வவுனியாவில் குப்பை கொட்டும் இடமாக மாறிய கல்வியற் கல்லூரி பிரதான வீதி!!

கல்வியற் கல்லூரி பிரதான வீதி

வவுனியா – பூந்தோட்டம், பொது மயானத்திற்கு முன்பாக உள்ள கல்வியற் கல்லூரி பிரதான வீதியில் கழிவுகள் இடப்பட்டு வருவதால் சு காதார சீ ர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் வி சனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் அவ் வீதியை பயன்படுத்துவோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமியிடம் வினவிய போது,

குறித்த பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி அவ்விடத்தில் ஒரு அறிவித்தல் பலகை ஒன்றை வைப்பதற்கு முயற்சிசெய்வதுடன், இந்த விடயத்தில் பொதுமக்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கத்திடம் வினவிய போது, குறித்த பிரச்சினை பல பகுதிகளில் நிலவுகின்றது. கழிவகற்றும் வாகனங்கள் வீடுகளுக்கு செல்லும் போது வீட்டில் இல்லாத சிலர் கழிவுகளை வீதிகளில் வீசி வருகின்றனர்.

தற்போது அதிகமாக சனத்தொகை கூடிய பகுதிகளிலும், கழிவுகள் அதிகமுள்ள பகுதிகளுக்கும் பிரதேச சபையின் கழிவகற்றும் இயந்திரங்கள் சென்றுவருகிறது.

எம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் தேவையுள்ள ஏனைய கிராமங்களிற்கும் அதனை அனுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மார்கழி மாதம் அதிகளவான மழை வீழ்ச்சி : வானிலை அவதானிப்பாளர்!!

மழை வீழ்ச்சி

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் டிசம்பர் மாதத்திலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும், கடந்த வருடம் மார்கழி முதலாம் திகதியில் இருந்து மார்கழி மாதம் 11 ஆம் திகதிவரையான மழை வீழ்ச்சியை நோக்குகின்ற போது 23.2 மில்லிமீற்றர் அளவில் பதிவாகியுள்ளது.

எனினும் இவ் வருடம் மார்கழி மாதம் முதலாம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரையான மழை வீழ்ச்சி 230.2 மில்லி மீற்றராக பதிவாகியுள்ள நிலையில் ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தின் மார்கழி மாதத்தின் முதல் 11 நாட்களிலும் பதிவாகிய மழை வீழ்ச்சியை விட இவ் வருடத்தின் மார்கழி மாதம் முதல் 11 நாட்கள் பதிவாகிய மழை வீழ்ச்சி 10 மடங்கால் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் 2018ஆம் ஆண்டு மார்கழி மாதம் முழுவதுமான மழை வீழ்ச்சியாக 178.01 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியிருந்த நிலையில் இவ்வருடத்தின் டிசம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களின் மழை வீழ்ச்சியின் அளவும் அதிகமாகவுள்ளது.

அத்துடன் 2018ஆம் ஆண்டு முழுவதுமான மழை வீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் 1550.1 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளதுடன் 2019ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்த மழை வீழ்ச்சி 1308.6 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது , என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும் கொ டுமை!!

முல்லைத்தீவை சேர்ந்த பெண்

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு தேடி ஓமான் நாடுக்கு சென்ற முல்லைத்தீவை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் அங்கு பல்வேறு து ன்புறு த்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் து ன்புறுத் தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தன்னை மீட்டு தாயகம் திரும்ப வழி செய்யுமாறு பா திக்கப்பட்ட பெண் இன்று உறவினர்களிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு அளம்பிலை சேர்ந்த செல்வகுமார் பிரியதர்சினி வயது 36 என்னும் குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு து ன்புறு த்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

இறுதி யு த்தத்தில் பா திக்கப்பட்ட குறித்த பெண் தனது குடும்பத்தின் வறுமையை போக்க கடந்த 04.09.2019ம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் என தன்னை அடையாளப்படுத்திய நசீர் என்னும் நபர் ஒருவர் தன்னிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்று ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைத்ததாகவும்,

அங்கு தான் து ன்புறுத் தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தன்னை மீட்டு தாயகம் திரும்ப வழிசெய்யுமாறும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த பெண் ச ட்டவி ரோத ஆ ட்கட த்தல் நபர்களினால் ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

-தமிழ்வின்-

தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற யாழ் மாணவி கௌரவிப்பு!!

வி.ஆசிகா

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவி வி.ஆசிகாவை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ். பளுதூக்கல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கிருபா லேணர்ஸின் அனுசரணையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் யாழ். பளுதூக்கல் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள், கிருபா லேணர்ஸ் உரிமையாளர், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள்,

விளையாட்டுத்துறை சார் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீதியில் நின்றவர்களை மோதித் தள்ளிய கார் : மூவர் படுகாயம்!!

