யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளான வாகனம் கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. ஹார்ட் பிஆர் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பெருந்தொகையான பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடல்நீர் ஏரிக்குள் பாய்ந்துள்ளது.
இதன்போது சாரதி எதுவித காயங்களும் இன்றி தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேனி களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் நெடுங்கேனி பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.
இந் நினைவேந்தல் நிகழ்வில் 40க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் மாவீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு தமது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டு க தறி அ ழுதனர்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸ்ஸை வரை பயணத்தை மேற்க்கொண்ட யாழ்தேவி கடுகதி புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து குருநாகல் கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றதாக கல்கமுவ புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
4 புகையிரத பெட்டிகள் சேதமடைந்திருப்பதுடன் காயமடைந்தவர்கள் தொடர்பிலான விபரம் உடனடியாக அறியமுடியவில்லை என கல்கமுவ புகையிரத நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதுவரை காயங்களுக்குள்ளான 5 பேர் கல்கமுவ ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தின் காரணமாக வடக்கு புகையிரத பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை புகையிரத பாதைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக வடக்கு புகையிரத பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் கொழும்பிலிருந்து மாஹோ புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் அம்பன்பொல புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று இரவு வடக்கு புகையிரத பாதையின் அனைத்து புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டிருப்பதாக புகையிரத கட்டுப்பட்டு நிலையம் அறிவித்துள்ளது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது.
மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.
தமது உறவுகளை நினைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மேலும் இங்கு அனைவரும் தமது உறவுகளை நினைத்து கண்ணீர்விட்டு க தறி அ ழுதனர்.
வவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.
மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் திருமதி பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப் பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார்.
யு த்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு தனது தந்தையை இ ழந்த இம் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த போதிலும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகின்றார்.
இந்நிலையிலேயே மாகாண மட்ட போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டு இக் கண்டுபிடிப்பில் ஈடுபட்போதிலும் பொதியளவு நிதிவசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகை பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்தார்.
இதன் போது கழிவுப் பொருட்கள் என பயன்படுத்தாது எறியப்பட்ட பொருட்களையும் தனது கண்டுபிடிப்புக்கு மாணவி பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி இரத்தப் பரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்தார்.
இக் கண்டுபிடிப்பினை மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்க வைத்ததன் ஊடாக மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட இம் மாணவி தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.
குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், ரோகிதா புஸ்பதேவன் மாகாண மட்டத்தில் ரோபொட்டிக் போட்டியில் பங்கேற்பதற்காக ரோபோ ஒன்றினை செய்ய விரும்பமுள்ளதாக தெரிவித்திருந்தார். அத்துடன் கழிவுப் பொருட்களுடாக அதனை செய்யவுள்ளதாகவும் சில பொருட்களை வாங்க வேண்டியுள்ளதனால் சிறுதொகை நிதி தேவை எனவும் தெரிவித்தார்.
எனவே நிச்சயமாக அதனை செய்யுமாறு நான் தெரிவித்ததுடன் நதியுதவியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக பெற்று தரலாம் என தெரிவித்தேன். அதன் பிரகாரம் நான்காயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை மாத்திரம் வெளியில் வாங்கியிருந்தார்.
மற்றைய பொருட்கள் எல்லாவற்றையும் கழிவுப் பொட்களில் இருந்து பெற்றுக்கொண்டார். அந்த மாணவிக்கும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர் குழாமிற்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். இந்த மாணவி ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு பெண்களாலும் முடியும் என வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றமை வவுனியா மாவட்டத்திற்கும் எமது வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்திய யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரையில் படை வீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று வவுனியாவை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் ஆரம்பிக்கப்பட்ட சமாதானத்தை வலியுறுத்தும் குறித்த நடைபயணம் கதிர்காமத்தில் நிறைவடையுள்ளது.
படை வீரர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடைபயணமானது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை உண்டுபண்ணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
நான்காம் நாளான இன்று வவுனியாவை வந்தடைந்த இப்பயணம் இன்று மதவாச்சியை சென்றடைந்துள்ளது.
வவுனியாவில் கடந்த 16 வருடங்களில் 25பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பா லியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.
எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களிற்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் முதலாம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் பா லியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினரால் எயிட்ஸ் தினம் நினைவு கூரப்படுகிறது.
“சமூகங்கள் நிலைமையை மாற்றலாம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 3,507 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2,391 ஆண்களும், 1,116 பெண்களும் காணப்படுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 25 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு நோயாளி இனம் காணப்பட்டுள்ளார். அவர்களில் 12பேர் மாத்திரமே உ யிருடன் இருக்கின்றனர். அவர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டு வருகிறது.
வவுனியாவை பொறுத்தவரை இங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக வி பச்சாரம் காணப்படுகின்றது. வேறு மாவட்டங்களில் இருந்தும் வி பச்சார தொழிலாளர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
எனவே எயிட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு தெளிவுபடுத்தல்களை நாம் மேற்கொண்டு வருகிறோம். வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களாக அனுமதிக்கப்படும் சிலருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தாமாகவும் சிலர் வருகைதந்து பரிசோதனையை மேற்கொள்கின்றனர்.
எனவே வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பா லியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவே வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை தடைசெய்யக்கோரி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தடைகளையும் மீறி இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நுழைவாயிலை உடைத்து பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்துள்ளதால் , அப்பகுதியில் அசாதாரண நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிட்டதாக தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இதனை கூறியுள்ளார். வட மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தைமேற்கொள்ள முன்னர் முரளிதரனுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது குறித்து முத்தையா முரளிதரனுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அவர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிட்டதாக தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதியை நேற்று இரவு சந்தித்தது உண்மைதான். எனினும், வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அது முற்றிலும் வதந்தி” என கூறியுள்ளார்.
காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் த லை து ண்டித்து கொ லை செய்துள்ள சம்பவம் நெல்லையில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நம்பிராஜன். இவரும் தங்கப்பாண்டி என்பவரது 17 வயது மகள் வான்மதியும் நீண்ட நாட்களாகவே காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எ திர்ப்பு இருக்காது என்று நினைத்துள்ளனர். ஆனால் வான்மதியின் தந்தை செல்வாக்குமிக்கவர் என்பதால், அவருடைய குடும்பத்தில் காதலுக்கு க டும் எ திர்ப்பு கிளம்பியுள்ளது.
அதனை மீறி காதல் ஜோடி கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து இருவரின் காதலுக்கு ஆதரவாக இருந்த அருணாச்சலம், நெல்லை நகர்புறத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் 25ம் திகதி இரவு ஊரில் இருந்து காதல் தம்பதியை சந்திக்க வந்த நம்பிராஜனின் நண்பன் முத்துப்பாண்டி, மது அருந்தச்செல்லலாம் என கூறியுள்ளார். இதற்கு வான்மதி எவ்வளவோ மறுப்பு தெரிவித்தும், நண்பனின் அழைப்பை ஏற்று நம்பிராஜனும் நம்பிக்கையுடன் சென்றுள்ளான்.
ஆனால் இரவு நீண்ட நேரமாகியும், நம்பிராஜன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனைவி தன்னுடைய மாமனார் அருணாச்சலத்திற்கு தகவல் கொடுத்ததோடு, பொலிஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், ரயில்வே தண்டவாளத்தில் சி தைக்கப்பட்ட நிலையில் த லை தனியாகவும், உ டல் தனியாகவும் நம்பிராஜன் கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, வான்மதியின் சகோதர் செல்லச்சாமி உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து கொ லை செய்திருப்பது தெரியவந்தது.
ஊரில் இருந்து வந்த முத்துபாண்டியை பகடைக்காயாக பயன்படுத்தி, நம்பிராஜனை வீட்டில் இருந்து அழைத்து வருமாறு செல்லசாமி கூறியுள்ளான். அதன்படி அவர்கள் தி ட்டமிட்ட இடத்திற்கு அழைத்து வந்ததும், தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த 10 பேரும் ச ரமாரியாக வெ ட்டி கொ லை செய்துவிட்டு, ரயில் விபத்து போல ஜோடிக்க முயன்றிருப்பது தெரியவந்துள்ளது.
குட்டி நாய் ஒன்று வெட்டப்பட்டு அதன் இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட நிலையில் தோல் மாத்திரம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள கடை ஒன்றின் வாசலில் காணப்பட்டுள்ளது.
