மேற்கு நாடுகளுடன் 3ம் உலகப்போர் வெ டிக்கக்கூடும் : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

மேற்கு நாடுகளுடன்..

ரஷ்யா மற்றும் நேட்டோ (29 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ஒரு இராணுவக் கூட்டணி) சம்பந்தப்பட்ட ஆர்க்டிக் பகுதியில் போ ர் ஆ பத்து அதிகரித்து வருவதாக கிரெம்ளின் இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய வடக்கு கடற்படையின் தலைவரான வைஸ் அட்மிரல் அலெக்சாண்டர் மொய்சீவ், ரஷ்யாவிற்கும் – நேட்டோவிற்கும் இடையிலான போ ரின் அ ச்சுறுத்தல் குறித்து சிலிர்ப்பான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

துருவப்பகுதியில் நேட்டோ நாடுகளின் இருப்பு கணிசமாகக் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். பிரித்தானியா மற்றும் அமெரிக்கா பிற மேற்கத்திய நாடுகளுடன் மேற்கொள்ளும் இ ராணுவப் பயிற்சிகள் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளன.

ரஷ்யாவின் 15,000 மைல் ஆர்க்டிக் கடற்கரையோரத்தில் இராணுவ தளங்களை மீண்டும் திறக்கவும் நவீனமயமாக்கவும் விளாடிமிர் புடின் உத்தரவிட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“எதிர்காலத்தில், ஒருங்கிணைந்த ஆ யுதப் ப டைகளின் இராணுவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதன் விளைவாக, மோ தலுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்” என்று மொய்சேவ் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில், கூட்டணி உறுப்பு நாடுகளின் கூட்டு ஆ யுதப்படைகள் நமது வடக்கு எல்லைகளுக்கு அருகிலேயே பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பயிற்சிகள் அளவு வித்தியாசமாக இருந்தன. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், கேரியர் போர் குழுக்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகள் உட்பட பிற பிரிவுகளில் இருந்து பல்வேறு ஆயுதங்களை உள்ளடக்கியிருக்கிறது எனக்கூறினார்.

மேலும், நேட்டோ நாடுகள் ரஷ்ய தேசிய நலன்களை அங்கீகரிக்கத் தவறிவிட்டதாகவும், அரசியல் இலக்குகளை அடைவதற்கான வழிமுறையாக இராணுவ சக்தியைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கு ற்றம் சாட்டினார்.

“அணிசேரா நாடுகளின் இராணுவ அமைப்புகள் இப்பகுதியில் அதிகளவில் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. நேட்டோ அல்லாத நாடுகளான சுவீடன் மற்றும் பின்லாந்து, இப்போது தீவிரமாக பங்கேற்கின்றன,” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவைப் போல விமான நிலையத்தில் நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை பின்பற்றி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பகுதி ஊடாக அவர் நேபால் நாட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுக்கள் செல்லும் பிரத்தியேக நுழைவுப் பாதையின் ஊடாக செல்ல முடியுமாக இருந்தும், சாதாரண பயணிகள் செல்லும் வழியில் அவர் விமானத்தில் ஏறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தான் பதவி ஏற்றதன் பின்னர் தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட தூரம் நடந்து சென்று சாதாரண பயணிகள் செல்லும் பாதையின் ஊடாக விமானத்திற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவரைப் பின்பற்றி இன்று இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் இவ்வாறு சென்றிருப்பது அனைவரது கனவத்தையும் ஈர்த்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு 15000 ரூபா விசேட கொடுப்பனவு!!

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15000 ரூபாவை விசேட கொடுப்பனவாக வழங்க தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

அதற்கான சுற்றறிக்கையை எதிர்வரும் வாரம் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குமாறு கோரி கடந்த அரசாங்கத்தின் அரச நிறைவேற்று அதிகாரிகளின் சங்கம் தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தது.

இது தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு 15000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலையில் : அமைச்சர் எச்சரிக்கை!!

