எனக்காக அடி வாங்கினார் : நளினி- ராமராஜனின் சுவாரஸ்ய காதல் கதை!!

நளினி- ராமராஜன்

1980களின் சினிமாவை கலக்கிய நட்சத்திர நடிகைகளில் நளினியும் ஒருவர், பள்ளிப் பருவத்திலேயே சினிமாவுக்கு அறிமுகமாகி வருடத்திற்கு 24 படங்கள் வரை நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்த நளினி, 1987ம் ஆண்டு நடிகர் ராமராஜனை கரம்பிடித்தார்.

இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடால் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில், காதல் டூ கல்யாணம் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் நடிகையாக இருந்த போது ராமராஜன் அவர்கள் அசிஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினார். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும் போல, ஒருநாள் அடுத்த சீனுக்காக காத்திருந்த நேரத்தில், நீங்க இந்த டிரெஸ்ல அழகா இருக்கீங்க, நாளைக்கு இதையே போட்டுட்டு வாங்க” என கூறினார்.

நானும் ஏதேச்சையாக அதை மறுநாள் போட்டுவர, நாம் சொல்லித்தான் இதை செய்தார் என அவருக்கு என்மீது காதல் துளிர்விட்டுள்ளது.

அடுத்ததாக மனைவி சொல்லே மந்திரம் படஷீட்டிங்கின் போது, பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வந்து குங்குமத்தை எனக்கு கொடுத்தார், என் கையில் மருதாணி இருந்ததால் நீங்களே வைத்துவிடுங்கள் என கூறினேன்.

இதனால் மேலும் காதல் அதிகரித்தது, ஏதேச்சையாக நடந்த சம்பவங்கள் அவர் மனதில் காதலை வளர்த்துவிட்டன. தொடர்ந்து என்னுடைய வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளனர், இதைக்கேட்ட என் குடும்பத்தார் அவரை அ டித்து உ தைத்து அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவத்தை என்னிடம் வந்து கூறியதும், நமக்காக ஒருத்தர் அடி வாங்கி இருக்காரே, நாம் திருமணம் செய்தால் என்ன? என்று தோன்றியது. அந்தநேரத்தில் என் நண்பர்களுக்கு தொடர்ந்து திருமணம் நடந்ததால் எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. ராமராஜன் வந்து கேட்டதும் நானும் ஓகே சொல்லிவிட்டேன், திருமணத்துக்கு பின்னர் தான் அவரை காதலித்தேன் என கூறியுள்ளார்.

தொ ந்தரவு செய்த கணவன் : 5 மாதத்தில் விபரீத முடிவெடுத்த புதுமணப்பெண்!!

புதுமணப்பெண்

நல்ல தோற்றம் மற்றும் வரதட்சணை கொ டுமையால் புதுமணப்பெண் ஒருவர் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த சுஷ்மிதா என அடையாளம் காணப்பட்ட 19 வயது பெண் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் விஜயேந்தர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

சுஷ்மிதா நல்ல தோற்றத்துடன் இருந்ததால், திருமணத்திற்கு முன் அவருக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்திருக்கலாம் என விஜயேந்தர் சந்தேகித்துள்ளார். மேலும், அந்த நபரின் செல்போன் எண்ணை கொடுக்குமாறு சுஷ்மிதாவை வ ற்புறுத்தியுள்ளார்.

கணவரின் ச ந்தேகத்திற்கிடமான தன்மையும், மாமியாரின் வரதட்சணை கோரிக்கைகளும் தா ங்கமுடியாத நிலையில், அந்த இளம் பெண் வீட்டில் தூ க்குப்போ ட்டு த ற் கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அறிக்கையின்படி, இ றந்த மணமகளின் பெற்றோர் தங்கம், ரூ .3 லட்சம் ரொக்கம், 150 சதுர கெஜம் மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை திருமணத்தின் போதே வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

அப்படி இருந்தும் விஜயேந்தரின் குடும்பம் வரதட்சணை கேட்டு தொ ந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணம் : பேரன், பேத்திகளுக்கு கொடுக்க நினைத்த மூதாட்டிகளுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி

தமிழகத்தின் பேரன், பேத்திகளுக்காக பல ஆண்டுகளாக இரண்டு பாட்டிகள் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கண்ட மகன்கள், அந்த பணம் அனைத்தும் செல்லாது என்று கூறியதால், அவர்கள் வேதனையில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கும் பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75) தங்கம்மாள் (78) . இவர்கள் இருவரின் கணவர்களும் உயிரிழந்தவிட்ட நிலையில், சகோதரிகள் தங்களின் மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக, மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதால், மகன்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுக்க, அதைக் கண்ட மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அந்த பணம் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள், இதை மகன்கள் கூறியதால், அவர்கள் பணம் எல்லாம் அவ்வளவுதானா, பல ஆண்டுகளாக சிறுக, சிறுக இறுதி காலத்தில் பேரன், பேத்திகளுக்காக கொடுக்க சேர்த்து வைத்த பணம், செல்லாது என்று கூறினால் எப்படி என்று வேதனையடைந்துள்ளனர்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் உ யிரிழந்த தமிழ்ப்பெண் : தாயார் வெளியிட்டுள்ள அ திர்ச்சித் தகவல்!!

அ திர்ச்சித் தகவல்

சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்தில் ம ர்மமான முறையில் திருச்சியை சேர்ந்த பெண் உ யிரிழந்த நிலையில் அவரது தாயார் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதுடன், ஆசிரமம் குறித்து அ திர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுணன் – ஜான்சிராணி தம்பதியின் 3-வது மகள் சங்கீதா. இவரது மூத்த சகோதரி விஜி மஞ்சள் காமாலை நோயினால் கடந்த 2010-ம் ஆண்டு உ யிரிழந்தார்.

இதனால் ம னஉ ளைச்சல் அடைந்த சங்கீதா பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் 2010-ம் ஆண்டு தியான வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அங்கேயே தங்கி பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் திகதி சங்கீதா ம ர்மமான முறையில் உ யிரிழந்தார். சங்கீதாவை ஆசிரமத்தில் து ன்புறுத்தி, கொ லை செய்துள்ளதாக பெங்களூரு ராம் நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து திருச்சியில் அ டக்கம் செய்யப்பட்ட சங்கீதா உடல் 2015ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி மறு பி ரேத ப ரிசோதனை செய்யப்பட்டது. இந்த சூழலில் சங்கீதா இ றப்பால் மன உளைச்சலடைந்த அவரது தந்தையும் உ யிரிழந்தார். சங்கீதா ம ரணம் குறித்த வழக்கு விசாரணை பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கை பொலிசார் சரியாக விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆசிரமத்தில் உள்ள பலரும் மி ரட்டி து ன்புறுத்தப்பட்டு கொ லை செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள்ள பெண்கள், குழந்தைகள் அனைவரையும் மீ ட்க வேண்டும் என கோரியுள்ளார்.

குழந்தை தவழாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் : ஏழு வருடம் கழித்து நடந்த ஆச்சரியம்!!

நடந்த ஆச்சரியம்

பிரித்தானியாவில் வசிக்கும் ஏழு வயது சிறுவன் பிறந்ததில் இருந்தே பெருமூளை வா தத்தால் பா திக்கப்பட்டு நிற்கவோ நடக்கவோ முடியாமல் இருந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சைக்கு பின்னர் முதல்முறையாக தனியாக எழுந்து நின்று நடக்க துவங்கியுள்ளான்.

Milton Keynes-ஐ சேர்ந்த ரவி – உஷா புருத்வி தம்பதியின் மகன் பிரனவ் (7). பிரனவ் 12 மாத குழந்தையாக இருக்கும் போதே அவன் முட்டி போட்டு தவழ சிரமப்பட்டுள்ளான், இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ப ரிசோதனையில் பிரனவ் பெருமூளை வாதத்தால் பா திக்கப்பட்டது தெரியவந்தது. அதன் காரணமாக அவனால் எழுந்து நடக்கவே தனியாக நிற்கவே கூட முடியாது. அவனுடன் யாராவது ஒருவர் எப்போதும் உடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் National Health Service மூலம் பிரனவுக்கு அ றுவை சி கிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவனை ப ரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரனவ் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அ றுவை சி கிச்சை செய்தாலும் பிரயோஜனம் இருக்குமா என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையில் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து ஓன்லைன் மூலம் நிதி வசூலிக்கப்பட்டது. £100,000 பணம் தேவைப்பட்ட நிலையில் நிதி குவிய தொடங்கியது.

