அறிமுக ஆட்டத்தில் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்திய வீராங்கனை!!

அறிமுக ஆட்டத்தில்..

மாலத்தீவுக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் நேபாள அணியை சேர்ந்த ஒரு வீராங்கனை ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

போகாராவில் நேற்று நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளின் 20 ஓவர் போட்டியில், நேபாளம் மற்றும் மாலத்தீவு பெண்கள் அணிகள் மோதின.

இரண்டுமே சிறிய அணிகள் என்பதால் பெரியளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு, இளம்வீரங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் முதலில் ஆடிய மாலத்தீவுகள் பெண்கள் அணி 11 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ரன் ஏதும் விட்டு கொடுக்காமல் 2.1 ஓவர்கள் பந்துவீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன்மூலம் மாலத்தீவைச் சேர்ந்த மாஸ் எலிசா என்பவரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா பெண்களுக்கு எதிராக, சிறப்பாக பந்து வீசிய எலிசா 3 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

ஆண்கள் டி 20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு வீரர்களுக்கான சாதனையை இந்தியாவின் தீபக் சாஹர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவம்பர் 10 ஆம் தேதி நாக்பூரில் வங்கதேச அணிக்கெதிராக 3.2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அவருக்கு முன்பாக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் என்ன செய்தோம் என எங்களுக்கே தெரியவில்லை : பிரியங்கா வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!

பிரியங்கா

அதிகளவு ம து அ ருந்தியதன் காரணமாக முழு போ தையில் இருந்ததால் சம்பவத்தின் போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை என பிரியங்கா ரெட்டி கொ லை வழக்கில் கைதான நால்வரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற 26 வயது இளம்பெண் ப லாத்காரம் செய்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உ லுக்கியது. இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷிவா மற்றும் கேஷவலு ஆகியோர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் என தெரியவருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரிடமும் பொலிசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்திய நிலையில் அவர்கள் தி டுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதில், சம்பவத்தன்று எங்களுக்கு வேலை இல்லாமல் லொறியுடன் வெறுமனே உட்கார்ந்திருந்தோம், எங்களிடம் பணமும் இல்லை. இந்நிலையில் ஒரு இடத்தில் இருந்து இரும்பு கம்பிகளை நாங்கள் தி ருடி வைத்திருந்தோம்.

அதை எடுத்து கொண்டு போய் விற்றதில் பணம் கிடைத்தது. இதன்பின்னர் அந்த பணத்தில் ம து வாங்கி தொடர்ந்து பல மணி நேரமாக கு டித்தோம்.

பின்னர் தான் பிரியங்காவை இழுத்து கொண்டு போய் ப லாத் காரம் செய்தோம், ஆனால் போ தை தலைக்கேறியதால் நாங்கள் என்ன செய்தோம் என எங்களுக்கே தெரியவில்லை.

ஆனால் அவரை உ யிரோடு வி ட்டால் எங்களை காட்டி கொடுத்துவிடுவார் என எண்ணியே கொ லை செய்து உ டலை எ ரித்தோம் என கூறியுள்ளனர்.

முதன்முறையாக ஹெலிகாப்டரை பார்த்த கிராம மக்கள் : கொட்டிய 90 லட்சம் பண மழை!!

முதன்முறையாக..

இந்தியாவில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலத்தில் மணமகனின் குடும்பத்தினர் ரூ.90 லட்சத்தை பண மழையாக வாரி இறைத்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷிராஜ்சிங் ஜடேஜாவின் திருமணம் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

ஜாம்நகர் நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள சேலா கிராமத்திற்கு மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்கியதும் ரூ. 90 லட்சம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் அனைவருமே ஆச்சர்யமாக பார்த்துள்ளனர்.

இதுகுறித்து கிராம தலைவர் ராஜேந்திர பட்டி கூறுகையில், இப்பகுதியில் முதன்முதலாக ஒரு மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார். இங்கு உள்ள மக்களில் பெரும்பாலானோர் இப்போது தான் முதன்முறையாக ஹெலிகாப்டரை பார்க்கின்றனர்.

