இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு!!

இரணைமடு..

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஆறு அங்குலம் அளவில் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

குளத்தில் தேங்கியுள்ள மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இரணைமடு குளம் 36 அடி வரையில் நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் தற்போது வரையில் அதன் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.

இருப்பினும் தொடர் மழைகாரணமாக அதிகளவு நீர் குளத்திற்கு வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் குளத்தின் இரண்டு வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுவருகின்றது.

எனவே இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் இது தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா!!

மாற்றுத்திறனாளிகள் தின விழா

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும் வரோட், ஓர்கான், சீட், என்டர்வேல்ட் , உயிரிழை , செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனம் , அன்பாலயம் என்பவற்றுடன் இணைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா வவுனியா நகரசபை கலாச்சார மண்டத்தில் இன்று (06.12.2019) காலை இடம்பெற்றது.

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் திறனாளிகள் இவர்கள் எனும் தொனிப்பொருப்பொருளில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இ.முஹமட் ஹனீபா மற்றும் விசேட விருந்தினர்களாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் , வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவர்ணராஜா,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிரேஸ்ட உளநல வைத்தியர் கலாநிதி சி.சுதாகரன் மற்றும். பங்காளி விருந்தினர்களாக வறோட் நிறுவனத்தின் இயக்குனர் வின்சன் டி போல் குரூஸ், உயிரிழை அமைப்பின் தலைவர் கோ.ஸ்ரீகரன், இலங்கை செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் கு.கணநாதன் மற்றும்

விருந்தினர்களாக தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் , பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வரோட் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பொது அறிவு வினாடி வினா இறுதிப்போட்டி, நடன நிகழ்வு, விழிப்புணர்வு உரை, நாடகம், விருந்தினர் உரை, பரிசில் வழங்கல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வாக்குறுதி!!

டக்ளஸ் தேவானந்தா

கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று (06.12.2019) காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முதலாவதாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன்,

வவுனியாவில் இ.போ.ச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினருக்கு இடையேயுள்ள பல்வேறு பிரச்சனைகளை தான் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்தார்.

அதன் பின்னர் வவுனியா பொதுச்சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்குள்ளவர்களிடம் அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார்.

இவ் விஜயங்களின் போது கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா , மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , வவுனியா வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு : 5க்கு மேற்பட்ட நிலையங்களில் மக்கள் தங்கவைப்பு!!

வவுனியாவில் கடும் மழை

வவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் அவர்கள் 5க்கு மேற்பட்ட நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (06.12.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.

வவுனியாவில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் அவர் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக 253 குடும்பங்களைச் சேர்ந்த 769 அங்கத்தினவர்கள் இது வரை 5க்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினுடாக பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படுகின்றது.

மேலும் வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்களில் 95 வீதமான குளங்கள் தற்போது வான்பாய்கின்றன. அத்துடன் வவுனியாவில் ஒரேஒரு குளம் மாத்திரம் (உடையார்கட்டுகுளம்) மாத்திரம் உடைந்துள்ளது.

அந்த குளம் கமநல சேவைகள் திணைக்களத்தின் நிதி ஏற்பாட்டுடன் குளம் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அத்துடன் குளங்களின் மேலதிக நீரை போக்குவதற்காக கமக்கார அமைப்பும் கமநல திணைக்களமும் இணைந்து சில முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!!

போக்குவரத்து பாதிப்பு

வவுனியா – மன்னார் பிரதான வீதியின் வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த பாரிய மரமொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் முறிந்து விழுந்துள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் பாதிப்படைந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் பொதுமக்கள் பாதையில் விழுந்திருந்த மரத்தினை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்துள்ளனர்.

அத்துடன் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பல்வேறு இடங்களில் வீதியோர மரங்கள் சரிந்து விழக்கூடிய அபாயம் இருப்பதால் பயணிகள் அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர்.

பிரியங்காவை ப லாத்காரம் செய்து கொ ன்ற சி றுவர்கள் உள்ளிட்ட நான்கு கொ டூரர்கள் சு ட்டுக் கொ லை : ப ரபரப்புத் தகவல்!!

ப ரபரப்புத் தகவல்

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பா லியல் வ ன்கொ டுமை செய்து, எ ரித்து கொ லை செய்ததாக கை து செய்யப்பட்ட 4 பேரும் எ ன்கவுண் ட்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் சில தினங்களுக்கு முன் லொறி டிரைவர் மற்றும் கிளீனர் என நான்கு பேர் கொண்ட கு ம்பலால் பா லியல் பலா த்காரம் செய்யப்பட்டு, கொ டூரமான முறையில் எ ரித்து கொ ல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் 18 வயது பூர்த்தியடையாத சி றுவர்கள் என தெரிகிறது.

