை கப்பலில் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பா தித்துள்ளது.

எங்களுக்கும் வைரஸ் தொற்று வருமோ என ஒவ்வொரு நிமிடமும் ப யத்துடன் கடந்து வருகிறோம், எங்களை கா ப்பாற்றுங்கள் என கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்து க ண்கல ங்கிய அவரது மனைவி மல்லிகா மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், ஜப்பான் துறைமுகத்தில் கொரோனா வைரஸ் பா தித்தவர்களுடன் என் கணவர் த வித்து வருகிறார்.

என் வாழ்க்கையின் ஆதாரமே அவர் தான். அவரது வருமானத்தில் தான் காலம் கழித்து வருகிறோம். எனவே மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை உட்பட சர்வதேச மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக அள்ளிக் கொடுக்கும் கனடிய மாகாணம்!!

மாணவர்களுக்கு..

இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளைவிட்டுவிட்டு கனடாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்க வந்திருக்கிறார்கள்.

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விடயத்தில், கண்ணை இறுக மூடிக்கொண்டு, அவர்களுக்கான உதவிகளை செய்துவருகிறது கனேடிய பல்கலைக்கழகம் ஒன்று. அது, கனடாவின் Newfoundland என்ற இடத்திலிருக்கும் Memorial University என்ற பல்கலைக்கழகம்.

பங்களாதேஷிலிருந்து 11,000 கிலோமீற்றர்கள் பயணித்து நாட்டையும் வீட்டையும் விட்டு இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வந்திருக்கிறார் Hridisha Arif. அவரைப்போலவே பலர், குறிப்பாக ஆசிய நாட்டவர்கள், கல்வி கற்க அவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு காரணம்?

MUN என்று அழைக்கப்படும் Memorial University என்ற பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் வெறும் 11,460 டொலர்கள்தான்.

ஆகவே, இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து மட்டும் சுமார் 1,700 மாணவர்கள் இங்கு பயில்கிறார்கள்.

சரி, ஒரு மாணவருக்கான கல்விக்கட்டணம் 26,000 டொலர்களுக்கும் அதிகம் என்று இருக்கும் நிலையில், எப்படி MUN பல்கலைக்கழகத்தால் சர்வதேச மாணவர்களுக்கு மட்டும் குறைந்த கல்விக்கட்டணத்தில் கல்வி வழங்க முடிகிறது?

அதற்கான பதில், மாகாண அரசு அள்ளி வழங்கும் பெரிய உதவித்தொகைதான்… ஆம், இந்த ஆண்டில் மட்டுமே, வரி செலுத்துவோர், MUN பல்கலைக்கழகத்திற்கான செலவுகளுக்காக, 308 மில்லியன் டொலர்களை அள்ளி வழங்க இருக்கிறார்கள்.

ஆகவே, தங்களுக்கு உதவிய மாகாணத்திற்கு பதில் உதவியாக, Hridisha Arif போன்ற மாணவர்கள் Newfoundland மற்றும் Labradorஇலேயே தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படம் ஒன்றில், இலங்கையரான பொறியியல் பேராசிரியர் George Mann தன் மாணவர்கள் சிலருக்கு பயிற்சி அளிப்பதைக் காணலாம்.
George Mannஐப் போலவே இலங்கை மாணவர்கள் பலரும் இங்கு கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஏரியிலிருந்து வெளியான மர்மமான புதிய வைரஸ் : குழப்பத்தில் விஞ்ஞானிகள்!!

புதிய வைரஸ்

முற்றிலும் அறியப்படாத ஒரு மர்மமான புதிய வைரஸ் பிரேசிலில் உள்ள ஒரு ஏரியிலிருந்து வெளிவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசிலிய நகரமான பெலோ ஹொரிசொன்டேயில் உள்ள ஒரு செயற்கை ஏரியான பம்புல்ஹா ஏரியில், எதிர்பாராத விதமாக புதிய வைரஸ் ஒன்று வெளியாகியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தன்னுடன் வாழ இரா ணுவ வீரர்களை நீருக்கடியில் கவர்ந்த அமானுஷ்ய தேவதை யாரா என்பதனை அடிப்படியாக கொண்டு, இந்த புதிய வைரஸிற்கு ‘யாரா வைரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மரபணுக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை, இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டிராத, ‘மர்மமானவை’ மற்றும் முற்றிலும் தனித்துவமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் வைரஸ் மரபணுவை கண்டுபிடிப்பதற்காக, டி.என்.ஏவைப் வரிசைப்படுத்தியுள்ளனர். அதில் கண்டுபிடிக்கப்பட்ட 74 மரபணுக்களில் வெறும் 6 மரபணுக்கள் மட்டுமே இதற்கு முன்பு கண்டறியப்பட்டவையாக இருந்துள்ளது.

