ஆசிரியையான மனைவியின் அந்தரங்க காணொளியை மாணவனுக்கு அனுப்பிய கணவன்!!

கொழும்பில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளியை மாணவர்களுக்கு அனுப்பிய கணவனான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியான ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோ எடுத்து, அவர் படிப்பிக்கும் பாடசாலை மாணவருக்கு வட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பியதாக கூறப்படும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு கூடுதல் நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க நேற்று உத்தரவிட்டார்.

கொழும்பு மருதானை பகுதியில் உள்ள இளம் ஆசிரியை ஒருவர் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாடு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணை அதிகாரிகள் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்ததை அடுத்து சந்தேக நபரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

தகாத படங்களைப் பார்ப்பதற்கு அடிமையானதாக கூறப்படும் சந்தேக நபர், தனது மனைவியுடனான அந்தரங்க உறவை இரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளரான ஆசிரியைக்கும் சந்தேக நபரான கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கணவன் – மனைவிக்கு இடையிலான உறவு தொடர்பான வீடியோவை வட்ஸ்அப் செயலி மூலம் தனக்கு கீழ் படிக்கும் மாணவருக்கு சங்கடப்படுத்தும் நோக்கில் சந்தேக நபர் அனுப்பியதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவர் மனச்சோர்வு எனப்படும் மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணிப் பெண் : சர்ச்சையை கிளப்பிய கடைசி வட்ஸ்அப் மெசேஜ்!!

குடும்ப வன்முறையால் திருச்சூரில் கர்ப்பிணி தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் வரிசையில் இந்த சோகமும் இணைந்துள்ளது.

வெல்லங்குளாரில் வசிக்கும் நௌஃபல் என்பவரின் மனைவி ஃபசீலா, தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

உயிரிழப்பதற்கு முன், தனது தாய் மற்றும் சகோதரிக்கு வாட்ஸ்அப் மூலம் பல செய்திகளை ஃபசீலா அனுப்பியுள்ளார். அதில், தனது கணவர் தன்னை பலமுறை வயிற்றில் உதைத்ததாகவும், தனது கையை உடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மாமியார் ரம்லாவும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு செய்தியில், “இல்லையென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று தனது தாயிடம் ஃபசீலா உருக்கமாகக் தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகளின் அடிப்படையில், ஃபசீலாவின் கணவர் நௌஃபல் மற்றும் மாமியார் ரம்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபசீலாவின் மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, கொல்லத்தைச் சேர்ந்த 29 வயதான அதுல்யா சதீஷ் பல வருடங்களாக தனது கணவரின் துன்புறுத்தலை அனுபவித்து வந்த நிலையில், ஷார்ஜாவில் உயிரை மாய்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மகள் கண் எதிரிலேயே கொடூரம் : நீதிமன்ற வளாகத்தில் மனைவியை குத்திக் கொன்ற கணவர்!!

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் செயின் கபீர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ள நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் குடித்து விட்டு தினமும் மனைவி லட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து சந்தோஷைப் பிரிந்து, லட்சுமி தனது மகளுடன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்தபடியே விவாகரத்துக் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில், விவாகரத்துக் கோரி லட்சுமி தொடர்ந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லட்சுமி தனது மகளை அழைத்து வந்திருந்தார். சந்தோஷூம் கோர்ட்டிற்கு வந்திருந்த நிலையில் விவாகரத்து வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திடீரென சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகள் கண்முன்னே கோர்ட்டு வளாகத்தில் மனைவி லட்சுமியை சரமாரியாக குத்திவிட்டார்.

இதில் லட்சுமியின் முகம், வயிற்றுப்பகுதியில் கத்திக்கு சரமாரியாக பாய்ந்ததில், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கோர்ட்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். உடனடியாக லட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லட்சுமிக்கு 2 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே நேரத்தில் லட்சுமியை குத்திக் கொன்று விட்டு தப்பியோட முயன்ற சந்தோஷைப் பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். சந்தோஷைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனின் பிரிவை தாங்க முடியாமல் பெற்றோர் விஷம் குடித்து பலி!!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தில் வசித்து வருபவர் 53 வயது வேலுச்சாமி. இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.

அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில் ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.