சீரற்ற காலநிலையினால், சில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலை உருவாகியுள்ளதால் அதனைச் சீர்செய்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை அனைத்துத் திணைக்களங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்போது மதீப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நிலப்பரப்பிற்குள் புதிதாக 69 ஹெக்டயர் நிலப்பரப்பை ஒன்றிணைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

தற்போது துறைமுக நகரத்தை மண்ணிட்டு நிரப்பும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகரத்தை நிர்வகித்தல் மற்றும் வரி நிவாரணம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டுச் சபை மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வேலை தேடிய அனாதைப் பெண் : முதலாளியின் சந்தேகத்தால் 15 வருடத்திற்குப் பின்னர் குடும்பத்தை கண்டுபிடித்த அதிசயம்!!

2004 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் தொலைந்துபோன 19 வயது பெண், பேஸ்புக் உதவியுடன் 15 வருட காலத்திற்குப் பின்னர் தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டில், நான்கு வயது பவானியும் அவரது சகோதரரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது பவானி கா ணாமல் போனார்.

பவானியை அழைத்துச்சென்ற ஜெயா, வளர்ப்புத் தாயாக மாறியுள்ளார். ஜெயாவிடம் வளர்ந்த பவானி இடைநிலை வரை கல்வி கற்றுள்ளார்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பவானி விஜயவாடாவில் உள்ள தனது வம்சீதர் பச்சுவின் வீட்டில் வீட்டு உதவியாக வேலை தேடிக்கொண்டிருந்தார்.

பவானியின் ஆதார் மற்றும் பிற ஆவணங்களை அடையாளச் சான்றாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு வம்சீதர் கோரியுள்ளார்.

இருப்பினும், அந்த ஆவணங்களை பொறாத பவானி, தான் வளர்ப்புத் தாயால் வளர்க்கப்பட்ட அனாதை என்று விளக்கியுள்ளார்.

வேலையைப் பெறுவதற்காக பவானி கதையை உருவாக்குகிறார் என்று சந்தேகித்த முதலாளி வம்சீதர், சமூக ஊடகங்களில் அவர் கூறிய கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடிவு செய்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக தனது குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தாலும், பவானி தனது சகோதரரின் பெயர், சந்தோஷ், அவர்களது குடும்பப் பெயர் மற்றும் அவர் வாழ்ந்த சிபுரிபள்ளியில் உள்ள தனது கிராமத்தின் பெயரை நினைவுபடுத்தி கூறியுள்ளார்.

பின்னர் வம்சீதர் பவானியின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பேஸ்புக்கில் தேடியுள்ளார்.

பேஸ்புக்கில் அவரது சகோதரரின் பெயரான கோடிபெட்லா சந்தோஷில் கணக்கை தேடியுள்ளார், சுமார் 20 கணக்குள் இதே போன்ற பெயர்களுடன் இருந்துள்ளது.

அவர்களது குடும்பத்தில் யாராவது 15 ஆண்டுகளுக்கு முன்பு கா ணாமல் போயிருக்கிறார்களா என்று விசாரித்து அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியுள்ளார் வம்சீர்.

30 நிமிடங்களில், சந்தோஷ் என்ற கணக்கு ஒன்றிலிருந்து அவருக்கு பதில் வந்துள்ளது, அதில், ஏழு வயதில் தனது சகோதரி உண்மையில் கா ணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

வம்சீரின் மெசேஜிக்கு பதிலளித்த சந்தோஷ், பவானியின் மூத்த சகோதரர் என உறுதியாகியுள்ளது.

பேஸ்புக்கில் தனது சகோதரர்களைக் க ண்டுபிடிப்பதைப் பற்றி வம்சீதர் தெரிவித்தபோது, ​​மகிழ்ச்சியடைந்த பவானி, உடனடியாக அவரது குடும்பத்தினரான, சந்தோஷ், கோபி, அவரது தாய் வரலட்சுமி மற்றும் தந்தை மாதவ ராவ் உடன் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார்.