பிரேசிலின் ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் மினாஸ் ஜெரெய்ஸ் தலைமையிலான குழுவின் கூற்றுப்படி, ஈர சூழலில் வாழும் அமீபா என்ற ஒற்றை செல் உயிரினத்திலிருந்து யாரா வைரஸ் எடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு, யாரா வைரஸ் மனிதர்களுக்கு எந்த அ ச்சுறுத்தலும் கொடுப்பதாக தெரியவில்லை. இது அமீபா இடையே மட்டுமே பரவக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் துவங்கி உலகம் முழுவதிலும் அ ச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு மத்தியில் இந்த கண்டுபிடிப்பு வந்துள்ளது.

COVID-19 கொரோனா வைரஸ் முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. வேகமாக பரவ ஆரம்பித்த இந்த வைரஸிற்கு தற்போதுவரை, 1,000 க்கும் மேற்பட்டோர் ப லியாகியிருப்பதோடு, 44,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லட்சங்களில் கடன் : மனைவிக்கு தெரியாமல் லொட்டரி வாங்கிய கூலித் தொழிலாளிக்கு கொட்டிய பண மழை!!

லொட்டரி வாங்கிய கூலித்தொழிலாளி

கேரளாவில் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்த தினக்கூலி தொழிலாளிக்கு லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசுத்தொகை விழுந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த 55 வயதான ராஜன் என்பவர் தினக்கூலி தொழிலாக வேலை செய்துகொண்டே, தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார். இவர் தனது மூத்த மகள் அதிராவின் திருமணத்திற்காகவும், வீட்டை புதுப்பிப்பதற்காகவும் வங்கியில் வாங்கியிருந்த கடன் 7 லட்சத்தை தாண்டியிருந்தது.

இதனால் வீட்டு வேலைகளை முழுவதும் முடிக்க முடியாமல், கடனையும் கட்ட முடியாமல் தி ணறி, மன அ ழுத்ததில் இருந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் மீண்டும் கடன் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது ரூ.300க்கு ஒரு லொட்டரி டிக்கெட் ஒன்றினை வாங்கியுள்ளார்.

இதுபற்றி மனைவிக்கு தெரிந்தால், பணத்தை வீணடித்துவிட்டதாக திட்டுவார் என நினைத்து யாருக்கும் தெரியப்படுத்தாமல் ரகசியம் காத்துள்ளார்.

இந்த நிலையில் லொட்டரியின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட போது, நம்பிக்கை இல்லாமலே அவர் கடைக்கு சென்று தனது லொட்டரி எண்களை சரி பார்த்துள்ளார்.

அப்போது அவருக்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்திருப்பது தெரியவந்தது. அவருடைய குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளனர். எப்போதும் கோபத்துடன் பார்க்கும் மனைவி ராஜனி, அவரை பார்த்து புன்னகைத்துள்ளார்.

இதனையடுத்து அவர் தோலன்ராவில் உள்ள மாலூர் சேவை கூட்டுறவு வங்கியில் தனது டிக்கெட்டை ஒப்படைத்தார். தற்போது கிடைத்திருக்கும் பரிசுத்தொகையால் வங்கியில் இருக்கும் ரூ.7 லட்சம் கடனை அடைப்பதோடு வீட்டு வேலைகளையும் முடித்துவிடுவேன். 12ம் வகுப்பு படித்து வரும் எனது இளைய மகள் அக்சராவையும் மேற்படிப்பு படிக்க வைப்பேன் என ராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பா லியல் வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் விதித்த அ திரடி தீர்ப்பு!!

நீதிபதி இளஞ்செழியன்

சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பா லியல் வ ல்லு றவு புரிந்த வை த்தியர் ஒருவருக்கு எ திராக இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பி டியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை கந்தளாயில் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுர் வேத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பெ ண் நோ யாளி ஒருவர் மீது பா லியல் வ ல்லு றவு பு ரிந்ததாக ஆயுர்வேத மருத்துவர் மொஹமட் அபுதாஸிஸ் மொஹமட் வாகித் என்ற ஆயுர் வேத வைத்தியரும்,

பா லியல் வ ல்லுற வுக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்ததாக வை த்தியரின் உதவியாளராக கடமையாற்றிய சிங்கள பெண் ஒருவரும் கை து செய்யப்பட்டு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்கு தா க்கல் செய்யப்பட்டது.

