சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.
கடந்த எட்டாம் திகதி ஏற்பட்ட விபத்தில் 83 வயதான சின்னத்தம்பி சுந்தரலிங்கம் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் விபத்து நேர்ந்துள்ளது.
கடந்த எட்டாம் திகதி மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், துவிச்சக்கரவண்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீதியின் வலது பக்கம் திரும்ப முற்பட்ட போது பின் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக இவரை மோதி தள்ளியுள்ளது.
விபத்தில் காயமடைந்த முதியரை வீதியால் சென்றவர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உ யிரிழந்துள்ளார்.
இ றப்பு விசாரணையை திடீர் இ றப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாடு முழுவதும் இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆ பத்துக்கள் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றினால் பா திக்கப்பட்ட நபர் ஒருவர் அன்டிபயட்டிக் மருந்துகளை பெறுவதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. வைத்தியரை நாடி பரிசோதிக்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இன்புளூவன்ஸா B என்ற வைரஸ் தொற்றே இவ்வாறு பரவி வருவதாக IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். காய்ச்சல், உடல் வலி, சளி , இருமல் போன்றவைகளே இந்த நோயின் அறிகுறிகள் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு உரிய மருந்துகளை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது நிமோனியா வரை கொண்டு செல்லும் ஆபத்துக்கள் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். தும்மல் ஊடாக இந்த தொற்று மற்றவருக்கு பரவுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பெற்ற மகளை கொ லை செய்து உ டல் பா கங்களைத் து ண்டாக்கி, சூட்கேஸில் அடைத்து வைத்த தந்தையின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்விந்த் திவாரி (47) இவர் நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மூத்த மகள் பிரின்ஸி (22) உடன் சேர்ந்து பிழைப்பு தேடி மும்பைக்கு 6 மாதங்களுக்கு முன்னர் அவர் வந்தார். அர்விந்த் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் ஊரிலேயே வசித்தனர். இதையடுத்து மும்பையில் இருவருக்கும் தனித்தனி இடங்களில் வேலை கிடைத்தது. அப்போது உடன் பணிபுரிந்த நபரை பிரின்ஸி காதலித்த நிலையில் அது அர்விந்துக்கு தெரியவந்தது.
இதையடுத்து மகளை க ண்டித்த அவர் உன் காதலால் உன்னுடைய சகோதரிகள் திருமணம் பாதிக்கப்படும் என கூறினார். ஆனால் பிரின்ஸி தனது காதலில் உறுதியாக இருந்ததால் மகளை கொ டூரமாக கொ லை செய்த அர்விந்த் உ டலை து ண்டாக வெ ட்டி மூன்று சூட்கேஸ்களில் வைத்து கொண்டார்.
பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி ஒரு சூட்கேஸை வீசினார். அதே போல இன்னொரு ஆட்டோவில் பயணிக்கும் போது சூட்கேஸிலிருந்து து ர்நாற்றம் வீசியதால் ச ந்தேகமடைந்த ஓ ட்டுனர் இது குறித்து அர்விந்திடம் கேட்டார்.
ஆனால் பதில் சொல்லாத அர்விந்த் சூட்கேஸை ஆட்டோவில் வைத்து விட்டு அங்கிருந்து த ப்பியோடினார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் சூட்கேஸை திறந்த போது உள்ளே உ டல் பா கங்கள் இருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து அர்விந்த் கடைசியாக ரயிலில் வந்து இறங்கியதை கண்டுபிடித்தனர்.
இதன் பின்னர் அவர் புகைப்படத்தை வைத்து விசாரித்து அர்விந்த் இருப்பிடத்தை பொலிசார் கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர். பொலிசாரின் விசாரணையில் தன் மகளைக் கொ ன்றதை ஒப்புக்கொண்டார்.
இதனிடையில் பிரின்ஸியின் உ டல் பாகங்களில் பாதியைக் கா ணவில்லை என கூறப்படுகிறது. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதன் முடிவிலேயே அது குறித்தும் மகளை அர்விந்த் எப்படி கொ ன்றார் என்பது குறித்து தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.