பின்னர் அங்கிருந்த மணமகன் அருகாமையில் உள்ள மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது, மணமகனின் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் பொதுவில் ரூ .500 மற்றும் ரூ .2,000 நாணயத்தாள்களைப் பொழிந்தனர். எத்தனை நோட்டுகள் பொழிந்தன என்று என்னால் கூற முடியாது, ஆனால் அவை ரூ .35 லட்சம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.

அந்த இடத்தில் கலந்து கொண்ட கிராமவாசி தர்மேந்திரசிங் ஜடேஜா, “எனது மதிப்பீட்டின்படி குறைந்தது ரூ .80 லட்சம் மதிப்புள்ள நாணயத்தாள்கள் சேலாவில் மழையாக பெய்தது” என்றார். “இந்த சம்பவம் குறித்து நான் கேள்விப்பட்டேன், ஆனால் திருமண நிகழ்வு குறித்து மேலும் எந்த தகவலும் இல்லை” என துணை ஆய்வாளர் ஜே டி பர்மர் கூறியுள்ளார்.

மணமகனின் குடும்பம் பாஜகவுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று ஜாம்நகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜே டி படேல் குற்றம் சாட்டியுள்ளார். “வெளிப்படையாக வீசப்பட்ட பணம் கறுப்புப் பணம். இன்று ஒரு நாளைக்கு சிறிதளவு உணவு கூட கிடைக்காத ஏழை மக்கள் இருக்கும்போது, ​​ஒரு கொண்டாட்டத்திற்கு லட்சத்திற்கு மேல் பணத்தை வீசுவது தவறான முன்மாதிரியாகும் ” எனக்கூறியுள்ளார்.

என்னை மாற்றிய அந்த தருணம் : எடையை குறைத்தது ஏன்? டி.இமானின் பதில்!!

டி.இமான்

பிரபல இசையமைப்பாளரான டி.இமான் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், எடையை குறைத்தது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அவர் அளித்த பதிலில், நண்பர்கள், உறவினர்கள் சில சமயங்களில் என்னுடைய எடை குறித்து கேலி செய்வார்கள்.

உடல் அதிகமாக இருப்பது எல்லா விதங்களிலும் சிரமமாக இருந்தது. விமான இருக்கையில் துவங்கி பல பிரச்சனை இருந்தது. ஆனால், எனக்கு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு, என் தாயாரின் ம ரணம். அவர் மிக குண்டாக இருந்தார்.

அதனால், நீரிழிவு நோய் இருந்தது. இதையடுத்து சிறுநீரகம் செயல் இழந்தது. அது எனக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியது. தவிர, நேரடி நிகழ்ச்சிகளை நடத்தும்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தால் எனக்கே கஷ்டமாக இருந்தது.

நம் பாடலைக் கேட்கத்தான் வருகிறார்கள் என்றாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டாமா என்று நினைத்தேன். அதனால்தான் உடல் எடையைக் குறைக்க முடிவுசெய்தேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

பணவீக்கம்

இலங்கையின் பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் பாரிய மாற்றத்துடன் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் நாட்டின் பணவீக்கம் 4.4 விகிதமாக குறைவடைந்துள்ளது.

கடந்த ஒக்டொபர் மாதம் இலங்கையின் பணவீக்கம் 5.3 விகிதமாக காணப்பட்டதுடன் அது முறையே நவம்பர் மாதத்தில் 5.6 விகிதமாக அதிகரித்திருந்தது. கொழும்பு நுகர்வோர் சந்தையின் விலை சுட்டெண் கடந்த நவம்பர் மாதத்தில் பூச்சியம் தசம் 3 விகிதத்திலேயே உயர்வடைந்திருந்தது.

அதுவே நாட்டின் பணவீக்கம் 4.4 விகிதமாக குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இருந்தாலும் கடந்த ஒக்டொபர் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் சந்தையின் விலை சுட்டெண் 131.3 சதவிகிதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் கடந்த 2017 ஆம் நாட்டின் கையிருப்பில் ஏற்பபட்ட பாரிய வீழ்ச்சி பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

இன்று முதல் நாடு முழுவதும் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

கடும் மழை

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா, மத்திய மாகாணங்களில் இன்று மாலை முதல் கடும் மழை பெய்யும் என்று எதிர்வுக்கூரப்பட்டுள்ளது.

வானிலை அவதான மையம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் டிசம்பர் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவும். இதன்போது 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும்.

இதன்காரணமாக மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மலைப்பாங்கான இடங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் கொள்வனவு செய்ய தடை போட்ட ஜனாதிபதி கோட்டாபய!!

தடை போட்ட ஜனாதிபதி

அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுகளின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதனை ஜனாதிபதி செயலகம் நிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏதாவது அமைச்சிற்கு வாகன குறைப்பாடுகள் காணப்படுமாயின் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள மேலதிக வாகனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சுகளுக்கு வாகனங்கள், போக்குவரத்து, கட்டட வசதிகள் ஆகியவைக்காக மேற்கொள்ளப்படும் செலவுகள் உட்பட அனைத்து தேவையற்ற செலவுகளை தவிர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 52 பேர் கா ணாமல் ஆக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ஆ ர்ப்பாட்டம்!!

ஆ ர்ப்பாட்டம்..

செட்டிகுளத்தில் 52 தமிழர்கள் கா ணாமல் ஆக்கப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆ ர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

1017 ஆவது நாளாக வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இக் கவனயீர்ப்பு போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் 52 தமிழர்கள் இ ராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை.

கா ணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என ஆ ர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விட்டனர்.

அத்துடன், 35 வருடங்கள் கடந்த நிலையில் 52 பேருக்கும் நடந்தது என்ன?, மாற்றுத் தலைமை என்போரே தமிழர் பிரச்சனைக்கு ஏன் இந்தியாவை அழைக்கவில்லை,

சர்வதேசமே நீதியை நிலைநாட்டு என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் அவர்கள் தாங்கியிருந்தார்கள்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர்களுக்கு பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு எ திரான விழிப்புணர்வு நிகழ்வு!!

விழிப்புணர்வு நிகழ்வு

எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் நேரலை பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு எ திரான விழிப்புணர்வு நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இன்று (02.12.2019) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு செயற்றிட்ட நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, வவுனியா மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் என். கமலதாசன் ஆகியோர் கலந்து கொண்டு ம ரணமடைந்த வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திரு லங்காநேசன் அவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியதுடன் விழிப்புணர்வு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு எ திராக எவ்வாறு மாணவர்கள் செயற்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிறுவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் இதில் 50க்கு மேற்பட்ட வவுனியா மாவட்ட சிறுவர் சபையினை சேர்ந்த சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல புறப்பட்டவர் உ யிரிழப்பு!!

விபத்தில்..

வவுனியா ஓமந்தையில் நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டி – வான் விபத்தில் கனடா செல்ல புறப்பட தயாராகிய தகவலை உறவினருக்கு சொல்லிவிட்டு திரும்பி வந்த பெண்னே விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி கிளிநொச்சியிலுள்ள உறவினர்களுக்கு கனடாவிற்கு செல்வதற்கு விசா கிடைத்துவிட்டது. டிசம்பர் 2ஆம் திகதி கனடாவிற்கு செல்லவுள்ளதாக தகவல் தெரிவித்துவிட்டு வவுனியா குட்சைட் வீதியிலுள்ள வீட்டிற்கு தனது கணவருடன் முச்சக்கரவண்டியில் திரும்பிக்கொண்டிருந்தபோது,

இரவு ஓமந்தை – விளக்குவைத்தகுளம் பகுதியில் வீதியில் படுத்திருந்த மாடு ஒன்றுடன் எதிரே வந்த வான் ஒன்று மோதி நிலை தடுமாறிய வான் வவுனியாவிற்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது கனடாவிற்கு செல்லத்தயாராகிய இரமணிசுந்தர் இராஜசுலோசனா (வயது 62) படுகாயமடைந்து உ யிரிழந்துள்ளார். இவரது கணவர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றார்.

 

கோர விபத்தில் 9 பேர் படுகா யம்!!