ஏப்ரலில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் தந்தையின் விசைத்தறி பட்டறைக்கு சென்றார். அங்கு மழையால் கூரை ஒழுகுவதை சரி செய்ய சிமெண்ட் ஓட்டின் மீது ஏறினார்.

அப்போது ஓடு உடைந்து மேலே இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரதீப் ஏப்ரல் 18ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் இறந்தது முதல் வேலுச்சாமியும், தீபாவும் அவர் நினைவாகவே தாங்க முடியாத மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இனி உயிரோடு இருந்து என்ன செய்ய போகிறோம். நாங்களும் செத்து போகிறோம் என்று உறவினர்களிடம் கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தீபா தனது உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் “பிரதீப் குட்டியின் பிரிவை எங்களால் மறக்க முடியாது. நாங்களும் எங்கள் தங்கத்தை தேடி போகிறோம். எங்களின் இந்த முடிவுக்கு நாங்கள் மட்டுமே காரணம்’ என கூறப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு வேலுச்சாமியும், தீபாவும் விஷம் குடித்த நிலையில் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் புகையிரத்திலிருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ரோகிணி . இவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. ராஜேஷின் தந்தை சென்னையில் உள்ளார்.

அவரை பார்க்க கணவன்-மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டனர் குழந்தையை உறவினர்களிடம் விட்டு விட்டு இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை,

சேலம்வழியாக சென்னை செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றவுடன் சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டது. அப்போது ரோகிணி கழிவறைக்கு சென்றார்.

கழிவறைக்கு வெளியே உள்ள வாஷ்பேஷினில் முகத்தை கழுவிக்கொண்டிருந்த அவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவே இல்லை. நீண்ட நேரம் ஆகியும் வராததால் ராஜேஷ் அவரை தேடிச்சென்றார்.

அருகில் உள்ள இருக்கைகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் அவரை பார்க்க முடியவில்லை. ஆனால் ரயில் ரயில் காட்பாடியை நெருங்கிவிட்டது.

சந்தேகம் அடைந்த ராஜேஷ் உடனே காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரோகிணியை தேடினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அங்கு சென்று பிணமாக கிடந்த பெண் அணிந்த உடை மற்றும் அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் சடலமாக கிடந்தது ரோகிணி என்பதும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து கிடந்ததும் தெரியவந்தது. ஆனால் தவறி விழுந்த தண்டவாளத்தில் இருந்து எதிர்திசையில் ரயில்கள் வரும் தண்டவாளத்தில் ரோகிணி உயிரிழந்து கிடந்தார்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு பெண் உயிருக்கு போராடிய நிலையில் எழுந்த மறு பகுதிக்கு சிரமப்பட்டு நடந்து வந்ததாகவும் அதன்பின் முடியாமல் அங்கேயே விழுந்து விட்டதாகவும் கூறினர்.

ரயிலில் இருந்து தவறி விழுந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு சென்று விடலாம் என கருதி நடந்து சென்றிருப்பதும், காப்பாற்ற யாரும் வராததால் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இலங்கையில் IVF முறையில் பிறந்த முதலாவது குழந்தை!!

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை நேற்றையதினம் (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

இந்த குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது. இந்த சம்பவம் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்திற்குப் பின்னர் அரசாங்க வைத்தியசாலையில் குழந்தை ஒன்று பிறப்பது இதுவே முதல் முறை ஆகும்.

களனி பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர் பேராசிரியர் ரசிக்கா ஹேரத் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிசேரியன் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனை, அதே பீடத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும் கருத்தரித்தல் வைத்தியர் நிபுணர் சுரங்க ஹெட்டிபத்திரண தலைமையிலான மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட அரசாங்க கருத்தரித்தல் மையத்தில் நடத்தப்பட்ட முதலாவது வெற்றிகரமான IVF கருத்தரிப்பு என்பதிலும் குறிப்பிடத்தக்கது.

கடன் தொல்லையால் உயிரை மாய்த்தாரா சம்பிக்க நிலந்த? பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கண்டி, யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும், மகளையும் அதிகாலையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.

