பிரியங்கா ரெட்டியின் கு ற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பொலிசார், அவரின் உ டலில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ அறிக்கை மூலம் கு ற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரியங்கா ரெட்டியை கொ லை செய்த கு ற்றவாளிகளை என்கவுண்டர் செய்த நிலையில், அவர்கள்தான் கு ற்றவாளிகள் என்று உறுதிபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனவே பிரியங்கா ரெட்டியின் உ டலில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்கள் மூலம் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக அவர் அணிந்திருந்த நகைகள் மூலம் உடல் கண்டறியபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ குடும்பத்தில் உள்ளவர்களின் டி.என்.ஏ உடன் ஒப்பிட்டு அதை உறுதி செய்துள்ளனர். மேலும், அவரது உடலில் குற்றவாளிகளின் விந்தணுக்கள் சிதறி இருந்தது, அவரது உடல்பாகங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி, இந்த அறிவியல்பூர்வமான அறிக்கை நீதிமன்றத்தில் தா க்கல் செய்யப்படும் என்று “தி இந்து” ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரியங்கா ரெட்டியை நான்கு கு ற்றவாளிகளால் நவம்பர் 27ஆம் திகதி பா லியல் வ ன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு எ ரித்து கொ ல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயார் ஒருவரது கன்னப்பகுதியில் இருந்து நாய்களின் உடம்பில் இருக்கும் ஒருவகை புழுவை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் ஒரு மாதம் முன்னர் வீங்கிய முகத்துடன் இளம் தாயார் ஒருவர் மருத்துவர்களை நாடியுள்ளார்.
அவரை ப ரிசோதித்த மருத்துவர்கள், அவரது கன்னத்தில் இருந்து dog heartworm வகையை சேர்ந்த 1.6செ.மீ நீளம் கொண்ட புழுவை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ள சிறப்பு மருத்துவமனை ஒன்றில், குறித்த புழு தொடர்பில் ஆய்வு மேற்கொண்டதில், அது நாய்களில் மட்டும் காணப்படும் புழு எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த புழுக்கள் நாய்களில் இருந்து கொசு மூலம் மனிதர்களில் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், நுண்ணிய கிருமியாக இருக்கும் இவை, பின்னர் புழுவாக மாறும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி அரைகுறையாக சமைத்த மாமிச உணவு சாப்பிட்டாலும், இதுபோன்ற கிருமிகள் உடம்பில் நுழைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் இளைஞர் ஒருவரின் கண்களில் இருந்து இதுபோன்ற புழு ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். கண்களில் மட்டுமின்றி, நுரையீரலிலும் இதுபோன்ற புழு இருக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் 15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக தங்களது 13 வயது மகளை இளைஞருக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் கவுண்டனூரை சேர்ந்தவர் மூக்கன் (45). இவரது மனைவி அஞ்சலம் (40). இவர்களது மகன் சரவணகுமார் (23). இவர்களிடம் குளித்தலையில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதி ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருந்தனர்.
அந்த தம்பதியால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர்கள், அடமானமாக தங்களின் 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, இரு வீட்டாரும் பேசி, கடந்த ஜூன் மாதம் 27ம் திகதி கோவிலில் வைத்து சரவணகுமாருக்கு 13 வயது சிறுமியை க ட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். கடந்த 5 மாதமாக சரவணகுமார் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்த சிறுமி, தனக்கு திருமணம் நடந்தது குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பொலிசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரையும், குழந்தை திருமண த டுப்பு சட்டப்பிரிவின் கீழ் சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேரையும் பொலிசார் கைது செய்தனர். பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பிரியங்கா ரெட்டி வழக்கில் என் கவுண்ட்டர் செய்யப்பட்ட நான்கு கொ டூரர்களின் பி ரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) கடந்த மாதம் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டு எ ரிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிசார் கடந்த 6ஆம் திகதி சம்பவம் நடந்த பகுதிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நால்வரும் பொலிசாரை தா க்கிவிட்டு த ப்பிக்க மு யன்றதால் அவர்களை பொலிசார் என் கவுண்ட்டரில் சு ட்டுக் கொ ன்றனர்.
இதையடுத்து நால்வரது ச டலமும் அரசு மருத்துவமனையில் நீதிமன்ற உத்தரவின்படி பா துகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நால்வருக்கும் நடந்த பி ரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில் அ திர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், நான்கு பேரின் உ டல்களையும் து ப்பாக்கி கு ண்டுகள் து ளைத்திருந்த போதிலும் உடலுக்குள் கு ண்டுகள் தங்கவில்லை. முக்கிய கு ற்றவாளி முகமது உடலில் 4 குண்டு பாய்ந்துள்ளது பி ரேத பரிசோதனையில் தெரியவந்தது.
அதே போல ஷிவா மற்றும் சின்னகேசவலு உ டலில் மூன்று கு ண்டுகளும், நவீன் உடலில் ஒரு கு ண்டும் பாய்ந்துள்ளது என கூறியுள்ளனர். இந்த து ப்பாக்கிக் கு ண்டுகள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது, அது கிடைத்த பின்னரே அது யாருடைய து ப்பாக்கிகளில் இருந்து வெளிவந்தது என்பது குறித்து தெரியவரும்.
பொலிசாரின் என்கவுண்ட்டருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் க ண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் ஆணையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து வி சாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லொறியும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் மனைவியின் கண்முன்னே கணவன் பரிதாபமாக உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (35)என்பவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார்.
டிரக் ஒன்றை முந்திக்கொண்டு முன்னே செல்ல முயன்ற போது, எதிர்திசையில் லொறி ஒன்று வேகமாக வந்துள்ளது . இதனை சற்றும் எதிர்பார்த்திராத வேல்முருகன் ப தற்றத்தில் உடனடியாக பிரேக் பிடித்ததால், நிலைதடுமாறி லொறியில் அடியில் சிக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஹெல்மெட் அணிந்திருந்தும் கூட, வேல்முருகன் ப ரிதாபமாக உ யிரிழந்தார். அவருடைய மனைவிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குழந்தை லேசான காயங்களுடன் உயிர்தப்பியது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அகில இலங்கை ரீதியிலான கிறிஸ்மஸ் கரோல் தமிழ் பாடல் போட்டியில் வவுனியா புனித சூசையப்பர் ஆலயத்தின் குழு முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு கேடயத்தையும் ஐம்பதினாயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு றாகம புனித பேருதுவானவர் மற்றும் பவுலடியார் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை ரீதியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழியில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியில்
தமிழ் பாடல் போட்டியில் கலந்துகொண்ட வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய குழுப்பாடகர் குழாம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
தமிழ் பாடல் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான சனோஜன், நிதுஷன், டிலக்சன், ஜெறோன், திலோஷன், றொஷனி, சோபிகா, ஜெசிந்தா, ஜெனுஷியா வைலட், சொப்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாடல் வரிகள் சமிலா, பாடலுக்கு மெட்டமைத்தவர் யுவராஜ், ஒழுங்கமைப்புக்களை மேற்கொண்டு ஊக்குவிப்பளித்த ஆலயப்பங்குத்தந்தை அருட்பணி இராஜநாயகம், அருட்சகோதரி ராஜி, குறித்த பாடகர் குழுவினரை ஒழுங்கமைத்த வேப்பங்குளம் ஆலய நிர்வாக சபையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டி நாவலப்பிட்டியில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான குத்துச் சண்டைப் போட்டியில் வடமாகாணம் இரண்டாம் இடத்தைத் பெற்றுக் கொண்டுள்ளது.
‘சவாட் கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண வீரர், வீராங்கனைகள் 18 தங்கப்பதக்கங்களையும், 11 வெள்ளி பதக்கங்களையும், 07 வெண்கலப் பதக்கங்களையும் வென்று வடமாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த 2019.12.10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் அமைந்துள்ள ஜயதிலக விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கில் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றிருந்தது.
இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் தலைவரும், தேசிய மற்றும் சர்வதேச குத்துச் சண்டை பயிற்றுனருமாகிய சி.யூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் போட்டிகள் நடைபெற்றன.