விரைவில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் விஜயவாடாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1,12,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழத்தை எடுத்த சாப்பிட்ட நபர் : சி க்கிய காட்சி!!

வாழைப்பழத்தை எடுத்த சாப்பிட்ட நபர்

1,20,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழ கலைப்படைப்பை, கண்காட்சிக்கு வந்த கலைஞர் ஒருவர் திடீரென சாப்பிடப்பட்டது ப ரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தாலிய கலைஞரான மௌரிசியோ கட்டெலனின் ‘காமெடியன்’ என்ற தலைப்பில் சுவரில் டேப் செய்த வாழைப்பழ கலைப்படைப்பு, மியாமியில் உள்ள ஆர்ட் பாசலில் உள்ள சர்வதேச கேலரி பெரோட்டினில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

‘உலகளாவிய வர்த்தகத்தின் சின்னம் ’ என போற்றப்பட்ட கலைப்படைப்பை இந்த வாரம் மூன்று பேர் வாங்கினர். ஆனால், செயல்திறன் கலைஞர் டேவிட் டதுனா அதை சுவரிலிருந்து எடுத்து சாப்பிட்டார்.

என்னால் முடிந்த கலை செயல்திறன். நான் மௌரிசியோரிசியோ கட்டெலன் கலைப்படைப்புகளை விரும்புகிறேன், இந்த படைப்பை நான் மிகவும் விரும்புகிறேன். இது மிகவும் சுவையாக இருக்கிறது என்று டதுனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

டேவிட் டதுனா பழத்தை சாப்பிடுவதை கண்ட ஊழியர்களில் ஒருவரின் கோ பமடைந்த போதிலும், வாழைப்பழம் விரைவாக மாற்றப்பட்டது, மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

‘காமெடியன்’ கலை அங்கீகாரரீதியாகவும் சான்றிதழுடன் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உரிமையாளர்கள் வாழைப்பழத்தை மாற்றலாம் .

டதுனா கலைப் பணிகளை அ ழிக்கவில்லை. ‘வாழைப்பழம் கருத்து தான்’ என்று கேலரியின் இயக்குனர் லூசியன் டெர்ராஸ்கூறினார். பின்னர் மாற்றப்பட்ட வாழைப்பழத்தை பா துகாக்க பொ லிசார் நிறுத்தப்பட்டனர்.

வெளிநாட்டில் வேலை செய்த மகன் : பெற்றோருக்கு வந்த அ திர்ச்சி அழைப்பு : 50 நாட்களாக காத்திருக்கும் பரிதாபம்!!

வெளிநாட்டில் வேலை செய்த மகன்

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவில் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில், அவரின் உடலை 50 நாட்கள் ஆகியும் சொந்த நாட்டிற்கு கொண்டுவரமுடியாமல் பெற்றோர் த வித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி சின்ன சூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். பொட்டு தம்பதியரின் மகன், ராஜ்குமார். 29 வயதான இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் திகதி, ராஜ்குமாரின் பெற்றோருக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் மகன் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டான் என்று கூறியுள்ளனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்கு பணம் சம்பாதிக்க சென்ற மகன் இ றந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டதும் பெற்றோர் அ திர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இதையடுத்து ராஜ்குமாரின் உறவினர் அவரின் உ டலை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இறந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரின் உ டலை இந்தியாவிற்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் மகனின் உடலை கூட பார்க்க முடியாமல் பெற்றோர் மிகுந்த வே தனையில் இருக்கின்றனர்.

இது குறித்து ராஜ்குமாரின் தாய் பொட்டுவிடம் பிரபல தமிழ் ஊடகம் விகடன் கேட்ட போது, வெளிநாட்டில் இருக்கும் போது அவன் நாள் ஒன்றிற்கு மூன்று முறையாவது போன் செய்து பேசுவான், தீபாவளிக்கு நான் வருகிறேன் அம்மா என்று சொன்னான்.

ஆனால் அவன் இப்படி பி ணமாக வருவான் என்று நினைத்து கூட பார்த்தில்லை, அவன் இ றந்து 50 நாட்கள் மேல் ஆகியும், உ டலை பார்க்க முடியாமல் தவித்து வருகிறோம் என்று க ண்கலங்கினார். அப்போது ராஜ்குமாரின் தந்தை கூறுகையில், 2 ஆண்டுக்கான விசா முடிந்தும் 9 மாதமாக சவுதியிலிருந்து வெளியேற முடியாமல் த வித்து வந்தான்.

நாட்டை விட்டு வெளியேற முடியாமலும், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமலும் மிகுந்த வே தனையில் இருந்த அவன் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக தகவல் வந்தது. இ றந்து இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது, மொத்த குடும்பமும் ஒருவேளை உணவுகூட நிம்மதியாக உண்ண முடியாமல் கா த்திருக்கிறோம் என்று வே தனையுடன் கூறியுள்ளார்.

பிரியங்கா வழக்கு என்கவுண்டர் : பிரேத ப ரிசோதனை அறிக்கை முடிவுகள் : முக்கிய கு ற்றவாளி தொடர்பில் அ திர்ச்சித் தகவல்!!

பிரியங்கா வழக்கு

பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான நால்வரும் என்கவுண்டரில் சு ட்டு கொ ல்லப்பட்ட நிலையில் அவர்களின் பி ரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டு எ ரிக்கப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அ திர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேஷவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நால்வரையும் நேற்று முன்தினம் பொலிசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்ற போது அவர்கள் பொலிசாரின் து ப்பாக்கியை ப றித்து அவர்களை நோக்கி தா க்குதல் நடத்த தொடங்கினர். இதை தொடர்ந்து நால்வரையும் பொ லிசார் என்கவுண்டரில் சு ட்டு கொ ன்றார்கள்.

இதையடுத்து நால்வரின் உ டல்களும் பி ரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த பி ரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பிலான அறிக்கையை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கின் முதன்மை கு ற்றவாளியான முகமது உடலை 4 து ப்பாக்கி கு ண்டுகள் து ளைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்த மருத்துவமனை வட்டாரம் மூலம் தெரிந்ததாக டைம்ஸ் நவ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பி ரேத ப ரிசோதனை தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த என்கவுண்டர் தொடர்பாக சம்மந்தப்பட்ட பொலிசாருக்கு க ண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் முக்கிய கு ற்றவாளியை ஒரு முறை மட்டும் சு டாமல் நான்கு முறை சு ட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெளிநாட்டில் மனைவி கண்முன்னே ப ரிதாபமாக இ றந்த கணவர்!!

வெளிநாட்டில் மனைவி கண்முன்னே..

சூடான் நாட்டில் தொழிற்சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உ யிரிழந்த நிலையில், அவரின் மனைவி வரவிருக்கும் பொங்கலுக்கு வருகிறேன், கொலுசு வாங்கி தருகிறேன், வெளியில் எங்காவது சென்று வருவோம் என்று கூறியதாக வேதனையுடன் பேசியுள்ளார்.

சூடான் தலைநகர் கார்டூமின் புறநகர் பகுதியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ வி பத்தில் சிக்கி 23 தொழிலாளர்கள் உ டல் க ருகி ப லியாகினர். உ யிரிழந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் எனவும் இதில் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மானடி குப்பத்தை சேர்ந்த 35 வயதான ராஜசேகர் என்பவர் ப ரிதாபமாக ப லியானார்.

இந்த விபத்து நடைபெறும் போது அவருடைய மனைவியிடம் ராஜசேகர் வீடியோ அழைப்பில் பேசியதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகமான பிபிசி ராஜசேகரின் மனைவியான கலைசுந்தரியிடம் ராஜசேகர் பற்றி கேட்ட போது, எங்களுக்கு திருமணமாகி சிவானி என்ற பெண் குழந்தை உள்ளது.

டிப்ளோமா படித்த ராஜசேகர் தன்னுடைய குடும்ப சூழல் மற்றும் எதிர்காலத்திற்காக வெளிநாட்டிற்கு வேலை செல்வதற்கு முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சூடான் நாட்டில் செயல்பட்டு வரும், செராமிக்ஸ் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார்.

வேலைக்கு சேர்ந்த 14 மாதங்களுக்கு பிறகு, கடந்த ஜனவரி மாதம் 2 மாதம் விடுப்பில் ஊருக்கு வந்தார். அதன் பின் சூடானுக்கு சென்ற அவர், தினமும் எங்களிடம் போனில் பேசுவார்.

அப்படி கடந்த செவ்வாய் கிழமை அவர் போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த போது, அந்த சம்பவம் நடந்தது. எப்போது வேலைக்கு சென்று கையெழுத்து போட்டவுடன் என்னிடம் போனில் பேசுவார், என்னை சாப்பிட்டியா, குழந்தையை பற்றி பேசுவார்.

அதன் பின் இரவு வந்து போன் செய்வார், செவ்வாய் கிழமை தான் அவருக்கு வார விடுமுறை, அன்றைய தினம் எப்போதும் வேலை எல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு, போன் பேசுவார், அன்றைய தினம் காலையிலே போன் செய்துவிட்டார். எப்போதும் வேலை எல்லாம் முடித்துவிட்டு தானே பேசுவார்.

இப்போது என்ன இவ்வளவு சீக்கிரம் என்று நான் போன் பேசிய போது, நான் இன்னும் ஒரு மாதத்தில் அதாவது பொங்கலுக்கு வீட்டிற்கு வந்துவிடுவேன், நீ கேட்ட பெரிய கொலுசு வாங்கி தருகிறேன், என் தங்க பிள்ளை சிவானிக்கு கொலுசு மாற்றி தருகிறேன்.

உனக்கு புடவை எடுத்து தருகிறேன் என்று பேசிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென்று அல றினார், அ திர்ச்சியில் உறைந்த நான் செல்போனையே பார்த்து கொண்டிருந்தேன், அதன் பின் என்ன மாமா.. என்ன மாமா ஆச்சு என்று க தறினேன், து டித்தேன், அவர் பேசிய இடத்தில் வெறும் தீ மட்டுமே தெரிந்தது.

வீடியோவும் கட் ஆகிவிட்டது, நான் அதை எப்படி மறக்க போகிறேன் என்று க தறி அ ழுதார். அதன் பின் அவரின் உறவினரிடம் கலைசுந்தரி நடந்த சம்பவத்தை கூற, உடனே அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இதைப் பற்றி கூற, அதன் பின் ராஜசேகர் இ றந்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது. ராஜசேகரை இ றந்த சோ கத்தில் அவரின் குடும்பத்தினர் மிகுந்த வே தனையில் உள்ளனர்.

பாசமாக வளர்த்த ஒரே மகளை பறிகொடுத்து க தறும் பெற்றோர்!!

15 வயது சிறுமி

ஐக்கிய அமீரகத்தில் இந்தியாவை சேர்ந்த 15 வயது சிறுமி, 10வது மாடியில் இருந்து குதித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷார்ஜாவின் அல் நபா பகுதியில் உள்ள கட்டிடத்தின் 10 வது மாடியில் இருந்து, 15 வயது இந்திய சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று கு தித்து உ யிரிழந்தார். சி றுமி த ற்கொ லை செய்து கொண்டதாக பொலிஸார் ச ந்தேகித்து வருகின்றனர்.

சுமார் 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரவு 11.00 மணியளவில் அவர் குவைத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் அவருடைய உடலானது பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை அறிய ஷார்ஜா பொலிஸ் அதிகாரிகள் சி றுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நந்திதா என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுமி, ஷார்ஜாவில் உள்ள இந்திய பாடத்திட்டத்தில் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி வட்டாரங்களின்படி, அவர் தனது பெற்றோருக்கு ஒரே குழந்தை.

நந்திதாவின் தாய் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், அவரது தந்தை கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நந்திதா தனது சமீபத்திய தேர்வுகளில் ‘குறைந்த மதிப்பெண்கள்’ பெற்றிருந்ததாகவும், அதனைப்பற்றி குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஒரு வி வாதம் நடந்ததாக உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சிறுமியின் பாட்டி சனிக்கிழமை இந்தியாவுக்கு புறப்படவிருந்தார். சம்பவம் நடந்தபோது குடும்பத்தினர் இரவு உணவிற்கு வெளியே செல்லத் தயாராகி கொண்டிருந்தனர்.

அவர் நழுவி விழுந்தாரா அல்லது அது த ற்கொ லைதானா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
சிறுமியின் பெற்றோர், முழு அ திர்ச்சியில் உள்ளனர். யாருடனும் பேசும் நிலையில் இல்லை. அவர்கள் குடும்ப மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளனர் எனக்கூறியுள்ளார்.

குடும்ப நண்பர்களின் கூற்றுப்படி, பா திக்கப்பட்டவரின் தந்தை துபாயில் ஒரு முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் அவரது தாயார் யூடியூபில் உணவு சமைக்கும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் 200,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 110 சவரன் நகைகள் மாயம் : மருமகளுடன் சிக்கிய மாமனார்!!

வீட்டில் பு தைத்து வைத்திருந்த நகைகள் மா யமான விவகாரத்தில், மருமகளும் மாமனாரும் நாடகமாடியிருப்பது அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த துணி வியாபாரியான ராஜையனுக்கு, மனைவி மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்கள் அனைவருமே அருகருகே உள்ள இரண்டு வீடுகளில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மூத்த மகனின் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது முகத்தில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு, க ழுத்தில் து ப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் மூத்த மருமகள் பிரீத்தா கி டந்துள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் பிரீத்தாவிடம் விசாரித்த போது, கொ ள்ளையர்கள் இருவர் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொ ள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பிரீத்தாவும், அவருடைய மாமனார் ராஜையனும், வீட்டிலிருந்த 110 சவரன் தங்க நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரிடமும் பொலிஸார் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் வீட்டில் 110 சவரன் நகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை எனக்கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் கொடுத்த புகாரில் 110 சவரன் எனகூறியிருந்ததால் சந்தேகமடைந்த பொலிஸார், பிரீத்தா மற்றும் ராஜையனிடம் மட்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போதுதான் வீட்டிலிருந்தது 60 சவரன் நகை மட்டுமே என்பது தெரியவந்தது. அதில் 50 சவரன் நகைகளை விற்று இளைய மகளின் கடன்களை அடைத்த ராஜையன், 10 சவரன் நகைகளை மட்டுமே மூத்த மருமகள் பிரீத்தா முன்னிலையில் வீட்டின் மூலையில் புதைத்து வைத்துள்ளார்.

ஆள் இல்லாத சமயத்தில் அதனை எடுத்து சிறிது சிறிதாக செலவு செய்த பிரீத்தா, நகைகள் கா ணாமல் போனதாக அனைவரையும் நம்பவைக்கவே அப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்ட பொலிஸார், எ ச்சரித்துவிட்டு சென்றனர்.

தீக் கா யத்துடன் போ ராடிய பெ ண்ணின் உ டல் த கனம் : இருநாட்கள் பேச்சுவார்த்தைக்கு பின் எட்டிய முடிவு!!

பெ ண்ணின் உ டல்

கடந்த ஆண்டு பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட உன்னாவ் பெ ண்ணின் உ டல் பெற்றோர் சம்மதத்துடன் த கனம் செய்யப்பட்டது.

