எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமனம் : உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!

சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார். இது தொடர்பான முரண்பாடுகளை விரைவில் தீர்க்க கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும். அதன் பின்னரே சஜித் உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெறுவார்.

வவுனியாவில் 5 நாட்களில் 169.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி : மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்குமாம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 169.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த மாதம் 30ம் திகதி 34.8 மில்லி மீற்றர் , இம் மாதம் 1ம் திகதி 23.9 மில்லிமீற்றர் , 2ம் திகதி 30.3 மில்லி மீற்றர் , 3ம் திகதி 3.2 மில்லி மீற்றர் , 4ம் திகதி 77.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் (2018) மார்கழி மாதம் முழுவதும் 178.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில் 2019 மார்கழி மாதம் 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 135 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இம் மழை வீழ்ச்சியானது கடந்த வருடம் மார்கழி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் மார்கழி மாதம் அதிகளவில் பதிவாகியுள்ளது. அத்துடன் வடகீழ் பருவப்பெயர்ச்சி காற்றின் காரணமாக இம் மழை பெய்து வருவதுடன் மழை காலப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் என்பன குறைந்தளவு காணப்படும் என மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் கடும் மழை : 552 பேர் பாதிப்பு : 3 நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கவைப்பு!!

வவுனியாவில் கடும் மழை

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 180 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

அந்தவகையில், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நேரியகுளம் பகுதியில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45 வீடுகளும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது.

வவுனியா வடக்கில் மருதோடை கிராம அலுவலர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும், போகஸ்வெவ பகுதியில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும், கெம்பலிவெவ பகுதியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேரும்,

ஊஞ்சல் கட்டியில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேரும், புளியங்குளம் தெற்கில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் ஆக 180 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

புளியங்குளம் தெற்கு, மருதோடை, செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயம் என்பவற்றில் பாதிக்கபடபட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன்,

அங்கு 76 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக சமைத்த உணவை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சாதித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்!!

தெற்காசிய விளையாட்டுப் போட்டி

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கத்தையும், வெள்ளியையும் இலங்கை வீராங்கனைகள் வென்றெடுத்தனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைப்பெற்றுவரும் இந்தப் போட்டித் தொடர் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.38 மீற்றர் தாண்டிய சாரங்கி சில்வா தங்கத்தையும்,

வெள்ளிப் பதக்கத்தை 6.11 நீளம் பாய்தலில் அஞ்சனி புல்வன்ஸ வென்றார். இதன் வெண்கலப் பதக்கத்தை இந்திய வீராங்கனை வென்றார்.

சூடானில் பாரிய தீவிபத்து : 23 பேர் ப லி : மூன்று தமிழர்களை கா ணவில்லை!!

சூடானில் பாரிய தீவிபத்து

சூடானில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய தீவிபத்தில் 23 பேர் ப லியானதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் அந்த தொழிற்சாலை முற்றிலும் அழிந்துவிட்டதாக அந்நாட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தியர்கள் சிலர் ப லியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பணிப்புரிந்த தமிழர்கள் மூவரை கா ணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

இந்திய தூதரக தகவல்களின் அடிப்படையில், அங்கு பணியாற்றிய மூன்று தமிழர்களை கா ணவில்லை என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராமகிருஷ்ணன், வெங்கடாசலம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். தீ விபத்துக்கு பிறகு அவர்களின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.

ஜெயக்குமார் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முகமது சலீம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : பொதுமக்களே அவதானம்!!

சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டை அண்டியுள்ள வளிமண்டலத்தில் நிலவும் சீரற்ற நிலை காரணமாக இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள 25 அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அதன் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதற்காக பொலிசார் மற்றும் முப்படையினரி;ன் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அனர்த்தம் ஏற்படலாமென இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு கூடுதலான அளவு நீர் வந்து சேர்வதால், அதன் வான் கதவுகளை திறக்க நேரிட்டிருப்பதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பிரதான நீர்ப்பாசனப் பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவித்தார்.

இதன்படி இன்றும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி வளவ்வ கங்கையை அண்டியுள்ள தாழ்நில பிரதேச மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

பதுளையில் பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்து, பதுளை – பஸ்ஸறை வீதி ஆபத்து மிக்கதாகத் திகழ்கிறதென மாவட்ட இடர்காப்பு நிலையம் அறித்துள்ளது. அந்த வீதி இன்று காலை வரை மூடப்பட்டிருக்கும். எல்ல – வெல்லவாய வீதியும் ஆபத்தானதாக மாறியிருக்கிறது.

அங்கு மலையில் இருந்து கற்கள் உருண்டு விழக்கூடிய அபாயம் நிலவுகிறது. இது பற்றி மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

யாழில் சூரிய கிரகணத்தை அவதானிக்க விசேட ஏற்பாடுகள்!!