பா லியல் வ ல்லுற வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒரு சிங்களப் பெ ண் ஆவார். சிகிச்சையின் போது தனக்கு ஒரு திரவம் அருந்த கொடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் போ தை நிலை அல்லது ம யக்கநிலையில் மருத்துவர் ப லாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளியின் ச த்தம் கேட்டு வெளியில் காத்திருந்த அவரது ச கோதரியும் ம கனும் உள்ளே சென்று பார்த்தபோது வைத்தியரின் கு ற்றச் செயற்பாட்டை அவதானித்ததாக பா திக்கப்பட்டவரின் சகோதரி நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

வழக்கு ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் வரையில் ஆயுர்வேத வைத்தியர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்தார். இந்தநிலையில் 05.02.2020 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. எனினும் அன்றைய தினம் அவர் தீர்ப்புக்கு முன்னிலையாகாது த லைமறை வாகியுள்ளார்.

அதன் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த வைத்தியரை கைது செய்ய அவரது சொந்த ஊரான குருநாகல் பிரதேசத்திற்கு பொலிசார் சென்ற போது அவர் வீட்டில் இருந்து த லைமறைவாகியுள்ளார்.

வைத்தியரை கு ற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் க டூழிய சி றைத் த ண்டனையும் பா திக்கப்பட்ட பெ ண்னிற்கு 10 இலட்சம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

பெ ண் உதவியாளருக்கு 5 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சி றைத் த ண்டனை வழங்கப்பட்டது. த லைமறைவாகியுள்ள வைத்திய அ திகாரியை கை து செய்ய விசேட பொலிஸ் குழு அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பொலிஸ்மா அதிபர், திருகோணமலை பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கைது செய்யும் பி டியாணை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் அ ழுகிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்ட நால்வர் : சிக்கிய கடிதம்!!

வீட்டில் அ ழுகிய நிலையில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வீட்டில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள நிலையில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தைபரம்பத் வினோத் (44). இவர் மனைவி ரேமா (38). தம்பதிக்கு நயனா என்ற 17 வயது மகளும், நீரஜ் என்ற 9 வயது மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நால்வரின் ச டலங்களும் அ ழுகிய நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர்களது வீட்டிலிருந்து பொலிசாரால் கைப் பற்றப்பட்டது.

ச டலங்கள் கைப்பற்றப்பட்டதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே மூவரும் உ யிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், தவறு செய்தவர்களை தவிர அனைவரையும் மன்னிக்கிறோம் என எழுதப்பட்டுள்ளது. நால்வரின் ச டலங்களுக்கும் பி ரேத ப ரிசோதனை செய்யப்பட்டு இறுதிச்சடங்குகளும் நடத்தப்பட்டன.

வினோத் மற்றும் குடும்பத்தார் எந்த விதமான நிதி நெ ருக்கடியிலும் இல்லை என அவர்கள் உறவினர்கள் கூறியுள்ளது பொலிசாருக்கு இந்த ம ர்ம ம ரணத்தில் ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது தொடர்பில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் ப யத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நபர் : தவிக்கும் குடும்பம்!!

கொரோனா வைரஸ்..

இந்தியாவில் கொவிட்-19 என புதிய பெயர் வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பயத்தில் நபர் ஒருவர் த ற்கொ லை செய்துக்கொண்டது குடும்பத்தினரை மீளா துயத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றி கொவிட்-19 இன்று 28 நாடுகளுக்கு பரவியுள்ளது. பிப்ரவரி 9ம் திகதி வரை சுமார் 1,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 9ம் திகதி மட்டும் 97 பேர் உ யிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 3 பேர் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு தீவிர க ண்காணப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டு க ண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதான பாலா கிருஷ்ணா என்ற நபர், தனக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக ச ந்தேகமடைந்து த ற்கொ லை செய்துள்ளார்.

நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க அவர் த ற்கொ லை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கொவிட்-19 நோய்க்கு சீனாவில் மட்டும் 1,113 பேர் ப லியாகியுள்ள நிலையில், சீனாவுக்கு வெளியே, ஹொங்கொங்கில் ஒருவரும், பிலிப்பைன்ஸில் ஒருவரும் உ யிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.