மண வாழ்க்கையில் பி ரச்சனை ஏற்பட்டதால் பங்களாதேஷிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்று, அங்கிருந்து கனடா வந்த ஒரு பெண், அகதி நிலை கோரி விண்ணப்பித்த போது கொடுத்த போ லி ஆவணங்கள், அவரது பிள்ளைகள் நாடு க டத்தப்படும் ஒரு நிலையை உருவாக்கின.
தவறான வழி காட்டுதலால் போலி பெயருடன் அகதி நிலை கோரி விண்ணப்பித்தார் Sabina Sharin Nipa. ஆனால், Nipaவும் அவரது பிள்ளைகளான Redwan (19)மற்றும் Shuruvi (18) ஆகியோரும் அமெரிக்க பிரஜைகள் என்பதால், அவர்களுக்கு பங்களாதேஷுக்கு செல்வது பிரச்னை என்றால் அமெரிக்கா செல்லலாமே என்று கூறி அகதி நிலை விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது கனடா.
எனவே, தங்களை கனேடியர்கள் என்றே எண்ணி ரொரன்றோவில் வாழ்ந்து வந்த Redwanம் Shuruviயும், டிசம்பர் 9 அன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கனடாவை விட்டு வெளியேறத் தயாராக இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு அரசு சார்பில் தகவல் அளிக்கப்பட்டது.
நீதிமன்ற முறையீடுகள் எவையும் நீதிபதிகளை அசைக்கவில்லை. Redwanம் Shuruviயும் ஒன்றும் குழந்தைகள் இல்லை, சட்டம் இரக்கத்தின் அடிப்படையில் முடிவு செய்வதில்லை என்று கூறிவிட்டனர் நீதிபதிகள்.
சரியாக பிள்ளைகள் அமெரிக்காவுக்கு நாடு க டத்தப்பட 72 மணி நேரம் கூட இல்லாத நிலையில், வழக்கில் தலையிட்டார், அவர்களது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Erskine-Smith.
இந்த பிள்ளைகள் என்ன செய்தார்கள், அவர்களை ஏன் இப்படி நடத்துகிறோம் என்று கேட்ட Erskine-Smith, அவர்களுக்கு கனடாவில் வாழ்வதற்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அது படிப்பின் மூலமாகவானாலும் சரி வேலையின் மூலமானாலும் சரி என்றார்.
அத்துடன் நிற்கவில்லை அவர். நேரடியாக அமைச்சரையே சென்று சந்தித்து பிள்ளைகளுக்காக குரல் கொடுத்தார். கடைசியாக, அவரது கடின முயற்சிக்கு ஓரளவு பலன் கிடைத்தது.
மறு நாள் காலை, திங்கட்கிழமை பிள்ளைகள் நாடு க டத்தப்படவேண்டும் என்று இருந்த நேரத்தில், ஞாயிறு இரவு 10 மணி தாண்டியதும் அவர்களுக்கு ஒரு செய்தி வந்தது. Redwanம் Shuruviயும் நாடு க டத்தப்படுவதை ரத்து செய்ய கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி ஒப்புக்கொண்டது என்ற ஆச்சரிய செய்திதான் அது.
அதாவது அவர்களது தாயின் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும் வரையில் அவர்கள் நாடு க டத்தப்படப்போவதில்லை. Erskine-Smithஇன் முயற்சியால் Redwanம் Shuruviயும் இப்போதைக்கு நாடு க டத்தப்படப்போவதில்லை.
நிரந்தரமாக என்று சொல்ல முடியாவிட்டாலும், இரக்கத்தின் அடிப்படையில் வாழிட உரிமை கோரி அவர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்வரைக்கும், அல்லது அவர்கள் கனடாவில் நீண்ட காலம் வாழ்வதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் வரையிலாவது அவர்கள் இங்கிருக்கவேண்டும் என விரும்புகிறேன் என்கிறார் Erskine-Smith.
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் க ண்முன்னே அவருடைய ம கள் பா லியல் வ ன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேசத்தில் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளாகவே பல்வேறு இடங்களில் பெ ண்கள் மற்றும் சி றுமிகளுக்கு எ திரான பா லியல் வ ன்கொ டுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா பெ ண்களுக்கு பா துகாப்பான நாடா என்கிற கேள்வி வலுவாகவே எழுந்துள்ளது.
அதிலும் முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் அடிக்கடி பா லியல் வ ன்முறை நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணமே இருந்து வருகின்றது.
இந்த நிலையில் உத்திப்பிரதேசத்தின் லக்னோவில் சனிக்கிழமை பிற்பகல், சி றுமி ஒருவர் பா லியல் வ ன்மு றைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக பா திக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையம் சென்று பலமணிநேரம் காத்திருந்தும் பொலிஸார் வழக்கு பதியாமல் தாமதப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமி வி ஷம் கு டித்து த ற்கொ லைக்கு முயற்சித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்திய பின்னரே, போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், சனிக்கிழமை பிற்பகல் சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்டார். அவருடைய தாய் மொட்டை மாடியில் இருந்துள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த சர்வேஷ் ராவத் (32) என்கிற தொழிலதிபரும், மூன்று குழந்தைகளுக்கு தந்தையுமான அந்த நபர், சி றுமியை பா லியல் வ ன்பு ணர்வு செய்துள்ளார். இதற்கிடையில் கீழே வந்த அந்த தாய், மகள் வ ன்புண ர்வுக்குள்ளாக்கப்படுவதை பார்த்து பெரும் அ திர்ச்சியடைந்து த டுக்க முயற்சித்துள்ளார்.
இறுதியாக அந்த கொ டூரன் சர்வேஷ், தாய் மற்றும் மகளை க டுமையாக தா க்கியதோடு, வெளியில் கூறினால் கொ ன்றுவிடுவேன் என மி ரட்டிவிட்டு சென்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கு ற்றவாளி சர்வேஷ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தாய் ம து பழக்கத்துக்கு அ டிமையானதால் அவரின் இரண்டு மகன்களும் பிச்சையெடுத்து வரும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே வசிக்கும் தாய் ஒருவர், கல்வி கற்க ஆசைப்படும் இரு குழந்தைகளையும் பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு பிச்சை எடுக்க வைத்து வருகிறார்.
போ தைக்கு அடிமையான அந்த தாயால், இரு குழந்தைகளும் எதிர்காலத்தை தொலைத்து நிற்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தாயின் ம துப் பழக்கத்திற்காக, விருப்பம் இல்லாமல் பிச்சை எடுத்து வரும் இரு சிறுவர்களையும் மீட்டு, நல்ல கல்வி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதை அறிந்த ஆட்சியர் சரவணன், காமாட்சி அம்மன் கோயில் வாசலில் தங்கியிருக்கும் இரு சிறுவர்களையும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருவரின் கல்வி செலவையும் அரசே ஏற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நித்யானந்தா தீவு ஒன்றை வாங்கி அங்கு செட்டில் ஆனதாக தகவல் வந்த நிலையில், நித்தியின் முன்னாள் பக்தர் ஒருவர் அவர் இந்தியாவில் தான் உள்ளார் என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை பொலிசார் தேடிவரும் நிலையில், அவர் குறித்து முன்னாள் பக்தர் விஜயகுமார் என்கிற விஜய நித்யானந்தா என்ற சீடர் பேசியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, ”2009ஆம் ஆண்டில் பிடதி ஆசிரமத்துக்கு சென்றேன். அங்கு நித்யானந்தாவை சந்தித்து என்னுடைய பணம், தங்கம் ஆகியவை அவர் இருமடங்காக்கி தருவதாக தெரிவித்ததால் வழங்கினேன். அப்படி என்னுடைய முழு சொத்துகளையும் இழந்தேன்.
முன்னதாக, திருவாரூர், வேதாரண்யம், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள ஆசிரமத்தின் நிர்வாகத்தை கவனித்து வந்தேன். அப்போது நித்யானந்தா தரப்பினரால் தா க்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றேன். தற்போது அவரால் சட்ட ரீதியில் பல வழக்குகளை சந்தித்து வருகிறேன்.
