நீர் வரத்து அதிகரித்தமை காரணமாக வவுனியா, பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் இன்று காலை திறக்கப்பட்டது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டமானது 19 அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ளது.
19 அடி 4 அங்குலமே கொள்ளளவாக உள்ள நிலையில் நீர் வரத்து அதிகரித்தமையால் தீடிரென ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு அதன் நான்கு வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.
மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தலைமையில் சென்ற நீர்பாசனவியலாளர்கள் பாவற்குளத்தின் நிலைமையை பார்வையிட்டதன் பின்னரே வான் கதவுகளை திறந்தனர்.
இதனால் பாவற்குளத்தில் கீழான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்பாசன திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எ திரான வ ன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எ திரான வ ன்முறைகளை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பினரின் ஏற்பாட்டில்,
வவுனியா இரண்டாம் குருக்குத்தெருவில் இன்று (08.12.2019) காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றதுடன், அதன் பின்னர் நெல்லிஸ்டார் விருந்தினர் விடுதியில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருந்தரங்கும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பால்நிலை வ ன்முறைகள், பெண்களுக்கு எதிரான வ ன்முறைகள், அவற்றில் இருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்து கொள்ளலாம்,
தேவையற்ற கர்ப்பங்களை எவ்வாறு தவிர்த்தல், குடும்பத்திட்டமிடல் முறைகள் சட்டவிரோதமான கருக்கலைப்பினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
டெங்கு நோய் தாக்கம் காரணமாக வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்குவதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. 550 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த பிராந்திய சுகாதார திணைக்களத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அந்தவகையில், தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுமாறும் பிராந்திய சுகாதார திணைக்களத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு மூடப்பட்டன.
இதனால் மாணவர்கள் பலரும் தனியார் வகுப்புக்களுக்கு வந்து மீண்டும் வீடு திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்டவர்களில் ஒருவரான சின்ன கேசவலுவின் கர்ப்பிணி மனைவி சாலையில் அமர்ந்து போ ராட்டம் நடத்தியதால் ப ரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த வாரம் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டு எ ரிக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேஷவலு ஆகியோர் நேற்று என் கவுண்டரில் பொலிசாரால் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.
இதில் சின்னகேஷவலுவின் 17 வயதான மனைவி ரேணுகா தற்போது கர்ப்பமாக உள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டியில் என் கணவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னையும் அவரை கொ லை செய்த இடத்துக்கு அழைத்து சென்று கொ ன்று விடுங்கள் என கதறினார்.
இந்நிலையில் என் கவுண்டரில் கொ ல்லப்பட்ட நால்வரின் ச டலங்களும் அரசு மருத்துவமனையில் பொலிசார் கட்டுப்பாட்டில் உள்ளது. நான்கு உ டல்களையும் ஒன்றாக த கனம் செய்ய பொலிசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சின்னகேசவலுவின் மனைவி ரேணுகா, தாய் ஜெயம்மா மற்றும் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போ ராட்டம் நடத்தினார்கள்.
அப்போது சின்னகேசவலுவின் உ டலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தங்கள் விவசாய நிலத்தில் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மு ன்வி ரோதம் காரணமாக கணவருடன் சேர்ந்துகொண்டு, கொ லை சம்பவத்தில் ஈடுபட்ட 23 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (30) – நிரஞ்சனா (25) என்கிற தம்பதியினருக்கும், மணிகண்டன் – ராஜேஸ்வரி என்கிற தம்பதியினருக்கு இடையே ஏற்கனவே மு ன்வி ரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், மணிகண்டன் தன்னுடைய மனைவியுடன் இலை அ றுப்பதற்காக சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த பாண்டீஸ்வரன் – நிரஞ்சனா தம்பதியினர், மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவியுடன் வா க்குவா தத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் வா க்கு வாதம் முற்றி கை கலப் பாக மாறியபோது, நிரஞ்சனா அ ரிவா ளால் மணிகண்டனை ச ரமாரியாக வெ ட்டியுள்ளார். இதில் ச ம்பவ இடத்திலேயே மணிகண்டன் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். மேலும் சம்பவத்தின் போது தடுக்க முயன்ற ராஜேஸ்வரிக்கும் ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், ப லத்த கா யமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். இ றந்து கி டந்த மணிகண்டனின் உ டலை மீ ட்டு பி ரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக, பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா தம்பதியினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்ஹராஜ வனத்திற்கு அருகாமையிலுள்ள லங்காகம என்ற பகுதியில் மக்கள் பயணிப்பதற்கு சீரான பாதைகள் இல்லாமையினால் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை கயிறு ஒன்றை பிடித்து தொங்கி கொண்டு பயணிக்கும் அ வலநிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நெடுஞ்சாலைகள், அதிவேக பாதைகள் என அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கையில் இப்படியான சூழல் முழுதாக மாற்றம் அடைய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், தற்போது மழை காலம் என்பதால் லங்காகம பகுதியில் உள்ள மக்கள் பாரிய ச வால்களை எதிர் கொண்டு வருகின்றனர். உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்த நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மீ ட்கப்பட்ட சிறுவன் நான்கு வயதுடைய சந்திரமோகன் சினியோன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அவரது ச டலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமானவர்களுக்காக உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கெரோலினி பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி 2020 போட்டியிலேயே அவர் இந்த பட்டத்தை வென்றுள்ளார்.
