எனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை : முத்தையா முரளிதரன்!!

முத்தையா முரளிதரன்

தனக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் போலியானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் போலியான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. நான் ஒரு விளையாட்டு வீரன். அரசியல்வாதி அல்ல. நான் எனது அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவி வருகின்றேன.

இந்த அறக்கட்ளை மூலம் பலருக்கு தன்னால் உதவ முடியும். இந்நிலையில், தனக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் போலியானது. இதனிடையே, தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை தொடர அனுமதிக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரிக்கிறேன், ஏனென்றால் அவர் நாட்டை வழிநடத்த சரியான நபர். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது,

அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு நிர்வாகி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர். அவர் ஒரு புத்திசாலி, அவர் சீர்திருத்தங்களைச் செய்வார், அபிவிருத்தி பாதையில் செல்வார், வாழ்க்கையை மேம்படுத்துவார், சரியானதைச் செய்வார்” என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இலங்கையின் பல இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பல பாகங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பலர் தமது தங்குமிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் பல இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின், தொற்று நோய்கள் தொடர்பான பிரதான வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை!!

அழகான குழந்தை

பிரித்தானியாவில் ஒன்றாக வாழ்ந்து வந்த பெண் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிரித்தானியாவின் Essex நகரின் Colchester பகுதியை சேர்ந்தவர்கள் Donna-Jasmine Francis-Smith. இவர்கள் இருவரும் பெண் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதால் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்த நிலையில், இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், முதலில் Donna-வின் கருமுட்டையில் நன்கொடையாக வாங்கப்பட்ட ஆணின் விந்தணு செலுத்தப்பட்டது. அதன் பின் டோனாவின் கருமுட்டையை எடுத்து, Jasmine Francis-Smith-ன் கருப்பைக்குள் வைத்துள்ளனர்.

இதனையடுத்து இருவரது கருமுட்டையையும், விந்தனுவையும் சேர்த்து கரு நன்றபடியாக வளர்ந்ததால், ஆரோக்கியமான ஆண் குழந்தையை இந்த தம்பதி பெற்றெடுத்துள்ளனர்.

உலகில் முதல் முறையாக பெண் ஓரினசேர்க்கை தம்பதியினர் ஒரு குழந்தைக்கு பெற்றோராக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணமான 20 நாட்களில் க லைந்த புதுமணப் பெண்ணின் கனவு : அ திர்ச்சியில் குடும்பம்!!

புதுமணப் பெண்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருமணமான 20 நாட்களில் இ ளம் பெண் ஒருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில், உறவினர்கள் ச ந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார் பூர்ணிமா. இவருக்கும் கார்திக் என்பவருக்கும் ஓராண்டு காதலுக்கு பின்னர் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு பூர்ணிமா தரப்பில் இருந்து பெற்றோரோ உறவினர்களோ எவரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய் அன்று பூர்ணிமா தமது கணவரின் வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அறிந்து அ திர்ச்சியடைந்த பூர்ணிமாவின் குடும்பத்தினர், கார்த்திக் தங்களது மகளை கொ ன்றுவிட்டு நா டகமாடுவதாக பு கார் அளித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பூர்ணிமாவின் உறவினர்கள் சனாத்நகர் காவல் நிலையத்தை மு ற்றுகையிட்டு ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடல் முழுவதும் ப ற்றிய நெ ருப்புடன் ஒரு கி.மீ ஓடிய இளம்பெண் : பயத்தில் அ லறிய பொதுமக்கள்!!

இளம்பெண்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வ ன்புண ர்வில் ஈடுபட்ட கு ற்றவாளிகள் நெ ருப்பு வைத்து கொ ல்ல மு யன்றதை அடுத்து உ யிர் த ப்ப இ ளம் பெ ண் ஓ டியது ஒரு கி. மீ தொலைவு என தெரியவந்துள்ளது.

கவுரா நகரில் இருந்து உன்னாவ் ரயில் நிலையம் வரை உ டல் மு ழுவதும் நெ ருப்புடன் அவர் ஓ டியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இருப்பினும் உ டல் மு ழுவதும் தீ ப ற்றி எ ரிந்த நி லையில் பெ ண் ஒருவர் உ தவி கேட்டு அ லறியபடி ஓ டியதை கண்டும் பொதுமக்கள் எவரும் உதவ முன்வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் சமையல் எரிவாயு உருளை கிடங்கு ஒன்றில் பணியாற்றும் ரவீந்திர பிரகாஷ் என்பவரிடம் சில நிமிடங்கள் அவர் உ தவிக்கு கோரியுள்ளார். கால்நடைகளுக்கு உணவு தயார் செய்யும் வேளையிலேயே பெண்ணின் அ லறல் ச த்தம் கேட்டதாக ரவீந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நெ ருப்புடன் பெ ண் ஒருவர் ஓ டி அருகே வந்ததும், தாம் பேய் களை து ரத்தும் ம ந்திரவாதியாக இருக்கலாம் என ஒருகணம் அ ஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார். காப்பாற்றவும் உதவி செய்யவும் அவர் கெ ஞ்சியபடி இருந்தார். மேலும் கையில் இருந்த பணப்பை மற்றும் மொபைலை அவர் பத்திரமாக வைத்திருந்துள்ளார்.

அவர்கள் தம்மை கொ ல்ல மு யன்றதாகவும் ரவீந்திர பிரகாஷிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த இளம் பெ ண்ணை கா ப்பாற்றியதுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

நாட்டை உ லுக்கிய உன்னாவ் கூ ட்டு பா லியல் வ ன்புண ர்வு சம்பவத்தில் பா திக்கப்பட்ட இளம் பெண் நீதிமன்றம் செல்லும் வழியிலேயே குறித்த கொ லை மு யற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த கு ம்பலில் சிலர் தமது த லையை குறிவைத்து தா க்கியதாகவும் அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து க த்தியால் தா க்கியதாகவும், பின்னர் பெ ட்ரோல் ஊ ற்றி நெ ருப்பு வைத்ததாகவும் அவர் அந்த பு காரில் தெரிவித்துள்ளார். இதனிடையே, குறித்த இளம்பெண் மீது தா க்குதல் தொடுத்த ஐவரில் மூவரை கை து செய்துள்ளதாக உன்னாவ் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

90 சதவிகித தீ க்காய ங்களுடன் மீ ட்கப்பட்ட அந்தப் பெ ண் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீ விர சி கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பிரியங்காவின் ஆன்மா இப்போது அமைதி அடைந்திருக்கும் : அவரின் தந்தை உருக்கமான பேட்டி!!

பிரியங்காவின் ஆன்மா..

பிரியங்கா கொ லை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நிலையில் பொலிசாருக்கு அவரின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி (26) கொ லை செய்யப்பட்ட வழக்கில் கைதான முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரும் இன்று அதிகாலை 3 மணியளவில் எ ன்கவுண் ட்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

இது குறித்து பிரியங்கா ரெட்டியின் தந்தை அளித்துள்ள பேட்டியில், என் மகள் உ யிரிழந்து பத்து நாட்கள் ஆகிறது. என்கவுண்ட்டர் சம்பவத்துக்காக பொலிசாருக்கும், அரசாங்கத்துக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது என் மகளின் ஆன்மா நிச்சயம் அமைதி அடைந்திருக்கும் என கூறியுள்ளார்.

பத்திரமாக மீ ட்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்!!

சிறுவன்

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5வயது சிறுவன், விளையாடி கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

15அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. சிறுவனுக்கு தேவையான தண்ணீரும் மருந்தும் அளிக்கப்பட்ட நிலையில், 8மணி நேர போ ராட்டத்திற்கு பின் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் மருத்துவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். சிறுவன் மீட்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

என்னையும் கொ ன்றுவிடுங்கள் : பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நபரின் கர்ப்பிணி மனைவி க தறல்!!

கர்ப்பிணி மனைவி க தறல்

பிரியங்கா வழக்கில் கை தாகி சு ட்டுக் கொ ல்லப்பட்ட நான்கு பேரின் குடும்பத்தாரும் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா கடந்த வாரம் ப லாத்கா ரம் செய்து கொ லை செய்யப்பட்டு எ ரிக்கப்பட்டார்.

இது தொடர்பில் பொலிசார் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரை கைது செய்து சி றையில் அடைத்த நிலையில் இன்று அதிகாலை பொ லிசாரை தா க்கிவிட்டு அவர்கள் த ப்ப முயற்சித்ததால் எ ன்கவு ண்ட்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

இது குறித்து முக்கிய கு ற்றவாளி முகமது பாஷாவின் தாய் கூறுகையில், என் மகன் போய்விட்டான், இது த வறு தான். இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என கூறினார். சிறுவனான ஷிவாவின் தாய் கூறுகையில், என் மகன் கு ற்றவாளி என நி ரூபிக்கப்பட்டால் மட்டும் அவனை கொ ல்லுங்கள் என அ ழுதபடி கூறினார்.

ஷிவாவின் தந்தை கூறுகையில், அது ஏன் இந்த வ ழக்கில் மட்டும் நால்வருக்கும் இது போன்ற த ண்டனை கொடுக்கப்பட்டது? இதே போல மற்ற வ ழக்குகளிலும் த ண்டனை தர வேண்டும் என கூறினார்.

அதே சமயம் நவீன் தந்தை கூறுகையில், நான் ஏற்கனவே கூறியதை போல என் மகன் உள்ளிட்ட நால்வரையும் சி றையில் அடைக்காமல் முதலிலேயே கொ லை செய்திருக்க வேண்டும். ஆனால் கடைசியாக ஒரு முறை மகனை பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என கூறினார்.

சின்னகேசவலுவின் தாய் ஜெயம்மா முன்னர் அளித்த பேட்டியில், என் மகன் மீது த வறு நிரூபனமானால் அவனையும் எ ரித்து கொ ல்ல வேண்டும் என கூறிய நிலையில் தற்போது கருத்து கூறவில்லை.

ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கும் சின்ன கேசவலுவின் மனைவிக்கு கணவரின் ம ரணம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ ழுதுகொண்டே பேசிய அவர், எங்களுக்கு திருமணமான ஒரு வருடத்துக்குள் என் கணவர் என்னை விட்டு போய்விட்டார்.

அவர் சு ட்டுக் கொ ல்லப்பட்ட இடத்துக்கு என்னையும் அழைத்து சென்று கொ லை செய்து விடுங்கள், அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என க தறியுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் – மே மாதமளவில் ஏற்படவுள்ள பாரிய மின்சார நெருக்கடி!!

மின்சார நெருக்கடி

எதிர்வரும் ஏப்ரல் -மே மாதங்களில் இலங்கையில் பெரும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என மின்வலு எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த நெருக்கடியானது மின்சாரம் துண்டிப்பு வரை செல்லக் கூடும் என கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.

அண்மைய காலத்தில் மின்சார தேவை அதிகரித்துள்ளதுடன் இதற்கு தேவையான மின்சார உற்பத்தி கட்டமைப்பு சேர்க்கப்படவில்லை என்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-தமிழ்வின்-

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இரணைமடு குளத்தின்..

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஆறு அங்குலம் அளவில் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக இன்று திறந்து விடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொதுமக்களும் அவதானமாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. குளத்தில் தேங்கியுள்ள மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இரணைமடு குளம் 36 அடி வரையில் நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் தற்போது வரையில் அதன் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. இருப்பினும் தொடர் மழைகாரணமாக அதிகளவு நீர் குளத்திற்கு வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் குளத்தின் இரண்டு வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுவருகின்றது.

எனவே இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் இது தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் உ யிருக்கு போ ராடிய சாரதி : தீவிர முயற்சியால் கா ப்பாற்றிய இளைஞர்கள்!!

கிளிநொச்சியில்..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாணங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளத்தில் சி க்குண்ட கார் ஒன்று அ டித்துச் செல்லப்பட்டுள்ளது.

எனினும் அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து அ டித்துச் செ ல்லப்பட்ட காரியிலிருந்த சாரதியை கா ப்பாற்றியுள்ளனர்.

அந்தப் பகுதியிலுள்ள பாலத்தில் சி க்குண்ட காரையும் இளைஞகள் நீண்ட போ ராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். மீ ட்கப்பட்ட சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பல இடங்களில் மின்தடை : பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிப்பு!!

மின்தடை

வவுனியாவில் நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் இன்று (06.12.2019) அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 10 மணிவரையிலான காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

வவுனியா வேப்பங்குளம், நெளுக்குளம், புளியங்குளம், போகஸ்வெவ, பூவரசங்குளம், செட்டிக்குளம் போன்ற பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இவ் விடயம் தொடர்பாக மின்சார சபையின் வடமாகாண தலமைக் காரியலாயத்தினை தொடர்பு கொண்டு கேட்டபோது,

வவுனியாவில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மின்தடங்கல் ஏற்படுவதாகவும் அதனை எமது ஊழியர்கள் விரைந்து நிவர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் நீரில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் : படகில் சென்று பரீட்சை எழுதும் மாணவர்கள்!!

நீரில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள்

நாட்டில் பெய்து வரும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி ஆனந்தபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஏற்பட்ட வெள்ள நீர் காரணமாக 168 பேர் பல இடங்களில் சிக்குண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராணுவ கட்டளையதிகாரியின் பணிப்புக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்திலும் கிளிநொச்சி இந்து வித்தியாலயத்திலும் காணப்படும் கல்வி பொது தராதர பரீட்சை மத்திய நிலையங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பரீட்சை மத்திய நிலையங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கீழ் மாடிகளில் உள்ள அனைத்து மேசை மற்றும் கதிரைகளை இராணுவ வீரர்கள் மேல் மாடிகளுக்கு கொண்டு சென்று பரீட்சைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் முன்னெடுக்க வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

மேலும் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களை இராணுவ வீரர்கள் படகு மற்றும் ட்ரக் மூலம் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவசர நிலை ஏற்படும் பட்சத்தித்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இராணுவத்தினர் ஆங்காங்கு சீராக வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா உட்பட பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : கனமழைக்கு வாய்ப்பு!!

சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் (காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில்) மாத்தளை, கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 – 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளின் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் பல மாவட்டங்களுக்கும் இன்று காலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை எழுதி பலருக்கும் முன்னுதாரணமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க எம்.பி!!

ரஞ்சன் ராமநாயக்க எம்.பி

நடைபெற்று வரும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பரீட்சை எழுதியுள்ளார். சட்டத்தரணியாகும் எதிர்பார்ப்பில் நேற்றைய தினம் ஆங்கில பரீட்சை எழுதியுள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க தோற்றினார். அவர் சட்டத்தரணியாகும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் பரீட்சை எழுதியுள்ளார்.

சட்டத்தரணியாக கற்பதற்கு ஆங்கில பாடத்தில் குறைந்த பட்சம் “C” சித்தி பெற்றிருக்க வேண்டும். இதனடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சாதாரண தர பரீட்சையில் ஆங்கில பரீட்சைக்கு முகம்கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் தனது எதிர்காலத்திற்காக பரீட்சை எழுதியுள்ளார். இது பலபேருக்கு முன்னுதாரணமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்குண்ட மக்கள் : மீட்கும் பணி தீவிரம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக வருகை தந்த இராணுவமும், கடற்படையினரும், குமுழமுனை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தற்போது மீட்பு பணியை மேற்கொள்ள படகு மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி விடயத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவும், சம்பந்தப்பட்ட அமைச்சும் கருத்திலெடுத்து துரித பணியை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டு நிற்கின்றனர்.

கடந்த வருடமும் முல்லைத்தீவு நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதியில் அனர்த்தத்தில் சிக்கியிருந்த மக்களை விமானத்தின் மூலம் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.