வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்களை உடனடியாக மாநகரசபை கையகப்படுத்தி அதன் உரிமத்துவத்தை பேணுமாறு வவுனியாமாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் அறிவித்துள்ளார்.
வவுனியா மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன் போது வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் மன்னார் வீதி கலைமகள் மைதானம்,
பூந்தோட்டம் மைதானம், மூன்று முறிப்பு மைதானம் உட்பட ஒரு சில இடங்களில் இருந்து மாநகரசபைக்கு கிடைக்கவேண்டிய வருமானம் கிடைக்காமல் போவதாக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த ஆதனங்களை மாநகரசபையின் கீழ் கொண்டு வந்து அதன் வருமானம் மற்றும் பராமரிப்புசெயற்பாடுகளை மாநகர சபையே மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கையையும் முன் வைத்திருந்தனர்.
இதன் பிரகாரம் மாநகரசபைக்குட்பட்ட அனைத்து ஆதனங்களையும் மாற்றம் செய்து மாநகர சபைக்கு கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு செயலாளருக்கு முதல்வர் தெரிவித்தார்.
வவுனியா தலைமை பொலிஸ்நிலையம் அமைந்துள்ள முழு ஆதனத்தினையும் விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.
வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் நேற்று (31.07.2025) இடம்பெற்றது. இதன்போது கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வரால் தெளிவுறுத்தப்பட்டது.
அந்தவகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள மாநகரசபைக்கு சொந்தமான காணியை விடுவிப்பது தொடர்பாக கடந்த அமர்வில் பேசப்பட்டிருந்தது.
அது தொடர்பாக பதில் அளித்த முதல்வர் வவுனியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள முழு ஆதனத்தினையும் விடுவித்து மாநகரசபைக்கு வழங்குமாறு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளதாக சபைக்கு தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் கர்நாடகா – கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவதுறையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது இரத்தம் ‘ஓஆர்.எச். பாசிட்டிவ்’ (ORH positive blood type) வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில், இருந்தது. பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, டாக்டர்கள் அந்த பெண்ணின் இரத்த மாதிரியை பெங்களூரு டி.டி.கே. இரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பினர்.
அங்கு அந்த பெண்ணின் இரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவரது இரத்தம் பான்ரியாக்டிவ் ஆவது, அதாவது அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது.
இதை அந்த இரத்த பரிசோதனை மையத்தில் டாக்டர் அங்கித் மாதுர் உறுதிப்படுத்தினார். பின்னர் அவர் அந்த பெண்ணின் இரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச இரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.
அங்கு 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை இரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரத்த வகைக்கு சி.ஆர்.ஐ.பி.(கோமர் இந்தியா பெங்களூரு) என்று பெயரிடப்பட்டுள்ளது.
உலகிலேயே இந்த வகை இரத்தம் உள்ள முதல் நபர் கோலார் பெண் தான் என்று அவர்களும் அறிவித்தனர். இது மருத்துவதுறையில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இன்று (31) கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து இன்று (31) அதிகாலை நிகழ்ந்ததாகவும் மோட்டார் சைக்கிளின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும், சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஹெலியகொட, பரகடுவ பகுதியில், நபர் ஒருவரின் தொண்டையில் தூரியன் விதை சிக்கி உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 86 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆரியதாச வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஹரிந்திர லக்மினா தென்னகோன் என்பவரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாட்சியமளித்த உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவரின் தொண்டையில் சிரமம் ஏற்பட்டதாகவும், என்ன நடந்தது என்று கேட்ட போது, ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதாக அவர் கூறினார்.
அவர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மனைவி தெரிவித்தார். எனினும் பிரேத பரிசோதனையில் தூரியன் விதை தொண்டையில் சிக்கியதால் மரணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம். கடந்த மாத திருத்தத்தின் போது எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். இதேவேளை, கடந்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டிருந்தது.
92 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்த்தப்பட்டது. மேலும், வெள்ளை டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.
பெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்ற மூன்று பேர் நேற்று புதன்கிழமை (30) காலை அநுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பும்மா” , “பச்சி”, “பொடியா” என்ற பெயர்களில் அழைக்கப்படுபவர்கள் ஆவர். அநுராதபுரம், தேவநம்பியதிஸ்ஸபுர மற்றும் கட்டுகெலியாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30, 36 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் மூவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் எல்லகட்டுவ வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி பெண்களை போன்று ஆடை
அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் மக்கள் தொகையை விட மக்களால் பாவிக்கப்படும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (SLC) அறிக்கையின் படி இரண்டு கோடியே பதினேழு இலட்சத்து அறுபத்தி மூன்று ஆயிரமாகும்.
அத்தோடு கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்நாட்டு மக்கள் 560 கோடி அழைப்பு நிமிடங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கையடக்க தொலைபேசிகள் பரவத் தொடங்கிய 2009 ஆம் ஆண்டில், அப்போது நாட்டில் தொலைபேசிகளின் எண்ணிக்கை 91,359 ஆக இருந்துள்ளது.
இதற்கிடையில், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, நாட்டில் ஒரு வலுவான தொலைத்தொடர்பு வலையமைப்பு காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் 2023 ஆம் ஆண்டில் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட வருவாய் 48,236 மில்லியன் ஆகும். இதில், 44,555 மில்லியன் தொலைத்தொடர்புக்கான ஒருங்கிணைந்த நிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டில் நேற்றையதினம் (30.07) உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு நகர், நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 24 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இந்த வயோதிபப் பெண் தனது வீட்டின் முன்னாள் உள்ள வீதியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில் அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து வீதியில் வீழந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நீதிவான் மட்டு. போதனா வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டமையுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார். இதேவேளை இந்தக் கொள்ளையர்களை வலைவிரித்துத் தேடி வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விராஜ் விதானகே தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும்.
நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்வையிட குறித்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதன்போது, கொழும்பிலிருந்து வட்டவளை நோக்கிச் சென்ற லொறியினை மோட்டார் சைக்கிள் சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்த பெண் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ் விபத்து இன்று வியாழக்கிழமை (31) அதிகாலை 5:45 மணியளவில் நிகழ்ந்ததாகவும் மோட்டார் சைக்கிளின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும், சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி – உடுகம வீதியில் குருந்துவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (30) பிற்பகல் 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று முன்னால் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரின் சாரதி மது போதையில் இருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும்,
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
ஏலியன்கள் (வேற்றுகிரகவாசிகள்) இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி பல்லாண்டுகளாக மனித குலத்துக்கு மர்மம் மற்றும் ஆர்வம் உருவாக்கி வருகிற நிலையில், பூமியை நோக்கி பயணிக்கும் ஒரு மர்ம விண்வெளிப் பொருள், விஞ்ஞானிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் அவி லோயப், இந்த நிகழ்வை மிக தீவிரமாக எச்சரித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, இந்த மர்ம பொருள் “3I/அட்லஸ்” என அழைக்கப்படுகிறது (முன்னர் A11pl3Z). இது சுமார் 10–20 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.
இந்த விண்வெளிப் பொருள் 700 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும். இது சூரிய மண்டலத்திற்கு முற்பட்ட காலகட்டத்தில் உருவானதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனை முதன்முறையாக சிலி நாட்டின் ரியோ ஹர்டாடோ தொலைநோக்கி கண்டறிந்தது.
செப்டம்பர் 2025 வரை பூமியில் இருந்து தொலைநோக்கி வழியே காணக்கூடியது. நவம்பர் இறுதியில், இது சூரியனை நெருங்கும். டிசம்பர் தொடக்கத்தில், இது சூரியனின் மறுபுறமாக இருந்து மீண்டும் தெரியத் தொடங்கும்.
வானியல் நிபுணர் அவி லோய்ப் மற்றும் அவரது குழு, இந்த பொருள் வேற்றுகிரகவாசிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப சாதனம் ஆக இருக்கக்கூடும் என நம்புகின்றனர்.
2017-ல், ‘ஓமுவாமுவா’ என்ற மற்றொரு மர்ம விண்கல் பற்றி அவர் இதேபோல் ஏலியன்களுடன் தொடர்பு இருக்கலாம் என கூறியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்த பொருள் மெகா நகரம் “மென்மேட்டன்” அளவுக்கு பெரியது. அதனால், அது பூமியைத் தாக்கினால் மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்படும். இருப்பினும், இது குறித்த துல்லிய கணிப்புகள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் இன்னும் தொடருகின்றன.
நாசா, ஐஎஸ்ஆர்ஓ, ஹார்வர்டு போன்ற அமைப்புகள் தற்போது இந்த மர்ம பொருளின் பயண பாதை, தோற்றம் மற்றும் தாக்கங்களைப் பற்றி விரிவான கண்காணிப்பு மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா? என்பது குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்தானது இன்று (31.07.2025) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
விபத்தில் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே 28 வயதானவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 27 வயது இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த யானைகளைக் பார்வையிட ஏராளமானோர் அப்பகுதிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர். குறித்த யானைகள் பார்ப்பதற்கு வெண்மையாக காட்சியளிப்பது குறித்து பலரும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
தனித்துவமான தோற்றம்
மேலும் பொதுவாக வெள்ளை யானைகள் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நிறமிக் குறைபாட்டினால் உருவாகும் அரிதான உயிரினங்கள். அவை புனிதமானவை யாகவும் அதிர்ஷ்டத்தின் அடையாளங்களாகவும் பல கலாச்சாரங்களில் மதிக்கப்படுகின்றன.
பானமவில் காணப்படும் இந்த யானைகளின் ‘வெண்மை’ குறித்து பிரதேசவாசிகள் ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளித்துள்ளனர்.
அப்பகுதியில் காணப்படும் சேறு மற்றும் மணல் இந்த யானைகளின் உடலில் ஒட்டியிருப்பதன் காரணமாகவே அவை வெள்ளையாகக் காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகள் சேற்றில் குளித்து பின்னர் மணலில் புரளும்போது சேறும் மணலும் அவற்றின் தோலில் ஒட்டிக் கொண்டு அவற்றின் இயல்பான நிறத்தை மறைத்து வெண்மையான தோற்றத்தை அளிக்கின்றன.
இது ஒரு தற்காலிகமான இயற்கையான நிகழ்வு என்பதைப் பிரதேசவாசிகள் உறுதிப்படுத்துகின்றனர்.
இதன் உண்மை நிலையைப் பொருட்படுத்தாமல் வெள்ளை யானை ஜோடியைக் காணும் ஆர்வம் சுற்றுலாப் பயணிகளிடையே அதிகரித்துள்ளது.
இயற்கையின் இந்த விசித்திரமான காட்சியை நேரடியாகக் காணும் அனுபவத்தைப் பெறுவதற்காக உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் பானமப் பகுதிக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இயல்பாகவே யானைகள் அதிகம் காணப்படும் இலங்கையில் இதுபோன்ற ஒரு தனித்துவமான தோற்றம் கொண்ட யானைகள் இயற்கையின் ஆச்சரியமான அம்சங்களை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளன.