வவுனியாவில் அனர்த்தம் ஏற்பட்டால் உடன் நடவடிக்கை எடுக்கத் தயார்!!

வவுனியாவில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் பிரதேச செயலாளர் ஊடாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக உடன் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகவியலாளர்கள் வவுனியாவின் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வெங்கல, செட்டிகுளம், ஆண்டியா புளியங்குளம் கிராம சேவகர் பிரிவில் உடையார்கட்டு குளம் உடைப்பெடுத்தமையால் 60 ஏக்கர் நெற்பயிரில் 15 ஏக்கர் காணி முற்றாக பா திப்படைந்திருக்கின்றது.

குறித்த உடைப்பெடுத்த குளத்தினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஒதுக்கீட்டின் மூலம் கமக்கார அமைப்பினூடாக திருத்தப்பட்டு இப்பகுதிக்குரிய நீர்ப்பாசனத்தை மீண்டும் மேற்கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.

இந்த அடிப்படையில், தொடர்ந்தும் மழை பெய்து வவுனியா மாவட்டத்தில் ஏதாவதொரு பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாக இருந்தால் அந்த பகுதிக்குரிய பிரதேச செயலாளர் ஊடாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் உதவியுடன் உடனடி வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா-2019

வருடாந்த கலைவிழா-2019

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் 2020  பாடசாலை  செல்லவுள்ள  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு கடந்த 01.12.2019  ஞாயிற்றுகிழமை  பள்ளியின்  நிர்வாக இயக்குனர் S.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி  நிகழ்வில்  வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி திரு சொர்ணராஜா முதன்மை விருந்தினராக கலந்து  கொண்டார்.  நிகழ்வில்  T.நர்த்தனகரன்(கணக்காளர் மதவாச்சி பிரதேச செயலகம்), N.பாஸ்கரன் (முகாமையாளர் -பனை அபிவிருத்தி சபை),T.இராஜேஸ்வரன்(உதவி கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி,வவுனியா வடக்கு வலயம்),

R.பாலரூபன்(முகாமையாளர் அலியான்ஸ் இன்சூரன்ஸ் யாழ்ப்பாணம்),  T.செந்தூரன்(  மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,கிளிநொச்சி), T.துஷ்யந்தன்(சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்,கிளிநொச்சி)  , S.திருமுகன் (விஸ்ணு பவுண்டேஷன்), R.சதீசன் (விற்பனை மேம்பாட்டு உத்தியோகத்தர் -கிரவுன் லிமிடெட்), N.ஜனகதீபன் (ஊடகவியலாளர் -வவுனியா) ஆகியோரும்  சிறப்பு மற்றும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படிநிகழ்வில்  இரண்டாம்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை  கௌரவிக்கும்  நிகழ்வும்  முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நிறைவில் ஒளிவிழா மற்றும்  சிறுவர்களுக்கான பரிசளிப்பு  வைபவமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் சாதித்த மலையகத் தமிழன்!!

குமார் சண்முகேஸ்வரன்

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று குமார் சண்முகேஸ்வரன் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று காலை கடும் குளிருக்கு மத்தியில் நடைப்பெற்ற 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் குமார் சண்முகேஸ்வரன் கலந்துகொண்டார்.

தொடர்ந்து தான் பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டியிலேயே பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
இவர் பந்தயத் தூரத்தை 30 நிமிடம் 49.20 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வெற்றிபெற்றுள்ளார்.

இதில் தங்கத்தை இந்தியாவும் (30.49.20), வெண்கலத்தை நேபாளமும் (30.50.06) வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

இராமகிருஷ்ணன் சுகந்தன்

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து, அடையாளங்களையும் பெற்றுவிடுகின்றனர்.

அந்தவகையில் நமது பார்வையில் சிக்கிய வவுனியா குருமன்காடு பிரதேசத்தைச் சேர்ந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனான இராமகிருஷ்ணன் சுகந்தன் எனும் கலைஞரின் திறமையினை வெளிக்கொணர்வதில் வவுனியா நெற் இணையத்தளம் மகிழ்ச்சியடைகிறது.

ஒரு புகைப்படத்தினைப் பார்த்தால் அதனை அப்படியே போட்டோபிரதி எடுப்பது போல அச்சுஅசலாக வரைவதுதான் சுகந்தனின் அசாத்திய திறமை. ஓவியம் வரைவது தவிர சுகந்தன் வர்ணம் பூசுதலிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

இவருக்கு வவுனியா நெற் இணையத்தள வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவரை வாழ்த்த விரும்புபவர்கள் 0771017066 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு வாழ்த்துங்கள். இவரது புகழ் பரவ இச் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வவுனியா செட்டிகுளம் விவசாயிகளின் அவலம்!!

செட்டிகுளம் விவசாயிகளின் அவலம்

வவுனியா – செட்டிகுளத்தில் விவசாயிகள் யானைகளின் தொல்லைக் காரணமாக பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தினமும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளினால் அவர்களின் விவசாய நிலங்கள் அழிவடைந்து வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுமார் 60 ஏக்கர் வரையிலான உழுந்து பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள நிலையில் பல ஏக்கர் நெல் பயிர்ச்செய்கையும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரசடிகுளம், மதவுவைத்தகுளம், பாவக்குளம், ஒன்பதாம் யூனிட் பெரிய புளியாலங்குளம் ஆகிய கிராம விவசாயிகளே யானையினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

நேற்றிரவு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடிமனைகளுக்குள் புகுந்தமையினால் உழுந்து பயிர்ச்செய்கைகள் மற்றும் நெல் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செட்டிகுளம் பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ந. விமலேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்.

விவசாயிகள் தமது செய்கைக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தால் நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு எம்மால் ஆவண செய்யப்படும். இது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கமநல காப்புறுதி அபிவிருத்தி சபை மற்றும் சில தனியார் வங்கிகளிலும் இவ்வாறு காப்புறுதி செய்ய முடியும். கடந்த வருடமும் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகளுக்கு நாம் காப்புறுதியை பெற்றுகொடுத்திருந்தோம்.

ஆகவே காப்புறுதி செய்யப்பட்ட விவசாயிகளாயின் அவர்களுக்கு எம்மால் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மண்சரிவில் கா ணாமல் போயுள்ள மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் நிறைவு!!

மண்சரிவில்..

வலப்பனை- மலபட்டாவ பிரதேசத்தில் மண்சரிவில் கா ணாமல் போயுள்ள 15 வயது மா ணவனின் ச டலத்தை தே டும் பணிகளை, நேற்று மாலையுடன் நிறைவு செய்ததாக நுவரெலியா மாவட்ட இ ராணுவத்தின் பிரதானி மேஜர் அசித்த ரணதிலக்க தெரிவித்தார்.

மேற்படி இடத்தில் ஏற்பட்ட மண்சரிவால் நால்வர் மண்ணுள் பு தையுண்டதுடன், அவர்களில் மூவர் ச டலமாக மீ ட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி மூன்றாவது நாளான நேற்று வரை தொடர்ந்ததுடன் இறுதியில் மீட்புப் பணி நேற்று கைவிடப்பட்டது.

இதனையடுத்து, வலப்பனை- மலபட்டாவ பிரதேசத்தில், சனிக்கிழமை மண்சரிவு இடம்பெற்ற இடத்துக்கு அருகில் காணப்படும் கற்குவாரியை உடனடியாக அப்புறப்படுத்துமாறு, வலியுறுத்தி, பிரதேச மக்கள் நேற்று சத்தியாகிரக போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலப்பனை ஸ்ரீ தர்மராஜாரமய விகாரையின் விகாராதிபதி தலைமையில், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து, வலப்பனை- கண்டி வீதி, நாரன்தலாவ சந்தியை மறித்து, சத்தியாக்கிரகப் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கற்குவாரியானது, சீன நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டு வருகிறது. கற்குவாரியின் ஆ பத்தை முன்கூட்டியே உணர்ந்துகொண்டதால், மண்சரிவால் உ யிரிழந்த பண்டார என்பவர், கடந்த வருடம், கற்குவாரிக்கு எதிராக போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன்,

அந்த இடத்திலிருந்து தான் போகப்போவதில்லை என்று தெரிவித்து, ஆ ர்ப்பாட்டம் மேற்கொண்டார் என, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்தக் கற்குவாரி தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கும் வரை, தாம் சத்தியாகிரகத்தைக் கைவிடப் போவதில்லை என்று, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின் மத்திய மாகாண ஆளுநர் இது தொடர்பில் ஆராய்ந்து இதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று இரவு வேளையில் கலைந்து சென்றுள்ளனர்.

மேலும் அ னர்த்தம் இடம்பெற்ற மலபட்டாவ- கல்வல பகுதியில் ஆ பத்தான இடத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரும் நிலையில், இவர்கள் தற்போது, 2 விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச செயலகமும், பிரதேசவாசிகளும் வழங்கி வருகின்றனர்.

நாட்டு மக்களுக்காக பிரதமர் மஹிந்த எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை!!

பிரதமர் மஹிந்த

நாட்டு மக்கள் தமது குறைகளை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மக்கள் இலகுவாக தொடர்பு கொள்ளும் வகையில் மக்கள் பிரிவு ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த அலுவகலம் இலக்கம் 101, ஆர்.டீ.மெல் மாவத்தை கொள்ளுப்பிட்டி என்ற முகவரியில் அமைந்துள்ளது.

பா திக்கப்படும் எந்தவொரு பொதுமகனும் இங்கு முறையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிய முறைப்பாடுகள் அமைச்சுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படவுள்ளன. பி ரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதா என்பது பற்றியும் கண்டறிய பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியாக உயர்வு : மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!!

ரணைமடு குளத்தின் நீர்மட்டம்..

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு குளங்கள் அடைவு மட்டத்தை அடைந்துள்ளதுடன், நீர்ப்பாசன குளங்கள் சில வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

வடக்கு மாகாணத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இன்று பகல் 26 அடியாக உயர்ந்துள்ளது. 36 அடி கொண்ட குறித்த குளத்திற்கு நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அக்கராயன் குளம் (25 அடி) 17.6 அடியாகவும், கரியாலை நாகபடுவான்குளம் (10அடி) 6.2 அடியாகவும், புதுமுறிப்பு குளம் (19 அடி) 14.6 அடியாகவும் உயர்ந்துள்ளது.

அதேவேளை கிளிநொச்சி கல்மடு குளம், பிரமந்தனாறுகுளம், குடமுருட்டிகுளம், வன்னுரிக்குளம், கனகாம்பிகை குளம் ஆகியன அடைவு மட்டத்தை அடைந்து வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இன்று மாலைவரை பாரிய மழைவீழ்ச்சி பதிவாகாத நிலையில் ஏற்கனவே பெய்த மழை நீரின் வருகை குளங்களில் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

நீர் நிலைகள் மற்றும் வான் பாயும் பகுதிகளில் நீராடுதல், சிறுவர்கள் விளையாடுதல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும், அவ்வாறான பகுதிகள் மற்றும் கழிவு நீர் வெளியேறும் ஆற்றுப்படு்கைகளை அண்மித்துள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்க்கும் வகையில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

வவுனியா நகரசபையின் அதிரடி : ஒரே நாளில் 90 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!!

வவுனியா நகரசபையின் அதிரடி

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் தினசரி ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்,

வவுனியா நகரசபையினால் நகரசபை உறுப்பினர்களின் மாடுகள் உட்பட 90க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் (02.12.2019) இரவு 11 மணி முதல் நேற்று (03.12.2019) அதிகாலை 4 மணிவரை 90க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் கழிவகற்றல் நிலையத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக வவுனியாவில் இக் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கனமழை : பாவற்குளத்தின் நீர்மட்டம் 11 அடியாக உயர்வு!!

பாவற்குளத்தின் நீர்மட்டம்..

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 2 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக மத்திய நீர்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழான பாவற்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 2 அங்குலமாகவும், முகத்தான்குளம் 8 அடி 7 அங்குலமாகவும், ஈரப்பெரியகுளம் 8 அடி 8 அங்குலமாகவும் மருதமடு குளம் 11 அடி 5 அங்குலமாகவும், இராசேந்திரகுளம் 8 அடி 6 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.

மருதமடு குளத்தில் இன்னும் 5 அங்குல நீர்மட்டம் உயர்வடைந்தால் வான் கதவுகள் திறக்கப்படும். அத்துடன் அருவி ஆறு 3 அங்குலம் பாய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருமணமான அடுத்தநாளே மாரடைப்பால் உ யிரிழந்த புதுப்பெண் : கண்ணீருடன் இறுதிச்சடங்கு செய்த புதுமாப்பிள்ளை!!

புதுப்பெண்

இந்தியாவில் திருமணமான அடுத்த நாளே புதுப்பெண் மாரடைப்பால் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகுளம் மாவட்டத்தில் உள்ளது கருடாகண்டி கிராமம்.

இந்த கிராமத்தை சேர்ந்த கோபிநாத் சுரேஷ் என்ற இளைஞருக்கும், தமயந்தி என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து அடுத்தநாள் 29ஆம் திகதி திருமண மண்டபத்தில் இருந்து கணவர் வீட்டுக்கு அவருடன் கிளம்ப புதுப்பெண் தமயந்தி தயாரானார். அப்போது தி டீரென தமயந்தி சுருண்டு கீழே வி ழுந்தார்.

இதையடுத்து ப தறிப்போன அவர் கணவரும் குடும்பத்தாரும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தமயந்தியை ப ரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உ யிரிழந்துவிட்டதாக கூறினார்கள்.

இதனால் அங்கிருந்த அனைவரும் அ திர்ச்சியடைந்தனர். இதையடுத்து தமயந்தியின் உடலுக்கு அவர் கணவர் குடும்பத்தாரே கண்ணீருடன் இறுதிச்சடங்கு நடத்தினார்கள்.

இணையத்தில் வைரலான சிறுமியின் வீடியோ : நேரில் சென்று இன்ப அ திர்ச்சி கொடுத்த இளவரசர்!!

இன்ப அ திர்ச்சி..

அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அமீரக ஆ யுதப் ப டைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 48 வது ஐக்கிய அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஒரு இளம் எமிராட்டி சிறுமியை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

48 வது ஐக்கிய அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு, சவுதி மகுட இளவரசர் முகமது பின் சல்மானுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அபுதாபியின் மகுட இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் கலந்துகொண்டார்.

அவர்கள் இருவரும் நடந்துவரும் போது சிறுமிகள் பலரும் அவர்களுடன் கைகுலுக்கினர். எதிர்பாராத விதமாக ஆயிஷா என்கிற சிறுமிக்கு மட்டும் இளவரசர் கைகுலுக்க தவறவிட்டு நடந்து சென்றுவிட்டார்.

இதனால் அந்த சிறுமி ஏமாற்றமடைவதை போல இருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது. அதன்பின்னரே இதனை அறிந்துகொண்ட இளவரசர், உடனடியாக சிறுமியின் வீட்டிற்கு சென்று இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார்.

உணவு சாப்பிட வர மறுத்த மாணவி : அறைக்கு திரும்பிய தோழிகளுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி

பல்கலைக்கழக விடுதியில் கல்லூரி மாணவி தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மைதிலி(23) என்கிற மாணவி பிஎஸ்சி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.

நேற்றைய தினம் கல்லூரி முடிந்து விடுதி திரும்பிய மைதிலி யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். இரவு உணவு சாப்பிட அறைத்தோழிகள் அழைத்தும் கூட செல்ல மறுத்துள்ளார்.

பின்னர் இரவு உணவு முடித்துவிட்டு அறைக்கு திரும்பிய மாணவிகள், மைதிலி தூ க்கில் தொ ங்குவதை பார்த்து பெரும் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக இந்த தகவல் கல்லூரி நிர்வாகத்திற்கும், பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், மாணவியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மைதிலியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் மகளின் இ றப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் கொ ல்லப்பட்ட இந்திய இளம்பெண் : கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்!!

இந்திய இளம்பெண்

கனடாவில் கொ ல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணுக்கு சர்ரேயில் உள்ள பூங்கா ஒன்றில் நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சியில், சர்வதேச மாணவர்களும் சட்டத்தரணிகளும் இணைந்து தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவியான Prabhleen Matharu (21) ஒரு வீட்டில் மற்றொரு 18 வயது இளைஞருடன் இ றந்து கிடந்தார். அந்த இளைஞர், Prabhleenஐ கொ ன்றுவிட்டு, தானும் த ற்கொ லை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்தார்கள்.

Prabhleenக்காக சர்ரேயில் நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏராளமான சர்வதேச மாணவர்களும் சட்டத்தரணிகளும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

One Voice Canada என்னும் சர்வதேச மாணவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குநரான Rajpreet Sohal கூறும்போது, யாரோ ஒரு தந்தையின் மகள் இ றந்துபோனாள், அவளால் தனது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போனது எனக்கு கவலையை அளிக்கிறது என்றார்.

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் இந்த மாணவர்கள், தைரியமாக தங்கள் பிரச்சினைகளை பேசக்கூட மாட்டேன்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், எங்களிடம் வந்தால், அவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம், அரசு இருக்கிறது என்றார்.

Prabhleenஇன் உடல் அடுத்த வாரம் இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, பஞ்சாபிலுள்ள அவரது கிராமமான Chittiயில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில் Prabhleen உடன் இ றந்து கிடந்த அந்த இளைஞரின் அடையாளங்களை வெளியிட பொலிசார் மறுத்துவிட்டார்கள். விசாரணைக்கான காரணம் எதுவும் தேவையில்லாத பட்சத்தில், அவரது அடையாளங்களை வெளியிடத் தேவை இல்லை என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

Prabhleenஇன் தந்தை கூறும்போது, அந்த இளைஞர் ஒரு வெள்ளையர் என்றும், அவரது நண்பர்கள் தனது மகளுக்கும் நண்பர்கள் என்றும் Prabhleenஇன் நண்பர்கள் தெரிவித்தது தவிர, அவரைக்குறித்து வேறொன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.