வீதியில் நின்றவர்களை..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்களுடன் கார் ஓன்று மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(12.12.2019) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து காளி கோவில் வீதியில் குருமன்காடு நோக்கிச் சென்ற கார் திருநாவற்குளம் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

ஆலயத்துக்கு அருகில் இருந்த மரக்கறி கடை முன்பாக மூன்று மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றுடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டது.

இதன்போது அவ்விடத்தில் நின்ற மூவரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து : இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் காயம்!!

வவுனியா ஓமந்தை பகுதியில்..

வவுனியா, ஓமந்தை – வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகை தந்த இராணுவ வாகனம் ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வைத்து பட்டா ரக வாகனத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நான்கு இராணுவத்தினரும், பட்டாரக வாகனத்தில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா உட்பட வடக்கு மக்களுக்கு பத்து வருடங்களின் பின்னர் கிடைக்கவுள்ள ஓர் அரிய வாய்ப்பு!!

பத்து வருடங்களின் பின்னர்

10 ஆண்டுகளின் பின்னர் அரிய சூரிய கிரகணம் ஒன்றை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 26ஆம் திகதி இந்த வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கும் என ஆத்தர் சி.கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வட பகுதிக்கு இந்த சூரிய கிரணம் முழுமையாக தென்படும் என அந்த மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார். மன்னாருக்கு மேல்திசையில் உள்ள பகுதிகளில் இந்த நிலைமையை அவதானிக்க முடியும்.

இதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா, திருகோணமலை முதலான மாவட்டங்களுக்கு இந்த சூரிய கிரகணம் முழமையாக தென்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், தென் பகுதியில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே தென்படும்.

குறிப்பாக, வவுனியாவுக்கு கீழ்திசையில் கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் காலி முதலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலும் தென்படும் என அவர் குறிப்பிடடுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி காலை வேளையில் இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.

முழுமையான சூரிய கிரகணம் காலை 8.09இற்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 அளவில் நிறைவடையும். இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், விசேட கண்ணாடியோ அல்லது பாதுகாப்பு உபகரணத்தையோ பயன்படுத்துவது சிறந்ததாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமான கண்ணாடி இல்லாவிட்டால், இரும்பு பொருத்து வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடியை பயன்படுத்த முடியும். அந்தக் கண்ணாடியிலும், 12 மற்றும் 14 ஆம் இலக்க கண்ணாடிகளை மாத்திரமே பயன்படுத்த முடியும். அந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி!!

சூரியசக்தி முச்சக்கர வண்டி

இலங்கையில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் சூரிய சக்தி முச்சக்கர வண்டி கட்டமைப்பு நாளையதினம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.

எரிபொருள் பயன்படுத்தாமல், முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி கட்டமைப்பு மூலம் அதன் பட்டரி சார்ஜ் செய்யப்பட வைப்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

வவுனியாவில் வீதியில் நின்றவர்கள் மீது மோதிய கார் : மூவர் படுகாயம்!!

வீதியில் நின்றவர்கள் மீது..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இன்றிரவு ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது கார் ஒன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து காளி கோவில் வீதியில் குருமன்காடு நோக்கி சென்ற காரே இந்த விபத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன்,

காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அ திகரிக்கும் டெ ங்கு தா க்கம் : 5 அ ரச நி றுவனங்களுக்கு நே ர்ந்த க தி!!

வவுனியாவில்..

வவுனியாவில் 650க்கு மேற்பட்டோருக்கு டெ ங்கு ப ரவியுள்ள நிலையில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (12.12.2019) காலை தொடக்கம் வவுனியா பொது சு காதார ப ரிசோதர்களினால் சோ தனை ந டவடிக்கைகள் மு ன்னெடுக்கப்பட்டன.

இதன் போது ஐ ந்துக்கு மே ற்பட்ட அ ரச நி றுவனங்களுக்கு எ திராக நீ திமன்றத்தில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதியில் டெ ங்கு நோ யின் ப ரம்பல் அ திகரித்து காணப்படுவதுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 650க்கு மேற்பட்ட டெ ங்கு நோ யாளிகள் இ னங்காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வவுனியா நகர் முழுவதும் பொது சு காதார ப ரிசோதகர்களால் டெ ங்கு நோ ய் ப ரவும் வகையில் காணப்படும் இ டங்கள் சோ தனை செய்யப்படுவதுடன், அ வற்றை அ ழிக்கும் ந டவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தி டீர் சோ தனைக்குட்படுத்திய ச மயத்தில் டெ ங்கு நோ ய் ப ரவும் நி லையில் காணப்பட்ட நெல் களஞ்சியசாலை, இலங்கை மின்சார சபை,

தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, அரச விடுதிகள், பொதுமக்களின் வீடுகள் போன்றவற்றிக்கு எ திராக வவுனியா மாவட்ட நீ தவான் நீ திமன்றில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ் வ ழக்கானது இம் மாதம் 19ம் திகதி வவுனியா மாவட்ட நீ திவான் நீ திமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெருமை சேர்ந்த தங்க வீராங்கனைகள்!!

தங்க வீராங்கனைகள்

நேபாள தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

தெற்காசிய விளையாட்டில் கலந்து கொண்ட இலங்கை குழாம் முதன்முறையாக பெருமளவு பதக்கங்களை வெற்றி பெற்ற நிலையில், நேற்று நாடு திரும்பியிருந்தது. தெற்காசிய நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இலங்கை மூன்றாமிடத்தை பெற்றிருந்தது.

40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடகங்களாக 251 பதக்கங்களை இலங்கை அணி பெற்றுக் கொண்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சர்வதேச போட்டியொன்றில் இலங்கை பெற்ற அதிகூடிய பதக்கங்கள் இதுவாகும்.

2001ஆம் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை குழாம் 178 பதக்கங்களை பெற்றமையே அதிகூடியதாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் அமஷா டி சில்வா, நதீஷா ராமநாயக்க, துலஞ்சலி ரணசிங்க ஆகிய வீராங்கனை அதிகூடிய தங்க பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

இலங்கைக்கு பெருமை தேடித்தந்த வீர, வீராங்கனைகளை பாராட்டுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் துமிந்த சில்வா நேபாளம் சென்றிருந்தார். வெற்றிக்குழுவுடன் அமைச்சரும் நாடு திரும்பியிருந்தார்.

ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. நேபாளம் 51 தங்க பதக்கங்களை பெற்ற நிலையில் இரண்டாமிடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகளில் இந்தியா 172 தங்க பதக்கங்கள், 93 வெள்ளிப் பதக்கங்கள் 45 வெண்கல பதக்கங்கள் அடங்களாக மொத்தமாக 310 பதக்கங்களை பெற்றுள்ளது.

51 தங்க பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள், 94 வெண்கல பதக்கங்கள் அடங்களாக 204 பதக்கங்களுடன் நேபாளம் பதக்க பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பதக்க பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் வெள்ளத்தினால் பா திக்கப்பட்ட மக்களுக்கு கருணைக்கரம் நீட்டிய தமிழ்விருட்சம்!!

தமிழ்விருட்சம்

வன்னியில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தினால் பா திக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்விருட்சம் அமைப்பினர் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.

குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கு மேற்ப்பட்ட குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள், குழந்தைகளுக்கான பால்மா, நுளம்பு வலை, பாய் போன்ற பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியுடன் இச் செயற்றிட்டம் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவை டெங்கு அற்ற பிரதேசமாக உருவாக்க ஒன்றிணைந்த இளைஞர்கள்!!

ஒன்றிணைந்த இளைஞர்கள்

இன்றையதினம் (12.12.2019) வவுனியா நகரசபை பூங்காவில் “வவுனியா கெத்து” tiktok நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் பல tiktok செயலி நண்பர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

இவ் ஒன்றுகூடலை சிறகுகள் இளைஞர் அமைப்பின் அனுசரணையில் தமது விசேட டெங்கு ஒழிப்பு நாளாக மாற்றியுள்ளார்கள்.

வவுனியா நகரப் பகுதிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் டெங்கு அற்ற வவுனியவை உருவாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அதன் முக்கியத்தவத்தையும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கையில் பல பாகங்களில் இருந்து பல இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்றையதினம் (11.12.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

ஓமந்தை அரசர்பதி ஶ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை எனும் இடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.

உலக இந்துக்களால் நேற்றையதினம் கார்த்திகை தீபத் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதுடன், வவுனியாவில் மக்கள் தீபமேற்றி கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவைச் சேர்ந்த சூரியகுமாருக்கு சிறந்த சமூக சேவையாளர் விருது!!

சூரியகுமார்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த சமூக சேவையாளர் விருதினை வவுனியாவைச் சேர்ந்த சூரியகுமார் (விக்னா) தனதாக்கிக் கொண்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 10.12.2019 நடைபெற்ற மாகாண மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விருதினை நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன், வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் ஆகியோர் இணைந்து இவ் விருதினை வழங்கி வைத்தனர்.

நீங்கள் வட்ஸ் அப் பயனாளரா : திடுக்கிடும் செய்தியை அறிவித்த பேஸ்புக் நிறுவனம்!!

நீங்கள் வட்ஸ் அப் பயனாளரா

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து மிக அதிகளவான தொலைபேசிகளில் வட்ஸ் அப் செயலி இயங்காது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் தொலைபேசிகள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து தொலைபேசிகளிலும் வட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று வின்டோஸ் தொலைபேசிகளிலும் எதிர்வரும் 31ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை தொலைபேசிகள் வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ் அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வட்ஸ் அப் செயலி முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.