தேசிய ரீதியில் நடைபெற்ற ‘கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் நாடு முழுவதுமிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பல்வேறு வயது பிரிவுகளிலும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
சிறந்த குத்துச்சண்டை வீரராக வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த எஸ்.சிறிதர்சனும், சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக வவுனியா சிதம்பரபுரத்தை சேர்ந்த கெ.கிசாழினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இக்குத்துச்சண்டை போட்டியில் சிறப்பாக விளையாடிய வவுனியாவை சேர்ந்த வீரர்களான, பதினாறு வயதுக்குட்பட்ட பிரிவில் பி.ராகுல், கே.நிறோஜன், பதினெட்டு வயது பிரிவில் எஸ்.சிறிதர்சன், வி.வசிகரன், எஸ்.சஞ்சயன், இருபத்தி ஐந்து வயது பிரிவில் ரி.நாகராஜா, பன்னிரெண்டு வயது பிரிவில் ஆர்.கே. கெவின் ஆகியோர் தேசிய விளையாட்டு அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன்,
எதிர்வரும் 2020 ஜனவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும், வடமாகாண குத்துச்சண்டை (கிக் பொக்சிங்) பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில், வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சென்ற வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டு 36 பதக்கங்களை பெற்று தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வடக்கு மாகாணத்திற்கு இரண்டாம் இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
தேசிய ரீதியிலான (கிக் பொக்சிங்) குத்துச்சண்டையில் வடமாகாணம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதையடுத்து இதற்கான வெற்றிக் கேடயத்தை வடமாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், பிரான்ஸ் ‘சவேட்’ தேசிய கூட்டமைப்பின் தலைவர் சி.பூ. பிரசாந் விக்கிரமசிங்கவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
அகில இலங்கை ரீதியிலான சவாட் கிக் பொக்சிங் குத்துச் சண்டை போட்டிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட செயலகமும் ஒபர் சீலோன் மற்றும் பொஸ்டோ நிறுவனமும் இணைந்து USAID மற்றும் UNDP நிறுவனங்களின் நிதி அனுசரணையுடன் சமத்துவமான தலைமுறை,
வ ன்பு ணர்வுக்கு எ திராய் எழுந்து நிற்போம் எனும் தொனிப்பொருளில் 16 நாட்கள் செயல்வாத விழிப்புணர்வு (கார்த்திகை -25 – மார்கழி 10,2019) ஊர்வலம் இன்று (13.12.2019) மதியம் 2 மணியளவில் இடம்பெற்றது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் செம்மஞ்சள் நிற குடையுடன் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமான விழிப்புணர்வு பேரணியானது வவுனியா மாவட்ட செயலக உள்ளக வீதியூடாக மாவட்ட செயலக கேட்போர் கூடத்தினை சென்றடைந்து கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், சட்டத்தரணி பகீர் முகமட் கிஸாம், என்.வைதேசி (UNDP) , எஸ்.சூரியகுமாரி(OFERR), பா.செந்தில்குமரன் (பொஸ்டோ) மற்றும் விருந்தினர்களாக,
நகரசபை உறுப்பினர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் , பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் இம்மாதம் 14,16,17 ஆகிய தினங்களில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மின்சாரசபையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு மின்சார சபை கேட்டுக்கொள்கின்றது.
14.12.2019 காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை : வெளிக்குளத்திலிருந்து துட்டுவாகை வரை, கோவில் குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, கீர்த்தி அரிசி ஆலை, குடாகச்சக்கொடிய கல் உடைக்கும் ஆலை, செட்டிக்குளம் நகரம்,
இராசேந்திரகுளம், பம்பைமடு, சுஜன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, Omega line, மக்கள் வங்கி வவுனியா தேசிய சேமிப்பு வங்கி வவுனியா,
இலங்கை வங்கி வவுனியா, இலங்கை தொலைத்தொடர்பு வவுனியா, வவுனியா வைத்தியசாலை, சுகாதார திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகம், வவுனியா நீர்ப்பாசன சபை, வவுனியா புகையிரத நிலைய வீதி, பூங்கா வீதி.
16.12.2019 காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை : கணேசபுரம், மகாறம்பைக்குளம், கூமாங்குளம், செட்டிகுளம் நகரம், ஒட்டறங்குளம், சுஜன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை,
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி , கஜசிங்கபுர இராணுவ முகாம், செட்டிக்குளம் தொலைத்தொடர்பு நிலையம், செட்டிக்குளம் , பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், செட்டிக்குளம் வைத்தியசாலை, பம்பைமடு பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம், Omega line, பறயனாளங்குளத்திலிருந்து முகத்தான்குளம் வரை.