சூரிய கிரகணம்

இலங்கையின் வடபகுதியில் சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 26ம் திகதி அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு என்பன இணைந்து முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களை யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம்

ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் இன்று (05.12.2019) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபையின் உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நினைவுத் தூபிக்கான மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தமிழருவி சிவகுமார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றிருந்தது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 1997.04.04 அன்று நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு நாட்களில் 160 கட்டாக்காலி மாடுகள் நகரசபையினரால் பிடிப்பு!!

கட்டாக்காலி மாடுகள்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கடந்த சில நாட்களாக கட்டாக்காலி மாடுகளினால் தினசரி வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூராக காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு நாட்களில் மாத்திரம் 160க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகளை வவுனியா நகரசபையினர் பிடித்துள்ளனர்.

வவுனியா நகரசபையினரால் கடந்த 02.12.2019 அன்று இரவு ஐந்து மணித்தியாலயத்தினுள் 90 மாடுகள் பிடிக்கப்பட்டதுடன் நேற்றையதினம் (04.12.2019) இரவு 11 மணி முதல் இன்று (05.12.2019) அதிகாலை 4 மணிவரை வவுனியா நகரசபையினரால்

வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிகுளம், திருநாவற்குளம், கோவிற்குளம் போன்ற பகுதிகளில் 70க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 02.12.2019 அன்று வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட 90 மாடுகளில் 86 மாடுகளின் உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி மாட்டினை பெற்றுள்ளதுடன் நேற்றையதினம் (04.12.2019) பிடிக்கப்பட்ட மாடுகள் உட்பட தற்போது 76 மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் கழிவகற்றல் நிலையத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளில் வவுனியா நகரசபை உறுப்பினர்களில் மாடுகளும் உள்ளடங்குவதுடன் தண்டப்பணம் செலுத்தி பெற்றுக்கொண்ட மாடுகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

பிரசவத்திற்கு மூங்கிலில் தூக்கிச் செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி : கலங்க வைக்கும் காட்சி!!

தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மூங்கிலில் தூக்கிச்செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் கிராமப் புற பகுதிகளில் அவசர உதவிக்கும், ச டலத்தைச் எடுத்துச் செல்வதற்கும் ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டு வருவது தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

2016ம் அண்டு ஒரிசா மாநிலத்தில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட டானா மஜி, இ றந்த தனது மனைவியின் ச டலத்தை தோளில் சுமந்தபடி மகளுடன் சாலையில் நடந்துச்சென்றது நாட்டையே உலுக்கியது.

இந்த வரிசையில், தமிழகத்தின் ஈரோட்டு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டுள்ளது.

இதனயைடுத்து, உறவினர்கள் மூங்கிலில் தொட்டில் அமைத்து 6 கி.மீற்றர் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்பகுதியில் இருக்கும் மோசமான சாலைகளால் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிதாபமாக உ யிரிழந்த குழந்தைகள் : மீளா து யரத்தில் தந்தை செய்த தியாகம்!!

தந்தை செய்த தியாகம்

தமிழகத்தில் சுவர் விழுந்து வி பத்துக்குள்ளானதில் உ யிரிழந்த மகன், மகளின் கண்களை டீக்கடை தொழிலாளி தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உ யிரிழந்தனர்.

இதில், அங்கிருக்கும் தேநீர் கடையில் பணிபுரியும் செல்வராஜின் குழந்தைகள் நிவேதா (18) மற்றும் ராமநாதன் (15) ஆகியோரும் அடங்குவர். சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி லட்சுமியை இ ழந்த செல்வராஜ், ஒற்றை பெற்றோராக , உறவினர்களின் உதவியுடன் தனது இரு குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார்.

இரண்டு குழந்தைகளையும் இ ழந்து செல்வராஜின் வ லி கற்பனை செய்ய முடியாதது. ஆனால், அவர் தனது தனிப்பட்ட வ ருத்தத்திற்கு அப்பால் சிந்தித்து தனது குழந்தைகளின் கண்களை தானம் செய்ய முடிவு செய்துள்ளார்.

