சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 11 பேர் ப லி!!

சீரற்ற காலநிலை

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக டிசம்பர் 2 முதல் இன்றுவரை 11 இ றப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அ னர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 46,821 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 160,038 பேர் காலநிலையால் பா திப்புக்கு உள்ளாகியுள்ளதுடன் ஒருவர் கா ணாமல் போயுள்ளார்.

இதுவரையில் முப்பது வீடுகள் முழுமையாக சே தமடைந்துள்ளதுடன் , 1169 வீடுகள் பகுதியளவில் சே தமடைந்துள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

மண்சரிவு , வெள்ளம், பலத்த மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக பா திக்கப்பட்டுள்ள 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊவா மற்றும் கிழக்கு , அனுராதபுரம் , பொலன்நறுவ, ஹம்பாந்தோட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும், சப்ரகமுவ , மேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடுமெனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 50 முதல் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் திருகோணமலை முதல் பலபிட்டிய வரை மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்ட மற்றும் காலி வரையான கடல் பகுதிகளில் பலத்த மழைபெய்யும் என்றும் கூறப்படுகிறது.

காங்கேசன்துறை முதல் நீர்கொழும்பு வரை மன்னார் மற்றும் புத்தளம் வரையான கடற்பகுதிகளில் சில நேரங்களில் காற்றின் வேகம் 50 முதல் 55 கி.மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதியிலிருக்கும் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு வானிலை நிலையம் எ ச்சரித்துள்ளது.

இலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

தொலைபேசி பாவனையாளர்களுக்கு…

தொலைபேசிக் கட்டணங்கள் குறைக்கப்படாது இருந்தால் அது தொடர்பில் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணத்தின் கீழ் தங்களது தொலைபேசிக் கட்டணங்கள் குறைக்கப்படாமல் இருப்பின் அது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறு அந்த ஆணைக்குழு கோரியுள்ளது.

அரசாங்கத்தினால் தொலைபேசிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் தத்தமது தொலைபேசி கட்டண பட்டியலில் குறைக்கப்பட்டுள்ளதா எனக் கவனிக்குமாறும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுவான தொலைபேசிக் கட்டணத்துக்கு 37.7 சதவீத வரி அறவிடப்பட்டது. இத் தொகை தற்போது 22.6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக ப லி!!

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில்..

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய எம்.திலீபன் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்த வான் மீது, குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டன் விமான நிலையத்தில் பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு ஏற்பட்ட நிலை!!

நடிகை ஸ்ரேயா

லண்டனுக்கு படப்பிடிப்புக்காக சென்ற பிரபல நடிகை ஸ்ரேயா அங்குள்ள பொலிசில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா கதாநாயகியாகவும், நடிகர் விமல் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு, லண்டன் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்தது. அப்போது குடியுரிமை பகுதியை கடந்து, ஸ்ரேயா சென்று விட்டார். உடனடியாக, அங்கிருந்த து ப்பாக்கி ஏந்திய பொலிசார் ஸ்ரேயாவை சூழ்ந்தனர்.

உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதி இல்லாமல், பா துகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது ஏன் என, ஸ்ரேயாவை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளனர்.

இதையடுத்து பதறிய நடிகர் விமல் உள்ளிட்ட படக்குழுவினர் அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை காட்டி விளக்கினார்கள்.

இதையடுத்து பொ லிஸ் பி டியில் இருந்த ஸ்ரேயா விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம், படக்குழுவினரை அ திர்ச்சி அடையச் செய்து விட்டது.

93 900 ரூபாய்க்கு ஐபோன் 11 ஓர்டர் செய்த நபர் : பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

ஐபோன் 11 ப்ரோவை பிளிப்கார்ட்டில் இருந்து 93,900 க்கு ஓர்டர் செய்த நபருக்கு, பார்சலில் போலி போன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான 26 வயதான ராஜானி காந்த், ஒன்லைன் ஷொப்பிங் தளமான ஃபிளிப்கார்ட்டில் இருந்து ஐபோன் 11 ப்ரோவை 93,900 க்கு ஓர்டர் செய்து முழு தொகையையும் செலுத்தியுள்ளார்.

அவர் ஓர்டர் செய்து பணம் செலுத்திய ஐபோன் 11 ப்ரோவுக்கு பதிலாக போலி ஆண்ட்ராய்டு தொலைபேசியைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஃபிளிப்கார்ட்டால் அவர் ஏமாற்றப்பட்டதாக ராஜானி காந்த் கூறினார்.

ராஜானி காந்த், அவருக்கு வந்த பார்சலின் உள்ளடக்கத்தைக் கண்டே அதிர்ச்சியடைந்துள்ளார்.