காகம் அல்லது பிரிதொரு நாயினால் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. பொது சுகாதார பரிசோதகரும் பார்வையிட்டு சென்றுள்ளார்.
நாய்க்குட்டி வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். நாயின் அரைவாசி கால் ஒன்றுடன் வெறும் தோல் மாத்திரம் காணப்பட்டுள்ளது.
பிற்ஸ் எயார் தனியார் நிறுவனம் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான சேவையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இந்தியாவில் விமானத்தை தரை இறக்குவதற்கான அனுமதி இது வரையில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே ஏற்கனவே திட்டமிட்டபடி பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை தமது நிறுவனத்தினால் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தமது நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்தியா சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனமான எலைன்ஸ் விமான நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இந்த விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. நாளாந்தம் சுமார் 50 பயணிகள் பயணம் செய்வதாகவும் விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் புகலிடம் கோரும் இலங்கை தமிழ் குடும்பத்தை த டுத்து வைத்திருப்பதற்கான காரணம் ஒருபோதும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நடேசலிங்கம் – பிரியா முருகப்பன் தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்கள் கோபிகா (4) மற்றும் தருணிகா (2) ஆகியோர் இலங்கைக்கு நாடு க டத்தப்பட இருந்த கடைசி நிமிடத்தில் நீதிமன்றம் அ திரடி த டை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் கடலோர தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
ஆகஸ்டில் மாற்றப்படுவதற்கு முன்னர், குடும்பம் மெல்போர்னில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் பிலோலாவின் பிராந்திய குயின்ஸ்லாந்து சமூகத்தில் வசித்து வந்தது. செப்டம்பர் பிற்பகுதியில், கூட்டாட்சி நீதிமன்றம் குடும்பத்தினரின் வழக்கை நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் வரை தங்கலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் தீவில் குடும்பத்தை தடுத்து வைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை ஆதரிப்பதற்கான எழுத்துப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை என கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
குடும்பத்தை கடல்வழி காவலில் வைத்திருப்பதற்கான கடைசி நிமிட அறிவுரை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் உள்நாட்டு எல்லை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு அவுஸ்திரேலிய எல்லைப் படை ஆணையர் மைக்கேல் அட்ராம் வாய்மொழியாக வழங்கினார் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கார்டியன் பத்திரிக்கை இந்த தகவலை கண்டுபிடித்துள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் கார்டியன் பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரியா, கிறிஸ்துமஸ் தீவில் குடும்பம் துன்பப்படுவதாகவும் கவலைப்படுவதாகவும் கூறினார்.
“குறிப்பாக கோபிகா தனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை என்று சொல்கிறாள், அவள் மீண்டும் பிலோலாவுக்குச் செல்ல விரும்புகிறாள். தருணிகா சரியான உணவை சாப்பிடுவதில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அ ச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மாவீரர் தின ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தையண்டியதாக நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லமானது இராணுவ முகாமாக காணப்படுவதால் பிறிதொரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஓருவர் பொலிசாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
அ ச்சுறுத்தல் காரணமாக தனியாருக்கு சொந்தமான குறித்த இடம் கைவிடப்பட்டு ஈச்சங்குளத்தில் பிறிதொரு இடத்தில் நினைவு தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நேற்று மாலை இடம்பெற்றன.
