Google Map உதவியுடன் சென்ற கணவன் மனைவி காருடன் குளத்தில் விழுந்ததால் பரபரப்பு!!

Google Map காட்டிய பாதையில் சென்றதால் காரில் சென்ற கணவன் மற்றும் மனைவி இருவரும் குளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மாநிலமான கேரளா, கோட்டயம் செத்திப்புழையைச் சேர்ந்த தம்பதியினர் ஜோசி ஜோசப் (வயது62) மற்றும் ஷீபா (58). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மான்வெட்டம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

இதில் காரை ஒட்டிய ஜோசப் Google Map காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் கருப்பந்தரை என்ற இடத்தில் சென்ற போது குளத்தில் கார் விழுந்தது.

இதனால் கணவன் மற்றும் மனைவி இருவரும் வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அந்த வழியாக வழியாக வந்த பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்களை கயிறு மூலம் காரை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஜோசப் கூறுகையில், “சாலையில் வெள்ளம் தேங்கியிருந்ததால் ‘கூகுள் மேப்’ காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக கார் குளத்திற்குள் பாய்ந்தது” என்றார்.

தமிழகத்தை உலுக்கிய வழக்கு : 2 பிள்ளைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை!!

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் காதலனுக்காக தனது 2 பிள்ளைகளை கொலை செய்த அபிராமிக்கு, மாவட்ட நீதிமன்றம் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்துள்ளது.

இரண்டு பிள்ளைகளை கொன்ற வழக்கு

கடந்த 2018ஆம் ஆண்டில் காஞ்சிபுர மாவட்டம் மூன்றாம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்ற பெண், தனது இரண்டு பிள்ளைகளை கொன்ற வழக்கு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிக்டொக்கில் பிரபலமான அபிராமி, பிரியாணி கடையில் வேலைபார்த்து வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.

இந்த விடயம் அவரது கணவர் விஜய்க்கு தெரிய வரவே, அவரையும் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.

விஜய் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைக்க, 2 பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மீனாட்சி சுந்தரம், அபிராமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சுந்தரமும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், மீனாட்சி சுந்தரத்திற்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 

மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : உங்களுக்கான ஒரே தீர்வு இதோ!!

இயற்கை வாழ்க்கையிலிருந்து இயந்திர வாழ்க்கைக்குள் புகுந்த மனிதன், பெரும்பாலான நோய்களால் அவதியுறுகிறான். அந்த வாழ்க்கை முறை மாற்றமடைந்ததுவே இன்றைய மூட்டுப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

இந்த மாற்றமே கீல்வாதம், முடக்குவாதம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டு நோய்களின் காரணமாக விளங்குகிறது. இன்றைய வேலைமுறை இளையரையும் பாதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஆய்வில், 50க்கு மேற்பட்ட பெண்களில் 21.8% பேர் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான வலிக்கான தீர்வில்லாமல் நீங்களும் தவிப்பவரா?

இதற்கு தீர்வாகத்தான், ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் நோக்குடன் ஓர்த்தோ ஷீல்ட் மூட்டு வலி நிவாரணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தி இயற்கை மூலிகைகளின் பயன்படுத்தி IBMBB உடன் இணைந்து உருவாக்கப்பட்டதே ஓர்த்தோ ஷீல்ட். 100% இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஓர்த்தோ ஷீல்ட்,

பழைமையான ஆயுர்வேத மருத்துவத்தை நவீன அறிவியலுடன் இணைத்து, விரைவான உறிஞ்சுதல் மற்றும் நீண்டகால நிவாரணத்தை வழங்குகிறது.

இவை வலியை விரைவாகக் குறைத்து, மூட்டுகளை மென்மையாக்குகின்றன.

விரைவான உறிஞ்சுதல் மற்றும் நீண்டகால நிவாரணம் இதன் தனித்துவமான கலவை, வலியின் மூல காரணத்தை நிவர்த்தி செய்து, விரைவாக உறிஞ்சப்பட்டு, நீண்டகால ஆறுதலை வழங்குகிறது.

இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 90% வாடிக்கையாளர்கள் ஓர்த்தோ ஷீல்ட் பயன்பாட்டில் திருப்தி அடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும், இது கீல்வாதம், மூட்டு விறைப்பு மற்றும் தசை வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. அத்தோடு ஸ்டீராய்டுகள் அல்லது கடுமையான இரசாயனங்கள் இல்லாத இந்த மருந்து, எரிச்சல் இல்லாத, பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்கிறது.

நீங்கள் தொழிலுக்காக பொது இடங்களுக்கு இல்லது நிறுவனங்களுக்கு செல்பவராயின் பயமின்றி ஓர்த்தோ ஷீல்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏனைய நிவாரணிகளை போன்று விரும்பத்தகாத வாசகனை இன்றி தூய நறுமணத்துடன் ஓர்த்தோ ஷீல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இயற்கையான மணம் மற்றும் எண்ணெய் இல்லாத தன்மை, இதை அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக்குகிறது.