உன்னாவ் பகுதியை சேர்ந்த பெ ண் ஒருவர் கடந்த ஆண்டு பா லியல் வ ன்கொ டுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது குறித்து அவர் பொலிஸிசில் புகார் தெரிவித்து கு ற்றவாளிகள் சி றையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பி ணையில் வெளியில் வந்த அவர்களில் இருவர், உள்ளிட்ட ஐந்து பேர் அந்த பெ ண்ணை சி த்தரவ தை செய்து தீ யிட்டு எ ரித்தனர். இதில் 90 சதவிகிதம் கா யம் அடைந்த அந்த பெ ண் மருத்துவமனையில்  சி கிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உ யிரிழந்தார்.

இது குறித்து பெற்றோர் உ டலை வாங்க மறுத்தும், தங்களுக்கு மு றையான நீதி வேண்டியும் த கனம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அதிகாரிகள் நடத்திய பே ச்சுவார்த்தைக்கு பின் உ யிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 24 மணி நேரம் பொ லிஸ் பா துகாப்பு வழங்கப்படும் என்றும்,

சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், அவரது சகோதரனுக்கு து ப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதன்பின் தற்போது அந்த பெ ண்ணி உ டல் த கனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா உட்பட பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை

அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, மற்றும் பதுளை மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வவுனியா , திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, நுவரெலியா, மாத்தளை, அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 ஆயிரத்து 169 குடும்பங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 275 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 21 மாவட்டங்களை சேர்ந்த 51 ஆயிரத்து 573 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 931 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வயது குழந்தைக்கு எ மனாகிய மாறிய தென்னை மரம்!!

ஒரு வயது குழந்தை

கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் தென்னைமரம் சரிந்து வி ழுந்ததில் குழந்தை ஒன்று உ யிரிழந்துள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குழந்தையை அவரது பாட்டி குளிப்பாட்டிக்கொண்டிருக்கையில், தென்னைமரம் அடியோடு சரிந்து குழந்தையின் மீது வி ழுந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், குழந்தை உ யிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மழை காரணமாக 400 குடும்பங்களைச் சேர்ந்த 1308 பேர் பாதிப்பு : 105 வீடுகளும் பகுதியளவு சேதம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் மழை காரணமாக 400 குடும்பங்களைச் சேர்ந்த 1308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை, வெடிவைத்தகல், ஊஞ்சல்கட்டி, புளியங்குளம் தெற்கு, நெடுங்கேணி தெற்கு, மாமடு, அனந்தர் புளியங்குளம், கற்குளம், நைனாமடு, புளியங்குளம் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய 242 குடும்பங்களைச் சேர்ந்த 721 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 17 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரதேச செயலக பிரிவின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் பாதிப்படைந்ததுள்ளதுடன், 86 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மருதமடுவ பகுதியில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிப்படைந்துள்ளதுடன், இரு வீடும் சேதமடைந்துள்ளது. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1308 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 105 வீடுகள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன.

மேலும் ஒரு நலன்புரி நிலையத்தில் இருந்து மக்கள் மீள தமது இடங்களுக்கு திரும்பியுள்ள நிலையில் வவுனியா வடக்கில் மருதோடை, இராமனூர், புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 3 நலன்புரி நிலையமும், செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயத்தில் ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றது.

இன்று (08.12) பகல் மழை பெய்யாமையால் தாழ் நிலப்பகுதிகளின் வெள்ள நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி : பொலிஸார் சு ற்றிவளைப்பு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் வி பச்சார தொழிலை முன்னெடுத்த வீடொன்றை பொலிஸார் சு ற்றிவளைத்துள்ளனர். இதன்போது வி பச்சார தொழிலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் வாடகை வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்தே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இருவரும் அந்த வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். குறித்த வீட்டுக்கு அடிக்கடி புதுமுகங்கள் வந்து செல்வதனை அவதானித்த மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்படி சு ற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுற்றி வளைப்பின் போது இரு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இரு பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில் ஈடுபட்ட கணவன், மனைவியும் வடக்கில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் வலையமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.