கண்டி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து வாங்கிய 5 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாலும், தொழிலதிபர் தொடர்ந்து அவரை மிரட்டியதாலும் கொலை மற்றும் உயிர்மாய்ப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தனது காரை விற்றுத்தான் வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலதிபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து தொழிலதிபர் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தி வருவதாகவும், தொழிலதிபருக்கு ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதாக கண்டியிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்குமாறு சட்டத்தரணி கேட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கடைசிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட 17 வயது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எதிர்க்கட்சித் தலைவர் முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிர் பிழைத்த 13 வயது மகள் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் அதி சொகுசு வீடொன்றை நிர்மாணித்தல் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமவில் அதிசொகுசு வீடொன்றை நிர்மணித்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவரே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதான சந்தேக நபரான பெண் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

ஹோமாகம போகுந்தர வீதியில் 8.67 பேர்ச் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 2 மாடி வீடு மற்றும் சொத்துக்கள் தற்போது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடு சுமார் 15 அடி உயரமுள்ள ஒரு பெரிய சுவரால் சூழப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எந்தவொரு தொழிலும் ஈடுபடாத இந்தப் பெண், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் இந்த சொத்தை பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவுக்கு 2023 ஆம் ஆண்டு இரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையை தொடர்ந்து, சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நடவடிக்கைகளுடன் இந்தப் பெண் தொடர்புடையவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிருலப்பனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளை மையமாகக் கொண்டு கடத்தல்காரரின் ஆதரவாளர்களால் வழங்கப்படும் போதைப்பொருள் விநியோகத்தில் அந்தப் பெண் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் நீதிமன்றத்திலிருந்து அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையும் பெறப்பட்டது.

இந்த விசாரணைகளை விரைவுபடுத்தி, புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ருவன் காந்த, முதலில் இந்த சொத்துக்கு 7 நாள் தடையைப் பெற்றார்.

பின்னர், ஹோமகம நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் பொலிஸாரால் மூன்று மாத காலத்திற்கு தடையை நீடித்துள்ளனர்.

யாழில் காணாமல்போன இளம் பெண் : பதறும் உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) அன்று இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ள நிலையில், உறவினர்கள் மற்றும் பொலிஸார் பெண்னை தேடி வருகின்றனர்.

இந்த பெண்ணை கண்டு பிடிக்க உதவும்மாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை (29) ஆம் திகதி இரவு கணவனுடன் இருந்த குடும்ப பெண் இரவு11மணியளவில் தூக்கத்தில் இருந்த கணவன் எழுந்து பார்த்தவுடன் குடும்ப பெண்ணை காணவில்லை.

அதனையடுத்து கணவன், மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார் அங்கும் பெண் போகவில்லை இதன் பின் பதற்றம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காணாமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தமது தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் குறித்த பெண் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியையும் பெண்ணின் கணவர்மற்றும் குடும்பம் கேட்டுநிற்கின்றனர் .

உயரும் வெப்பநிலை நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

வெப்பநிலை எச்சரிக்கை நிலைக்கு உயரும் இலங்கையில் இன்றும் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை வரை உயரும் என்று வளிமண்டலவியம் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும்;, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிக வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் வெளிப்புறங்களில் கடுமையான செயல்பாடுகளை மட்டுப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர். அத்துடன் வெளிர் நிற, தளர்வான ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நபரின் உயிரை பறித்த பணிஸ் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த ஒருவர், சாப்பிட்ட மீன் பனிஸ் துண்டு தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற நகர சபை சாரதியான 72 வயதான சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். காலையில் அவர் மீன் பனிஸ் சாப்பிட விரும்புவதாக கூறியதால், குடும்பத்தினர் அவருக்கு அதனை கொடுத்துள்ளளனர்.

அதன் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக அது அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், குடும்பத்தினர் 1990 சுவசேரியா அம்புலன்ஸை அழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருந்தபோது, அங்குள்ள செவிலியர் நோயாளியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

பிரேத பரிசோதனையில், அவர் சாப்பிட்ட மீன் பனிஸின் ஒரு துண்டு நுரையீரலுக்குள் சென்று சிக்கியதால் ஏற்பட்ட சுவாசக் கோளாறே மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

இந்த துயர சம்பவம் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு பிறகு கருவிலிருந்து வெளிவந்த குழந்தை!!

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

1994ஆம் ஆண்டு உறைந்த நிலையில் வைக்கப்பட்ட ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளமை உலகில் ஒரு புதிய சாதனையாக பாரக்கப்படுகின்றது.