இதன்போது அங்கு சென்ற இராணுவத்தினர், பொலிசார், புலனாய்வாளர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்களை விசாரணை செய்ததுடன், அங்கு நின்ற வாகனங்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டினர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் ப தற்றநிலை ஏற்பட்டது. தொடர்ந்தும் நினைவு தினத்தை அமைதியாக கடைப்பிடிப்போம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததையடுத்து தமது உயர்மட்டங்களை தொடர்பு கொண்ட ஈச்சங்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரியும், ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அமைதியாக இ றந்தவர்களை நினைவு கூர தாம் தடையில்லை எனத் தெரிவித்து, சில கட்டுப்பாடுகளை விதித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதேவேளை, ஈச்சங்குளம் பிரதான வீதியில் இராணுவ வீதி சோதனை சாவடி ஒன்று நேற்று அமைக்கப்பட்டுள்ளதுடன் வீதிகளில் இராணுவமும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இடம்பெற்ற தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் சித்திபெற்ற வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் .யதுர்சன் மற்றும் வவுனியா இறம்பைக்குளம் மகிளீர் வித்தியாலய மாணவி செல்வி .எஸ்.சப்தகி சர்வதேச ஒலிம்பியாட்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
தேசிய ரீதியில் சித்திபெற்று சாதனை படைத்த மாணவர்கள் குழு சர்வதேசரீதியில் வியட்நாமில் இடம்பெறும் போட்டியில் பங்கு பங்குபற்றுவதற்காக சென்றுள்ளனர் .மேற்படி குழுவில் வவுனியாவை சேர்ந்த இரு மாணவர்களும் சர்வதேச போட்டியில் பங்குகொள்வதற்காக 25.11.2019 அன்று வியட்நாம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சொத்து ப யம் மற்றும் கணவனின் பாசம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் சி றுமியை கொ லை செய்ததாக சித்தி வாக்குமூலம் அளித்திருப்பது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அடுத்த பகடாலபேட்டையைச் சேர்ந்தவர் ஷியாம்குமார். இவர் சத்தியவேணி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்த தம்பதிக்கு தீப்திஸ்ரீ இஷானி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்தியவேணி இ றந்துவிட்டதால், சாந்தகுமாரி என்ற பெண்ணை ஷ்யாம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சாந்தாகுமாரி தனக்கு குழந்தை பிறக்காத வரை தீப்திஸ்ரீ இஷானியை நன்றாக கவனித்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு சாந்தகுமாரிக்கு குழந்தை பிறந்ததால், அவர் தீப்திஸ்ரீ இஷானியை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஷ்யாம், தீப்தியை உடனடியாக தன்னுடைய தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். அங்கு சென்று மகளை பார்ப்பதும் வருவதுமாக இருந்துள்ளார்.
தீப்தி 2-ஆம் வகுப்பு படிப்பதால், அவரை மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து தாயாரின் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு அதன் பின் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாகவே ஷ்யாமிற்கும், சாந்தகுமாரிக்கும் பி ரச்னை வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் பள்ளிக்கு சென்ற தீப்தி கா ணமல் போனார்.
இதனால் ஷ்யாம் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் சாந்தகுமாரியை அழைத்து விசாரித்த போது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் பள்ளியில் இருக்கும் குழந்தைகளிடம் விசாரித்த போது, சித்தி தான் அழைத்துச் சென்றார் என்று கூறியதால், பொலிசார் மீண்டும் சாந்தகுமாரியிடம் வி சாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் நான் தான் குழந்தையை கொ லை செய்து உ டலை சா க்குமூட் டையில் வைத்துவிட்டேன் என்ற அ திர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். வாக்குமூலத்தில், எங்களுக்கு மகன் பிறந்த பிறகும், அவர் முதல் மனைவியின் குழந்தை மீது அதிகம் பாசம் காட்டினார். எதுவாக இருந்தாலும், முதலில் மகளை சென்று பார்த்துவிட்டு அதன் பின் தான் வீட்டிற்கு வருவார்.
அதுமட்டுமின்றி செலவிற்கு பணம் கொடுத்து வந்தார். இதனால் பாசம் காரணமாக அவர் சொத்தை எல்லாம் தீப்தி பெயரில் எழுதி வைத்துவிடுவாரோ? பாசம் என் மகனுக்கு கிடைக்காது என்ற எண்ணத்தில், அவளை அழைத்து சென்றேன். அப்போது முகம் தெரியக் கூடாது என்பதற்காக இருவரின் முகத்திலும் கருப்பு துணியை அணிந்து அருகில் இருக்கும் ஏரிக்கு அழைத்து சென்றேன்.
அங்கு தீபதியின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்து, பின்னர் சி றுமியின் உ டலை சா க்குப்பை க்குள் வைத்து அ டைத்து ஏ ரிக்குள் வீ சிவிட்டு வீட்டுக்கு வந்து எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட்டேன். ஆனால் பொலிசார் சிசிடிவி கமெராவில் கிடைத்த தகவலை வைத்து என்னை பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.