இந்த ஓர்த்தோ ஷீல்ட்டை, உடலில் பாதிக்கப்பட்ட பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவி, ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்துவது சிறந்த பலனை பெற்றுத்தரும் என ஆய்வாளர்கள் நம்பிக்கையளித்துள்ளனர்.

பெற்றுக் கொள்வதற்கு, நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் www.fadnals.lk,வழியாக பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலும், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள்(18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்) இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் கனடாவிலிருந்து கட்டார், தோஹாவிற்கு போதைப்பொருள் கொண்டு வந்துள்ளார். அங்கிருந்து, அவர் கட்டார், எயபர்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவர் 12 கிலோகிராம் 196 கிராம் ஹஷிஷ் மற்றும் 05 கிலோகிராம் 298 கிராம் கோகைனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரும் அவர் கொண்டு வந்த போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

 

இந்தியாவில் அரச பாடசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய விபத்து : நால்வர் பலி!!

இந்தியா – ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை கட்டிடத்தின் ஒரு பகுதி, இன்று காலை இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு மாணவர்கள் பலியாகியுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காலை 7.45 மணியளவில் அரச மேல்நிலைப் பாடசாலையில் காலை பிரார்த்தனைக்காக மாணவர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான வகுப்பறைகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது, கட்டிடத்திற்குள் குறைந்தது 17 மாணவர்கள் இருந்ததாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது பாடசாலை வளாகத்தில் இருந்த 27 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நாளுக்கு நாள் சரிவடையும் தங்கத்தின் விலை!!

கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்த நிலையிலேயே பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,018,168 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,920 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 287,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,930. ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,430 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 251,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தல்!!

சைபர் நிதி மோசடி கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர் ஒருவர் நாட்டிற்கு வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு, கைது செய்யப்பட்ட சீன நாட்டவரை நாட்டிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

28 வயதான அந்த நபர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதிகளவிலான கணினி உபகரணங்களை எடுத்துச் சென்ற சீன நாட்டவரை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவு விசாரித்துள்ளது.

இலங்கை பங்குச் சந்தையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய தொழிலதிபரை சந்திக்க வந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும், அவரது விசாரணையின் போது, சர்வதேச சைபர் நிதி மோசடி கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இரும்பு உருண்டைகள்!!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து நேற்றையதினம் வியாழக்கிழமை(24) 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றையதினம் 19 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 09 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை, செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 76 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 88 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றையதினமும் அகழ்வுப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

குடும்ப தகராறில் கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி!!

இந்தியாவின் பீகார் மாநிலம், கயா மாவட்டத்திலுள்ள கிஜ்ராசராய் பகுதியில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

கிஜ்ராசராய் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி மீண்டும் தகராறு முற்றியது.

இதன்போது, கணவன் மனைவியை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மனைவி, கணவனைத் தள்ளி வீழ்த்தி, அவரது உடல் மீது அமர்ந்து, அவரது நாக்கை கடித்து துண்டித்து மென்று விழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாக்கு துண்டிக்கப்பட்டதால் கடுமையான வலியில் கணவன் அலறி துடித்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள், மனைவி கணவன் மீது அமர்ந்திருப்பதையும், கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக கணவனை மீட்டு, அருகிலுள்ள அரசு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.கணவனுக்கு அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்தது.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கயாவிலுள்ள மகத் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக கிஜ்ராசராய் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AI மோசடி ; குமார் சங்கக்கார எச்சரிக்கை!!

செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான மோசடி குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான குமார் சங்கக்கார சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், மோசடி செய்பவர்கள் தனது அனுமதியின்றி தனது சாயலைக் கொண்ட போலி விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதாக சங்கக்கார கூறினார்.

இந்த மோசடி விளம்பரங்களில் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம், முன்னாள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர், தனது ரசிகர்களை இந்த AI-உருவாக்கப்பட்ட வீடியோக்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,

முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் மோசடி மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளில் கணிசமான உயர்வு காணப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்படும் விளம்பரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் தீப்பரவல்!! :

வவுனியா ஈரப்பெரியகுளம் வேரகம பகுதியில் பரவிய திடீர் தீ இன்று (25.07.2025) காலையுடன் முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த தீ, தற்சமயம் அப்பகுதியில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக குறுகிய காலத்தில் பரவியது.

இந்த தீயினால் ஒரு பெரிய நிலப்பரப்பின் காடுகள் மற்றும் இயற்கை சூழல் சேதமடைந்துள்ளது. வவுனியா பகுதியில் பல மாதங்களாக கடுமையான வறண்ட வானிலை நிலவி வருகிறது.

எனவே, பொறுப்பற்ற முறையில் தீ வைக்க வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை மையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

வவுனியா ஒமந்தையில் இளைஞன் நஞ்சருந்தி மரணம் : பொலிஸார் விசாரணை!!

வவுனியா ஒமந்தை கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட அரசமுறிப்பு கிராமத்தில் நேற்றையதினம் (24.07.2025) இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி மரணமடைந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் வசிக்கும் 18வயதுடைய கெ.சிவரஞ்சன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கிணறில் வீழ்ந்த இரண்டு யானைகள் : ஒரு யானை உயிரிழப்பு!!

வவுனியாவடக்கு கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்தநிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராமசேவகருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிராமசேவகரால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் பொலிசாருக்கும் உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர். மற்றய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இரு யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

காதலியை கொடூரமாக கொலை செய்து உயிரை மாய்த்த காதலன் : பின்னணி குறித்து பொலிஸார் தகவல்!!

அம்பாறை, பதியதலாவ காதலியின் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மரங்கல பகுதியில் நேற்று அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் வீட்டில் இருந்த தனது 22 வயது காதலியின் கழுத்தை அறுத்து, அவரது தாயையும் தந்தையையும் பலத்த காயப்படுத்தி, பின்னர் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

பெண் தனது மூன்று வருட உறவை முறித்துக் கொண்டதால் கோபமடைந்த காதலன் இந்தக் குற்றத்தைச் செய்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலனால் கத்தியால் குத்தப்பட்டவர் 22 வயதுடைய டி.எம். சரோஜா உதயங்கனி என தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய தந்தை மற்றும் 60 வயதுடைய தாயார், மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணான சரோஜா, மொனராகலையை சேர்ந்த இளைஞனுடன் சுமார் மூன்று ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த இளைஞன் சரோஜாவுக்கு பணம் மற்றும் பல்வேறு வழிகளில் உதவி செய்து, அவரை திருமணம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் சில காலத்திற்கு முன்பு, சரோஜா அந்த இளைஞனுடன் கொண்டிருந்த காதல் உறவை நிறுத்தியுள்ளார். அவருடைய பெற்றோரும் அந்த இளைஞனை எதிர்த்தனர். இதன் காரணமாக, அந்த இளைஞன் சரோஜா மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் கடும் வெறுப்பைக் கொண்டிருந்தார்.

இளைஞனின் மிரட்டல் காரணமாக சரோஜாவுக்கு கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் சரோஜா வேறொரு இளைஞனுடன் புதிய காதல் உறவைத் ஏற்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சரோஜா 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பதியதலாவாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியிருந்தார். தனது காதலி வீடு திரும்பியதை அறிந்த இளைஞன், நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

சரோஜா அதிகாலை 2.30 மணியளவில் கொழும்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், கூர்மையான ஆயுதத்துடன் இளைஞன், முதலில் வீட்டிற்குள் நுழைந்து சரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த அவரது பெற்றோரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இளைஞனால் கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண், வீட்டை விட்டு வெளியே ஓடி உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கு உயிரிழந்துள்ளார். வீட்டை விட்டு தப்பிச் சென்ற இளைஞன், கூர்மையான ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

மொனராகலையில் இருந்து தனது காதலியின் வீட்டிற்கு அந்த இளைஞன் வந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை கட்டமைப்பில் பல சிக்கல்கள் : விரைவில் மாற்றம் ஜனாதிபதி உறுதி!!

நாட்டின் கல்வி கட்டமைப்பு முழுமையாக சீர்த்திருத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பாடசாலை கட்டமைப்பில் பல சிக்கல்கள் காணப்படுகின்றது. ஒரு ஆசிரியருக்கு 18 மாணவர்கள் இருக்கின்றார்கள் . இது ஒரு நல்ல நிலையாக இருந்தாலும் அதை ஏற்க முடியாத நிலை தற்போது எழுந்துள்ளது.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் கல்வி முறைமை பற்றி கவனம் செலுத்தியுள்ளோம். பொருளாதார, கல்வி மறுசீரமைப்பு தேவைப்படுகின்றது.

அதிகமானவர்கள் கலந்துரையாடுகின்றார்கள் கேள்வியெழுப்பியுள்ளீர்கள் இதற்கு பதிலளிக்க நான் கடமைபட்டுள்ளேன். இது வெறுமனே பாடவிதான மாற்றம் அல்ல ,மொத்த சமூகத்தையும் பொருளாதார கட்டமைப்பை நோக்கிய மாற்றம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சனத்தொகை பெறுமானத்தில் 38ஆவது இடத்தில் இலங்கை இருக்கின்றது. இது சீனாவை விட அதிகம். எமது நாட்டில் இயற்கை வளம் இருந்தாலும் வணிக ரீதியாக எதுவும் பெரிதாக இல்லை.

ஆகவே, மனித வளத்தை அதிகரிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அறிவானர்கள் வறுமையாகவும் அறிவிலிகள் வசதியாகவும் இருக்கின்றார்கள். இந்த முறை மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.