கண் தானம் சாத்தியம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது, நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அவர்களின் உடல்கள் பூமிக்கு அல்லது நெருப்பிற்கு கொடுக்கப்படலாம். இந்த வழியில், அவர்களின் கண்கள் இரண்டு பேருக்கு உதவியாக இருந்தால், அது ஒரு நல்ல செயலாக இருக்கும் என்று செல்வராஜ் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான 59 வயதான சிவசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது டிசம்பர் 17 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் வெளியில் சென்றால் ப லாத்காரம் செய்வோம் : திமிராக பேசிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

இளைஞனுக்கு நேர்ந்த கதி

ஐதராபாத்தில் கொ லை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் குறித்து, சமூகவலைத்தளத்தில் மோசமான கருத்துக்களை பதிவிட்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களால் து ஸ்பிரயோ கிக்கப்பட்டு, உ யிருடன் எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் கொ ந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கு ற்றவாளிகளுக்கு க டும் த ண்டனை கொடுக்க வேண்டும் என பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சவன் ஸ்ரீராம் என்கிற 22 இளைஞர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், ”பெண்கள் வெளியில் சென்றால் நாங்கள் அவர்களை வ ன்புண ர்வு செய்யக்கூடாதா? எல்லா பெண்களும் இதுபோல வ ன்புண ர்வு செய்யப்பட வேண்டும்,” என மோசமான கருத்துக்களை பதிவிட்டிருந்துள்ளார்.

இதனை உற்றுக்கவனித்த சைபர் கி ரைம் பொலிஸார், நவம்பர் 30 ம் திகதியன்று தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் செவ்வாய்க்கிழமை அன்று அந்த இளைஞரை கைது செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

பசிக் கொ டுமையால் மணலை அள்ளி சாப்பிட்ட குழந்தைகள் : அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

இந்தியாவில் பசிக் கொ டுமையால் மணல் அள்ளி சாப்பிட்ட குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவரது தாயாருக்கு அதிகாரிகள் வேலை வழங்கி உதவியுள்ளனர்.

கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு பசிக் கொ டுமையால் இரு குழந்தைகள் தரையில் கிடக்கும் மணலை அள்ளி சாப்பிடும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

அதன் பின் இந்த வீடியோ குறித்து திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குழந்தைகளின் தாயார் பெயர் ஸ்ரீதேவி என்பதும், அவரது கணவர் ம து போ தைக்கு அ டிமையானவர் என்பதால், 6 குழந்தைகளை வைத்துக் கொண்டு வறுமையில் வாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ரீதேவியிடம் இருந்து 4 குழந்தைகளை மீட்ட அதிகாரிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

aமீதமுள்ள இரண்டு குழந்தைகளையும் தாயின் பொறுப்பிலேயே ஒப்படைத்ததுடன், திருவனந்தபுரம் மாநகராட்சியில் தற்காலிக வேலைக்கும் ஏற்பாடு செய்தனர்.

மேலும் மாநகராட்சி குடியிருப்பில் வசிக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதைக் கண்ட இணையவாசிகள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

யாழில் வா ள் வெ ட்டு தா க்கு தல் : வெ ட்டுக் கா யங்களுடன் மீ ட்கப்பட்ட இ ளைஞன் ம ரணம்!!

யாழில்..

யாழ்.கல்வியங்காடு பகுதியில் கே மி கு ழுவின் த லைவரின் ச கோதரனை இ னந்தெரி யாத ந பர்கள் வா ளால் வெ ட்டி கொ லை செ ய்துள்ளதாக கோப்பாய் பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ந பரை கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெ ட்டு கா யங் களுடன் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் வீ சியதாக அதனைக் கண்ட அப்பகுதியிலுள்ளவர்கள் பொ லிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த தகவலின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் அந்த ந பரை மீ ட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அ னுமதித்துள்ள நிலையில் சி கிச்சை ப லனின்றி இன்று உ யிரிழந்து ள்ளார்.

இதன்போது 26 வயதுடைய அஜித் என்ற இ ளைஞரே வெ ட்டுக் கா யங்க ளுக்குள்ளான நிலையில் உ யிரிழந்துள்ளார். போ தைப் பொ ருள் வி யாபாரத்தினால் ஏற்பட்ட மு றுகல் நி லையினால், மற்றைய கு ழுவினர் கொ லை செய்திருக்கலாமென பொலிஸாரின் மு தற்கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கே மி கு ழுவின் தலைவரது மற்றொரு சகோதரனும், அவரது நண்பரும், பிறிதொரு இடத்திற்கு வா ள் வெ ட்டை மேற்கொள்ளச் சென்ற போது, யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கை து செய்யப்பட்டுள்ளனர். கை து செய்யப்பட்டவர்களிடம் வி சாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் (அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்தவிற்கு கடிதமொன்றை எழுதியனுப்பியுள்ள லண்டன் சிறுவன்!!

பிரதமர் மஹிந்தவிற்கு..

லண்டனை சேர்ந்த சிறுவனொருவர், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் தொடர்பில் பிரதமர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில்,

அப்துல்லா அபுபயிட் அனுப்பிய கடிதம் இன்று காலை எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்திற்காக அவருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். இந்த கடிதம் எனக்கு உந்துதல் மற்றும் ஊக்குவிப்பை அளித்துள்ளது. மேலும் பழைய தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும்