முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரோயல் பார்க் படுகொ லைச் சம்பவத்துடன் தொடர்புடைய கு ற்றச்சாட்டில் ம ரண த ண்டனை விதிக்கப்பட்ட சர்மந்த அந்தனி ஜயமஹா என்பவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்த பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.
ஜயமஹா வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவும் எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், வி டுதலை செய்யப்பட்ட தினத்திலேயே குறித்த நபர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தற்பொழுது குறித்த நபர் சிங்கப்பூரில் தங்கியிருப்பதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
அரை சொகுசு (SEMI LUXURY) பஸ் சேவையை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பஸ் சேவையின் மூலம் பயணிகளுக்கு எந்தவித வசதிகளும் கிடைப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுமார் பத்தாயிரம் பயணிகளை பயன்படுத்தி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் நூறு சதவீதமான பயணிகளும், அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது.
பல வருடங்களாக செயல்பட்டு வரும் அரை சொகுசு பஸ் சேவையில், பயணிகளுக்கு எந்த வசதிகளும் வழங்காமலும், பணத்தை சுரண்டுவதுமே அதிகளவில் காணப்படுகிறது. இதனையடுத்து அந்த சேவையை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பஸ் வண்டிகளில் ஒலிபரப்படும் பாடல்களினால் ஏற்படும் இரைச்சலை கட்டுப்படுத்த தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அரை செகுசு பஸ் சேவை என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையிடும் குறித்த சேவை குறுகிய காலத்துக்குள் முழுமையாக இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாதென இந்திய மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா என்ற கேள்வியினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தின் மக்களவையில் முன்வைத்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, இந்திய நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும் என்றால் அது குறித்த விபரங்களைத் தெரிவிக்குமாறும், குடியுரிமை வழங்கப்படாதெனில், அதற்கான காரணங்களைக் கூறுமாறும் தனது கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இதன்போது வேறொரு நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த விதத்தில் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது என வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார்.
இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி, பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலிமடையில் தாய் கண்டித்தமையினால் சி றுமி ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிமடை – நுகதலாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சி றுமி ஒருவர் வி ஷமருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.
வீட்டிலிருந்த கிருமிநாசினியை பருகியே த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேற்றுடன் பாதணிகளை அணிந்து வீட்டிற்கு வருவதனை தவிர்க்குமாறு மகளிடம் தாய் கூறியுள்ளார். இதனால் கோ பமடைந்த மகள் வி ஷமருந்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சி றுமியை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்த சி றுமி வெலிமடை பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்களுக்கு அமைய அதன் நன்மைகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. வற், தொலைத்தொடர்பு வரி விலக்கு மற்றும் பிற வரி திருத்தங்கள் காரணமாக தொலைபேசி கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைய சேவைக்காக இதுவரை அறவிட்ட வரி பெறுமதி நூற்றுக்கு 19.4 வீதத்தில் இருந்து 10.2 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சாதாரண தொலைபேசி அழைப்பிற்காக இதுவரை அறவிடப்பட்ட 37.7 வரி கட்டணம் நூற்றுக்கு 22.6 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முற்கொடுப்பனவு அட்டைகளுக்கான வரிப்பணம் குறைப்படவில்லை என வாடிக்கையாளர்கள் கு ற்றம் சுமத்தியுள்ளனர்.
அதே கட்டணம் அறவிடப்பட்டாலும், கட்டணத்திற்கு பொருத்தமான டேட்டா அளவினை அதிகரிப்பதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். பதவி விலகல் கடிததத்தை நிராகரித்தமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தரவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், தேர்தல் சட்டத் திட்ட திருத்தம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் செயற்படுவது அவசியம் என்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று (10.12.2019) காலை இடம்பெற்ற விபத்தில் பரீட்சைக்கு சென்ற மாணவன் ப லியாகியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
ஆசிகுளம் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்குச் சென்ற மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.
வவுனியா கோமரசங்குளம் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களான ஆச்சிபுரத்தை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன், சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் பரீட்சை எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் பாடசாலை நோக்கி பயணித்துள்ளனர்.
அவ்வேளை அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆச்சிபுரத்தை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.
மற்றைய மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தால் அப் பகுதியில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியத்துடன், இச் சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கமைய ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி டிசம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர், 10 இலட்சம் ரூபாவாக அறவிடப்பட்ட வரித்தொகை தற்போது 2 கோடி 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
இதன் காரணமாக 99 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மையானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இது குறித்து ரணில் விக்ரமசிங்க பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க இந்த பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் ஜோன் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், சர்வதேச அங்கிகாரம் கொண்ட பதவியொன்று இலங்கைக்கு கிடைப்பது பெரும் பாக்கியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க மேலும் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வோர் சிறப்பு விருந்தினருக்கான வாயில் ஊடாக செல்ல விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் இந்த வாயிலை பயன்படுத்தி வந்தனர்.
எனினும் தற்போது இந்த பாதையை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சாதாரண பயணிகள் வாயில் சென்று வர வேண்டும். சிறப்பு விருந்தினர் வாயிலாக செல்ல விரும்புவோர் 1000 டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வெளிநாடுகளிலிருந்து வரும் ராஜதந்திரிகள் மற்றும் பிரபலங்கள் கட்டணம் இன்றி சிறப்பு விருந்தினர் வாயில் ஊடாக வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சாதாரண பயணிகள் செல்லும் பாதை ஊடாக சென்றிருந்தார். அதனையடுத்து அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் அவ்வாறு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான கடன் திட்டத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கையால் செய்த தாசில்தார் உட்பட நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறை த ண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டத்தில் உள்ள விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்டங்களில் வசித்து வந்த இலங்கை அகதிகளுக்கு 1994-1995 மற்றும் 1995-1996 ஆகிய ஆண்டுகளில் வீட்டுக்கடன் மற்றும் தொழில் கடன் வழங்குவது தொடர்பாக குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டது.
அப்போது விருத்தாசலம் கோட்டாட்சியர், திட்டக்குடி தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தாரர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரால் மு றைகேடாக போ லியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அரசு நிதியிலிருந்து 50,58,000 ரூபாய் கையாடல் செய்தது தொடர்பாக கடலூர் ஊ ழல் த டுப்பு மற்றும் கண்காணிப்பு பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு இதன் விசாரணையில், 13 நபர்கள் மீது கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் 2003-ஆம் ஆண்டில் கு ற்றப்பத்திரிகை தா க்கல் செய்யப்பட்டது.
இந்த கு ற்றப் பத்திரிகை மீதான இறுதிக்கட்ட வி சாரணை முடிவடைந்த நிலையில், கடலூர் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் மற்றும் ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி திருவேங்கட ஸ்ரீனிவாசன் கடந்த 7-ஆம் திகதி தீர்ப்பளித்தார்.
இதில் ஊழல் வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திட்டக்குடி முன்னாள் தாசில்தார் வீர.செல்லையா, முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் பிச்சைப்பிள்ளை, விருத்தாசலம் தலைமையிடத்து துணை தாசில்தார் கோயில்பிள்ளை மற்றும் சதாசிவம் உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை த ண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து ஊழல் கு ற்றவாளிகள் 4 பேரும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அவர் தான் காதலித்து வந்த பெண்ணின் நி ர்வாண புகைப்படத்தை நண்பர்களுக்கு பகிர்ந்துவிடுவேன் என்று மி ரட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த இளம் பெண்னும், மார்த்தாண்டத்தை சேர்ந்த இளைஞனும் பேசும் ஓடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர்கள் இருவரும் கல்லூரி படித்த போது காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர் இருந்துள்ளனர்.
அப்போது குறித்த இளைஞன், ஒன்றாக இருந்த போது அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளான். இதையடுத்து தற்போது இருவருக்குமிடையே பி ரச்சனை ஏற்பட்டுள்ளது.
இளைஞனும் வெளிநாட்டில் இருக்கிறான். அந்த இளைஞன், இளம் பெண்ணிடம் என்னை காதலித்துவிட்டு, ஒன்றாக இருந்துவிட்டு இப்போது ஏன் என்னை வெறுக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண்ணோ நீ தான் என்னை வெறுத்தாய் என்று கூற, இருவரும் ச ண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அப்பெண்ணும் கெட்ட வார்த்தையில் பேச, இளைஞனும் கெட்ட வார்த்தையில் பேசுகின்றனர்.
இது எல்லை மீறி சென்ற போது, காதலனுக்கும் அவனுடைய அத்தைக்கும் இடையே இருக்கும் தொடர்பை பற்றி அவர் கூற, உடனே ஆ த்திரமடைந்த இளைஞன், இது தவறு நானும் நீயும் அறைக்குள் இருக்கும் போது உன்னுடைய முமு நி ர்வாண படம் என்னிடம் இருக்கு அதை எல்லாம் உன்னுடைய கல்லூரி தோழிகளுக்கும் எனது நண்பா்களுக்கும் அனுப்பி விடுவன் என்று மி ரட்டுகிறார்.
இதற்கு அப்பெண்ணோ, நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே நான் இ றந்துவிடுவேன், அதன்பிறகு உ யிரோடு இருந்து என்ன பலன் என கூறுகிறார். இப்படி அந்த ஆடியோ சுமார் 4 நிமிடம் ஓடுகிறது. இந்த ஆடியோவை கேட்ட இணையவாசிகள் இது குறித்து பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பல ஆண்டுகள் காத்திருந்து இறுதியில் கிடைத்த பிள்ளை திடீரென்று ம ரணமடைந்த நிலையில், அவரது நினைவாக 7 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஒரு குடும்பம்.
கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஆன்றணி என்பவரின் குடும்பமே மகனின் 20-வது பிறந்தநாளில் ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது.
7 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பிள்ளை 7வது வயதில் திடீரென்று ம ரணமடைந்தபோது நொ றுங்கிப் போயுள்ளது ஆன்றணியின் குடும்பம்.
ஆனால் அதன் பின்னர் அவர்கள் மகனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் வகையில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு 7 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தேவாலயம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 7 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்ததுடன், சுமார் இரண்டாயிரம் பேருக்கு உணவும் வழங்கியுள்ளனர்.
வீட்டிற்குள் பு தையல் இருப்பதாக ஜோசியர் கூறியதை கேட்டு 20 அடி ஆ ழத்திற்கு ப ள்ளம் தோண்டிய நபரை வருவாய்த்துறையினர் எ ச்சரித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் (62) என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், 3 அடி அகலத்தில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்து மோகனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அவர், வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோசியர் ஒருவர் கூறியதை கேட்டு பள்ளம் தோண்டியதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து பள்ளத்தை மூடுமாறு உத்தரவிட்ட அதிகாரிகள், இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எ ச்சரிக்கை விடுத்தனர்.
இந்தியாவை உ லுக்கிய ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கொ லை வழக்கில், கு ற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் விசாரணையின் போது மு ரண்பாடான ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கியதாக அறியப்படுகிறது.
நவம்பர் 27 அன்று 27 வயதான கால்நடை மருத்துவரை கூ ட்டு வ ன்புண ர்வு செய்து கொ லை செய்த வழக்கில் கு ற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும், முகமது ஆரிப் (26), ஜொல்லு சிவா, ஜொலு நவீன் மற்றும் சி.எச்.சின்ன கேஷவுலு சுமார் 20 வயதுடையவர்கள் ஆவர்.
டிசம்பர் 4ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரும், விசாரணைக்காக டிசம்பர் 6ம் திகதி அதிகாலையில், சம்பவயிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு த ப்பிக்க முயன்ற போது என்கவுண்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து விசாரணையுடன் தொடர்புடைய மூத்த அதிகாரி கூறியதாவது,
கு ற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சைபராபாத்தில் உள்ள ரகசிய இடத்தில் தனித்தனியாக வைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ப யந்தனர் மற்றும் அவர்கள் கு ற்றத்தை எவ்வாறு திட்டமிட்டார்கள், பா லியல் வ ன்கொ டுமைக்கு உட்படுத்தினர் மற்றும் கால்நடை மருத்துவரைக் கொ ன்றது பற்றி வெவ்வேறு விதமாக கூறினர். ஒப்புதல் வாக்குமூலம் பொருந்தவில்லை.
நவம்பர் 27 ம் திகதி மாலை டோல் கேட் அருகே கால்நடை மருத்துவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதைக் கண்டபோது, ஆரிப் தான் தங்களை ம து அ ருந்துமாறும், பா லியல் பலா த்காரம் செய்வதற்கான ச தித்திட்டத்தை மேற்கொண்டதாகவும் மூவரும் கூறினர்.
ஆரிப் மற்ற மூவரின் மீது ப ழியை முன்வைத்தாலும், மூவரும் ஆரிப் தான் இந்த கு ற்றத்தை செய்ய தூண்டிவிட்டதாகக் கூறினர் என்று அதிகாரி தெரிவித்தார்.
கு ற்றம் சாட்டப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கு ற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது கூட, அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு விதமாக வாக்குமூலம் அளித்ததாக மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.
ஒருவர் தங்கள் லொறியை நெடுஞ்சாலையில் நிறுத்திய பின்னர் கால்நடை மருத்துவரை கையில் ஏந்தியதாக சொன்னார், மற்றொருவர் மாற்றுப்பாதையை லொறியிலே பாலத்தின் அடியில் சென்றாதாக கூறினார் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பா திக்கப்பட்டவரின் மொபைல் போன், பவர் பேங்க் மற்றும் அவரது கைக்கடிகாரத்தை எங்கே பு தைத்தார்கள் என்று காவல்துறை அவர்களிடம் கேட்டபோது கூட, அவர்கள் வெவ்வேறு திசைகளைக் காட்டியதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.