இருபா லின சேர்க்கையானராக நித்தி, பார்வதி பரமசிவன் எனக் கூறி அழகான பெண்களை தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு அவ்வாறு என்னுடைய நண்பர்கள் பலரை அழைத்து பா லியல் இ ச்சையை தீர்த்துக்கொண்டார்.
நித்தியின் ஆசிரமத்தில் ராஜ மாதாவாக ரஞ்சிதா இருக்கிறார். ராணிபோல அவர் ஆசிரமத்தில் உள்ளார். முக்கிய முடிவுகள் குறித்து அவரே தன்னிடம் பேசுவார். அவரை அம்மா என்று அழைக்க கூடாது அக்கா என்றே அழைக்க வேண்டும். மாநித்தி ஆனந்த மயி என்பதுதான் அவரின் பெயர். அவர் கூறாமல் அங்கு எதுவும் அசையாது.
லைவ் வீடியோவில் நித்யானந்தா பயன்படுத்தும் பொருட்களை பார்க்கும் போது அவை பெங்களுரு பிடாதி ஆசிரமத்தில் இருந்தவை என நிச்சயம் கூறமுடியும். அங்குள்ள பாதாள அறையில் நித்தி இருந்துகொண்டு வெளிநாட்டில் இருபது போல் நாடகம் ஆடுகிறார்.
அவர் வெளிநாட்டில் தப்பி செல்ல வாய்ப்பில்லை அவர் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தை தள்ளவேண்டும் என்றாலே 10பேர் வேண்டும். அவரை கைது செய்ய வேண்டுமானால் அவருடன் இருப்பவர்களை விசாரித்தாலே போதும். பிடதி ஆசிரமம் முழுவதும் சோதனை செய்து ரஞ்சிதாவிடம் விசாரித்தால் உண்மை தெரியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
72 வயதான மூதாட்டி ஒருவர் மூன்று வருடங்களாக, தன்னுடைய குடும்பத்துடன் கழிப்பையில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டிருபாதி பெஹ்ரா என்கிற 72 வயது மூதாட்டி தன்னுடைய மகள், பேரன் உள்ளிட்ட மொத்த குடும்பத்துடன் 3 வருடங்களுக்கும் மேலாக கழிப்பறையில் வசித்து வருகிறார்.
சமையல் செய்யும் நேரத்தை தவிர மற்ற நேரங்ளில் கழிப்பறையில் உறங்குவதாக கூறியுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் அந்த கழிப்பறை கிராம நிர்வாக அதிகாரிகளால் கட்டபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மூதாட்டி ஏற்கனவே, அதிகாரிகளிடம் முறையிட்ட போது வீடு கட்டித்தருவதாக அவர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். ஆனால் இன்றுவரை கட்டித்தரப்படவில்லை எனவும், அதற்காக காத்திருப்பதாகவும் பெஹ்ரா கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக கிளிநொச்சியில் 8959 குடும்பங்களை சேர்ந்த 28,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு ம ரணமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை 06 வீடுகள் முழுமையாகவும், 137 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளிவிபரம் மேலும் தெரிவிக்கின்றது. கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 4259 குடும்பங்களை சேர்ந்த 13754 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் ம ரணமடைந்துடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 04 வீடுகள் முழுமையாகவும், 118 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 4045 குடும்பங்களை சேர்ந்த 13121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 02 வீடுகள் முழுமையாகவு்ம, 17 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 319 குடும்பங்களை சேர்ந்த 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 336 குடும்பங்களை சேர்ந்த 972 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வேறு மாங்குளம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மழை பெய்துள்ளமையால் இரணைமடு குளத்திற்கு மேலும் நீர் வருகை தருகின்றது. இதன் காரணமாக இன்று காலை இரணைமடு குளத்தின் 8 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளனர்.