இருப்பினும், பெட்டியைத் திறந்ததும், தொலைபேசியின் கமெரா திரை போலியானது என்பதை கண்டுபிடித்துள்ளார்.

தொலைபேசியின் மென்பொருள் ஐஓஎஸ் (IOS) அல்ல. அதனுடன் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளும் கலந்திருக்கின்றன என்று அவர் கூறினார்.

விற்பனையாளர்கள், குறிப்பாக மூன்றாம் தர நிறுவனங்கள், பிளிப்கார்ட்டை விற்பனை தளமாகப் பயன்படுத்துகின்றன, அதில் போலி தயாரிப்புகளை விற்பனை செய்கின்றன என குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், ராஜானி காந்த் பிளிப்கார்ட்டை தொடர்பு கொண்டுள்ளார், உடனடியாக அவரது ஆர்டர் மாற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது வரை அவருக்கு மாற்று போனை பெறவில்லை.

உண்மையில், இதுபோன்று போலி தொலைபேசி வழங்கப்படுவது இதுவே முதல் முறை அல்ல. மாம்பழங்கள், கற்கள், செங்கற்கள், சோப்பு, தவறான தயாரிப்புகள் மற்றும் குப்பைகளைப் பெற்ற பலர் காலப்போக்கில் சமூக ஊடகங்களை நாடியுள்ளனர்.

ஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு : அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்!!

இரட்டைத்தலை பாம்பு

முதன்முறையாக இரட்டைத்தலை கொண்ட பாம்பை பார்த்த கிராமமக்கள், புராணக்கதைகளை நம்பிக்கொண்டு, அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் நகரில் உள்ள பெல்டா வன வரம்பின் ஏகருகி கிராமத்திற்குள் இரட்டைத்தலை நாகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இரு தலைகளின் புராண முக்கியத்துவத்தை நம்பும் கிராமவாசிகள், அதனை மீட்புப்படையினரிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி சக்ரவர்த்தி கூறுகையில், “இது ஒரு மனிதன் இரண்டு தலைகள் அல்லது கட்டைவிரல்களைக் கொண்டிருப்பது போன்ற ஒரு உயிரியல் பிரச்னை.

இதேபோல் இந்த பாம்புக்கு இரண்டு தலைகள் உள்ளன. இதற்காக புராண நம்பிக்கை தொடர்பான எதையும் செய்ய வேண்டியதில்லை.

இதனை சிறைபிடித்தால், அதன் ஆயுட்காலம் மட்டுமே அதிகரிக்கும். அதேசமயம் அதனை பாதுகாத்தால் இனத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம் எனக்கூறியுள்ளார்.

விலங்கியல் நிபுணரான Soma Chakraborty கூறுகையில்,”இந்த இனம் வங்காள காரிஸ், கியூட் மற்றும் இந்தி மொழியில் கலா நாக் என்று அழைக்கப்படுகிறது. விஷத்தன்மை கொண்டது” எனக்கூறியுள்ளார்.

யாழில் உழவு இயந்திரம் தீ வை த்து எ ரிப்பு!!

உழவு இயந்திரம்

யாழ்.மாவட்டத்தின் தீவுப்பகுதி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ச ட்டவி ரோத மணல் அகழ்வு நடவடிக்கை காரணமாக மு ரண்பாடு தோன்றியுள்ளது.

யாழ்.சாட்டி மண்கும்பான் பகுதியில் நேற்றைய தினம் பொதுமக்களுக்கும் மணல் அ கழ்வில் ஈடுபடுவோருக்குமிடையில் மு ரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது மூ வருக்கு கா யம் ஏற்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் ஒன்றும் அப்பகுதி ம க்களால் தீ யிட்டுக் எ ரிக்கப்பட்டுள்ளது. கா யங்களுக்குள்ளானோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில்..

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (11.12.2019) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேரூந்து நிலையப் பகுதியில் விசேட க ண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த பேரூந்தில் இருந்து இறங்கி சென்ற இரு இளைஞர்களையும்,

அவர்களது பொதிகளையும் சோதனை செய்த போது பொக்கற்றுக்குள் கேரள க ஞ்சாவினை இரு இளைஞர்களும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், உடமையில் இருந்த க ஞ்சாவும் மீட்கப்பட்டத்தாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா ம து போ தைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்

உலக இந்துக்களால் இன்று (11.12.2019) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.

சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

ஆசனவாய் வழியாக வெளியில் வந்த 32 அடி நீளம் உள்ள உயிரி : அதிர்ந்துபோன நபர்!!

ஆசனவாய் வழியாக..