கோப்பையை வென்ற கையோடு தமிழ்ப்பட நடிகையை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

இந்திய கிரிக்கெட் வீரர்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, தமிழ் படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை நேற்று திருமணம் செய்துள்ளார்.

துளு படத்தின் மூலம் அறிமுகமானாலும், உதயம் NH4, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும், இந்திரஜித் உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி(26).

இவர் தற்போது ‘நான் தான் சிவா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இவரும் இந்திய கிரிக்கெட் வீரரான மனிஷ் பாண்டேவும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக பல்வேறு யூகங்கள் இருந்தபோதிலும், ஒருமுறை கூட இருவரும் பொதுவெளியில் தோன்றாததால், உறுதி செய்யமுடியாத செய்தியாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் இருவருக்கும் தற்போது தென்னிந்திய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழகத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில், தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற மனிஷ் பாண்டே, போட்டிக்கு பிந்தைய விளக்கக்காட்சியின் போது தனது திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

“இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன், எனக்கு இன்னொரு முக்கியமான தொடர் உள்ளது. நான் நாளை திருமணம் செய்து கொள்கிறேன்”, என்று அவர் உற்சாகமாக கூறினார்.

இந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் திருமண படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இ றப்பதற்கு முன் காதலனிடம் கடைசியாக பேசிய இளம் பெண் : த ற்கொ லை சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்!!

இளம் பெண்

தமிழகத்தில் தாய் தி ட்டியதால் இளம் பெண் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில், அவரின் தோழிகள் இது த ற்கொ லை இல்லை கொ லை என்று அ திர்ச்சிகரமான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரெத்தினசாமி – சார்லெட்பாய். இவர்களுக்கு அனுஷியா என்ற 18 வயதில் மகள் உள்ளார்.

அனுஷியா அவர்களுக்கு 2வது மகள், அவர் அங்கிருக்கும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24-ஆம் திகதி அனுஷியா வீட்டில் வி ஷம் அ ருந்திய நிலையில் மீ ட்கப்பட்டார். அதன் பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 25ஆம் திகதி சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இதனால் இது குறித்து அனுஷியாவின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அழகு நிலையத்தில், வேலை பார்க்கும் தனது மகள் அனுஷியா கடந்த 23-ஆம் திகதி வீட்டில் இருந்த 2000 ரூபாயை திருடி விட்டதாகவும், அதற்காக சத்தம் போட்டதால் எலி மருந்தை அருந்தி த ற்கொ லை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார, அனுஷியாவின் உ டலை ஒப்படைத்தனர். இதையடுத்து தற்போது அனுஷியாவின் தோழிகள் இது த ற்கொ லை இல்லை, கொ லை என்று சமூகவலைத்தளங்களில் சில அ திர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில், அனுஷியா பள்ளியில் படிக்கும் காலத்திலே தாயாரால் சூ டுகள் போடப்பட்டு பல சி த்திரவ தைகளுக்கு ஆளாகியிருந்ததாகவும், தங்களிடம் ஒருபோதும் அனுஷியா சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டதில்லை என்றும் அந்த பதிவுகளில் அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபகாலமாக அனுஷியா வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு அவரது தாயார் கடும் எ திர்ப்பு தெரிவித்து வீட்டு சி றையில் அறையில் அடைத்து வைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது த ற்கொ லையில் ம ர்மம் உள்ளது. பொலிசார் விசாரித்து பெற்றோர் மீது ந டவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோழிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிடையே த ற்கொ லைக்கு முன் தனது காதலன் சுனிலுடன் அனுஷியா செல்போனில் பேசிய உருக்கமான ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

அதில் தான் த ற்கொ லை செய்து கொண்டால், அதற்கு காரணம் தனது தாய் தந்தை தான், தனது தாயார் தன்னிடம் பேசும் போதெல்லாம் செத்து போ என்று கூறுவதாகவும், அ றையில் அடைத்து வைத்து சி த்தரவ தை படுத்தி வருவதாகவும், இதனால் தனக்கு த ற்கொ லை எண்ணம் வருவதாகவும், தான் த ற்கொ லை செய்து கொண்டால் நீ என்ன செய்வாய் என்று காதலினிடம் உருக்கமாக பேசியுள்ளார்.