கை து செய்யப்பட்ட நால்வரும் செர்லப்பள்ளி சி றையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொ லை செய்தனர் என பொலிசார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர்.

அப்போது 4 பேரும் த ப்பித்து ஓ ட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் எ ன்கவு ன்டரில் சு ட்டுக்கொ ன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எ ரித்துக் கொ ன்ற இடத்திலேயே இந்த எ ன்கவு ன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எ ண்கவு ண்டரின் போது மூன்று காவலர்களுக்கு கா யம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சு ட்டு கொ ல்லப்பட்ட பின்னர் நான்கு பேரின் ச டலங்களும் ஷத்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

என் க வுண்டரில் சு ட்டு கொ ன்றது எப்படி? : இன்று அதிகாலை ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையான 44 நெடுஞ்சாலை அருகே 4 பேரையும் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்களிடம் பெண் மருத்துவரை எப்படி கொ லை செய்தனர்? என பொலிசார் செய்து காட்டச்சொல்லியுள்ளனர்.

அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் நான்கு பேரும் த ப்பி ஓ டியதாக தெரிகிறது. அப்போது அவர்களை த டுக்க மு யன்ற பொலிசாரையும் தா க்கிவிட்டு 4 பேரும் த ப்பி ஓ டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொலிசார் த ற்காப்புக்காக 4 பேரையும் எ ன்கவு ன்ட்டரில் சு ட்டுக்கொன் றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு!!

பேக்கரி உற்பத்திகளின் விலை..

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல் வரி ஆகியன தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இவ்வாறு விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பனிஸ் வகைகள் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்தி வகைகளின் விலைகள் 5 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் பேக்கரி உரிமையாளர்களுக்கு பாரியளவு சலுகைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிச் சலுகை காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் என ஜயவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

8ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் கனமழை!!

கனமழை

கடந்த சில தினங்களாக நாட்டின் தென் பகுதியில் நிலவி வந்த தாழமுக்கம் , தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் நாட்களிலும் தொடர கூடிய வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளன.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும். அதிகாலை வேளையில் இப்பகுதிகள் அதிகளவில் இருளாக இருப்பதை அவதானிக்க முடியும். கருமுகில் கூட்டத்துடன் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை , நுவரெலியா போன்ற மாவட்டங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் கடற்கொந்தளிப்பு தன்மையையும் காணக் கூடியதாக இருக்கும். தெற்கு, வடகிழக்கு,மேற்கு பகுதிகளை அண்மித்த கடற்பகுதிகளில் கனமழை பெய்யும்.

நாளை மற்றும் நாளை மறுதினம் மழை சற்று குறைவடைந்தாலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் மழை வீழ்ச்சி தற்போதுள்ள அளவை விட அதிகளவாக பதிவாகும், என்று தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மூன்று கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு!!

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை..

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 3 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் பாதிப்படைந்துள்ளன.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்த வகையில், வவுனியா வடக்கு புளியங்குளம் வான் பாய்வதால் பழையவாடி கிராமத்திற்கான போக்குவரத்து பாதையும், வெள்ள நீர் வீதியை ஊடறுத்து பாய்வதால் வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை, சின்னபூவரசன்குளம் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளன.

மேலும் பல குளங்கள் உடைப்பெடுக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மன்னாரில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ம ரணம்!!

டெங்குக் காய்ச்சலால்..

மன்னாரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உ யிரிழந்துள்ளார்.

மன்னார் நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட மன்னார் சின்னக்கடையில் வசிக்கும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் 3ஆம் ஆண்டு கல்வி கற்ற மாணவியான மரியதாசன் டிவினியா (வயது 9) என்பவரே டெங்கு காய்ச்சலிற்கு உள்ளாகி உ யிரிழந்துள்ளார்.

முசலி மரண விசாரணை அதிகாரி ஏ.ஆர்.நசீர் மேற்கொண்ட ம ரண விசாரணையில் இறந்த சிறுமிக்கு கடந்த 30 ஆம் திகதி காய்ச்சல் வந்ததாகவும் பின் முதலாம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் மருந்து எடுக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும்,

ஆனால் காய்ச்சல் சுகமாகாததால் மீண்டும் 3ஆம் திகதி செவ்வாய்கிழமை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமையால் குறித்த சிறுமி இன்று அதிகாலை உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

த ற்கொ லை செய்து கொண்ட மாணவி : சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

மாணவி

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மா ணவி த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென கடந்த வாரம் வி ஷத்தை கு டித்து த ற்கொ லைக்கு முயன்றார். இதனையடுத்து உடனடியாக அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் மாணவிக்கு சிகிச்சையளித்த போது அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த தகவலை மருத்துவர்கள் மாணவியின் பெற்றோரிடம் கூறியபோது பெற்றோர்கள் அ திர்ச்சி அடைந்தனர்.