35 வருடங்களின் பின்னர் இலங்கையை சேர்ந்த ஒரு இந்த பட்டத்தை வென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
1984ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட தற்போதைய கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க இலங்கை சார்பில் அழகியாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுக்கள் வெட்டப்பட்டு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக வவுனியாவின் 95 வீதமான குளங்களின் நீர்மட்டம் அதகரித்துள்ளமையால் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் பட்சத்தில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக உடைப்பெடுக்கும் நிலையில் காணப்பட்ட 30 குளங்களின் அணைக்கட்டுக்கள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. செட்டிகுளம் பகுதியில் உடைப்பெடுத்த உடையார்குளம் அணை அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடைப்பெடுக்கும் நிலையில் காணப்படும் குளங்களை மண் பைகளைக் கொண்டு அணை அமைத்து தடுக்கும் நடவடிக்கைகளும் கமக்கார அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டு மக்களுடைய குறைகளை கேட்க சென்ற கிராமசேவகர் வெள்ளத்தில் அ டித்து செல்லப்பட்ட நிலையில் மீனவர்களால் மீ ட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊஞ்சல்கட்டி மற்றும் வெடிவைத்தகல் ஆகிய கிராமங்களின் கிராம சேவகராகப் பணியாற்றும் செல்வராஜா சுபாஸ் என்னும் கிராம சேவகரின் இரு பிரிவுகளும் மழையால் பாதித்த நிலையில்
ஊஞ்சல் கட்டி பிரதேச மக்களை பார்வையிட்ட பின்னர் வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கலாபோகஸ்வெவ பகுதிக்கு மோட்டர் சைக்கிளில் சென்ற போது கஜபாபுர பகுதியில் பாய்ந்து சென்ற ஆற்றில் அ டித்துச் செ ல்லப்பட்டார்.
இவ்வாறு கிராம சேவகர் அ டித்துச் செ ல்லப்பட்ட சமயம் அந்த ஆற்று நீரில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் உடனடியாக மூவர் ஆற்றில் குதித்து நீண்ட போ ராட்டத்தின் மத்தியில் கிராம சேவகரை மீ ட்டனர்.
இதன்போது கிராம சேவகர் காயமடைந்ததுடன், அவரது உடமையில் இருந்த கைத் தொலைபேசி மற்றும் பணப்பை உட்பட்ட அனைத்து உடமைகளும் அடித்துச் செல்லப்பட்ட நிலமையிலேயே மீ ட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட கிராம சேவகர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேநேரம் மோட்டர் சைக்கிள் நீண்ட நேரத்தின் பின்னர் மீட்கப்பட்டமையினால் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
சாதனையாளரான மாணவி ரோகிதாவை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (07.12.2019) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் கந்தப்பிள்ளை திலீபன் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா,
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வர்த்தக சமூகத்தினர், வைத்தியர்கள், சமூக சேவையாளர்கள்,
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை சமூகத்தினர், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், நகரசபை உறுப்பினர், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இ ரத்த ப ரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தின் மூலம் மாணவி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கையினை பரிசோதனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் கலந்து கொண்டவர்களின் விசேட உரைகள் இடம்பெற்றிருந்ததுடன் மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவியின் குறித்த கண்டுபிடிப்பை மேலும் மெருகூட்டி அதனை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்குதவற்கு பண உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடமிருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDEL INJECTOR) கண்டுபிடித்து
மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமையுடன் அவரின் வெற்றிக்கு பாடசாலை சமூகம் மாத்திரமே முழுமையான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டி, அலவத்துகொட விலான உடுகம பிரதேசத்தை சேர்ந்த நளிந்த லக்சான் விஜேதுங்க என்பவரது மனைவி தேவிகா உதயங்கனி ஜயசூரிய முதல் பி ரசவத்திலேயே 4 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பி ரசவம் பேராதனை வைத்தியசாலையில் நடந்துள்ளது. தாயும் குழந்தைகளும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆ ரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அக்குரணை பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் சிறிமல் விஜேதுங்கவின் மூத்த புதல்வரே நளிந்த லக்சான் விஜேதுங்க எனவும் அவர் அரச துறையில் பணியாற்றி வருவதாகவும் மனைவி தொழில் புரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்துள்ள நான்கு ஆண் குழந்தைகளுக்கு ஹிருத், வினுத், கெனுத் மற்றும் சனுத் என பெயரிட்டுள்ளதாக தந்தையான நளிந்த லக்சான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
நான்கு குழந்தைகளுக்கும் தாயால் பாலூட்ட முடியாது என்பதால், குழந்தைகளுக்கு பால் மா மூலம் பாலூட்டி வருவதாகவும் அந்த பால் மா டின் ஒன்றின் விலை ஆயிரத்து 500 ரூபாய் எனவும் அது ஒரு நாளுக்கே போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
தாயாருக்கு விசேட பால் மா வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் பிறந்த நான்கு குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு என்ற போதிலும் அந்த பொறுப்பை தைரியத்துடன் நிறைவேற்ற சகல நடவடிக்கை எடுப்பதாகவும் நளிந்த லக்சான் விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பிரியங்கா ரெட்டி என்ற பெண்ணை பா லியல் ப லாத்காரம் செய்து கொ லை செய்த கு ற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இதே போன்று தன் மகளுக்கும் நடந்திருப்பதாகவும், இதற்கு காரணமான நபரை தண்டிக்கும் படி க ண்ணீர் வடித்துள்ளார்.
ஹைதரபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் பெண்ணை பா லியல் ப லாத்காரம் செய்து கொ லை செய்த கு ற்றவாளிகளை பொலிசார் என் கவுண்டர் செய்தது தான் இப்போது இந்திய ஊடகங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கானா பொலிசாரை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சீமா சிங் என்பவர் தன்னுடைய மகளான Sara Sing அரசியல்வாதியான amanmani tripathi என்பவரால பலா த்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டாள்.
அந்த நபர் இப்போது சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறான். இதனால் தயவு செய்து இந்தியர்கள் அம்மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்தாயவுக்கு அ ழுத்தம் கொடுங்கள், உத்திரபிரதேச பொலிசார் அவரை என்கவுண்டர் செய்யுங்கள் என்று வே தனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட இணையவாசிகள் கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் 5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆ த்திரமடைந்த பெற்றோர் அவனை அ டித்து கொ ன்ற வ ழக்கில் தாய் மீதான கு ற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
Illinois-ஐ சேர்ந்தவர் ஆண்ட்ரூ ப்ரூயண்ட். இவர் மனைவி ஜோயன் குன்னிங்கம். இவர்களின் ஐந்து வயது மகன் ஏஜே ப்ரூயண்ட். கடந்த ஏப்ரல் மாதம் சிறுவன் ஏஜே, வீட்டில் உள்ள படுக்கையில் உட்கார்ந்திருந்த போது உடையுடன் அப்படியே சிறுநீர் கழித்துள்ளான்.
இதை பார்த்த ஜோயனுக்கு ஆ த்திரம் வந்த நிலையில் ஏஜேவை ச ரமாரியாக அ டித்துள்ளார், அவருடன் சேர்ந்து ஆண்ட்ருவும் அ டித்தார். ஒரு கட்டத்தில் ப லத்த கா யமடைந்த சி றுவன் ஏஜே உ யிரிழந்தான். இதையடுத்து அங்குள்ள ஆள் ந டமாட்டம் இல்லாத இடத்தில் ஏஜேவை இருவரும் சேர்ந்து பு தைத்துள்ளனர்.
பின்னர் பொலிசார் நடத்திய வி சாரணையில் இருவரும் கை து செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு வி சாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜோயன் மீதான கு ற்றச்சாட்டு தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டுகளில் இருந்து 60 ஆண்டுகள் வரை சி றை த ண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர் கூறியுள்ளனர். அடுத்த மாதம் ஜோயனுக்கான த ண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது. அதே சமயத்தில் ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
வவுனியாவில் தொடர்மழை காரணமாக 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் 5 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை, வெடிவைத்தகல், ஊஞ்சல்கட்டி, புளியங்குளம் தெற்கு, நெடுங்கேணி தெற்கு, மாமடு, அனந்தர் புளியங்குளம், கற்குளம், நைனாமடு, புளியங்குளம் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய 196 குடும்பங்களைச் சேர்ந்த 593 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 9 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் பாதிப்படைந்ததுள்ளதுடன், 45 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மருதமடுவ பகுதியில் ஒருவர் பாதிப்படைந்துள்ளதுடன், ஒரு வீடும் சேதமடைந்துள்ளது. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 55 வீடுகள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன.
மேலும் வவுனியா வடக்கில் மருதோடை, இராமனூர், பழையவாடி, புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 4 நலன்புரி நிலையமும், செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயத்தில் ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நிலையங்களில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ச்சியாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வட பகுதிகளிலும் அதிகளவான மழை பதிவாகியுள்ளது.
கிளிநொச்சியில் கொட்டித் தீர்த்த மழையினால் ஆயிரக் கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 34 அடி 1அங்குலமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து குளத்தின் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் அக்குளத்தின் கீழ் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.