17.12.2019 காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை : கணேசபுரம், மகாறம்பைக்குளம், கூமாங்குளம், செட்டிகுளம் நகரம், ஒட்டறங்குளம், கொக்கெலியவிலிருந்து ஓமந்தை வரை, ஓமந்தை வீட்டுத்திட்டம், ICT கல்லூரி, Union Alliance Ltd, AMP ஓமந்தை,
ஓமந்தை மீன்பிடி வலை தொழிற்சாலை , இராசேந்திரகுளம், சுஜன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை , ஜீவன் அரிசி ஆலை, வவுனியா தொழிநுட்பகல்லூரி, பம்பைமடு பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம், Mega line, ஈரப்பெரியகுளத்திலருந்து பூ ஓயா வரை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், SLBC ஈரப்பெரியகுளம்.
யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உ யிரிழந்துள்ளார். யாழ். பருத்தித்துறை பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜசன் ஆனந்த் என்ற சிறுவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சில மணி நேரத்தின் பின்பு அவரை கிணற்றிலிருந்து மீ ட்டு உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோ சடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து இரண்டு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் மோ தல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் மோ தலுக்கு முக்கிய காரணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான இந்த இளைஞன் நீண்ட காலமாக இத்தாலியில் சேவை செய்துள்ள நிலையில் பேஸ்புக் மூலம் இலங்கையில் உள்ள இந்த பெண்ணை அறிந்து கொண்டுள்ளார்.
இளம் வயதுடைய யுவதி போன்று நடந்து கொண்ட இந்த பெண் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி இளைஞனை ஏ மாற்றி பல முறை பணம் பெற்றுள்ளார்.
தங்கள் இருவருக்கும் வீடு கட்ட வேண்டும் என கூறி பல முறை பணம் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு பணம் பெற்று கம்பளை – நுவரெலியா வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை வாங்கி அதனை வாடகைக்கு வழங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வவுனியாவில் அதிகரித்துள்ள டெங்கினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா வர்த்தக சங்கத்தினருடான கலந்துரையாடல் வவுனியா சுகாதார அதிகாரி பணிமணையில் இன்று (13.12.2019) காலை 10 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றது.
பொது சுகாதார பரிசோதகர் சிவரஞ்சன் தலமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா நகரத்தினை டெங்கு அற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கில் சமூகத்தினை ஒன்றுதிரட்டி அவர்கள் மூலமாக டெங்கு ஒழிப்பினை முன்னெடுப்பதுடன் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து வாரத்தில் ஒரு நாள்,
வர்த்தக நிலையங்கள் , வீடுகள் போன்ற இடங்களை பார்வையிடுவதுடன் டெங்கு கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு திட்டமிடல் செயற்றிட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது வர்த்தகர்கள், வைத்தியர், பொது சுகாதார பரிசோகர்கள், பொதுமக்கள் அடங்கிய 9 குழுவினை அமைந்து வாரத்தில் ஒரு நாள் வவுனியா நகர் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு நோய் தாக்கம் காரணமாக வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்குவதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தால் கடந்த (07.12.2019) தொடக்கம் விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. 550 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட இந்நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ் தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தனியார் கல்லூரி உரிமையாளருக்கான சந்திப்பொன்று இன்று (13.12.2019) காலை 10.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வவுனியா நகரசபை உப தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள்,
வைத்தியர்கள், நகரசபை ஊழியர்கள், தனியார் கல்லூரி உரிமையாளர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தனியார் கல்லூரி உரிமையாளர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் டெங்கின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன்,
தனியார் கல்லூரிகளை மூடியதன் காரணமும் விபரமாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தனியார் கல்லூரி உரிமையாளர்களும் அவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தெரிவித்தனர்.
சுமார் இரு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் பின்னர் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்குவதற்குக்கான தடையுத்தரவினை மேலும் ஒருவாரத்து நீடிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
வவுனியா – செட்டிகுளம், பீடியா பண்ணைப் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு யானையொன்று ப லியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த யானை மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை பார்வையிட்டதுடன் யானை 20 வயதுடையது எனவும் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் யானைகள் வரும்போது சமிக்ஞை காட்டும் இயந்திரம் செயலிழக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியில் இவ்வாறானதொரு சாதனையை நிகழ்த்தியமை தொடர்பில் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில், 21 வருடகால தமிழ் மொழிப் பரீட்சை வரலாற்றில் இந்த சாதனை முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.