மேலும் மாணவியின் உ யிரை காப்பாற்ற வேண்டுமானால் வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு மாணவியின் பெற்றோர் ஒப்புக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து 6 மாத சிசு அகற்றப்பட்டது. இருப்பினும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்தார்.

இது குறித்து திருச்சி பொலிசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார் எனவும், த ற்கொ லை தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

5 ஆண்களால் உ யிருடன் எ ரிக்கப்பட்ட 23 வயது இ ளம் பெ ண் : மீண்டும் ஒரு ப யங்கர சம்பவம்!!

23 வயது இளம்பெண்

5 ஆண்களால் கொ டூரமான பா லியல் வ ன்புண ர்வின் இருந்து த ப்பிய பெ ண், தற்போது அதே கு ழுவினரால் உ யிருடன் தீ வை த்து எ ரிக்கப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த மார்ச் மாதம் ம ர்ம ந பர்களால் பா லியல் வ ன்புண ர்வு செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த பு காரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, இரண்டு பேரை கை து செய்து சி றையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜா மீனில் வெளிவந்த அந்த இரண்டு கு ற்றவாளிகள், தங்களுடைய கூட்டாளிகள் மூன்று பேருடன் சேர்த்து, அதிகாலை 4 மணியளவில் பு கார் கொடுத்த இளம் பெ ண்ணை க டத்தி சென்றுள்ளனர்.

ஊருக்கு வெளியே கொண்டு சென்றதும், உ டலில் ம ண்ணெண் ணையை ஊ ற்றி தீ வை த்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார், 70 சதவீத தீக்கா யங்களுடன் உ யிருக்கு போ ராடி கொண்டிருந்த இளம் பெ ண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் நி லை மோ சமடைந்ததால் தற்போது லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில் கூ ட்டாளிகள் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளார். த ப்பி ஓ டிய முக்கிய கு ற்றவா ளிகள் இருவரை தீ விரமாக தே டி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் ப ரபரப்பு தொற்றியுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவன் : மீட்புப் பணிகள் தீவிரம்!!

5வயது சிறுவன்

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5வயது சிறுவன், விளையாடி கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது 15அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சிறுவனுக்கு தேவையான தண்ணீரும் மருந்தும் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பேரிடர் மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தேவையாக மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், சி றுவனை உ யிருடன் மீட்க முடியும் என்று பொலிசார் தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!

ரயில் சேவைகள் பாதிப்பு

தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

பாதிப்பேற்பட்டுள்ள ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.

மண்சரிவு காரணமாக மலையக புகையிரத பாதையின் ஊடான சேவைகள் தாமதமாகலாம் என ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில் சேவைகள் அப்புத்தளை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் அனைத்து ரயில் சேவையும் பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு பண்டாரவளைக்கும், அப்புத்தளைக்கும் இடையில் பயணிகள் பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாரிய மண்சரிவு என்பதன் காரணமாக சீர்செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் : களத்தில் இறங்கிய கிராம அலுவலகர்கள்!!

அதிகரிக்கும் டெங்கு தாக்கம்

வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கிராம சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து வவுனியா பிரதேச செயலகம் டெங்கு ஒழிப்பு செயற்றிடத்தினை இன்று (05.12.2019) மதியம் 2.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வவுனியா நொச்சிமோட்டை பகுதியிலிருந்து வவுனியா நகர் வரையிலான வீதியின் (A9) இரு கரையிலும் காணப்படும் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள், போத்தல்கள் போன்றவற்றையினை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிராம சேவையாளர்கள் வீதியில் இறங்கி அசுத்தமென பாராது சேறு, பற்றைகள் போன்றவற்றிலும் இறங்கி அங்குள்ள குப்பைகளை அகற்றியிருந்தமை வீதியில் சென்ற பொதுமக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்தது.

வவுனியாவில் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் புகையிரத தண்டவாளம்!!

புகையிரத தண்டவாளம்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாண்டிக்குளம் குளத்தில் நீர் நிரம்பி வெளியேறுவதினால் தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத தண்டவாளம் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் குளத்தில் நீர் நிரம்பி மேலதிக நீர் கால்வாய் மூலம் வெளியேறி வருகின்றது. குறித்த கால்வாய் புகையிரத தண்டவாளத்திற்கு அருகே செல்கின்றது. கல்வாயினால் செல்லும் நீரின் மட்டம் புகையிரத தண்டவாளத்திற்கு இணையாக தற்போது உள்ளது.

தொடர்ச்சியாக வவுனியாவில் மழை பெய்யும் சமயத்தில் கால்வாய் நிரம்பி புகையிரத தண்டவாளம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.