இரண்டு கதவுகள் 1’06” ஆகவும், மற்ற இரு கதவுகள் 1′-00″ ஆகவும், நான்கு கதவுகள் 0′-06″ ஆகவும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டாவளை, ஊரியான் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் வெள்ள நீர் உட்புகுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டியை ப லாத்காரம் செய்து கொ ன்ற பின்னர் அவர் ச டலத்தை நான்கு கொ டூரர்களும் லொ றியில் ஏற்றி கொண்டு சாலையில் பயணித்த முதல் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் 28ஆம் திகதி தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதால் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பிரியங்காவை க டத்திச் சென்ற நான்கு பேர் அவரை ப லாத்காரம் செய்து பின்னர் கொ ன்று எ ரித்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகியோர் கடந்த 6ஆம் திகதி பொலிசாரால் என் கவுண்ட்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.
இந்நிலையில் 28ஆம் திகதி நால்வரும் பிரியங்கா ச டலத்தை அவர்களின் லொறியில் வைத்து எடுத்து செல்லும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அருகில் இருந்த டோல்கேட் பிளாசாவில் உள்ள கமெராவில் தான் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, பிரியங்கா சடலத்தை ஏற்றி கொண்டு ஒரு லொறி டோல்கேட் அருகில் இரவில் 10.08 மணிக்கு வருகிறது, பின்னர் அந்த இடத்தை சில நொடிகளில் கடப்பது போல உள்ளது.
அதே போல இன்னொரு சிசிடிவி பதிவில் நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் பங்க் அருகில் லொறி செல்வது போல பதிவாகியுள்ளது. இதற்கு நடுவில் தான் பிரியங்காவின் பைக் பஞ்சரை சரி செய்த கு ற்றவாளிகளில் இருவர் அதை எடுத்து கொண்டு பெட்ரோல் பங்குக்கு சென்று போத்தலில் பெட்ரோல் வாங்கினார்கள்.
பின்னர் தான் லொறியில் இருந்த பிரியங்காவின் ச டலத்தை போர்வையால் போர்த்தி எடுத்து சென்று நள்ளிரவு 2 மணியில் இருந்து 2.30 மணிக்குள் பெட்ரோலை ச டலத்தின் மீது ஊற்றி எ ரித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்துக்கு வந்து மா யமான கணவரை கண்டுபிடிக்க கோரி தமிழ்ப்பெண் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். திருகோணமலை, பாலையூத்தைச் சேர்ந்தவர் வசந்தி (57). தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்று, திருகோணமலையில் உள்ள ஹொட்டலில் வேலை பார்த்து வந்தவர் முகமது யூசுப்.
இவர்கள் இருவரும் காதலித்து, 1979 செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு இரு குழந்தைகள் பிறந்து வளர்ந்த நிலையில், 1986 தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் நாகூரில் வசிக்கும் உறவினர்களை பார்த்து விட்டு வருவதாக, முகமது யூசுப் தமிழகம் வந்துள்ளார்.
அதன்பின், அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த வசந்தி, மகன் வசந்தன் (34) மகள் உஷா (32) ஆகியோரை வளர்த்து, திருமணம் செய்து வைத்துள்ளார். பல ஆண்டுகள் கடந்த நிலையில் தனக்கும் வயதாகி கொண்டே இருப்பதால் நாகூர் பகுதியில் விசாரித்தால் கணவரை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில், 3ம் திகதி நாகூர் வந்துள்ளார்.
நாகூரில் பல இடங்களில் விசாரித்தும், எவ்வித தகவலும் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியரை வசந்தி நேற்று சந்தித்து மனு அளித்தார். இதோடு கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.
தாலி கட்டிய கணவனுக்கு மனைவியே தங்கையை திருமணம் செய்துவைத்துள்ள சுவாரஷ்ய சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக வினிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் திலீப் தன்னுடைய மனைவி வினிதாவிடம், அவருடைய உறவு பெண்ணான ரச்னா என்பவரை நீண்ட காலமாக விரும்புவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தற்கு வினிதா சம்மதம் கூறியதை அடுத்து, ஒரே மேடையில் ரச்னா மற்றும் தனது மனைவியுடன் மாலை மாற்றி திலீப் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து வினிதா கூறுகையில்,
சில ஆண்டுகளாகவே நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதால் என்னுடைய கணவர் தான் குழந்தைகளை கவனித்து வருகிறார்.
வேறு ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தால் குழந்தைகளை நன்றாக கவனித்து கொள்ள மாட்டார்கள். என்னுடைய தங்கையை திருமணம் செய்துவைத்தால் நன்றாக பார்த்துக்கொள்வார் என்பதாலே திருமணம் செய்துவைத்தேன் என்றார்.
புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் புகைப்படம் எடுப்பதில் எவ்வித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டிலுள்ள புகைப்படத்தில் முகத்தில் எந்தவிதமான செயற்கை அடையாளங்களும் இருக்க முடியாது. ஆகையால் நெற்றியில் பொட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டி அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்துடன், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் தமிழ் பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். அதாவது பொட்டு உள்ள படத்தை கடவுச்சீட்டில் கொண்டிருக்கும் பெண்கள் சில சந்தர்ப்பங்களில் பொட்டு வைக்காமல் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.
இந்த நெருக்கடியான நிலையால் சில நாடுகளின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நிறுத்தி வைத்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமன்றி குறித்த நாடுகளுக்கான விசாக்களை பெறுவதும் இவர்களுக்கு சவாலாகவே இருக்கின்றன.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் விசாக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே தமிழ் பெண்களின் நன்மை கருதி இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக என குறித்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான உதவிக் கட்டுப்பாட்டாளர் பி.ஜீ.ஜீ.மிலிந்தவிடம் வினவிய போதே அவ்வாறான எவ்வித தடையும் பொட்டு வைக்கும் தமிழ் பெண்களுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 2015ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான புகைப்படம் தொடர்பான சட்டத்திட்டங்களே தற்போது நடைமுறையில் இருக்கின்றன. அதன்படி கடவுச்சீட்டிலுள்ள படத்தில் முகத்தில் எந்தவிதமான செயற்கை அடையாளங்களும் இல்லாத வகையில் புகைப்படம் அமைய வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகிறது.
என்ற போதிலும் பெண்கள் பொட்டு அணிந்தவாறு புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வட மாகாண மக்கள் வாக்களிக்காமைக்கான காரணம் என்ன என்பதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷ விளக்கியுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“வடக்கில் எங்களுக்கு யாரும் வாக்களிக்கவில்லை. எனினும் அது வடக்கு மக்களின் தவறு அல்ல. அது நாங்கள் செய்த தவறு தான். வடக்கில் வாழும் மக்களின் அவசியத்தை அடையாளம் காணவில்லை. நாங்கள் அந்த அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த மக்களின் மனங்களை வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட வேண்டும். தமிழ் மக்களினால் எங்களுக்கு பயன் இல்லை என சிந்திக்கும் அரசியல் மன நிலையே உள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் இணைந்து செயற்பட வேண்டும். அவர்களை பிரிக்க கூடாது. அவர்கள் தமிழர்கள், சஜித்தின் மக்கள் என பிரிக்க கூடாது.
உதாரணமாக நான் றக்பி விளையாடுகிறேன். விளையாடும் போது என்னுடன் விளையாடும் நபர்கள் முஸ்லிமா, தமிழரா, பறங்கியரா என்று பார்ப்பதில்லை. என்னை எதிர்த்து விளையாடும் நபர் யார் என்று பார்ப்பதில்லை.
அது விளையாட்டு. இதனால், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்த வேற்றுமையையும் பார்க்கக் கூடாது. அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும். அனைவரும் இலங்கை மக்கள். தமிழர்களும் நாட்டின் மக்கள், அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதன் மூலம் சிறப்பான நாடு ஒன்றை உருவாக்க முடியும் என ரோஹித ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
சமகால அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் ஊழியர் சபைக்கு எந்தவொரு குடும்ப உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவரை பிரத்தியேக செயலாளராக அமைச்சர் ஒருவர் நியமித்துள்ளார். எனினும் அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தனது ஊழியர் சபைக்காக எந்தவொரு குடும்ப உறுப்பினர்களையும் நியமிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.