தாடியஸ் டேனியல் பியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த குழந்தை உலகின் மிக வயதான குழந்தை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 26ஆம் திகதி, 30 ஆண்டுகளுக்கு முன்பு 62 வயதான நபர் ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி இந்த குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐவிஎஃப் (IVF) சிகிச்சையில், கருத்தரித்த கருக்கள் உறைந்த நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டு, பின்னர் கருத்தரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க மருத்துவ துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சாதனை சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காணி வரைபடங்கள் இணையத்தளத்தில் : வெளியானது அறிவிப்பு!!

டிஜிட்டல் பொது சேவைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, ஆகஸ்ட் முதலாம் திகதி அதாவது இன்று முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு விழா நிகழ்வின் போது, நில அளவையாளர் நாயகம் வை.ஜி.ஞானதிலக நேற்றைய தினம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்த புதிய அமைப்பின் ஊடாக, பொதுமக்கள், திணைக்களத்தின் இணையத்தளம் வழியாக இணையவழி கட்டணம் செலுத்துவதன் மூலம் காணி அளவீட்டு வரைபடங்களை பெறமுடியும்.

காணி தகவல் தரவுத்தளம் காணிப் பதிவுத் திணைக்களத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது காணி தொடர்பான தரவுகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது.

சுமார் 2.4 மில்லியன் நில அளவை வரைபடங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. எனவே, காணி உரிமைச் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் நில அளவை வரைபடங்களும் வழங்கப்படும் எனவும் இது காணி தகவல் சேவைகளை நெறிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

225 மில்லியன் ரூபா வரி ஏய்ப்பு சிக்கலில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி!!

225 மில்லியன் ரூபா வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி மீது வழக்குத் தொடரப்பட உள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இவ்வாறு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.

அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தாம்புலாகல மற்றும் மாடல் அழகி பியூமி ஹன்சமாலி ஆகியோர் சுமார் 42 கோடி ரூபா வரித் தொகையை செலுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு செலுத்தப்படாத வரிக்கான அபராதம் மற்றும் வட்டி என்பனவற்றுடன் வரித் தொகையை அறவீடு செய்யும் நோக்கில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் அவுரா லங்கா தலைவர் விரஞ்சித் தாம்புகல 194 மில்லியன் ரூபா வரியை செலுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரபல மாடல் அழகியும், தொழிலதிபருமான பியூமி ஹன்சமாலி 225 மில்லியன் ரூபா வரியை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பில் நீதிமன்றில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஜயசிங்க ஆராச்சிகே ஹேமந்த எனப்படும் பதல மஹத்தாய என்வரின் கணக்கில் 175 கோடி ரூபா பணம் புழங்கியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்த விசாரணைப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் ஆசிரியரின் அழுத்தம் – பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாக பிரதேசத்தில் பிரபலமான பாடசாலையை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவணை பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதால் தனது வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து அளித்த அழுத்தத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக நுகேகொட பிரிவின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

4 பேர் கொண்ட குடும்பத்தில் அவர் இளையவர் எனவும் மாணவியின் தந்தை அதே பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையின் அதிபர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவி ஹோமாகம பகுதியை சேர்ந்த 15 வயதான மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி பாடசாலையில் நடைபெறும் தவணை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து மாணவிக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். மற்ற மாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து திட்டியதால் மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு சமீபத்தில் தலைவலி ஏற்பட்டுள்ளது.

பின்னர், மருத்துவ சிகிச்சை காரணமாக பாடசாலை செல்ல முடியாததால், மருத்துவ பரிந்துரையை கொண்டு வருமாறு பாடசாலை அறிவுறுத்தியது.

எனினும் பரிந்துரையுடன் கூடிய மருத்துவ அறிக்கையை அவரால் கொண்டு வர முடியாததால், அன்றைய தினம் வகுப்பு ஆசிரியர் மாணவியை பாடசாலையின் ஒழுக்காற்று அதிகாரியிடம் ஒப்படைத்து, மாணவிக்கு சில தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வருத்தமடைந்த மாணவி வீட்டிற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செனானி தயாரத்ன, இந்த மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதியரசர்கள் அமர்வு கால அவகாசம் வழங்கியுள்ளது. அத்துடன், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.