கோர விபத்தில்..

ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோ தி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் க டும் கா யங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் கா யமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர்

போ லி விசாவை பயன்படுத்தி ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் ஈரானிய எல்லைகளின் ஊடாக ஐரோப்பிய நாடான அல்பேனியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து ஈரானின் டெஹேரான் நகரிற்கு செல்வதற்காக இரண்டு விமான பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்ய முயன்ற போதே இவர்கள் வசமாக சிக்கியுள்ளனர். சந்தேகநபர்களை கு ற்றப் பு லனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா செட்டிகுளத்தில் க டத்தப்பட்டு கா ணாமலாக்கபட்ட 52 பேரின் நினைவேந்தல்!!

52 பேரின் நினைவேந்தல்

வவுனியா- செட்டிக்குளம் பகுதியில் க டத்தப்பட்டு கா ணாமலாக்கப்பட்ட 52 பேரின், 35 ஆவது ஆண்டு நினைவுதினம் இடம்பெற்றது. இந்நிகழ்வு செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது.

செட்டிகுளம் பிரதேசபை மற்றும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், உ யிரிழந்தவர்களுக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் 52 பேர் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் மதகுருமார்கள், உ யிரிழந்தவர்களின் உறவினர்கள், செட்டிக்குளம் பிரதேசசபை தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் குறித்த நினைவு நாளினை செட்டிக்குளம் பகுதியில் துக்கதினமாக அனுஷ்டிப்பதுடன் நினைவுத் தூபி ஒன்றினையும் அமைக்கவுள்ளதாக செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.அந்தோணி இதன்போது தெரிவித்தார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 52 பேர் க டத்தப்பட்டு, கா ணாமலாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் ஏற்பட்ட அனர்த்தம் : மண்ணில் புதையுண்ட உயர்தர மாணவி!!

உயர்தர மாணவி

நுவரெலிய – வலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்தத்தில் கா ணாமல் போன உயர் தர மாணவியின் ச டலத்தை தேடும் நடவடிக்கை இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நேற்று பெய்த அடைமழை காரணமாக அந்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டமையினால் அவரை தேடும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இந்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்த வீட்டில் மீது மண் மேடு சரிந்து விழுந்தது.

இதில் இன்றைய தினம் சாதாரண பரீட்சை எழுதவிருந்த அவரது சகோதரன், தாய் மற்றும் தந்தை ஆகியோர் உ யிரிழந்தனர். நேற்று காலை அவர்களது ச டலம் மீட்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த மாணவியின் ச டலத்தை மாத்திரம் இன்னமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேடப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார்!!

கோட்டாபயவின் மனைவி

ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ பயணித்த வாகனம் பொலிஸாரிடம் சிக்கியமையினால் அபராதம் செலுத்த நேரிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அனுராதபுரத்தில் மத வழிப்பாடுகள் மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியின் சட்டத்தை மீறியமையினால் அவர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதியின் மனைவி என்றதும் பொலிஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.

எனினும் எந்த பிரச்சினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தான் வாகனத்திற்குள் இருப்பதனை கூறாமல் தவறை ஏற்றுக் கொண்டு, அபராத பத்திரத்தை தருமாறு அயோமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத வழிப்பாடு நிறைவடைந்து வீட்டிற்கு சென்ற அயோமா, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இதன்போது அபாரத பணத்தை செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

தந்தையின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு பரீட்சை எழுத சென்ற மாணவன்!!

மாணவன்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆரம்பமாகின்றன.

இந்த நிலையில் திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் மகனொருவர் தனது தந்தையின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பரீட்சை எழுத சென்றுள்ள சோ க சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.டீ.சமிந்த லசந்த என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சமிந்த லசந்தவின் சடலம் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இன்றைய தினம் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படியானதொரு சூழ்நிலையில் உ யிரிழந்த நபரின் மூத்த மகனான சுபுன் தனன்ஞச (16 வயது) இன்றைய தினம் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இதன்போது அவர் பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் தந்தையின் சடலத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பரீட்சை எழுதுவதற்காக மஹதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலயத்திற்கு சென்றுள்ளார்.