கழிவறை பயன்படுத்தி கொண்டிருந்த நபரின் வயிற்றில் இருந்து 32அடி நீளமுள்ள உயிரி வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Kritsada Ratprachoom. 44 வயதான இவர், கழிவறைக்கு சென்றபோது, ஆசனவாய் வழியாக ஏதோ வெளியேறுவதை உணர்ந்துள்ளார்.

புகைப்படக்கலைஞரான Kritsada முன்னதாக குடல் வால் அழற்சி நோயல் அவதிப்பட்டதால், இதுவும் அந்த பிரச்னைதான் என்று நினைத்துள்ளார்.

எனவே அதை வெளியில் இழுக்க துவங்கியுள்ளார் அவர். வெளியில் வந்தது 32 அடி நீளமுள்ள அந்த பொருள் நகர்வதை கண்டதும் நாடாபுழு என்று அவர் உணர்ந்துள்ளார். Kritsada-க்கு எப்படி இவ்வளவு நீளமுள்ள நாடாபுழு வந்தது என்று அவருக்கே தெரியவில்லை.

ஒருமனிதனின் உடலில் இருந்து நாடாபுழுக்கள் வெளியில் வருவது புதிதல்ல. முன்னதாக சீனாவை சேர்ந்த நபர் ஒருவரின் உடலில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட நாடாபுழுக்கள் கண்டறியப்பட்டது.

இதுபோன்று நாடா புழுக்கள் வயிற்றில் வளரகாரணம் முறையற்ற உணவுகள்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு முறை திருமணம் : மனைவியால் ஏமாந்தேன்: காதலியுடன் சேர்ந்து கணவனின் கொடுஞ்செயல்!!

நான்கு முறை திருமணம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மனைவியை கொ லை செய்து திரைப்பட பாணியில் ச டலத்தை மறைவு செய்த கணவன் மற்றும் அவரது காதலியை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் சேர்த்தல பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த முன்னாள் மாணவர்களுக்கான சந்திப்பில் தமது முன்னாள் காதலியை சந்தித்துள்ளார். ஏற்கெனவே வித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவரும் பிரேம்குமார், தமது மனைவி தம்மை ஏமாற்றி வருகிரார் என்ற சந்தேகத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

மட்டுமின்றி வித்யா இதற்கு முன்னர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர் எனவும் பிரேம்குமார் கு ற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், தமது முன்னாள் காதலியான சுனிதாவை சந்தித்த பின்னர், இருவரும் ஒன்றாக புது வாழ்க்கையை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், சுனிதா தமது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளை விட்டுவிட்டு, பிரேம்குமாருடன் வாழ ஐதராபாத் நகரில் இருந்து கேரளாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனையடுத்து தன்னை ஏ மாற்றிய மனைவி வித்யாவை கொ லை செய்ய திட்டமிட்ட பிரேம்குமார், காதலி சுனிதாவுடன் இணைந்து அதை செயல்படுத்தியுள்ளார்.

ஆனால் வித்யா இருமுறை மட்டுமே திருமணம் செய்து கொண்டதாகவும், முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை தற்போது கோவா மாநிலத்தில் கல்வி பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே ஆயுர்வேத சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி மனைவியுடன் சென்ற பிரேம்குமார், ம து கலந்த பழச்சாறு அளித்து, பின்னர் க ழுத்தை நெ ரித்து வித்யாவை கொ ன்றுள்ளார்.

ச டலத்தை தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைவு செய்துள்ளனர். தொடர்ந்து திரைப்பட பாணியில், வெளிமாநிலம் செல்லும் ரயில் ஒன்றில் வித்யாவின் மொபைலை கைவிட்டுள்ளனர்.

இதன் பின்னர் பொலிசாரிடம் தமது மனைவி வித்யா மா யமானதாக கூறி புகார் அளித்துள்ளார். பொலிசாரின் விசாரணையில், வித்யாவின் மொபைல் வெளிமாநிலத்தில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டதால், அவர் கோவாவில் இருக்கும் தமது மகனை காண சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால் அதன்பின்னர் பிரேம்குமாரின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம் அவரையும் சுனிதாவையும் இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளது. தற்போது வித்யாவின் ச டலத்தை தேடும் பணி தொடர்ந்து வருகிரது.

திருமணமான 4 நாட்களில் வாந்தி எடுத்த மனைவி : பரிசோதனையில் கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி

தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த கணவர் அ திர்ச்சியடைந்துள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கு அவர் பெற்றோர் வெகு நாட்களாக திருமணத்துக்கு பெண் தேடியும் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் கல்யாண தரகர் மூலம் வால்பாறையைச் சேர்ந்த மல்லிகா என்பவரை பெண் பார்த்துள்ளனர். பெண் கிடைத்த மகிழ்ச்சியில் திருமணத்துக்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணின் குடும்பத்துக்கு 12 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு செல்ல ஊட்டி, கொடைக்கானலை தேர்வு செய்தனர்.

இந்நிலையில் திருமணமான 4வது நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்தார். இதைப்பார்த்த புதுமாப்பிள்ளை புட் பாய்சன் என்று நினைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து சென்றார்.

அங்கு புதுப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கணவரிடம் கூற அவர் அ திர்ச்சியடைந்தார். பின்னர் மனைவியுடன் வீட்டுக்கு வந்த சிவராமன் பெற்றோரிடம் அனைத்தையும் கூற அவர்களும் அ திர்ச்சி அடைந்தனர்.

பெண் கிடைக்காததால் அவசர கதியில் விசாரிக்காமல் திருமணம் செய்து கொண்டோமே என்று வி ரக்தி அடைந்த சிவராமன் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது மல்லிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், அதை மறைத்து அவர் இரண்டாவது திருமணம் செய்ததும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டு போட்டியின் இடையே பிள்ளைக்கு பாலூட்டிய வீராங்கனை : கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்!!

வனத்தை ஈர்க்கும் புகைப்படம்

இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் விளையாட்டு போட்டியின் இடையே பிள்ளைக்கு பாலூட்டிய வீராங்கனையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மிசோராமில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு துவக்க விழா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கைப்பந்தாட்டம் நடந்துள்ளது.

இந்த கைப்பந்து போட்டியின் இடைவெளியிலேயே வீராங்கனை ஒருவர் தமது 7 மாத பிள்ளைக்கு பாலூட்டியுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. சிலர் அவரை அதிசய பெண்மணி என அழைத்துள்ளனர்.

பிள்ளை பிறந்து வெறும் 7 மாதங்களில் விளையாட்டுக்காக தம்மை தயார் படுத்திக் கொண்டு களத்திலும் சாதித்துள்ளது அவரது அர்ப்பணிப்பை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர். சிலர், இவர்களை போன்ற தாய்மார்கள்தான் நாட்டுக்கு பெருமை, இவர்களை ஆதரிப்பதில் பெருமை கொள்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்!!

சிவனொளிபாதமலை யாத்திரை

2020ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று ஆரம்பமாகியுள்ளது.

சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.

மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.

இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.

இரத்தினபுரி, பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக இன்று அதிகாலை மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.

இம்முறை ஒரு ஊர்வலம் பலாங்கொடை – பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, ஹட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட – இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.

மேற்படி சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் நலன் மற்றும் பா துகாப்பை முன்னிட்டு நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு ஹட்டன்- நல்லதண்ணீர் புகையிரத இணைப்பு பஸ் சேவை ஹட்டன் டிப்போவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரத்தினபுரி வழியாகவும், ஹட்டன் வழியாகவும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையை மேற்கொள்ள முடியும்.

யாத்திரையில் இசைக்கருவிகள், மதுபானங்கள் , போதைப்பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளுர், வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பல எண்ணிக்கையிலான பக்தர்கள் சிவனொளிபாதமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபம்!!

கார்த்திகை தீபம்

வவுனியாவில் இந்து ஆலயங்களில் நேற்று (10.12) மாலை கார்த்திகை தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர்.

ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனை சுற்றி அடைத்து ‘சொக்கப்பனை’க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.

இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர். கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.

அந்தவகையில் வவுனியாவில் உள்ள பல இந்து ஆலயங்களில் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வவுனியா கந்தசாமி ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு மத்தியில் விசேட அபிடேக, பூஜை வழிபாடுகளின் பின் குமாரலய தீபம் ஏற்றப்பட்டது.

ஆலயத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட சொக்கப்பானையில் தீபம் ஏற்றி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுவாமி வெளி வீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தது ஜப்பானிய கடற்படை கப்பல்!!

ஜப்பானிய கடற்படை கப்பல்

DD-102 Harusame என்ற ஜப்பானிய கடற்படைக் கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண விஜயமாகவே இந்தக் கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கப்பலின் தலைவர் கொமாண்டர் ஒஸ்ஸிமா டெருஸியா இலங்கையின் கிழக்கு பிராந்திய கொமடோர் சஞ்சீவ டயஸூடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

4550 தொன் எடையைக் கொண்ட இந்தக் கப்பலில் 165 படையினரும் கப்பல் பணியாளர்களும் பயணிக்கின்றனர். 3 நாள் விஜயத்தை முடித்துக்கொண்ட இந்தக் கப்பல் எதிர்வரும் 12ம் திகதி திருகோணமலையில் இருந்து புறப்படவுள்ளது.