இதையடுத்து பிரனவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவன் கால்களில் உள்ள அ ழுத்தம் முற்றிலுமாக நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது முதல் முறையாக யார் உதவியும் இன்றி பிரனவ் நிற்பதோடு, 30 மீட்டர் வரை நடக்கிறான்.

மேலும் ஊன்றுகோல் உதவியுடன் அவர் செயல்படமுடியும் என தெரியவந்துள்ளது. இது குறித்து உஷா கூறுகையில், பிரனவை கவனித்து கொள்வதற்காக என்னுடைய ஐடி பணியை துறந்தேன். முதலில் எப்படி அவன் சிகிச்சைக்கு பணம் கேட்பது என தயக்கமாக இருந்தது, ஆனால் அவனுக்கு அதிகளவில் உதவிகள் கிடைத்தன. அறுவை சிகிச்சை மட்டுமே அவன் சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கும் என தெரியும், தற்போது அவனுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளோம்.

முதலில் அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என வருந்தினேன். பலரும் பிரனவுக்கு உதவி செய்தார்கள், முக்கியமாக பெயர் மற்றும் விபரங்களை கூட சொல்லாமல் யாரோ ஒருவர் £700 உதவி செய்துள்ளார்.

நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மக்களின் தாராள மனப்பான்மை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உலகில் ஒரு அழகான விடயம் என்னவென்றால் உதவி செய்யும் நபர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதே என கூறியுள்ளார்.

வவுனியா ஒமந்தை பகுதியில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதானம்!!

சிரமதானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய ‘மனிதர் நேசிக்கும் சுகாதாரமிக்க சுற்றாடலை உருவாக்குவோம்’ எனும் கருப் பொருளில் ஒமந்தை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் ஒமந்தை நகரை சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வு இன்று (28.11.2019) காலை இடம்பெற்றது.

ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதான நிகழ்வில் ஓமந்தை வர்த்தகர்கள், சமூதாய பொலிஸ் குழு பிரதிநிதிகள், ஒமந்தை பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஒமந்தை நகர சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு வடிகான்களும் சுத்தம் செய்யப்பட்டது.

வவுனியாவில் வீதிப் போக்குவரத்து பா துகாப்புக் கூட்டம்!!

பா துகாப்புக் கூட்டம்

வவுனியாவில் வீதிப் போக்குவரத்து பா துகாப்பு தொடர்பான கூட்டம் பொலிஸ் அத்தியட்சகர் காரியலாயத்தில் அமைந்துள்ள சேவை பயிற்சி நிலையத்தில் இன்று (28.11.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே மற்றும் வவுனியா மாவட்டத்திலிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,

போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸார், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், சுகாதாரப் பிரிவினர், வீதி அதிகார சபையினர், பாடசாலை சமூகத்தினர், முச்சக்கரவண்டி சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் டெங்கின் தா க்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், கடந்த சில மாதங்களில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள்,

வீதி விபத்தினை கட்டுப்படுத்த செயற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், பொலிஸாரின் செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

வவுனியா வர்த்தக சங்கத்தின் முயற்சியினால் அழகாக மாற்றமடையும் வவுனியா நகரம்!!

அழகாக மாற்றமடையும் வவுனியா நகரம்

வவுனியா நகரை ஏனைய மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக அழகாக மாற்றும் செயற்றிடத்தினை வவுனியா வர்த்தக சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபையுடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் வவுனியாவை பசுமையான நகராக மாற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே மரங்களை நாட்டும் வைபவம் இன்று (28.11.2019) காலை இடம்பெற்றது.

வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா, உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே,

வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சம்பத் ரெரேரா, வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமன்,

செயலாளர் இ. தயாபரன், நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம், வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.

50க்கு மேற்பட்ட மரங்கள் வவுனியா நகரில் வீதியின் நடுவே நாட்டி வைக்கப்படவுள்ளதுடன் இவற்றிக்கான நிதியினை வவுனியா வர்த்தக சங்கத்தினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசிலடித்தேன் அவள் கண்டுகொள்ளவில்லை : பெண்ணைக் கொ ன்றவனின் வாக்குமூலம்!!

விசிலடித்தேன் அவள் கண்டுகொள்ளவில்லை..

இந்திய இளம்பெண் அமெரிக்காவில் பா லியல் து ஷ்பிர யோகம் செய்யப்பட்டு கொ லை செய்யபட்ட வழக்கில், தான் அந்த அழகான பெண்ணை விசிலடித்துக் கூப்பிட்டதாகவும், அவள் தன்னை கண்டுகொள்ளாததால் அவளை வ ன்புண ர்ந்து கொ ன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான் கு ற்றவாளி.

சிகாகோவின் இல்லினாயிஸ் பலகலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய பெண்ணான ரூத் ஜார்ஜ் (19), கா ணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது காரின் பின் இருக்கையிலேயே, கல்லூரி வளாக கார் நிறுத்துமிடத்திலேயே ச டலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் டொனால்ட் தர்மன் (26) என்னும் கு ற்றவாளியைக் கைது செய்துள்ளனர். தர்மன் கொ ள்ளைச் சம்பவம் ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தான்.

தற்போது இரண்டாண்டு சிறை வாசத்திற்குப்பின் ஜாமீனில் வந்துள்ள அவன் இந்த துணிகர கு ற்றத்தைச் செய்துள்ளான்.

அவன் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த அழகான பெண்ணின் பின்னால் தான் விசிலடித்துக்கொண்டே சென்றதாகவும், ஆனால் அவள் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளான்.

அதனால் கோபமுற்று அவளைப் பிடித்து காரின் பின் இருக்கையில் தள்ளி வ ன்புண ர்ந்து கொ லை செய்ததாக தெரிவித்துள்ளான் அவன்.

அந்த இடத்தில் ஆணுறை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், குற்றம் நடந்த இடம் முழுவதும் என்னுடைய DNA சிதறிக் கிடக்கும் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவன் தெரிவித்துள்ளான்.

ரூத்தின் ம ரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்களிடையே கடும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன் பின் தெரியாதோர் உட்பட ஏராளமானோர் ரூத்தின் குடும்பத்தாருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்மன், டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளான்.

திருமணத்திற்கு பின் என் வாழ்வில் நடந்த மாற்றம் : மனைவி குறித்து மனம் திறந்த டோனி!!

மனம் திறந்த டோனி

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி திருமணத்திற்கு பின் நடந்த மாற்றம் குறித்து டோனி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி, எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வில் இருந்தாலும், ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் டோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் தன்னுடைய இல்லற வாழ்க்கை குறித்து அவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான். நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான்.

என்னுடைய மனைவி என்ன விரும்புகிறாரோ அதனை செய்ய நான் அனுமதி வழங்கி விடுவேன். ஏனென்றால் என்னுடைய மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

அதேபோல் என் மனைவி கூறும் எல்லா விஷயத்திற்கும், சரி என்று கூறினால், தான் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். இதன் காரணமாகவே, நான் அவர் நினைப்பதை செய்ய விட்டுவிடுவேன். திருமண வாழ்க்கையின் முக்கிய படலமே 50 வயதிற்கு பிறகுதான்.

ஏனென்றால் நீங்கள் 55 வயதை கடந்து விட்டால் தான் உங்களுக்கு உண்மையாக காதல் வயது வரும். அந்த வயதில்தான் நீங்கள் உங்களுடைய வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இந்த விஷயங்களை பற்றி யோசிக்க ஆரம்பிப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

டிக் டாக்கில் கலக்கிய 7 வயது சி றுமி : கொ லை செய்த தாய் : அம்பலமான உண்மை!!

7 வயது சிறுமி

ஆந்திர மாநிலத்தில் பள்ளியிலிருந்த 7 வயது மகளை தூக்கிக்கொண்டு கொ லை செய்துள்ள தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் உள்ள பகடாலபேட்டையில் வசித்து வந்த சதீஷ்குமார், சத்யவேணி தம்பதிகளுக்கு ஒரே மகள் தீப்திஸ்ரீ(7).

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீப்தியின் அம்மா சத்யவேணி இ றந்துவிட்டதால் அவரது தந்தை அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளது.

தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை தீப்தியை நன்றாக பார்த்துக்கொண்ட சாந்தகுமாரி, குழந்தை பிறந்த பின்பு தீப்தியை அடித்தும், சூ டுவை த்தும் கொ டுமைப்படுத்தியுள்ளார்.

இதனை ஒருநாள் அவதானித்த சதீஷ்குமாரின் தாய், பேத்தி தீப்தியினை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று படிக்கவைத்துள்ளார். தனது குழந்தையை வளர்ப்பதற்கு தாய்க்கு மாதம் மாதம் சதீஷ் பணம் கொடுத்துள்ளார்.

இதனையறிந்த மனைவி கணவரிடம் ச ண்டையிட்டதால் தாய்க்கு கொடுத்த வந்த பணத்தினை நிறுத்தியுள்ளார். இதனால் இவர்களின் பஞ்சாயத்துவரை சென்றதில் குழந்தையை வளர்ப்பதற்கு மாதம் ரூ. 2000 தனது தாய்க்கு சதீஷ் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

பாட்டி வீட்டில் சந்தோஷமாக இருந்த தீப்தி டிக் டாக்கில் கவனம் செலுத்தி தனது நடிப்புத்திறமையைக் காட்டியுள்ளார். இதனை அவதானித்த ஊர் ஜனங்கள் தீப்தியின் திறமையைப் பாராட்டி வந்துள்ளனர்.

ஆனாலும் தனது கணவர் கொடுக்கும் பணத்தினை தடுக்கமுடியாத மனைவி சாந்தகுமாரி, பள்ளியிலிருந்த தீப்தியை அவசர அவசரமாக அழைத்து ஏரிக்கரைக்கு கொண்டு சென்று, க ழுத்தை கட்டியில் ஏ ரியில் தூக்கிவீசிவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அறியாத தீப்தியின் அப்பா, பாட்டி இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொலிசாரின் தேடுதலில் சாக்குமூட்டையில் ச டலமாக மீட்கப்பட்டார் தீப்தி. பின்பு பள்ளியின் அருகே இருந்த கண்காணிப்பு க மெராவை ஆய்வு செய்ததில் தீப்தியை சாந்தகுமாரி அவசர அவசரமாக தூக்கிக்கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

சாந்தகுமாரியிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் தான் கொ லை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, தற்போது சாந்தகுமாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள் ஜனாதிபதி கோட்டாபயவினால் அறிவிப்பு!!

வரிச் சலுகைகள்

நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி ஆகியன இரத்து செய்யப்பட்டுள்ளன.

பங்குச்சந்தையில் அறவிடப்படும் மூலதன வரி, உழைக்கும் போதே செலுத்தும் வரி, பிடித்து வைத்தல் வரி, வரவு வரி ஆகியவற்றையும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படவுள்ளது.

தொலைத்தொடர்பு வரியை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 15 வீதமாக இருந்த வற் வரியை 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

பொருளாதார புத்துயிரூட்டல் என்ற தொனிப்பொருளில் உடனடியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அதற்காக வரிகளில் சீர்திருத்தங்ளை செய்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் : வெளியானது அறிவிப்பு!!

முத்தையா முரளிதரன்

வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும், வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவியேற்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நாளை 29ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கான முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். இதன்போது வடக்கு மாகாணத்தின் ஆளுநரையும் உடன் அழைத்துச் செல்வார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே தற்போது ஆளுநர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இ றந்த மான் வயிற்றில் இருந்த 7 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள்!!

பிளாஸ்டிக் குப்பைகள்

தாய்லாந்தில் இ றந்த மான் வயிற்றில் இருந்து 7 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். தாய்லாந்தில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற குப்பைகளை விழுங்கியதில் ஒரு காட்டு மான் இ றந்து கிடந்ததாக ஒரு அதிகாரி செவ்வாய்க்கிழமையன்று தகவல் வெளியிட்டார்.

நாட்டின் நீர் மற்றும் காடுகளில் குப்பைகளை கொட்டுவது குறித்தும் அவர் எ ச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடு உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் நுகர்வோரில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் தாய்லாந்து ஒவ்வொரு ஆண்டும் மறுசுழற்சி செய்யமுடியாத 3,000 ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறது.

ஆமைகள் மற்றும் dugong போன்ற கடல் விலங்குகள் இதுபோன்ற கழிவுப்பொருட்களின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன. பி ரேத ப ரிசோதனைகளில் அவற்றின் வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து வடக்கே 390 மைல் தொலைவில் உள்ள நான் மாகாணத்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 10 வயது மான் இ றந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பி ரேத ப ரிசோதனையில் ‘வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என குன் சாத்தான் தேசிய பூங்காவில் பா துகாக்கப்பட்ட பிராந்தியத்தின் இயக்குனர் கிரியாங்சாக் தானோம்பூன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு சென்ற இளைஞ ர் : எக்ஸ்ரே மூலம் கண்டறிந்த அதிர்ச்சி!!

மருத்துவமனைக்கு சென்ற இளைஞ ர்

கோவையில் இளைஞர் ஒருவருக்கு ஊசி உடைந்து இடுப்பு எலும்பில் சிக்கி கொண்ட சம்பவம் தொடர்பாக மருத்துவமனை கு ற்றச்சாட்டை மறுத்துள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (26).

இவர் கடந்த மாதம் 22ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு டைபாய்டு இருப்பதாக செவிலியர் ஒருவர் ஊசி போட்டுள்ளார். அப்போது ஊசியின் முனைப்பகுதி தம்பிதுரையின் இடுப்பு பகுதியில் உடைந்துவிட்டது என்பதை அவர் கவனித்து செவிலியரிடம் கேட்டுள்ளார். அந்த செவிலியரோ அதை மறுத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.

பின் வீடு திரும்பிய தம்பிதுரைக்கு வ லி அதிகரிக்கவே அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஜெயக்குமார் என்பவரிடம் சென்று கேட்டுள்ளார். அவரே வேறு மருத்துவமனையில் சென்று பார்க்கும்படி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தம்பிதுரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது ஊசி இடுக்கு பகுதியில் 7மில்லி மீற்றர் அளவுக்கு சிக்கி கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தக்கபதில் அளிக்கவில்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகமோ தம்பிதுரை மிரட்டல் விடுவதாகவும், அந்த ஊசி உடைந்து உள்ளே சென்றது எங்கள் தவறு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தம்பிதுரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

விளையாட்டு மைதானத்தில் சு ருண்டு வி ழுந்து இளைஞர் ம ரணம் : கண்ணீர் விட்டு க தறிய கிராமம்!!

விளையாட்டு மைதானத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உதைப்பந்து ஆட்டத்தினிடையே சு ருண்டு வி ழுந்து ம ரணமடைந்த இளைஞரின் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் மொத்த கிராமமும் கண்ணீருடன் பங்கேற்றுள்ளது. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் எல்சன் மார்க்கோஸ் என்ற இளைஞரே விளையாட்டின் இடையே சுருண்டு விழுந்து ம ரணமடைந்தவர்.

எல்சன் மற்றும் நண்பர்கள் இணைந்து தனியாக ஒரு உதைப்பந்தாட்ட அணி உருவாக்கி, திறம்பட மெருக்கேற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றைய தினம் குறித்த அணியானது பயிற்சி ஆட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளது.

ஆட்டத்தின் இடையே எல்சனுக்கு சு கவீனம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே சிறிது நேரம் ஓய்வெடுக்க முடிவு செய்து, விளையாட்டில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார். பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் எல்சன் களமிறங்கியுள்ளார். ஆனால் விறுவிறுப்பான ஆட்டத்தின் இடையே தி டீரென்று சு ருண்டு வி ழுந்துள்ளார்.

உடனையே நண்பர்கள் இணைந்து அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். சிறப்பு சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நண்பர்கள் முயன்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்த ஆம்புலன்ஸ் கிடைப்பதில் தாமதமாகியுள்ளது.

இதனிடையே எல்சன் ம ரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த தகவல் நண்பர்களை மட்டுமின்றி மொத்த கிராமத்தையே உ லுக்கியுள்ளது. எல்சனின் ச டலத்தை பார்த்து பெற்றோர் மட்டுமின்றி நண்பர்கள் பலரும் வாய்விட்டு கதறியது, அங்குள்ள பொதுமக்களையும் கண்கலங்க வைத்துள்ளது.